பின்பற்றுபவர்கள்

18 ஜனவரி, 2008

ராமவரம் தோட்டத்தில் சீதையின் காலடி ! மற்றும் சில கேள்விகள் !

தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக, 12 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் காலடி ராமவரம் தோட்டத்தில் பட்டு இருக்கிறதாம். அதனால் ராமவரம் தோட்டத்தில் உள்ள கட்டிடங்களெல்லாம் புதுப் பொழிவு பெற்றதாக செய்திகள் அறிவிக்கின்றன.

எம்ஜிஆர் இறந்த பிறகு மறக்காமல் தேர்தல் கூட்டத்துக்கு கூட்டம் எம்ஜிஆருக்கு நாமம் போட்டவர் ( வாழ்க புரட்சித்தலைவர் நாமம் !) , எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்திற்கு கொடுத்த மதிப்பு அளவுக்கு கூட எம்ஜிஆர் மீதோ, எம்ஜிஆர் கொள்ளைகள் மீதோ எந்த பற்றுதலும் வைக்கவில்லை என்றும், அமைச்சர்கள் 'எம்ஜிஆர்' பெயரைச் சொல்வதைக் கூட ஜெ விரும்பவில்லை என்றும் பத்திரிக்கை செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதெல்லாம் பொய், பித்தலாட்டாம் என்று காட்ட எம்ஜிஆர் மீது பாசம் மழை பொழிந்து நான் தான் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு, மற்றவை எல்லாம் புற்றீசல் என்று, போயாஸ் தோட்டம் சென்று முழங்கி இருக்கிறார் ஜெ.

எம்ஜிஆர் பேரைச் சொன்னால் பாமரர் ஓட்டு நிச்சயம் என்று உணர்ந்த விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றும், எம்ஜிஆர் தேர்தலுக்கு பயன்படுத்திய வேனை வாங்கி தானும் பயன்படுத்தி எம்ஜிஆரின் திடீர் வாரிசாக தன்னை முன்னிறுத்த முயன்றார். அதில் கனிசமான அளவு ஓட்டுக்களைப் பெற்றார். அதை மதுரை இடைத்தேர்தல் ஓரளவுக்கு காட்டியது. இதே பாணியில் சரத்குமாரும் எம்ஜிஆர் வாரிசு ஆகிவிட, உடனே ஜெ வை டென்சன் ஆகிவிட, "என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா ?" என்று கேட்டு நம்ப முடியாமல் ஒருவாரம் ஒப்பாறி வைக்கும் எம்ஜிஆர் ரசிகர்களின் ஓட்டு எங்கே திசைமாறிவிடப் போகிறது என்ற கவலையில் தான் ஜெ ராமவரம் தோட்டத்துக்கு வரம் கொடுத்திருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

அறிஞர் அண்ணா ஆண்டதோ இரண்டு ஆண்டுக்கும் குறைவே, கலைஞர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இருக்கிறார். இன்னும் 'என்னுடைய (கலைஞரின்) பொற்கால ஆட்சி மீண்டும் வர வாக்களியுங்கள்' :) என்று அவரால் சொல்ல முடியாமல் தேர்தலுக்கு தேர்த்தல் ஏன் அண்ணாவை, பெரியாரை முன்னிறுத்த வேண்டும் ? தன்னடக்கமா ? துணிவின்மையா ?

எம்ஜிஆரை ஜெயலலிதா புறக்கணித்தாலும் அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க நினைத்தார் என்ற வகையில் பார்க்கும் போது ஜெ செய்தது ஓரளவு சரிதான் என நினைக்கிறேன். எம்ஜிஆர் புறக்கணிப்பு - ஜெவின் துணிவா ? அல்லது ஆணவமா ?

ஜெ-வை சீதையுடன் ஒப்பிடலாமா - அவருக்கு திருமணமே ஆகவில்லை என்று யாரும் வம்புக்கு வரவேண்டாம். :) தலைப்பு ராமவரம் - சீதை காலடி என்றது '12 ஆண்டுகள் கழித்த' நிகழ்வாக இருப்பதால் இலக்கிய சுவைக்காக மட்டுமே.

21 கருத்துகள்:

bala சொன்னது…

ஆ, எம் ஜி ராமர், கருணாநிதி என்ற திராவிட வில்லை முறித்து, ஜெ.ஜெய சீதாவுக்கு மாலை சூடினாரா?அடேங்கப்பா.சரி,தமிழ்நாட்டில் எம் ஜி ராமராட்சி மறுபடி மலரட்டும் என்று வாழ்த்துவோம்.கருப்பு எம் ஜி ராமராட்சியாக இருந்தாலும் சரி தான்.

பாலா

PS கோவி.மு.கண்ணன் அய்யா,
இப்ப புது கோடா ஆரம்பம், இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
ஆ, எம் ஜி ராமர், கருணாநிதி என்ற திராவிட வில்லை முறித்து, ஜெ.ஜெய சீதாவுக்கு மாலை சூடினாரா?அடேங்கப்பா.சரி,தமிழ்நாட்டில் எம் ஜி ராமராட்சி மறுபடி மலரட்டும் என்று வாழ்த்துவோம்.கருப்பு எம் ஜி ராமராட்சியாக இருந்தாலும் சரி தான்.

பாலா

PS கோவி.மு.கண்ணன் அய்யா,
இப்ப புது கோடா ஆரம்பம், இல்லையா?
//
ஜயராமன் சார்,

அறிவு சார்ந்த கருத்துக்கு நன்றி !
கோட்டா ஓவர் !

bala சொன்னது…

//கோட்டா ஓவர் !//

கோவி.மு.கண்ணன் அய்யா,

என்னங்க இது?திராவிட ஆட்சியில கோட்டா அதிகமாகவல்லவா ஆகணும்?உங்க திராவிட மறு காலனீய நவ பார்ப்பனீய போக்கை வன்மையாக கண்டிக்கறேன்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
//கோட்டா ஓவர் !//

கோவி.மு.கண்ணன் அய்யா,

என்னங்க இது?திராவிட ஆட்சியில கோட்டா அதிகமாகவல்லவா ஆகணும்?உங்க திராவிட மறு காலனீய நவ பார்ப்பனீய போக்கை வன்மையாக கண்டிக்கறேன்.

பாலா
//

கோட்டா பின் தங்கியவர்களுக்குத்தான் உங்க சகாகளுகெல்லாம் அவுன்ஸ் கணக்குதான்.

bala சொன்னது…

//கோட்டா பின் தங்கியவர்களுக்குத்தான் உங்க சகாகளுகெல்லாம் அவுன்ஸ் கணக்குதான்.//

கோவி.மு.கண்ணன் அய்யா,
இப்ப்படி ரீல் விட்டே எல்லா கோட்டாவையும் நீங்களே இன்னும் எவ்வளவு நாளைக்கு அமுக்கிப்பீங்க.பின் தங்கியவங்க கதி என்னாவது என்று ஒரு நாளாவது யோசிச்சிருப்பீங்க்களா?மனசாட்சியின் மீது கை வைத்து சொல்லுங்கய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
இப்ப்படி ரீல் விட்டே எல்லா கோட்டாவையும் நீங்களே இன்னும் எவ்வளவு நாளைக்கு அமுக்கிப்பீங்க.பின் தங்கியவங்க கதி என்னாவது என்று ஒரு நாளாவது யோசிச்சிருப்பீங்க்களா?மனசாட்சியின் மீது கை வைத்து சொல்லுங்கய்யா.

பாலா
//
ஜயராமன் சார்,
பின் தங்கியவங்க கதி யா ? அல்லது பின் வந்தேறியவங்க கதியா ? சரியா சொல்லுங்க சார். புரியல்ல தயவு செய்து விளக்கவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அறிஞர் அண்ணா ஆண்டதோ இரண்டு ஆண்டுக்கும் குறைவே, கலைஞர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இருக்கிறார். இன்னும் 'என்னுடைய பொற்கால ஆட்சி மீண்டும் வர வாக்களியுங்கள்' :) என்று அவரால் சொல்ல முடியாமல் தேர்தலுக்கு தேர்த்தல் ஏன் அண்ணாவை, பெரியாரை முன்னிறுத்த வேண்டும் ? தன்னடக்கமா ? துணிவின்மையா ?//

தலைவர்களுக்கே தன்னம்பிக்கை இல்லை என்றால் பாவம் அவர்களுக்கு வாக்களித்த மக்கள். எந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு இவர்களது ஆட்சியில் வாழ்வது. காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, எம்.ஜி.ஆர் ஆட்சி. நல்ல கூத்தடிக்கிறார்கள். ஏன், இன்னும் பக்தவத்சலம் ஆட்சி, ரெட்டியார் ஆட்சி, ராஜாஜி ஆட்சி, ஜானகி அம்மாள் ஆட்சி எல்லாம் சொல்லிக்கொள்ளலாம். அவர்களும் மறைந்தவர்கள்தானே. அனுதாப வாக்குகளாவது கிடைக்கும். எல்லாம் அந்த ஓட்டுக்குதானே?

அன்புடன்,
ஜோதிபாரதி.

bala சொன்னது…

//ஜயராமன் சார்,
பின் தங்கியவங்க கதி யா ? அல்லது பின் வந்தேறியவங்க கதியா ? சரியா சொல்லுங்க சார். புரியல்ல தயவு செய்து விளக்கவும்//

கோவி.மு.கண்னன் அய்யா,

அதுக்கென்ன விளக்கிட்டாப் போச்சு.வந்தேறியவங்களைப் பத்தி தான் கவலையோட சொல்கிறேன்.இதுல பாருங்க;தமிழ் நாட்டு திராவிட கும்பல்ல ரெண்டு வகையான வந்தேறிய குழு இருக்குங்கய்யா.
ஓண்ணு ஆப்ரிக்க சோமாலியாவிலிருந்து வந்தேறிய திருட்டு கும்பல்(கோவி.மு. கண்ணன் போன்ற, உயர் சாதியினர் என்று பீத்திக்கொள்கிறவங்க;இவங்க தான் பல நூற்றாண்டுகளா தமிழ் நாட்டில் எல்லா நில புலன்களையும் திருடி சொந்தமாக்கிக் கொண்டவங்க.ஆனாலும் தாங்கள் பின் தங்கியவர்கள் என்று கூப்பாடு போட்டு காட்டுமிராண்டித் தனம் செய்வாங்க;இன்னொரு கும்பல் ஆப்ரிக்க எத்தியோப்பியாவிலிருந்து வந்தேறிய குழு.இவங்களை இந்த சொமாலிய குழு பறையர்கள்னு இளக்காரமா சொல்லும்.இது உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட கும்பல்.ஒடுக்கப்பட்ட குழு.சொமாலிய குழு இவங்களை ஆண்டாண்டு காலமா அமுக்கி வச்சது போதாதுன்னு இப்ப கூட எல்லா கோட்டாவையும் அமுக்கிக் கொண்டு வஞ்சனை செய்கிறாங்க.விளக்கமா சொல்லிவிட்டேன்.உங்க IQ -10;இருந்தாக்கூட புரிந்திருக்குமே.

பாலா

Thamizhan சொன்னது…

ஏ!அப்பா!
கூழைக் கும்பிடு நரி,ஓநாய்க் கெல்லாம் ஆடுகள் மேலே என்ன அக்கறை!
மாடுகளைப் பிரிச்சு விட்டால் சிங்கம் வேண்டாம் இந்த நரிகளே போதும்.
இந்த நரிகள் பேசட்டும்,அப்போதுதான்
நம்மவர்களுக்குக் கொஞ்சமாவது நரித்தனம் இன்னும் முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதாவது புரியும்!

bala சொன்னது…

//ஆடுகள் மேலே என்ன அக்கறை//

//நம்மவர்களு//

அடடே.நம்மவர்கள்னு தமிழன் ஆடு அய்யா சொல்றது சோமாலிய திருட்டு திராவிட ஆடுகள் தானே?அடேங்கப்பா,இந்த திருட்டு ஆடுகளுக்கு எத்தியோப்பிய ஆடுகள் மேல் என்ன ஒரு வாஞ்சை,என்ன ஒரு கரிசனம்.அதான் எல்லா தீனியையும் தாங்களே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுகின்றன.வாழ்க ஆடுகளுக்கான கோட்டா ராஜ்யம்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
அடடே.நம்மவர்கள்னு தமிழன் ஆடு அய்யா சொல்றது சோமாலிய திருட்டு திராவிட ஆடுகள் தானே?அடேங்கப்பா,இந்த திருட்டு ஆடுகளுக்கு எத்தியோப்பிய ஆடுகள் மேல் என்ன ஒரு வாஞ்சை,என்ன ஒரு கரிசனம்.அதான் எல்லா தீனியையும் தாங்களே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுகின்றன.வாழ்க ஆடுகளுக்கான கோட்டா ராஜ்யம்.

பாலா
//

ஜயராமன் சார், கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டேளா ? இங்கே வரலை என்றால் தூக்கமே வராதே, மாமி கிட்ட சொல்லி காஃபியில் விசம் வைக்கச் சொல்லனும்.

bala சொன்னது…

//இங்கே வரலை என்றால் தூக்கமே வராதே, மாமி கிட்ட சொல்லி காஃபியில் விசம் வைக்கச் சொல்லனும்.//

உங்க வீட்டு காஃபிக்காக சிங்கப்பூர் வரணுமா?வந்துட்டாப் போச்சு.மாமியெல்லாம் வேண்டாம்;நீங்களே காஃபி போட்டு கொடுங்க;விஷமா இருந்தாலும் தாரளமா குடிசிட்டு போகிறேன்.என்ன பெரிய விஷயம்?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
//இங்கே வரலை என்றால் தூக்கமே வராதே, மாமி கிட்ட சொல்லி காஃபியில் விசம் வைக்கச் சொல்லனும்.//

உங்க வீட்டு காஃபிக்காக சிங்கப்பூர் வரணுமா?வந்துட்டாப் போச்சு.மாமியெல்லாம் வேண்டாம்;நீங்களே காஃபி போட்டு கொடுங்க;விஷமா இருந்தாலும் தாரளமா குடிசிட்டு போகிறேன்.என்ன பெரிய விஷயம்?

பாலா
//

ஜயராமன் சார், அம்புட்டு நல்லவரா ? எங்காத்துல மாமி இல்லை. நான் உங்காத்து மாமியைத்தான் சொன்னேன். பில்டர் காஃபி நான்னா போடுவாரோன்னோ ?

bala சொன்னது…

//பில்டர் காஃபி நான்னா போடுவாரோன்னோ //

கோவி.மு.கண்ணன் அய்யா,

உண்மையை சொல்லணும்னா "ஹூ ஹும் போட மாட்டாங்க".எதுக்கும் சிங்கப்பூரே வாரேனுங்கய்யா.ஒரு காஃபி கூட தராத அளவுக்கு நீங்க கஞ்சனா?

பாலா

Unknown சொன்னது…

என்னாதிது சின்னபுள்ள தனமா பின்னூட்டம் போட்டு விளையாடிட்டு இருக்கீங்க???

புரட்சி தமிழன் சொன்னது…

கோவி. கண்ணன் அய்யா நான் கொஞ்ச நாளா பொங்கலுக்கு விடுமுறையில வந்துட்டேன் இன்னைக்குத்தான் வலைப்பக்கம் வந்தேன் ஓனாய்த்தொல்லை தாங்கமுடியலயே மத்தவங்கல முட்டால் ஆக்குற ஓனாய்களெல்லாம் ஐ கியூ பத்தி பேசுது என்னத்த சொல்ல

bala சொன்னது…

//ஓனாய்த்தொல்லை தாங்கமுடியலயே மத்தவங்கல முட்டால் ஆக்குற ஓனாய்களெல்லாம் //

அட,குழந்தைகள் அழகா மழலை பேசும் என்பாங்க;ஆனா நம்ம புரட்சி தமிழன் அய்யா அழகா மழலையில எழுதி புரட்சி செய்யறாரே!வாழ்க வாழ்க.லீவு முடிஞ்சி வந்துட்டாராம்.நமக்கு இனிமே மழலை "புரட்சி தமிழ்" விருந்து தான் போங்க.ஹையா ஜாலி.

பாலா

கண்மணி/kanmani சொன்னது…

"என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா ?" என்று கேட்டு நம்ப முடியாமல் ஒருவாரம் ஒப்பாறி வைக்கும் எம்ஜிஆர் ரசிகர்களின் ....''

நல்ல நகைச்சுவை

வவ்வால் சொன்னது…

கோவி ,

வழக்கமான உங்கள் ஸ்டைலில் பட்டைய கிளப்பிட்டிங்க.

உங்களுக்கு டெலிபதி தெரியுமா, இத்தனை நாளா ராமாவரம் எங்கே இருக்குனு அம்மையாருக்கு வழி தெரியாம போச்சா என்று எனக்குள்ளும் கேள்வி எழுந்து, நீங்கள் சொன்ன பதிலே தோன்றியது.இங்கே பார்த்தால் நீங்கள் பதிவு போட்டு இருக்கிங்க எப்படி சார் இது!(நானும் ஒரு பதிவு போடலாம்னு பார்த்தேன் அப்புறம் சில மொக்கைகள் வந்து கும்மியடிக்கும் பதில் சொல்லி மாளாதுனு விட்டுட்டேன்)

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

////////கலைஞர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இருக்கிறார். இன்னும் 'என்னுடைய (கலைஞரின்) பொற்கால ஆட்சி மீண்டும் வர வாக்களியுங்கள்' :) என்று அவரால் சொல்ல முடியாமல் தேர்தலுக்கு தேர்த்தல் ஏன் அண்ணாவை, பெரியாரை முன்னிறுத்த வேண்டும் ? //////////

காரணம் அவர் மக்களுக்காக(தமிழக அப்பாவி மக்களுக்காக-தன் குடும்ப மக்களுக்காக அல்ல) எள்ளத்தனையும் செய்யவில்லை என்பது அவருக்கே தெரிவதால் !!!!!

////////எம்ஜிஆரை ஜெயலலிதா புறக்கணித்தாலும் அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க நினைத்தார் என்ற வகையில் பார்க்கும் போது ஜெ செய்தது ஓரளவு சரிதான் என நினைக்கிறேன். எம்ஜிஆர் புறக்கணிப்பு - ஜெவின் துணிவா ? அல்லது ஆணவமா ?////////////

இரண்டும் அல்ல,நம்மைப் பார்க்கத்தான் கூட்டம் கூடுகிறது என்ற நடிகை மனோபாவம் !

ஆக இரண்டும் ஒ.கு.ஊ.ம.

அரை பிளேடு சொன்னது…

என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா ?????????

வாத்தியாரே... இப்படியாயிடுச்சே வாத்தியாரே. இப்ப நான் என்ன பண்ணுவேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்