பின்பற்றுபவர்கள்

23 ஜனவரி, 2008

புத்தாண்டாக மாறிய பொங்கல் நாள் !

தமிழனின் தனித்தன்மையை காத்துவருவதில் பொங்கல் பண்டிகை முதன்மையானது, விவசாயம் செய்து 'உழைப்பில்' வாழ்பவர்கள் என்பதை உலகிற்கு அறிவிக்கவும், ஐம்பூதங்களுக்கு நன்றி சொல்வதற்க்காகவும், தனக்காக உழைக்கும் கால்நடைகளை போற்றவும் பொங்கல் பண்டிகையை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கொண்டாடி வருகின்றன. இந்த பொங்கலில் இருந்து கூடுதல் சிறப்பாக தமிழறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று கலைஞர் அரசு பொங்கல் நாளை தமிழ் ஆண்டுபிறப்பின் முதல் நாள் அதாவது தமிழ் புத்தாண்டு தை திங்கள் 1 ஆம் நாள் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

செம்மொழி அறிவிப்பிற்கு பிறகு தமிழ்மொழியையும் மக்களையும் பொறுத்து இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது, சீனர்கள் அவர்களது புத்தாண்டை கோலகலமாக கொண்டாடுவர், இது வரை சித்திரையில் பிறந்த தமிழ் புத்தாண்டுகள் கோகுலாஷ்டமி போன்ற இந்து பண்டிகையாகவே கொண்டாடப்பட்டது, தனிப்பட்ட சிறப்பு எதுவுமே இருக்கவில்லை. பண்டிகையை கொண்டாடும் விதமும் ஆரிய / வடமொழி வழிபாட்டை ஒட்டியே அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ் புத்தாண்டிலும் கோவிலுக்குச் செல்வோருக்கு வடமொழி அருச்சனையே செய்து கொடுக்கப்பட்டது.

பொங்கலை தமிழ்புத்தாண்டாக அறிவித்ததன் மூலம், இனிவரும் தமிழ் புத்தாண்டை மதச் சார்பற்று அனைத்து தமிழர்களுமே கொண்டாடுவதற்கு வழிவகுக்கும், சீனர்களில் பல்வேறு மதத்தினர் அவர்களது புத்தாண்டை சேர்ந்தே கொண்டாடுவர். முதன் முறையாக அனைத்து தமிழ்மக்களும் கொண்டாடும் வகையில் பொங்கல் புத்தாண்டாக மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் தங்கள் வழியில் தமிழ்புத்தாண்டை கொண்டாட முன்வருவது மட்டுமே, தமிழர்களுக்கான ஒரே பண்டிகை என்று சொல்வதற்க்கு ஏதுவாக இருக்கும்.

வேற்றுமொழி குறிப்பாக வடமொழி அழுக்குகளை தாங்கிக் கொண்டு இதுதான் தமிழன் பண்பாடு, இவை(மட்டும்)தான் தமிழ் என்ற கட்டமைப்புகளையும் தூளாக்கிவிட்டு தமிழ்தாய் புதுப்பொலிவுடன் இருப்பாள், அதற்கு இது ஒரு முதன்மையான நிகழ்வு. தமிழ்பற்றாளன் என்பதால் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்கிறேன். இந்த நாள் இனிய நாள்.

வழக்கம் போல் 'கூடவே கூடாது......வழிவழி வருவது மாற்றக்கூடாது' என்று வரும் வறட்டு தவக்களைக்களை அவர்கள் அணிந்திருக்கும் மேல் (நாட்டு) ஆடைகளை களைந்துவிட்டு பஞ்சகச்சத்துடன் வந்து கருத்துச் சொல்லச் சொல்லுவோமாக. :)

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

13 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இதுவரை பொங்கல் திருநாளைக் கூட அனைத்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களும் கொண்டாடாத சூல்நிலையே நிலவுகிறது என்கிற நிதர்சன உண்மையை நாம் கண்டு வருகிறோம். பொங்கல், தமிழர் திருநாள், அதை இந்துப் பண்டிகையாக மட்டும் சித்தரிப்பது ஏன்? ஒப்புக்குச் சப்பாணியாக ஆங்காங்கே தலைவர்கள் முன்னிலையில் சமத்துவப் பொங்கல் மட்டும். தமிழர்கள் ஒன்று சேர வாய்ப்பே இல்லையா? நாம் ஏன் மதத்தின் பெயரால் பிரிந்தே கிடக்கவேண்டும். இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

//

ஜோதிபாரதி ஐயா,

நல்ல கருத்து.

முதன் முறையாக அனைத்து தமிழ்மக்களும் கொண்டாடும் வகையில் பொங்கல் புத்தாண்டாக மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் தங்கள் வழியில் தமிழ்புத்தாண்டை கொண்டாட முன்வருவது மட்டுமே, தமிழர்களுக்கான ஒரே பண்டிகை என்று சொல்வதற்க்கு ஏதுவாக இருக்கும். - என்று இடுகையில் சொல்லி இருக்கிறேன்.

jollupandi சொன்னது…

just a doubt? can we change the calander as we wish?

so , what will happen now?

we will have less number of days in this current tamil year and more days in next year?

with some base, they made chittirai as the first month in tamil right?

i couldnt understand why it should be moved to thai..?

instead chittirai could have been celeberated in a grand way..

but i think this will be just in government gazzette..
somehow chittarai is mingled with peoples mind and they will celebrate april 14 only as tamil new year.. as it is also now mingled with GOD and pooja..

கோவி.கண்ணன் சொன்னது…

// rina said...

உங்கள் ஐயங்களுக்கான விடை
தனித்தமிழ் நாள்காட்டி வந்துவிட்டது.

Unknown சொன்னது…

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டானது மனதுக்கு மகிழ்வு தரும் செய்தி.
இனியாவது இந்நன்னாளில் மூடப்பழக்கங்களை ஒழித்து, மனிதர்களுக்கு உதவுகின்றவைகளுக்கு உண்மையில் உதவுவோம். குறைந்தது அவற்றை வெறுமனே நமது மன மகிழ்வுகளுக்காக தொந்தரவு செய்யாமல், அந்நாட்களில் மட்டுமாவது அமைதியாக ஓய்வெடுக்க வைக்கலாமே.

Balaji Chitra Ganesan சொன்னது…

சித்திரை முதல் நாள் எப்படி இந்துமத திருநாள் ஆயிற்று? வேப்பம்பூ-மாம்பழப் பச்சடியில் இருக்கும் வேப்பம்பூதான் மாரியாத்தாவா?

Balaji Chitra Ganesan சொன்னது…

>> தமிழ் புத்தாண்டை மதச் சார்பற்ற

சமணம் போற்றும் திருக்குறள் அருளிய திருவள்ளுவர் என்றிலிருந்து மதச்சார்பற்றவரானார்?

வவ்வால் சொன்னது…

கோவி,

ஏற்கனவே மாட்டுப்பொங்கல் தினத்தை திருவள்ளுவர் திருநாள் என்று சொல்லி , திருவள்ளுவர் ஆண்டு முறைப்படி அன்று தான் தமிழ் வருடம் பிறக்கிறது என்று தமிழறிஞர்கள் வழக்கில் கொண்டு வந்திருந்தார்கள் அதற்கு அப்போது அரசு அங்கீகாராம் தரவிலலி என நினைக்கிறேன், மேலும் தை ஒன்றை விட்டு இரண்டாம் தேதியில் வருடம் துவங்குவதாக சொல்வது சரி வராது என்று தான் தை ஒன்றை தமிழ் வருடப்பிறப்பாக இப்போது அம்முறையை அங்கீகரிக்கும் விதத்திலேயே அறிவித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பொங்கலை தமிழர், விவசாயிகள் திருநாளாகப்பார்க்காமல் அதன் மீதும் சில இந்துத்துவ ஆர்வலர்கள் மதச்சாயம் பூசுகிறார்கள்.விட்டா எல்லாமே மதம் தான் அவர்களுக்கு. இதுக்குறித்து தருமி அவர்கள் போட்டப்பதிவிலும் விவாதம் ஒன்று நடந்தது.

அனேகமாக இங்கே ஒரு ரவுண்டு ஓடும்னு நினைக்கிறேன், ஆனால் நான் இதை சொல்வதோடு ஓரம் கட்டிக்கிறேன்!

துளசி கோபால் சொன்னது…

பிரச்சனை இல்லை.
அதெல்லாம் பொங்கிறலாம்.

கேரளாவிலும் மேட மாசம் 1( நம்ம சித்திரை) வரும் விஷூப்பண்டிகை ,
வருடப்பிறப்பல்ல.அதை சிங்க மாசம் 1( நம்ம ஆவணி) ஆக மாத்தணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

bala சொன்னது…

//இந்த நாள் இனிய நாள்.//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஆமாங்கய்யா.மஞ்ச துண்டு அரசின் மகத்தான சாதனை தான் இது.தமிழர்கள் அனைவரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு நேர் கொண்ட பார்வையோடு அடலேறு போல் நிலம் அதிர நடந்து, உலகம் மூக்கின் மேல் விரல் வைத்து, பொறாமையோடு பார்க்க வகை செய்த மஞ்ச துண்டுக்கு நன்றி,நன்றி,நன்றி.

மேலும், இந்த ஒரு செயல் மூலம் தமிழர் தந்தை,வீரமணி,அண்ணா அவர்கள் நெஞ்சில் தைத்த முட்களை நீக்கி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மஞ்ச துண்டுக்கு இன்னொருமுறை வீர வணக்கம் போடுவோம்.

பாலா

PS

உங்க ஆட்சியில கோட்டா 0% தானே?வாழ்க வாழ்க.
எனக்கு இன்னொரு சந்தேகம்.அது ஏன், மத்தவங்க நெஞ்சில் மட்டும் முள் தைக்குது?மஞ்ச துண்டு நெஞ்சுல தைக்க மறுக்கிறது?மத்த மூஞ்சிகளை விட இவர் நெஞ்சு, உரம் வாய்ந்ததா?

PPS

//தமிழறிஞர்களின்//

இதெல்லாம் யாரு?கோ.மு.கண்ணன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

ஜயராமன் ஐயர் வால் வந்துட்டேளா ?
தூங்காமல் விழித்து இருப்பீரா ?

உவேசாமிநாத அய்யர், பாரதியார், சூரியனாராயன சாஸ்திரி இவாலெளெல்லாம் கூட தமிழரிஞர்கள் தான். அதுவும் சூரியநாரயண சாஸ்திரி இருக்கார் பாருங்க... மறைமலை அடிகளார் கூட சேர்ந்துண்டு தமிழ் தமிழ் என்று கூத்தடித்து ஆரிய பெயரேவேண்டாம் என்று பரிதிமார் கலைஞர் ஆனவர். அவாளெல்லாம் தமிழறிஞர்களாக ஒப்புக்கொள்ள மாட்டேளா ?

அதெல்லாம் சரி உமக்கு ஏன் எரியுது ?

bala சொன்னது…

//உவேசாமிநாத அய்யர், பாரதியார், சூரியனாராயன சாஸ்திரி இவாலெளெல்லாம் கூட தமிழரிஞர்கள் தான். அதுவும் சூரியநாரயண சாஸ்திரி இருக்கார் பாருங்க... மறைமலை அடிகளார் கூட சேர்ந்துண்டு தமிழ் தமிழ் என்று கூத்தடித்து //

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஆ, இந்த தமிழறிஞர்களேல்லாம் மஞ்ச துண்டின், கனவில் வந்து தை 1 ஆம் தேதியை புத்தாண்டின் ஆரம்ப தினமாக அறிவிக்க சொன்னார்களா?நான் பொதுவா உங்கள் விசிறி தான், உங்களுக்கு ஜல்லி அடிப்பவன் தான்;ஆனல், இந்த விஷயத்தில்,உங்கள் சொல்லுக்கு ஜல்லி அடிக்க என் மனம் ஒப்பவில்லை.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஆ, இந்த தமிழறிஞர்களேல்லாம் மஞ்ச துண்டின், கனவில் வந்து தை 1 ஆம் தேதியை புத்தாண்டின் ஆரம்ப தினமாக அறிவிக்க சொன்னார்களா?நான் பொதுவா உங்கள் விசிறி தான், உங்களுக்கு ஜல்லி அடிப்பவன் தான்;ஆனல், இந்த விஷயத்தில்,உங்கள் சொல்லுக்கு ஜல்லி அடிக்க என் மனம் ஒப்பவில்லை.

பாலா
//

ஜயராமன் சார்வாள்,

அவெளெல்லாம் சொர்கம் போய் சேர்ந்துட்டாள் கனவில் வாந்தாரா என்று கேட்டு கொச்சை படுத்தாதேள். பரிதிமார் கலைஞர் இருந்தாரில்லையோன்ன்னோ அவர் மறைமலை அடிகளார் கூட சேர்ந்து இந்த கூத்தெல்லாம் அடிச்சு பொத்தகமாக எழுதுவெச்சுட்டு போய் சேர்ந்துட்டார். என்னிடம் பிரதி இருக்கு வேண்டுமானால் தருகிறேன். அதைத்தான் கருணாநிதி வெச்சுண்டு பேஷி இருக்கார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்