பொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்
இது ஒரு எதிர்வினைப்பதிவு கவனமாக படிக்கவும் :)
மக்கள் ஆட்சி கொள்கை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரைக் கொண்டு பிரதமர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுக்கும் முறை, எதிர்பாராவிதமாக கட்சியினாரால் முன்மொழியப் படுபவரே வேட்பாளராக இருப்பதால் மக்கள் ஆட்சி என்பது வெறும் பெயரளவிலே. காரணம் தலைவன்(வி) மற்றும் தலைவன்(வி) வழி நடத்தும் கட்சி மீது இருக்கும் கண்மூடித்தனமான, மூடத்தனமான ஈர்பினால், தொகுதியில் நல்லவர் ஒருவர் நின்றாலும் அவரை புறக்கணித்துவிட்டு தலைவன்(வி) 8 ஆவது தலைமுறை செழிக்க வேண்டும் என்றே வாக்கு அ(ளி)ழிக்கின்றனர்,
இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் தான் நாட்டில் மக்கள் ஆட்சியின் (அலங்)கோலம் நடந்தேறிவருகிறது.
மானமுள்ள சிலதொகுதி மக்கள் தான் கட்சிகளை விட தனிமனிதரின் செயல் கருதி அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கின்றனர். அதையும் விட்டுவைக்காமல் அந்த பெரும் புள்ளிகளை கட்சியின் பெயரால் வளைத்து போட்டு வெற்றிபெருகின்றனர், ஒரு கட்சியில் சேர்ந்தால் பெரிய அளவில் அறியப்படுவோம் என்ற ஆசையில் நல்லவர்கள் கூட கட்சிகளுக்குள் தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் நன்றாக நடத்துவதாக சொல்லும் கட்சிகள் வெற்றி பெற்ற பிறகு காலில் விழவேண்டும் என்று எதிர்பார்பதால் ( அம்மாவும்,வாண்டையாருக்கும் இப்படி ஒரு பிரச்சனை ஆச்சு ) விரைவிலேயே உறவுகள் புட்டுக் கொள்ளும், அது போன்ற வேளைகளில் பதவியை விலகச் சொல்லி கட்சிகள் வற்புறுத்தும், அப்பொழுது அவர் வகித்து கொண்டிருக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர் பதவியை விலகிவிடுவார், பிறகு தேர்தல் நடத்தாமல் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க மேற்கண்ட முறையை பரிந்துறைத்தால் தொகுதி மக்களுக்குத்தான் ஏமாற்றம்.
ஏனென்றால் கட்சிகள் காட்டும் உறுப்பினர் தொகுதி மக்களுக்கு விருப்பமானவர் இல்லை. பல ஊர்களில் வெளியூர் காரர்களை நிறுத்தினால் அவ்வூர் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், மேற்கண்ட சூழலில் வெளியூர் காரரை அதாவது அம்மக்களை அறியாதவர்களைக் கூட பணம் செல்வாக்கு காரணமாக கட்சிகள் தொகுதியை தன்வயப்படுத்திவிடும். இது மக்கள் ஆட்சியை அவமதிக்கும் செயல். இப்படி பட்ட சட்டம் நடை முறையில் இருந்தால் பெயருக்கு மக்களுக்கு அறிமுகமானவரை நிறுத்திவிட்டு பிறகு அவரை விலகச் சொல்லிவிட்டு கட்சிக்கு அடிமையான, செல்வாக்கு உள்ள ஒருவரை, விருப்பமானவரை அங்கே நிறுத்துவார்கள். நாகையில் ஒருமுறை தொகுதிக்காரரை நிறுத்தாமல் திருவாரூர்காரர் (தென்னவன்) நிறுத்தியதற்கு பொதுமக்கள் பாடம் கொடுத்தனர், அதுபோல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் செல்வாக்கு மிக்க சுயேட்சையைத் தான் தேர்ந்தெடுத்தார்கள்.
தொகுதியின் உறுப்பினர் அகால மரணம் அடைந்தாலோ, பதவி விலகினாலோ அவருக்கு அடுத்து மிகுந்த வாக்குகள் பெற்றவருக்கு அந்த பதவியைக் கொடுத்தால் வீனான தேர்தல் செலவுகள் குறையும், ஏனென்றால் சில வாக்குகள் வேறுபாட்டினால் தான் இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் அவர் ஏற்கனவே தொகுதிமக்கள் பலரால் வாக்களிக்கப்பட்டவரே. அதைவிடுத்து அந்த கட்சியினருக்கே அந்த தொகுதித்தலைவராக்கும் உரிமையைக் கொடுத்தால், தொகுதியையே கட்சிக்கு எழுதி வைத்தது போல் ஆகிவிடும். இரண்டாவது வந்து வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கே அவர் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் கொடுக்கலாம், இம்முறை மாநகராட்சி தேர்தலில் நடைமுறையில் இருப்பவை தான். ஸ்டாலினுக்கு பதிலாக கராத்தே தியாகராஜன் சென்னை மேயராக ஆனது இம்முறையில் தான். மறு தேர்த்தல் அங்கே தவிர்க்கப்பட்டது. இதிலும் கூட சிக்கல் உண்டு, இரண்டாவது வந்தவர் பதிவிக்கு ஆசைப்பட்டு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவரை தடயம் வைக்காமல் போட்டுத் தள்ளாமல் இருக்க வேண்டும். எல்லோருமே அப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் என்றே நினைப்போம்.
மக்கள் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே மக்கள் அவை மற்றும் சட்ட அவை உறுப்பினராக உரிமை இருக்கிறதே அன்றி, கட்சி கைகாட்டுபவர் அல்ல. அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது மக்கள் ஆட்சிக்கு எதிரானவை. ஏனென்றால் கட்சிகள் அனைத்துமே குறுநில மன்னர்களைப் போல் தான் நடந்து கொள்கிறார்கள், கட்சிகள் குடும்பச் சொத்தாகவே அறியப்படுகிறது.
முதல் பத்தியில் இருப்பது இராத கிருஷ்ணன் ஐயாவின் பதிவில் இருந்தவை, அவற்றை மருத்துவர், தமிழ் குடிதாங்கி (தமிழ்காவலராக சொல்லிக் கொள்ளும்) இராமதாஸ் ஐயா சொல்லி இருந்தால் நான் அதனை எதிர்க்கிறேன். இலங்கையில் அதே நடைமுறை இருப்பதாக சொல்கிறார்கள், எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. ஒரு தொகுதிக்கு யார் யாரெல்லாம் தலைவராக இருக்க முடியும் என்ற முடிவை மேற்கொள்ளும் உரிமை மக்களுக்கே, கட்சிகளுக்கு அல்ல.
11 கருத்துகள்:
கோவி..ஒன்றை கவனித்தீர்களா? நம் இருவர் பதிவுகள்..பல வேளைகளில் அம்பானை போல ஆகிறது..
//தொகுதியின் உறுப்பினர் அகால மரணம் அடைந்தாலோ, பதவி விலகினாலோ அவருக்கு அடுத்து மிகுந்த வாக்குகள் பெற்றவருக்கு அந்த பதவியைக் கொடுத்தால் வீனான தேர்தல் செலவுகள் குறையும், ஏனென்றால் சில வாக்குகள் வேறுபாட்டினால் தான் இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் அவர் ஏற்கனவே தொகுதிமக்கள் பலரால் வாக்களிக்கப்பட்டவரே. அதைவிடுத்து அந்த கட்சியினருக்கே அந்த தொகுதித்தலைவராக்கும் உரிமையைக் கொடுத்தால், தொகுதியையே கட்சிக்கு எழுதி வைத்தது போல் ஆகிவிடும். இரண்டாவது வந்து வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கே அவர் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் கொடுக்கலாம், //
இந்த இரண்டுமே நடைமுறைக்கு ஒத்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாத விடயம். ஒன்று இடைத்தேர்தல் என்றால் டீபால்டாவே இராணுவத்தை இறக்க வேண்டும். மற்றொன்று விரைவில் வரும் நாடளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தவேண்டும். கொஞ்ச நாள் பொருத்திருந்தா என்ன? சட்ட சபையில் போய் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று தான் பார்த்தயிற்றே.
கட்சியே ஒரு புது ஆளைப் போடுவதிலும், இரண்டாவது வந்தவரை முன்னிறுத்துவதிலும் அதிகமாய் குழப்பங்களுக்குத்தான் வாய்ப்பு. புது முறைகளும் புதுக் குழப்பங்களையும் விட இருக்கின்ற இந்த முறையில் உள்ள ஓட்டைகளை அடைக்கத்தான் வழி பார்க்க வேண்டும்.
//இப்படி பட்ட சட்டம் நடை முறையில் இருந்தால் பெயருக்கு மக்களுக்கு அறிமுகமானவரை நிறுத்திவிட்டு பிறகு அவரை விலகச் சொல்லிவிட்டு கட்சிக்கு அடிமையான, செல்வாக்கு உள்ள ஒருவரை, விருப்பமானவரை அங்கே நிறுத்துவார்கள்//
மிகச் சரியாக சொல்லி இருக்கிங்க. நாமதாஸ் அறிக்கை படிச்சதும் எனக்கும் இதான் தோன்றியது.
மேலும் இன்றைய கூட்டணி அரசியலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணிகள் இடைத் தேர்தலுக்குள் இடையில் இடம் மாறி இருக்கும். அப்போ இடைத் தேர்தலின் போது அந்த மக்களின் தேர்வு வேறு ஒருவராக இருக்கும்.
அதாவது ,
ஒரு கூட்டணியினர் சேர்ந்து ஒருவருக்கு வாக்களித்திருபபர்கள்.
இன்னொரு கூட்டணியினர் சேர்ந்து இன்னொருவருக்கு வாக்களித்திருபார்கள்.
மூன்றாவதா ஒரு அணியினர் வேறொருவரை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இடைத் தேர்தல் சமயத்தில் இந்தக் கூட்டணிகள் இடம் மாறி இருக்கலாம் ( இப்போது இருப்பது போல் ). அப்படின்னா அவர்களின் தேர்வும் மாறி இருக்கும் அல்லவா? தற்போதைய ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முன்னதாக வாக்களித்தவர்கள் இப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பார்கள். ராமதாஸ் சொல்வது போல் செய்தால் இவர்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்காது. எதிர்ப்பு என்பது அநியாயமாந்தாக தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. நியாயமானதாகவும் இருக்கலாம் அல்லவா?
ஹிஹி.. இதை புரிஞ்சவங்க கை தூக்குங்க.. :))
//இந்த இரண்டுமே நடைமுறைக்கு ஒத்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாத விடயம். ஒன்று இடைத்தேர்தல் என்றால் டீபால்டாவே இராணுவத்தை இறக்க வேண்டும். மற்றொன்று விரைவில் வரும் நாடளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தவேண்டும். கொஞ்ச நாள் பொருத்திருந்தா என்ன? சட்ட சபையில் போய் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று தான் பார்த்தயிற்றே.//
இடைத் தேர்தலே தேவை இல்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வரலாம்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டமியற்றல், சட்ட திருத்தங்கள் போன்றவற்றிற்கு உறுப்பினர் பலம் வேண்டுமே. ஒரு வோட்டில் ஆட்சியே கவிழ்ந்த சரித்திரம் எல்லாம் இருக்கு ஜோதி சார்.. :))
////இந்த இரண்டுமே நடைமுறைக்கு ஒத்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாத விடயம். ஒன்று இடைத்தேர்தல் என்றால் டீபால்டாவே இராணுவத்தை இறக்க வேண்டும். மற்றொன்று விரைவில் வரும் நாடளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தவேண்டும். கொஞ்ச நாள் பொருத்திருந்தா என்ன? சட்ட சபையில் போய் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று தான் பார்த்தயிற்றே.//
இடைத் தேர்தலே தேவை இல்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வரலாம்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டமியற்றல், சட்ட திருத்தங்கள் போன்றவற்றிற்கு உறுப்பினர் பலம் வேண்டுமே. ஒரு வோட்டில் ஆட்சியே கவிழ்ந்த சரித்திரம் எல்லாம் இருக்கு ஜோதி சார்.. :))//
இடைத் தேர்தலே தேவை இல்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வரலாம்.
நானும் இதே எண்ணத்தில் தான் சொல்கிறேன்
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டமியற்றல், சட்ட திருத்தங்கள் போன்றவற்றிற்கு உறுப்பினர் பலம் வேண்டுமே. ஒரு வோட்டில் ஆட்சியே கவிழ்ந்த சரித்திரம் எல்லாம் இருக்கு ஜோதி சார்.. :))
நீங்கள் சொல்வது ஆளுங்கட்சிக்கா அல்லது எதிர்க் கட்சிக்கா?
நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டத்திருத்தம், சட்டமியற்றல் இவற்றுக்கெல்லாம் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கணக்கா இல்லை, இருநூற்று முப்பத்தி நான்கும் சேர்த்து கணக்கா கொஞ்சம் விளக்கலாமே சஞ்சய்.
ஜோதி சார், நான் சொன்னதெல்லாம் நிச்சயம் ஆளும் கட்சிக்கு தான். ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் சம பலத்தில் இருந்தால் ஒரு ஓட்டும் முக்கியமே. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற விசயங்களில் குறிபிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இரண்டு தரப்புக்கும் தேவை.
அதவிட முக்கியமாக ராஜ்யசபா மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் அந்த குறிபிட்ட தொகுதிக்கான பிரதிநிதி இல்லாமல் போய்விடக் கூடும். மாவட்ட ஆட்சியர் இதற்கு வாக்களிக்க முடியாதே.
//ஜோதி சார், நான் சொன்னதெல்லாம் நிச்சயம் ஆளும் கட்சிக்கு தான். ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் சம பலத்தில் இருந்தால் ஒரு ஓட்டும் முக்கியமே. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற விசயங்களில் குறிபிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இரண்டு தரப்புக்கும் தேவை.
அதவிட முக்கியமாக ராஜ்யசபா மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் அந்த குறிபிட்ட தொகுதிக்கான பிரதிநிதி இல்லாமல் போய்விடக் கூடும். மாவட்ட ஆட்சியர் இதற்கு வாக்களிக்க முடியாதே.
//
இதிலிருந்து என்ன தெரிகிறது இடைத்தேர்தலில் இந்திய இராணுவம் மட்டுமே சிறப்பாக பங்காற்றமுடியும். ரா போன்ற இந்திய நிறுவனங்கள் பணப்புழக்கத்தைக் கட்டுப் படுத்தலாம். தேர்தல் ஆணையர் நியாயமான தேர்தல் நடத்த வழி வகுக்கலாம். இராணுவத்தை வைத்து சனநாயகத்தை சவமாகச் சுமந்து வந்து சட்டசபைக்கு அனுப்பலாம். வாழ்க சன நாயகம்! ஒழிக பண நாயகம்!!
///இரண்டாவது வந்தவர் பதிவிக்கு ஆசைப்பட்டு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவரை தடயம் வைக்காமல் போட்டுத் தள்ளாமல் இருக்க வேண்டும்.///
வாய்ப்பிருக்கிறதல்லவா?
கட்சியின் சார்பில்,அந்தக் கட்சியின் சின்னத்தில் வெற்றிபெறுவதால் அவர் கட்சியின் உறுப்பினர்.அவர் சுயேச்சையாக வெற்றிபெற்றால் வேறுவிசயம்.கூட்டணி,பாட்டணி, பட்டாணி பற்றி இங்கு கேள்வியே இல்லை.கூட்டணி பற்றி சட்டத்தில் விளக்கம் ஏதும் இல்லை.
அதுவும் ஒரு இடைத்தேர்தலுக்கு 200கோடி,300கோடி என்று செலவு செய்யும் நிலைமை உள்ள மோசமான மக்களாட்சி உள்ள நாட்டில்,ராமதாஸ் கூறியதில் தவறில்லை.
ராணுவம் வந்து தேர்தலை நடத்தும் அளவிற்கு உள்ள நாட்டில் தேர்தலே தேவையில்லை.
மக்களாட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திற்குத் தேர்தல் தேவையா?
இறுதியாக,காங்கிரஸ் போன்ற கயவர்களின் கைகளில் உள்ள நாட்டில்
வாழ்வதே கேவலம்.
//தொகுதியின் உறுப்பினர் அகால மரணம் அடைந்தாலோ, பதவி விலகினாலோ அவருக்கு அடுத்து மிகுந்த வாக்குகள் பெற்றவருக்கு அந்த பதவியைக் கொடுத்தால் வீனான தேர்தல் செலவுகள் குறையும், ஏனென்றால் சில வாக்குகள் வேறுபாட்டினால் தான் இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.//
தல தமிழக அரசியல் தெரியாம பேசுரிங்க! இப்படி ஒருமுறை வந்தால் இரண்டாவதாக வந்தவன், முதலாவதாக வந்தவனை போட்டு தள்ளிருவான்.
கருத்துரையிடுக