பின்பற்றுபவர்கள்

14 ஜனவரி, 2008

ஆப்பாக வந்த புத்தாண்டு வாழ்த்தும், பொங்கல் வாழ்த்தும் !

புத்தாண்டு தொடக்கத்தில் 150 மின் அஞ்சல்கள் தொடர் மின் அஞ்சல்களாக வந்தது. நாள் தோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர் பதில் மின் அஞ்சல் அனுப்ப அனுப்ப அன்பு தொல்லைகள். ஸ்பேம் தொல்லையை விட இந்த தொல்லைக்கு யாரை நொந்து கொள்வது ? இதுவல்ல பிரச்சனை

பல வலையுலக நண்பர்கள் தங்களிடம் நட்புடன் பழகுபவர்களிடம் வேண்டுகோள் காரணமாக மின் அஞ்சல் பரிமாரிக் கொள்வார்கள். நானும் அப்படித்தான் என் மின் அஞ்சலை விரும்பி கேட்டவர்களிடம் மட்டுமே மின் அஞ்சலை பகிர்ந்து கொண்டேன். அந்த வகையில் 50+ பதிவர்களின் மின் அஞ்சல் முகவரிகள் என்னிடம் இருக்கிறது. அதே போல் நானும் சில நண்பர்களின் எழுத்தால் கவரப்பட்டு அவர்களின் மின் அஞ்சல் முகவரியை பெற்று அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறேன். நன்றாக தெரிந்தவர் என்றால் மட்டுமே அவர் கேட்டுக் கொண்டால் நண்பர்களின் விருப்பத்தைப் பெற்று அவர்களின் மின் அஞ்சல் முகவரியை கேட்பவர்களுக்கு கொடுப்பது வழக்கம். ஒரு சில மின் அஞ்சல் முகவரிகளை நண்பர்களின் அனுமதி இல்லாமல் சில நண்பர்களுக்கு அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து இருக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் வாழ்த்து என்ற பெயரில் நமது மின் அஞ்சல் முகவரிகளை (CC) ஒரே மின் அஞ்சலில் இணைத்து அனுப்புவதை ஏற்கமுடியவில்லை. மின் அஞ்சல் முகவரிகள் நட்பின் காரணமாக நாமே விரும்பி அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே கொடுத்து இருக்கிறோம். அதை பொதுப்படுத்துவதால் என்ன குடிமுழுகி போய்விட்டது என்று கேட்கலாம். அங்குதான் பிரச்சனையே இருக்கிறது. இங்கு வலையுலகில் மாற்றுக் கருத்து எழுதினால் கூட முகம் சுளிப்பது போன்ற ஆபச அர்சனை செய்பவர்கள் உள்ளனர். எனக்கும் பல ஆபாச பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. அது போன்றவர்களுக்கு எனது மின் அஞ்சல் சென்றால் நாள் தோறும் ஆபாச மின் அஞ்சல் அனுப்புவதை ஒரு பிழைப்பாகவே செய்வார்கள். ஜங் மெயிலுக்கு திருப்பிவிட்டுவிட முடியும் ஆனால் இது தேவையற்ற வேலை தானே.

நாமே விரும்பிக் கொடுக்காமல் பொதுவில் மின் அஞ்சலை இணைத்து பலருக்கும் அனுப்புவதில் எனக்கும் பலருக்கும் உடன்பாடு இல்லை. ஒரு குழுவாக இருந்தால் அந்த குழுக்களுக்குள் பரிமாரி கொள்வதில் தவறே இல்லை. நமது மின் அஞ்சல் முகவரிகள் தெரிந்தால் நமது மின் அஞ்சல் போலவே போலியாக தயார் செய்து நண்பர்களுக்கு அனுப்பு தகவல் திரட்ட முயல்வார்கள். நாம் இங்கே தீவிரவாதம் எதுவும் செய்யவில்லை. ஆனால் வேலையற்றோருக்கு அதெல்லாம் தான் பிழைப்பே. எல்லோருமே எல்லோர் மீது நல்லண்ண நட்பு கொண்டிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். சிலருக்கு பலரின் முகவரிகள் தெரிந்திருக்கலாம். அதற்காக அவர்கள் அதையெல்லாம் இணைத்து மின் அஞ்சலை அனுப்பினால் தர்மசங்கடம் தான்.

நண்பர்களே அன்பர்களே, பொது மின் அஞ்சல் அனுப்பினால் தயவு செய்து எனது மின் அஞ்சல் முகவரியை அதில் இணைக்காதீர்கள். பலருக்கும் இதே போன்ற சங்கட நிலைமைதான் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் சொல்ல பதிவுகள் இருக்கிறது. பிடித்தவர்களின் பட்டியலில் இருந்தால் பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லிவிடப் போகிறார்கள். மின் அஞ்சல் முகவரியை பொதுவில் ஒருவரின் அனுமதியின்று இணைப்பது ஏற்புடையது அல்ல.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாம் யாரும் தீவிரவாதிகள் அல்ல. இருந்தும் நம் முகவரிக்கு ஆபாச மின் அஞ்சல் வருவதை தவிர்க்க நினைப்பதில் தவறு இல்லை. எனது மின் அஞ்சல் முகவரி பலருக்கும் நானே கொடுக்காமல் சென்றுவிட்டதால் எனது மின் அஞ்சல் முகவரியை மாற்றும் நிலையில் உள்ளேன்.

:(

11 கருத்துகள்:

Baby Pavan சொன்னது…

அன்புடன் உழவர் திருநாள் வாழ்த்துக்கள், பவன் & இம்சை

இப்போ தான் பாக்கறோம் இதை

இவர்கள் தயவில்லாமல் யாரும் வலையில் இயங்க முடியாது !
இம்சை
மங்களூர் சிவா
குட்டீஸ் கார்னர்
குசும்பன்
ரூப்ஸ்

இது என்ன ஆப்பா இல்ல வாழ்த்தா ஒன்னும் புரியல...

பாச மலர் / Paasa Malar சொன்னது…

ஆபத்து சூழ் உலகு..நல்ல கோரிக்கை நீங்கள் வைத்திருப்பது..

வடுவூர் குமார் சொன்னது…

பிரச்சனை இப்படியெல்லாம் இருக்கா??அட கொடுமையே. :-(

ரூபஸ் சொன்னது…

ஆமாங்க.. நிறைய பேருக்கு இதே பிரச்சினை இருக்கு.. சரி அத விடுங்க..

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கரும்பு போல உங்கள் வாழ்க்கை இனிக்கட்டும்..

எனது வலையை உங்கள் பூவில் இணைத்ததற்காக நன்றி..ஆனா நீங்க குடுத்திருகிற தலைப்பை பார்த்தாதான் பயமா இருக்கு..நான் வலையுலகுக்கு புதியவன்.. ஏதாவது தவறு இருந்தா உரிமையோட சுட்டிக்காட்டுங்க..

குமரன் (Kumaran) சொன்னது…

இந்த இடுகையில் இருக்கும் கருத்துகளை வழி மொழிகிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

//
Baby Pavan said...
அன்புடன் உழவர் திருநாள் வாழ்த்துக்கள், பவன் & இம்சை

இப்போ தான் பாக்கறோம் இதை

இவர்கள் தயவில்லாமல் யாரும் வலையில் இயங்க முடியாது !
இம்சை
மங்களூர் சிவா
குட்டீஸ் கார்னர்
குசும்பன்
ரூப்ஸ்

இது என்ன ஆப்பா இல்ல வாழ்த்தா ஒன்னும் புரியல...
//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா சொன்னது…

//
ரூபஸ் said...

எனது வலையை உங்கள் பூவில் இணைத்ததற்காக நன்றி..ஆனா நீங்க குடுத்திருகிற தலைப்பை பார்த்தாதான் பயமா இருக்கு..நான் வலையுலகுக்கு புதியவன்.. ஏதாவது தவறு இருந்தா உரிமையோட சுட்டிக்காட்டுங்க..
//
சுட்டிக்காட்டறதா தலைல நச்சினு தட்டியே காட்டுறேன்!!

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணே வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா சொன்னது…

என்னாடா இந்த பையன் மொட்டையா வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு போயிட்டான் இது புத்தாண்டுக்கா இல்ல பொங்கலுக்கானு கண்ப்யூஷனா இருக்கா??

மங்களூர் சிவா சொன்னது…

என்ன எந்த கண்ப்யூஷனும் இல்லையா!!!

அப்ப ரைட்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//
Baby Pavan said...
அன்புடன் உழவர் திருநாள் வாழ்த்துக்கள், பவன் & இம்சை

இப்போ தான் பாக்கறோம் இதை

இவர்கள் தயவில்லாமல் யாரும் வலையில் இயங்க முடியாது !
இம்சை
மங்களூர் சிவா
குட்டீஸ் கார்னர்
குசும்பன்
ரூப்ஸ்

இது என்ன ஆப்பா இல்ல வாழ்த்தா ஒன்னும் புரியல...
//

பவன்,

வாழ்த்து தான் அதில் என்ன ஐயம் !

உங்கள் குழுவில் யாரையும் தாக்குவதில்லையே !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்