பின்பற்றுபவர்கள்

22 ஜனவரி, 2009

கோவையிலிருந்து ஆர்.வைத்தியநாதன் எழுதுகிறார் :)

தமிழ்நாட்டில் தலைவர்களை அவமானப்படுத்தப்படும் போக்கு அதிகரித்தே வருகிறது. இதற்கு காரணம் கட்சி தொண்டர்களும், அவர்களை வழி நடத்தும் அரசியல் தலைவர்களும் தான். இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ் காந்தி சிலையில் விடுதலை சிறுத்தைகள் செருப்பு மாலை போட்டதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்தது (தினமலரில் இது போன்ற பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளி இடுவதில்லை) அந்த செய்தியை படித்ததுமே, ஒரு மாபெரும் தலைவருக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தங்களுக்கு பிடிக்காத தலைவர்களுக்கு செருப்பு மாலை போடுவதை தமிழர்களின் கலாச்சாரம் ஆக்கி வைத்திருக்கின்றனர் திராவிட அரசியல்வாதிகள். பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை ஆதரித்து செய்யும் இந்த செயல்கள் மிகவும் கண்டிக்கக் தக்கது. விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டு இயக்குனர் சீமான் தற்பொழுது சிறையில் களி தின்று கொண்டு இருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேச துரோகிகள், தேச தூரோகிகளின் செயலால் மாபெரும் தேசியக் கட்சியின் முன்னால் தலைவரின் சிலை அவமானப்படுத்தப்பட்டது தமிழர்களுக்கு வெட்க்கக் கேடு. தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விசமிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர்களுக்கு சிறையில் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது.

********

வார்ரே......வா...பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டதும், பெரியார் சிலையை உடைத்து பெரியார் தொண்டர்களை புண்படுத்தியதெல்லாம் பகவான் ஆசிர்வாதத்தால் நடந்தேறியவையா. தேசியவாத பம்மாத்தையையும், முதலைக் கண்ணீரையும் தமிழக எல்லைத் தாண்டி வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரியாது, படித்து சிரிக்கவும் மாட்டார்கள்.

பின்குறிப்பு : தினமலரின் 'இது உங்கள் இடம்' நாளைய கடிதத்தை இன்றே போட்டு இருக்கிறேன். எப்படி கிடைத்தது என்றெல்லாம் கேட்காதீர்கள் :)

15 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\பின்குறிப்பு : தினமலரின் 'இது உங்கள் இடம்' நாளைய கடிதத்தை இன்றே போட்டு இருக்கிறேன். எப்படி கிடைத்தது என்றெல்லாம் கேட்காதீர்கள் :)\\

கேட்டாலும் சொல்லவா போறேள் ...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தினமலரின் 'இது உங்கள் இடம்' நாளைய கடிதத்தை இன்றே போட்டு இருக்கிறேன். எப்படி கிடைத்தது என்றெல்லாம் கேட்காதீர்கள் :)//


உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், ஏன் எங்களுக்கு அந்த வீண் வம்பு? சத்தியமா தினமலருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை பத்தி மட்டும் கேட்கவே மாட்டேன்.

TBCD சொன்னது…

:)

Sanjai Gandhi சொன்னது…

ஒரு பதிவு எழுதறதுக்காக நீங்களே தினமலருக்கு ஒரு கடிதம் எழுதிட்டு அதை இங்க பிரசுரம் பண்ணி நீங்களே பதிலும் போட்டுகிட்டிங்களா? :))))

Sanjai Gandhi சொன்னது…

//இவர்களுக்கு சிறையில் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது.//

இவர்கள் என்ன ஒட்டு மாமரமா? சொட்டு தண்ணீர் விட? ..:))

நாங்களும் விவசாயிங்க தானாக்கும்... :))

Matra சொன்னது…

Dont know what is wrong in the article. Do you mean it is ok for the Dravidians to garland Hindu dieties with chappals but not ok for others to do the same to Periyar statues ?.

Isn't the whole indecent act of garlanding statues with chappals started by Periyar and his cohorts ?.

When one cant behave decently , how can they be expected to uphold human values/rights ?.

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra said...
Dont know what is wrong in the article. Do you mean it is ok for the Dravidians to garland Hindu dieties with chappals but not ok for others to do the same to Periyar statues ?.

Isn't the whole indecent act of garlanding statues with chappals started by Periyar and his cohorts ?.

When one cant behave decently , how can they be expected to uphold human values/rights ?.
//

Matra,

இங்கிலிபீசுகாரர்கள் கூட தமிழ்பதிவை படிக்கிறார்கள் என்பதற்கு மகிழ்ச்சி !

தன்மீது வீசப்பட்ட செருப்பில் இன்னொன்று வீசும் வரை காத்திருந்து எடுத்துக் கொண்டார் பெரியார். க்கி க்கி ஹியூமன் ரைட்ஸ் ? ரைட் ரைட்... அப்பாவிகள் நாள் தோறும் கொல்லப்பட்டுவருவதை விடுதலைப் புலிகளின் சாவு என்று வரூணித்து மகிழும் தினமலருக்குச் சொல்லுங்க.

Matra சொன்னது…

Govi,

My mother tongue is not Thamizh but I learnt to read it after having spent part of my life in Chennai.

I'm very much aware of what's happening in SriLanka. When one is in a life and death situation, it is understandable to react violently. However, please dont compare the SriLankan Thamizhs with Periyar. The former are fighting for their life while Periyar was an opportunist whose sole mission is to destroy Hinduism.

Please dont think I'm one of those 'Parpans'. I hail for a backward community and my Father had to come up in life through sheer determination and hard work.

My Parents never taught me to hate. They only taught me hard work, humility, respect for fellow humans, culture, honesty and importance of education. They raised me as a devout Hindu and taught me all the good about it.

Most importantly, my Parents encouraged me to raise voice against wrongdoings and not against somebody just because they belong to a different community.

Sanjai Gandhi சொன்னது…

//The former are fighting for their life while Periyar was an opportunist whose sole mission is to destroy Hinduism.//

ஹிஹி.. கோவியாரே.. நாளை முதல் இந்தியாவில் இருக்க தயார் ஆகனும்னு எஸ் ஆகாம் இதுக்கு வெளக்கம் கொடுக்கோனும்னு சபையோர் சார்பா வேண்டிக்கிறென்.. :))

துளசி கோபால் சொன்னது…

தமிழர்களுக்குன்னு சிறப்பா இன்னொரு கலாச்சாரம்கூட இருக்குன்னு இப்பத்தான் ஆ.வி ( பழசு)யில் நாஞ்சில்நாடன் அங்கலாய்ச்சு எழுதுனதைப் படிச்சேன்.

கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்களில் தங்கள் பெயர்களை கண்ட இடங்களில் எழுதி வைப்பது......
பாவம் வள்ளுவர். அவருக்கே தமிழ் சொல்லித் தந்துருக்காங்க(-:

Robin சொன்னது…

பெரியார் எல்லா மதங்களையும் விமர்சித்திருக்கிறார். பெரியாருடைய நாத்திக கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் ஒருவர் அவர். காரணம், அவர் சுய நலம் இல்லாது சமுதாயத்தில் மேல் ஜாதியினர் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் செய்த அட்டூழியங்களை எதிர்த்தவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். பதவி வெறி இல்லாதவர். இன்றைக்கு "நான் திருடன் இல்லை, திருடன் இல்லை" என்பது போல "நான் பார்ப்பான் இல்லை" என்று பார்ப்பார்களே சொல்லும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறது என்றால் அதற்கு பெரியாரின் தாக்கமே காரணம். இதை போல ஒவ்வொருவரும் தங்கள் ஜாதிப் பெருமைகளை தூக்கி எறிந்து விட்டு அனைவரும் சமம் என்று எப்போது நினைக்கிறார்களோ அன்று தான் பெரியாரின் கனவு நனவாகும்.

Matra சொன்னது…

//இன்றைக்கு "நான் திருடன் இல்லை, திருடன் இல்லை" என்பது போல "நான் பார்ப்பான் இல்லை" என்று பார்ப்பார்களே சொல்லும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறது என்றால் அதற்கு பெரியாரின் தாக்கமே காரணம்.//

Unfortunately, this is not because of a sense of shame for the misdeeds in the past but fear of harassment by the Dravidian elements.

தமிழ் ஓவியா சொன்னது…

//தினமலரின் 'இது உங்கள் இடம்' நாளைய கடிதத்தை இன்றே போட்டு இருக்கிறேன். எப்படி கிடைத்தது என்றெல்லாம் கேட்காதீர்கள் //

தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் பித்தலாட்டமானவை. போலிப்பெயர்கள் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்த் ஒன்று.

இன்று தினமலரில் வெளியாகும் கடிதம் மறுநாள் காலைக்கதிரில் வேறு ஒருவரின் பெயரில் அதே கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

பார்ப்பனர்களுக்குத்தான் சூடு சுரணை எதுவும் கிடையாதே. எப்படியோ தனது வயிறு வளர்ந்தால் சரி என்று நினைப்பவர்கள்தானே அவர்கள்.

தினமலரை புறக்கணித்தாலே, காசு கொடுத்து வாங்காமல் இருந்தாலே அவாளின் கொட்டம் அடங்கி விடும்.

உணர்வுள்ள தமிழர்கள் குறைந்தபட்சம் இதையாது செய்ய வேண்டுகிறேன்.


நன்றி கோவி. கண்ணன்.

Matra சொன்னது…

தமிழ் ஓவியா,

//தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் பித்தலாட்டமானவை. போலிப்பெயர்கள் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்த் ஒன்று.//

How do you know this ?. This is a serious accusation and can this be proved ?. What about the other newspapers ?

//பார்ப்பனர்களுக்குத்தான் சூடு சுரணை எதுவும் கிடையாதே. எப்படியோ தனது வயிறு வளர்ந்தால் சரி என்று நினைப்பவர்கள்தானே அவர்கள்.//

Looks like rather than criticizing casteism, you are condemning an entire community. This is a totally stupid and untrue accusation.
What about Uthapuram and countless such incidents ?. Are they done by the so called 'Parpaans' ?.

If you keep only harping on 'Parpaans', the real problem will never get solved.

The reason casteism is still there is that people have been attacking only Brahmins and not casteism itself.

FYI, I have seen people of all hues. Many a time of crisis, I have found support and solace from the so called 'Parpaans' and others. Nobody thought of me as non-brahmin, non-muslim, non-christian or non-thamizh.

Maybe you are surrounded by hate filled fanatics and cannot see the world outside. Come out of the dravidian mindset and mix with the world.

Sanjai Gandhi சொன்னது…

//What about Uthapuram and countless such incidents ?//

இதுக்கு இது வரைக்கும் எந்த பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லும் திராவிடக் குஞ்சுகளும் பதில் சொன்னதாக நினைவில்லை. யாராவது சொல்லி இருந்தா லின்க் குடுங்கய்யா.. எனக்குத் தெரிந்து பார்பப்னர்களை விட மோசமான ஜாதி வெறியர்கள் மத்த “உயர்ஜாதி” என்று பீற்றிக் கொள்ளும் ஜாதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இன்றுவரை தலித் மக்களை சில பல ஜாதியினர் தங்கள் வீட்டிற்குள் அனுமதிபப்தில்லை. எந்த தலித்திற்கும் விட்டில் உட்கார வைத்து சோறு போடுவதில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்