பின்பற்றுபவர்கள்

16 ஜனவரி, 2009

மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சென்னை: இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும்இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் சென்னையில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் நிலை வரலாம்' என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.


இந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடனும், இந்திய போர்தளவாடங்களானாலும் இலங்கையில் தமிழின ஓழிப்பு நடந்தேறுகிறது என்றே தமிழக கட்சிகள் நடுவன் அரசை குற்றம் சொல்கின்றன. அதை நடுவன் அரசும் அரசின் அறிக்கையாக மறுக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே, இலங்கைக்கு உதவி செய்யவில்லை என்று வாய்ச் சொல்லாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஐயா இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிறார். கட்டுச் சோத்துக்கு பெருச்சாளியை காவல் வைத்தார் போல யார் இலங்கை அரசுக்கு நண்பனாக இருக்கிறார்களோ அவர்களிடமே சென்று முறையிட்டால் எதுவும் நடக்குமா ? வெறும் எதிர்ப்பை பதிய வைப்பதற்காக மட்டுமே அறிக்கை, கோரிக்கை, வேண்டுகோள் நடைமுறைகள் நடந்தேறுகிறது.

நடுவன் அமைச்சர் அன்பு மணியை மீட்டுக் கொள்கிறேன் என்று ஏன் சொல்ல முடியவில்லை ? அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா ? எதற்கு இந்த நாடகமெல்லாம் ?


கலைஞருக்குத்தான் வயதாகிவிட்டது, கட்சியை வாரிசு உரிமையாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் நிதியைத்திரட்டி போர் நிவாரணம் அனுப்பி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டு மங்களம் பாடிவிட்டு, திருமங்கலத்தில் முழுவீச்சாக ஈடுபடுத்திக் கொண்டார், மருத்துவருக்கு என்ன ஆச்சு ? மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் ? இதை செய்வதற்கு மருத்துவருக்கு ஏன் துணிவில்லை ?

சீமானோ, அமீரோ பேசினால் மட்டும் தான் சிறையில் அடைப்பார்களா ? சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா ? தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ? தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா ? அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா ? மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே ? காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன ? இதை திமுகவும் செய்யலாம்.

தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார். இராமதாஸ் ஐயா, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவதால் பிரச்சனை தீராது, இலங்கை அரசுக்கு உதவிசெய்வதையாவது இந்தியா நிறுத்தனும், அதைச் செய்யச் சொல்லி நெருக்குதல் கொடுத்து, செய்யவில்லை என்றால் அன்பு மணியை பதவி விலகச் சொன்னால், ஈழத்தமிழர் குறித்த மருத்துவர் அக்கரையை ஈழமக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் கூட புரிந்து கொள்வார்கள்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை ?

47 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

:)

ஆளவந்தான் சொன்னது…

//
அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.
//
உங்க பதிவையும் இந்த லிஸ்ட்-ல சேக்கனும்..

அவரோட ”இருப்பை” நீங்களும் உணர்த்துகிறீர்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
//
அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.
//
உங்க பதிவையும் இந்த லிஸ்ட்-ல சேக்கனும்..

அவரோட ”இருப்பை” நீங்களும் உணர்த்துகிறீர்கள் :)

10:06 AM, January 16, 2009
//

ஆளவந்தான்,
அதுசேரி, பொய் பேசும் ஒருவரை சுட்டிக்காட்டி, பொய் சொல்வது தவறு என்று சொல்பவரை பொய்யை ஞாயப்படுத்துகிறார், ஞாபகப்படுத்துகிறார் என்று குற்றம் சொல்பவரா நீங்கள் ?

ஆளவந்தான் சொன்னது…

//
அதுசேரி, பொய் பேசும் ஒருவரை சுட்டிக்காட்டி, பொய் சொல்வது தவறு என்று சொல்பவரை பொய்யை ஞாயப்படுத்துகிறார், ஞாபகப்படுத்துகிறார் என்று குற்றம் சொல்பவரா நீங்கள் ?
//
அவர் செயலை நான் நியாய படுத்தவில்லை கண்ணன், அந்தள்வுக்கு நான் மனநிலை பாதிக்கப்பட்டவனல்ல :)

பத்திரிக்களில் இதே தலைப்பில் செய்தி வந்தால் கண்டிப்பாக நான் படித்திருக்கவே மாட்டேன்... ஜஸ்ட் இக்னோர் பண்ணியிருப்பேன்.. என்னை பொருத்தவரையில் நீங்களும் அவரது ”இருப்பை” உணர்த்துகிறீர்கள்..

மற்றபடி அவரது ”இருப்பை” உணர்த்த உங்களுக்கு முழு உரிமை உள்ளது, நான் எனது கருத்தை இங்கே தெரிவித்தது போல..

நாமக்கல் சிபி சொன்னது…

ஆரம்பிச்சாச்சா?

ஆளவந்தான் சொன்னது…

//
ஆரம்பிச்சாச்சா?
//

ஆமா, வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ :)

கண்ண்ன், சிபி
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
//
ஆரம்பிச்சாச்சா?
//

ஆமா, வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்கோ :)

கண்ண்ன், சிபி
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
//

ஜோதியில் கலந்து கொள்ள வெளிச்ச பதிவர் ஜோதிபாரதி கண்டிப்பாக வருவார் !
:)

நாமக்கல் சிபி சொன்னது…

ஆளவந்தான்,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

கோவியாருக்கும் வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// Namakkal Shibi said...
:)
//

//Namakkal Shibi said...
ஆரம்பிச்சாச்சா?
//

நாமக்கல் பிள்ளையார் தானே சுழி போட்டு இருக்கிறார்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்//
கலைஞர் கற்றுக் கொடுத்த பாடம்?!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ம்ம்ம்ம்ம்

நாமக்கல் சிபி சொன்னது…

//நாமக்கல் பிள்ளையார் தானே சுழி போட்டு இருக்கிறார்//

நல்ல வேளை!

வாத்தியார் மாதிரி ஆஞ்சநேயர்னு சொல்லாம விட்டீங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//Namakkal Shibi said...
/

நல்ல வேளை!

வாத்தியார் மாதிரி ஆஞ்சநேயர்னு சொல்லாம விட்டீங்க!
//

அவரு பழைய சிபியை மனசுல வச்சி சொல்லி இருப்பார். இரண்டு ஆண்டுகளில் உங்கள் தொப்பை மாபெரும் வளர்ச்சி கண்டதை அவர் அறிந்திருக்க மாட்டார்

நாமக்கல் சிபி சொன்னது…

அவருக்கு சிலசமயம் கோவி, சிபி உருவங்களில் குழப்பம் ஏற்படுகிறதே!

அது ஏன்?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார்.//

இருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் "நிதி"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான்! எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!

//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை ?//

"பாலுக்கும்" என்பதை டி.ஆர்,பாலுவாக எடுத்துக் கொண்டேன், "பூனைக்கும்" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.
எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!

தமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் "நிதி"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான்! எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!//

ஜோதி, இருப்புக்கு இன்னொரு பொருள் இருப்பதை நீங்கள் சுட்டிய பிறகே தெரிகிறது, தைலா புரத் தோட்டப்பயிராக 'நிதி' நல்லா விளைஞ்சிருக்கும் போல.

கோவி.கண்ணன் சொன்னது…

// "பூனைக்கும்" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.
எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!

தமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ?//

மன்மோகன் சிங், காங்கிரசின் மண் பூனை பொம்மைதான். உண்மையான பூனை இல்லை. காங்கிரசின் மற்றொரு நரசிம்ம இராவ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Namakkal Shibi said...
அவருக்கு சிலசமயம் கோவி, சிபி உருவங்களில் குழப்பம் ஏற்படுகிறதே!

அது ஏன்?
//

ஆரம்பத்துல நீ என்ன மாதிரி ஸ்மார்டாக இருந்தே இல்லையா ? அதன் பிறகு அவர் உன்னை பார்க்கவே இல்லை, அதனால் குழம்புறார் போலும் !
:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//.V.Radhakrishnan said...
//பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்//
கலைஞர் கற்றுக் கொடுத்த பாடம்?!
//

தமிழக அரசியல் வாதிகளுக்கும் கலைஞர் நிறைய விஞ்ஞான முறைஇ பாடம் சொல்லிக் கொடுத்ததாகத் தானே சொல்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
ம்ம்ம்ம்ம்
//

என்ன ம்ம்ம்ம்ம்ம் ?

இந்துராப் தலைவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்களாமே ? மலேசிய தமிழர்கள் அதுபற்றி நினைப்பதே இல்லையா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//இருப்பை என்பதை அவர் மீதான வெறுப்பை என்று படித்துக் கொண்டேன். தாங்கள் "நிதி"யைப் பற்றி சொல்லி இருந்தாலும் சரிதான்! எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!//

ஜோதி, இருப்புக்கு இன்னொரு பொருள் இருப்பதை நீங்கள் சுட்டிய பிறகே தெரிகிறது, தைலா புரத் தோட்டப்பயிராக 'நிதி' நல்லா விளைஞ்சிருக்கும் போல.//

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் நான் சொல்லவந்த "நிதி" வேறு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// கோவி.கண்ணன் said...
// "பூனைக்கும்" என்பது ஒப்வியச்லி கோஸ் டு தி ஒன்லி ஒன் மேன் மன்மோகன் சிங்கு.
எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி!

தமிழ்க்குடி வீழ்ந்து கொண்டிருக்கும் போது அதைத் தாங்காமல் இவர்கள் சென்றது எங்கோ?//

மன்மோகன் சிங், காங்கிரசின் மண் பூனை பொம்மைதான். உண்மையான பூனை இல்லை. காங்கிரசின் மற்றொரு நரசிம்ம இராவ்.
//

மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை!
இது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல!

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் நான் சொல்லவந்த "நிதி" வேறு.//

உங்களுக்கு கருணா.....க்கா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை!
இது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல!//

மன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை!
இது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல!//

மன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.//


பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு? தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா? அப்படின்னு கேட்காதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு? தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா? அப்படின்னு கேட்காதீர்கள்.//

ரப்பர் ஸ்டாம்புகளுக்கு விருப்பம் இருக்குமா ?

ஆளவந்தான் சொன்னது…

ஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.

காரூரன் சொன்னது…

கோவி கண்ணன்,

உங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அகதியின் நன்றிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் 11:51 AM, January 16, 2009
ஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.
//

அவரே தான். ஈழத்தமிழர் நலனுக்காக பற்றி எரிந்து வெளிச்சம் காட்டும் பரஞ்ஜோதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//காரூரன் said...
கோவி கண்ணன்,

உங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அகதியின் நன்றிகள்.
//

காரூரன், தமிழர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களின் நலனைத் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தினமலர் போன்ற ஊடகங்களை கையில் வைத்திருக்கும் தமிழெரிகள் தான் எல்லாவற்றையும் கொச்சை படுத்துகிறார்கள்.

Mugundan | முகுந்தன் சொன்னது…

வணக்கம் கோவி,

பா.ம.க‍ வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயில்லை‌.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?

நாமக்கல் சிபி சொன்னது…

//தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?//

நியாயமான கேள்வி!
http://pithatralgal.blogspot.com/2009/01/blog-post_10.html

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சாகப் போகும் போது கூட சங்கரா சங்கரா என்று சொல்லாதவர்கள், அந்த பிணந்தின்னிக் கழுகுகளுடன் எந்த வகையில் வேறுபடுகிறார்கள்?மூன்று மாத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு ஓர் இன அழிப்பையே கண்டு கொள்ளாமல் விடுவதா? அது நியாயமா? அறிக்கைகளும், அறிவிப்புகளும், சந்திப்புகளும், சம்பிரதாயங்களும், மனிதச்சங்கிலியும்,மக்கள் தந்தியும் மக்களுக்கு இவர்கள் ஊதும் மகுடியா? அல்லது மக்களிடம் இவர்கள் செய்யும் பகிடியா?
கூடிய விரைவில் இந்த பாம்பாட்டி வித்தைக் காரர்கள் தேர்தலுக்காக உங்களைச் சந்திக்கக் கூடும். ஜாக்கிரதை! காண்டு கொள்ள வேண்டியதில்லை. கண்டு கொள்ளுங்கள் போதும். விரட்ட வேண்டியதில்லை. வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.//

:) இப்பவும் குடும்பத்தை கவனிப்பதற்காகத் தான் தொடர்ந்து அரசியலில் இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகு said...
வணக்கம் கோவி,

பா.ம.க‍ வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயில்லை‌.
//

முகு சரிதான், நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?
//

யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் !
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...
தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?
//

யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் !
:)
//

அப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என்கிறீர்களா?


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//

திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.//

:))

Unknown சொன்னது…

அவரெல்லாம் வெறும் காகிதப்புலி. நாளுக்கொரு அறிவிப்பு. இன்றைக்கு இது. நிஜமென்று வந்து விட்டால், யார் நாம் சொன்னதை நினைத்துப் பார்த்து நடு ரோட்டில் நம்மை சாட்டையால் அடிக்க முடியும் என்று தெரிந்து பேசத் தெரிந்தவர்.

benza சொன்னது…

ஆமா, இலைங்கைத் தமிழர் வன்னிப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் இராணுவப் பகுதிக்கு தப்பி ஓடுகின்றனராமே ?!

இதுவரை காலமும் வன்னிப் பகுதியிலிருந்து மக்களை வெளியே செல்ல அனுமதிக்காத தமிழ்ப்புலி,
இப்போது ஏனாம் கருணை காட்டுது ?!!

மக்களை அடக்கிய போராளிகள் இப்போது இராணுவத்தை அடைக்கின்றார்களாம் ? !!!

உயர் மட்ட தமிழ்புலிகள் வேறு நாடுகளுக்கு மாறுகிறார்களாம் !

பண மோசடி செய்தோரை முன்நிலையில் போராட பணித்தால்
வெற்றியேது தலைவா ???

இன்னும் மூன்று கிழமைகளில் சகல
கொட்டமும் அடங்கிவிடும்.

அப்புறம் என்ன ?

தமிழ் நாட்டவர் தமது சொந்த அரசியலைக் கவனிக்க வேண்டியது தானே !!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

////அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//

திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.
:) //

அடப்பாவியளா!
அதுல வர்ற கண்ணகி என்கிற பாத்திரத்துக்குத் தானுங்க சாமி சிங்காரச்? சென்னையில சிலை. இது சரி இல்லன்னா, அது மட்டும் சரிங்களா சாமியோவ்?
தெரியாமத் தானுங் கேக்குறேனுந்க்! புலவர் பிடித்ததால் தானே பத்திரமும் பிடித்தது.:P

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பத்திரம் சரியா வந்தாலும் நீங்க பாத்திரம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
அது தான் அரசியல் வாதிகள் நமக்குக் கொடுப்பது. என்ன. கொஞ்சம் அடைமொழியோடு கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்.

லக்கிலுக் சொன்னது…

உங்கள் பதிவோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை.

தமிழக கட்சிகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமே பிரதானமானது இல்லை. அவரவர் கட்சிக்கு இருக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் எது எதற்கு எந்தெந்த நேரத்தில் முன்னுரிமை தரமுடியுமோ அந்தந்த சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரச்சினையை பேசுகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு அக்கறையில்லை என்பது போன்று பேசுவது எனக்கு உடன்பாடானதல்ல.

//மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை.//

இருந்தாலும் இந்த சொற்றொடர் பிரயோகம் ரசிக்கவும், நகைக்கவும் வைத்தது.

Poornima Saravana kumar சொன்னது…

:))

Sanjai Gandhi சொன்னது…

சோடா வேணுமா கண்ணன் ஐயங்கார்? :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்