பின்பற்றுபவர்கள்

8 ஜனவரி, 2009

சொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் !

சொர்கம் நரகம் என்பதே கட்டுக்கதைகள். இவ்வுலகைவிட கொடிய நரகம் ஒன்று இருக்க முடியுமா ? கொத்தடிமைகள் வாழ்நாள் முழுவதும் ஒருவேலை சாப்பாட்டிற்காக சிறைபட்டுக் கிடக்கும் அவலெமெல்லாம் வேறெந்த நரகத்திலும் இல்லாத கொடுமை, 90 விழுக்காடு பெண்களுக்கு இந்த ஆண்கள் ஆளுமை உலகில் வாழ்க்கையே நரகம் தான். பச்சிளங்குழந்தை கூட பாலியல் துன்பறுத்தலில் கொடுமையை அனுபவிப்பதென்பது இந்த உலகில் தான். இதைவிட கொடுமையான நரகம் இருக்கவும் முடியுமா ? அதே போல் சுவர்க்கம் ? பிறரை அரவணைத்து அன்புடன் வாழும் அனைவருக்குமே இவ்வலகம் சுவர்கம் தான், கலப்படமற்ற தாயன்பு, நட்பு, நல்வாழ்க்கை துணை இவற்றை அடைந்தவர்களுக்கு அந்த சூழலில் கிடைக்கும் மகிழ்வையும் இன்பத்தையும் வேறெந்த உலகமும் கொண்டு வந்து தந்துவிட முடியாது. அதையும் ஒருவர் மகிழ்வோடு நினைக்காதபடி, இந்த உலகம் நிரந்தரமல்ல, மாயை என்றெல்லாம் சொல்லிவைத்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள, அல்லது மகிழ்ச்சிக்கு தடைபோட ஆன்மிகம் என்ற பெயரில் முயல்வர்.

சொர்க்கம் நரகம் பற்றி பல்வேறு மதங்களும் பேசுகின்றன. நல்லவர்களுக்கு சொர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் என்கிற கோட்பாடுகள் வைத்திருக்கின்றன. ஒரு சில மதங்கள் அதிலும் புரட்சியாக... மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். அதுவும் நிரந்தர சொர்க்கமாம். அப்படியென்றால் இறக்கும் தருவாயில் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் அந்த மதத்தை ஒப்புக் கொண்டுவிட்டால் அவனுக்கு சுவர்க்கம் கேரண்டி. அப்படித்தான் ஆட்டோ சங்கர் கூட கிறித்துவத்தை தழுவி சுவர்க்கம் சென்றிருக்கிறான்.

இந்துமதத்தில் வைணவம், சைவம் என இருபிரிவுகள் இருக்கிறது. இதில் சிவனை வழிபடுவோர் இறந்தால் அவர்களுடைய ஈமக்கிரியை அழைப்பிதழில் 'சிவ லோக' பதவி அடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும். அதே போன்று பெருமாளை வழிபடும் ஐயங்கார், நாயுடு, யாதவர், காட்டு நாயகர், ரெட்டியார் சமூகத்தினர் இறந்தால் வைகுண்ட பதவி பெற்றதாகச் சொல்லுவார்கள். சிவலோகத்தில், வைகுண்டத்தில் எல்லோருக்கும் பதவிதான் யாரும் சாதாரண பிரஜைகள் கிடையாது :)

இந்த மூடத்தனங்களை வலியுறுத்தவும் நம்ப வைக்கவும் ஆண்டு தோறும் வைகுண்டத்தில் ஒரு சுவர்க்கம் இருப்பதை நினைவு படுத்தும் வண்ணம் சுவர்க்க வாசல் திறப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் சுவர்க்க வாசல் எனச் சொல்லப்படுவது பெருமாள் கோவில்களில் நந்தவனத்தின் கதவுகள் தான். அதைத்தான் அன்று திறந்துவிடுவார்கள். சில பெருமாள் கோவில்களில் நந்தவனம் இல்லை என்றால் பின் வாசலை திறந்துவிடுவார்கள். நாகையில் கூட இரண்டு பெருமாள் கோவில்கள் உண்டு அதில் பெரிதாக இருப்பது சவுந்தராஜ பெருமாள் கோவில், அங்கு நந்தவனம் வழியாக சென்று வருவதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும், மற்றொரு சிறிய வரதராஜ பெருமாள் கோவிலில் இடதுபக்க சுற்றுவல (பிரகார) கதவை திறந்துவிடுவார்கள். அதில் நுழைந்து சென்றால் திறந்த் சாக்கடை தெருவரும், அன்றுமட்டும் முனிசிபல்காரர்களில் தயவால் குளோரின் பவுடர் தூவப்பட்டு இருக்கும். அந்த இடம் தான் சுவர்க்கம் :)

சுவர்க்கம் / நகரம் என்பது முழுக்க முழுக்க மத நம்பிக்கைதான், இந்தியா என்றால் அதில் வாழும் மக்கள் என இந்தியர்கள் தவிர்த்து எவரையும் நினைத்துப் பார்க்க முடியாதோ அது போல் தான் மதங்களால் காட்டப்படும் சுவர்க்கமும், வைணவ சொர்க்கத்தில் பட்டை அணிந்தவர், கிறித்துவர், இஸ்லாமிய, பவுத்தர் இருக்க மாட்டார், அதுபோலவே பிறரது சுவர்கத்திலும் அந்தந்த மதத்துக்காரர்களே இருப்பாதாகவே நம்புகிறார்கள். ஒரு உலகத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைக்களுக்கு இத்தனைவிதமான வான் சுவர்க்கமா ? இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கூட இதை தீவிரமாக நம்புபவர்களை என்னவென்று சொல்வது.

மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தும் சோம்பேறிகளின் சொர்க்கமாகவே இருக்கிறது. சோம்பேறிகள் தான் உழைப்பின்றி என்னோரமும் ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள். மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தின் மகிழ்ச்சியும் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. உழைப்பில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி அதுவும் நிரந்தரமாக ? அதற்கான வழியைத்தான் மதங்கள் கட்டுகின்றன (எழுத்துப்பிழையல்ல)

இன்னும் எழுதிக் கொண்டே செல்லலாம்... வேறொருபதிவில் பார்ப்போம்.

(தேவருலகம் என்றும் சொல்லப்படுகின்ற சுவர்க்கத்தில் பாலியல் நாட்டத்தில் இருக்கும் பூலோக கட்டுப்பாடுக்கள் எதுவும் செல்லாதாம் - இன்றைய டோண்டு இராகவன் கேள்வி பதிலில் இருந்தது, விருப்பமுள்ளவர்கள் யாரும் யாரோடும் சேரலாம்......ச்சேசேசேசேசேசேசேசேசேசேசேசே)

முகம் சுளிப்பாக இருந்தால் இந்த கட்டுரையை பரிந்துரைக்கிறேன் (இது பரிகாரம் இல்லை பரிதாபம்).

33 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இவ்வுலகைவிட கொடிய நரகம் ஒன்று இருக்க முடியுமா ? \\

இது மிகச்சரியே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\90 விழுக்காடு பெண்களுக்கு இந்த ஆண்கள் ஆளுமை உலகில் வாழ்க்கையே நரகம் தான். \\

இது மிக மிக சரி ...

ஆளவந்தான் சொன்னது…

//
மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தும் சோம்பேறிகளின் சொர்க்கமாகவே இருக்கிறது. சோம்பேறிகள் தான் உழைப்பின்றி என்னோரமும் ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள்.
//

கடுமையாக உழைப்பவனை பார்த்து “ஏன் எந்திரதனமா இருக்கே” என்று கேள்வி வேறு

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//சொர்க்கம் நரகம் பற்றி பல்வேறு மதங்களும் பேசுகின்றன. நல்லவர்களுக்கு சொர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் என்கிற கோட்பாடுகள் வைத்திருக்கின்றன. ஒரு சில மதங்கள் அதிலும் புரட்சியாக... மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். அதுவும் நிரந்தர சொர்க்கமாம். //

நான் சொல்றேன் சாமி! நூறு கொலை பண்ணிட்டு நீங்க மதத்தை பிடிசுக்கிட்டாலோ அல்லது மதம் உங்களைப் பிடிச்சிக்கிட்டாலோ உங்களுக்கு சொர்க்கம் கேரண்டி தானுங்க சாமியோ!

தினமும் நொந்து நொந்து நூலாவுரத்துப் பதிலா பேசாம 100 கொலையச் செஞ்சிட்டு மதம்புடிச்சு சொர்க்கத்துக்கு போவலாமே! நல்லா ஐடியா!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இந்துமதத்தில் வைணவம், சைவம் என இருபிரிவுகள் இருக்கிறது. இதில் சிவனை வழிபடுவோர் இறந்தால் அவர்களுடைய ஈமக்கிரியை அழைப்பிதழில் 'சிவ லோக' பதவி அடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும். அதே போன்று பெருமாளை வழிபடும் ஐயங்கார், நாயுடு, யாதவர், காட்டு நாயகர், ரெட்டியார் சமூகத்தினர் இறந்தால் வைகுண்ட பதவி பெற்றதாகச் சொல்லுவார்கள். சிவலோகத்தில், வைகுண்டத்தில் எல்லோருக்கும் பதவிதான் யாரும் சாதாரண பிரஜைகள் கிடையாது :) //

இந்த சமாச்சாரமே எங்கள் ஊரில் இப்போது கிடையாது.
படத்திறப்பு விழா அழைப்பிதழ், நீத்தார் நினைவு நாள் அழைப்பு இப்படித்தான் தெரிவிப்பார்கள். பத்திரிக்கை எல்லாம் மரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கும் நினைவு நாள் கொண்டாடியாகி விட்டது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

\\பிறரை அரவணைத்து அன்புடன் வாழும் அனைவருக்குமே இவ்வலகம் சுவர்கம் தான், கலப்படமற்ற தாயன்பு, நட்பு, நல்வாழ்க்கை துணை இவற்றை அடைந்தவர்களுக்கு அந்த சூழலில் கிடைக்கும் மகிழ்வையும் இன்பத்தையும் வேறெந்த உலகமும் கொண்டு வந்து தந்துவிட முடியாது//

100 சதவிகிதம் உண்மை

தமிழ் ஓவியா சொன்னது…

நல்லதொரு பதிவு.
நன்றி தோழர்.

நசரேயன் சொன்னது…

நீங்க சொர்கத்துக்கு போக ரசிது கொடுப்பீங்கன்னுலா வந்துட்டேன்

SurveySan சொன்னது…

//சொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் ! //

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா ;)

ஹாப்பி வை.ஏ!

துளசி கோபால் சொன்னது…

அடக் கடவுளே....இதைப் பற்றித்தான் ரெண்டுநாளா நம்ம வீட்டுலே பேச்சு. கோபால் அடிக்கடி 'முருகா' சொல்லும் ஆள். நான் 'ராமா ராமா'.

ரெண்டு பேரும் செத்தபிறகு மேலே போறோம். அவர் சிவலோகம் நான் வைகுண்டம்.

நான் ஜாலியா அங்கே தாமரைப்பூவை எண்ணிக்கிட்டு இருக்கேன். இவருக்கோ சிவலோகத்தில் டிவி இல்லாம போரடிக்குது. அங்கே ஒரு கதவு இருக்கு. அதை யதேச்சையாத் திறந்தவர், இந்தப் பக்கம் நான் தாமரை மலர்களோடு இருப்பதைப் பார்த்து நைஸா இங்கே வந்துட்டார்.

போச்சுறா நம்ம நிம்மதின்னு நான் சொல்றேன். இவர் சொல்றார், இங்கே அட்லீஸ்ட் உன் வாயைப் பிடுங்கலாமுன்னு வந்தேன்னு.

வருசத்துலே ஒரு நாள் சொர்க்கவாசல் திறந்துருக்கும் என்ற ஐதீகம் மனுசன் ஏற்படுத்துனதுப்பா. வருசம் முழுசும் மனுஷனும், மற்ற உயிர்களும் மேலே போய்கிட்டுத்தானே இருக்கு.

சைடுக் கதவு அங்கே இல்லாமலா இருக்கும்?

Robin சொன்னது…

// மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். // நீங்கள் கிறிஸ்தவ மதத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது தவறான தகவல். எந்த கொடியவனாக இருந்தாலும் அவன் உண்மையிலேயே செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டால் மன்னிப்பு கிடைக்கலாமே தவிர நீங்கள் நினைப்பதுபோல மதத்தில் சேர்ந்தவுடன் மன்னிப்பு கிடைக்கும் என்பது உண்மையல்ல. மேலும் தவறுக்கு மன்னிப்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ள விஷயம்.

//அப்படித்தான் ஆட்டோ சங்கர் கூட கிறித்துவத்தை தழுவி சுவர்க்கம் சென்றிருக்கிறான்.// - ஏதோ நீங்கள் கண்ணால் பார்த்ததுபோல் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை சொர்க்கம் என்பது இறுதி தீர்ப்புக்கு பின்பு வழங்கப்படுவது. ஆட்டோ சங்கர் சொர்க்கத்துக்கு போவானா இல்லையா என்பதை நீங்களோ நானோ தீர்மானிக்க முடியாது; கடவுளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. தயவு செய்து எதையும் அரைகுறையாக தெரிந்து வைத்து தவறான செய்திகளை தரவேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
// மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். // நீங்கள் கிறிஸ்தவ மதத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது தவறான தகவல். எந்த கொடியவனாக இருந்தாலும் அவன் உண்மையிலேயே செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டால் மன்னிப்பு கிடைக்கலாமே தவிர நீங்கள் நினைப்பதுபோல மதத்தில் சேர்ந்தவுடன் மன்னிப்பு கிடைக்கும் என்பது உண்மையல்ல. மேலும் தவறுக்கு மன்னிப்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ள விஷயம்.

//அப்படித்தான் ஆட்டோ சங்கர் கூட கிறித்துவத்தை தழுவி சுவர்க்கம் சென்றிருக்கிறான்.// - ஏதோ நீங்கள் கண்ணால் பார்த்ததுபோல் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை சொர்க்கம் என்பது இறுதி தீர்ப்புக்கு பின்பு வழங்கப்படுவது. ஆட்டோ சங்கர் சொர்க்கத்துக்கு போவானா இல்லையா என்பதை நீங்களோ நானோ தீர்மானிக்க முடியாது; கடவுளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. தயவு செய்து எதையும் அரைகுறையாக தெரிந்து வைத்து தவறான செய்திகளை தரவேண்டாம்.

1:11 PM, January 08, 2009
//
Robin, எந்த மதமும் புனிதம் கிடையாது, கிறிஸ்துவத்தில் பாவமன்னிப்பு என்றால் இந்து மதத்தில் பரிகாரமாம். :)

பாவமன்னிப்பு ஆப்ரகாமிய மதங்களில் இருக்கும் கோட்பாடுகள் தான் இது கிறித்துவ இஸ்லாமிய மதங்களுக்கு பொருந்தும்.

"பாவிகளே என்னிடத்தில் வாருங்கள் " என்று தானே கிறித்துவத்தில் சொல்கிறார்கள். பாவமன்னிப்பு உண்டு என்று தானே பொருள்.

ஒரு மதத்தில் சேருவது என்பது சாதாரண ஒன்றே அல்லா, அம்மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தானே சேருகிறார்கள். அப்படி என்றால் அம்மதத்தை விசுவாசிக்கிறார்கள் என்று தானே பொருள், விசுவாசிப்பவர்களுக்கு பாவமன்ன்னிப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கைதானே. ஆட்டோசங்கர் அவ்வாறு நினைத்ததில் தவறு அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை சொர்க்கம் என்பது இறுதி தீர்ப்புக்கு பின்பு வழங்கப்படுவது. ஆட்டோ சங்கர் சொர்க்கத்துக்கு போவானா இல்லையா என்பதை நீங்களோ நானோ தீர்மானிக்க முடியாது; கடவுளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. தயவு செய்து எதையும் அரைகுறையாக தெரிந்து வைத்து தவறான செய்திகளை தரவேண்டாம்.
//

சரி உங்கள் நம்பிக்கை படியே வைத்துக் கொண்டாலும் தற்பொழுது அதாவது இறுதி தீர்ப்புக்கு காத்திருக்கும் காலத்தில் ஆட்டோசங்கர் துன்பம் எதுவும் இல்லாமல் தானே இருக்கிறான்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அடக் கடவுளே....இதைப் பற்றித்தான் ரெண்டுநாளா நம்ம வீட்டுலே பேச்சு. கோபால் அடிக்கடி 'முருகா' சொல்லும் ஆள். நான் 'ராமா ராமா'.

ரெண்டு பேரும் செத்தபிறகு மேலே போறோம். அவர் சிவலோகம் நான் வைகுண்டம்.//

அதுக்குள்ள உங்க இரண்டு பேருக்கும் வாழ்கை போரடித்துவிட்டதா ? என்ன கொடுமை !!!

//நான் ஜாலியா அங்கே தாமரைப்பூவை எண்ணிக்கிட்டு இருக்கேன். இவருக்கோ சிவலோகத்தில் டிவி இல்லாம போரடிக்குது. அங்கே ஒரு கதவு இருக்கு. அதை யதேச்சையாத் திறந்தவர், இந்தப் பக்கம் நான் தாமரை மலர்களோடு இருப்பதைப் பார்த்து நைஸா இங்கே வந்துட்டார்.//

ஒயர் கூடை பின்னிக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தால் இப்படி வீனான சிந்தனைகளே வராது. :))))

//போச்சுறா நம்ம நிம்மதின்னு நான் சொல்றேன். இவர் சொல்றார், இங்கே அட்லீஸ்ட் உன் வாயைப் பிடுங்கலாமுன்னு வந்தேன்னு.//

அங்கேயும் டாம் அண்ட் ஜெர்ரியா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அடுத்த ஜென்மத்திலும் நீங்கள் இருவரும் தம்பதிகளாக தொடரக் கடவது ! :)))))0

//வருசத்துலே ஒரு நாள் சொர்க்கவாசல் திறந்துருக்கும் என்ற ஐதீகம் மனுசன் ஏற்படுத்துனதுப்பா. வருசம் முழுசும் மனுஷனும், மற்ற உயிர்களும் மேலே போய்கிட்டுத்தானே இருக்கு.

சைடுக் கதவு அங்கே இல்லாமலா இருக்கும்?//

சைடு கதவு இல்லாட்டிலும் என்னைமாதிரி ஆட்கள் சுவரேறி குதிச்சிடுவோம்ல
:)))000

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
//சொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் ! //

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா ;)

ஹாப்பி வை.ஏ!

12:01 PM, January 08, 2009
//

நீங்க வைணவரா...வைபவரா ?
:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
நீங்க சொர்கத்துக்கு போக ரசிது கொடுப்பீங்கன்னுலா வந்துட்டேன்

11:59 AM, January 08, 2009
//

நான் ரசீது வைத்திருக்கிறேன். அது எனக்குமட்டுமான ஒரே ஒரு டிக்கெட், அதை யாருக்கு கொடுத்தாலும் செல்லாது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

இந்த சமாச்சாரமே எங்கள் ஊரில் இப்போது கிடையாது.
படத்திறப்பு விழா அழைப்பிதழ், நீத்தார் நினைவு நாள் அழைப்பு இப்படித்தான் தெரிவிப்பார்கள். பத்திரிக்கை எல்லாம் மரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கும் நினைவு நாள் கொண்டாடியாகி விட்டது.

10:55 AM, January 08, 2009///

பெரியார் பூமியாகவே இருப்பது உங்க ஊர்தான். அரசியல்வாதிகள் அத்திப்பட்டு ஆக்கிவிடாமல் இருக்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
நல்லதொரு பதிவு.
நன்றி தோழர்.
//

இந்த பதிவை எழுதிவிட்டு, உங்கள் பின்னூட்டம் வரும் என்று நம்பினேன். நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமால், ஆளவந்தான் மற்றும் இராதா கிருஷ்ணன் ஐயா,

நன்றி நன்றி நன்றி !

நையாண்டி நைனா சொன்னது…

/*முனிசிபல்காரர்களில் தயவால் குளோரின் பவுடர் தூவப்பட்டு இருக்கும்.*/

அண்ணா...
பிலீச்சிங் பவுடர் என்று சரி செய்து கொள்ளவும்.

Robin சொன்னது…

//அம்மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தானே சேருகிறார்கள். அப்படி என்றால் அம்மதத்தை விசுவாசிக்கிறார்கள் என்று தானே பொருள், விசுவாசிப்பவர்களுக்கு பாவமன்ன்னிப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கைதானே. ஆட்டோசங்கர் அவ்வாறு நினைத்ததில் தவறு அல்ல.// உங்களுக்கு இந்த விஷயத்தில் சரியான புரிதல் இல்லை. மன்னிப்பு என்பது தவறு செய்பவர்களுக்கு திருந்துவதற்கான ஒரு வாய்ப்பே தவிர திரும்பவும் தவறு செய்ய ஊக்கபடுத்துவதற்கான கருவி அல்ல. ஒரு மதத்தில் சேர்ந்தாலும் அந்த மதக் கோட்பாடுகளை விசுவாசித்தாலும் நீங்கள் தவறு செய்தால் தண்டனை உண்டு. மீண்டும் சொல்கிறேன். ஒரு வேளை நீங்கள் செய்த தவறுக்கு உண்மையிலேயே மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் நீங்கள மன்னிக்கப்படலாம். இதை முடிவு செய்யவேண்டியதும் கடவுளே. அதே நேரம் நாம் பிறகு மன்னிப்பு கேட்டு சொர்க்கத்துக்கு சென்று விடலாம், இப்போது கண்டபடி நடக்கலாம் என்று ஒருவன் திட்டமிட்டு தவறு செய்வனானேயானால் அவனுக்கு தண்டனை உறுதி. இன்னும் வெளிப்படையாக சொன்னால் ஒருவன் கிறிஸ்தவ மதத்தை வெறுமனே நம்புவதாலேயே சொர்க்கத்துக்கு சென்று விடமுடியாது. ஒரு கிறிஸ்தவன் தவறு செய்தாலும் தண்டனை உண்டு. ஏன் கிறிஸ்தவ போதகர்கள் பாவம் செய்தாலும் நரகம் நிச்சயம். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒரு முறை படித்து பார்க்கவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

முட்டி மோதிக் கொண்டதில் எழுந்த சில அடிப்படையான கேள்விகள்,

ஒருவர் சொர்க்கத்துக்குப் போகிறார் அல்லது நரகத்துக்குப் போகிறார் என்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்?

நிறைய தவறுகள், கொலைகள், குற்றங்கள் செய்த ஒருவரை கடவுள் மன்னித்து விட்டாரா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? கடவுள் கனவில் வந்தோ அல்லது நேரடியாகவோ சொல்கிற நடைமுறை ப்ரோட்டோகோல் இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் விளக்குங்கள் கோவியாரே!:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நையாண்டி நைனா said...
/*முனிசிபல்காரர்களில் தயவால் குளோரின் பவுடர் தூவப்பட்டு இருக்கும்.*/

அண்ணா...
பிலீச்சிங் பவுடர் என்று சரி செய்து கொள்ளவும்.
//

எங்கேயோ கேட்ட பெயராக ஒலிக்கிறதே!

நையாண்டி நைனா சொன்னது…

/*வைணவ சொர்க்கத்தில் பட்டை அணிந்தவர், கிறித்துவர், இஸ்லாமிய, பவுத்தர் இருக்க மாட்டார், அதுபோலவே பிறரது சுவர்கத்திலும் அந்தந்த மதத்துக்காரர்களே இருப்பாதாகவே நம்புகிறார்கள். */

அப்படின்னா அங்கேயும்
1. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உண்டா?
2. தன் சொர்க்கத்திலே தானே குண்டு வச்சுக்கிட்டு, அடுத்த சொர்க்கத்துகாரன் மேல பழிய போடுவாங்களா?
3. பேரழிவு ஆயுதங்கள் வைத்துள்ளார்கள்.. ஓ... இது பூமியில் தான் சாத்தியமோ? அவ்வாறே எனில், மிக அற்புதமான பொருட்கள் வைத்துள்ளார்கள் என்று சண்டையும் செய்வார்களோ?

புதசெவி

மணிகண்டன் சொன்னது…

************* நிறைய தவறுகள், கொலைகள், குற்றங்கள் செய்த ஒருவரை கடவுள் மன்னித்து விட்டாரா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? கடவுள் கனவில் வந்தோ அல்லது நேரடியாகவோ சொல்கிற நடைமுறை ப்ரோட்டோகோல் இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் விளக்குங்கள் கோவியாரே ***********

ஒரு கொலை பண்ணி பாருங்க ஜோதிபாரதி ! அப்ப உங்களுக்கு நேரடி அனுபவம் கிடைச்சிடும்.

கோவி சார் :- நான் திருச்சி போய் ஒரு வாரத்துல திரும்பி வந்தேன். வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு நாள் முன்னாடி கிளம்ப வேண்டியதா போச்சு !

RAHAWAJ சொன்னது…

நல்ல பதிவு கோவி,இங்கு நீங்கள் குறிப்பிட்டது எல்லாம் அடிப்படையில் "நினைவு" என்ற ஒன்றின் கூற்று தான்,நினைவிலிருந்து வெளியாகிவிட்டால் மனிதன் தன்னை உணர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் மனிதன் திரும்ப திரும்ப தன்னை நம்பாது அடுத்தவரின் ஆலோசனையில் செல்வதால் தான் இந்த நிலைமை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஒரு கொலை பண்ணி பாருங்க ஜோதிபாரதி ! அப்ப உங்களுக்கு நேரடி அனுபவம் கிடைச்சிடும். //


மணிகண்டன், என் மீது ஏனிந்த கொலை வெறி,
எல்லாத்தையும் நமக்கு ஏற்பட்டால் தான் தெரியும் என்று வைத்துக் கொண்டால், பூலோகத்தில் எல்லோரும் அனுபவ சாலிகளாகி விடுவோமே. யாரையும் கேட்க வேண்டியதில்லை. புத்தகங்கள் படிக்க வேண்டியதில்லையே. ஒருவர் ஒருவரிடம் கேள்வி கேட்டால், தெரிந்தால் சொல்வார்கள். தெரியாவிட்டால் தெரியாது அல்லது வேறொருவரை கேளுங்கள், இந்த புத்தகம் படியுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறதே.

நான் கொலை செய்ய வேண்டியதில்லை. ஆனால், எனக்கு கொலை செய்தவனுடைய மன நிலை உளவியல் ரீதியாக எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தெரியும்.

ஓர் அப்பாவியை ஏன் கொலைக்காரனாக்குகிறீர்கள் :P)

Karthik சொன்னது…

எல்லா சமய சம்பிரதாயங்களும் இப்படிப்பட்டவைதான். வைணவமும், சொர்க்க வாசல் திறப்பும் மட்டுமல்ல.

Unknown சொன்னது…

இந்த வைபவம் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான். உன்னைப்போன்ற குட்டிசுவர்களுக்கு அல்ல. மூடிக்கொண்டு போ.

சி தயாளன் சொன்னது…

:-)..அர்த்தமுள்ள பதிவு

வால்பையன் சொன்னது…

//சில பெருமாள் கோவில்களில் நந்தவனம் இல்லை என்றால் பின் வாசலை திறந்துவிடுவார்கள்.//

நிறைய வீடுகளில் கூட பின்வாசல் தான் சொர்க்கம்

வால்பையன் சொன்னது…

//இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கூட இதை தீவிரமாக நம்புபவர்களை என்னவென்று சொல்வது.//

புதிதாகவெல்லாம் வார்த்தைகள் கண்டுபிடிக்க தேவையில்லை!
ஏற்கனவே இருக்கிறது!

நையாண்டி நைனா சொன்னது…

/*//இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கூட இதை தீவிரமாக நம்புபவர்களை என்னவென்று சொல்வது.//

புதிதாகவெல்லாம் வார்த்தைகள் கண்டுபிடிக்க தேவையில்லை!
ஏற்கனவே இருக்கிறது!*/

"டமிலர்கல்" என்று தானே சொல்லவறீங்க...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்