பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2006

அழுக்கு அரசன் 13ன்றாம் பன்றிவாயன் (காமடி)

(கவுண்டர் / செந்தில்)


அருமை அண்ணன் வைகை புயல் கைப்புள்ள அவர்களின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றி நடைப் போடுவதைத் தொடர்ந்து அவரை வாழ்துவதற்காக இந்த காமடி பதிவு. பங்கு பெறுபவர்கள் கவுண்டர் அன்ட் செந்தில்

செந்தில் பதட்டத்துடன் கவுண்டரைப் பார்க்க ஓடிவருகிறார்
செந்தில் : அண்ணே அண்ணே.... !


கவுண்டர் : என்னாடா எருமை தலையா ? ரொம்ப நாளா ஆளையே காணும் !

செந்தில் : மோசம் போய்டோம்னே !

கவுண்டர் : வழக்கமா ... ஒங்கிட்ட மாட்டுன அப்பாவிங்களும் ... நானும் தான் மோசம் போவோம் ...!

செந்தில் : போங்கண்ணே ... நீங்களும் நானும் சேர்ந்து தான்னே மோசம் போய்டோம்

கவுண்டர் : காலங்காத்தால கழுத்தை அறுக்காத ... சொல்லித் தொலை

செந்தில் : அண்ணே அண்ணே....

கவுண்டர் : சொல்லித் தொலைடா ... வெண்ணை

செந்தில் : கோபப் படாதிங்கண்னே ... அது வந்து புலி அடிச்சிடுச்சுன்னே

கவுண்டர் : என்னது புலியா ? ... எங்க எங்க யாரை அடுச்சிச்சி ... காட்டுப்பன்னி உன்னை புலி அடிச்சிச்சா ?

செந்தில் : அண்ணே என்னை மட்டுமில்லன்னே ... நம்ம எல்லாரையும் புலி அடிச்சிடுச்சின்னே

கவுண்டர் : புரியிற மாதிரி சொல்லுடா புளி மூட்ட தலையா

செந்தில் : புயல் அடிச்சிடுச்சிண்னே ...

கவுண்டர் கடுப்பாகிறார்
கவுண்டர் : டேய் என்னை கேனப்பயன்னு நெனெச்சியா ? ...மொதல்ல புலின்னு சொன்னே ... இப்ப புயல்னு செல்ற...வயசான காலத்தில
நிம்மதியா இருக்கவிடுங்கடா

செந்தில் : புலி, புயல் எல்லாமே சேர்ந்து அடிச்சி .... நாம மோசம் போய்டோம்னே

மறுபடியும் கவுண்டர் கடுப்பாகிறார்
கவுண்டர் : ஏன்டா... நாயே ... எத்தினி தடவடா சொல்றது ... பெடிவெச்சு பேசாதேன்னு ...இம்சை பண்ணாம விசயத்த சொல்லு

செந்தில் : ஆமாம்னே நானும் அதைத் தான் சொல்றேன் ... இம்சை

கவுண்டர் : எழவு இம்சையா இருக்கு ... இந்த நாயி என்ன சொல்லுதேன்னு புரியல ... டேய் உன்ன உதச்சாதான் சரிப்படுவ

செந்தில் : அண்ணே ... நீங்க என்னை அடிங்க திட்டுங்க ... ஆனா நான் சொல்ற மட்டும் புரியலேன்னு சொல்லாதிங்க

கவுண்டர் : ஏன்டா ... நான் என்ன சாமியாரா ... மைப் போட்டு பாத்து உன் மனசில என்ன இருக்குன்னு செல்றத்துக்கு ... ஒன்னு சொல்லு இல்லாட்டி எழுந்திரிச்சி ஓடி போயிடு

செந்தில் : ம்.. ஹ¥ம் ... அண்ணே நீங்க அறிவாளின்னு நான் நெனச்சது தப்பா போச்சி

கவுண்டர் : டேய் திருவோட்டு தலையா ... நீ எல்லாம் என்னை அறிவாளின்னு ஒத்துக்க வைக்கிற அளவுக்கு என் அறிவு ஒன்னும் சீப்பா போகல ... விசயத்தை சொல்லிட்டு ஓடிபோய்டு மவனே ... இல்லாட்டி சுடத்தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன் ... போய் ஊருக்குள்ள உன்னையும் புலி அடிசிடுச்சின்னு சொல்லு.

செந்தில் : அப்படியெல்லாம் வேணாம்னே... நானே சொல்லிடுறேன்

கவுண்டர் : மவனே ... அப்படிவா வழிக்கு

செந்தில் : வடிவேலு இருக்கான்ல ... வடிவேலு

கவுண்டர் : வடிவேலு இருக்காண்டா ... நீ அவனை சாகடிச்சிட்டியா

செந்தில் : இல்லண்ணே... அவன் தான் நம்மலெயெல்லாம் சாகடிச்சிட்டான்

கவுண்டர் : என்னடா சொல்ற நாயே... அதான் குத்துக்கல்லு மாதிரி குத்தவெச்சி ஒக்காந்திருக்கோம்ல

செந்தில் : ஆமாம்னே... இனிமே அப்படியே தான் ஒக்கார்ந்திருக்கனும் போல இருக்குன்னே

கவுண்டர் : டேய்... டேய் ... மறுபடியும் பொடி தூவ ஆரம்பிச்சிட்டியா... டேய் சுடத்தண்ணி ... மூஞ்சி

செந்தில் : போங்கண்ணே ... நீங்க படம் பாத்திங்களா ?

கவுண்டர் : டேய் கக்கூஸ் வாயா ... நம்பள மாதிரி சினிமாகாரங்க என்னெக்கிடா தியேட்டர்ல போயி படம் பாத்திருக்கோம்... அதெல்லாம் ஜெனங்க பாத்து அனுபவிக்கிறத்துக்குட மவனே... நாம நடிக்கிற கருமாந்தரத்த ... நாமளே தியேட்டர்ல போயி கூட பாக்கனுமா ?

செந்தில் : ம் ... அதாண்ணே உங்களுக்கு ஒலக நடப்பே தெரிய மாட்டங்குது...

கவுண்டர் : க் ..கும்... இவரு பெரிய பிபிசி ரிப்போட்டரு ... ஒலக விசயம் தெரியனுமாமாம்... என் நேரம்டா... டிக்கட்டு கெடக்காட்டியும். ஒன்னுக்கு அடிக்கிற எடுத்துல நின்னு ஓசி படம் பாக்குற நாயி என்னப்பாத்து ஒலக நடப்ப்ப பத்தி சொல்லுது ... எனக்கு ஒலக நடப்பு தெரியலையாமா ?

செந்தில் : கோவிச்சிக்காதிங்கண்ணே ... ஒரு பேச்சுக்கு சொன்னே ...

கவுண்டர் : மவனே பேச்சு மூச்சி ஆகறதுக்குள்ள ஓடிபோயிடு...

செந்தில் : அண்ணே நீங்க என்னை என்ன வேணும்னாலும் வையுங்க ... ஒதைங்க

கவுண்டர் : எனக்கு வயிசு ஆயிடுச்சிங்கிறதால காலத்தூக்கி ஒதெக்க மாட்டேன்னு ஒனக்கு நக்கல் வேறயா ... என்னால முடியிலடா சாமி

செந்தில் : சரி சொல்லிடுறேண்னே ... நம்ப வடிவேலு பய இல்லை வடிவேலு பய

கவுண்டர் : ஆமான்டா ... ஒன்னெயும் என்னெயும் அமுக்கனும்னு ... நம்பள வெச்சு சம்பாதிச்சவனெல்லாம் தூக்கிவிட்டனுங்களே ... லாரியில ஏறி மெட்ராசுக்கு ஓடிவந்தானே ...
அந்த கருப்பு காக்காவைத்தானே சொல்லுற

செந்தில் : ஆமாம்னே .... அவன் நடிச்ச 23ம் புலிகேசி தான்ணே இப்ப பிச்சிக்கிட்டு ஓடுது ... வைகை புயலின் புலிக்கேசுன்னு டைட்டில் போடுறாங்க

கவுண்டர் : ம் .. அதுக்கென்ன ... நீ வேணும்னா ... 'அழுக்கு அரசன் 13ஆம் பன்றிவாயன்' ஒரு படம் எடுத்து அதில 13ன்றாம் பன்னியா நடிச்சிட்டு போயேன்டா

செந்தில் : என்னன்ணே ஒங்களுக்கு கோபமே வரலையா ... ச்சே மிஸ் ஆயிடுச்சே ... புயலின் புலி ஒங்களுக்கு நெசமாவே வயித்த கலக்கல ?

கவுண்டர் : ஏன்டா வயித்தெரிச்ச படுற ?

செந்தில் : என்னண்னே சொல்றிங்க ... அவனால நம்ப பொழப்பு போச்சி இல்ல

கவுண்டர் : டேய் ... இந்த கவுண்டன பத்தி ஒனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் ... எவ்வளவு நாளைக்குடா ... நானும் நீயும் ஒடி புடிச்சி வெளயாடுறத ஜெனங்க பாத்துக்கிட்டு இருப்பாங்க ... பாவம்டா ஜெனங்க ... வடிவேலு யாரு ... நம்ம ஆளு ... அவன் மேல வர்ரது நல்ல விசயம் தானேடா

செந்தில் : அண்ணே ... எனக்குதாண்னே ... புத்திக் கெட்டுப் போச்சி ... நீங்க நல்லவரு வல்லவரு

கவுண்டர் : டேய் ... ஒன்னு நாம அனுபவிக்கனும் ... இல்லேன்னா ... பொத்திக்கிட்டு ஓரமா ஒக்காந்து வாழ்த்திட்டு போவனும் ... புரிஞ்சிக்க

செந்தில் : அப்ப வர்ரேண்ன ... அண்ணே ... இன்னொரு விசயம்னே

கவுண்டர் : ஒரு எழவும் சொல்ல வேண்டாம் எழுந்திரிச்சு ஓடிபோயிடு... மவனே.. ஒன் திட்டம் எதுவும் வேகாது

கதை ஒன்றும் செல்லுபடி ஆகவில்லை என்று செந்தில் வெளியேறுகிறார்

30 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் செந்தில் காமெடி நல்லாருக்கு இப்ப ஒரு சேதி சொல்றன் கேளுங்க நான் அவரோட சந்த்ரு எண்டர்பிரைசில 1997 வேலைசெய்யும்போது(ஹிந்துஸ்தான் லீவரின் ஏஜென்ஸி) நடந்தது அவர் வீட்டில ஒரு நாய் குட்டி போட்டிருந்துது அப்ப
கணேஷ்: குட்டியெல்லாம் பாத்தா அம்மா நாய் மாறி இல்லையே ஏதும் தெருநாய் மாதிரி இருக்கு?
நான் : குமார் தான் அத வாக்கிங் கூட்டிட்டு போவான் அப்ப ஏதும்?
செந்தில்:அட நீ வேறப்பா குமார் அந்தமாதிரி ஆளில்ல (வழக்கம்போல் அப்பாவியாய் சொன்னார் பாருங்க...)
நாங்கள்: :))))))) :))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//
மகேந்திரன்.பெ said...
செந்தில்:அட நீ வேறப்பா குமார் அந்தமாதிரி ஆளில்ல (வழக்கம்போல் அப்பாவியாய் சொன்னார் பாருங்க...)
நாங்கள்: :))))))) :)))))))) //
நன்றி திரு மகேந்திரன் அவர்க்ளே,
நல்ல நகைச்சுவையை பகிர்ந்து கொண்டீர்கள்

பெயரில்லா சொன்னது…

:D

கொஞ்சம் இழுத்திட்டீங்களோ?

பெயரில்லா சொன்னது…

இ.கொ. சொன்ன மாதிரி, கொஞ்சம் இழுத்துட்டீங்க.
செந்திலின் அந்த அப்பாவி முகம் தான் அவரின் + பாயிண்ட்....

ஆனா தலைவரே! கடைசியில் கருத்து சொல்லி இருக்கீங்க. அது ரொம்ப நல்லா இருக்கு.......

//ஒன்னு நாம அனுபவிக்கனும் ... இல்லேன்னா ... பொத்திக்கிட்டு ஓரமா ஒக்காந்து வாழ்த்திட்டு போவனும்//

கோவி.கண்ணன் சொன்னது…

//இலவசக்கொத்தனார் said...
:D
கொஞ்சம் இழுத்திட்டீங்களோ?
8:43 PM
நாகை சிவா said...
இ.கொ. சொன்ன மாதிரி, கொஞ்சம் இழுத்துட்டீங்க.
செந்திலின் அந்த அப்பாவி //
சிவா, மற்றும் கொத்ஸ்..
கொஞ்சம் இழுவைதான்... யேசிக்காமல் எழுதினால் இப்படித்தான் இருக்கும் போல்.. கரு இல்லாமல் எழுத ஆரம்பித்து ... தலைப்பே இடையில் வந்தது... எழுத எழுத அதுவே இழுத்தது ... நானே முடிக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு நிறுத்திக் கொண்டேன் :)

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணன், அப்படியே கவுண்டரையும், செந்திலயும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
நீளமாக இருந்தாலும் நல்லா இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
கோவி. கண்ணன், அப்படியே கவுண்டரையும், செந்திலயும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
நீளமாக இருந்தாலும் நல்லா இருக்கு.
//
பாராட்டுக்கு நன்றிங்க வெட்டிப்பயல்

பெயரில்லா சொன்னது…

அடிக்கடி கவுண்டர் - செந்தில் நகைச்சுவையை எழுதுங்க .. ம்ம் இங்க படிச்சாதான் உண்டு இப்ப கவுண்டர் & செந்தில் படத்தில் நடிக்காததினால் சிரிப்பு பஞ்சம் வந்திருச்சுங்கோ....

கவுண்டரோட சிறப்பே அவரின் தத்துவம் தான் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" அதுமாதிரி.. நீங்களும் கடைசியில் தத்துவம்
" ஒன்னு நாம அனுபவிக்கனும் ... இல்லேன்னா ... பொத்திக்கிட்டு ஓரமா ஒக்காந்து வாழ்த்திட்டு போவனும் "
போட்டு கலக்கிட்டீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//குறும்பன் said...
அடிக்கடி கவுண்டர் - செந்தில் நகைச்சுவையை எழுதுங்க .. ம்ம் இங்க படிச்சாதான் உண்டு இப்ப கவுண்டர் & செந்தில் படத்தில் நடிக்காததினால் சிரிப்பு பஞ்சம் வந்திருச்சுங்கோ....
//
ஆமாங்க தலைவரே... நானும் கவண்டர் செந்தில் ரசிகர் தான். எதோ அப்ப அப்ப தோன்றுவதை எழுதி வலையேற்றுவேன். வலைப் பதிவிலும் கூட சிரிப்புக்கு பஞ்சம் வந்து எல்லோரும் ரொம்ப சீரியஸ் சா எழுதிக்கிட்டு இருக்காங்க.. இது எதோ என்னால முடிஞ்ச கிச்சி கிச்சி. :)

பெயரில்லா சொன்னது…

சூப்பருங்க. உங்க காமெடி கலக்கலா இருக்கு.

//டேய் ... ஒன்னு நாம அனுபவிக்கனும் ... இல்லேன்னா ... பொத்திக்கிட்டு ஓரமா ஒக்காந்து வாழ்த்திட்டு போவனும் ... புரிஞ்சிக்க//
சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிருக்கீங்க. மெசேஜ் நல்லாயிருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

// கைப்புள்ள said...
சூப்பருங்க. உங்க காமெடி கலக்கலா இருக்கு.
//
கைப்புள்ள... நம்ப படம் தான் சூப்பர் ஹிட் படம் பாத்துட்டோம்ல... அதுதான் உடனே ஒரு பதிவு போட்டாச்சு

பெயரில்லா சொன்னது…

மெசேஜ் கிடைச்சிருச்சுப்பா.

நல்ல காமெடி:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
மெசேஜ் கிடைச்சிருச்சுப்பா.

நல்ல காமெடி:-)))))

12:45 PM
//
துளசி அக்கா, எப்ப மேராஜ் ஆச்சோ அப்பயிலேர்ந்து எல்லோருமே மெசேஜ் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க :)

பெயரில்லா சொன்னது…

அண்ணாத்த் அசத்திபுட்டீக

பெயரில்லா சொன்னது…

தலயே சொன்னபுறம் நான் என்னத்த சொல்ல.......

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் நீளமா இருக்கு அண்ணாச்சி.. பரவாயில்ல..நல்லா முயற்சி பண்ணியிருக்கீங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலூர் தென்றல் said...
அண்ணாத்த் அசத்திபுட்டீக
//
பாராட்டுக்கு நன்றி தலைவா !

பெயரில்லா சொன்னது…

//கொஞ்சம் நீளமா இருக்கு அண்ணாச்சி.. //

இங்கயுமா தலைவா!

கோவி.கண்ணன் சொன்னது…

// மின்னுது மின்னல் said...
தலயே சொன்னபுறம் நான் என்னத்த சொல்ல.......
//
வாலு ஆடப்டாதுங்கிறீங்க..... நீங்க சொன்னா தப்பா இருக்குமா ? :)0

கோவி.கண்ணன் சொன்னது…

//சோம்பேறி பையன் said...
கொஞ்சம் நீளமா இருக்கு அண்ணாச்சி.. பரவாயில்ல..நல்லா முயற்சி பண்ணியிருக்கீங்க..
//
நீங்க இந்த பேர வச்சிக்கிட்டு வந்து சுறுசுறுப்பா வந்து பின்னூட்டம் போட்டு அசத்திட்டிங்க :)))

பெயரில்லா சொன்னது…

//நீங்க இந்த பேர வச்சிக்கிட்டு வந்து சுறுசுறுப்பா வந்து பின்னூட்டம் போட்டு அசத்திட்டிங்க //

கோவியாரே! இந்த வாரம் அவரை தேர்ந்தெடுக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுதீய!

எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க!

பெயரில்லா சொன்னது…

நீஈஈஈஇளமான கலக்கல் காமெடி!

நல்ல திறமை இருக்கு!

வாழ்த்துகள்!

பெயரில்லா சொன்னது…

சூப்பர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//At 10:03 AM, SK said…

நீஈஈஈஇளமான கலக்கல் காமெடி!

நல்ல திறமை இருக்கு!

வாழ்த்துகள்!
//

என்னிக்காவது யாரும் பதிவில் மாட்டவில்லையென்றால் ... சினிமா கார அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள் ... அவர்களை பொதுவிலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறேன் :))

பெயரில்லா சொன்னது…

காமெடி கலக்கல்...

பெயரில்லா சொன்னது…

கோ.க,
நல்ல நகைச்சுவைப் பதிவு.படித்து வயிறு குலுங்கச் சிரித்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//At 12:24 PM, செந்தழல் ரவி said…

காமெடி கலக்கல்...
//
ரவி...
நம்ம கலாய்தல் தொழிலை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது.. செய்யும் தொழிலே தெய்வம்:)

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணன், அப்படியே கவுண்டரையும், செந்திலயும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
நீளமாக இருந்தாலும் நல்லா இருக்கு.//

அதயேத்தான் நானும் சொல்றேன்..

இவங்க ரெண்டு பேரோட காமடியே அப்படித்தான்.. இழுத்துக்கிட்டே போவும்.. ஆனாலும் அலுக்காது.

ஆனா வடிவேலு பார்த்திபன் காமடி சுருக்கமா கச்சிதமா இருக்கும்..

முன்னதுல வசனத்தவிட ஆக்ஷந்தான் சிரிப்ப வரவைக்கும்.. பின்னதுல வசனம்தான் சிரிப்ப வரவைக்கும்..

நல்லாருந்தது கண்ணன்..:))

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
இவங்க ரெண்டு பேரோட காமடியே அப்படித்தான்.. இழுத்துக்கிட்டே போவும்.. ஆனாலும் அலுக்காது.

ஆனா வடிவேலு பார்த்திபன் காமடி சுருக்கமா கச்சிதமா இருக்கும்..

முன்னதுல வசனத்தவிட ஆக்ஷந்தான் சிரிப்ப வரவைக்கும்.. பின்னதுல வசனம்தான் சிரிப்ப வரவைக்கும்..//

இழுத்துக் கொண்டே போனது உண்மைதான் ... போதும் போதும் என்றே வழியில்லாமல் நிறுத்தினேன்.

பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற உண்மையை புரிந்து கொண்டேன் :)))

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன்!

நல்லா இருக்குங்க காமடி. ஒரே சிரிப்பு மழைதான் போங்க. இன்னோரு கிளம்பியாச்சா ம்ம்ம்
நடத்துங்க நடத்துங்க.
:) :) :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்