பின்பற்றுபவர்கள்

11 மே, 2007

'ஆ' ன்னா 'உ' ன்னா ஆட்சியைக் கலைக்கனும் !

மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி ... ஓராண்டுகள் உருண்டோடிவிட்டது ... 50 ஆண்டுகால சட்டமன்ற பணிக்காக கலைஞர் பொன்விழா கொண்டாடுகிறார். கலைஞர் தலைமையில் ஒவ்வொரு முறை அரசு அமையும் போதும் கலைஞர் எதிர்பாளர்களுக்கு கண்களை உறுத்துகிறது.

தமிழக மக்கள் என்னமோ அழகிரி நல்லவர் என்ற மாயையில் சிக்கி திமுகவிற்கு வாக்கு அளித்தது அமோக வெற்றி பெறச் செய்ததது போலவும் அழகிரிக்கு தற்பொழுது பெயர் கெட்டுவிட்டதால் திமுக அரசு கலைக்கப் படவேண்டும் என்று மக்கள் கூப்பாடு போடுவது போலவும் சிலர் மனவியாதி காரணமாக புலம்பி வருகின்றனர். இதே போன்று ஆட்சி கலைப்பு கோசம் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தல் வன்முறை நடந்த போதும் எழுந்து அடங்கியது.

இவர்கள் கடந்த கால வரலாறுகளை எல்லோருமே மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பினாத்துகின்றனர். அதே கரத்தே தியாகராஜன் குழுவினர்தான் அதே போல ஒரு அசிங்கத்தை அம்மா ஆட்சியின் போதும் அரங்கேற்றினார்கள் அப்பொழுதெல்லாம் ஆட்சிக் கலைப்பு கோஷ்டியினர் எங்கு ஓடி ஒழிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருக்கிறது என்று சென்னாரெட்டி சுப்பரமணிய சாமிக்கு ஜெ- க்கு எதிராக ப்ளசண்ட் டே வழக்கு தொடுக்க அனுமதி அளித்த போது 'ஆட்சி கலைப்பு' ஆட்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அம்மா மீது உள்ள பக்தியின் காரணமாகவா அல்லது பயம் காரணமாகவா இவர்கள் 'ஆட்சி கலைப்பு' கோசத்தை மறந்து போனார்கள் என்று தெரியவில்லை.

திமுக அரசு மக்கள் ஆட்சியில் நம்பிக்கை வைத்து கடந்த காலங்களில் குறிப்பாக ஜெ - அரசுக்கு எதிராக திமுக அரசு மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் 'ஆட்சி கலைப்பு' கோசத்தை எழுப்பியதே இல்லை. ஆட்சிக் கலைப்பு என்பது ஆடை கலைப்பு போல் அவ்வளவு சுலபமா ? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க விரும்பி வந்து வாக்களிப்பதே அதியம் ஆகிவிட்ட மட்டுமின்றி அரசுக்கு மக்கள் வரி பண வீன்விரயமும் தேர்தலால் ஏற்படும் என்பது இவர்களுக்கு தெரியாதா ?

கலைஞர் அரசுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாது என்று நன்கு தெரியும், ஒரு ஆண்டில் குற்றம் சொல்லும் அளவுக்கு தமிழக அரசு மோசமாக எதுவும் செய்துவிடவில்லை. எதாவது காரணம் வேண்டுமென்றே அழகிரி - தினகரன் செய்தியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கும் முடிச்சு போட்டு எதாவது நடக்காத என்ற அற்ப ஆசையில் புலம்பி வருகிறார்கள். 'ஆட்சி கலைப்பு' என்பதற்கு மதிப்பு என்ன என்றால் அது ஒரு ரெடிமேட் கோஷம் அவ்வளவே. மக்கள் ஆட்சியின் மதிப்பு தெரியாமல் அவ்வப்போது வயிற்றுவலி எடுப்பவர்கள் தேடும் ஒரு அருமருந்து. எந்த ஆட்சியுமே விருப்பப்பட்டு அங்கேயே இருக்க முடியாது என்று இவர்களுக்கு தெரியாதது பரிதாபம்.

அழகிரி - தினகரன் - சன் டிவி நடத்துவது குடும்ப யுத்தம். அதற்கும் திமுக ஆட்சிக்கு முடிச்சுப் போடுபவர்கள் திரும்பவும் 2 ஆவது பத்தியை படியுங்கள்.

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இவர்கள் கடந்த கால வரலாறுகளை எல்லோருமே மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பினாத்துகின்றனர். அதே கரத்தே தியாகராஜன் குழுவினர்தான் அதே போல ஒரு அசிங்கத்தை அம்மா ஆட்சியின் போதும் அரங்கேற்றினார்கள் அப்பொழுதெல்லாம் ஆட்சிக் கலைப்பு கோஷ்டியினர் எங்கு ஓடி ஒழிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.


So Karunanidhi period = Jayalaitha period....

Good to hear

பெயரில்லா சொன்னது…

//இவர்கள் கடந்த கால வரலாறுகளை எல்லோருமே மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பினாத்துகின்றனர். அதே கரத்தே தியாகராஜன் குழுவினர்தான் அதே போல ஒரு அசிங்கத்தை அம்மா ஆட்சியின் போதும் அரங்கேற்றினார்கள் அப்பொழுதெல்லாம் ஆட்சிக் கலைப்பு கோஷ்டியினர் எங்கு ஓடி ஒழிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
//

நீ தப்பு பண்றப்ப நான் மூடிகிட்டு இருந்தேன்ல, இப்ப நான் தப்பு பண்றப்ப நீ மூடிகிட்டு இரு.நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். வாழ்க ஜனநாயகம்!

Unknown சொன்னது…

அட விடுங்க ஜிகே அவனுங்களுக்கு இன்னும் அடங்கலை அதனாலதான் இப்படி பினாத்துறாங்க கலைஞர் மலிவு அரசியல் பன்றதா சொல்ற இந்த பன்.....ங்க இப்ப தினகரன் கொலைகளுக்கு ஆட்சிய கலைக்கனுமுன்னு ஊளையிடுறாங்க.... என்ன அவங்க ஆதங்கம் தெரியுமா ஏன் மூனு பேரு மட்டும் செத்தாங்க இல்லை ஏன் பத்திரிகை ஆபீசில் நடத்துனாங்க இப்படி இல்லாம ஒரு பொது இடத்தில ஒரு நூறு பேர போட்டு தள்ளினா நமக்கு அரசியல் நடத்த கொஞ்சம் தோதா இருக்கானுங்க நீங்க வேற

VSK சொன்னது…

தலைப்பு தொடங்கி கடைசிவரி வரை எழுத்துப்பிழைகள்!

பதிவைப் போலவே!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
தலைப்பு தொடங்கி கடைசிவரி வரை எழுத்துப்பிழைகள்!

பதிவைப் போலவே!
//

சிலர் பலரின் தலையெழுத்தை பிழையாகவே எழுதி வைத்ததைவிடவா பதிவின் எழுத்துக்கள் பிழையாக தெரிகிறது. விஎஸ்கே ஐயாவின் களையெடுப்பு அங்கும் 'செல்'லுமா ?
:)))))

பெயரில்லா சொன்னது…

ஜிகே அய்யா,

நீங்க என்னதான் நாகரிகமா மஞ்சதுண்டுக்கு ஜல்லி அடித்தாலும்,I Q லெவலில்,உங்களுக்கும்,லாரியில் ஓசி பிரியாணிக்கும்,சாராயத்துக்கும் மஞ்சதுண்டு அய்யாவுக்கு கோவிந்தா போட்டபடி பயணம் செய்யும் சராசரி தொண்டனுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.

பாலா

வெட்டிப்பயல் சொன்னது…

//கோவி.கண்ணன் said...

//VSK said...
தலைப்பு தொடங்கி கடைசிவரி வரை எழுத்துப்பிழைகள்!

பதிவைப் போலவே!
//

சிலர் பலரின் தலையெழுத்தை பிழையாகவே எழுதி வைத்ததைவிடவா பதிவின் எழுத்துக்கள் பிழையாக தெரிகிறது. விஎஸ்கே ஐயாவின் களையெடுப்பு அங்கும் 'செல்'லுமா ?
:))))) //

என்னங்க இது?

எழுத்துப்பிழைனு சொன்னா அதை சரி செய்துட்டேனு சொல்றத விட்டு இப்படி நக்கல் பண்றீங்க...

உங்கள மாதிரி பெரியவங்களே இப்படி சொல்லும் போது எங்கள மாதிரி இருக்கவங்க இன்னும் கேவலமாதான் எழுத்துப்பிழையோட எழுதுவோம்...

சரி, மொழி முக்கியமா??? சொல்லும் விஷயம் முக்கியமா?

அனானிக்கெல்லாம் பதிவு போடறீங்க... இதுக்கு அடுத்து ஒரு பதிவு போடுங்க...

நான் சீரியஸா தாங்க சொல்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எழுத்துப்பிழைனு சொன்னா அதை சரி செய்துட்டேனு சொல்றத விட்டு இப்படி நக்கல் பண்றீங்க...

உங்கள மாதிரி பெரியவங்களே இப்படி சொல்லும் போது எங்கள மாதிரி இருக்கவங்க இன்னும் கேவலமாதான் எழுத்துப்பிழையோட எழுதுவோம்...

சரி, மொழி முக்கியமா??? சொல்லும் விஷயம் முக்கியமா?

அனானிக்கெல்லாம் பதிவு போடறீங்க... இதுக்கு அடுத்து ஒரு பதிவு போடுங்க...

நான் சீரியஸா தாங்க சொல்றேன்.
//

பாலாஜி,

எழுத்துப்பிழையை மட்டும் குறிப்பிட்டு இருந்தால் நான் என்ன சொல்லப் போகிறேன் ?

'பதிவைப் போலவே' ன்னு ஒரு நக்கல் வரும் போது சரியாக நாமும் சொல்லாவிட்டால் பின்னூட்டம் போட்டவருக்கு ஏமாற்றம் மிஞ்சும்.
:)

இதுதான் சீரியஸ் ஆன பதில்...

நீங்களே சொல்லுங்க 'ஒரு பல்லே இல்லை நீ எல்லாம் பேச்சாளன் ?' என்று யாராவது ஒரு பேச்சாளரை கிண்டல் அடித்தால் அது விவேகமா ?

:)))))

வெட்டிப்பயல் சொன்னது…

//பாலாஜி,

எழுத்துப்பிழையை மட்டும் குறிப்பிட்டு இருந்தால் நான் என்ன சொல்லப் போகிறேன் ?

'பதிவைப் போலவே' ன்னு ஒரு நக்கல் வரும் போது சரியாக நாமும் சொல்லாவிட்டால் பின்னூட்டம் போட்டவருக்கு ஏமாற்றம் மிஞ்சும்.
:)

இதுதான் சீரியஸ் ஆன பதில்...

நீங்களே சொல்லுங்க 'ஒரு பல்லே இல்லை நீ எல்லாம் பேச்சாளன் ?' என்று யாராவது ஒரு பேச்சாளரை கிண்டல் அடித்தால் அது விவேகமா ?

:)))))//

எழுத்துப்பிழையை சரி செய்துவிட்டேன்... பதிவில் என்ன பிழைனு கேக்கலாமேங்க...

ஏன்டா எழுத்துப்பிழையை பத்தி மட்டும் பேசறனு கேட்டீங்கனா, எனக்கு அது அதிகமா வரதால நிறைய பேர் திட்டியிருக்காங்க. அதனால போட்டியெல்லாம் கூட கலந்துக்கறதுக்கு நான் பயப்படறேன்.

அதனால தான் உங்க பதில் எனக்கு வித்தியாசமா இருந்துச்சு...

அவர் இரண்டு தவறுகளை சொல்லும் போது அதில் உங்களுக்கு ஒன்று தவறாக தெரியவில்லையா? ஒரு தவறை சரி செய்தால் அடுத்ததை தவறாக ஒத்துக்கொண்டதாக அர்த்தமா?

உடன்பிறப்பு சொன்னது…

//லாரியில் ஓசி பிரியாணிக்கும்,சாராயத்துக்கும் மஞ்சதுண்ட//

ஐயோ பாவம் அங்கே வெறும் தயிர் சாதம் மட்டும் தானாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//அதனால தான் உங்க பதில் எனக்கு வித்தியாசமா இருந்துச்சு...

அவர் இரண்டு தவறுகளை சொல்லும் போது அதில் உங்களுக்கு ஒன்று தவறாக தெரியவில்லையா? ஒரு தவறை சரி செய்தால் அடுத்ததை தவறாக ஒத்துக்கொண்டதாக அர்த்தமா? //

பாலாஜி,

என் பதிவில் எழுத்துப்பிழை இருக்கும் என்பது விஎஸ்கே ஐயா அறிந்ததுதான்...நிறைய பதிவுகளை வெளியிடும் முன் அவரே திருத்தித்தந்திருக்கிறார்... எனவே பதிவில் இருக்கும் குறை எழுத்துப்பிழை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளலாம்... அந்த குறை இரண்டாவதாக சொல்லும் 'பதிவைப் போலவே' என்று சொல்லப் பயன்பட்டு இருக்கிறது என்று தான் புரிந்துகொண்டேன். இல்லை என்று விஎஸ்கே ஐயா மறுக்கமாட்டார்...வேண்டுமென்றால் இரண்டையும் சொன்னேன் என்று சொல்லுவார்.

:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்