பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2008

சிதம்பரம் கோவிலுக்குள் ஜட்டி அணிந்து செல்லமுடியுமா ?

கோவிலுக்கும் நாத்திகனுக்கும் என்ன சம்பந்தம் ?

எங்களோடு சேர்ந்து மணி அடித்தாயா ? கற்பூரம் காட்டினாயா ? அட்லீஸ்ட் சிதறு தேங்காயாவது உடைத்தாயா ? கோவிலில் என்ன பாடவேண்டும், எந்த மொழியில் பாடவேண்டும் என்று கேட்பதற்கு உனக்கென்ன உரிமை ? நீயோ நாத்திகன் உனக்கு, கோவிலில் கொலை நடந்தால் என்ன ? கொள்ளை நடந்தால் என்ன ? அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியவர் பக்தர்கள் அல்லது நாங்களே 'பொருட்'படுத்திக் கொள்கிறோம்.

வழக்கமாக கோவில் சீர்கேடுகளை முறைப்படுத்த வேண்டும், பக்தர்களின் குரலுக்கு செவிசாய்த்து கோவில் நடவடிக்கைகளில் மாற்றம் நிகழவேண்டும் என நாத்திகர் கேட்டால் மேற்கண்ட பதில் தான் வரும்.

சரி நாத்திகன் கேட்கவில்லை, ஆத்திகன் ஆறுமுக சாமி கேட்கிறாரே அவருக்கு என்ன பதில் ?

ஆறுமுக சாமி ஒரு பொய்யன், வம்பன், வீம்பன் அவன் ஒருவனுக்காக ஆண்டாடுகாலமாக நடைமுறையில் இருப்பதை மாற்ற முடியுமா ? பொறுங்கள் ! இப்பொழுதெல்லாம் கோவிலுக்குள் ஜட்டி கூட அணிந்துவருகிறார்கள் என்று சிதம்பரத்தில் இருந்து ஒரு அப்பா சாமி எழுதுகிறார். அதையும் அவர் தான் எழுதினாரா ? அல்லது எப்போதாவது போடும் நடுநிலை வேசத்துக்காக தினமலர் தன் குரலை மாற்றி ஒலிக்குதா ?

இறங்கி வாருங்கள்!
என்.ராம்குமார், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்:
சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தினருக்குமிடையேயான நடக்கும் வழக்கு தொடர் பாக ஒரு செய்தி... 40 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் கோவில் கோபுரத்திற்கு உட்புறம் உள்ள பிரகாரத்தில், அறிவிப்பு பலகைகளை வைத்திருந்தனர். அந்த அறிவிப்பு பலகையில், "குல்லாய் அணிந்து கொண்டோ, லுங்கி அணிந்து கொண்டோ வருபவர்கள் கோவிலினுள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முக்கியமாக, குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு வாசகம், "அன்னிய மதத்தினர் கோவிலுக்குள்ளே நுழைய அனுமதியில்லை' என்பது. ஆனால், இன்று நடப்பதென்ன... அரைக்கால் சட்டையுடன், ஏன் ஜட்டியுடன் வந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காரணம், பணம்! அதைப் போல், பிற மதத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்களிடம், காசு வசூலித்து, அவர்களைச் சிற்றம்பல மேடையிலேயே ஏற அனுமதிக் கின்றனர். இதற் கெல்லாம், வைதிகம் அனுமதியளிக்கும் போது, "தமிழ் சிற்றம்பல மேடையில் ஏறக்கூடாது' என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? இக்கோவில் தீட்சிதர்கள் தமிழுக்காகக் கொஞ்சம் இறங்கி வரவேண் டாமா?

என்.இராம் குமார் இந்து, கடவுள் நம்பிக்கை உடையவராகத்தான் இருக்கும், அவர்களுக்கெல்லாம் தீட்சிதர்கள் சார்பு ஆத்திகர்கள் என்ன பதில் சொல்வார்கள் ?

36 கருத்துகள்:

TBCD சொன்னது…

செல்லலாமே..

பாண்ட் போடுபவர்கள் பெரும்பாலனவர்கள் அதைப் போட்டே போடுகிறார்கள்..

பஞ்சகச்சம் பற்றி எனக்குத் தெரியாது

வேட்டி கட்டினவங்க, நீளமான உள்ளாடை போடுவாங்க..

(தலைப்பு மட்டும் பார்த்து பின்னுட்டுபவன் )

கோவி.கண்ணன் சொன்னது…

TBCD ஐயா,

தலைப்பில் 'சிதம்பரம் கோவிலுக்குள்' பிறகு 'வெறும்' என்ற சொல் இல்லததால் தலைப்பை மட்டும் பார்த்து பின்னூட்டம் இட்டது சரிதான்.

:)

// TBCD said...
செல்லலாமே..

பாண்ட் போடுபவர்கள் பெரும்பாலனவர்கள் அதைப் போட்டே போடுகிறார்கள்..

பஞ்சகச்சம் பற்றி எனக்குத் தெரியாது

வேட்டி கட்டினவங்க, நீளமான உள்ளாடை போடுவாங்க..

(தலைப்பு மட்டும் பார்த்து பின்னுட்டுபவன் )
//

சம்பூகன் சொன்னது…

நல்ல கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள் கோவி.கண்ணன்., பதிவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....

சம்பூகன்

Unknown சொன்னது…

விட்டா சாமி ஜட்டி போடுகிறதா என்று கேட்பீர்கள் போல தெரிகிறதே?

பக்தர்கள் ஜட்டி போடுவதும், போடாததும் அவரவர் இஸ்டம். யோனியில் இரத்தம் வருகிறதா (தீட்டு ??) என்று பார்ப்பதுடன் இறைவனின் வேலை முடிந்துவிட்டது. அதையும் தாண்டி இதென்ன கேள்வி?

என்ன கருமம் இது கோ.வி? ( வாசகர்கள்.. "என்ன கொடுமை சரவணன்?" என்ற தொனியில் வாசிக்கவும்).

(தலைப்பை மட்டும் பார்த்தே பின்னூட்டம் போட பழகுபவன்)

கருப்பு சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,

இப்போது மணியாட்டும் பிராமனர்கள் ஷகிலா மாதிரி அரைகுறை ஆடையோடத்தான் அலையறானுங்க!!!

உங்களின் காரமான இந்த பதிவுக்கு பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் வந்து பதில் சொல்ல மாட்டார்கள்!

ப்ராமண துவேஷ பதிவு என்று உங்களுக்கு மறுமொழிகள் வரலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...

கருப்பு சார்,

பதிவில் என் கருத்து எதும் இல்லை, தினமலரில் இருந்து ஒட்டியது.

உதயம் சொன்னது…

ஜட்டி போட்டால் கோயிலுக்குள் போகலாம் , கோவணம் இருந்தால் கருவறைக்கே செல்லலாம்.

கருப்பன் (A) Sundar சொன்னது…

//
40 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் கோவில் கோபுரத்திற்கு உட்புறம் உள்ள பிரகாரத்தில், அறிவிப்பு பலகைகளை வைத்திருந்தனர். அந்த அறிவிப்பு பலகையில், "குல்லாய் அணிந்து கொண்டோ, லுங்கி அணிந்து கொண்டோ வருபவர்கள் கோவிலினுள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முக்கியமாக, குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு வாசகம், "அன்னிய மதத்தினர் கோவிலுக்குள்ளே நுழைய அனுமதியில்லை' என்பது. ஆனால், இன்று நடப்பதென்ன... அரைக்கால் சட்டையுடன், ஏன் ஜட்டியுடன் வந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
//

என்னப்பா இது சிறுபிள்ளதனமாவுல இருக்கு! உங்கள் Blog-ன் தலைப்புபடி "விதிகள் காலத்தால் மாறும்"போது ஒரு அறிவிப்பலகை ஐட்டம் மாறாதா??

//
"தமிழ் சிற்றம்பல மேடையில் ஏறக்கூடாது' என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? இக்கோவில் தீட்சிதர்கள் தமிழுக்காகக் கொஞ்சம் இறங்கி வரவேண் டாமா?
//
What i$ the u$e?? ;-) நியாயத்தைதான் நீங்களே சொல்லிட்டீங்களே!! பணம் என்றால் பிணமும் வாய்திறக்கு்ம் போது இவர்கள் திறப்பதில் குற்றமென்ன இருக்கிறது?

வவ்வால் சொன்னது…

கோவி,

காசியில் உள்ள கபாலிகா எனப்படும் சிவனடியார்கள் முற்றும் துறந்தவர்கள், உடையே இருக்காது , காசி நகர் முழுவதும், ஏன் கோவிலுக்கும் செல்வார்கள், கும்ப மேளா சமயத்தில் பெரும் கூட்டமாக அவர்கள் திரள்வதை அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டுவார்களே,காவிக்கட்சி அவர்களை வைத்து மாநாடு எல்லாம் போட்டு இருக்கு.

அவர்கள் வழியில் ஆடையின்றி கோவிலுக்கு சென்றாலும் விட வேண்டும்!

இது எப்படி இருக்கு! :-))

தமிழ்மணி சொன்னது…

//ஜட்டி போட்டால் கோயிலுக்குள் போகலாம் , கோவணம் இருந்தால் கருவறைக்கே செல்லலாம்.//

கோவிகண்ணன்,
உங்கள் பதிவை விட இந்த கமெண்ட் சூப்பர்.

Mayooran சொன்னது…

பெண்கள் பான்டி ப்ரா அணிந்து செல்லமுடியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//சம்பூகன் said...
நல்ல கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள் கோவி.கண்ணன்., பதிவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....

சம்பூகன்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
விட்டா சாமி ஜட்டி போடுகிறதா என்று கேட்பீர்கள் போல தெரிகிறதே?

பக்தர்கள் ஜட்டி போடுவதும், போடாததும் அவரவர் இஸ்டம். யோனியில் இரத்தம் வருகிறதா (தீட்டு ??) என்று பார்ப்பதுடன் இறைவனின் வேலை முடிந்துவிட்டது. அதையும் தாண்டி இதென்ன கேள்வி?

என்ன கருமம் இது கோ.வி? ( வாசகர்கள்.. "என்ன கொடுமை சரவணன்?" என்ற தொனியில் வாசிக்கவும்).

(தலைப்பை மட்டும் பார்த்தே பின்னூட்டம் போட பழகுபவன்)
//

பத்தவச்சிட்டிங்களே பலூன் மாமா,

எல்லோரும் என்னன்னவோ தலைப்பு வச்சு பதிவு போடுறாங்க, இங்கு ஜட்டி மட்டும் தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...
ஜட்டி போட்டால் கோயிலுக்குள் போகலாம் , கோவணம் இருந்தால் கருவறைக்கே செல்லலாம்.
//

ஹிஹி

பழனி ஆண்டவரே கோவணத்தோடு தானே இருக்கார், அதைச் சொல்றிங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

காசியில் உள்ள கபாலிகா எனப்படும் சிவனடியார்கள் முற்றும் துறந்தவர்கள், உடையே இருக்காது , காசி நகர் முழுவதும், ஏன் கோவிலுக்கும் செல்வார்கள், கும்ப மேளா சமயத்தில் பெரும் கூட்டமாக அவர்கள் திரள்வதை அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டுவார்களே,காவிக்கட்சி அவர்களை வைத்து மாநாடு எல்லாம் போட்டு இருக்கு.

அவர்கள் வழியில் ஆடையின்றி கோவிலுக்கு சென்றாலும் விட வேண்டும்!

இது எப்படி இருக்கு! :-))
//

வியாக்யாணம் நல்லா கொடுக்குறிங்க. அவங்களுக்கு தெரியலை என்றாலும் சொல்லிக் கொடுப்பிங்க போல இருக்கே.

நடராஜன் காலை தூக்கி ஆடியதைப் பார்த்து காளி தேவி வெட்கப்பட்டாள் என்று தாத்தாசாரியார் எழுதி இருந்தார், தில்லை அம்பலனின் மானமே அம்பலத்தில் ஆடும் போது பக்தர்கள் ஜட்டியுடன் வரலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். ஆண்கள் மேலாடை மட்டும் அணியக்கூடாது என்று ஆகமம் இருக்கு. கீழ் ஆடையைப் பற்றி எதும் குறிப்புகள் இல்லை. :))

கோவி.கண்ணன் சொன்னது…

/// தமிழ்மணி said...

கோவிகண்ணன்,
உங்கள் பதிவை விட இந்த கமெண்ட் சூப்பர்.
///

தமிழ்மணி சார்
உங்கள் பின்னூட்டம் நடுநிலையான பின்னூட்டம்.
:))))))

உதயம் சொன்னது…

.//வித்யா said...
பெண்கள் பான்டி ப்ரா அணிந்து செல்லமுடியுமா?//

சேலைக்குள் அணிந்து செல்லலாம் ஆனால் ,காபாலிக ஸ்டைலுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வித்யா said...
பெண்கள் பான்டி ப்ரா அணிந்து செல்லமுடியுமா?
//

யூ மீன் கவர்ச்சி நடிகைகள் செல்ல முடியுமா என்று தானே கேட்கிறீர்கள் ?

ஷங்கர் படம் சிதம்பரம் கோவிலுக்குள் எடுக்கப்பட்டால் அது கூட நடக்கும்.

பெயரில்லா சொன்னது…

நடராஜப் பெருமான் மனசு வச்சா தமிழ் சிற்றம்பல மேடையில் ஏறிவிடும்

தீட்சிதர் கோவணமும் இறங்கும்

bala சொன்னது…

//சிதம்பரம் கோவிலுக்குள் ஜட்டி போட்டுக்கொண்டு போகலாமா?//

தாரளமாக போகலாம்;சிதம்பரம் கோவிலுக்குள் என்ன,மெக்கா காபா,வாடிகனுக்கு கூட ஜட்டி போட்டுக் கொண்டு போகலாம்.

பாலா

PS

அது சரி.நீங்க ஜட்டி போடாமத் தான் பேண்ட் போட்டு போவிங்களா?என்ன கருமம் இது?

PPS:
இந்த பின்னூட்டத்தை உங்க இப்போதைய கோட்டா பாலிஸி பிரகாரம் அபார்ட் பண்ணிடுவீங்களா?

உதயம் சொன்னது…

ஜட்டி போட்டு பாண்ட் போட்டால் தான் ஆர்டினரி மேன் ,
பாண்ட் மேல் ஜட்டி போட்டால் சூப்பர் மேன். வேட்டிக்குள் கோவணம் கட்டினால்அவன் மெண்டல் மேன் என்ற எளிய தத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளகூடாதா?

ஜெகதீசன் சொன்னது…

//
(தலைப்பை மட்டும் பார்த்தே பின்னூட்டம் போட பழகுபவன்)
//
:))))
த.ம.பா.க.போ.ச.(தலைப்பை மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்) உங்களை அன்புடன் வரவேற்கிறது!!!!!!

தலைப்பை மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுறதுல எதாவது சந்தேகம் இருந்தா எங்க சங்கத்துப் பெருந்தலைகள் கோவி, மங்களூர் சிவா, டிபிசிடி கிட்ட கேட்டுக்கோங்க!!!!

எங்க சங்கத்து மக்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.....

ஜமாலன் சொன்னது…

Super...

இக்பால் சொன்னது…

கோவி கண்ணன் அவர்களே...
தமிழ்மணத்தில இப்போதான் புயல் அடிச்சி ஒய்ஞ்சிருக்கு. திரும்ப உங்க பதிவு மூலமா கவர்ச்சி புயல் மையம் கொல்லும் போலிருக்கே. பின்னூட்டத்தில் யோனி,ஜட்டி,ப்ரா ....ன்னு சாரல் அடிக்குது.

வவ்வால் சொன்னது…

கோவி,

வியாக்ணம்லா இல்லை, உண்மை அதானே, ஆடையைத்துறத்தல் பக்தியின் உச்சக்கட்டம் , சமணர்களிலும், ஸ்வேதம்பரர் வகையினர் மட்டுமே உடை அணிவர்(வெண்ணிறம்)

திகம்பரர் என்ற வகையினர் முழுக்க நிர்வாணம் தான் , கொஞ்ச நாள் முன்னர் மைசூருக்கு கால்நடையாக சென்ற நிர்வாண சமண துறவிகள் திருவண்ணாமலையி்ல் சிலரால் தாக்கப்பட்டார்கள் என்று கூட செய்தி வந்தது ,பின்னர் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புக்கூட கொடுத்தது.

சோழர்கள் காலத்தில் எல்லாம் பெண்களும் மேலாடை அணிவதே இல்லை.

மேலாடை எல்லாம் இடையில் வந்ததே.நினைத்தாலே இனிக்கும் படத்தில் எங்கேயும் எப்போதும்ம் சங்கீதம் பாடலில் கூட ஆடை இல்லாத மேனி அவன் பேர் அன்னாளில் ஞானி னு வருமே!கபாலிகர்கள் நிர்வாணத்தை அனுமதிக்கும் இந்து மதம் ... மற்றவர்கள் கோவிலுக்கு வரும் போது மட்டும் உடைக்கட்டுப்பாடு போடலாமா. :-))

மங்களூர் சிவா சொன்னது…

//
கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
விட்டா சாமி ஜட்டி போடுகிறதா என்று கேட்பீர்கள் போல தெரிகிறதே?

பக்தர்கள் ஜட்டி போடுவதும், போடாததும் அவரவர் இஸ்டம். யோனியில் இரத்தம் வருகிறதா (தீட்டு ??) என்று பார்ப்பதுடன் இறைவனின் வேலை முடிந்துவிட்டது. அதையும் தாண்டி இதென்ன கேள்வி?

என்ன கருமம் இது கோ.வி? ( வாசகர்கள்.. "என்ன கொடுமை சரவணன்?" என்ற தொனியில் வாசிக்கவும்).

(தலைப்பை மட்டும் பார்த்தே பின்னூட்டம் போட பழகுபவன்)

//
வாங்க பலூன் மாமா வெல்கம்.

த.ம.பா.க.போ.ச
தலைவர், இந்தியா

மங்களூர் சிவா சொன்னது…

//
ஜெகதீசன் said...
//
(தலைப்பை மட்டும் பார்த்தே பின்னூட்டம் போட பழகுபவன்)
//
:))))
த.ம.பா.க.போ.ச.(தலைப்பை மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்) உங்களை அன்புடன் வரவேற்கிறது!!!!!!
//
வரவேற்றதுக்கு நன்றி ஜெகதீசன்

இரா.சுகுமாரன் சொன்னது…

கோவி.கண்ணன்

இன்னொரு தகவல் தெரியுமா? உங்களுக்கு.
சிதம்பரம் கிழக்கு கோபுர வழியாக கோவிலுக்குள் நுழைந்தீர்கள் என்றால் அங்கிருந்து வடக்கு அதாவது "நாட்டியவிழா" நடக்குமே அந்த இடம் தாண்டி சென்றால் அங்கே முழுவதும் முள் காடுதான்.

உள்ளே விபச்சாரம் நடந்து வந்தது. நல்ல வசூல் ஆனது என்று நண்பர் அந்த இடத்தை எல்லாம் முன்பொருமுறை சுற்றிக் காண்பித்தார்.

அந்த ஆயிரம் கால் மண்டபம் இருக்கிறதே அது அதிகம் திறக்கபடுவதில்லை. நல்ல பாதுகாப்பான இடமாக அதற்கு வசதியாக இருக்கிறது என நண்பர் கூறியதை இப்போது நினைவு படுத்திக் கொள்கிறேன்.

இப்போதைய நிலை தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// இரா.சுகுமாரன் said...

12:58 AM, February 05, 2008
//

சிவ சிவ !!! :)

ஆடல்வல்லான் ஆடும் ஆடல்கலைகள் காமக் கலையும் ஒண்ணு தப்பு இல்லை என்று விளக்காம் சொல்லுவா.

பூவை அவாள் காதிலிருந்து எடுத்துட்டு மத்தவாளுக்கு வெச்சிவுடுறா

நன்னா இருக்கட்டும்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
வாங்க பலூன் மாமா வெல்கம்.

த.ம.பா.க.போ.ச
தலைவர், இந்தியா//

சிவா,
ஆள்கொணர்வு மனு போடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம், அதுகுள்ள வந்திட்டிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//நவன் said...
நடராஜப் பெருமான் மனசு வச்சா தமிழ் சிற்றம்பல மேடையில் ஏறிவிடும்

தீட்சிதர் கோவணமும் இறங்கும்
//

தீட்சிதர் கோவணம் இறங்கினா
பகவான் சன்னதியில் அபச்சாரம், அப்படி பேசாதேள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் said...
கோவி,

வியாக்ணம்லா இல்லை, உண்மை அதானே, ஆடையைத்துறத்தல் பக்தியின் உச்சக்கட்டம் , சமணர்களிலும், ஸ்வேதம்பரர் வகையினர் மட்டுமே உடை அணிவர்(வெண்ணிறம்)

திகம்பரர் என்ற வகையினர் முழுக்க நிர்வாணம் தான் , கொஞ்ச நாள் முன்னர் மைசூருக்கு கால்நடையாக சென்ற நிர்வாண சமண துறவிகள் திருவண்ணாமலையி்ல் சிலரால் தாக்கப்பட்டார்கள் என்று கூட செய்தி வந்தது ,பின்னர் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புக்கூட கொடுத்தது.

சோழர்கள் காலத்தில் எல்லாம் பெண்களும் மேலாடை அணிவதே இல்லை.

மேலாடை எல்லாம் இடையில் வந்ததே.நினைத்தாலே இனிக்கும் படத்தில் எங்கேயும் எப்போதும்ம் சங்கீதம் பாடலில் கூட ஆடை இல்லாத மேனி அவன் பேர் அன்னாளில் ஞானி னு வருமே!கபாலிகர்கள் நிர்வாணத்தை அனுமதிக்கும் இந்து மதம் ... மற்றவர்கள் கோவிலுக்கு வரும் போது மட்டும் உடைக்கட்டுப்பாடு போடலாமா. :-))
//

வவ்ஸ்,
நல்ல தகவல்,

திகம்பர சன்யாசிக்கு தெற்கென்ன வடக்கென்ன - பழமொழி இருக்கு.

திசைகளை ஆடைகளாக அணிபவர்களாம் அவர்கள்.

பெண்கள் மேலாடை அணிவது வெள்ளைக்காரன் இந்தியாவில் நுழைந்த பிறகே என்றார் எனது நண்பர். ஐரோப்பியர் நுழையாவிட்டால் நாமெல்லாம் கோவணம் கட்டிக் கொண்டு தான் இருப்போம் என்றார் கூடுதலாக. அவர் சொன்னது 'இந்தியாவில் கிறித்துவம் பரவியதால் நாகரீகம் வளர்ந்ததாம்' அவர் பேசியது கிறித்துவ மதப் பெருமை.

இந்திய நாகரீகம் வளர்ந்ததில் வெளிநாட்டினர் எப்படியெல்லாம் பங்கு 'பெற்றிருக்கிறார்கள்' பாருங்கள்.

:)

வவ்வால் சொன்னது…

கோவி,

//பெண்கள் மேலாடை அணிவது வெள்ளைக்காரன் இந்தியாவில் நுழைந்த பிறகே என்றார் எனது நண்பர். ஐரோப்பியர் நுழையாவிட்டால் நாமெல்லாம் கோவணம் கட்டிக் கொண்டு தான் இருப்போம் என்றார்//

இதில் பாதி உண்மையும் இருக்கு, நாம் உடையில் பெரிதாக மாற்றம் செய்யாமல் இருந்தோம், காரணம் தையல் எந்திரம் எல்லாம் அப்போது இல்லை, கையால் தைக்கப்பட்டதை அணியும் அளவுக்கு எல்லோருக்கும் வசதி இல்லை, செல்வந்தர்கள் சிலர் மட்டும் அப்படி அணிவார்கள்.

எனவே அனைவருமே மேலாடை அணியத்தெரியாமல் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது.வெள்ளையர்கள் வரும் முன்னரே நம் உடையில் பல மாற்றங்கள் வந்தாச்சு.அவர்கள் வந்த பிறகு வேகம் கூடியது.

இன்னும் சொல்லப்போனால் வெள்ளைக்காரங்க வியாபாரத்திற்கு கொண்டு வந்த துணிகளை நம்மவர்கள் வாங்கி இருந்தா அவங்க ஆட்சியைப்பிடிக்காமல் வியாபாரியாகவே இருந்துட்டு போய் இருப்பாங்க.நம்ம ஆளுங்களுக்கு கோட் , பேண்ட் துணி வாங்கிப்பயன்ப்படுத்த விருப்பம் இல்லை, பொதுவாக எல்லாம் வேட்டி , ஒரு துண்டு மட்டும் தான், சட்டைலாம் ஜமீந்தார் மட்டும் போடுவார், அப்புறம் யாரும் வாங்க ஆள் இல்லாம ஆட்சியைப்பிடிச்சு லாபம் சம்பாதிச்சுட்டாங்க வெள்ளையர்கள் :-))

அந்த காலத்தில ஒருத்தர் அந்தஸ்தை காட்டப்பயன்ப்படுவது தலையில் இருக்கும் தலைப்பாகை தானாம், அதுக்கு எவ்வளவு , என்ன விலை துணி என்பதை வைத்து ஆளை எடைப்போடுவார்களாம்.

காந்தி ஆரம்பக்காலத்தில் அணிந்த தலைப்பாகை துணி 16 கஜம் நீளம் இருக்குமாம், அதை மடக்கி வலைத்து கட்டிப்பாராம்.பாரதியார் ஒரு 8 முழ வேட்டியைத்தான் தலைப்பாகையாக கட்டி இருப்பாராம்! யாராவது தானம் கேட்டு வந்தாலோ, இல்லை எதாவது கொடுக்கணும்னு நினைத்தாலோ தலைப்பாகையை கழட்டி கொடுப்பாராம் பாரதி.ரிக்ஷா காரனுக்கு காசுக்கு பதிலா தலைப்பாகையை வேட்டியாக கட்டிக்கொள்ள கொடுத்து விடுவாராம்.

நீங்க சொன்ன தாத்தாச்சாரி சிவன் காலை தூக்கிய ரகசியம் முழும் சொல்லவே இல்லையே , நக்கீரனில் வந்த போது அதைப்படித்து இருக்கேன் :-))

சிவன் காலைத்தூக்கி காட்டிய ரகசியம் தான் சிதம்பர ரகசியம் போல! :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க சொன்ன தாத்தாச்சாரி சிவன் காலை தூக்கிய ரகசியம் முழும் சொல்லவே இல்லையே , நக்கீரனில் வந்த போது அதைப்படித்து இருக்கேன் :-))

சிவன் காலைத்தூக்கி காட்டிய ரகசியம் தான் சிதம்பர ரகசியம் போல! :-))//

வவ்ஸ்,

ஆடைகள் குறித்து கூடுதல் தகவல் தந்திருக்கிறீர்கள், பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் தான் நாடார் பெண்களுக்கு முலைவரி விதிக்கப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போல. வருணா'சிரமம்' கலாச்சார பாதுகாப்பு என்றால் எவரும் புரிந்து கொள்வதில்லை.
:)

சிவன் காலைதூக்கி ஆடியது தான் சிதம்பர ரகசியம் என்று போட்டு உடைத்துவிட்டீர்கள்.

பித்தன் பித்தனாட்டம் ஆடியதே பித்தனாட்டம் என்று வழங்கி பித்தலாட்டாம் என்று வழக்கில் வந்திருக்க வேண்டும்.
:)

உருவவழிபாடு என்று சென்றால் உறுப்புகளை கற்பனை செய்யாமல் தவிர்க்க முடியவில்லை.
:)

வவ்வால் சொன்னது…

கோவி,

//ஆடைகள் குறித்து கூடுதல் தகவல் தந்திருக்கிறீர்கள், பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் தான் நாடார் பெண்களுக்கு முலைவரி விதிக்கப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போல. வருணா'சிரமம்' கலாச்சார பாதுகாப்பு என்றால் எவரும் புரிந்து கொள்வதில்லை.
:)
//

பாரம்பரியத்தைக்கட்டிக்காக்க என்றால் , பணம் படைத்தவர்களும், ஜமீந்தார்களும் அப்படி மேலாடை அணியாமல் இருந்து இருக்கலாமே, அவர்களுக்கு பணம் இருந்ததால் கையால் தைப்பவருக்கு அதிக கூலிக்கொடுத்து தைத்துக்கொண்டார்கள். ஏழைகள் இயலாமையால் அக்காலத்தில் மேலாடை அணிய முடியாமல் இருந்தார்கள், ஆனால் அவர்களுக்கும் அணிய விருப்பம் இருந்து இருக்கும் அல்லவா.பின்னர் தையல் எந்திரங்கள், எல்லாம் வந்து மலிவாக தைக்க முடியும் என்ற போது அவர்கள் அணியக்கூடாது என்று சொன்னது கண்டிப்பாக ஆதிக்க சக்திகள், அடிமை செய்யும் நோக்கமே.

முகலாயர்கள் காலத்திலேயே உடைகளில் எல்லாம் நிறைய மாற்றம் இந்தியாவில் வந்து விட்டது , ஆனாலும் ஏழைகளுக்கு அது பயன்ப்படவில்லை.

இப்போது கூடத்தான் செல்போன் எல்லா இடத்திலும் இருப்பதாக தோன்றுகிறது, கிராமத்தில் எத்தனை விவசாயிகளால் வாங்க முடிகிறது, அங்கே அதிக நிலம் கொண்டவர்கள் மட்டுமே வாங்க முடிகிறது அல்லவா, ஆனால் எதிர்க்காலத்தில் விலைக்குறைந்து 10 ரூவாக்கு செல் போன் விற்றால் அதை வாங்க கூடாது என்று கிராமத்தில் இருக்கும் நிலச்சுவாந்தார் சொன்னால் எப்படி இருக்கும்?

அக்காலத்தில் மேலாடை அணிய விரும்பியவர்களை தடுத்ததும் அப்படிப்பட்ட சர்வாதிகார, மேல் குடி மனோபாவம் தான்.

இப்போதும் கூட பல கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செருப்பு அணிந்தோ, சைக்கிளில் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களை எல்லாம் மாற்ற இன்னும் பல பெரியார்கள் தேவை!

கோவி.கண்ணன் சொன்னது…

//
இப்போதும் கூட பல கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செருப்பு அணிந்தோ, சைக்கிளில் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களை எல்லாம் மாற்ற இன்னும் பல பெரியார்கள் தேவை!

10:59 AM, February
//

வவ்ஸ்,

இந்துமதத்தில் தோன்றிய 'பெரியார்கள்' என்ற இதிகாசங்கள் கூட வருங்காலத்தில் வந்து அதற்கு கவசங்கள் ஏற்பட்டாலும் ஏற்படும் படும்.

பெரியார் இராமர் அவதாரமாம்.
:)))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்