அன்பர் நாள் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடாதே, ஆங்கில புத்தாண்டு கொண்டாடாதே கலசாரம் சீரழிந்துவிடும் என்று கூப்பாடு போட்டு, கொண்டாடுபவர்களை ஓட ஓட துறத்தியது பெங்களூரில் செயல்படும் ஶ்ரீராம் சேனா என்கிற இந்து மதவாத அமைப்பு, இது போன்ற இந்து மதம் சார்ந்த அமைப்புகள் அனைத்தும் பிஜேபி கட்சியின் ஆதரவு பெற்றவை அல்லது தருபவை தான்.
இவ்வகை அமைப்புகள் பொதுவாக போலி சாமியார்களின் ஆபாச லீலைகள் எதையும் கண்டு கொள்வதில்லை, அப்படி கண்டு கொண்டால் இந்து மதத்திற்கு இழுக்கு என்பதால் முடிந்த அளவில் கண்டு கொள்ளாமல் சென்றுவிடும் இல்லை என்றால் அவற்றை மறைக்கவே முயற்சிக்கும்.
சட்டசபைக்குள் இரண்டு பிஜேபி அமைச்சர்கள் அலைபேசியில் ஆபாச படங்களைப் பார்த்த விவகாரத்தை எதிர்கொண்டு தொடர்புடைய இரண்டு அமைச்சர்களும் பதவி விலகி இருக்கிறார்கள், செல்போனில் ஆபாசப்படம் பார்ப்பது சரியா தவறா ? அல்லது ஆபாச படம் பார்ப்பதே சரியா தவறா என்கிற சர்சைக்குள் செல்ல விரும்பவில்லை, அவை தனியே விவாதிக்க வேண்டிய ஒன்று.
மனிதர்கள் குறிப்பாக ஆண்கள் பாலியல் உணர்வில் பலவீனமானவர்கள், ஆபாசப்படம் பார்ப்பது, பாலியல் தொழிலாளியை நாடுவது குறித்த விவாதங்கள் என்றுமே இருக்கின்றன, இவற்றில் மதங்கள் சொல்லும் தீர்ப்பில் ஆண்கள் தாங்கள் பயன்படுத்திய ஆணுறையை அவரவர் மதம் நோக்கி தூக்கி வீசி அவற்றை தொடர்ச்சியாகவே புறக்கணிக்கின்றனர். ஆணிய சமூகத்தின் விதிகளும் விதிமீறல்களும் அவர்களையே பாதிக்கும் போது இவை தவிர்க்க முடியாத ஒன்று என்றாகிறது. ஆனால் ஆபாசப் படம் பார்க்கும் இடம், அலுவலகத்தை, வழிபாட்டுத் தளத்தை பாலியல் கூடமாக்குவது, உடன் வேலை செய்பவர்களுக்கு பாலியல் ரீதியாக கொடுக்கும் சீண்டல்கள் உள்ளிட்ட இடம் பொருள்கள் பொதுவாகவே பொதுச் சமூகத்தில் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கக் கூடியது ஆகும்.
சட்டசபை என்பது மக்கள் பிரச்சனைகளை பேசக் கூடும் இடம், அதில் அமைச்சர்களுக்கு பிற உறுப்பினர்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்பு உண்டு, சட்டசபை நடைபெறும் பொழுது அதில் கவனம் செலுத்தாமல் செல்போன் பயன்படுத்துவதே தவறு, தவிற பொது இடத்தில் பார்க்க கூடாதவற்றை அமைச்சர் என்கிற கர்வத்தில் இவர்கள் வரம்பு மீறி இருக்கிறார்கள்.
பள்ளி கல்லூரிகளில் செல்போன் எடுத்துச் சென்றாலும் பயன்படுத்தத் தடை இருப்பது போல் நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவற்றை தடை செய்வது தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். எந்த ஒரு அவசரம் என்றாலும் அலுவலக பொது எண்ணில் தொடர்பு கொள்ளச் சொல்வதில் இவர்களுக்கு என்ன சிக்கல் ஏற்பட்டுவிடப் போகிறது ? ப்ரைவசி மற்றும் பிறர் அறியா தகவல்களை, அல்லது குடும்பத் தகவல்களையே பேச அலுவலகமோ சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ சரியான இடம் இல்லை, மற்றும் அவற்றில் கலந்து கொள்ளும் நேரமும் தனிப்பட்ட நலனுக்கானதும் இல்லை.
ஆபாசப்படமே பார்க்கவில்லை என்றாலும் சட்டசபை நடைபெறும் நேரத்தில் செல்போன் பயன்படுத்தியது அமைச்சர்களின் செயல் பொறுப்பற்ற செயல் என்பதாலும் இவர்களை பதிவி நீக்கம் செய்ய போதுமான அடிப்படைக் காரணங்கள் உண்டு.
மக்கள் பணியிடையே அவற்றை புறக்கணித்து ஆபாச படங்களில் முகம் புதைத்த அமைச்சர்களுக்கு, 'சோ' கால்டு கலாச்சார காவல்காரர்களான இராம் சேனா வகையறாக்கள் அந்த பிஜேபி அமைச்சர்களுக்கு அவர்கள் சார்பில் அவர்களுடைய கட்சித் தலைமைக்கு 'பிங்க்' ஜட்டி அனுப்பி வைக்கலாமே.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
//மக்கள் பணியிடையே அவற்றை புறக்கணித்து ஆபாச வீடியோவில் முகம் புதைத்த அமைச்சர்களுக்கு, 'சோ' கால்டு கலாச்சார காவல்காரர்களான இராம் சேனா வகையறாக்கள் அந்த பிஜேபி அமைச்சர்களுக்கு அவர்கள் சார்பில் அவர்களுடைய கட்சித் தலைமைக்கு 'பிங்க்' ஜட்டி அனுப்பி வைக்கலாமே.// அதையும் விற்று காசாக்கிடுவாங்க! கிழிந்துபோன ஜட்டி வேணா அனுப்பிவைக்கலாம்.
//அதையும் விற்று காசாக்கிடுவாங்க! கிழிந்துபோன ஜட்டி வேணா அனுப்பிவைக்கலாம்.//
இதையும் கூட மூஞ்சி துடைக்கப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இந்த நிகழ்வுக்கு ராம்சேனா வகையறாக்களின் எதிர்வினையை அறிய ஆவல்!
அதுல எந்தக் கனவுக் கன்னியோடதுன்னு குறித்து அனுப்பவும்.
ஹி..ஹி..
//அதையும் விற்று காசாக்கிடுவாங்க! கிழிந்துபோன ஜட்டி வேணா அனுப்பிவைக்கலாம்.//
பிஜேபி ஜட்டி விற்றால் வாங்க ஆள் இருக்காங்களா ? எதாவது அரைகுறை சாமியாரின் அரைநிர்வாணத்திற்கு பயன்படலாம்.
//இதையும் கூட மூஞ்சி துடைக்கப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இந்த நிகழ்வுக்கு ராம்சேனா வகையறாக்களின் எதிர்வினையை அறிய ஆவல்!//
அவங்களெல்லாம் யாரும் வரமாட்டாங்க. எதாவது அனானி புரொபைலில் வந்து ஆபாசமாக திட்டினால் உண்டு, அப்படி வந்தால் நான் வெளியிடமாட்டேன்
athu eppadi anna... papper la news padithavudan unga blog post varum enru thonuthu.
sari vidunga anna ella MLA vum MLA hostala pannuvathai ivanga sabaila parthu irukkanga. kodumai. pothu valvil irunthu neekka vendum.
anna enakku pink jatti vendam athai kodukka oru ponnu venum. imm athaiyathu kalyanam panna mudiumannu parkkalam.
வீட்டுல இதே வேலையை செஞ்சா யாரு கேட்கப் போறாங்க...ஊரே பார்த்துட்டு இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி பண்றது..தமக்கு தாமே ஆப்பு வச்சுக்குறதுன்னு தான் சொல்லணும்....
கோவி சார்...அலுவலக நேரத்தில் 18+ எனப் போட்டிருக்கும் தமிழ் பதிவுகளை தமிழ்மணம் மூலம் வாசித்தலும் இதே அளவிற்கு கண்டனத்திற்குரியவையா : )
ராம சேனா இன்னுமா இருக்குது?அந்தாளு காசு வாங்கிட்டு கலாட்டாவுக்கு ஆளு அனுப்புற கட்டப்பஞ்சாயத்துக்காரன் என்ற ஜட்டி கிழிஞ்சு ரொம்ப நாளாகுதே!
நீங்க ஒருவர்தான் டென்னிஸ் கோர்ட்ல இரண்டு பக்கமும் ஆடுறீங்க:)
//RAVI said...
அதுல எந்தக் கனவுக் கன்னியோடதுன்னு குறித்து அனுப்பவும்.
ஹி..ஹி..//
நடிகைகளை பாலியல் தொழிலாளி என்று எழுதும் அதே பத்திரிக்கை சமூகம் தான் அவர்களை கனவு கன்னிகள் என்று எழுதுகிறார்கள். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.
//பித்தனின் வாக்கு said...
anna enakku pink jatti vendam athai kodukka oru ponnu venum. imm athaiyathu kalyanam panna mudiumannu parkkalam.//
குப்புற படுத்துக்கிடக்கும் உங்களுக்கு ஆசை தான்.
//கோவி சார்...அலுவலக நேரத்தில் 18+ எனப் போட்டிருக்கும் தமிழ் பதிவுகளை தமிழ்மணம் மூலம் வாசித்தலும் இதே அளவிற்கு கண்டனத்திற்குரியவையா : )//
'சார்' வேண்டாமே,
வேலை கெட்டால் அலுவலகம் வேலைக்கே ஆப்பு வைத்துவிடும் 18- பார்த்தாலும் கூட
//நீங்க ஒருவர்தான் டென்னிஸ் கோர்ட்ல இரண்டு பக்கமும் ஆடுறீங்க:)//
மதச்சாக்கடையில் எந்த சாக்கடை ரொம்ப நாறுதுன்னு எப்படிச் சொல்ல முடியும், எல்லாம் பழமைவாத பழைய சாக்கடைகளே.சாக்கடையை மூடுங்கைய்யா மூடுங்கைய்யா என்று நாறும் பக்கமெல்லாம் சொல்ல வேண்டியது தான்.
:)
கருத்துரையிடுக