பின்பற்றுபவர்கள்

21 ஜனவரி, 2008

புள்ளையில்லாதவன் சொத்துக்கு தெருவில் போகிறவனெல்லாம் வாரிசு !

தமிழக அரசியலில் எம்ஜிஆர் வாரிசுரிமைப் போர் பகிரெங்கமாக வெடிக்கிறது. இராமவரம் தோட்டத்தில் ஜெ, "நான் தான் உண்மையான வாரிசு மற்றவர்களெல்லாம் புற்றீசல்கள்" என்றார்.

இதைக்கேட்டு விஜயகாந்த் உடனடியாக மறுப்பு தெரிவிக்காவிட்டாலும் சரத் முந்திக்கொண்டு, எம்ஜிஆர் எப்போது ஜெ வை தன் வாரிசு என்று அழைத்தார் ? என்று கேள்விகேட்டார். அதைத் தொடாந்து விஜயகாந்த்,

"எம்.ஜி.ஆர் யாரையாவது வாரிசு என்று சொன்னாரா. தொண்டர்கள், ரசிகர்கள் தான் என்னுடைய வாரிசு என்று தான் எம்.ஜி.ஆர் சொன்னார்.

மகாத்மா காந்தி, எனது அரசியல் வாரிசு நேரு, ஆன்மீக வாரிசு வினோபா என்று சொன்னார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் தனக்கு வாரிசு என யாரையும் சொல்லவில்லை.

நாட்டு மக்கள் ஏமாறக்கூடாது என்பதால் தான் அவர்கள் வாரிசு என்று யாரையும் சொல்லவில்லை.

தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லும் அவர் (ஜெயலலிதா), 1987ம் ஆண்டுக்கு பின்னர் எப்போதாவது ராமாவரம் தோட்டத்துக்கு சென்றாரா. குளத்தின் தாமரையின் வாசனை தவளைக்கு தெரியாது. ஆனால் எங்கிருந்தோ வரும் வண்டுக்குத்தான் தெரியும். இதுபோல எம்.ஜி.ஆர் என்ற தாமரை, வண்டாகிய விஜயகாந்துக்கு தான் தெரியும்.

நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று எப்போதுமே சொன்னதில்லை. ஆனால் என்னிடம் உள்ள தாராள குணத்தை பார்த்து எம்.ஜி.ஆரின் வாரிசாக மக்கள் என்னை நினைக்கிறார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக என்னை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்" என்றார். - உட்டாலக்கடி எப்படி இருக்கு, கேப்டனுக்கு அரசியல் பக்காவாக வருது !
:)))

ஜெயலலிதா எம்ஜிஆரின் ஜோடியாக நடித்தார், விஜயகாந்த் ?

பாமகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. திமுகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. பிரச்சனையே வாரிசுகள் தான்:)). இந்திய, தமிழக கட்சித் தலைவர்கள் பெனாசீரை பின்பற்றி "தனக்கு பின் கட்சியின் வாரிசு இவர்" என்று அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கு குழப்பம் வராது. கட்சியை லிமிடெட் கம்பெணி ஆக்கி பதிவு செய்துவிட்டால், தானாகவே வாரிசுகளுக்கு போய்ச் சேரும், உயில் கூட தேவை இல்லை. அடுத்து பங்கு சந்தையில் கூட விடலாம்

:)

10 கருத்துகள்:

வாக்காளன் சொன்னது…

கோ வீ, உசார்..

இப்போ பாலா வருவாரு... "இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாமா, திராவிடம், திம்மினு ஆடுவாரு..
அப்புறம் ஒருத்தர் வந்து, புள்ளையில்லாதவன்னு சொல்றீங்களே, மறைந்த ஒருவர் பற்றி இப்படி பேசுறது தான் திராவிட கலாசாரமா கேட்கலாம்.

அனானி பேருல 2 , 3 பேரு வந்து, கலைஞர் , சோனியா, கலைஞர் வீட்டு கன்னுகுட்டி, சோனியா வீட்டு பூனைக்குட்டி வரை இழுத்து வம்பு பன்னலாம்.

இப்படி சம்பந்தமே இல்லாம கருத்துக்கள் வரலாம், அதுக்கு ஒரே காரணம், ஜெ பற்றி தவறா படும்படி எழுதியிருக்கீங்க..

TBCD சொன்னது…

எ.ஏ.தி.கத்துக்கு இன்னும் யாரையும் வாரிசாக அறிவிக்கவில்லை, என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

இவன்,
எ.ஏ.தி.க தலைமைச் செயலகம்,
பினாங்க்

ஸ்ரீ சொன்னது…

பாமகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. திமுகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. பிரச்சனையே வாரிசுகள் தான்:)).


100% உண்மை.

சின்னப் பையன் சொன்னது…

மாநிலக் கட்சியோ அல்லது தேசியக் கட்சியோ, பத்தாயிரம் செலவானாலும் பரவாயில்லை... நான் வாரிசாக தயாராக உள்ளேன்.

மங்களூர் சிவா சொன்னது…

ஓ இது தமிழ்நாட்டு அரசியலா!?!?!

அவ்வ்வ்வ்

தேவேகெளடா பத்தி எதாவது பதிவு போடுங்கப்பு!!

துளசி கோபால் சொன்னது…

இப்படிக் குழப்பங்கள் வரலாம் என்ற (முன்)ஜாக்கிரதையால்தான் துளசிதளத்தில் உள்ள யானைகளுக்கு நம்ம பொன்ஸை வாரிசாக ரொம்ப நாட்களுக்கு முன்னேயே அறிவிச்சுட்டேன்.:-)

அது இருக்கட்டும், ஜெ. எம்ஜிஆருக்கு ஜோடியா நடிச்சார். விஜயகாந்த்? அப்படின்னு போட்டா என்ன அர்த்தம்?

விஜயகாந்தை ஜோடியாப் போடாதது யார் குற்றம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இப்படிக் குழப்பங்கள் வரலாம் என்ற (முன்)ஜாக்கிரதையால்தான் துளசிதளத்தில் உள்ள யானைகளுக்கு நம்ம பொன்ஸை வாரிசாக ரொம்ப நாட்களுக்கு முன்னேயே அறிவிச்சுட்டேன்.:-)

அது இருக்கட்டும், ஜெ. எம்ஜிஆருக்கு ஜோடியா நடிச்சார். விஜயகாந்த்? அப்படின்னு போட்டா என்ன அர்த்தம்?

விஜயகாந்தை ஜோடியாப் போடாதது யார் குற்றம்?
//

துளசி அம்மா,

அரசியல் பதிவுக்கு கருத்து சொல்ல வருவிங்க என்று எதிர்பார்க்கல.
:)

துளசி தளத்துக்கு பொன்ஸ் சரியான வாரிசுதான். பதிவும் பண்ணிவிடுங்கள் !

எம்ஜிஆருடன் ஜெ ஜோடியாக நடித்து இருப்பதால் உரிமை கொண்டாடலாம், எம்ஜிஆருக்கு விஜயகாந்த் மகனாக நடித்து இருக்கிறா ? என்று கேட்பதாக பொருள் !!!

அரை பிளேடு சொன்னது…

ராமன் தேடிய சீதை படத்தில் எம்ஜியார் தேடி கண்டுபிடித்த ஜெயலலிதாவே எம்ஜியாரின் வாரிசு.

அவர்தான் எம்ஜியாரின் கொள்கையை என்னாளும் பரப்பும் கொள்கை பரப்பு செயலாளர்.

முபாரக் சொன்னது…

//கட்சியை லிமிடெட் கம்பெணி ஆக்கி பதிவு செய்துவிட்டால், தானாகவே வாரிசுகளுக்கு போய்ச் சேரும், உயில் கூட தேவை இல்லை. அடுத்து பங்கு சந்தையில் கூட விடலாம்
//

நல்ல ஐடியா :-)

இன்னும் கொஞ்ச வருசத்துல இது நிச்சயம் நடக்கும்னு நம்பலாம்

PRABHU RAJADURAI சொன்னது…

எம்ஜிஆர் தனது கலையுலக வாரிசாக ஒருமுறை பாக்கியராஜை அறிவித்தார்

அது கிடக்கட்டும், சட்டப்படி புள்ளையில்லாதவன் சொத்துக்கு யார் வாரிசு?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்