பின்பற்றுபவர்கள்

12 ஜனவரி, 2009

திமுக தி.மங்கலம் "முக்கிய" வெற்றி - பற்றி தலைவர்கள் அறிக்கை !

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகளே வெற்றிபெருவது புதியதல்ல. ஏனென்றால் தங்கள் ஆட்சி சிறப்பானது என்று மக்கள் எண்ணி இருக்கிறார்கள் என்பதை வாக்கு எண்ணிக்கையாக காட்டவேண்டிய தன்மான(!) சிக்கலில் ஆளும் கட்சிகள் இருக்கும். முழு அளவிலானா அரசு மற்றும் அரசியல் இயந்திரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். தெரிந்தது தான் ! திமுக புபி கட்சி அல்ல, அதுவும் மாறன் தமையன்களால் சன் டிவி செய்திவழியாக குற்றச் சாட்டப்பட்ட "ரவுடி" அழகிரி தலைமையிலான திமுக தேர்தல் மேற்பார்வை என்பதால் வேறெதுவும் சொல்லத் தேவை இல்லை. வாழ்க அழகிரி அண்ணன்.

*********

திமுக வெற்றியைப் பற்றி பல்வேறு தலைவர்களின் (கற்பனையான) அறிவிப்பு

அம்மா : மைனாரிட்டி அரசு நடத்தும் கருணாநிதி தனது மகன்களை வைத்து கலவரம், சதி செய்து திருமங்கலத்தை கைப்பற்றியுள்ளார், இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே சட்டமன்ற தேர்தல் வரும், அப்போது தமிழக மக்கள் கருணாநிதிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

கேப்டன் : திமுக வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியையே தழுவி இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் "புள்ளி" விபரப்படி தேமுதிக அதிகப்படியான வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது, எனவே நாங்கள் தான் வெற்றி பெற்றதாக உணர்கிறோம், இதை வெற்றியாக தேமுதிக மாவட்டம் தோறும் கொண்டாடும், அடுத்த தேர்தலில் தேமுதிக ஆட்சியை கைபற்றும் என்பது இந்த தேர்தல் வழியாக உறுதியாகிவிட்டது

சுப்ரீம் ஸ்டார் : எங்களது பலத்தை தெரிந்து கொள்ளவே நாங்கள் இந்த தேர்தலில் நின்றோம், இந்த தேர்தல் வழி எங்கள் கட்சி (? சமத்துவ கட்சி) வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளோம். எங்கள் கொள்கைகளுடன் உடன்பாடு உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாங்கள் இன்னும் பத்தே ஆண்டுகளில் ஆட்சி அமைப்போம்

வைகோ : தமிழகத்தை பீகாராக்கி இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது, இது ஒரு பாசிச போக்கு, வன்மையாக கண்டிக்கத் தக்கது, இதனை எதிர்த்து காஷ்மீர் முதல் டெல்லிவரை பாதயாத்திரை செய்து மத்திய அரசுக்கு திமுகவின் அராஜகங்களை விளக்குவோம்

சு.சுவாமி : இந்த தேர்தல் செல்லாது, அதற்கான வீடியோ ஆதாரத்தை அமெரிக்காவில் இருந்து நான் வரவழைத்துள்ளேன். கருணாநிதியை கோர்டுக்கு இழுப்பேன்.

கலைஞர் கருணாநிதி : இது மக்களின் ஆட்சி என்பதை மக்களே இப்படி ஒரு மாபெரும் வெற்றியை தந்து மீண்டும் மெய்பித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் வெற்றி கழக உடன்பிறப்புகளின் உடம்பில் புது இரத்தம் பாய்ச்சி இருக்கிறது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெரும் என்பதை இந்த தேர்தல் உணர்த்திவிட்டது

துக்ளக் சோ : கருணாநிதி புலிகளை ஆதரிக்காததால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் நாட்டில் புலிகளுக்கு புகலிடம் இல்லை என்பது வெளிச்சம் ஆகிவிட்டது.

******

போதும் இதுக்கும் மேல் அரசியல் உளறுவாயன்கள் என்ன உளறுவார்கள் என்று நினைக்கவே அருவெறுப்பாகுகிறது. மொத்தில் இந்த தேர்தலில் திமுக முக்கி(யே)ய வெற்றி பெற்றுள்ளது

21 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நம்மள வச்சு நல்லா காமெடி பன்றாய்ங்க ...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//சுப்ரீம் ஸ்டார் : எங்களது பலத்தை தெரிந்து கொள்ளவே நாங்கள் இந்த தேர்தலில் நின்றோம், இந்த தேர்தல் வழி எங்கள் கட்சி (? சமத்துவ கட்சி) வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளோம். //

with 831 votes ????

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
//சுப்ரீம் ஸ்டார் : எங்களது பலத்தை தெரிந்து கொள்ளவே நாங்கள் இந்த தேர்தலில் நின்றோம், இந்த தேர்தல் வழி எங்கள் கட்சி (? சமத்துவ கட்சி) வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளோம். //

with 831 votes ????
//

இதுல என்ன சந்தேகம், பெரிய கட்சிகள் சரிசமமாக வாக்குகள் இருந்தால், சரத்குமாரின் ஆதரவாளர்கள், சரத் எந்த கட்சியை ஆதரிக்கிறோரோ, அந்த கட்சியை வெற்றிபெற வைக்க மாட்டார்களா ?

ஐயங்காரே, ஒரு வாக்கு கூட வெற்றி தோல்வியை தீர்மாணிக்கும் வாக்குதான்

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
நம்மள வச்சு நல்லா காமெடி பன்றாய்ங்க ...//

திருமங்கலத்தில் தங்க மழையே பெய்ததாமே

ஜமாலன் சொன்னது…

அரசியல் கமெண்டகள் பற்றிய உங்கள் கணிப்பு அருமை.

அரசி செல்வி க்கூட மக்கள் வாக்களிக்காதது வருத்தமாக உள்ளது.. )))

தியாகராஜன் சொன்னது…

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

pl visit
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_3249.html

இப்னு ஹம்துன் சொன்னது…

கருணாநிதி அறிக்கையை மட்டும் மாற்றுங்க சார்:

உடன்பிறப்பே... என்று தொடங்கி

"மங்கலமான செய்தியையே திருமங்கலம் தரும் என்பதை மெய்ப்பித்த திருமங்கலம் லதாவின் வெற்றியால் திருமதிமங்கலமாகவும் ஆகியுள்ளது என்பதை புளகித்து பல அரசியல் 'வேட'ர்களின் கனவுகளுக்கு நமது வெற்றி மங்களம் பாடிவிட்டது' என்பதை அறிவாயா?"

கொஞ்சம் தொண்டர்களின் முதுகில் ஐஸ் வைக்க.. கூடவே..
"உழைக்கப் பிறந்தவன் நீ" என்பது போல ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளவேண்டும்.
:-))

வால்பையன் சொன்னது…

வாங்குன காசுக்கு எப்படி குத்துனாங்க பாத்தீங்களா?

ஓட்டு தாங்க!

கூட்ஸ் வண்டி சொன்னது…

ஆகா... நல்லாவே தெரிஞ்சது மக்களின் எண்ணம்.......

இனி நான் அந்த பகுதிக்கு போகலாம்.....

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விசுவாசத்தின் வெளிப்பாடு!(மக்கள் எப்போதும் காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது கிடையாது, மக்கள் நல்லவர்கள். ஆனால்...இவர்கள் ஓட்டு வாங்கிக் கொண்டு...!)
பயத்தினால் கிடைத்த பகட்டு!
கூட்டுக்குக் கிடைத்த ஓட்டு மற்றும் வேட்டு!
மொத்தத்தில் முக்கிய வெற்றி!
வழிமொழிகிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தலைவருக்கு இதுவே ஈழப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் ஊக்கமாக அமையும்.
போர் நிறுத்த புனச்க்காரங்கள் நடைபெற எதுவாக அமையும்.
காங்கிரசை நம் தலைவர் தண்ணி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வெண்பூ சொன்னது…

இந்த தேர்தல் மூலமா நம்ம மக்கள் ஒண்ணு நிச்சயமா உணர்த்தி இருக்காங்க. காசு வாங்குனா அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டு போடுவோம்கிறத.. ஆனா வாக்கு வித்தியாசத்த பாத்தா, பணமே செலவு செய்யாட்டாலும் குறைந்தது 10,000 ஓட்டுலயாவது திமுக ஜெயிச்சி இருக்கும்போல..

மணிகண்டன் சொன்னது…

*********** தலைவருக்கு இதுவே ஈழப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் ஊக்கமாக அமையும்.
போர் நிறுத்த புனச்க்காரங்கள் நடைபெற எதுவாக அமையும்.
காங்கிரசை நம் தலைவர் தண்ணி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. ******

ஜோதிபாரதி, சீரியஸா தான் சொல்றீங்களா ?

சி தயாளன் சொன்னது…

அண்ணே..நீங்க கற்பனை என்று போட்டது பொய்யாகிவிட்டது. கிட்டத்தட்ட சோவை தவிர மற்றவர்கள் உந்த கருத்தை தான் சொல்லியிருக்கினம்..

Sanjai Gandhi சொன்னது…

கிகிகி.. :)

Sanjai Gandhi சொன்னது…

இனி உங்களுக்கு இது போன்ற பதிவுகள் எழுத தேவை இருககாது கோவியாரே.

பார்க்கவும் : வாக்குரிமை இங்கு ஏலம் விடப் படும் - http://podian.blogspot.com/2009/01/blog-post_13.html

மணிகண்டன் சொன்னது…

கண்ணன்,

இன்னும் பொங்கல் பதிவு / சங்கராந்தி பதிவு / தமிழ் புத்தாண்டு பதிவு / திருவள்ளுவர் தின பதிவு. எதுவுமே வரல ! என்னாச்சு உங்களுக்கு ?

நையாண்டி நைனா சொன்னது…

தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் 2:46 PM, January 12, 2009
அரசியல் கமெண்டகள் பற்றிய உங்கள் கணிப்பு அருமை.

அரசி செல்வி க்கூட மக்கள் வாக்களிக்காதது வருத்தமாக உள்ளது.. )))//

ஜமாலன்,
அரசியல்வாதிகள் பற்றி தெரிந்தவைதானே, அரசி செல்விக்கு முன்பு சித்தியாக இருந்த செல்வாக்கு கூட தற்பொழுது இல்லை, மக்களுக்கே அலுத்துவிட்டது.

//தியாகராஜன் 3:20 PM, January 12, 2009
அருமை//
தியாகராஜன், நன்றி

//T.V.Radhakrishnan 3:38 PM, January 12, 2009
pl visit
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_3249.html//

நான் அங்கே கமெண்டின அதே நேரத்தில் நீங்க இங்கே கமெண்டிருக்கிங்க

//இப்னு ஹம்துன் 4:02 PM, January 12, 2009
கருணாநிதி அறிக்கையை மட்டும் மாற்றுங்க சார்:

உடன்பிறப்பே... என்று தொடங்கி

"மங்கலமான செய்தியையே திருமங்கலம் தரும் என்பதை மெய்ப்பித்த திருமங்கலம் லதாவின் வெற்றியால் திருமதிமங்கலமாகவும் ஆகியுள்ளது என்பதை புளகித்து பல அரசியல் 'வேட'ர்களின் கனவுகளுக்கு நமது வெற்றி மங்களம் பாடிவிட்டது' என்பதை அறிவாயா?"

கொஞ்சம் தொண்டர்களின் முதுகில் ஐஸ் வைக்க.. கூடவே..
"உழைக்கப் பிறந்தவன் நீ" என்பது போல ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளவேண்டும்.
:-))
//
இப்னு ஹம்துன்,
அந்த அறிக்கையை அவர், தேர்தல் முடிவு வரும் முன்பே வாசித்துவிட்டாரே :)

//வால்பையன் 4:08 PM, January 12, 2009
வாங்குன காசுக்கு எப்படி குத்துனாங்க பாத்தீங்களா?

ஓட்டு தாங்க!
//
:) மக்கள் 'நாண'யமானவங்க என்று மறுபடியும் விளங்க வச்சிட்டாங்கா

//கூட்ஸ் வண்டி 4:35 PM, January 12, 2009
ஆகா... நல்லாவே தெரிஞ்சது மக்களின் எண்ணம்.......

இனி நான் அந்த பகுதிக்கு போகலாம்.....//
மூட்டை மூட்டையாக பணம் இருந்து செலவு செய்தால் அவரே மக்கள் தலைவன் ! :)

//ஜோதிபாரதி 5:12 PM, January 12, 2009
விசுவாசத்தின் வெளிப்பாடு!(மக்கள் எப்போதும் காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது கிடையாது, மக்கள் நல்லவர்கள். ஆனால்...இவர்கள் ஓட்டு வாங்கிக் கொண்டு...!)
பயத்தினால் கிடைத்த பகட்டு!
கூட்டுக்குக் கிடைத்த ஓட்டு மற்றும் வேட்டு!
மொத்தத்தில் முக்கிய வெற்றி!
வழிமொழிகிறேன்//

ஜோதி,
:) பணம் கொடுப்பவரிடம் வாங்கிக் கொண்டு அவருக்கே ஓட்டுபோடும் அளவுக்கு மக்கள் இருக்கிறார்கள் என்றால் மக்கள் நேர்மையாளர்களாகவே இருக்கிறார்கள் என்று பொருள் தான் !
தண்ணீர் தண்ணீர் படத்தில் வாலியே ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார், அதில் அவருபாடும் பாட்டு 'ஓட்டு போட்ட ஜனங்க வயிறு ஒட்டிப்போய் கிடக்குது, இடைத்தேர்தல் வந்தால் மட்டும் எதோ கொஞ்சம் கிடைக்குது'
இந்த படம் வந்து 20 ஆண்டுகளாவது இருக்கும், இடைத்தேர்தல் அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் போலும் !

//ஜோதிபாரதி 5:19 PM, January 12, 2009
தலைவருக்கு இதுவே ஈழப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் ஊக்கமாக அமையும்.
போர் நிறுத்த புனச்க்காரங்கள் நடைபெற எதுவாக அமையும்.
காங்கிரசை நம் தலைவர் தண்ணி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.//

ஜோதிபாரதி,
எல்லோரும் பாதிக்கப்பட்ட பிறகு போர் நிறுத்த வேண்டுகோள் ? வைப்பார் ! பிணங்களை அடக்கம் செய்ய இடையூறு ஏற்படக்கூடாது என்றா ? அல்லது ஒப்பாறி பாடுவது ஆளில்லா காட்டில் எதிரொலிப்பது தடையாகும் என்பதற்காகவா ?

//வெண்பூ 6:00 PM, January 12, 2009
இந்த தேர்தல் மூலமா நம்ம மக்கள் ஒண்ணு நிச்சயமா உணர்த்தி இருக்காங்க. காசு வாங்குனா அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டு போடுவோம்கிறத.. ஆனா வாக்கு வித்தியாசத்த பாத்தா, பணமே செலவு செய்யாட்டாலும் குறைந்தது 10,000 ஓட்டுலயாவது திமுக ஜெயிச்சி இருக்கும்போல..
//
வெண்பூ,
ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடாவிட்டால், அடுத்து ஆட்சி இருக்கும் வரை ஒன்னுமே நடக்காது என்றே மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அம்மா ஆண்டாலும், ஐயா ஆண்டாலும் இப்படித்தான்

//மணிகண்டன் 6:05 PM, January 12, 2009
*********** தலைவருக்கு இதுவே ஈழப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் ஊக்கமாக அமையும்.
போர் நிறுத்த புனச்க்காரங்கள் நடைபெற எதுவாக அமையும்.
காங்கிரசை நம் தலைவர் தண்ணி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. ******

ஜோதிபாரதி, சீரியஸா தான் சொல்றீங்களா ?//

மணிகண்டன் சார்,
அவர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க, என்று வள்ளுவரை பின்பற்றி எழுதி இருக்கிறார்

//’டொன்’ லீ 9:27 PM, January 12, 2009
அண்ணே..நீங்க கற்பனை என்று போட்டது பொய்யாகிவிட்டது. கிட்டத்தட்ட சோவை தவிர மற்றவர்கள் உந்த கருத்தை தான் சொல்லியிருக்கினம்..
//
'சோ' அறிக்கையெல்லாம் யாரும் பெரிசா எடுத்துக் கொள்வதில்லை, துக்ளக் வாசகர்களுக்கும் சோ வின் அறிக்கை என்னவென்று தெரியும், அதனால் அவர் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் ஒன்று தான் என்று நினைத்திருப்பார்.

//SanJaiGan:-Dhi 11:27 AM, January 13, 2009
கிகிகி.. :)//

என்ன ஆச்சு, காங்கிரசின் நல்லாட்சியை வைத்து தான் மக்கள் வாக்களித்ததாக வாசன் கொதப்பி இருக்கிறாரே (சொதப்பி இல்லை, மூப்பனார் வாரிசும் வெற்றிலையோடுதானே பேசுகிறார்?)

//SanJaiGan:-Dhi 11:28 AM, January 13, 2009
இனி உங்களுக்கு இது போன்ற பதிவுகள் எழுத தேவை இருககாது கோவியாரே.

பார்க்கவும் : வாக்குரிமை இங்கு ஏலம் விடப் படும் - http://podian.blogspot.com/2009/01/blog-post_13.html//

பண்ணையார் கட்சியை பணத்தை வெளியே எடுக்கச் சொல்லுங்க, திருமங்கலம் தான் உதாரணம் இருக்கே, காமராஜர் ஆட்சி அமைத்திடலாம்

//மணிகண்டன் 7:45 PM, January 13, 2009
கண்ணன்,

இன்னும் பொங்கல் பதிவு / சங்கராந்தி பதிவு / தமிழ் புத்தாண்டு பதிவு / திருவள்ளுவர் தின பதிவு. எதுவுமே வரல ! என்னாச்சு உங்களுக்கு ?//

மணி சார், இந்த ஆண்டு அறிவிக்கப்படாத தீர்மாணத்தில் கணனியில் மிகுந்த நேரம் பயன்படுத்தக் கூடாது என்பதே, ஓரளவு செயலில் தான் இருக்கிறது :

//நையாண்டி நைனா 9:34 PM, January 13, 2009
தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா 9:34 PM, January 13, 2009
தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//
நைனா, தங்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்