பின்பற்றுபவர்கள்

22 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 7

பாலித் தீவுக்கு சுற்றுப் பயணம் என்று முடிவானதும், பாலி பற்றி முன் பின் எதுவும் தெரியாத நிலையில் முதலில் தெரியவந்தது அங்கு எரிமலைகள் அதுவும் உயிரோட்டத்துடன் எப்பவும் வெடிக்கக் காத்திருக்கும் நிலையில், தற்போது பொறுமையுடன் அவை இருப்பது தெரியவந்தது, பனிப்பொழிவு. கடுங்குளிர், மலைப்பகுதிகள் போன்ற இயற்கைச் சூழல் நிறைந்த பல இடங்களுக்கு பயணித்து இருந்தாலும், முதன் முதலாக எரிமலையைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆர்வம் பாலித் தீவு பயணத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் கூடி இருந்தது.

*******

பாலித் தீவில் சில எரிமலைகள் உள்ளன அவற்றில் மவுண்ட் அஹுங் உயரமானது, அதன் உயரம் 3000 மீட்டருக்கும் கூடுதலானது என்று வழிகாட்டி குறிப்பிட்டார், கடைசியாக பொங்கியது 1963 ஆம் ஆண்டாம், மவுண்ட் அஹுங் மேரு மலைக்கு ஒப்பானது என்பது பாலித் தீவினர் நம்பிக்கை, சிவனின் ஆணைப்படி கடலில் மிதந்து கொண்டு இருந்த தீவை மேருவின் பகுதியைப் பெயர்த்து எடுத்து அங்கே வைத்து அங்கே பாலி மக்களை குடி அமர்த்தினராம், இது கிட்டதட்ட பூமி அசையாமல் இருக்க அல்லாஹ் மலைகளை நட்டான் என்பது போன்ற கதைதான். மவுண்ட் அஹுங் தாய் மலை என்றும் சொல்லப்படுகிறது.

This mythical mountain of gods was mentioned in Tantu Pagelaran, an Old Javanese manuscript written in Kawi language from 15th century Majapahit period. The manuscript is describing the mythical origin of Java island, and the legend of moving some parts of mount Meru to Java. The manuscript explained that Batara Guru (Shiva) has ordered the god Brahma and Vishnu to fill the Java island with human beings. However at that time Java island was floating freely on the ocean, ever tumbling and always shaking. To make the island still, the gods decided to nail the island upon the earth by moving the part of Mahameru in Jambudvipa (India) and attaching it upon Java.[7] The resulting mountain is Mount Semeru, the tallest mountain of Java. மேலும்

நாங்கள் பார்க்கப் போனது அதைவிட மூன்று மடங்கு உயரம் குறைவான 'மவுண்ட் பாதுர்' எங்கள் பேருந்து 'மவுண்ட் பாதுர் அல்லது குணுங் பாதுர்' என்கிற எரிமலை இருக்கும் பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் ஊரான கிண்டாமணி நோக்கி பயணித்தது. நெல் வயல் பகுதிகள் ஆங்காங்கே இருந்தன, அப்பகுதி சமதளமாக இல்லாமல் இருந்தது, நிலத்தடி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள், அவற்றினிடையே போக வர என இருவாகனங்களே கடக்கக் கூடிய குறுகிய சாலைகள் தான், வழியெங்கும் பாலி கிராமம், பாலியில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான வேறுபாடு மக்கள் நெருக்கமும் வீடுகளின் நெருக்கம் தான், பசுமைகள் அதிகமாகவும் வீடுகள் குறைவாக காணப்பட்டாலும் முன்பு சொன்னது போல் வீடுகளை ஒட்டிய அவர்களது குடும்பக் கோவில்கள், மற்றும் கிராமத்திற்கு பொதுவான கோவில்கள் தென்பட்டன.

உயரம் செல்லச் செல்ல வீடுகளின் எண்ணிக்கை குறைய மலைத் தோட்டங்கள் காணப்பட்டன, அவற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு, பம்ப்ளிமாஸ், மங்குஸ்தான், அண்ணாசி, மலை இலந்தை பழ மரங்கள், அவற்றில் சில காய்த்திருந்ததையும் காண முடிந்தது, அவற்றை பறித்து வந்து வீட்டு முன் குவியல்களாக கடைகள் போடப்பட்டிருந்ததையும் ஆங்காங்கே காண முடிந்தது. காஃபி தோட்டங்களும் அங்கு இருப்பதாக வழிகாட்டிக் குறிப்பிட்டார். கிண்டாமணி பகுதியை அடைந்தோம்.







ஊட்டிப் போன்று தட்பவெப்பத்துடன் உயரமான அகலம் குறைவான சமவெளி, அதனை அடுத்து பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் மக்கள் விழுந்துவிடாமல் இருக்க, சிறிய தடுப்பு சுவர்கள், சாலைக்கு முதுகை காட்டியபடி தடுப்புச் சுவர் மீது மக்கள் சாய்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். பார்க்கும் இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ தொலைவில் கருமணல் மலைக் குவியல் போன்று எரிமலை ஒன்று உயர்ந்து காணப்பட்டது. இது தான் எரிமலையா ? ஆம் என்று சொல்வது போன்று சுற்றிலும் புல் பூண்டுகள், பசுமைகள் எதுவும் இல்லை, கம்பீரமாக நிற்கும் எரிமலை உச்சியில் மேகக் கூட்டங்கள் உரசி நின்று கொண்டிருக்க, எரிமலை புகைவது போன்ற காட்சி. தற்போது எரிமலை அமைதியாக இருப்பதால், நெருங்கிச் சென்று பார்வையிடும் எரிமலை ஏற்றத்திற்கும் சுற்றுவாசிகளை இந்தோனேசியா அரசு அனுமதிக்கிறதாம். 5633 அடி உயரமுள்ள மவுண்ட் பாதுர் கடைசியாக சினத்தைக் காட்டியது 2000 ஆண்டில்.


அவற்றை இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும் என்று சொல்லிய வழிகாட்டி, கிண்டாமணியின் உயரப் பகுதியில் அமைந்திருந்த சீன உணவகத்திற்கு மதிய உணவிற்காக பேருந்தை நிறுத்தினார், உணவகத்தில் உணவுத் திருவிழாவிற்கு சமைத்ததைப் போல் 50க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இருந்தன. குளிர்பான வகைகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் தவிர்த்து சாப்பிட எனக்கு ஒன்றும் இல்லை, சுற்றுலா நிறுவனம் ஏற்பாட்டின் படி எனக்கு சைவ உணவு ஏற்பாட்டில் சுடச் சுட நூடுல்ஸ் மற்றும் ப்ரைட்ரைஸ் எனப்படும் பொறித்த சோறு இரு தட்டுகளில் கொண்டு வந்து வைத்தனர்.



நூடுல்ஸ் சுவையோ சுவை தின்று தீர்த்தேன், ப்ரைட் ரைஸுக்கு இடம் இல்லாததால் அரை தட்டு தான் உண்ண முடிந்தது, மற்றபடி பழம், பானமெல்லாம் குடித்துவிட்டு உணவகத்தின் கண்ணாடி தடுப்பைத் தாண்டி எரிமலையைப் பார்வையிட அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து பார்க்க, சுற்றிலும் பிறபகுதியில் வெயில் அடித்த வெளிச்சத்தால் மலை மின்னிக் கொண்டு இருக்க உச்சியில் முத்தமிட்ட மேகங்களும் வெட்கப்பட்டு விலக 'மவுண்ட் பாதுர்' எரி மலை மிகத் தெளிவாகத் தெரிந்தது.





எரிமலை அந்தப் பகுதியின் முன்பு ஒரு கிமீ வரை குழம்புகளை ஓடவிட்டதன் தடம் படிந்து இருந்தது, தப்பிய பகுதிகளில் மரஞ்செடிகள் காணப்பட்டன, எரிமலையை இடது பக்கம் பள்ளத்தாக்கில் அழகிய ஏரி, அடுத்து 'மவுண்ட் அஹூங் எரிமலைப் மலைப்பகுதி', பள்ளத்தாக்கில் எரிமலைகளின் அடிவாரம் வரை மரங்கள் வீடுகள், பார்க்க கண்கள் வியந்தன, எங்கள் சுற்றுலா குழுவினர் குழுமி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பாலியில் நான் எதிர்ப்பார்த்திருந்த அருமையான காட்சி அந்த இடத்தில் காணக் கிடைக்க மனமும் நிறைவு பெற்றது.



உறைந்த எரிமலை குழம்புகள் நுறைபாறை போன்று உள்ளது, நன்றாக அழுத்தமாக இருக்கிறது, அவை பெயர்த்து எடுக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப் பயன்படுத்துகிறார்கள், அருகில் இருந்த ஏரியில் இருந்து தான் மொத்த பாலியும் தண்ணீர் தேவையை போக்கிக் கொள்கிறது, தண்ணீரில் கொஞ்சம் கந்தக வாடையும் குறைவான உப்பு சுவையும் இருப்பதால் என்னவோ அங்கு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் நீரின் சுவையும் அது போன்றே இருக்கிறது. நான் சுவை அறிந்த அளவில் சிங்கப்பூர் - மலேசியா தண்ணீர் சுவைக்குப் பிறகு தான் பிற.

அந்தப் பகுதியில் சுற்றுலாவாசிகளை மொய்த்து உடைகள் மற்றும் கைவினைப் பொருள்களை விற்கும் மக்கள் நிறைய இருக்கிறார்கள், அவர்கள் தோற்றத்தில் இருந்து ஏழைகள் என்று தெரிந்தது அவர்களில் சிறுவர்களும் பொருளை விற்க சுற்றுலாவாசிகளை பின் தொடர்ந்து நச்சுகிறார்கள். ஒருவரிடம் வாங்கிவிட்டால் ஒரு பத்து பேர் மொய்த்து அவர்களுடைய பொருள்களை வாங்க கெஞ்சுகிறார்கள், அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சிறுவர்களும் இப்படி வருகிறார்களா ? அல்லது படிக்காமல் இந்த வேலைக்கு வந்துவிட்டார்களா என்று அறிய முடியவில்லை, பரிதாபமாகவே இருந்தது, முதியோர்களும் இருந்தனர். பொருள் விலை ஐந்து மடங்கு கூடுதலாகச் சொல்லி குறைத்துக் கேட்க கேட்க படிகிறார்கள், நினைவிற்காக இரண்டு டி சர்டுகள் வாங்கினேன், இரண்டு டி சர்ட் 100K சொல்ல 40K விற்கு வாங்கினேன், எனது மற்ற நண்பர் பின்னர் சொன்னார் அவர் வாங்கியது இரண்டு டி சர்ட் வெறும் 20K தானாம், எனக்கு ஏமாற்றமாகத் தெரியவில்லை, இரண்டு டி சர்ட் 40K என்ற அளவில் சிங்கை வெள்ளிக்கு 7 தான் வரும், தரம் குறைவு தான் என்றாலும் அதே விலைக்கு சிங்கையில் வாங்க முடியாது. அவர் 3.5 வெள்ளிக்கு வாங்கி இருக்கிறார். அப்போது பறித்தது அடையாளமாக பழங்கள் தெரிந்ததால் அவற்றிலும் கொஞ்சம் வாங்கினேன், அதே அளவு பழங்கள் சிங்கையில் அதைவிட 4 மடங்கு கூடுதல் விலையாக விற்கப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் உணவிற்காக மற்றும் சுற்றிப்பார்ப்பது என்ற அளவில் அங்கே கிண்டாமணியில் செலவிட்டு நான்கு மணி வாக்கில் அங்கிருந்து பாலித் தீவின் முதன்மையாக கருதப்படும் 'உபுட்(UBUD)' எனப்படும் கலாச்சார பண்பாட்டு மையமான கிராமம் நோக்கிப் புறப்பட்டோம்.

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

கிண்டாமணி பதிவு சூப்பர். ரசித்தேன்.

Maagy சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,

உங்களின் இந்தப் பதிவுத் தொடரை மிக நேர்த்தியாக அளித்துக் கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

உங்களின் இந்த இனிய படைப்பு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது, மேலும் பாலி எனும் தீவு எனது கனவு சுற்றுலா திட்டங்களில் முதன்மையான ஒன்று, ஆகவே மிக ஆர்வமாக, மேலதிக எதிர்பார்ப்புக்களுடன் உங்களின் இந்த தொடரை பின்தொடர்ந்து வருகிறேன்.

மேலும், இந்த வருட கடைசியில் பாலி தீவு பயணம் மேற்கொள்ளலாமென நினைக்கிறேன், ஆகையால் அந்த சுற்றுலாவிற்கான மேலதிக விவரங்கள் பெரும் நோக்கில் உங்களை சில தகவல்கள் கோருவதற்கு எதுவாக உங்களின் மின்னஞ்சல் (email) முகவரியை எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன்.

நன்றி,
நித்யா

ப.கந்தசாமி சொன்னது…

மிகவும் ரசித்தேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்