பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: காங்.ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2009, 11:26 [IST]
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
****
ஈழவிடுதலைக்கு விடுதலைப் புலிகளையே நாங்கள் நம்புகிறோம் என்கிற ஈழத்தமிழ் மக்களின் பெருமித்த குரல் நன்கு தெரிந்தே, தமிழின இன ஒழிப்பை விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் நடத்தும் இலங்கை அரசுக்கு காங்கிரஸின் முழு ஆதரவு கொடுத்து இருப்பதாக காங்கிரசின் வீரப்ப மொய்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
காங்கிரசின் தமிழர் ஆதரவு நிலை(?) தெரிந்தது தான், நடைபெறும் போரில் கொல்லப்படுபவர்களும், அகதி ஆக்கப்படுபவர்களும் அப்பாவித் தமிழர்களே. இலங்கையில் தமிழன் ஒழிப்பிற்கு ஆதரவு கரம் கொடுப்பது காங்கிரஸ்.
போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்துவோம் என்று வாய்ச்சொல் பேசிய திமுக, பாமக கட்சியினர் (இறந்தவர்களை எண்ணி ?) மெளனம் மேற்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு முறையே தமிழின தலைவர், தமிழின காவலர் என்று பெயராம்.
ஈழத் தமிழர்களையெல்லாம் அழித்து இலங்கையில் (மயான) அமைதி ஏற்பட முயற்சிக்கும் காங்கிரஸுக்கும், அதற்கு ஆதரவான திமுக, பாமக கட்சிகளுக்கும் தான் உண்மையில் உலக சமாதான விரும்பிகள், தமிழர் நலன் விரும்பிகள்.
வாழ்க நிரந்தர தமிழின காதலர்கள் மற்றும் அவர்கள் தம் காங்கிரஸ் உறவும் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
5 கருத்துகள்:
\\காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. \\
செய்திகளில் மட்டுமா ...
மாரிக்கும்
மனிதர்களைக் காணும்பொழுது எல்லாம்
மறந்தும் கூட
மனிதநேயம் வருவதில்லை.
ஓயாத அலையாய
ஓலமிட்டுக் கொண்டு இருப்பார்கள்
ஒப்படைக்க வேண்டும்
பிடித்தால்
பிரபாகரனை என்று
ஆட்சியைப் பிடிக்க
ஆடிக்கொண்டு இருப்பவர்களுக்கு
அழுகையும்
அவலங்களும் தெரியப் போவதில்லை
தலைவர்களே
தயவு செய்து உங்களை
தமிழர் என்று அழைத்துக் கொள்ள வேண்டாம்
அது
தமிழுக்கும்
தமிழருக்கும்
தலைகுனிவாகும்
மதமாற்றம் போல்
வேறு மொழிக்காவது மாறிக் கொள்ளுங்கள்
வேதனையும் தீருவதில்லை
கண்ணீரும் கரையப் போவதில்லை
இவர்களைக் காணும்பொழுது எல்லாம்
மனத்திற்கு தோன்றுவது
மனிதர்களா இல்லை
மிருங்களா என்று
/போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்துவோம் என்று வாய்ச்சொல் பேசிய திமுக, பாமக கட்சியினர் (இறந்தவர்களை எண்ணி ?) மெளனம் மேற்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு முறையே தமிழின தலைவர், தமிழின காவலர் என்று பெயராம்.
ஈழத் தமிழர்களையெல்லாம் அழித்து இலங்கையில் (மயான) அமைதி ஏற்பட முயற்சிக்கும் காங்கிரஸுக்கும், அதற்கு ஆதரவான திமுக, பாமக கட்சிகளுக்கும் தான் உண்மையில் உலக சமாதான விரும்பிகள், தமிழர் நலன் விரும்பிகள்.
வாழ்க நிரந்தர தமிழின காதலர்கள் மற்றும் அவர்கள் தம் காங்கிரஸ் உறவும் !/
இவர்களை
தமிழர்களை
அழைக்க
அருந்தவம்
அல்லவா
செய்து இருக்கவேண்டும்
இலங்கை அரசு தமிழ் மக்களை நாங்கள் கொல்லவில்லை, புலிகளை தான் அழிக்கிறோன் என்று சொல்லி வருகிறது. இந்திய அரசு அதில் தலையிட முடியாத பட்சத்தில் போருக்கு பின் தமிழர்களின் உயர்வுக்கு என்ன உத்திரவாதன் என்பதையாவது எழுத்து மூலம் வாங்க வேண்டும் என்பது என் கருத்து.
வன்முறையில் விருப்பமில்லாத போதும் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது!
இவரோட கட்டுப் பாட்டில் தமிழக காங்கிரஸ் கொஞ்சநாள் இருந்தது தமிழக காங்கிரசாருக்கு அவமானம் இல்லையா? லால் பகதூர் சாச்திரிக்குப் பிறகு காங்கிரசைச் சேர்ந்த, கொஞ்சம் மானமுள்ளவர் என்றால் அது வாழப்பாடியாரும் ரங்கராஜனும்தான்!
கருத்துரையிடுக