பின்பற்றுபவர்கள்

23 ஜனவரி, 2009

சென்னை 600 004 !

வலைப்பதிவுகளில் அறிமுகம் ஆகும் முன்பு, ஊருக்குப் போகும் பேதெல்லாம் சென்னையில் இறங்கியதும் நேராக நாகை, அங்கேயே உறவினர் வீடுகளுக்கு சென்று வருவது, நெடுநாளைய நண்பர்களை சந்திப்பதும் முடிந்தால் அருகில் எங்கேயாவது (பெரும்பாலும் சுற்றி இருக்கிற கோவில்களுக்குத் தான் கூட்டிச் செல்வார்கள்) சென்றுவருவதுதான் நடைமுறை.

வலையில் அறிமுகமான பிறகு தமிழகம் சென்றால் நடவடிக்கையே மாறிவிட்டது, சென்னையில் இருநாட்கள், மற்ற ஊர்களுக்கு சென்று பலமாதங்களாக பழகிய சிலரை நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்ற ஆர்வம் கூடி, அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாக எனது தமிழக பயணம் பதிவர் சந்திப்புகள் பயணமாகவே மாறிவிட்டது. 'வீட்டுல 2 நாள் கூட இருக்காம இவன் எங்கப் போறான்...எப்ப வர்றான் என்றே தெரியல' அம்மாவின் புலம்பல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். அம்மா சமையல் சுவையையும் தாண்டி இதுவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்களை நேரில் சந்திக்கப் போகும் உந்துதல் பேருந்தில் ஏறி உட்கார வைத்துவிடும்.

*****

இந்த சனிக்கிழமை எனக்கு காலைப் பொழுது சிங்கையில் விடிந்தாலும் காலை சாப்பாடு சென்னையில் தான். சென்னை வருவதை நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தேன். இந்த ஆண்டுக்கான பதிவர் சந்திப்பை இன்னும் போடல, ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூடுவோம் என்றார்கள். நேற்றே தமிழகம் சென்ற பின்னூட்ட புயல் விஜய் ஆனந்தும் சென்னை பதிவர்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறார்.

அதன் பிறகு மற்ற நகரங்களில் வசிக்கும் சில நண்பர்களை சந்திக்க வருவதாகச் சொல்லி இருக்கிறேன். மாறுபட்ட சிந்தனை உடையவர்களான அவர்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு அவர்களைப் பற்றிய சுவையான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். மதுரை, திருப்பூர், கோவை, பெங்களூர் செல்லும் திட்டம் இருக்கிறது.

இடை இடையே காணாமல் போகும் அஸ்ஸாம் அண்ணன் பதிவர் தொலைபேசியில் அழைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுத்தார். ஜனவரி கடைசியில் தமிழகம் வருகிறேன், கண்டிப்பாக நேரில் பார்ப்போம் என்றும் சொல்லி இருக்கிறார், அவருடன் 2 ஆண்டுகளாக மிக நட்பாக பழகியும் அவரது நிழல்படத்தைக் கூட பார்த்தது இல்லை, அனுப்ப வேண்டாம், நேரில் பார்க்கும் போது சஸ்பென்சாக இருக்கட்டும் என்றே அவரிடம் மின் அஞ்சலில் சொல்லி வைத்திருந்தேன், தொலைபேசியில் கூட பேசிக் கொண்டது கிடையாது, சென்றவாரம் முதன்முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிர்ச்சி கொடுத்தார். முகத்தைவிட எழுத்துக்களும் எண்ணங்களும் தானே முதலில் அறிமுகமாகிறது.

*****

சொந்தம், பந்தம், சாதி, நெடுநாள் நட்பு ? இவை எவற்றிலுமே அடங்காமல் பதிவர்களாக அறிமுகமாகிறவர்களில் பலர் நெருக்கமாகவே ஆகிவிடுகிறார்கள். எழுத்துகளைத் தாண்டி பதிவுலகம் எனக்கு பிடித்து இருப்பதற்கு இதுவே முதன்மை காரணம், ஏனென்றால் நேரில் பார்க்கும் போது எழுத்துகளையும், சர்சைகளையும், பதிவுச் சண்டைகளையும் எவருமே நினைப்பது கிடையாது

வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் சந்திப்போம். அதுபற்றிய இடம், நேரம் தகவல்கள் தம்பி அதிஷாவின் வலைபதிவில் உள்ளது.


இந்திய தொடர்பு எண் : 90477 44151 (சனிக்கிழமை முதல் வைத்திருப்பேன்)

40 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே,

பதிவர் சந்திப்புக்கு மட்டுமே தமிழகம் செல்வதாகத் தெரிகிறது. தாங்கள் முழுநேரப் பதிவர் தான். வலைப் பதிவர்களை வலை போட்டுப் பிடிக்கும் நாகை மீனவர் நீங்கள். அப்படியே கோவையில் சஞ்சயைப் பார்த்தீர்களானால், தங்கத் தாயத்து ஒன்னு சுவாமி ஓம்காரிடம் இருந்து பெற்றுக் கொடுப்பார். (தங்கமாக இருந்தால் மட்டும் வாங்கி வரவும்) அதை என்னிடம் கொண்டு வந்து தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

நீங்கள் சந்திக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நானும் அன்புடன் விசாரிச்சதாச் சொல்லுங்க.

அஸ்ஸாம் அன்பரின் ஜூனியருக்கு என் விசேஷ அன்பு.

பயணம் வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

குடும்பத்தினரையும் கேட்டதாச் சொல்லுங்க கண்ணன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தலைப்பு சென்னை-5 அல்ல சென்னை-600 004

நட்புடன் ஜமால் சொன்னது…

உஷார் சென்னை உஷார்

இந்த தலைப்பு எப்படிக்கீது ...

தமிழ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan 12:00 PM, January 23, 2009
தலைப்பு சென்னை-5 அல்ல சென்னை-600 004
//

பதிவர் சந்திப்பு நடக்கும் இடம் 600 005 இல்லையா ?

:)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சுவாமி ஓம்காருடனான சந்திப்பின் போது அதிஷ்டக் கல் ஒன்றை ஞாபகார்த்தமாக வாங்கி வரவும் :P..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//VIKNESHWARAN 12:52 PM, January 23, 2009
சுவாமி ஓம்காருடனான சந்திப்பின் போது அதிஷ்டக் கல் ஒன்றை ஞாபகார்த்தமாக வாங்கி வரவும் :P..//அது காதல் நோயைத் தீர்த்துவைக்கும் கல்லாக இருந்தால் உத்தமம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
சுவாமி ஓம்காருடனான சந்திப்பின் போது அதிஷ்டக் கல் ஒன்றை ஞாபகார்த்தமாக வாங்கி வரவும் :P..

12:52 PM, January 23, 2009
//

ஸ்வாமியைப் பார்த்தால் உங்களுக்கு தாயத்து விற்பவராக தெரிகிறாரா ?

கொன்னுபுடுவேன் கொன்னு !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நீங்கள் சந்திக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நானும் அன்புடன் விசாரிச்சதாச் சொல்லுங்க.

அஸ்ஸாம் அன்பரின் ஜூனியருக்கு என் விசேஷ அன்பு.

பயணம் வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

குடும்பத்தினரையும் கேட்டதாச் சொல்லுங்க கண்ணன்.
//

துளசி அம்மா,

கண்டிப்பாக சொல்கிறேன், போனில் பேசும் போது கூட உங்களைப் பற்றி அவரிடம் சொன்னேன். நீங்கள் அனுப்பிய மின் அஞ்சல் கிடைக்கவில்லை என்றார்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அண்ணே,

சுவாமிஜி ஒரு சிறப்புக் கல் வைத்திருப்பதாக சொன்னார்...
அதை
அணிவித்துக் கொண்டால்
அணிவோரின்-மூட நம்பிக்கை அடியோடு
அழிந்துவிமாம்....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே,

பதிவர் சந்திப்புக்கு மட்டுமே தமிழகம் செல்வதாகத் தெரிகிறது. தாங்கள் முழுநேரப் பதிவர் தான். வலைப் பதிவர்களை வலை போட்டுப் பிடிக்கும் நாகை மீனவர் நீங்கள். அப்படியே கோவையில் சஞ்சயைப் பார்த்தீர்களானால், தங்கத் தாயத்து ஒன்னு சுவாமி ஓம்காரிடம் இருந்து பெற்றுக் கொடுப்பார்.
//

ஸ்வாமி ஓம்கார் மீது ஏனிந்த கொலை வெறி ? :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் 12:59 PM, January 23, 2009
//VIKNESHWARAN said...
சுவாமி ஓம்காருடனான சந்திப்பின் போது அதிஷ்டக் கல் ஒன்றை ஞாபகார்த்தமாக வாங்கி வரவும் :P..

12:52 PM, January 23, 2009
//

ஸ்வாமியைப் பார்த்தால் உங்களுக்கு தாயத்து விற்பவராக தெரிகிறாரா ?

கொன்னுபுடுவேன் கொன்னு !
//

வலையுலக வன்முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
அண்ணே,

சுவாமிஜி ஒரு சிறப்புக் கல் வைத்திருப்பதாக சொன்னார்...
அதை
அணிவித்துக் கொண்டால்
அணிவோரின்-மூட நம்பிக்கை அடியோடு
அழிந்துவிமாம்....
//

யாரிடம் சொன்னார் ? புரூடா விடப்படாது. ஏன் ஏன் கொல வெறி ?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

உங்கள் பயணம் சிறப்பாக அமைய மாநகர நெடுங்குலத்தானை (ஓ சாரி ராங் நம்பர்)....

உங்கள் பயணம் சிறப்பாக அமைய இலச்சி மல ஆத்தாளை வேண்டிக்கிறேன்... சுவாமிஜியின் அருளும் ஆசியும் உங்களுக்கு எப்பவும் இருக்கும்... சாணியடி சித்தர சொன்னேன்....

கோவி.கண்ணன் சொன்னது…

//வலையுலக வன்முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!//

அனேகமாக உங்களுக்கு வெட்டு குத்து உண்டு, ஹவ்காங் பக்கம் நான் வரும் போது என் கண்ணுல நீங்க மாட்டிடக் கூடாது !
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...
கோவியாரே,

பதிவர் சந்திப்புக்கு மட்டுமே தமிழகம் செல்வதாகத் தெரிகிறது. தாங்கள் முழுநேரப் பதிவர் தான். வலைப் பதிவர்களை வலை போட்டுப் பிடிக்கும் நாகை மீனவர் நீங்கள். அப்படியே கோவையில் சஞ்சயைப் பார்த்தீர்களானால், தங்கத் தாயத்து ஒன்னு சுவாமி ஓம்காரிடம் இருந்து பெற்றுக் கொடுப்பார்.
//

ஸ்வாமி ஓம்கார் மீது ஏனிந்த கொலை வெறி ? :)
//


இல்லை இல்லை. இது காங்கிரஸ் பேரியக்கத்தின் களப்பிரர் சஞ்சயின் வேண்டுகோள். அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அம்ப்புட்டுதேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//வலையுலக வன்முறையாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!//

அனேகமாக உங்களுக்கு வெட்டு குத்து உண்டு, ஹவ்காங் பக்கம் நான் வரும் போது என் கண்ணுல நீங்க மாட்டிடக் கூடாது !
:)//


அதையும் தான் பார்ப்போமே?
நாங்கள் பனை மரத்து சரசரப்புக்கு அஞ்சும் கூட்டமல்ல, வைரம் பாஞ்ச தேக்கு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அனேகமாக உங்களுக்கு வெட்டு குத்து உண்டு, ஹவ்காங் பக்கம் நான் வரும் போது என் கண்ணுல நீங்க மாட்டிடக் கூடாது !//

வெட்டு என்பது சாப்பாட்டை வெட்டுவது. குத்து என்றால் கோழியைக் முள் கரண்டியால் குத்திக் குத்தி சாப்பிடுகிறோமே அதானே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எனக்கு வாங்கி வரலைன்னா கூட பரவா இல்லை. தம்பி விக்கி என்ன பாவம் செய்தார்? காதல் நோயால் கொஞ்சம் கஷ்டப் படுறார். அவருக்காவது அந்தக் கல் வாங்கி வாருங்களேன். அவர் கேட்ட படியே!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் 12:49 PM, January 23, 2009
//T.V.Radhakrishnan 12:00 PM, January 23, 2009
தலைப்பு சென்னை-5 அல்ல சென்னை-600 004
//

பதிவர் சந்திப்பு நடக்கும் இடம் 600 005 இல்லையா ?////

illai adhu chennai-4

ரமேஷ் வைத்யா சொன்னது…

அய்யய்யோ... வந்து எறங்குறதுக்கு முன்னாடியேவா..?

கோவி.கண்ணன் சொன்னது…

//illai adhu chennai-4//

தலைப்பை மாற்றிவிட்டேன். பதிவர் சந்திப்புக்கு இந்த முறை உங்களை பலர் எதிர்பார்க்கிறார்கள் ! எஸ்கேப் ஆகிடாதிங்க. :))

கோவி.கண்ணன் சொன்னது…

// ரமேஷ் வைத்யா said...
அய்யய்யோ... வந்து எறங்குறதுக்கு முன்னாடியேவா..?
//

ரமேஷ் வைத்யா சார்,

ஜோதி.பாரதி கொலவெறியோடு இருக்கார். அதனால் தான் தமிழ்நாட்டுக்கு தப்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டு என்பது சாப்பாட்டை வெட்டுவது. குத்து என்றால் கோழியைக் முள் கரண்டியால் குத்திக் குத்தி சாப்பிடுகிறோமே அதானே.//

கோழியை ஏன் முள் கரண்டியால் சாப்பிடனும், அப்படியே சாப்பிட முடியாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எனக்கு வாங்கி வரலைன்னா கூட பரவா இல்லை. தம்பி விக்கி என்ன பாவம் செய்தார்? காதல் நோயால் கொஞ்சம் கஷ்டப் படுறார். அவருக்காவது அந்தக் கல் வாங்கி வாருங்களேன். அவர் கேட்ட படியே!
//

உங்க இரண்டு பேருக்கும் வேறொரு சாமியாரிடம் சென்று இப்படி பழிப்பதற்க்காக சூனியம் வைக்கச் சொல்லப் போகிறேன். :) எதுக்கு பரிகாரம் செய்கிறவர்களின் முகவரியை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

திகிழ்மிளிர் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
உஷார் சென்னை உஷார்

இந்த தலைப்பு எப்படிக்கீது ...
//

இப்படியெல்லாமா பீதியை கிளப்புவது !

நையாண்டி நைனா சொன்னது…

வாங்க அண்ணே.... வாங்க....

சி தயாளன் சொன்னது…

பயணம் & சந்திப்புகள் இனிதே அமைய வாழ்த்துகள்...

☼ வெயிலான் சொன்னது…

திருப்பூர் 641 601க்கு வரவேற்கிறோம்.

நசரேயன் சொன்னது…

தாய் நாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

TBCD சொன்னது…

வாங்க !! வாங்க!!

குடுகுடுப்பை சொன்னது…

தாய் நாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

gayathri சொன்னது…

கோவி.கண்ணன் said...
//வெட்டு என்பது சாப்பாட்டை வெட்டுவது. குத்து என்றால் கோழியைக் முள் கரண்டியால் குத்திக் குத்தி சாப்பிடுகிறோமே அதானே.//

கோழியை ஏன் முள் கரண்டியால் சாப்பிடனும், அப்படியே சாப்பிட முடியாதா ?

athu enna horlicks sa appdiye sapdarthuku.

narsim சொன்னது…

//TBCD 1:15 AM, January 24, 2009

வாங்க !! வாங்க!!
//

rpt

KarthigaVasudevan சொன்னது…

குடுகுடுப்பை 2:20 AM, January 24, 2009

தாய் நாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

repeattu ...!

gayathri சொன்னது…

ennga sir pathivar santhipu nalla padiya nadanthu mudinjitha

ராம்.CM சொன்னது…

வாழ்த்துகள்!...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்