பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2009

ஆறாம் அறிவுக்கு மேல்... !

அறிவு என்றால் ஒன்றைப் பற்றிய உண்மையை உணர்ந்து தெளிதல், அல்லது அறிந்து கொண்டு தெரிந்து வைத்திருத்தல் என்று சொல்லலாமா ? நம்முடைய அறிவு என்பது இதுவரை முந்தைய தலைமுறையின் பட்டறிவின் தொகுப்பு. மனித அறிவுக்கும் ஏனைய உயிரனங்களின் அறிவுக்கும் ஒரே வேறுபாடு, பட்டறிவை(அனுபவ) சந்ததிகளுக்கு எழுதி வைப்பதன் மூலம் வெற்றிகரமாக மாற்றுவது மட்டுமே. மின்சாரம் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புகள், உண்மைகள், தத்துவங்கள் ஆகியவற்றின் நம் அறிவு என்பவை முன்னோர்கள், முந்தைய கண்டுபிடிப்பாளர்கள் நமக்கு தொகுத்துத் தந்தவையே. குழப்பமான அல்லது நம் புலனுக்கு எட்டாதவைகளைப் பற்றிய எதையும் அதன் தன்மைகளை பிரித்து அறிவதன் மூலம் நமக்கு அவை பற்றிய உண்மை தெரிகிறது. கண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே. பொருள்களின் தன்மையை ஆராய்ந்து அவற்றில் இருக்கும் ஒழுங்குகளைக் கண்டு கொண்டு, அவற்றில் மாற்றம் ஏற்படுத்திக் கொடுப்பது தான் கண்டு பிடிப்புகள். நாம் கண்டுபிடிக்காதவை அனைத்துமே நம் அறிவைப் பொருத்தவரை ஒழுங்கற்ற அல்லது குழப்பமானவை என்று சொல்வதே பொருத்தமானது. கண்டுபிடித்த பொருள்கள் ஒழுங்கான, தெளிவான என்ற நிலைக்கு அதன் சமன்பாடுகள் அறியப்பட்டு, வரையறைக்குள் வந்துவிடுகிறது. அதாவது உலக, பிரபஞ்ச பொருள்கள் அதன் இயக்கங்கள் இவற்றை ஒழுங்கான (கண்டுபிடிக்கப்பட்ட) மற்றும் ஒழுங்கற்ற (இது வரை கண்டறியப்படாத) என்ற இரு வகைக்குள் தான் இருக்கின்றன.

மனித மூளை அறிவின் சிகரம் என்று நினைப்பது எந்த அளவுக்கு உண்மை ? மனித மூளையின் நினைவுத் திறனையும் அதன் மூலம் பகுத்தறியும் தன்மையையும் வியக்கிறோம் ஆனால் மனித மூளையை அறிவின் சிகரம் என்று சொல்ல முடியுமா ? ஆறாவது அறிவைத் தாண்டி எதுவுமே இருந்துவிட முடியாதா ? பகுத்தறிவாதிகளைக் கேட்டால் இருக்க முடியாது என்றே சொல்லுவர். உலகைப் பற்றிய அறிவு மனித மூளைகளின் கண்டுபிடிப்புகளால் வந்தவை, மனித மூளையும் அதன் ஆறாவது அறிவும் இல்லை என்றால் நாமும் விலங்குகள் போல் தான் என்று சொல்லுவர். ஆறாவது அறிவு இருட்டு அறையில் இருக்கும் ஒரு பொருளைப் பார்க்க உதவும் ஒரு விளக்கைப் போன்றது மட்டுமே. அறையில் அந்த பொருள்கள் எப்படி வந்தன, எப்படி அவை ஒழுங்கு தன்மையில் அறையினுள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை சொல்லிவிடாது. அல்லது எந்த ஒரு தெளிவான பதிலையும் ஆறாவது அறிவின் மூலம் பெற முடியாது. ஊகமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லலாம். டார்வின் கோட்பாடுகள் கூட இப்படிப்பட்டதே. புல்லாகி பூண்டாகி, பூச்சாகி விலங்காகி, குரங்காகி மனிதனான் என்பதே டார்வின் கொள்கை, கோட்பாடு அளவில் இவை சரி ஆனால் இவை உயிர்களின் தோற்றம் குறித்த முடிவான கோட்பாடுகள் இல்லை. அறிவியலாளர்கள், அறிவியல் அடிப்படையில் அந்த ஊகத்தை ஏற்றுக் கொள்வர், அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதால் அதனை படித்தவர்கள் ஏற்றுக் கொள்வர். பெருவாரியான மக்கள் ஆதரவு இருந்தால் மதவாதிகள் அதனை மதத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாக எதாவது ஒரு செய்யுளுக்கு (திரித்து) பொருள் கூறி அறிவியலும் உள்ள மதம் என்று புரியவைத்து மதம் வளர்க்க முயல்வர். ஆப்ரகாமிய மதங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் மனிதன் களிமண்ணால், இரத்தக் கட்டியால் படைக்கபட்டவன் என்பதே அவற்றின் கொள்கை (அது வேறு காமடி), இந்திய சமயசார் தத்துவங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் இந்திய மதங்களுக்கு இருக்கும் மறைமுக சிக்கல், உயிரினங்களின் தோற்றம் என்பவை காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஜீன்களின் உருமாற்றத்தால் உருவானவை என்கிற அடிப்படையில் அமைந்திருப்பதால், இங்கே இறைவனின் படைப்புக் கொள்கையை எங்கே இடைச் சொருகுவது என்பது அந்த சிக்கல். டார்வின் கொள்கையை ஒரு மதம் ஏற்றுக் கொண்டால், அது கிட்டதட்ட இறைவனின் படைத்தல் தொழிலை மறுப்பது போன்றதாகும், படைத்தல் தொழிலையே மறுக்கும் படி அமைந்திருப்பதால் மனிதனை இறைவன் படைத்தான் காக்கிறான், எனவே வணங்குங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் ஞாயமானவை என்று தெரியவில்லை. வெறும் இறை அச்சம் என்பதைத் தவிர்த்து இறைவணக்கம் செய்யச் சொல்ல எந்த காரணத்தையும் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மதத்தினரால் சொல்லவே முடியாது.


நமக்கு கிடைக்கும் அறிவின் தொகுப்பு பகுத்தறிவு, அறிவியல் ஆன்மிகம் இப்படி எதன் மூலம் வந்திருந்தாலும் அவை இயங்கு பொருள்களில் இருக்கும் ஒழுங்குமுறையை அறிந்து கொள்வதை மட்டுமே தந்திருக்கிறது. அந்த ஒழுங்கு முறை ஏன் எப்படி ஏற்பட்டது என்பதை அறிவது மிக மிகக் கடினம், சரியாக 356.25 நாட்கள் பூமி ஒரு ஆண்டைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் தொடங்குகிறது. நமக்கு வேண்டுமானால் நமது எண்ணியல் அடிப்படையில் அது ஏன் 365.25 நாள் எடுத்துக் கொள்கிறது, ஏன் 365 டிகிரியில் வட்டமான வட்டப்பாதையில் இன்றி நீள்வட்டத்தில் செல்கிறது என்பதற்கான விடை தெரியாமல் இருக்கலாம், ஆனால் (இயற்கையின்) இயக்கம் என்னும் பேரறிவு என்பது மனித அறிவிக்குள் அடங்காது, பேரறிவிற்கும் நமது எண்ணும் முறைக்குக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. 10 அடிமான முறையில் நாம் எண்ணுகிறோம். இயற்கைக்கும் அதன் இயக்கத்திற்கும் நமது 10 அடிமான முறை எதுவும் தெரியாது, காரணம் 10 அடிமான முறை, கோண அளவீடுகள் நம்மால், நமது கணக்கு வழக்குக்காக ஏற்படுத்தப்பட்டவையே. இயற்கையும் நமது கணக்கியல் முறைகளில் தான் இயங்க வேண்டும் என்பதற்கு எந்த வித தேவையும் இல்லை. அவற்றின் இயக்கங்களை நம்முடைய அளவீட்டு முறைகளில் ஒப்பிட்டு இயற்கையில் இருக்கும் ஒழுங்கு முறைகளைக் கண்டு கொண்டு, அதன் வழியாக கணக்கிட்டு சாட்டிலைட் போன்றவற்றை நிலை நிறுத்துகிறோம், அதாவது இயற்கை இயக்கத்திற்கு பொருத்திக் கொள்ளும்படி நமது கணக்கியலில் சமண்பாடுகளை உருவாக்கி அதனை ஒப்பிட முடிகிறது.

இவற்றை பூமி இயக்கத்தைக் குறித்து மட்டுமே சொல்லவில்லை. எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் ஏன் இருக்கின்றன ? ஐந்து இதழ் பூக்கள், அமீபா போன்ற ஏன் அனைத்து உயிரனங்களின் அமைப்பிற்கும், கனிம பொருள்கள் அனைத்திற்குமே பொருந்தும், நாம் பொருள்களின் இயக்கத்தை நமது கணக்கியலில் பொருத்தி சமண்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறோம் அதைத்தான் மனித அறிவு வளர்ச்சியால், முயற்சியால் இதுவரை செய்யப்பட்டு இருக்கிறது, அதையே பகுத்தறிவு அல்லது ஆறாவது அறிவு என்கிறோம். நம்மால் அறிய முடியாத, காரணங்கள் அனைத்தையுமே அறிந்து கொள்ள முடியாத அளவில் பேரியக்கம் இருக்கிறது. அதை இயற்கை என்போர் சிலர், இறைவன் என்போர் பலர். இயக்கத்திற்குக் காரணம் அதன் தன்மையிலேயே இருப்பதாக புரிந்து கொள்வதால், நம்புவதால் அவற்றை இறைவனின் லீலைகளாக நான் நினைப்பது இல்லை.

எண்ணற்ற உயிர்கள், அவற்றின் தோற்றம், அவற்றின் ஒவ்வொரு வித்தும் வளர்ந்து பல வித்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம், ஒரு வட்டத்திற்குள்ளேயே அவ்வுயிர்கள் தோன்றி பெருக்கிக் கொண்டு தொடர்கின்றன. ஒரு வித்திற்குள் முழுவளர்ச்சியின் தன்மையை அடங்கி இருப்பது மிக மிக நுட்பமான ஒன்று, நம் மனித அறிவால் விளங்கிக் கொள்ளவும் முடியாது, ஜீன்களின் மூலம் அவற்றின் தன்மைகளை மட்டுமே அறிய முடியும், நாம் கண்டு கொண்டது தவிர்த்து இயற்கையின் பல செயல்படும் தன்மைகளின் அறிவு, மனித மூளையுடன், மனிதனின் கணக்கியல் சமண்பாடுகளுடன் மிகச் சரியாக ஒப்பிட முடியாத பேரறிவு. அதாவது இயக்கத்தின் தன்மைகளையோ, அவை ஏன் அவ்வாறு ஒரு (ஏதோ ஒரு) முறையில் இயங்குகின்றன என்பதை மனித கணக்கு மற்றும் எண்ணியல் மூலமாக முற்றிலுமாக அறிந்து கொள்ளவே முடியாது. ஆறாம் அறிவின் மூலம் இயற்கையை முழுவதுமோ ஆராய்ந்துவிட முடியும் என்கிற மனித முயற்சி இயற்கையின் பேரறிவுக்கும் முன்பு பெரும் அறைகூவல் தான். பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும் மனித அறிவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இயற்கை பேரறிவு மிக்கது என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

22 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே.\\

மிகச்சரி.

நட்புடன் ஜமால் சொன்னது…

செம ஆய்வு ...

சி தயாளன் சொன்னது…

ஆய்வறிக்கை...அருமை..

ஊர்சுற்றி சொன்னது…

//பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும்//

கடவுள் தத்துவத்தை மறுப்பவர்களே முழுமையான பகுத்தறிவாளர்க அல்லது இறைமறுப்பாளர்கள். அவர்களுக்கு இறைவனை நம்ப எந்த அவசியமும் இல்லை. 'நம்பத் தேவையில்லை' என்றி வார்த்தைகள் இங்கு தேவையே இல்லாதவை.

//இந்திய சமயசார் தத்துவங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. // ஏற்றுக் கொள்கின்றனவா? இல்லையா? ஏன் இந்தக் குழப்பம்?!!! மறைமுகச் சிக்கல் எல்லாம்?!!!

என்னை பொருத்தவரை, மனித இயல்பில்(குழந்தைப் பருவ மூளையில்) இல்லாத இறைவனை, இல்லை என்று சொல்கிற அறிவு எப்போது ஒருவனுக்கு வருகிறதோ அப்போது அவன் ஆறாம் அறிவுக்கு மேல் சிந்திக்கத் தொடங்கிவிட்டான் என்பதே.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஊர் சுற்றி said...
//பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும்//

கடவுள் தத்துவத்தை மறுப்பவர்களே முழுமையான பகுத்தறிவாளர்க அல்லது இறைமறுப்பாளர்கள். அவர்களுக்கு இறைவனை நம்ப எந்த அவசியமும் இல்லை. 'நம்பத் தேவையில்லை' என்றி வார்த்தைகள் இங்கு தேவையே இல்லாதவை.
//

ஊர் சுற்றி அவர்களேம்

அவசியம் என்பது வடசொல் அதாவது சமஸ்கிரத சொல், அதற்கு மாற்றான நேர் தமிழ்ச் சொல் 'தேவை' என்பது. நான் சரியாகத்தான் சொல்லி இருக்கிறேன். அதாவது அவசியமில்லை என்று சொன்னாலும் தேவை இல்லை என்று சொன்னாலும் ஒன்றே பொருள்.

//என்னை பொருத்தவரை, மனித இயல்பில்(குழந்தைப் பருவ மூளையில்) இல்லாத இறைவனை, இல்லை என்று சொல்கிற அறிவு எப்போது ஒருவனுக்கு வருகிறதோ அப்போது அவன் ஆறாம் அறிவுக்கு மேல் சிந்திக்கத் தொடங்கிவிட்டான் என்பதே.
//

அறிவியல் கோட்பாடுகளே உண்மை என்பது ஆறாவது அறிவுக்கு மேல் சிந்திக்காத செயல்தான். ஏனெனில் அறிவியல் கோட்பாடுகளிலும் கூட காலத்தால் மாறுபவை உண்டு.

பரிசல்காரன் சொன்னது…

சிறப்பான ஆய்வுக் கட்டுரை..அதற்கேற்ற படங்கள்!!

குடுகுடுப்பை சொன்னது…

super koviyaar

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\கண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே.\\

சரியே...

\\பொருள்களின் தன்மையை ஆராய்ந்து அவற்றில் இருக்கும் ஒழுங்குகளைக் கண்டு கொண்டு\\

அந்த ஒழுங்கையே நாம் பேரறிவு, இறைவன் எனக் குறிப்பிடுகிறோம்.

\\எந்த ஒரு தெளிவான பதிலையும் ஆறாவது அறிவின் மூலம் பெற முடியாது. ஊகமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லலாம்.\\

அது சரியாகவோ, தவறாகவோ இருக்க சம வாய்ப்பு உண்டு. தவறு எனச் சொல்ல ’சரி’ எது என தெரியாது.

\\ஆனால் இயற்கையின் இயக்கம் என்னும் பேரறிவு என்பது மனித அறிவிக்குள் அடங்காது,\\

மலைக்க வேண்டாம். அப்பேரறிவு நமக்குள்ளும் உள்ளது. புற அறிவால்
அதை உணர முடியாது. அதை அறிந்து அதுவானதே நம் சித்தர்களின்
பெருமை.

\\இயற்கையின் இயக்கம் என்னும் பேரறிவு\\
\\அதை இயற்கை என்போர் சிலர், இறைவன் என்போர் பலர். இயக்கத்திற்குக் காரணம் அதன் தன்மையிலேயே இருப்பதாக புரிந்து கொள்வதால், நம்புவதால் அவற்றை இறைவனின் லீலைகளாக நான் நினைப்பது இல்லை.\\

இறைவனாகவே நினைக்கிறோம்.

\\ஒரு வித்திற்குள் முழுவளர்ச்சியின் தன்மையை அடங்கி இருப்பது மிக மிக நுட்பமான ஒன்று\\

அதுவும் அதே இறைசக்தி தான்.

\\இயற்கையின் பல செயல்படும் தன்மைகளின் அறிவு, மனித மூளையுடன், மனிதனின் கணக்கியல் சமண்பாடுகளுடன் மிகச் சரியாக ஒப்பிட முடியாத பேரறிவு.\\

அதை இறைவன் என்று சொல்வது
பொருத்தம்தானே..

வாழ்த்துக்களுடன்...

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன்,

நன்ன இருக்கு. இன்னும் எழுதி இருக்கலாம்.எதோ ட்ரை பண்ணறேள்.
ஆரம்பிக்கரதுக்குள்ளே முடிஞ்சுடுத்து. :)

என்னோட சந்தேகத்த சித்த தீக்கரேளா?

//ஊகமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லலாம். டார்வின் கோட்பாடுகள் கூட இப்படிப்பட்டதே.//

//டார்வின் கொள்கையை ஒரு மதம் ஏற்றுக் கொண்டால், அது கிட்டதட்ட இறைவனின் படைத்தல் தொழிலை மறுப்பது போன்றதாகும், //

டார்வின் கொள்கையே ஒரு ஊகம் எனும் பொழுது அதை ஏன் மதங்கள்
ஏற்கவேண்டும்?

விஞ்ஞானமே டார்வினை மறுக்கிறது சில கருத்தை மட்டுமே டார்வினின் கொள்கையில் இருந்து ஏற்கிறது. (சூழல் மூலம் பரிணாமம் என்பதை தவிர பிற கொள்கைகள் முரண் என வெளியிட்டார்கள்)


உங்கள் கட்டுரையில் விஞ்ஞான ஒருபுறமும் எதிர் புறம் எது இருக்கிறது? மதமா அல்லது ஆன்மீகமா?

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. இறைமறுப்பாளரும் ஆன்மீகவாதியாக இருக்க முடியும்.

அதனால் கேட்கிறேன். உங்கள் வாதி விஞ்ஞானம், அப்போ பிரதிவாதி ?

Ivo Serenthà சொன்னது…

Greetings from Italy.good luck

Hello,Marlow

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல ஆய்வு, ஸ்வாமி ஓம்கார் சொல்வதைபொல் ஏதோ சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டது போல உள்ளது.. நல்லாருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன்,

நன்ன இருக்கு. இன்னும் எழுதி இருக்கலாம்.எதோ ட்ரை பண்ணறேள்.
ஆரம்பிக்கரதுக்குள்ளே முடிஞ்சுடுத்து. :)

//

பாராட்டுக்கு நன்றி, தரவுகளை எடுத்துக்கொண்டு எழுதவில்லை என்பதே உண்மை. சொல்ல வந்தது இயற்கையில் மறைந்திருக்கும் பேரறிவை ஒப்பிடும் போது மனிதன் கண்டு கொண்டதும், அவனது ஆறாம் அறிவும் சொற்பமே என்பது தான்

//டார்வின் கொள்கையே ஒரு ஊகம் எனும் பொழுது அதை ஏன் மதங்கள்
ஏற்கவேண்டும்?
//

அந்த கொடுமையை இங்கே பாருங்கள், அதைப் படித்ததும் தான் டார்வினை இங்கே கொண்டுவந்தேன் :)

//அதனால் கேட்கிறேன். உங்கள் வாதி விஞ்ஞானம், அப்போ பிரதிவாதி ?//

நான் இங்கே அறிவியலுக்கு ஆதரவாக எதையும் கூறவில்லை. எனவே வாதி, பிரதிவாதி என எதுவும் இல்லை.

ராம்.CM சொன்னது…

ஆய்வறிக்கை...அருமை..

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
செம ஆய்வு ...
//

ஜமால், இரு முறை நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
ஆய்வறிக்கை...அருமை..
//

டொன் லீ, நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
சிறப்பான ஆய்வுக் கட்டுரை..அதற்கேற்ற படங்கள்!!
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
super koviyaar

12:02 AM, March 30, 2009
//

குடுகுடுப்பை நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said... //

அறிவே தெய்வம் என்கிற சொல்லுக்கும் பெயருக்கும் ஏற்றார் போல் சொல்லி இருக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Ivo Serentha and Friends said...
Greetings from Italy.good luck

Hello,Marlow
//

ஸ்பேம் பின்னூட்டம் போட்ட வெள்ளகார துரைக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
நல்ல ஆய்வு, ஸ்வாமி ஓம்கார் சொல்வதைபொல் ஏதோ சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டது போல உள்ளது.. நல்லாருக்கு
//

நான் பிஎச்டிக்கு எதையும் வெளியிடல, நினைச்சதை கிடைச்ச கேப்புல எழுதியது மட்டுமே.

நன்றி ஞானசேகர்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்.CM said...
ஆய்வறிக்கை...அருமை..
//

மீசைக்காரி சார், நன்றி !

aanmigakkadal சொன்னது…

your work and post are very useful to me and whole tamilworld
by
www.aanmigakkadal.blogspot.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்