கிபி 2551 அறிவியல் உலகம் தன் உயரத்தை எட்டி இருந்தது, யாரும் வேலைக்குச் செல்லத் தேவை இல்லாமல், அனைத்தையும் ரோபோக்களே கவனித்துக் கொண்டிருந்தன, விவசாயம் முதல் வாகனங்கள் ஓட்டுவது வரை ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன, அரசு அமைப்புகள் பல்வேறு இனங்களையும் மனிதர்களையும் போதிய அளவு பாதுகாத்தால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ற உற்பத்தையை மட்டும் அனுமதித்து அல்லது செய்து வந்தன, முன்பெல்லாம் அலுவலகம் சென்றுவருவார்கள் என்பதை ஆவணங்கள் பார்த்து மக்கள் தெரிந்து கொண்டனர். உண்ணுவதும், உறங்குவதும் விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதும் தான் பொழுது போக்கு, திரைப்படங்களும் ரோபாக்களால் உருவாக்கப்பட்டு அதில் மனிதர்கள் நடிப்பது போன்றும் பல்வேறு கதைகளாக நகைச்சுவை, சண்டை, பாரம்பரிய படங்கள் எடுக்கப்பட்டன, அனைத்தும் இலவசம் தான்.
ஒரு படத்தைப் பற்றிய முன்னோட்டங்களும், அதனைப் பார்த்தவர்களின் விமர்சனம் வைத்து படம் பார்க்க விரும்புவர்கள் தேர்ந்தெடுக்கலாம், அவற்றை திரையிட்டும் பார்க்கத் தேவையில்லை, படத்தின் சில்லை கண்ணியில் பொருத்தி அதன் முன் அமர்ந்தாலே படத்திற்கு ஏற்றவாறு முப்பரிமானம் மற்றும் நான்கு பரிமாண முறையில் பார்த்துவிட்டதாக மூளைக்குள் உணரவைக்கப்படும், ஒரு படம் பார்க சில வினாடிகளே என்ற வகையில் அசதியாக இல்லை என்றால் ஒருவர் மூளையின் திறனுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஐம்பது படங்களைக் கூட பார்த்துவிடும் திறன் பெற்றிருந்தனர். திரைப்படம் மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள், இசை ஆகியவையும் கூட கணிணிகளால் தானியக்கமாக உருவாக்கப்பட்டு அவை மெய் நிகராக விரும்பியவர்கள் சில விநாடிகளில் நேரிடையாக பார்த்த அனுபவங்கள் கிடைக்கும் படியான அறிவியல் வளர்ச்சிகளில் வாழ்ந்தனர்.
மனித உற்பத்திக்கு திருமணம் தேவை இல்லை என்ற அடிப்படையில் எவரும் திருமணம் செய்தி கொள்ளாமல் பெற்றோர்களே இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவர்களாகவும் தனித்து வாழ்பவர்களாகவும் இருந்தனர், ஓரளவு மன வளர்ச்சி எட்டியவுடன் உருவ இன அமைப்பிற்கேற்ற மொழிகள் அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டு வெளியே அனுப்பட்டு அங்கங்கே வாழ்ந்து வந்தனர், தகவல் பரிமாற்றம் மற்றும் பேசிக் கொள்ள மொழிகளின் இணைப்பு தேவையின்றி ஒருவர் ஒரு மொழியில் தேவையான போது பேச மற்றவர் தாம் அறிந்துள்ள மொழியில் அதனை புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் காதுகளின் பொருத்தி இருந்த கருவிகள் உள்வாங்கி மொழி மாற்றி கேட்கும் படி உதவி செய்தன.
மனித உடலின் அடிப்படை உந்துதலான பாலியல் தேவைக் கூட தேவையின் போது அதை அடைந்துவிட்டதாக மூளையில் உணரவைக்கபப்டும் கைக்கடிகாரங்கள் எல்லோரிடமும் இருந்தது, அழகு ஈர்ப்பு என்ற சொல்களெல்லாம் மறைந்து போக எவரும் எவரையும் சார்ந்து வாழாத நிலைதான்.
ஒருவரின் அன்றாட வேளைகள் என்பது காலை எழுந்து காலைகடன் உள்ளிட்டவைகளை முடித்து உணவு உண்பது மற்றும் முழுக்க முழுக்க பொழுது போக்கு பின்பு உடல் அசந்தால் தூங்குவது என்பது மட்டுமே. இதைத் தவிர்த்து மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பற்கு வேறு வேலைகள் இல்லாமல் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்து வந்தன. மனிதர்களுக்கு நேரங்கள் மிகுதியாகவே கிடைத்தன, ஜீன்கள் சரிசெய்யப்பட்டு எழும்புத் தேய்மானத்தில் உடல் தளர்வுரும் வரை ஆயுள் 120 ஆண்டுகள் என்று வாழ்ந்தனர். அவர்கள் இறந்த பின்னும் கூட அவர்களின் மூளையை செயல்படுத்தி அவர்களின் அறிவுக்கூறுகள், அனுபவங்கள் ஆகியவைகள் ஆவணங்களாக சேமிக்கப்பட்டன
மனித வாழ்க்கை என்பது உண்ணுவது ஊர் சுற்றுவது, ஓய்வெடுப்பது மற்றும் பொழுது போக்குவது என்பதாக மட்டுமே இருந்தது, வெளியே செல்வது என்பது சுற்றிப் பார்க்க மட்டுமே என்ற நிலையில் விரும்பியவர்கள் சென்றுவந்தனர், விரும்பாதவர்கள் மெய்நிகராக அந்தக் காட்சிகளை சில்லுகள் மூலமாக உள்வாங்கிக் கொண்டிருந்தனர், சிலர் விலங்குகளை வளர்த்து பொழுது போக்கினர். மனிதர்களும் எந்திர மனிதர்களுக்கும் மன அளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது, பணம் ஈட்டுவதற்கான தேவை என்பதே அன்று இல்லை. உள்நாட்டு, வெளிநாட்டு போர் மற்றும் அதற்கான தேவை எதுவுமே இல்லை. வேற்றுகிரகவாசிகள் ஊடுறுவினால் அதை அழிப்பதற்கு ஏராளமான கருவிகளின் தாயார் நிலையில் அவைகள் இருந்தன. சூரிய குடும்பக் கோள்கள் அனைத்திற்கும் ரோபக்கள் அனுப்பப்பட்டு கோள்களையும் வேற்று கிரகவாசிகளின் ஊடுறுவல் கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
மாசுக்கட்டுப்பாடு, புவிவெப்பங்கள் கூட கட்டுக்குள் தான் இருந்தன, ஆனாலும் இயற்கைச் சீற்றம், நில அதிர்வு ஆகியவற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை. எதோ ஒரு நாள் தொடர்ச்சியான விண் கற்கள் மற்றும் சூரிய தீப்பிழம்பு பொழிவால் அனைத்து மின்னனு கருவிகளும் செயல் இழக்க, புவி எங்கும் நெருப்புப் பிழம்புகள் அதன் கட்டுக்கடங்காத வெப்பம் மனிதர் உட்பட அனைத்தும் மடிந்தன, அழிந்தன, எரிந்து சாம்பல் ஆகின அடுத்து தொடர்சியாக மழை பொழிந்தது
மீண்டும் கற்காலம் துவங்கியது
********
பாத்திரங்களே இல்லாமல் சிறு கதை எழுதமுடியும் என்று சிலர் முயன்று இருக்கிறார்கள். சுஜாதா கூட அப்படி ஒரு கதை எழுதி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ம(னி)த கற்பனை சொர்கம் கூட அறீவியல் வளர்ச்சியில் உச்சமடைந்த பூமியைப் போன்றது தான், வெர்ரி வெர்ரி ஃபோரிங்......அங்கே ரோபக்களுக்கு பதில் வேலை செய்ய சொர்க வேலையாட்கள் இருப்பார்கள் என்ற அளவில் தான் புரிந்து கொள்ளமுடிகிறது.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
இந்த வார - ஆகச் சிறந்த படைப்பாக சங்கமம் திரட்டி தேர்வு செய்துள்ள இந்த விஞ்ஞான கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதர்களை சோம்பேறிகளாக மாற்றிவிடும். விஞ்ஞானத்தின் இறுதி எல்லை பூமியின் அழிவோடு முடிவுறுவது. போன்ற கருத்துக்கள் மிக இயல்பாக நாம் வாழும் சூழலால், நம் காலகட்டத்தின் வாழ்க்கை முறையிலிருந்து பெறப்படும் மேலோட்டமான புரிதலாகவேப் படுகிறது. ஆனால் இந்த முன் முடிவுகளை மறந்துவிட்டு மனிதனின் வரலாற்றையும் விஞ்ஞான வளர்ச்சியையும் இணைத்து பார்த்தால். மனிதன் மேலும் மேலும் பிரம்மாண்டமான குறிக்கோள்களை முன்னெடுத்து அதிக சுறுசுறுப்போடு இயங்கவே விஞ்ஞானம் வழிவகுத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது.
போக்குவரத்துத் துறையிலான மாற்றங்கள் கிராமங்களுக்கிடையேயான தூரத்தை குறைவான நேரத்தில் கடப்பதில் துவங்கி, இன்றைக்கு கிரகங்களுக்கிடையேயான தூரத்தை குறைவான நேரத்தில் கடப்பதற்கான முயற்சிகளில் வந்து நிற்கிறது. மனிதன் எந்தளவிற்கு தன்னுடைய முந்தைய வேலைமுறைகளிலிருந்து விடுபடுகிறானோ அந்தளவிற்கு புதிய இலக்குகளை எடுத்துக் கொண்டு முன்னேறுவதற்கான தடைகளை உடைத்துக் கொடுக்கிறது.
இப்படியாக பார்க்கும் பொழுது, தொடர்ந்து மனித இனம் உலகம் முழுவதும் தங்களுடைய வளர்ச்சிக்கு தனக்குள்ளான முரண்களை, ஏற்றதாழ்வுகளை உடைப்பது என்பதும், விஞ்ஞானத்தை அதன் சரியான அர்த்தத்தில் கைகொள்வது என்பதும். நாளை மனித இனத்திற்கு இந்த அண்டம் முழுவதும் பரவும் வாய்ப்பையும், அண்டம் குறித்த தன் அறிவை வளர்த்துக் கொள்வது நோக்கியும் புதிய இலக்குகளை நிர்ணயிக்கும் என்றே நினைக்கிறேன்.
ஒரு வேளை நாளை பூமிக்கு அழிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக நிகழுமென்றால் அப்பொழுது மனித இனம் புதிய கிரகங்களுக்கு குடிபெயர்ந்து இயற்கையை வெல்லும் ஆற்றல் பெற்றதாக தன்னை மாற்றிக் கொள்ள விஞ்ஞானம் பயன்படலாம் என்றே தோன்றுகிறது. அப்பொழுது மீண்டும் மனித இனம் கற்காலத்திலிருந்து ஆரம்பிக்கத் தேவையிருக்காது. நாம் அறிந்த பூமி மற்றும் உயிரணங்களின் வரலாறு என்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. அது முன்பிருந்த நிலைமையை விட, முன்பிருந்த உயிரணங்களைவிட வளர்ச்சியடைந்த உயிரணங்களையே அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகப் படுகிறது.
இயற்கை வாழத் தகுதியானவைகளை மற்றும் படைப்பதில்லை மாறாக முன்பை விட ஆற்றல்மிகுந்ததாக, வளர்ச்சியடைந்ததாக, தாக்குப்பிடிக்கக்கூடியதாக, அதி சிக்கலான, நுட்பமானதாகப் படைக்கிறது.
//இயற்கை வாழத் தகுதியானவைகளை மற்றும் படைப்பதில்லை மாறாக முன்பை விட ஆற்றல்மிகுந்ததாக, வளர்ச்சியடைந்ததாக, தாக்குப்பிடிக்கக்கூடியதாக, அதி சிக்கலான, நுட்பமானதாகப் படைக்கிறது.//
உங்கள் கருத்தை ஏற்கிறேன், ஆனால் மொத்தமாக உலக வளங்களை ஏற்கனவே சுரண்டி ஆகிற்று, உலகம் வெப்பம் அடைந்துவிட்டது என்று சொல்லுகிறார்கள், இயற்கைக்கு மாறாக உற்பத்தியை பெருக்க முயன்றதன் விளைவுகளாக இதனைக் கொள்கிறேன், முன்பு வேலைகளுடன் உடற்பயிற்சி சேர்ந்தே இருக்கும் தற்போது அவற்றிற்கான நேரமும் அவற்றை செய்யும் இடங்களும் மாறிவிட்டன. மனித வாழ்கையில் எல்லாம் எளிமையாக நடைபெற வேண்டும் என்ற பேராசை உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் என்றே நினைக்கிறேன்.
இன்று வரையில் விஞ்ஞான வளர்ச்சி என்று கூறுவது வெறும் புலன் நீட்சி என்ற அளவில் மட்டும் தான் உள்ளது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
RAVI said...
இந்த வார - ஆகச் சிறந்த படைப்பாக சங்கமம் திரட்டி தேர்வு செய்துள்ள இந்த விஞ்ஞான கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றி, அதன் பிறகு அங்கு சென்று பார்த்தேன் தகவலுக்கும் மிக்க நன்றி
சிறப்பான கதை. எனக்குத் தெரிந்தவரை உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் மனிதர்கள் அசாத்தியமாக 120 வருடங்கள் வாழ்வது நடக்கும் என்றே கருதுகிறேன். பழுதடையும் அனைத்து உறுப்புகளுக்கும் மாற்று உறுப்புகள் க்ளோனிங் மூலமாக படைக்கப்படும். முதுமையை உருவாக்கும் மரபணுக் கூறுகளைக் கண்டறிந்து அது செயல்படாமல் செய்ய வழிமுறைகள் ஏற்படலாம். யாரும் குழந்தை பெற்றுக் கொள்வதை விட பிரதி எடுத்துக் கொள்ளவே விரும்புவர். வேண்டிய விரும்பிய தோற்றத்தில் அறிவில் மனிதர்களை உருவாக்குவது சாத்தியமாகலாம். க்ளோனிங்கில் உருவாக்கப்பட்ட செயற்கை மனிதர்கள் உறுப்புத் தேவைகளுக்காகக் கொல்லப்படும்போது
மனித உரிமை மீறல் பிரச்சினைகள் வந்து செயற்கை மனித உரிமை வாரியம் அமைக்கப் படலாம். மரணம் என்பது விபத்தில் உருத்தெரியாமல் சிதைந்தால்தான் சாத்தியம் என்பதால் கடவுள் நிறைய விபத்துகளை உண்டாக்கலாம். மனிதர்களின் பாரம் குறையாததால் பூமியின் எடை அதிகரித்து புவி ஈர்ப்பு விசை, சூரியனையும், சந்திரனையும் சரியான தூரத்தில் நிறுத்தும் விசை ஆகியவற்றின் அளவு மாறி பூமி சூரியனால் பஸ்பமாக்கப்படலாம். அதுதான் யுக முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன்.
உங்கள் வருத்தத்தையும் வேதனையையும் என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி நம்மைச்சுற்றிய வாழ்க்கை நமக்குள் அவநம்பிக்கையையும, சோர்வையும் பொங்கி பிரவகிக்கச் செய்து கொண்டிருக்கிறதோ, அதே போல நம்பிக்கை கீற்றுக்களும் தோன்றிக் கொண்டே இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணராமல் போக இடமில்லை என்றே தோன்றுகிறது.
லாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து இன்றைய உலகின் எந்தத் துறையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய உலகின் எல்லா சமூக, விஞ்ஞான, கலை, இலக்கியத் துறைகளையும் ஆளும் விதியாக இது இருக்கிறது. இதுவே அவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாமலும், இத்துறைகள் அவற்றின் அடிப்படையான குணாம்சங்களோடு மனிதகுலத்திற்கு சேவை செய்ய முடியாமலும் அதற்கு நேர்மாறாக அதனை அதன் அழிவுக்கு இட்டுச் செல்லும் வகையிலும் செயல்படுவதற்கான காரணமென நம்புகிறேன்.
இந்த முரணை மனிதகுலம் தன் நீண்ட நெடிய வரலாற்றில் படிப்படியாகப் புரிந்து கொண்டு அதனை உடைத்து வெளிவர நடக்கும் முயற்சியாகவே வரலாற்றின் முன்னேற்றத்தை படிக்கிறேன். உரிமைகளற்று விலங்குகள் போல அடிமைநிலையிலிருந்த மக்கள் நிறைந்த சமூகங்கள் இன்றைக்கு எல்லோருக்கும் வாக்குரிமை (பெயரளவிற்கேனும்) என்ற கட்டத்தை அடைந்த வரலாற்றை படிக்கும் பொழுது எந்தச் சூழலிலும் இந்த நம்பிக்கையை கைவிட்டுவிட மனம் வரவில்லை.
இன்னும் மனிதகுலம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் இருக்கிறது என்றாலும், மனிதகுல வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் தோல்வியுற்றதாகவும். இருண்ட மூடுண்டதாகவும் காணத்தேவையில்லை என்றே கருதுகிறேன்.
//மரணம் என்பது விபத்தில் உருத்தெரியாமல் சிதைந்தால்தான் சாத்தியம்//
திரு ஜெகநாத் நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன், விபத்துகளை தடுப்பதில் முன்னேறும் அறிவியல் ஒருகாலமும் விபத்துகள் முற்றிலும் ஏற்படாமல் செய்ய முடியாது. தொடர்ச்சியான பத்து நாள் மழைக்கு உலகின் எந்த ஒரு பகுதியும் மூழ்கிவிடும் நிலைதான். இயற்கைவழியாக ஏற்படும் பேரழிவுகளைவிட கூடுதலாகவே மனித சமூகம் கடந்த நூற்றாண்டுகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளால் செய்திருக்கிறது.
//இன்னும் மனிதகுலம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் இருக்கிறது என்றாலும், மனிதகுல வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் தோல்வியுற்றதாகவும். இருண்ட மூடுண்டதாகவும் காணத்தேவையில்லை என்றே கருதுகிறேன்.//
மனித குலம் தோல்வி அடைந்தது என்று சொல்லவரவில்லை, ஆனால் வெற்றியின் போதைகளில் மேலும் வெறியுடன் அழிவை நோக்கிச் செல்கிறார்கள்.
சென்ற வாரம் தைவானில் மருத்துவக் குழு ஒன்று ஆறே வாரத்தில் கருவில் இருப்பவை ஆணா பெண்ணா என்று இரத்த மாதிரிகளை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள், இது தொடர்ச்சியாக பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அடுத்து ஆண் குழந்தையைப் பெற முயற்சி செய்ய வாய்ப்பாக அமையும் என்றாலும் கூட
பெண் குழந்தைப் பிறப்பு விகிதத்தை பேராசைக்கார பிற பெற்றோர்களினால் குறைத்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆறுவாரத்தின் கருக்கலைப்பு நான்கு மாதத்தில் செய்யும் கருக்கலைப்பை விட எளிதானது ஆபத்தில்லாதது என்பதால் பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை விரைவாகவே குறைத்துவிடுவார்கள், பிறக்கும் சில பெண் குழந்தைகள் வளர்ந்தாலும் அரிது என்பதால் ஆண்களின் தொல்லை மிகுதியாகும் சமூக சீரழிவிற்கும் இட்டுச் செல்லும். குற்றங்களுக்கு தண்டனை என்பதெல்லாம் குற்றம் நடந்த பிறகு தானே வழங்கப்படுகிறது.
கருத்துரையிடுக