பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2007

வாங்க மூனுக்கு போகலாம் !


உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !


உலக மக்களை உயர்த்தும் நாள் !

சரித்திரத்தில் சரித்திரம் படைக்கும் நாள் !

நாளைய பிரதமரின் இன்றைய வெளியீடு !

சிங்கத் தமிழன் சினந்து எழுகிறான் !

எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !

உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் !

இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !

இறைவன் இன்று உலகமக்கள் அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார் !

இன்று ஒரு புதிய உலகம் பிறக்கிறது !

நெப்போலியனுக்கு பிறகு உலகம் பார்க்கப் போகும் ஒரே வீரன்

தலைவனின் தலைமை நாடுவோம், அவன் பாதம் போற்றுவோம்.

சி வா ஜி

:))))))))))))நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிவாஜி வெளியீட்டு நாள் வாசகத்தை பகிர்ந்து கொண்டு ரஜினி ரசிகர்களுக்கு உதவுங்கள்.

என்னது ... தமிழ்நாட்டு மேல் ஏன் இன்னும் எவனும் குண்டு போடலையா ?

ன்னு கேட்கிறிங்களா ?

ஆளைவிடுங்க சாமி !!!

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்? உலக "மூடர்களுக்கு உப்பற்ற நாள் "

பெயரில்லா சொன்னது…

//எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !//

ஏன் மறுபடியும் இமய மலைக்கு வந்து என்னை பாக்கனுமா?

பெயரில்லா சொன்னது…

//இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !//


ஏன் இதுதான் அவருக்கு கடைசி படமா?

பெயரில்லா சொன்னது…

//உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் //

ஆமா ஒலகத்திலயே ஒரே நாள்ள அதிகம் பேர் மெண்டலானது இன்னைக்குத்தான்

பெயரில்லா சொன்னது…

நீ உறுப்படுவியா?

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைத்து அமுகவினருக்கும் நன்றி !

VSK சொன்னது…

சிவாஜி பற்றிய இந்தப் பதிவுக்கு அனைத்துலக ரஜினி ரசிகர்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

:))

VSK சொன்னது…

கலையுலகத் தந்தை இன்று கலைதெய்வத்துடன் படத்தைப் பார்த்துக் களித்தாராமே!

:))))

ILA (a) இளா சொன்னது…

நல்ல பதிவு..ஹ்ஹஹ்ஹஹஹஹாஹஹ்ஹ

சதுர் சொன்னது…

மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுர்வேதி said...
மூனுக்கு போறதுக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம் கோவி.கண்ணன் அவர்களே?
//

பிடிக்கவில்லை என்றால் 'சிவாஜி பார்த்துட்டு முன்னுக்கு போங்க' ன்னு டைட்டில் மாத்திடலாமா ?

மிஸ்டர் சதுர்வேதி ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்