பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2007

தமிழகத்து தாழ்த்தப்பட்ட பெண் தெய்வங்கள் !

உயர்வு தாழ்வு என்பது சாதிய அடிப்படையில் மனிதர்களிடம் மட்டுமா இருக்கிறது ? கடவுள் உருவச் சிலைகளிடம் கூட இந்த வேறுபாடும் தாழ்வு நிலையும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்து மத புராணங்களில் சொல்லப்பட்ட கதைகள்.

வெறும் கதைகளினால் இவற்றை நம்ப வைக்கமுடியுமா ? முடியும் தான். அதாவது முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை முதல் முறை சந்திக்கிறீர்கள். அவரிடம் பெரிதாக உங்களுக்கு அபிப்ராயம் எதுவும் இருக்காது. அப்படி சந்திக்கும் ஒருவருக்கு பெரிய பாரம்பரியமோ, குடும்பபின்னனியோ முன்பாகவே உங்களுக்கு தெரிந்து இருந்தால் முதல் முறை சந்திக்கும் போதே அவரைப் பற்றி நல்லதொரு அபிப்பிராயம் இருக்கும்.

இதுபோலத்தான் சமூகத்தில் ஒரு சமூகம் உயர்ந்தது என காட்ட அவற்றை புராணகதைகளைக் காட்டி தாங்கள் அந்த வழிவந்ததாக சொல்கிறார்கள். சத்திரியர்கள் கூட தாங்கள் நெருப்பில் இருந்து பிறந்தாகச் சொல்கிறார்கள். தில்லைவாழ் அந்தனர்கள் தேவலோகத்தில் இருந்து தேர் ஏறி வந்ததாக கதைகள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் கேட்டால் ஒரு 'பெரிய'புராணத்தைத்தான் காட்ட முடியும். வேறொன்றும் இல்லை. இது போலத்தான் முகத்தில் இருந்து கால்வரை 4 வருணத்தார் பிறந்தகதைகள் எல்லாம்.

இந்துமதத்தில் உள்ள தெய்வ உருவங்களுக்கெல்லாம் தொப்புள் வரைந்து அல்லது செதுக்கி இருப்பதால் அவை எவையும் 'தான் தோன்றியல்ல (சுயம்பு அல்ல)'. பல்வேறு சாதி / இன குழுக்குகளுக்கு தனித்தனியாக தெய்வங்கள் இருக்கின்றன. சமய நல்லிணக்கம் என்பது பிற தெய்வ உருவங்களை பிற சமயத்தினர் ஏற்றுக் கொள்வதாகும். இவ்வாறு தான் வடக்கு தெற்கு என இருந்த பல கடவுள் சின்னங்கள் இந்தியா முழுதும் இந்துக்களுக்கு பொதுவாக ஆனது.

ஒரு சமூகத்தினர் வணங்கும் தெய்வமும் மற்ற சமூகத்தினர் வணங்கும் தெய்வமும் ஒன்று என்று காட்ட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. எதனால் ? அப்பொழுதுதான் அவர்களுடைய சமய சடங்குகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். உதாரணத்திற்கு மாரியம்மன், காளியம்மன் என்ற கிராம நாட்டார் தெய்வ வழிபாடுகள் வழக்கில் அதிகமாக இருந்தன. அவற்றை புராணம் வழி வந்தது என்று காட்டுவதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியும். அம்மக்களின் சமய, சமூகவாழ்வில் ஆதிக்கம் செலுத்த முடியும் இவ்வாறு செய்வதற்கு கதைகள் தேவைப்பட்டன.

மாரியம்மனை தலைவெட்டி மாரியம்மனாக பார்த்து இருப்பீர்கள். ஏன் தலையை மட்டும் வணங்குகிறார்கள் என்று தெரியுமா ? ஒருமுறை சிவனுக்கு (ஜமதக்னி முனி அவதாரமாம்) பரசுராமன் பிள்ளையாக பிறந்தான். அவன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவன். பார்வதி மீது சந்தேகம் கொண்ட சிவன், பரசுராமனை கூப்பிட்டு பார்வதியின் தலையை சீவச் சொல்கிறார். தந்தை சொல்லை தட்டாது அவனும் அவ்வாறு செய்துவிடுகிறான். சிவன் பின்பு தன் தவறை உணரும் போது பார்வதியின் உடல் கிடைக்கவில்லை. தலைமட்டுமே கிடைக்கிறது. எப்படியாவது பார்வதியை உயிர்பிக்க செய்யவேண்டும் என்று நினைக்கும் போது அந்த வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பெண் செல்கிறார். பறைச்சி என கதைப்படி சொல்கிறார்கள். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி பார்வதிக்கு பொருத்துகிறார்கள். பார்வதி உயிர்தெழுகிறார்.

இந்த கதையை நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு சொல்கிறார்கள். கதை உண்மையா ?பொய்யா ? என்று பார்த்தால். கதை எழுதியவர்கள் அதை உண்மையாக்க மாரியம்மனை தலையுடன் மட்டும் பல்வேறு கோவில்களில் வைத்து இருக்கிறார்கள். அதாவது உடல் தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடல். வணங்குவதற்கு அருகதையற்றது எனவே தலையை மட்டும் சிலையாக வடித்து வைத்திருக்கிறார்கள். இந்த கதையின் மூலம் மாரியம்மன் என்ற நாட்டார் தெய்வம் பார்வதியாக அறியப்பட்டது. அதே சமயத்தில் தலையை மட்டும் வணங்குவதால் எச்சமூகமும் அதை உயர்ந்தோர் வழிவந்த தெய்வமாக கருதி வழிபடும். வழிபாடும் தாழ்ந்துவிடாது என்பதன் நோக்கமாகத்தான் இருக்கும்.

இதுபோன்ற தலைவெட்டி மாரி, காளியம்மன்களை படைவீட்டு அம்மன் கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம். குருவாயூரில் கிறித்துவரை விட வேண்டும் என்று போர் கோடி தூக்குகிறோம். ஆனால் பறைச்சியின் உடல் அது சிலையாக இருந்தாலும், சிலையில் இருந்தாலும் தீண்டத்தாகாததே என்று முண்டங்களால் தீர்ப்புகள் கூறப்பட்டு அம்மன் சிலைகள் தலையுடன் தமிழ்நாடெங்கும் ஈனக்கதைகளின் சின்னங்களாக இருந்து கொண்டு அருள்பாலிக்கின்றன. எனது வேண்டுதல்... தமிழக மாரியம்மன், காளியம்மன் சிலைகளுக்கு அவற்றின் உடல் கிடைக்க ஆத்திக அன்பர்கள், பக்தர்களிடமிருந்து வரம் கிடைக்க வேண்டும்.

16 கருத்துகள்:

கருப்பு சொன்னது…

முருகனுக்கே பூணூல் போட்டு ஆரியக் கடவுள் என்று சொன்ன பாரம்பரியமான சமூகம் ஆரியர்கள்.

பண்டைய இலக்கியங்களையும் அதன் சிறுபொழுது பெரும்பொழுது கடவுள்களை எடுத்துப் பாருங்கள்.

bala சொன்னது…

ஜிகே அய்யா,

தெய்வமே,
இது மாதிரி எழுதினதற்காக,உங்களுக்கே மஞ்சள் அடித்து, மூக்கில் ஒரு வளையம் மாட்டிவிட்டு ,கோவி.அம்மன் என்று சொல்லி திராவிட குமபல் வழிபடலாம்.வாழ்க கோவி.அம்மன்.

பாலா

bala சொன்னது…

//முருகனுக்கே பூணூல் போட்டு ஆரியக் கடவுள் என்று சொன்ன பாரம்பரியமான சமூகம் ஆரியர்கள்.//

கருப்பு அய்யா,
என்ன திராவிட தமிழர் தெய்வம்,முருகக் கடவுளையே பார்ப்பனீயம் திருடி எடுத்துச்செண்று விட்டதா?என்ன ஆணவம்?நமது தெய்வத்தை மீட்டு எடுத்து வரப்போவது மரம் வெட்டி கும்பலா,அல்லது மானமிகு கருப்பு சட்டை கும்பலா?சொல்லுங்கய்யா.

பாலா

Unknown சொன்னது…

என்ன ஆணவம்?நமது தெய்வத்தை மீட்டு எடுத்து வரப்போவது மரம் வெட்டி கும்பலா,அல்லது மானமிகு கருப்பு சட்டை கும்பலா?சொல்லுங்கய்யா.//

கண்டிப்பா ஆரிய அடிவருடிக் கும்பல் இல்லை அதுமட்டும் நிச்சயம்

சதுர் சொன்னது…

நல்ல கரு கிடைத்து இருக்கிறது. இது பற்றி நானும் சிந்தித்து பதிவு எழுத வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
முருகனுக்கே பூணூல் போட்டு ஆரியக் கடவுள் என்று சொன்ன பாரம்பரியமான சமூகம் ஆரியர்கள்.

பண்டைய இலக்கியங்களையும் அதன் சிறுபொழுது பெரும்பொழுது கடவுள்களை எடுத்துப் பாருங்கள்.
//

கருப்பு அவர்களே,

ஒருபக்கம் வவா சங்கத்தில் அடித்து ஆடிக்கொண்டே இங்கேயும் எட்டிப் பார்த்து இருக்கிங்க.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
ஜிகே அய்யா,

தெய்வமே,
இது மாதிரி எழுதினதற்காக,உங்களுக்கே மஞ்சள் அடித்து, மூக்கில் ஒரு வளையம் மாட்டிவிட்டு ,கோவி.அம்மன் என்று சொல்லி திராவிட குமபல் வழிபடலாம்.வாழ்க கோவி.அம்மன்.

பாலா
//

நல்லது பக்தரே ! உங்களுக்கு அருள்பாலிப்போம்.

நாமக்கல் சிபி சொன்னது…

ஆஹா!

மேட்டர் புரியாம நான அங்கன ஒரு (வெளையாட்டாத்தான்) கேள்வி கேட்டு வெச்சிட்டனே!

இப்ப இந்த பதிவைப் பற்றி:

நான் இதுவரைஅறிந்திராத செய்திகளாக இருக்கின்றன.

நன்றி!

நாமக்கல் சிபி சொன்னது…

காணிக்கைகளை உண்டியலில் மட்டுமே செலுத்தவும்.டிரஸ்டி,
கோவியம்மன் திருகோவில்,
திருமங்கலம்,
சென்னை.

மங்கை சொன்னது…

நல்ல பதிவு கோவி அவர்களே... இதை பற்றி எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை...

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...
நல்ல பதிவு கோவி அவர்களே... இதை பற்றி எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை...

11:21 AM, June 20, 2007 //

மங்கை அவர்களே,

நான் ஆசைப்பட்டு எழுதியதற்கு எனக்கு ஆபாச கமெண்டுகள் கிடைத்தது. நான் வெளி இடவில்லை.
:(

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
ஜிகே அய்யா,

தெய்வமே,
இது மாதிரி எழுதினதற்காக,உங்களுக்கே மஞ்சள் அடித்து, மூக்கில் ஒரு வளையம் மாட்டிவிட்டு ,கோவி.அம்மன் என்று சொல்லி திராவிட குமபல் வழிபடலாம்.வாழ்க கோவி.அம்மன்.

பாலா
//

மூக்குத்தி தானே பரவாயில்லை 'கொண்டை' உரிமையை எல்லாம் நீங்களே வச்சுகுங்க. சதுர்வேதி பதிவை படிச்சேன்.

உங்களோடதா பாலா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
என்ன ஆணவம்?நமது தெய்வத்தை மீட்டு எடுத்து வரப்போவது மரம் வெட்டி கும்பலா,அல்லது மானமிகு கருப்பு சட்டை கும்பலா?சொல்லுங்கய்யா.//

கண்டிப்பா ஆரிய அடிவருடிக் கும்பல் இல்லை அதுமட்டும் நிச்சயம்
//

மகி,

ஒரு இடத்தில் கமா (,) மிஸ்ஸிங். மார்க்கு கிடையாது.

இம்போசிசன் தருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுர்வேதி said...
நல்ல கரு கிடைத்து இருக்கிறது. இது பற்றி நானும் சிந்தித்து பதிவு எழுத வேண்டும்.
//

நீங்க பாலாவா ? அல்லது பாலாவுக்கு போலியா ?

பாலாவே ஒரு போலின்னு யாரொ சொல்றாங்க. தெரிஞ்சா சொல்லுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
காணிக்கைகளை உண்டியலில் மட்டுமே செலுத்தவும்.

டிரஸ்டி,
கோவியம்மன் திருகோவில்,
திருமங்கலம்,
சென்னை.
//

சிபி,

காணிக்கைகளை பின்னூட்ட பெட்டிகளில் கூட போடுங்க, அதுதான் இங்கே வேண்டும்.
:)

priyamudanprabu சொன்னது…

மாரியம்மனுக்கு வேறு கதை படித்தேனே ,, ம்ம் நிறைய கதை இருக்கு போல

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்