பின்பற்றுபவர்கள்

11 நவம்பர், 2008

இவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை ?

இஸ்லாம் மதத்தில் ஒரு வாசகம் 'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்' என்பதே, இதே போன்று இந்து மதத்தில் 'உங்களுக்கு படி அளப்பவன் ஆண்டவன் தான்' என்று சொல்லி அதற்காக ஒரு கதையையும் சொல்லுவார்கள்.

சிவனை சோதிக்க பார்வதி தேவியார் ஒரு எறும்பை சிறிய டப்பாவில் அடைத்துவிட்டு,

"எம்பெருமானே...நீங்கள் இன்று அனைத்து உயிர்களுக்கு படி அளந்துவீட்டீர்களா ?" என்று கேட்பார்.

நெற்றிக்கண் சிவக்க (பெண்கள் கேள்விகேட்டாலே கோவத்தில் ஆண்களுக்கு கண் சிவந்துவிடுமோ ?)

"அதெல்லன்ன உனக்கு சந்தேகம் ?"

"சந்தேகம் இருக்கிறது.....இன்று நீங்கள் ஒரு ஜீவனுக்கு உணவு அளிக்கவில்லை"

மீண்டும் கோபமாகி "எப்படிச் சொல்கிறாய் ?" என்று கேட்டாராம் சிவன்

உடனே பார்வதி தேவியார் மறைத்து வைத்திருந்த டப்பாவைக் காட்டி

"இதில் உள்ள எறும்புக்கு நீங்கள் உணவு அளிக்கவில்லை" என்றார்

"திறந்து பார்ர்ர்ர்......." என்று கர்ஜித்தாராம்

பார்வதி திறந்து பார்க்க...எறும்பு இன்னும் சாகாமல் இருந்தது வியப்பு...அதைவிட வியப்பு அந்த எறும்பு ஒரு அரிசியைக் கவ்விக் கொண்டு டப்பாவினுள் சுற்றிவரும்

தன்னால் தானே சோதனை கொடுக்க முடியும், அதற்கான உரிமையும் தனக்குத்தானே இருக்கிறது, எனக்கே சோதனையா (சூப்பர் ஈகோ) என்று சினம் பொங்க பார்வதி தேவியை அனல் கக்கும் பார்வையால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கக் கடவது என்று சாபம் இட்டாராம். பக்திக் கதைகள் என்ற பெயரில் சிவனை ஆணாதிக்கவாதியாக கேவலப்படுத்தியதைத் தவிர வேறெதையும் இறையடியார்கள் செய்ததில்லை என்பதற்கு இது ஒரு காட்டுதான். இது போன்ற கதைகளிளெல்லாம் சிவனுக்கு பொசுக் பொசுக் கென்று கோபம் வந்துவிடும் (ஒரு வார்த்தை அவரிடம் சொல்லிவிட்டு கதை எழுதப்படாதா ?) , அந்தம்மா வேறு வழி இல்லாமல் ஒரு முனிவருக்கு மகளாக பிறந்து சிவனை நினைத்து உருகி, தவறுக்கு வருந்தி தவம் செய்து மீண்டும் கைலாயத்தை அடையுமாம். இதுபோன்ற கதைகளில் பார்வதி தேவியை புத்தி கெட்ட பெண்ணாக அதாவது திரும்ப திரும்ப தவறு செய்பவளாகவே காட்டி, அதை ஞாயப்படுத்த 'பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழியையும் வைத்திருப்பார்கள். இன்று அதற்கு பின்னவினத்துவம் விளக்கம் கொடுக்கிறோம் காரணம் பெண்கள் அமைப்பு. ஆனால் பார்வதி 'பெண் புத்தி பின் புத்தி' என்று வருந்துபவளாக திருவிளையாடல் படத்தில் ஏபிநாகராஜன் தட்சனுக்கு மகளாக பிறந்த காட்சியில் வசனமாக வைத்திருக்கிறார்.

இதுபோன்ற திருவிளையாடல் கதைகளை கதாகலேட்சபமாக சொல்லப்படுவதும் அதை மண்டையை ஆட்டிக் கொண்டு கேட்பவர்களும், கீழே சொல்லப்படுபவைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்து இருக்கிறார்களா ?

******

அரிசியில் பெயர் இருப்பதோ, படி அளப்பதோ....நான் ஆப்ரிக்க நாட்டு மக்களை நினைத்துப் பார்க்கையில் இவையெல்லாம் வெறும் தத்துவ / நம்பிக்கை அளவில் தானே சொல்லப்படுகிறது என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஆப்பிரிக்க தேசத்தில் பிறந்தவர்கள் எவருமே உயிரினமே இல்லையா ? அவர்களுக்கு பசி எடுக்காதா ? அவர்களுக்கான அரிசிகள் எங்கே ? இவர்களுக்கு பெயர் தான் இல்லையா ? தங்கக் கோபுரங்கள் கட்டக் கொடுக்கப்படும் நிதி இவர்களுக்கு கொடுக்கலாகாதா ?

மனித நேயத்தை மறந்த ஆன்மிகம் எந்த வகையில் மனித குலத்துக்கு பயன் தரும் ?

பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான்.

மனிதனுக்கு தன்னிச்சையாக சிந்திக்கும் ஆற்றல் இருப்பதால் அவன் 'தன் இச்சை' படியே நடக்க ஆரம்பித்துவிட்டான் என்றே நினைக்கத் தோன்றுகிறது, அதில் அவன் செய்யும் தவறுகளின் / கொடுமைகளின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீளவே...அனைத்தும் ஆண்டவன் செயல் என்கிற சப்பைக் கட்டும், வறியவர்களின் வறுமைகள் அவர்கள் செய்த பாவம் என்றும் தாங்கள் மட்டுமே ஆண்டவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.

மதங்கள் போற்றுவது மனிதநேயம் என்றால் அது இல்லாத மதங்களினால் என்ன பயன் ?

எல்லோர் பெயரும் அவர் அவர்களின் அரிசியில் எழுதப்பட்டு இருப்பது உண்மை எனில் பசியால் வாடும் ஏழைகளின் அரிசிகளை மூட்டை மூட்டையாக லவட்டியவர்கள் யார் ? லவட்டியவர்கள் அனைவருமே பகுத்தறிவாளார்களா ? எல்லோருக்கும் அரிசியைப் பெற்றுத் தந்துவிட்டு, அதன் பிறகு 'அரிசியில் பெயர் எழுதி இருக்கிறது, ஆண்டவன் படி அளக்கிறான்' என்றெல்லாம் சொன்னால் அவை மிகப் பொருத்தமான சொல்லாக இருக்கும்.

44 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ஆப்பிரிக்க நாடுகளில் பிள்ளைச் செல்வம் மட்டும் அமோகமா அள்ளிக் கொடுத்துட்டான் அந்த ஆண்டவன்.

நவநீதன் சொன்னது…

// அதை ஞாயப்படுத்த 'பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழியையும் வைத்திருப்பார்கள். இன்று அதற்கு பின்னவினத்துவம் விளக்கம் கொடுக்கிறோம் காரணம் பெண்கள் அமைப்பு
//

இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள்???

நவநீதன் சொன்னது…

// ஆப்பிரிக்க நாடுகளில் பிள்ளைச் செல்வம் மட்டும் அமோகமா அள்ளிக் கொடுத்துட்டான் அந்த ஆண்டவன் //
மன்னிக்கவும் ...
அறியாமையை அள்ளி கொடுத்துட்டான்...
வறுமையை அள்ளி கொடுத்துட்டான்....
கஷ்டங்களை அள்ளி கொடுத்துட்டான்...
உணவு பற்றாக்குறையை அள்ளி கொடுத்திட்டான்...
இப்படி எத்தனையோ அள்ளி கொடுத்திட்டான்...

எல்லோரிடமும் கருணை உள்ள ஆண்டவனுக்கு கொஞ்சாமாவது இதயம் இருந்திருக்கலாம்....

Thiruthondan சொன்னது…

//பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான்.//

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அதோடு, ஆன்மீகம் மக்களின் நலன் பேணும் அரசியலாளர்களையும் அரசுகளையும் உருவாக்கப் பாடுபடவேண்டும்.

கிருஷ்ணா சொன்னது…

//மனித நேயத்தை மறந்த ஆன்மிகம் எந்த வகையில் மனித குலத்துக்கு பயன் தரும் ?

பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான்.

ஆன்மிகம் போற்றுவது மனிதநேயம் என்றால் அது இல்லாத ஆன்மிகத்தினால் என்ன பயன்?
//

அருமை.

தருமி சொன்னது…

என்ன வளம் இல்லை
அந்த திருநாட்டில் ...

இதெல்லாம் ஆண்டவனின் திருவிளையாடல் இல்லைங்க.
நம்ம மனுசப் பயக திருவிளையாடல்தாங்க.

King... சொன்னது…

\\
ஆன்மிகம் போற்றுவது மனிதநேயம் என்றால் அது இல்லாத ஆன்மிகத்தினால் என்ன பயன் ?
\\

"மதங்கள் போற்றுவது மனிதநேயம்" என்று சொல்லுங்கள்

அப்டியென்றால் மனிதநேயமில்லாமல் எது இருந்தென்ன...

கோவி.கண்ணன் சொன்னது…

//King... said...
\\
ஆன்மிகம் போற்றுவது மனிதநேயம் என்றால் அது இல்லாத ஆன்மிகத்தினால் என்ன பயன் ?
\\

"மதங்கள் போற்றுவது மனிதநேயம்" என்று சொல்லுங்கள்

அப்டியென்றால் மனிதநேயமில்லாமல் எது இருந்தென்ன...
//

King,

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, ஆன்மிகம் என்பதற்கு பதிலாக மதம் என்று இருக்கவேண்டும். மாற்றுகிறேன்.

மிக்க நன்றி !

dondu(#11168674346665545885) சொன்னது…

//பக்திக் கதைகள் என்ற பெயரில் சிவனை ஆணாதிக்கவாதியாக கேவலப்படுத்தியதைத் தவிர வேறெதையும் இறையடியார்கள் செய்ததில்லை என்பதற்கு இது ஒரு காட்டுதான்.//
அதை விட சிவனை முட்டாளாகவும் காட்டுவார்கள். உதாரணம் கூந்தலுக்கு இயற்கை மணம் பற்றிய விவகாரம். வேடிக்கை என்னவென்றால் பொருட்குற்றம் செய்தது நக்கீரனே. அது பற்றி நான் போட்ட இப்பதிவு பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// நவநீதன் said...


இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள்???
//

பின்னால் நடக்க இருப்பதை முன்பே பெண்கள் ஊகித்துவிடுவார்கள் என்று அந்த வரிகளுக்கு தற்போது விளக்கம் கொடுக்க படுகிறது.

உதாரணத்துக்கு

"என்னங்க தங்கம் விலை அடுத்தமாதம் ஏறிடும்...இப்ப கொஞ்சம் விலை குறைவாக இருக்கு...மூன்று பவுனாவது வாங்கிடலாம்...ஒத்த வலையலாக வாங்கிடலாம்"

****

"தலையால அடிச்சிக்கிடேன்...பவுனு விலை ஏறுதுன்னு...இன்னிக்கு கிராம் 1300 ரூபாய் விக்கிறான்..."

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
அதை விட சிவனை முட்டாளாகவும் காட்டுவார்கள். உதாரணம் கூந்தலுக்கு இயற்கை மணம் பற்றிய விவகாரம். வேடிக்கை என்னவென்றால் பொருட்குற்றம் செய்தது நக்கீரனே. அது பற்றி நான் போட்ட இப்பதிவு பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உங்களின் அந்த பதிவை படித்து இருக்கிறேன்.

திருமாலைக் கூட அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள், பூமியை ஒரு காலால் அளந்தாராம், வானத்தை ஒரு காலால் அளந்தாராம்.. எவ்வளவு நீளமான பாதமாக இருந்தாலும் அது தட்டை தானே .... பூமி உருண்டை அல்லவா ? கழுகுகால் மாதிரி மாற்றிக் கொண்டு வளைச்சு பிடித்து அளந்தாரான்னு தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
என்ன வளம் இல்லை
அந்த திருநாட்டில் ...

இதெல்லாம் ஆண்டவனின் திருவிளையாடல் இல்லைங்க.
நம்ம மனுசப் பயக திருவிளையாடல்தாங்க.
//

ஆனா.. மனுசப் பயக... எல்லாம் அவன் செயல்...அவனின்றி எலக்டாரான்.. நியூட்ரான்...புரோட்டான்...புரோட்டா ...சாப்பாத்தி கூட இயங்காதுன்னு சொல்றாங்களே

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Thiruthondan said...
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அதோடு, ஆன்மீகம் மக்களின் நலன் பேணும் அரசியலாளர்களையும் அரசுகளையும் உருவாக்கப் பாடுபடவேண்டும்.
//

மதங்கள் எல்லா நாடுகளிலுமே அரசியல் உருவாக்கதற்கும், பாதுகாப்பிற்கு நன்றாக பங்கு ஆற்றுகிறது. மதமும் அரசியலும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக மாறிவிட்டன.

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லோரிடமும் கருணை உள்ள ஆண்டவனுக்கு கொஞ்சாமாவது இதயம் இருந்திருக்கலாம்....

1:49 PM, November 11, 2008
//

இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. கோவிலில் கொள்ளை அடிப்பதையே தடுக்க முடியவில்லை. மற்றவர்கள் செய்யும் தவறை கடவுள் குற்றமாக பார்பதும் தவறுதான்.

நான் இறையை குறை சொல்ல இந்த கட்டுரையை எழுதவில்லை. இறை நம்பிக்கை உடையவர்கள் இறை புகழ்பாடுவதைத் தவிர்த்து வேறெதையும் செய்வதில்லை என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

தன்னிச்சையாக எதையுமே மனிதனால் செய்ய முடிகிறது, சோமாலியாவின் வறுமையை இவர்களால் விரட்டவே முடியாதா ? தங்கங்களை எல்லா மதத்தினருமே வழிபாட்டுத் தளங்களின் தரையில் கூட பயன்படுத்துகிறார்கள், இவர்களால் வறுமையைப் போக்க முயற்சிக்கவே முடியாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆப்பிரிக்க நாடுகளில் பிள்ளைச் செல்வம் மட்டும் அமோகமா அள்ளிக் கொடுத்துட்டான் அந்த ஆண்டவன்.
//

இந்தியா கூட அந்த நிலைமைக்கு சென்று இருக்கும், வெளிநாட்டு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் போக இன்னும் கூட அங்கே இயற்கை வளம் குன்றாமல் இருப்பதால் தப்பித்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

கிருஷ்ணா,

நன்றி !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆப்பிரிக்கா கண்டம் ஒன்றும் பாலைவனம் இல்லையே? ஏன் பலைவனத்திலேயே அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றனவே?

சரியாக பகிர்ந்து உண்ணத் தெரியாதது யாருடைய குற்றம்? அறிவைக் கொடுத்த இறைவனை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு , அதை நல்வழியில் பயன்படுத்தாதது அல்லது முயற்சிக்காதது யாருடைய குற்றம்?

அரிசி என்ற பதம் பயன்படுத்துவதைக் கண்டுமா இது இலக்கிய நடை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

உலக்கத்தார் அனைவரின் உணவு அரிசியா?

பெரியாரின் கருத்துக்களை மட்டும் அழகாக சிந்திக்கத் தெரிந்த மனது, மற்றவர்களின் கருத்துக்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை கொடுக்க மறுக்கின்றது?

அனைத்து விசயங்களையும் அறிந்த அறிவாளியாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆப்பிரிக்கா மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு யார் காரணம் என்பதைக் கூடவா உங்களால் ஆராய இயலவில்லை? அல்லது மனமில்லையா?

'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

இதற்கு என்ன அர்த்தம் உலக மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வராது என்பதை இறைவனின் கூற்றை இலக்கிய வடிவில் கூறப்பட்டதே ஆகும்.

உலகத்தில் கிடைக்கக்கூடிய உணவுகள் அனைத்தும் உலக மக்களுக்கு போதுமானதாக உள்ளதா? என்று ஆராய்ந்தால் மேற்கூறிய கூற்றிற்கு விடை கிடைக்கும்

பகிர்ந்து உண்ணும் பக்குவம் இல்லாவிட்டால், பாலைவனத்தில் கூட தரமான அரிசி நியாயமான விலையில் கிடைக்க இயலுமா? சிந்திப்பீர்?

கோவி.கண்ணன் சொன்னது…

// starjan said...
ஆப்பிரிக்கா கண்டம் ஒன்றும் பாலைவனம் இல்லையே? ஏன் பலைவனத்திலேயே அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றனவே? சரியாக பகிர்ந்து உண்ணத் தெரியாதது யாருடைய குற்றம்? அறிவைக் கொடுத்த இறைவனை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு , அதை நல்வழியில் பயன்படுத்தாதது அல்லது முயற்சிக்காதது யாருடைய குற்றம்? அனைத்து விசயங்களையும் அறிந்த அறிவாளியாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆப்பிரிக்கா மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு யார் காரணம் என்பதைக் கூடவா உங்களால் ஆராய இயலவில்லை? அல்லது மனமில்லையா?//

பாலைவனம் இல்லை தான், அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுத்தது யார் ? அரேபிக்கடல் முழுவதும் சல்லடை போட்டு மீன் வளத்தை சுரண்டிய அரபு மீனவர்கள் அடுத்து ஆப்ரிக்க கடல்பகுதிக்கு சென்று இருக்கிறார்களாம், இன்றைய தேதியில் ஆப்ரிக்க நிலங்களை வாங்கி அதில் விவாசாயம் செய்வதே அரபு நாடுகள் தான் என்ற தகவல்களும் பொய் அல்ல. யார் குற்றம் ? ஆப்பிரிக்க மக்களின் குற்றமா ? நான் கட்டுரையில் இறை சக்தியைக் குறைச் சொல்லவில்லை என்பதை சல்லடை போட்டு படித்துப் பாருங்கள் தெரியும்.

//பெரியாரின் கருத்துக்களை மட்டும் அழகாக சிந்திக்கத் தெரிந்த மனது, மற்றவர்களின் கருத்துக்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை கொடுக்க மறுக்கின்றது?//

மனித நேயம் அனைத்துமே பெரியார் கருத்தில் அடங்கி இருக்கிறது என்று ஒப்புக் கொள்வதற்கு நன்றி. ஆனால் நான் பெரியாரின் கருத்துக்களாக இதை எழுதவில்லை, எவராக இருந்தாலும் பசிக்கு உணவு கொடுத்துவிட்டு தான் மற்றதைப் பேசுவார்கள். இராமலிங்க வள்ளலாரின் சன்மார்க்க சபையில் இருக்கும் அனையாத அடுப்பிற்கும் அதுவே காரணம். பெரியார் மட்டுமல்ல ஆன்மிகப் பெரியார்களும் கூட இதைச் சொல்லி இருக்கிறார்கள், காது கொடுத்து கேட்பவர்கள் தான் குறைவு.
//

//உலகத்தில் கிடைக்கக்கூடிய உணவுகள் அனைத்தும் உலக மக்களுக்கு போதுமானதாக உள்ளதா? என்று ஆராய்ந்தால் மேற்கூறிய கூற்றிற்கு விடை கிடைக்கும்//

ஏன் போதுமானதாக இல்லை, அமெரிக்காவில் உபரியாக இருக்கும் கோதுமை விளைச்சல் ஆண்டுதோறும் கப்பல் கப்பலாக கோதுமைகள் கடலில் கொட்டப்படுகின்றன

//பகிர்ந்து உண்ணும் பக்குவம் இல்லாவிட்டால், பாலைவனத்தில் கூட தரமான அரிசி நியாயமான விலையில் கிடைக்க இயலுமா? சிந்திப்பீர்?//

அதைத்தான் சொல்கிறேன். இன்னார் இன்னார் இந்த மதம் என்று பார்க்காமல் ஏழை நாடுகளுக்கு யார் உதவி செய்கிறார்கள் ? நன்றாக சிந்தியுங்கள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நான் ஆப்ரிக்க மக்களை குறை சொல்ல வில்லை. அவர்களை இந்த நிலைக்கு ஆக்கிய எல்லோரையும் (அரபு நாடு உட்பட ) குரானை படித்தால்மட்டும் போதாது அதன்படி நடந்தால் எல்லார்க்கும் உணவு கிடைக்கும். இங்கு தவறு செய்வது மனிதர்கள் தானே தவிர மதம் அல்ல.

Unknown சொன்னது…

தானே தானே பே லிக்கா ஹை கானா வாலா கா நாம் என்பது ஒரு உருதுக் கவிதை. ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது அதன் பொருள்.

இறைவன் உலகில் வழங்கியுள்ள உணவுப் பொருட்கள் அல்லது ஓராண்டில் உணவுக்கென விளையும் பொருட்கள் முழு மனித சமுதாயத்துக்கும் போதாதவாறு குறைவாக விளைகிறதா? இல்லையே.
மனிதர்கள் வகுத்துள்ள பகுப்பு முறைகளில்தான் தவறு இருக்கிறது.
நாடு இனம் என்று பார்க்காமல் மனிதர்கள் என்று பார்க்கிற குணம் மனிதர்களுக்கு வர வேண்டும்.

உலகமே ஒரு கிராமமாய் அதில் வசிப்பவர்கள் அனைவருமே நம் சொந்தங்களாய் பார்க்கிற குணம் வர வேண்டும். வருமா? அது வந்தால் இந்தத் தொல்லைகள் யாவும் தீர்ந்து மனிதம் மலரும் செழிக்கும். யாரை குறை சொல்வது என்று நம்மையேதான் கேட்டுக் கொள்ள வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
நான் ஆப்ரிக்க மக்களை குறை சொல்ல வில்லை. அவர்களை இந்த நிலைக்கு ஆக்கிய எல்லோரையும் (அரபு நாடு உட்பட ) குரானை படித்தால்மட்டும் போதாது அதன்படி நடந்தால் எல்லார்க்கும் உணவு கிடைக்கும். இங்கு தவறு செய்வது மனிதர்கள் தானே தவிர மதம் அல்ல.

4:01 PM, November 11, 2008
//

ஐயா, நான் இறையை குறைச் சொல்லவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். எந்த மதங்களும் ஒழுங்கு கிடையாது, அடிப்படைவாதிகளையே திருத்த முடியாமல் தான் மதங்கள் திணறுகின்றன. காலப் போக்கில் இதுபோன்ற காரணங்களினாலேயே மதங்களை மனிதர்கள் துறப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உலகமே ஒரு கிராமமாய் அதில் வசிப்பவர்கள் அனைவருமே நம் சொந்தங்களாய் பார்க்கிற குணம் வர வேண்டும். வருமா? அது வந்தால் இந்தத் தொல்லைகள் யாவும் தீர்ந்து மனிதம் மலரும் செழிக்கும். யாரை குறை சொல்வது என்று நம்மையேதான் கேட்டுக் கொள்ள வேண்டும்.//

சுல்தான் ஐயா,

நீங்களாவது சரியாக புரிந்து கொண்டீர்கள். நானும் அந்த வாசகத்தைக் குறைச் சொல்லவில்லை. அதை நடைமுறை படுத்தவேண்டியவர்கள் அதை வெறும் புனித சொல்லாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதே ஆதங்கம்.

நையாண்டி நைனா சொன்னது…

நான் சாப்பிடும் போது ஒரு அரிசியை எடுத்து நுண்நோக்கியில் பார்த்தேன், அதில் என் பெயரும் இல்லை... ஒரு வேளை அது அவர்களுடையாதாய் இருக்குமோ....

***************************
ஐயா.. ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... இந்த உலகின் இறுதி நாள் வரையிலும் ஏதாவது ஒரு வகையில் ஏற்ற தாழ்வு இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் உணவு பஞ்சதிற்கு காரணம் பல பல...
ஒரு வேளை நாமே சில பண்டங்களையும், பொருள்களையும் அனுப்பினாலும் அது அவர்களை சரி வர சென்று அடைய வேண்டும். இருப்பினும் நாம் நம்மால் முடிந்ததை செய்யலாம்..
***************************
நாட்டில் நோயாளி இருந்தால் தான் மருத்துவர்கள் கல்லா நிறையும்.
நாட்டில் குழப்பம் இருந்தால் தான் அரசியல்வாதிகளின் பருப்பு வேகும்.
நாட்டில் பாவ காரியங்கள் இருந்தால் தான் ஆன்மீகத்தை வைத்து வயிரு வளப்பவர்கள் இருக்க முடியும்.

இதற்கு நம்மிடையே ஒரு குட்டி கதையும் சொல்வார்கள்.
ஒரு ஏழைக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். ஒருவளை விவசாயிக்கும், மற்றொருவளை மண்பாண்டம் செய்யும் ஒருவருக்கும் திருமணம் செய்து கொடுப்பார். ஒரு மகள் மழை வேண்டும் என்று வேண்ட சொல்வாள் இன்னொறுவள் மழை வேண்டாம் என்று வேண்ட சொல்வாள். அவர் யாருக்காக வேண்ட முடியும்.

வெண்பூ சொன்னது…

நாலு கழிச்சி அவசரமா ரீடர்ல இருக்குற எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு இருக்கிறதால இங்க ஒரு பிரசன்ட் சார் மட்டும் போட்டுக்கிறேன்.. :)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

உலகத்திலிருந்து, நாம பிறந்த ஊர் வரைக்கும் யானைக்கால் நோயால் அவதிப்படும் பொது, நீங்கள் அவர்களுடைய பெயர் அரிசியில் இல்லை என்று கேட்டால் எப்படி?

கூழ் கூட இல்லாததுதான் கொடுமை!

இந்தியா ஒளிர்கிறது!("கேப்பைல நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு புத்தி எங்க போச்சு" அப்படின்னு எங்க ஊருல கேப்பாங்க) ஒரு நேரத்தில், தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் தீப்பிடித்து எரிந்தது நினைவிருக்கும். அதான்னு நினைக்கிறேன். சும்மா போட மாட்டாரு அத்வானி!

இறைவன் இருந்த காலங்களில்(இப்போதும் இருக்கிறார் என்று நம்புவபர்களுக்கு, என்றும் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்கிறேன்) அவரே பிட்டுக்கு மண்சுமந்த கதையும் உண்டு.

அப்ப கேழ்வரகில்(அதுல தானே பிட்டு செய்றாங்க) பெயர் பொறிக்கப் பட்டிருந்திருக்கலாம். அது அவர்கள் வாழும் பகுதில் விளையாமல் இருந்திருக்கலாம்.

முடிவே தெரியாத குழப்பமாத்தான் இருக்கு.

கொடுமையிலே மிகப்பெரிய கொடுமை, இளமையில் வறுமை!

நான் பள்ளியில் படிக்கும் போது சத்துணவில் வாரம் ஒருநாள் கோதுமை போடுவது வழக்கம். நம்ம பிள்ளைங்களுக்கு அந்த கோதுமை பிடிக்காது. மிஞ்சிய கோதுமையை நிலத்தை வெட்டிக் கொண்டு புதைப்பதைப் பார்த்த என மனம் அந்த ஆறு வயதிலும் வேதனைப் பட்டது, இன்னும் நினைவிருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

கோவி, அவ்வளவு தூரம் போவானேன். நம்ம ஊர் விஷேச நடப்பதென்ன. 21 வகை உணவுப் பதார்த்தங்களில் பாதி கூட சரியாகச் சாபிடாமல் இலையில் வீனாககப் படுகிறது. அதே சமயம் மண்டபத்தின் வெளியே உணவுக்காகத் தவிக்கும் ஒரு கூட்டம்.

உலகில் விளையும் பொருட்கள் எல்லாத்தரப்பினருக்கும் பொதுவானது எனினும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என வலுத்தவன் அதிகம் பெருகிறான், இளைத்தவன் ஏங்குகிறான்.

இந்த ஏற்றத் தாழ்வைக் கடவுள் வந்து சரி செய்வார் என்பதெல்லாம் சும்மா. எந்த மதமும் அதைப்போதிப்பதில்லை. மத நூல்களில் உள்ளது. வழக்கம் போல அதை வசதியாக மறந்துவிட்டு நமக்குச் சுலபமானவைகளை கடைபிடிக்கிறோம். அவ்வளவே.

மனிதாபிமானம் இருப்பது உண்மையானால் அனாதை விடுதிகள் தோன்றக் காரணம்?

KARMA சொன்னது…

இவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை?

இவர்கள் ஏன் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர்?

இவர்களுக்கு ஏன் ஒண்டுவதற்கு ஒரு நிலம் (நாடு) இல்லை?

இவர்களுக்கு ஏன் பாலின அடையாளம் இல்லை அல்லது மறுக்கப்படுகிறது?

இதை ஏன் விட்டுவைப்பானே.... , Global resession அல்லது warming, un-employment, Yellow/Green card problems, etc...

சரி.....நான் ஒரு தெரு நாயாகவோ, பசுபிக் சமுத்திரத்தின் இருண்ட ஆழங்களுக்குள் அலைவுறும் ஏதோ ஒரு உயிராகவோ இருந்திருந்தால் எனது கேள்விகள் வேறு என்னவெல்லாமாக இருந்திருக்கும்?

ஆமாம்.....இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம்.....இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்?//

கர்மா சார்,

ஆன்மிகத்துக்கும் எதற்கெல்லாம் சம்மந்தம் ?

மதத்துக்கும் எதற்கெல்லாம் சம்மந்தம் ?

சொல்லுங்க... உங்களுக்கு சீடர்கள் கிடைப்பார்கள்.

S.Lankeswaran சொன்னது…

நெஞ்சம் பதறுகின்றது. ம் நல்ல வேலை எங்கள் வன்னிப் பகுதியில் இந்த அளவிற்கு இன்னும் பட்டினிக் கொடுமையை யுத்த சூழல் ஏற்படுத்த வில்லை.

KARMA சொன்னது…

//ஆன்மிகத்துக்கும் எதற்கெல்லாம் சம்மந்தம் ? //

"உங்களுக்கும்-உங்களுக்கும்" உள்ள சம்மந்தம் மட்டுமே ஆன்மிகம்.

அப்போ நமிதா ?
உள்ளம் அப்படியே உறைந்து விடுகிறதல்லவா உள்ளுக்குள்..!!! என்ன பரவசம் :))

//மதத்துக்கும் எதற்கெல்லாம் சம்மந்தம் ? //

அது மதம் பிடித்தவர்களுக்கு மட்டும்....
pls check - மதம்

//சொல்லுங்க... உங்களுக்கு சீடர்கள் கிடைப்பார்கள்.//

கோவியானந்தா- வாக இருப்பதன் சிரமத்தை அவர் மட்டுமே அறிவார். சீடர்கள் வேண்டாம், முறுக்கு, சீடை கிடைத்தால் போதும் :))

KARMA சொன்னது…

நீங்கள் சொல்ல எத்தணிக்கும் கருத்தும் அதன் வேகமும் புரிகிறது.

மதமோ, அதன் புத்தகங்கங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அதனால் அதற்கு எந்த இழப்புமில்லை. எனக்குமில்லை அல்லது இப்போதைக்கு தெரியவில்லை.

ஆன்மிகமோ, ஆண்டவனோ உண்மையெனில், இவ்வுலகில் நாம் காணும் துன்பங்களோ, துயரங்களோ இருகக்கூடாது என்பதைப்போன்றதொருதொனி உங்கள் பதிவில் இருப்பதாய் தோன்றுகிறது. அந்த நிலைப்பாடு தவறு என்பது என்கருத்து.

மற்றபடி ஆன்மிகவாதிகள் என்று சொல்லித்திரிபவர்கள் துயர்படும் உயிர்களுக்காக இரங்குதலும், உதவுதலும் வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு. ஆன்மிகவாதிகளுக்கு (real ones) "எல்லா உயிர்களும் தம் உயிர்தாமே" என்பது அடிப்படை அறிதல் என்பதால் இதை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியமிருப்பதில்லை.

இந்த பின்புலத்திலிருந்து பார்க்கும்போது உங்களுடைய பதிவு குழப்பத்துடன் தெளிவில்லாதது போல் தோன்றுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சிவனோ..திருமாலோ..அவர்களைப்பற்றயதெல்லாம்..கதை..என்கிறபோது...அவற்றை எழுதிய ஆண்கள்..ஆணாதிக்கம் பற்றி தானே எழுதியிருக்கமுடியும்.அடுப்பூதும் பெண்ணுக்கு கல்வி ஏன்?என்ற நிலைதானே..சென்ற நூற்றாண்டின் பாதி வரை இருந்தது...அதை மீறி சிலர் வந்தனர்..அதற்கு காரணம்..அவர்களின் தந்தைகுலம் ஆணாதிக்கவாதியாக இல்லாமல் இருந்ததுதான்..சமிப காலமாக..நிலமை மாறிவருகிறது...பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்து வருகிறது.

பிறர் முன் தன் மனைவி புத்திசாலியாக பேசுவதைக்கூட விரும்பாத மக்கள் இருக்கத் தானே இன்றும் இருக்கிறார்கள்.

சரி அடுத்த பகுதிக்கு வருவோம்..

இயற்கை..மனிதனுக்கு தன் செல்வங்களை வாரி வழங்கி உள்ளது..சரியானபடி பகிர்ந்துண்ணாமையும்...மண் ஆசை..பெண்ணாசை,பதவிப்பித்து,பொன்னாசை ஆகியவை தீரும் வரையில்..பல சோமாலியாக்கள்..உருவாகத்தான்..உருவாகும்..

இதற்கு..இல்லாத ஆண்டவனைக் குறை கூறுதலில் என்ன பயன்?

குடுகுடுப்பை சொன்னது…

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

2000 ஆண்டுக்கு முன் ஒரு தமிழன் சொன்னது.

suvanappiriyan சொன்னது…

'காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம்' -குர்ஆன் 3:40

ஏழையும் பணக்காரனும் இருந்தால்தான் இந்த உலகமும் இயங்க முடியும்.

'ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக'- குர்ஆன் 2:155

எனவே வறுமையைக் கண்டு அஞ்சாது பொறுமையுடன் சிந்திக்க வேண்டும்.

'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' -குர்ஆன் 2:271

ஏழைகளுக்கு உதவுவது ஒருவனுடைய முந்தய தவறுகளை அழிக்கும் என்று இஸ்லாம் தர்மத்தை வலியுறுத்துகிறது.

'இறைவன் வட்டியை அழிக்கிறான்: தர்மங்களை வளர்க்கிறான்'-குர்ஆன் 2:276

'வட்டியை உண்போர் மறுமை நாளில் சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவர்' -குர்ஆன் 2:275

இன்று ஆப்ரிக்கா இப்படி அல்லலுறுவதற்கு முழு காரணமும் அரசு உலக வங்கியிடம் வாங்கிய வட்டியுடன் கூடிய கடனே என்பதை யாரும் மறுக்க முடியுமா? எனவே இங்கு அரசைத்தான் குற்றம் சுமத்த வேண்டுமேயொழிய கடவுளை அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப்பிரியன் said...
//

சுவனபிரியன் எல்லாவற்றிற்கும் மதப் பிரச்சாரம் போல் குரான் வசனங்களை எடுத்துவருகீறீர்கள். நான் இங்கு குரான் வரிகளையோ, அதில் உள்ள செய்யுளையோ குறிப்பிடவில்லை, அரிசியில் பெயர் எழுதி இருப்பதாக சொல்லுவது அரபு கவிதை, குரான் அல்ல, மேலும் இந்து மத நம்பிக்கையாக 'படி அளப்பதையும்' சேர்த்து தான் எழுதி இருக்கிறேன். உங்கள் புரிதல் இஸ்லாமை குறை சொல்வதாக புரியப்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.

பசியோடு கண்முன் மயங்கி விழுபவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி பசியாற்றிவிட்டு அதன் பிறகு அவ்வாறு செய்வது குரானில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள், முதலில் மனித நேயம். ஏனென்றால் மனிதன் மதம் இதில் முதலில் வந்தது மனிதன் தான். மனிதன் இருப்பதால் பிறகு மதம் வந்தது

இங்கு நான் இறை பற்றி குறை சொல்லவில்லை என்று நான்கு மறுமொழிகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

:(

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை 3:41 AM, November 12, 2008
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

2000 ஆண்டுக்கு முன் ஒரு தமிழன் சொன்னது.
//

குடுகுடுப்பை,

அது வாரிசுகளுக்கு என்று தவறாக புரிந்து கொண்டு, தானும் திங்காமல் அடுத்தவனையும் திங்கவிடாமல் அடுத்த ஏழு தலைமுறை வாரிசுகளுக்கு எழுதி வச்சிட்டு கண்ணை மூடிடுறானுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//சரி அடுத்த பகுதிக்கு வருவோம்..

இயற்கை..மனிதனுக்கு தன் செல்வங்களை வாரி வழங்கி உள்ளது..சரியானபடி பகிர்ந்துண்ணாமையும்...மண் ஆசை..பெண்ணாசை,பதவிப்பித்து,பொன்னாசை ஆகியவை தீரும் வரையில்..பல சோமாலியாக்கள்..உருவாகத்தான்..உருவாகும்..//

இத்தனைக்கும் ஐநா தலைமையகம் ஆபிரிக்கா கண்டத்தில் தான் இருக்கிறது

//இதற்கு..இல்லாத ஆண்டவனைக் குறை கூறுதலில் என்ன பயன்?//

நான் அவ்வாறு எங்கு சொல்லி இருக்கிறேன். இறைவன் கட்டளை என்றாலும் செயல்படுத்தும் கைகள் மனிதனுடையது அல்லவா ? செயல்படாத கைகளைத்தான் சொன்னேன். ஆண்டவன் குறித்து வீன் பெருமை பேசுவதைவிட அதைச் செயலாக்கினாலே அவை எல்லோராலும் உணர்ந்து கொள்ளப்பட்டு போற்றப்படும் என்பதாகத் தானே எழுதி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// KARMA said...


மதமோ, அதன் புத்தகங்கங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அதனால் அதற்கு எந்த இழப்புமில்லை. எனக்குமில்லை அல்லது இப்போதைக்கு தெரியவில்லை.//

பரவாயில்லை நீங்கள் ஆதரவு கொடுங்கள், மூட நம்பிக்கைகள் நீர்த்துப் போகாமல் இருக்கு பலரது ஆதரவும் தேவைப்படும் :) தமாஷ்!

//ஆன்மிகமோ, ஆண்டவனோ உண்மையெனில், இவ்வுலகில் நாம் காணும் துன்பங்களோ, துயரங்களோ இருகக்கூடாது என்பதைப்போன்றதொருதொனி உங்கள் பதிவில் இருப்பதாய் தோன்றுகிறது. அந்த நிலைப்பாடு தவறு என்பது என்கருத்து.//

ஆண்டவன் உண்மையா பொய்யா என்ற கருத்துக்கு நான் எப்போதும் செல்வது இல்லை. உண்மை என்றாலும் நிரூபணம் தேவைப்படும், இருந்தாலும் அதை என்னால் கொடுக்க முடியாது :). பொய் என்று சொல்வது ஒரு மறுப்பு மட்டுமே அதையும் நிரூபணம் இல்லாமல் என்னால் பொய் என்று சொல்ல முடியாது.

ஆனால் ஆன்மீகம் - இதில் 90 விழுக்காடு போலித் தனங்களே மிகுதியாக இருக்கின்றன. யார் கேட்டது குடம் குடமாக பாலைக் கொண்டு வந்து கற்சிலைகளின் மீது ஊற்றி சிலையை குளிரவைக்கச் சொல்லி. ஆன்மிகத்தை பற்றி ரொம்ப குடைந்தால் தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாகச் சொல்லி அதை நம்புவதாக முடித்துக் கொள்வார்கள். மற்றபடி பாலு ஊற்றுவது கூழ் ஊற்றுவது எல்லாம் அதன் தொடர்பிலான சடங்கு என்று கூறிவிடுவார்கள். 10 விழுக்காடு உண்மையான ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு விளம்பரமும் தேவை இல்லை.


//மற்றபடி ஆன்மிகவாதிகள் என்று சொல்லித்திரிபவர்கள் துயர்படும் உயிர்களுக்காக இரங்குதலும், உதவுதலும் வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு. ஆன்மிகவாதிகளுக்கு (real ones) "எல்லா உயிர்களும் தம் உயிர்தாமே" என்பது அடிப்படை அறிதல் என்பதால் இதை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியமிருப்பதில்லை.
//
ஒப்புக் கொள்கிறேன். தாங்கள் ஆன்மிகவாதிகள் என்று சொல்லாமல் செயலில் இருப்பவர்களுக்கு எதுவுமே சொல்லத் தேவை இல்லை

//இந்த பின்புலத்திலிருந்து பார்க்கும்போது உங்களுடைய பதிவு குழப்பத்துடன் தெளிவில்லாதது போல் தோன்றுகிறது.//

குழப்பத்தினால் தான் கேள்வி பிறக்கும் என்பது தெளிவுதானே ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
நான் சாப்பிடும் போது ஒரு அரிசியை எடுத்து நுண்நோக்கியில் பார்த்தேன், அதில் என் பெயரும் இல்லை... ஒரு வேளை அது அவர்களுடையாதாய் இருக்குமோ....//

நைனா,

எதாவது ஒரு தேவபாஷையில் எழுதி இருக்கும், உங்களுக்கு அந்த பாஷை தெரிந்திருந்தால் படித்திருக்க முடியும்.

***************************
ஐயா.. ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... இந்த உலகின் இறுதி நாள் வரையிலும் ஏதாவது ஒரு வகையில் ஏற்ற தாழ்வு இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் உணவு பஞ்சதிற்கு காரணம் பல பல...
ஒரு வேளை நாமே சில பண்டங்களையும், பொருள்களையும் அனுப்பினாலும் அது அவர்களை சரி வர சென்று அடைய வேண்டும். இருப்பினும் நாம் நம்மால் முடிந்ததை செய்யலாம்..
***************************

சரி தான்

//நாட்டில் நோயாளி இருந்தால் தான் மருத்துவர்கள் கல்லா நிறையும்.
நாட்டில் குழப்பம் இருந்தால் தான் அரசியல்வாதிகளின் பருப்பு வேகும்.//

அரசியல்வாதிகளும் பருப்பு சாதம் தான் சாப்பிடுறாங்களா ? நம்ம முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஐயா கூட சிக்கன் தான் விரும்பி சாப்பிடுவதாகச் சொல்லுவாங்களே

//நாட்டில் பாவ காரியங்கள் இருந்தால் தான் ஆன்மீகத்தை வைத்து வயிரு வளப்பவர்கள் இருக்க முடியும்.//

குற்றம் இருந்தால் போலிசும், பாவச் செயல்களினால் (அதை வைத்து) ஆன்மிகவாதிகள் தொப்பையைத் தான் வளர்க்கிறார்கள். தொப்பையை வளர்ப்பது தானே வயிறு வளர்ப்பது என்கிறீர்கள் ?
:))))))

//இதற்கு நம்மிடையே ஒரு குட்டி கதையும் சொல்வார்கள்.
ஒரு ஏழைக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். ஒருவளை விவசாயிக்கும், மற்றொருவளை மண்பாண்டம் செய்யும் ஒருவருக்கும் திருமணம் செய்து கொடுப்பார். ஒரு மகள் மழை வேண்டும் என்று வேண்ட சொல்வாள் இன்னொறுவள் மழை வேண்டாம் என்று வேண்ட சொல்வாள். அவர் யாருக்காக வேண்ட முடியும்.

6:15 PM, November 11, 2008
//

நல்ல கதைதான். மழைகாலத்தில் பானை செய்யாமல் இருக்கலாம், வெயில்காலத்தில் பயிர்செய்யாமல் இருக்கலாம். பருவம் தப்பாமல் மழை பெய்தால் போதும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
உலகத்திலிருந்து, நாம பிறந்த ஊர் வரைக்கும் யானைக்கால் நோயால் அவதிப்படும் பொது, நீங்கள் அவர்களுடைய பெயர் அரிசியில் இல்லை என்று கேட்டால் எப்படி?//

பாரதி,

நம்ம ஊரில் என்புதோல் போர்த்திய உடம்பாக மனிதர்களைப் பார்க்க முடியாது. நோய்களைவிட பசிப்பினி கொடுமையானது.

//கூழ் கூட இல்லாததுதான் கொடுமை!// அதே அதே

//இந்தியா ஒளிர்கிறது!("கேப்பைல நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு புத்தி எங்க போச்சு" அப்படின்னு எங்க ஊருல கேப்பாங்க) ஒரு நேரத்தில், தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் தீப்பிடித்து எரிந்தது நினைவிருக்கும். அதான்னு நினைக்கிறேன். சும்மா போட மாட்டாரு அத்வானி!//

நிலவிற்கு அனுப்பிய சந்திராயனில் பெரிய டார்ச் லைட் இருந்து இந்தியாவின் மீது அடித்தால் பல சொட்டை தலை அரசியல்வாதிகளின் தலையில் பட்டு கண்டிப்பாக இந்தியா ஒளிரும்.

//கொடுமையிலே மிகப்பெரிய கொடுமை, இளமையில் வறுமை!

நான் பள்ளியில் படிக்கும் போது சத்துணவில் வாரம் ஒருநாள் கோதுமை போடுவது வழக்கம். நம்ம பிள்ளைங்களுக்கு அந்த கோதுமை பிடிக்காது. மிஞ்சிய கோதுமையை நிலத்தை வெட்டிக் கொண்டு புதைப்பதைப் பார்த்த என மனம் அந்த ஆறு வயதிலும் வேதனைப் பட்டது, இன்னும் நினைவிருக்கிறது.//

:(

தருமி சொன்னது…

//அரிசியில் பெயர் எழுதி இருப்பதாக சொல்லுவது அரபு கவிதை, குரான் அல்ல//

புதிய செய்தி. நான் அதைக் குரான் வாசகம் என்றுதான் நினைத்து வந்தேன்.

இந்த வரிகளின் பொருளாக நான் நினைப்பது: நமது ஊரில் சொல்லும் 'அவனின்றி அணுவும் அசையாது' என்பது போன்றது.

எல்லாமே முன்பே கடவுளால் முடிவு செய்யப்பட்ட - predeterminism என்ற கோட்பாடு. fatalism என்றும் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

இந்த வரிகளின் பொருளாக நான் நினைப்பது: நமது ஊரில் சொல்லும் 'அவனின்றி அணுவும் அசையாது' என்பது போன்றது. //

தருமி ஐயா, நமீதா இடுப்பைக் கூட அவன் தான் ஆட்டுகிறான் என்று நம்புபவர்களும் உண்டு. அவனின்றி அணுவும் அசையாது என்பது எவ்வளவு அபத்தமான வரிகளாக இருக்கிறது என்பதற்காகச் சொன்னேன்.

:)

நையாண்டி நைனா சொன்னது…

/*கோவி.கண்ணன் said...
தருமி ஐயா, நமீதா இடுப்பைக் கூட அவன் தான் ஆட்டுகிறான் என்று நம்புபவர்களும் உண்டு.
*/

நமீதா இருக்கிற சைய்சூக்கு நீங்களோ , நானோ இல்லை நமீதாவோ கூட ஆட்ட முடியுமா?

ஆமா..... நமீதா கிட்டே இடுப்பு எங்கே இருக்கு?

Arizona penn சொன்னது…

தங்க கோபுரம் கட்டுவதை தவிர்த்து ஆப்பிரிக்க மக்களின் விழிப்புணர்வுக்கும், தன்னுயர்வுக்கும் உதவி செய்தால் அப்புறம் வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் ஆயுதங்கள் விலை போகாமல் போய்விடுமே !!!! ஆப்பிரிக்க துயருக்கும், இலங்கை தமிழர் துயருக்கும், காஷ்மீர் துயருக்கும் முக்கிய காரணம் வளர்ந்த நாடுகளின் ஆயுத சந்தையாக அவை விளங்குவதுதான்.....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்