நேற்று சன் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன், சாலைப் பணியாளர்கள் உடனடியாக வேலைக்கு மீண்டும் அமர்த்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தின் முகப்பைப் காட்டினார்கள், முகப்பில் ஆங்கிலத்தில் 'Madras High Court' என்றும் 'தமிழில் மதராஸ் உயர் நீதிமன்றம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது, முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருக்கும், கடந்த ஆட்சியில் செம்மொழி மாநாட்டின் போது சிறிய ஐஸ்கிரீம் கடைகளைக் கூட 'பனிக்குழை நிலையம்' என்று மநாகராட்சியில் (மிரட்டிப் ?) பெயர் மாற்றம் செய்த போது, தமிழக அரசும் பொது மக்களும் அன்றாடம் சென்று வரும் ஒரு பொது நீதிமன்றத்தின் முகப்பில் 'மதராஸ்' என்று விட்டு வைத்திருப்பது வியப்பையே அளிக்கிறது,
மதராஸை சென்னை என்று மாற்றி 20 ஆண்டுகளாகிறது, அதற்கான ஆணையும் கூட நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன், அதிகார மீறல் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விமர்சனம் செய்யத் துணியும் நீதிமன்றங்கள், தங்கள் முகவரி காட்டும் பலகையில் 'மதராசை' விட்டு வைத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
வெள்ளைக்காரர்களின் சட்டதிட்டங்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதற்காக இன்னும் அவர்கள் வைத்தப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் இல்லை வெறும் வரட்டுப் பிடிவாதமே.
கடந்த ஆட்சியில் 'மதராஸ் உயர்நீதி மன்றம்' என்பதை 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அரசு ஆணை வெளி இடப்பட்டு இருந்ததாம், ஆனால் இது செயல்படுத்தப்பட்டது போல் தெரியவில்லை, சன் டிவி காரன் தான் பழைய (படத்துடன்) பெயரைக் காட்டுகிறான்னு சரியாகத் தெரியவில்லை. பாரிமுனை, பூக்கடை பக்கம் செல்பவர்கள் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறதா என்று படம் பிடித்து வந்து உறுதிப் படுத்தினால் நலம், நீதிமன்றம் வளாகம் 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றப்படாவிட்டால் கண்டனத்திற்கு உரியது தான், இதற்கு ஆட்சியாளர்களும் நீதிமன்ற நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் பெயர் வைக்க தமிழ் பயன்படவில்லை என்றால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது சீனாவிலோ பயன்படுமா என்ன ?
(சன் தொலைக்காட்சி செய்தியை சற்று தொலைவில் இருந்து படம் எடுத்தேன், வெளிச்சம் காரணமாக சரியாக விழவில்லை)
4 கருத்துகள்:
ஊரின் பெயர் மாறினாலும், நீதிமன்றங்களைப் பொருத்தவரை பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தாலோழிய பெயரை மாற்றமுடியாதாம்.இதே நிலைதான் சென்னை, கொல்கட்டா, மும்பை, தில்லி போன்ற எல்லா நீதிமன்றங்களுக்கும். எனவே நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவனசெய்து பெயர் மாற்றம் செய்வார்கள் என நம்புவோம்!!
தமிழர்களை "மதராசி "என வட நாட்டு இந்தியர்கள் அன்பாக அடைமொழியுடன் விளிப்பதலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வட நாட்டை செர்த்தவராக உள்ளதாலும் சென்னை நீதி மன்றம் ,மதராஸ் ஹைகோர்ட் என அழைக்கப்படுகிறது இதில் பிராமண சதி எதாவது அண்ணன் கண்டுபிடித்தால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல .
அதே போலத்தான் மதறாஸ் யூனிவெர்சிடியும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///மதராஸை சென்னை என்று மாற்றி 20 ஆண்டுகளாகிறது////
கணக்கில் நீங்கள் புலவரே.....!
கருத்துரையிடுக