திருமாவின் சாகும் வரை உண்ணாவிரதம் எனக்கு ஒப்பு இல்லை, தமிழீழ விடுதலை குறித்து பேசினாலே எள்ளி நகையாடும் காங்கிரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதனால் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் பெறலாமேயன்றி, வேறொன்றுகும் பயன் தராது. காங்கிரசை வற்புறுத்த முடிந்த திமுகவும், பாமகவும் இதைச் செய்யாதபோது திருமா செய்வது வீN முயற்சியே. இந்த போராட்டத்தில் திருமா இறந்தாலும் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படப் போவதாகத் தெரியவில்லை. ஒருமுறை பெரிய புஷ்ஷை எதிர்த்ததற்காக சதாமை பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கையே தன்வசப்படுத்திக் கொண்டு, சாதமையும் அழித்த சின்ன புஷ்ஷின் மனநிலையில் தான் காங்கிரசும் அரசும் உள்ளது. விடுதலைப் புலிகளையும், பிராபாகரனையும் அழிக்ககும் நினைக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் ஒட்டுமொத்த ஈழத்ததமிழர்களை அழிந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அதை காங்கிரசில் இருக்கும் தமிழனும் தட்டிக் கேட்கப்போவதில்லை.
சீக்கிய இனத்தை கண்ட இடங்களில் வெட்டிக் கொன்று இந்திராகாந்தியின் ஆன்மா சாந்தி அடைய வைத்த காங்கிராசாருக்கு, இன்னும் ஆவியாகவே இருக்கும் இராஜிவ் காந்தி ஆவிக்காக ஈழத்தமிழர்கள். வெறி'பிடித்த' காங்கிரசாரின் கல்மனதைக் கரையவைக்கலாம் என்று எண்ணும் திருமாவின் செயலால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. தமிழகத்தில் முதன் முறையாக அரசியலில் ஒரு தலித் தலைவராக பெரும் வளர்ச்சி பெற்ற திருமா, காங்கிரஸ்காரர்களின் வீம்பை குறைக்க எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த முயற்சியால் திருமா உயிருக்கு எதும் நேர்ந்தால் பாதிப்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள தலித்துகளும் தான். எனவே இந்த சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு ஆர்பாட்டாங்கள் நடத்தலாம், முடிந்தால் விடுதலை சிறுத்தைகளை அனைவரையுமே ஈழவிடுத்தலைக்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி சிறை செல்லச் சொல்லலாம். எத்தனை சிறுத்தைகளைத்தான் ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்க முடியும், சிறை நிரப்பும் போராட்டமாக கொண்டு செல்வதே இப்போதைக்கு சிறந்த வழி. திருமாவின் உடல் நலமும், உயிரும் ஈழத்திற்கும் மட்டுமல்ல தமிழகத்திற்கும் மிக முக்கியமானது.
அடங்கமறு, அத்துமீறு ஆனால் பட்டினியாகக் கிடக்காதே, யாருக்கும் பயனில்லை
பின்பற்றுபவர்கள்
18 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
28 கருத்துகள்:
வழிமொழிகிறேன்..:-(
//திருமாவின் உடல் நலமும், உயிரும் ஈழத்திற்கும் மட்டுமல்ல தமிழகத்திற்கும் மிக முக்கியமானது//
நினைக்கவே கஷ்டமா இருக்கு
கையறு நிலையில் எடுக்கப்பட்ட முடிவாகவே அண்ணன் திருமாவளவனின் இந்த போராட்டத்தை பார்க்க முடிகிறது. அவரின் மன உறுதி அறிந்தவர்களுக்குத் தெரியும் ஒரு விசயத்தை அவர் எடுத்துக்கொண்டால் அதற்காக எத்தனை தூரம் உண்மையானவராக இருப்பாரென்று. அகிம்சை மண்ணின் உண்மை சொருபத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும் அவர் போராட்டம் நீடித்தால்.
அவரது உயிர் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு முக்கியத் தேவை எனினும் இந்திய அரசாங்கத்திற்கு சிறு அழுத்தத்தை ஏற்படுத்த உதவுமேயானல் போராட்டம் நீடிக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். திருமா அண்ணனின் எண்ணமும் அவ்வாறாகவே இருக்கும். அவரது உடல் நிலை குறித்தான பதட்டத்தோடும், ஈழத்து உறவுகளின் மீதான படுகொலைத் தாக்குதலின் துயரத்தோடும் செய்வதறியாது திகைத்துதான் இருக்கிறோம். அண்ணனின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமீரக நண்பர்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்
இதயமற்ற பழிவாங்கும் பொய்யர்களிடம் மனித நேயம் எடுபடாது.
நீ என்ன ஆயுதம் எடுக்கிறாய் என்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கின்றான்.
இன்றைய தமிழின எதிரி அம்மையாரும்,அவரது காங்கிரசின் அடிமைகளும்.
அவர்களைத் தமிழகமெங்கும் அவமானப் படுத்தவேண்டும்.
உண்ணாவிரதம் தயைசெய்து வேண்டாம்.கையில் எடுங்கள் செருப்புக்களை.
இப்படி ஒரு உண்ணா விரதத்தில் தான் எங்கள் சகோதரன் திலீபனை பறிகொடுத்தோம். அன்றைக்கு அந்த இளைஞனின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் இரக்கமின்றி, கை கட்டி நின்று விண்ணானம் பேசிக் கொண்டு, வேடிக்கை பார்த்த இந்திய , இலங்கை அரசியல்வாதிகளையும் தூதுவர்களையும் பார்த்தவர்கள் நாங்கள். அந்தக் காட்சிகளை இந்தக் கணம் வரை எங்களால் மறக்க முடியவில்லை. எங்கள் உயிர் போய் உடல் சாம்பராகும் வரை திலீபனின் உயிர் அடங்கிய காட்சியை மறக்கவே முடியாது. உலகமே பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞனின் அஹிம்சை வழிப் போராட்டத்தை அஹிம்சைக்கு பெயர் பெற்ற நாட்டின் அதிகாரமே தோற்கடித்தது. இப்போது இன்னொரு சகோதரர் அதே அஹிம்சை வழியில் தனது அரசு அதிகாரத்திடம் நியாயம் கேட்கிறார். இறையாண்மை , அஹிம்சை என்ற முகமூடிகளுடன் பல்லிளிக்கும் இரக்கமற்ற அரசியல் பகடை விளையாட்டுக்காரர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறார்; செயல்வீரர்களுக்கு உயிர் ஒரு பொருட்டல்ல தான்.ஆனால் உயிரோடு இருந்தால் தான் எந்த ஒரு செயலையும் அர்த்தமுள்ளதாக்க முடியும்.பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் விடிவும் ஈழத் தமிழரின் நிலையில் தான் இன்று இருக்கிறது.அவர்களுக்கும் எமக்கும் இந்த சகோதரன் கட்டாயம் வேண்டும். கவலையாக இருக்கிறது அவரை நினைக்கும் போது..! :(
///அடங்கமறு, அத்துமீறு ஆனால் பட்டினியாகக் கிடக்காதே, யாருக்கும் பயனில்லை//
ரீபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஒருவேளை இவர் பலிகடாவாக்கப்படுகிறாரா? அப்படியாயின் பிணங்தூக்கிகளுக்கு இவர் தான் கிடைத்தாரா அதற்கு?
கோவியாரே! நானும் இதே கருத்தை தான் சிபியிடம் நேத்து ச்சேட்டிகிட்டு இருந்தேன், ஆனால் கொஞ்சம் கெட்ட வார்த்தை சேர்த்து:-((
திருமா அவர்களை திலீபனுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள்.
சாதீய ஒட்டு தேடும் ஒரு சாதரண சந்தர்ப அரசியல்வாதி...இந்த திருமா.
பகுஜன் சமாஜ் கட்சயை எதிர்க்க கையில் எடுத்த ஆயுதம் தன் இந்த உன்ன விரத நாடகம்,.....
திருமா இறந்தாலும் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படப் போவதாகத் தெரியவில்லை. ஒருமுறை பெரிய புஷ்ஷை எதிர்த்ததற்காக சதாமை பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கையே தன்வசப்படுத்திக் கொண்டு, சாதமையும் அழித்த சின்ன புஷ்ஷின் மனநிலையில் தான் காங்கிரசும் அரசும் உள்ளது. விடுதலைப் புலிகளையும், பிராபாகரனையும் அழிக்ககும் நினைக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் ஒட்டுமொத்த ஈழத்ததமிழர்களை அழிந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அதை காங்கிரசில் இருக்கும் தமிழனும் தட்டிக் கேட்கப்போவதில்லை.//
தலைவரே நல்ல ஒப்பீடு... வாழ்த்துக்கள் சாரம்சத்தை பிடிம்மு எழுதியதற்க்கு என் நன்றிகள்
ஒட்டுமொத்த ஈழத்ததமிழர்களை அழிந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அதை காங்கிரசில் இருக்கும் தமிழனும் தட்டிக் கேட்கப்போவதில்லை.//
காங்கிரஸ்ல் தமிழர்கள் இருக்கிறார்களா? கலையிலேயே காமெடி பண்ணாதிங்க தலை
//அடங்கமறு, அத்துமீறு ஆனால் பட்டினியாகக் கிடக்காதே, யாருக்கும் பயனில்லை//
ரிப்பீட்டேய்
நச் வரிகள்
கோவியாரே!
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும்,
ஒரு முதலமைச்சரோ அல்லது மத்திய அமைச்சரோ உண்ணாவிரதம் இருந்தால் ஏதாவது பலன் உண்டு என்று நினைக்கிறோம். தற்போது திருமாவின் உண்ணா விரதத்தை வெகுசன ஊடகங்கள் வெகுவாக புறக்கணித்து வருகின்றன. காங்கிரஸ் அரசாங்கமும் கண்டுகொள்வது போல் தெரியவில்லை. இதனால் ஓர் உணர்வாளரின் உயிர் திலீபனின் உயிரைப் போல் அநியாயமாகப் பறிக்கப் படும் அபாயம் இருக்கிறது. கலைஞர் அல்லது டி.ஆர்.பாலு உண்ணாவிரதம் இருந்தால் தான் மத்திய அரசுக்கு புத்தி வரும். உலக நாடுகளுக்குத் தெரியும். திருமாவின் உண்ணாவிரதத்தினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது அதனால் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர் உண்ணா விரதத்தை விட்டு விடுவது நல்லது. இருப்பினும் மற்ற தலைவர்கள் செய்யாத பட்சத்தில் நாதியத்து கிடப்பதை விட இவர் உண்ணா விரதம் இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம் தான் இருக்கிறார். சாகும் வரை இல்லை என ராமதாஸ் சொல்லி இருக்கிறார்.
உண்ணாவிரதத்தை நீட்டிப்பது பற்றி இன்று முடிவு செய்யப் படும் எனவும் திருமாவளவன் சொல்லி இருக்கிறார். சாவதற்கா இதை அவர் செய்கிறார்?. அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கும் நோக்கம் நியாயமானதாக இருந்தாலும் ”உள்நோக்கம்” அது இல்லை என்பது இன்றைய விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிலையை கவனிக்கும் அனைவருக்கும் தெரியும். விசியை பகுஜன் சமாஜ் ஆக்கிறமித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இது இவருக்கு தேவை படுகிறது. அவ்வளவு தான். அதை எல்லாம் சொல்லப் போனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தவறு என்று சொல்வதாக வந்து திட்டிவிட்டுப் போவார்கள். எது எபப்டியோ, ஈழத் தமிழர்களால் இங்கு நிறையப் பேருக்கு அரசியல் ஆதாயம்.. இவர்களால் அந்த மக்களுக்கு.....? சும்மா உணர்ச்சிவசப் படாமல் யோசித்தால் விடை கிடைக்கும்.
எதற்கெடுத்தாலும் காங்கிரஸ்காரனை நோண்டுவது வாடிக்கையாகி விட்டது. அந்த கட்சியில் தான் தொண்டர்களே இல்லையே. அவர்களின் இருக்கும் ஒரு சிலர் என்ன பேசினால் உங்களுகென்ன? தொண்டர்களே இல்லாத ஒரு கட்சியினர் பேசுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? விட்டுத் தொலையுங்களேன்..
ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒன்றாக பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கும் போது அவர்களை வேறு வேறாக பார்க்க காங்கிரசுக்கு உரிமை இல்லையா? காங்கிரசை விட ஜெயலலிதா தான் புலிகளை தீவிரமாக எதிர்க்கிறார். ஆனால் அவரை காங்கிரஸ் போன்று தடித்த வார்த்தைகளால் எவனுக்கும் விமர்சிக்க தைரியம் இல்லை. அப்படி செய்தால் ரரக்கள் காயடித்து விடுவார்கள் என்ற பயம். பேசினால் நியாயமாக பேசுங்கள் . இல்லைனா கம்முனு இருங்க.
இது கோவியாருக்கு மட்டுமில்லை. காங்கிரசை நோண்டிக் கொண்டிருக்கும் எல்லாருக்கும் தான்.
//பாஸ்கரன் சுப்ரமணியன் 11:32 AM, January 18, 2009
திருமா அவர்களை திலீபனுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள்.
சாதீய ஒட்டு தேடும் ஒரு சாதரண சந்தர்ப அரசியல்வாதி...இந்த திருமா.
பகுஜன் சமாஜ் கட்சயை எதிர்க்க கையில் எடுத்த ஆயுதம் தன் இந்த உன்ன விரத நாடகம்,.....//
ரீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!.....
திருமா அவர்களை திலீபனுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள். என்ற கூற்றுக்கான பதிலை கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்பதால்....இந்த பின்னூட்டம்.!!
திலீபனோடு திருமாவை ஒப்பிடவில்லை;வடிவாக வாசிச்சுப் பாருங்கோ.. இந்திய அரசு திலீபனின் உண்ணாவிரதத்தை எப்படி அலட்சியப்படுத்தியதோ அதே போல் தான் திருமாவின் உண்ணாவிரதமும் அலட்சியப்படுத்தப்படும் என்று தான் சொல்ல முனைந்திருக்கிறது.
உண்ணாவிரதத்தை முடித்து வைக்க ஏதாவது பொய் வாக்குறுதிகளை வேண்டுமானால் திருமாவிடம் இந்திய அரசு கொடுக்கும்; பின்னாளில் அவை உடைப்பில் போடப்படும். அவ்வளவே..
மற்றப்படி ஈழத்தமிழர் பிரச்சினையில் சுமுக தீர்வுக்கோ, போர் நிறுத்தத்திற்கோ இந்திய அரசு எந்த நடவடிக்கையும், எந்த அழுத்தத்தையும் கொடுக்கப்போவதில்லை. அது நிதர்சனம்!!
சுவாதி, ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளவும். திலிபன் சொன்னதை செய்தார். ஆனால் திருமாவளவன் நடத்தியது அரசியல் நாடகம். இந்திய அரசியல்வாதிகள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாமல் இருக்கலாம்.
திருமாவளவன் அறிவித்தது காலவரையற்ற உண்ணாவிரதம் தானே ஒழிய சாகும்வரை உண்ணாவிரதல் இல்லை என்பதை முதலில் எல்லோரும் அறியவும். அவர் நிச்சயம் சாகும் முடிவெல்லாம் எடுக்க மாட்டார். அவர் இந்திய அரசியல்வாது என்பதை நினைவில் கொள்ளவும். அவர் இப்போது உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டார். அவர் நோக்கம் நிறைவேறியதா என்ன?..
இந்த பித்தலாட்டத்தால் தான் இவரை திலிபனோடு ஒப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள். மாயவதியை சமாளிக்க தமிழகத்தில் இவருக்கு இது போன்ற அரசியல் நாடகங்கள் எல்லாம் தேவைப் படுகிறது. இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஈழத் தமிழர்களின் துன்பங்களில் ஆதாயம் தேடும் குள்ளநரி கும்பலை எப்போது தான் புரிந்துக் கொள்வீர்களோ.. :(
// ஒருவேளை இவர் பலிகடாவாக்கப்படுகிறாரா? அப்படியாயின் பிணங்தூக்கிகளுக்கு இவர் தான் கிடைத்தாரா அதற்கு?//
வைக்கோ போன்றவர்களேல்லாம் அமைதியாயிருக்க, எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு.
//சிறை நிரப்பும் போராட்டமாக கொண்டு செல்வதே இப்போதைக்கு சிறந்த வழி. ///
வரவேற்க தக்க ஒன்று.
கிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுக சிறை நிரப்பியதுபோல
ஈழு விடுதலையில் ஆதரவு காட்டும் கட்சிகள் சிறை நிரப்பும் போரட்டத்தினை மேற்கொள்ளவேண்டும்.
கருணாநிதி சொல்வதுபோல இன்னும் மூன்று நாள் இன்னும் இரண்டு நாள் என்று இவர்கள் பொறுத்திருக்கவேண்டாம்.
//ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒன்றாக பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கும் போது அவர்களை வேறு வேறாக பார்க்க காங்கிரசுக்கு உரிமை இல்லையா?//
சஞ்செய்,
அப்படி என்றால் தற்போதைய சூழலில் ஈழத்தமிழர்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்று சொல்லிவிட்டு பிறவற்றைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
டொன்லீ, நசரோயன், முத்து குமரன், Thamizhan, சுவாதி சுவாமி, மோகன் கந்தசாமி, அபி அப்பா, பாஸ்கரன் சுப்பிரமணியன், ஜாக்கி சேகர், அத்தரி, வெளிச்ச பதிவர் ஜோதிபாரதி, நல்ல தந்தி, வடகரை வேலன் அண்ணாச்சி, பாண்டி துரை ஆகியோருக்கு நன்றி !
*******
இங்கே ஓப்பீடுகள் நன்மைக்காக காட்டப்பட்டு இருக்கிறது, யார் செய்வது சிறந்தது என்பதற்காக அல்ல. திலிபன் அவர்களின் தியாகம் போற்றத் தக்கது, திருமாவின் துணிவு பாராட்டத்தக்கது.
கொச்சைப் படுத்துவது காலம் காலமாக நடந்தேறிவருகிறது. அவற்றை புறம் தள்ளுகிறேன்.
//திருமாவின் துணிவு பாராட்டத்தக்கது.//
கண்டிப்பாக கோவியார்
//சஞ்செய்,
அப்படி என்றால் தற்போதைய சூழலில் ஈழத்தமிழர்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்று சொல்லிவிட்டு பிறவற்றைச் சொன்னால் நன்றாக இருக்கும்.//
விளம்பரம் தேடி கொண்டதைத் தவிர மற்ற கட்சிகள் என்ன செய்தது? ஏன் காங்கிரசை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம். ராஜிவ் படுகொலைக்கு முன் காங்கிரஸ் போல் ஈழத் தமிழர்களுக்கு உதவியவர்கள் யாரும் இல்லை. இப்போது விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? எல்லாம் வெத்துக் கூச்சல்..
// SanJaiGan:-Dhi said...
//சஞ்செய்,
அப்படி என்றால் தற்போதைய சூழலில் ஈழத்தமிழர்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்று சொல்லிவிட்டு பிறவற்றைச் சொன்னால் நன்றாக இருக்கும்.//
விளம்பரம் தேடி கொண்டதைத் தவிர மற்ற கட்சிகள் என்ன செய்தது? ஏன் காங்கிரசை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம். ராஜிவ் படுகொலைக்கு முன் காங்கிரஸ் போல் ஈழத் தமிழர்களுக்கு உதவியவர்கள் யாரும் இல்லை. இப்போது விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? எல்லாம் வெத்துக் கூச்சல்..
//
உங்க நிலைப்பாடு அறிந்தது தான், இதுல கருத்து பரிமாற்றத்திற்கு ஒன்றும் இல்லை.
என்னதான் தமிழக கட்சிகள் இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்டாலும், கேட்டுக் கொள்ளும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஆயுத, இராணுவ உதவியை நிறுத்தவில்லை, சிங்களர்களை மகிழ்விக்க கிரிகெட் அணியை அனுப்புகிறார்கள். இதற்கு மேல் என்ன சொல்வது. முதலில் நீங்கள் தமிழர், அதன் பிறகே காங்கிரஸ்காரர்.
//விளம்பரம் தேடி கொண்டதைத் தவிர மற்ற கட்சிகள் என்ன செய்தது? ஏன் காங்கிரசை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம். //
சஞ்சய்,
காங்கிரசும் திமுகவும் ஆட்சி அதிகாரத்தில் தற்போது இருந்து வரும் கட்சியாக இருக்கிற காரணத்தால் அனைவரும் அவர்களைத் தான் குறை கூறுவார்கள். அது தான் நியதி, இயற்கை. அவர்களைக் குறை சொல்லாமல் வேறு யாரைக் குறை சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
கோவியாரே உங்கள் நிலைப்பாடும் சற்று மாற வேண்டும் என விரும்புகிறேன். அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஜினாமா முடிவெடுத்த போது அதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது உங்களுக்கு தெரியாமல் போனது என் தவறு அல்ல. அதில் கலந்துக் கொள்ளாமலே தங்கள் கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என வைகோ சொன்னார். ஆனால் நடந்தது என்ன? எல்லோரும் ஒரே மாதிரி இருக்கையில் என் காங்கிரஸ் மீது மட்டும் காண்டு?
நேற்றுக் கூட பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவில்லை என்று அறிவித்திறுக்கிறார். இதற்கு மேல் உங்களுக்கு எப்படி நிரூபிக்க வேண்டும்?
ஜோதி சார்,
வைகோ, ராமதாஸ், திருமாவளவன், புதிய தமிழர் பாசம் அவதாரம் எடுத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் என எல்லாரிடமும் சட்டமன்ற, பாராளுமன்ற(விசி தவிர) உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு , தமிழக அரசுக்கு நெருக்கடி தர என்ன செய்தார்கள்? இவர்களைப் போல் எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்று இருப்பதற்கு சும்மா இருப்பதே மேல் தான் என்பது என் தனிபட்ட கருத்து. இவர்கள் தேவை இல்லாமம் சில விவகாரங்களைப் பேசி பிரச்சனையை மேலும் சிக்கலாகவும் தீவிரமாகவும் ஆக்குகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த நிலையில் சீமானும், வைகோவும் தேவை இல்லாததை பேசி கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டார்கள்.
//SanJaiGan:-Dhi said...
ஜோதி சார்,
வைகோ, ராமதாஸ், திருமாவளவன், புதிய தமிழர் பாசம் அவதாரம் எடுத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் என எல்லாரிடமும் சட்டமன்ற, பாராளுமன்ற(விசி தவிர) உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு , தமிழக அரசுக்கு நெருக்கடி தர என்ன செய்தார்கள்? இவர்களைப் போல் எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்று இருப்பதற்கு சும்மா இருப்பதே மேல் தான் என்பது என் தனிபட்ட கருத்து. இவர்கள் தேவை இல்லாமம் சில விவகாரங்களைப் பேசி பிரச்சனையை மேலும் சிக்கலாகவும் தீவிரமாகவும் ஆக்குகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த நிலையில் சீமானும், வைகோவும் தேவை இல்லாததை பேசி கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டார்கள்.
//
சஞ்சய்,
இந்தியஅரசு காங்கிரஸ் அரசு, காங்கிரஸ் அரசை இலகுவாக அணுகும் வாய்ப்பும் ஆற்றலும், தமிழக காங்கிரஸ்காரர்கள்? மற்றும் திமுகவினருக்கு இன்னும் சொல்லப் போனால் மருத்துவர் அய்யாவிற்கும் உண்டு. யார் இதைச் செய்தால் எளிது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். யாரால் இது முடியும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் இந்திய அரசு ஆயுதம் கொடுக்கவில்லை என்று அந்தோனி சொன்னதை அப்படியே கிளிப் பிள்ளை சொல்வது போல் சொல்லாமல், இந்திய இராணுவ தளபதி சொன்னதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்திய இராணுவ தொழில் நுட்பவியலாளர் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளானதை நினைவில் நிறுத்துங்கள். உண்மை விளங்கும்.
கருத்துரையிடுக