பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2009

மார்கழி திங்கள் மற்றும் ஒரு பாராட்டு !

புறையோடிய புண்ணுக்கு காலை எடுப்பதே நல்வழி, நாத்திகம் குறித்த எனது நிலைப்பாடு, கருத்துகள் இவைதான், கடவுள் பெயரால் மூடநம்பிக்கைகள் சமூகத்தை கேலி குறியாக்கும் போது, கடவுளையே மறுப்பதன் மூலம் அவற்றை அழிக்கமுடியும் என்கிற நம்பிக்கை விதையாக பெரியார்கள் தோன்றுகிறார்கள். பகவத் கீதைவழி சொல்வெதெனில் யுகங்கள் தோறும் மக்கள் மனநிலை கீழாக சென்று உலகே பாழ்பட்டு சீரழியும் போது அதை அழித்துவிட்டு புதிய உலகை படைக்க கண்ணன் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். இன்றைய தேதியில் உலக மக்களை பிரித்துப் போடுவதில் முதன்மை பங்காற்றுவது, இனமோ, சாதியோ இல்லை, மதம் தான். கடவுளின் பெயரால் சாத்தான்களின் ஆசியுடன் நடத்தப்படும் மதவெறிதான்.

மதவெறியை, மதத்தை விடுத்துப் பார்த்தால் ஆன்மிகம், இறை நம்பிக்கை அமைதி இழந்த மனதுக்கு அருமருந்தே. அந்த வகையில் ஆன்மிகம் தனிமனிதனுக்கு ஓரளவுக்கு நன்மையே செய்கிறது. பிறர் மீது வழிய திணிக்கப்படாதவரையில் எந்த ஒரு கொள்கையும் நல்லவையே. இறை நம்பிக்கை உடையவர்கள் தீய வழியில் செல்வதை ஒராளவு அந்த நம்பிக்கை தடுத்தே வைத்திருக்கிறது. அது இல்லாதவர்கள் தன்னம்பிக்கை மூலமாகவே நல்லது, கெட்டது, நன்மை தீமை அறிந்தே தீய வழியில் செல்வதை தடுத்து தற்காத்து கொள்கிறார்கள்

**********

பொதுவாக மார்கழி திங்கள் என்றால் (தமிழகத்தில்) கடுங்குளிர் இருக்கும், அதிகாலையில் எழுவது சோம்பலாக இருக்கும், ஆனால் அந்த திங்களில் தான் விவசாய பயிர்கள் அறுவடையை நெருங்கும் காலம், பாதுகாப்பு மிகத் தேவையான நேரம், தவறினால் விளைச்சல் வீணாகிவிடும். கடும் குளிரை சமாளிக்கவே மார்கழி திங்களை மங்கல திங்களாக்கிக் கொண்டு அதிகாலை எழும் வழக்கம் ஏற்பட்டதாக நினைக்கிறேன். அதற்கு உற்சாகப்படுத்த அதிகாலையில் கோவில்களை திறந்து வைத்து, பூசை தொடங்கி, பெரிய மணி ஓசையை எழுப்பி ஊரையே உறக்கத்தில் இருந்து எழுப்பவே மார்கழி உற்சவங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மற்ற நாட்களில் காலை 6 மணி வரை உறங்கும் பெண்கள் கூட காலை 4.30 மணிக்கே எழுந்து, வாசல் பெருக்கி, வண்ணக் கோலமிடுவதை சிறுநகரங்களில், கிராமங்களில் இன்றும் கூட நடைமுறையில் இருக்கிறது. மார்கழி முழுவதும் நாள் ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு கோலங்கள் இடுவதைப் பற்றி பெண்கள் பேசிக் கொண்டும், அதற்காக வண்ணப்பொடிகள் வாங்குவது, கோலமிடுமுன்பே எழுத்து பலகையில் வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்வார்கள், காலை 5 மணிக்கு கோவிலில் தொடங்கும் பக்திப் பாடல்கள் 7:30 வரை கேட்டுக் கொண்டு இருக்கும், அதே போன்று மாலைவேளையில் போடப்படும் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் பேச்சுரை ஒலிபரப்பை கேட்டு கேட்டு பலருக்கு திருவிளையாடல் முழு பேச்சுரையும் மனப்பாடமாகவே பதிந்து இருக்கும்.

மார்கழி பனியை அறைகூவலாக எடுத்துக் கொண்டு அந்த திங்களிலும் அன்றாட வாழ்க்கைய மேலும் சுறுசுறுப்பாக்கிக் கொள்ள, அந்த திங்கள் தொடர்புடைய ஆன்மீக விழாக்கள் முதன்மை பங்காற்றின.
தமிழகத்தில் மார்கழி திங்கள் வேறெந்த திங்களைவிட சிறப்பு வாய்ந்தாக இருப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

*******

அமெரிக்காவுக்கும் மார்கழிக்கும் என்ன தொடர்ர்பு ? தமிழகத்தில் இருக்கும் மார்கழி அதிகாலைக்கும் நியூஜெர்சிக்கும் எதும் தொடர்பு இருக்கிறதா ? தமிழக அதிகாலை நியூஜெர்சியில் மயக்கும் மாலை.
அந்த நேரத்தில் மார்கழி திங்கள் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு என்ற கணக்கில் தவறாது, மார்கழி திங்களுக்காக சிறப்பு பதிவுகள் இட்டு வருகிறார் நம்ம ஆன்மிக சூப்பர் ஸ்டார் கே.ஆர்.எஸ் என்று அழைக்கப்படும் மாதவி பந்தல் கண்ணபிரான் இரவிசங்கர்.

மார்கழி-01: கீதை Bestஆ? கோதை Bestஆ? என்று மார்கழி 1ல் தொடங்கிய மார்கழி தொடர்(புடைய) பதிவுகளை

தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்! - தை முதல் நாள் அன்று நிறைவு செய்து இருக்கிறார்ர்.

மார்கழி தொடர்பில் மொத்தம் 31 பதிவுகள். தொடர்பதிவுகள் எழுதுவதே சிக்கல் தான், அதுவும் ஆன்மிகம் தொடர்பில் எழுதும் போது எழுதுபவர்களுக்கே வாசகர் வட்டம் குறித்த எண்ணத்தில் அது பெறும் அரைகூவலாக அமையும், வெறுமென பாசுரமும் பொருளும் எழுதினால் படிப்பவர்களுக்கு பிடிக்காது, அவர்களை நாள்தோறும் தேடிவரும் படி செய்வதற்கு நகைச்சுவையுடனும் சொல்லவந்த கருத்தை நன்றாக பதிய வைக்கும் படி எழுதவேண்டியது மிக மிக சிக்கலான வேலை, மற்றவற்றைவிட நகைச்சுவைக்குத்தான் மிகுந்து யோசிக்க வேண்டி இருக்கும், ஏனெனில் மற்றவை இயல்பான எழுத்தில் வந்துவிழும்.

கேஆர்எஸ் எழுதிய 31 பதிவுகளிலுமே நகைச்சுவை, எள்ளலுக்கு குறைவில்லை, அதே போன்று, ஆன்மிக அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பாசுர விளக்கத்துடன் சேர்த்தே பதிவாக கோர்த்து இருக்கிறார். 31 இடுகையும் மிக நன்றாக இருந்தது.

இந்த மார்கழி இடுகை தொகுப்பை மென்னூலாகவோ, புத்தமாகவோ ஆக்கலாம். பதிவர்கள் எழுதிய பலநூல்கள் வெளிவந்துவிட்டன, ஆன்மிக அன்பர்களுக்காக சிறிய அளவில் இந்த தொகுப்பை கேஆர்எஸ் ஒரு நூலாக்கலாம்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு தனது பொன்னான நேரத்தை மிகவும் பிறகுக்கும் பயன் தரும் வகையில் மாற்றிக் கொண்ட அன்பு நண்பர் கேஆர் எஸை மிகவும் பாராட்டுகிறேன்.

21 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

பாராட்டு பெற்றவருக்கும் பாராட்டியவருக்கும் பாராட்டுகள். :-)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு. கோவி கண்ணன்,


உங்கள் தொலை நோக்கு சிந்தனைக்கு பாரட்டுக்கள்.

மார்கழி காலை நேரம் ஏன் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் கூறிய காரணம் பகுத்தறிவின் மணிமகுடம்.

///பொதுவாக மார்கழி திங்கள் என்றால் (தமிழகத்தில்) கடுங்குளிர் இருக்கும், அதிகாலையில் எழுவது சோம்பலாக இருக்கும், ஆனால் அந்த திங்களில் தான் விவசாய பயிர்கள் அறுவடையை நெருங்கும் காலம், பாதுகாப்பு மிகத் தேவையான நேரம், தவறினால் விளைச்சல் வீணாகிவிடும்.///

எப்படி உங்களால் மட்டும் சிந்திக்க முடிகிறது?

திருடன் அறுவடையை அதிகாலையில் தான் திருட வேண்டும் என அரசு சட்டம் போட்டிருக்கிறதா?

திருடன் திருட வேண்டும் என முடிவெடுத்தால் மார்கழி என்ன பங்குனி என்ன?

எனக்கு தெரிந்த காரணங்கள் :

காலையில் இருக்கும் சூழல் (அட்மாஸ்பியர்) உடல் ஆரோகியத்திற்கு நல்லது என்பது தெரிந்ததே. இது மருத்துவம் எனும் விஞ்ஞானமும் காலையில் வாக்கிங் போவது நல்லது என சொல்லுகிறது.


ஓர் ஆண்டாய் (year) நாளாக மனதில் உருவகப்படுத்தினால் மார்கழி மாத காலம் அதிகாலையாக அமையும். அதனால் ஆண்டின் அதிகாலை(பிரம்ம முகூர்த்தம்) என்பது பிற நாட்களின் அதிகாலையை விட சிறந்தது.

மேலும் மார்கழி மாதம் அதிகாலையில் எழுவது பிரம்மசரியத்திற்கு சிறந்தது.

ஏதோ என்னால் முடிந்தை சொல்லி இருக்கிறேன் ”சிங்கை பெரியார்” அவர்களே தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்.

திரு கண்ணனுக்கும் கண்ணபிராணுக்கும் எனது பாராட்டுக்கள்

துளசி கோபால் சொன்னது…

காலத்துக்கு ஏற்ற மாற்றம்.

அருமை.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
பாராட்டு பெற்றவருக்கும் பாராட்டியவருக்கும் பாராட்டுகள். :-)
//

குமரன்,
பாராட்டுக் கொடுப்பதற்கும் பெரிய மனது இருக்கனும்னு சொல்லுவாங்க. இருவருக்கும் பாராட்டு கொடுத்த உங்களுக்கும் பாராட்டுகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு. கோவி கண்ணன்,


உங்கள் தொலை நோக்கு சிந்தனைக்கு பாரட்டுக்கள்.

மார்கழி காலை நேரம் ஏன் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் கூறிய காரணம் பகுத்தறிவின் மணிமகுடம்.
//

ஸ்வாமி ஓம்கார்,

யோசித்து எழுதவில்லை, எழுதும் போது எண்ணத்தில் வந்ததையே எழுதினேன். அதனால் 'அப்படி இருக்கலாம்' என்றே எழுதி இருக்கிறேன். தங்களின் பாராட்டுக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி.

//திருடன் அறுவடையை அதிகாலையில் தான் திருட வேண்டும் என அரசு சட்டம் போட்டிருக்கிறதா?

திருடன் திருட வேண்டும் என முடிவெடுத்தால் மார்கழி என்ன பங்குனி என்ன?//

இரண்டு கால் திருடன் இல்லை, நாலு கால் திருடன்.

ஆடு மாடுகள் குளிருக்கு அஞ்சுவதில்லை, தோல் தடிமன், சரியாக எழுந்து ஆள் இல்லாத வயலில் பசி ஆறிவிடும் :) அதனால் தான் பயிர்கள் திருட்டு போகும் என்று நான் குறிப்பிடவில்லை

//எனக்கு தெரிந்த காரணங்கள் :

காலையில் இருக்கும் சூழல் (அட்மாஸ்பியர்) உடல் ஆரோகியத்திற்கு நல்லது என்பது தெரிந்ததே. இது மருத்துவம் எனும் விஞ்ஞானமும் காலையில் வாக்கிங் போவது நல்லது என சொல்லுகிறது.
//

சரிதான்,
கடும் குளிரில் நடைபயிற்சி நல்ல அனுபவம் தான். ஒரு டீ யை குடித்துவிட்டு 30 நிமிடம் நடந்து வந்தால் சுறுசுறுப்பாக இருக்கும், குளிரான பகுதிகளுக்கு செல்லும் போது அனுபவித்து இருக்கிறேன்

//ஓர் ஆண்டாய் (year) நாளாக மனதில் உருவகப்படுத்தினால் மார்கழி மாத காலம் அதிகாலையாக அமையும். அதனால் ஆண்டின் அதிகாலை(பிரம்ம முகூர்த்தம்) என்பது பிற நாட்களின் அதிகாலையை விட சிறந்தது.//

ஓர் ஆண்டில் தை மாதம் என்பது காலை. அதாவது தைமாதம் பொழுது விடிந்ததாக பொருள். சரியா ?

//மேலும் மார்கழி மாதம் அதிகாலையில் எழுவது பிரம்மசரியத்திற்கு சிறந்தது.//

இப்படி பொதுவில் சொல்லிவிட்டால், பலர் அதிகாலை விழித்து எழுந்தால் பிரம்மச்சாரி ஆகிவிடுவோமோ என்று பயந்து காலை எட்டு மணி வரை தூங்குவார்கள்

//ஏதோ என்னால் முடிந்தை சொல்லி இருக்கிறேன் ”சிங்கை பெரியார்” அவர்களே தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்.//

:)) நீங்கள் தவறாக சொல்லக் கூடியவர் அல்லர் எனும் 'பகுத்தறிவு' எனக்கு உண்டு !

//திரு கண்ணனுக்கும் கண்ணபிராணுக்கும் எனது பாராட்டுக்கள்//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
காலத்துக்கு ஏற்ற மாற்றம்.

அருமை.
//

பாராட்டுக்கு நன்றி அம்மா,

நேற்று பொங்கல் பதிவை உங்கள் பார்வையில் படவேண்டும் என்றே எழுதினேன். பதிவுக்கு தரிசனம் கிடைக்கல :)

cheena (சீனா) சொன்னது…

அருமை கோவி

நல்ல சிந்தனை

மார்கழியில் ஆன்மீகம் பற்றிய சிந்தனைஇ. எல்லாவற்றிற்கும் - நமக்குத் தெரியாத எல்லாவற்றிற்கும் நாமே காரணங்கள் கண்டு பிடிக்கலாம். தவறில்லை. இருப்பினும் அக்கால கட்டத்தில் மனிதனுக்கு பல நல்ல செய்திகளைச் சொல்ல வந்த பெரியவர்கள் ஆன்மீகத்தின் துணை கொண்டு செய்திகளைச் சொன்னார்கள். காரணம் எதற்கும் பயப்படாத மனிதன் ஆன்மீகத்துக்குப் பயந்தான். அதனை ஒரு படிக்கட்டாகப் பயன் படுத்தி, பின் தொடர வேண்டிய நல்ல பல பண்புகளைக் கற்பித்தார்கள். இதுதான் ஆன்மீகம் வளர்ந்த வரலாறு.

மனிதனுக்குப் பயம் என்று ஒன்று இருக்கும்வரை கடவுள் நம்பிக்கை மறையாது. இது உண்மை.

நிற்க, கேயாரெஸ்ஸைப் பாராட்டும் பதிவில் எங்கோ போகிறேனோ ?

நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - முப்பத்தி ஒரு பதிவுகள் மார்கழி மாதம் முழுவதும் இட்டு ஆன்மீகப் பணியினைச் சிறப்பாகச் செய்து வரும் கேயாரெஸ்ஸுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும், எல்லா விதச் சிறப்புகளையும் அளிக்க பிரார்த்திக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

சரியாப்போச்சு.

குட்டி இந்தியாவில் மாலை நிகழ்ச்சிகளைக் கேட்டு ஒரு பின்னூட்டம் போட்டேன். அதுக்கு பதைலைச் சொல்லவே இல்லை நீங்க.

'காலம்' கடந்துபோச்சு(-:

துளசி கோபால் சொன்னது…

பதிலை என்று வாசிக்கவும் ப்ளீஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் 12:19 PM, January 15, 2009
சரியாப்போச்சு.

குட்டி இந்தியாவில் மாலை நிகழ்ச்சிகளைக் கேட்டு ஒரு பின்னூட்டம் போட்டேன். அதுக்கு பதைலைச் சொல்லவே இல்லை நீங்க.

'காலம்' கடந்துபோச்சு(-:
//

துளசி அம்மா,

அது பொங்கலுக்கு முன்பு சென்ற வாரம் இட்ட பதிவு, அதன் பிறகு நேரமே கிடைக்கவில்லை. ஆனால் நேற்று போட்ட பதிவு பொங்கோலோடு சேர்த்து படையலாகவே போட்டு இருக்கிறேன். எழுதும் போது உங்கள் நினைவு தான் வந்தது, நீங்கள் தானே நிகழ்ச்சி நிரல்களை அருமையாக எழுதுவிங்க.

துளசி கோபால் சொன்னது…

பரவாயில்லை. கோபால் அங்கே போய்ப் பார்த்துக் கொஞ்சம் படங்களும் எடுத்து அனுப்புனார். 6 மணிநேரம் கிடைச்சதாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பரவாயில்லை. கோபால் அங்கே போய்ப் பார்த்துக் கொஞ்சம் படங்களும் எடுத்து அனுப்புனார். 6 மணிநேரம் கிடைச்சதாம்.
//

இதெல்லாம் கொடுமை, பலமுறை வருகிறவர், ஒரு தொலைபேசி அழைப்பு விட்டாரென்றால் அந்த நேரத்தில் அலுவலகத்தில் இல்லை என்றால் பார்த்து பேசுவேன். அடுத்த முறை வரும் போது தொலைபேசச் சொல்லுங்க, இல்லை என்றால் கண்டன பதிவு பொதுவில் வரும் :)

துளசி கோபால் சொன்னது…

தனிமடல் பார்க்கவும்:-)

மணிகண்டன் சொன்னது…

துளசி மேடம்,

தனிமடல் பார்க்கவும்ன்னு பின்னூட்டத்துல சொல்லி இருக்கேன்னு போன் பண்ணி சொல்லிடுங்க !

கோவி :- சிறுநகரம், கிராமம் மட்டும் இல்ல கோவி. சென்னைல கூட விடியற்காலை எழுந்து கோலம் போடறாங்க. இந்தியா போயிருந்த போது பார்த்தேன். (நான் கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்துல முந்திய இரவே கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க !)

நையாண்டி நைனா சொன்னது…

மார்கழி மாசம் காலைலெ எழுந்து... மார் சளி வந்தது தான் மிச்சம்... எனக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

மார்கழிப் பதிவுகள் மொத்தம் 31-ன்னு பொய்க் கணக்கு காட்டறீங்க?
இந்த இடுகையும் சேர்த்து (உங்க மார்கழி வெளக்கமும் சேர்த்து) மொத்தம் 32! :)))

நன்றி கோவி அண்ணா!
யோமோதிய தமிழும் எம் பதிவும்
தாமே பெற மாலவர் தந்ததினால்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இரண்டு கால் திருடன் இல்லை, நாலு கால் திருடன்
ஆடு மாடுகள் குளிருக்கு அஞ்சுவதில்லை, தோல் தடிமன், சரியாக எழுந்து ஆள் இல்லாத வயலில் பசி ஆறிவிடும் :)//

ஹா ஹா ஹா
மீசையில் மண் ஒட்டலை! :)

சுவாமி ஓம்கார் புடிச்ச சூப்பர் பாயிண்ட்டுக்கு ஒழுங்காப் பதில் சொல்லுங்க கோவி அண்ணா!

எந்த ஊர்ல, மார்கழி மாசம் அதி காலையில், ஆடு மாடுகளை ஃப்ரீயா அவிழ்த்து விட்டுருக்காங்க?
எல்லாம் பட்டியிலோ, கொட்டாயிலோ, முளைக்கடிச்சி "கட்டப்பட்டு இருக்கும்"!

எப்படித் தான் உங்களால் மட்டும் இப்படி எல்லாம் மாத்தி மாத்திச் சிந்திக்க முடிகிறதோ? :)))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//தமிழகத்தில் மார்கழி திங்கள் வேறெந்த திங்களைவிட சிறப்பு வாய்ந்தாக இருப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாக தெரியவில்லை//

திருமணங்கள் அதிகம் மார்கழியில் நடக்காததால்...
மேலும் பெண்கள் எல்லாம் ஆன்மீகத்தில் பிசியாக இருப்பதால்...

நகை வாங்கும் செலவு மிச்சம், கடை வெளியே கால் கடுக்க நிற்பது மிச்சம்-ன்னு எத்தனை கணவன்மார்கள் பூரிப்பில் இருக்காய்ங்க! என்னங்கண்ணே இப்பிடிச் சொல்லிட்டீங்க? :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

சுவாமி ஓம்கார், சீனா ஐயா, குமரன், டீச்சர் - வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி!

அண்ணே,
புதிரா புனிதமா, குறுக்கெழுத்து எல்லாம் வெறுமனே ஜாலிக்கு இல்ல! அவையும் மக்கள் பங்கு பெறும் பாவை நோன்பு தான்! :)

திருவெம்பாவைப் பதிவொன்று சிவபெருமான் மீது! ஏழைப் பங்காளன் என்றும், ஆழியான் திருமாலின் அன்பைப் பெற்றவன்-ன்னும் ஒற்றுமைக் கருத்தாக வரும்! அதையும் கணக்குல சேருங்க!

மொத்தம் 35 வருது!

பதிவுலகப் பொருளாளர் நீங்க!கணக்கு வழக்கு எல்லாம் சரியா இருக்க வேணாமா?
சிங்கையில் எத்தனை பதிவர்களுக்கு பெரிய பெரிய கடன் எல்லாம் வேற கொடுத்திருக்கீங்க! :)))

ச்ச்ச்ச்ச்சும்மா! :))

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
துளசி மேடம்,

தனிமடல் பார்க்கவும்ன்னு பின்னூட்டத்துல சொல்லி இருக்கேன்னு போன் பண்ணி சொல்லிடுங்க !

கோவி :- சிறுநகரம், கிராமம் மட்டும் இல்ல கோவி. சென்னைல கூட விடியற்காலை எழுந்து கோலம் போடறாங்க. இந்தியா போயிருந்த போது பார்த்தேன். (நான் கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்துல முந்திய இரவே கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க !)
//

மணி,
சென்னையில் அக்கம் பக்கம் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே செய்வார்கள். கிராமத்தில் இரவு கோலம் போடுவது போல் தெரியவில்லை. சிறு நகரங்களில் உண்டு, காலையில் பார்க்கும் வண்ணக் கோலங்களில் பெரும் கரும்புள்ளி இட்டது போல் மண்புழுக்கள் வீடுகட்டி இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திருமணங்கள் அதிகம் மார்கழியில் நடக்காததால்...
மேலும் பெண்கள் எல்லாம் ஆன்மீகத்தில் பிசியாக இருப்பதால்...//

இது சதிதான், மார்கழி மாதக் குளிரின் அருமை திருமணம் ஆனவர்களுக்கு மட்டும் தானே தெரியும் :)

//நகை வாங்கும் செலவு மிச்சம், கடை வெளியே கால் கடுக்க நிற்பது மிச்சம்-ன்னு எத்தனை கணவன்மார்கள் பூரிப்பில் இருக்காய்ங்க! என்னங்கண்ணே இப்பிடிச் சொல்லிட்டீங்க? :))//

நீங்கச் சொல்வதைப் பார்த்தால் நகைக்கடைகளெல்லாம் மார்கழியில் விடுமுறை விட்டது போல இருக்கே. உண்மையா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்