பின்பற்றுபவர்கள்

11 ஜூன், 2007

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?

இந்து மதத்தில் விழுந்த சாக்கடையில் நெழியும் புழுக்களில் சில 'பிற மதத்தினர் கோவிலுக்குள்' வரக்கூடாது என்ற ஆகாத ஆகாமம் மற்றும் அதை ஏற்படுத்தியவர்கள். தோற்றமில்லாத மதம் என்று ஒருபக்கம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் இரட்டை வேடதாறிகளின் எச்சில் வார்த்தைகள் அவை. மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதத்தில் பிறமதத்தைக் குறித்த கட்டுப் பாடுகள் இருக்க முடியும் ?

இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் நன்கொடை கொடுத்தால் தீட்டுக் கழிக்காமல் 'தொட்டு' எடுத்துக்கொள்ளப்படம் காசுகளுக்கு இல்லாதா தடை ஏன் அவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் ? இந்துக் கோவில்களின் எக்ஸ்டன்சன்களாக பல வெளிநாடுகளில் கோவில்கள் எழும்பிவிட்டன. அங்கெல்லாம் சென்று இதே ஆகாதவாதிகள் ஆகமம் குறித்துப் பேசினால் கோவில்கள் அங்கு இருக்காது. கிறித்துவ நாடுகளில் இந்துக் கோவில்கள் கட்ட அனுமதிக்கப் படும் போது ஏன் கிறித்துவர்கள் என்பதால் இந்திய இந்து கோவிலில் இன்னும் இந்த இழிவான ஆகமம் இருக்கிறது ?

சர்வேசன் பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதாவது தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்ட மதங்கள் என்று பிறமதங்களும் தாழ்த்தப்பட்டவையாக பார்த்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கவேண்டும். அல்லது பிறமதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் என்று ஒட்டுமொத்தமாக பிறமதத்தினருக்கு அனுமதி இல்லை என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்குத்தான் மதங்களெல்லாம். அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவன் என்று ஆத்திகர்களால் நம்மபடும் இறைவனுக்கு எங்கே மதம் ? அப்படி ஒருவேளை தீட்டுப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் சக்தி இழந்து போகும் அளவுக்கு பலவீனமானவனா இறைவன் ?ஒருகாலத்தில் சூத்திரன் வரக் கூடாது என்ற கோவில் களெல்லாம் இன்று சூத்திரன் நுழையமுடிகிறதே கோவில் கோபுரங்கள் சரிந்துவிட்டதா ?

சில ஆபாத்பாண்டவர்கள் உளறுகிறார்கள் அதாவது கோவிலுக்குள் பிறமதத்தினரைவிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் ஐயா இந்த ஆகாத ஆகமவிதிகள் பாபர் மசூதிக்கு இடிப்புக்கு முன்பு மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாவே இருந்துவருகின்றன. மத வழிபபட்டுத் தளங்களைவிட பொது கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம்,மதம்,சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்ததில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது. அதையும் தூய்மைபடுத்தி அங்கு வருவோர் எல்லோரையும் சமமாக பார்த்தும் தோட்டி என்று இழிபெயரால் பலரால் அழைக்கப்டுபவனே கடவுள்.

13 கருத்துகள்:

SurveySan சொன்னது…

//// மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதத்தில் பிறமதத்தைக் குறித்த கட்டுப் பாடுகள் இருக்க முடியும்////

இதுவேதான் என் குழப்பமும்!

நடுவில் தோன்றிய, ஏதோ ஒரு காரணத்துக்க்காக, இந்த கோட்பாடுகளை அன்றைய அரசன் உருவாக்கி இருக்கக் கூடும்.

ரொம்ப ஆராயாம, சில கோட்பாடுகளை தூக்கி எறிய வேண்டியது நம் கடமை.

பெயரில்லா சொன்னது…

சகோதரரே!
அர்த்தமற்றவற்றை படித்த.. அர்த்தமற்ற சிந்தனைகளால் ஏற்பட்ட
அர்த்தமற்ற பதிவு. உங்களுக்கு கிடைத்த அருமையான மனிதப் பிறப்பின் சக்தியை அடுத்தவரைக் குறைகூறியும், திட்டியும் வீணாக்குகிறீர்களே.
சத்தியத்தை சத்தியமாகவே உணர வேண்டும் என்ற எண்ணத்தை சத்தியமாகவே தியானம் செய்யுங்கள். உண்மை புலப்படும். விவேகனந்த மடம் அருகில் இருந்தால் சென்று வாருங்கள். நினைப்பது, பேசுவது, செய்வது எல்லாம் நல்லவையாக்குங்கள். கிடைத்த பிறப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
ஆண்டவன் அருள் புரியட்டும்.:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
சகோதரரே!
அர்த்தமற்றவற்றை படித்த.. அர்த்தமற்ற சிந்தனைகளால் ஏற்பட்ட
அர்த்தமற்ற பதிவு.
//

மனிதனுக்குத்தான் மதங்களெல்லாம். அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவன் என்று ஆத்திகர்களால் நம்மபடும் இறைவனுக்கு எங்கே மதம் ? அப்படி ஒருவேளை தீட்டுப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் சக்தி இழந்து போகும் அளவுக்கு பலவீனமானவனா இறைவன் ?

- மேலே எழுதி இருக்கிறேன். படித்தும் தெளியவில்லை என்றால் ஆத்திரம் ஆத்திகம் என்ற பெயரில் உங்கள் கண்ணை மறைக்கிறது. மதத்தின் பெயரால் நடைபெறும் இழிசெயல்களை ஆதரிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு ஓராயிரம் விவேகநந்தர், இராமகிருஷ்னர், வள்ளலார் போதாது. எனக்கு யாரும் தேவை இல்லை

பெயரில்லா சொன்னது…

//ஆத்திரம் ஆத்திகம் என்ற பெயரில் உங்கள் கண்ணை மறைக்கிறது.//
சகோதரரே!
இதில் ஆத்திரப் படுவதற்கோ.. ஆனந்தப் படிவதற்கோ ஏதும் இல்லை.

//விவேகநந்தர், இராமகிருஷ்னர், வள்ளலார் போதாது. எனக்கு யாரும் தேவை இல்லை//
உங்கள் விதி உங்கள் கைகளில் தான், அவரவர் எண்ணங்களே அவரவர் வாழ்க்கையை வடிவமைக்கிறது...:-)

பெயரில்லா சொன்னது…

Can all goto mosques????

This is just a simple qustion not to redirect anything......

Áccept hunduism and come in....

If you can obey the rules and come to my place. This what they said....

Hope Tamilnadu goverment is also running with temple money bços part of all the parties are in temple committe money so can we call them as they all beleive in god.....

பெயரில்லா சொன்னது…

//மத வழிபபட்டுத் தளங்களைவிட பொது கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம்,மதம்,சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்ததில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது.
//

அப்போ அங்கேயே போ. கோவிலுக்கு ஏன் வர்ரே?

அய்யா, மசூதிக்குள்ள முதல்ல ஒரு பொம்பளைய சகஜமா அனுமதிக்கட்டும். அப்புறம் பேசுவோம் மசூதில இந்து வரலாமான்னு. இந்த வெட்டி விவாதமெல்லாம் வேலைக்காகாது சார். பேசாம இருக்கறது உங்களுக்கு நல்லது.

பெயரில்லா சொன்னது…

//எனக்கு யாரும் தேவை இல்லை//

ஆமா,இவரு பெரிய ஜீனியஸ் பாருங்க,அதான் யாரும் தேவையில்லை;எழுதுற அழகைப் பாத்தா IQ என்னமோ நெகடிவ் ரேஞ்சுல இருக்குற மாதிரி தெரியுது;ஆனா அல்பத்தனமா தன்னை அய்ன்ஸ்டைன்ன்னு நினைத்துகொண்டு ஆணவமா குதிக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//anonymous said...

ஆமா,இவரு பெரிய ஜீனியஸ் பாருங்க,அதான் யாரும் தேவையில்லை;எழுதுற அழகைப் பாத்தா IQ என்னமோ நெகடிவ் ரேஞ்சுல இருக்குற மாதிரி தெரியுது;ஆனா அல்பத்தனமா தன்னை அய்ன்ஸ்டைன்ன்னு நினைத்துகொண்டு ஆணவமா குதிக்கிறது. //

அனானி அண்ணா !
காமடி ??? - ரசித்தேன்.

முகத்தைக் காட்டாமல் கமெண்ட் போடும் தங்களின் அல்பத்தனங்கள் என்னிடம் தாங்கள் காணாததில் தங்களின் IQ தானம் (எழுத்துப்பிழை அல்ல) மிக சிறப்பானது !

வாழ்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//பகவான் said...
அப்போ அங்கேயே போ. கோவிலுக்கு ஏன் வர்ரே?

அய்யா, மசூதிக்குள்ள முதல்ல ஒரு பொம்பளைய சகஜமா அனுமதிக்கட்டும். அப்புறம் பேசுவோம் மசூதில இந்து வரலாமான்னு. இந்த வெட்டி விவாதமெல்லாம் வேலைக்காகாது சார். பேசாம இருக்கறது உங்களுக்கு நல்லது.//

உங்களை மாதிரி 'பகவான்' களால் தான் இந்து மதத்தில் இருந்து சாக்கடைகளை முற்றிலும் அப்புறப்படுத்த முடியவில்லை. நான் ஒரு இந்து, இந்து மதத்தில் இருக்கும் குறைகளை களைய முற்படுவது எனது உரிமை. மாற்றுமதங்களில் குறை கூற உங்களைப் போன்ற ஆர்எஸ்எஸ் வாதிகள் இருக்கிறார்கள்.

அப்போ தெளிவாக சொல்லனும் அவன் என்னை அனுமதிவில்லை. நான் அவனை அனுமதிக்கவில்லை என்று. அதை விடுத்து ஆகமம் தீட்டு என்று பழங்கால தீண்டாமை கதைகளை செல்லிக் கொண்டிருந்தால் இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே கையில் எடுப்பார்கள் ? எதை ?

போராட்டத்தை !!!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ரொம்ப ஆராயாம, சில கோட்பாடுகளை தூக்கி எறிய வேண்டியது நம் கடமை.//

சர்வேசன்,

வழிமொழிகிறேன்

சீனு சொன்னது…

//நான் ஒரு இந்து, இந்து மதத்தில் இருக்கும் குறைகளை களைய முற்படுவது எனது உரிமை. மாற்றுமதங்களில் குறை கூற உங்களைப் போன்ற ஆர்எஸ்எஸ் வாதிகள் இருக்கிறார்கள்.//

அப்டி போடுங்க.

நாமக்கல் சிபி சொன்னது…

அக்னி நட்சத்திரம் தொடர்கிறது போலும்!

நல்ல பதிவு!

//ரொம்ப ஆராயாம, சில கோட்பாடுகளை தூக்கி எறிய வேண்டியது நம் கடமை.
//

கரெக்டா சொல்றாரு சர்வேசனும்!

நந்தா சொன்னது…

என்ன சொல்வது. ஆகம விதிகளின் படி என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு மண்டையாட்டும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது. அய்யா அனானி ஒரு இடத்திற்குப் போனால் அந்த இடத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எல்லாம் சரி. யார் இயற்றியது அந்த விதிகளை. அரசாங்கமா?

இல்லையே,தன் இனத்தைத் தவிர மற்ற அனைவருமே தனக்குத் தாழ்ந்தவர்தான் என்று சாமியை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் தனக்கு ஆதரவாக எற்படுத்திக் கொண்ட விதிமுறைகளை நாங்கள் மறு கேள்வி கேட்காமல் பின்பற்றி விட வேண்டுமோ?

இவ்வளவு ஏன். ஒரு கோயில் அதற்கு விதி முறைகள் என்றால் அதை எல்லா இந்துக் கோயில்களிலும் ஒரே மாதிரி வைக்க வேண்டியதுதானே? ஏன் இத்தனை வித்தியாசங்கள் ஒவ்வொரு கோயிலிற்கும். வேறு ஒன்றுமில்லை. அந்தந்த கோயிலைச் சேர்ந்தவர்கள் அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி அமைத்துக் கொண்ட வரையறை அது.

அனானி மனுஷனை அடிச்சி கொன்னுட்டு சாமிகளை வாழ வைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்