பின்பற்றுபவர்கள்

28 ஏப்ரல், 2006

தேர்தல் முடிவு 3:

மே.10 கடந்த மே 8ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க 154 இடங்களில் வெற்றி பெற்று இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் அதிர்சியை கொடுத்துள்ளது. இந்த வெற்றியைப் பற்றி அதன் தலைவர் திரு.விஜயகாந்த் அறிவிக்கையில். தான் இதனை எதிர்பார்த்தாகவும், 140இடங்களில் தன் கட்சி ஜெயிக்கும் என்று நினைத்திருந்ததாகவும் 154 இடங்கள் கிடைத்தது ஒரு இமாலய வெற்றி என்றும் குறிப்பிட்டார். எதிர்கட்சிகளும், பத்திரிக்கைகளும் தன் கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டதற்கு அவர்களே தங்கள் முகத்தில் கரிபூசிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். எம்ஜியாருக்கு பிறகு தமிழ்னாட்டை தன்னால் தான் காக்க முடியும் என்று தமிழ்மக்கள் நம்புவதாக இந்த தேர்தல் காட்டுகிறது என்றும், ஊழல் திராவிடக் கட்சிகளை ஒழித்தது தமிழ்மக்கள் தங்களுக்கு விடுதலை தேடிக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.


விஜியகாந்தின் வெற்றியை பற்றி குறிப்பிட்ட திரு கருணாநிதி, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு நல்ல அரசு தமிழ்னாட்டில் அமைந்தை நினைத்து தான் மகிழ்சி அடைவதாகவும், இனி தான் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.


மருத்துவர் ராமதாசும், திரு தொல்.திருமாவளவனும் இன்று கூட்டாக அனுப்பிய அறிக்கையில், தமிழர்களின் இம்முடிவு கவலை அளிப்பதாகவும், இருந்தாலும் புதிய அரசுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தங்களின் தமிழ் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.


திரு வைகோ பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில், தமிழகம் தலை நிமிர்ந்துள்ளதாகவும். தமிழனை தமிழன் ஆளவேண்டும் என்ற தன் கனவு நினைவு ஆனதற்கு திரு விஜயகாந்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.


தமிழக பா,ஜ.க தலைவர் இல.கனேசன் பத்திரிக்கை பேட்டியில், தன் கட்சி தொடங்கும் நாளில் தன்னை ஒரு இந்துவாக அடையாளப் படுத்திக் கொண்டதால் இந்துக்கள் வாக்கை பெற்று திரு விஜயகாந்த் வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர். மேலும் விஜயகாந்தின் ஆட்சி தமிழகத்திற்கு ஒரு ராம ராஜ்யமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாக கூறினார்.


முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அறிக்கையில், கறுப்பு எம்ஜி.ஆர் என்று பொய்யான தகவல் பரப்பியே விஜயகாந்த் வெற்றி பெற்றிருப்பதாகவும், அதனால் தே.மு.தி.க கட்சி பெற்ற வெற்றி செல்லாது என்ற வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜோதி தலைமையிலான ஒரு குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


மே. 11. தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரு விஜயகாந்தின் கட்சி அலுவலகமான ஆண்டால் அழகர் மண்டபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திரு விஜயகாந்த் பெண்களுக்கு முன் உரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும் அதனால் அவருடைய மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் திரு விஜயகாந்த் தான் உள்துறை அமைச்சர் பொறுப் பேற்றுக் கொண்டு, தமிழ்னாட்டில் உள்ள தீவிரவாதிகளையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க பதவியேற்பு நாளில் சபதம் ஏற்றுக் கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.


மே.12 அமிர்த ராஜ் எனப்படும் திரு விஜய காந்தின் தே.மு.தி.க திருமதி. பிரேம லதா விஜயகாந்த் முதலமைச்சராகவும், திரு விஜயகாந்த் உள்துறை அமைச்சராகவும் அவரது மச்சான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்க ஆட்சி அமைத்தது.


தேர்தல் முடிவு 4 தொடரும் ...

26 ஏப்ரல், 2006

தேர்தல் முடிவு 2:

மே 10. கடந்த மே 8ல் நடந்த தமிழக சட்ட சபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருந்த போதிலும், முக்கிய கட்சியான திமுக விற்கு 102 இடங்களே கிடைத்துள்ளன. அதன் தலைவர் திரு மு.கருணாநிதி திமுக ஆட்சி அமைக்க அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிகிறது. இந்த வெற்றி பற்றி திரு கருணாநிதி, இது தான் முன்னமே எதிர்பார்த தென்றும், ஜெயலலிதாவை விரட்டுவதில் தமிழ்மக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மே 11. திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் பாமக தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளரான திரு இளங்கோவன், காங்ரஸ் தமிழக அமைச்சரவையில் பங்கெடுக்க முயற்சிக்க வேண்டும் என்று சோனிய காந்திக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் காணப்படும் ஒரு சில தொண்டர்கள் கடும் சோகத்துடன் காணப்படுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

திரு வைகோ தனது பேட்டியின் போது, கருணாநிதி, 2ரூபாய்க்கு அரிசியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் தருவதாக ஏழை எளிய மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தன்னை பொடாவில் அடைத்த ஜெயலலிதாவை தான் மண்ணித்தாலும், ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவை மக்கள் மண்ணிக்கவில்லை என்று இப்பொழுது உணர்ந்து கொண்டதாகவும், அதனால் தான் தனது கட்சிக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், சென்ற சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் மதிமுக ஒரு லெட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வளர்ந்திருப்பதையே இந்த தேர்தல் காட்டுவதால் இது தனது கட்சியின் வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

மே. 12 திமுக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தெரிவித்திருக்கும் நிலையில், கருணாநிதி இன்று தேர்ந்தெடுக்கப் பட்ட 102 திமுக சட்டசபை உறுப்பினர்களுடன் , கம்யூனிஸ்ட் கட்சி சட்டசபை உறுப்பினர்களுடன் சென்று ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுனரை கோருகிறார்.

மே. 13 தங்கள் கோரிக்கையான கூட்டணி ஆட்சியை திமுக நிராகரித்தால், திமுகவிற்கு காங்ரஸ் கட்சியும், பாமகவும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாகவும் முன்னதாக தெரிவித்தன. இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த கருணாநிதி 5 வது முறையாக இன்று முதல்வரானார்.

மே 14. ஹைத்ராபாத்தை நோக்கி, போயாஸ் தோட்டத்திலிருந்து 20 கன்டய்னர் லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு மாத காலம் தனது திராட்சை தோட்டத்தில் ஓய்வு எடுத்த பின்பே தமிழ்னாட்டுக்கு திரும்ப போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவு 3: தொடரும்...

தேர்தல் முடிவு 1.

மே 10. கடந்த மே 8 ஆம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக 150 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், கருணாநிதியின் இலவச அறிவிப்பை மக்கள் நம்பாததும், தன்னுடைய பொற்கால ஆட்சியும் தான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டர். விரைவில் ஆளுனரை சந்திக்க இருப்பதாகவும் ஆட்சி அமைத்து உடனடியாக சட்ட சபையை கூட்ட இருப்பதாகவும் அறிவித்தார்.

மே. 11. தேர்தல் தோல்வியைப் பற்றி இப்போதைய சூழ்நிலையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், விரைவில் பொதுக் குழுவைக் கூட்டி தோல்விக்கான காரணங்கள் ஆரயப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

மே 12. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது, அது இன்று காலை அறிவித்த அமைச்சர் பட்டியலில் பெரும் மாற்றம் இருக்கும் என்று பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன. சரியான அமைச்சர் பட்டியல் மாலை நேரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மே.13. (காலை செய்தி) பதவியேற்பு விழாவில் அதிமுக மதிமுகவை புறக்கணித்தது.

மே 13. (மாலை செய்தி) வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அவர் இன்று விடுத்த அறிக்கையில் தன்னால் தான் அதிமுக அமோக வெற்றி பெற்றதாகவும், காரியம் ஆனவுடன் மதிமுக புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாற்றினார்.

மே. 14. மதிமுக ஐந்து தொகுதிகளில் வென்றது அதிமுக போட்ட பிச்சை என்று முதல்வர் ஜெயலலிதா வைகோவை சாடினார்.

மே 15 : மேம்பால ஊழல் வழக்கிற்காக ஸ்டாலின் நல்லிரவில் மீண்டும் கைது. முன்னதாக கருணாநிதியையும் கைது செய்ய திட்டம் இருந்ததாகவும், வயதை கருத்தில் கொண்டு கைவிடப்பட்ட தாகவும், ஆனால் வழக்கு தொடரப் போகதாவும் அதிமுக அரசு அறிவித்தது.
தேர்தல் முடிவு 2. தொடரும்...

25 ஏப்ரல், 2006

பெண் என்றும் பாராமல்...

1990ல் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் புடவையை துரைமுருகன் உருவியதாக ஒரு செய்தி வந்தது. பின் 1996 தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுக ஜெயலலிதாவை ஊழல் வழக்கிற்காக சிறையில் அடைத்தது. இதில் என்ன என்று கேட்கிறீர்களா ? புடவையை உறுவிய நிகழ்சியை அதிமுகவினரும் ஜெயலலிதாவும் 1992வரை தனக்கு சாதமான ஒரு அவதூறக மேடைக்கு மேடை பேசிவந்தார்கள். அதாவது சட்டசபையில் ஒரு பெண் என்றும் பாராமல் மானபங்கம் படுத்தினார்கள் என்று. பின்னாளில் 2002ல் அதே துரைமுருகனை அதிமுகவில் சேரும்படி மறைமுக தூதும் விட்டார்கள் (நக்கீரன்)

பின்னால் என்ன நடந்தது, இதே ஜெயலலிதா பெண் என்றும் பாராமல் ஐபிஎஸ் சந்திரலேக முகத்தில் ஆசிட் அடிக்க வைத்ததும் இல்லாமல் அதற்கு உதவிய மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற போராடியது.

இதே பெண் முதல்வர், கவர்னர் மாளிகையில் தண்டு ஊன்றி நடந்த கவர்னர் சென்னாரெட்டி தன்னை மானபங்கம் படுத்தியதாக தான் பெண் என்பதையும், தமிழ்னாட்டின் முதல்வர் என்பதையும் மறந்து ஒரு பொய்புகாரை சொன்னார்.

சசிகலா கனவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் சின்ன பெண் செரினா மீது கஞ்சா வழக்கு போட்டு கோர்டுக்கு இழுத்த போது செரினாவையும் அவரது தாயரும் பெண் என்பது ஜெயலலிதாவிற்கு தெரியவில்லையா ?

தருமபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்திய போது அந்த குற்றவாளிகளை காப்பற்ற சாட்சிகளை மிரட்டும் போதும், பாதிக்கப் பட்டவர் பெண் என்பது இந்த அம்மையாருக்கு தெரியவில்லை.

நடு இரவில் வீடு புகுந்து அரசு அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய மனைவிகளின் குரல் இவருக்கு பெண்குரலாக தெரியவில்லை.

வாங்கிய காசுக்கு வக்கனையாக பேசும் வைகோ இன்று சொல்கிறார், ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் அவமானப் படுத்தினார்களாம். இதே வைகோவின் தாயார் அன்று கதறியபோது, ஜெயலலிதாவிற்கு வைகோவின் தாயார் பெண் என்பது தெரியாமல் போனதை வைகோ மறந்து போனாரோ ?

பெண் என்றும் பாராமல் சிறையில் அடைத்தார்களாம், பெண் என்ற ஒரு சிறப்பு தகுதியை வைத்து கொண்டிருக்கும் ஜெயலலிதா, ஆண் அரசியல் வாதிகள் செய்த ஊழல், வஞ்சம், குள்ள நரித்தனம் எதையும் பெண் என்பதால் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறாரா ?

பொதுவாழ்கையில் நுழைந்த ஜெயலலிதா தன்னை பெண் என்று அடையாளப்படுத்திக் கொள்வது பரிதாபம் தேடுவதற்கு மட்டுமே. மற்ற நேரங்களில் ஒரு தாதாவைப் போல் செயல்படும் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பெண் என்பதை நினைவு கூறுகிறார். எல்லா நேரங்களில் காலில் விழும் வயதான ஆண்களையோ, பெண்களையோ மனிதப் பிறவிகளாக நினைப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை.

24 ஏப்ரல், 2006

குடும்ப அரசியல்

புதுக் கட்சிகளின் தொடக்கத்தை எப்பொழுதும் 'கிளாப்' அடித்து தொடக்கு வதற்காக இந்த 'குடும்ப அரசியல்' என்ற சொல்லே பெரிதும் பயன்படுகிறது. அண்மை காலமாக அதாவது தேர்தல் நேரத்தில் அணிமாறுவதற்கு தலைவர்களுக்கு இந்த சொல்லே முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் வாரிசுகள் அரியணை ஏறுவதும் அதற்கு மக்கள் ஆதரவும் கொடுப்பது ஒன்றும் புதித்தல்ல.

காலம் காலமாக மன்னர் ஆட்சி முறையில் வாழ்ந்த மக்கள், மன்னர் பரம்பரை என்னும் மரபனு உணர்வு இன்றும் இருப்பதால் தான் இன்றும் பல்வேறு போராட்டங்கள், சாதனைகள் மூலம் அறியணை யேறுபவர்களை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளும் அத்தகைய தகுதிகள் இருப்பதாக நம்புகிறார்கள். தகுதியில்லாதா வாரிசுகள் வீழ்ச்சி கண்டதையும் வரலாறுகள் பதித்தி வைத்திருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

நமக்கு ஒரு அரசியல் கட்சி முதன் முதலில் அறிமுகமானால் அது 90% சதவிகிதம் நம் குடும்பத்தினர் போற்றிய ஒரு கட்சியாகத் தான் இருக்கும். அதாவது என்னுடைய அப்பா திராவிட கட்சிகளை ஆதரித்து வந்திருந்தால் என்னுடைய நாட்டமும் அதைச் சார்ந்தே இருக்கும். திராவிட கட்சி ஆதரவு நிலையில் வளர்ந்த நாம் காங்கிரசோ, இடது சாரிகளோ ஏன் பிஜேபி யே நல்ல செயல் திட்டங்களை தீட்டினாலும் அவைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவு நிலையை எடுப்போர் நம்மில் 20% சதவிகிதம் கூட இல்லை. இதையும் மீறி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது ஏனென்றால் அது அந்த 20% சகிதத்திற்கும் குறைவான மக்கள், எதிர்கட்சி செயல்பாடுகளை கவர்ந்தோ அல்லது ஆளும் கட்சிக்கு எதிராகவோ வாக்களிப்பதால் தான்.

40% விகிதம் பேர் எந்த நிலையில் இருந்தாலும் ஓட்டு போடுவதில்லை.

மீதம் 40% சதவிகிதம் என்பது தான் குடும்ப அரசியல். எப்படி 40% விகிதம் குடும்ப அரசியல் ?. அதாவது

'எங்க ஓட்டு எப்பவும் இரட்டை இலைக்கு தான், எங்க குடும்பமே எம்ஜிஆர் ரசிகர்கள்'

'எங்கப்பாவுக்கு கலைஞரின் பேச்சும் தமிழும் மிகவும் பிடிக்கும், நாங்க எப்பவும் சூரியனுக்கு தான் போடுவோம்'

'எங்க தாத்தா காங்ரஸ்காரர், எங்க குடும்பமே கை சின்னத்துக்கு தான் ஓட்டு போடும்'

'எங்க சாதிகாரர் ராமதாஸ் அவருக்கு போடாம யாருக்கு போடரதாம் ?'

'இந்தியாவை இந்துக்கள் ஆளாம வேற யாரு ஆள்வது, என் வீட்டுகாரர் இந்து ஆதரவாளர் அதனால் பி.ஜே.பி தான் எங்கள் சாய்ஸ்'

இன்னும் சில பேர்

சித்தாந்தம் பேசிகொண்டு காலம் காலமாக அறிவாள், சுத்தியலை பிடித்துக் கொண்டு நிற்பவர்கள்.

பெரியாரையும், கருணா நிதியையும் பரம்பரை பகைவர் களாகவே நினைப்பவர்கள்.

இந்த குடும்ப அரசியல் சார்பு நிலைப்பாடுகள் வாக்கு வங்கிகள் எனப்படுகிறது.

பெறும்பாலும் நம் அரசியல் நிலைப்பாடு நம் குடும்பத்தினரால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு நேரடி வாரிசுகள் இருந்திருந்தால் ஜெயலலிதா வந்திருக்க மாட்டார். அண்ணா, காமராஜர் அவர்களுக்கு பின்பும் நடந்தது இதுதான். இந்த வாரிசுகள் இல்லாத பொழுது மட்டுமே அடுத்தவர்களுக்கு வாய்பு கிடைக்கிறது.

முன்பு குடும்ப அரசியலை சாடிய மருத்துவர் ராமதாஸ், தன் மகன் அன்புமணி நுழைந்ததும் சைலன்ட் ஆகிவிட்டார்

மூப்பனாருக்கு வாசன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக அரசியலில் தவிர்க முடியாத ஒரு அங்கம் ஸ்டாலின்.

சமீப வரவு கார்திக் சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

இந்த கட்சிகளிலிருந்து வெளியேறி எதிரணியில் சேருபவர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இவர்கள் நினைத்துப் பார்பதில்லை ஜெயலலிதாவிற்கு வாரிசு இருந்திருந்தால், இதே குற்றச் சாட்டுகள் அங்கு எடுபடாது என்பது.

தகுதியில்லாத வாரிசுகளை மக்கள் புறக்கணிதிருக்கிறார்கள். தகுதி உள்ள வாரிசுகள், இந்த வாரிசு எதிர்ப்பு போராட்டங்களை தாண்டி வளர்ந்தே வந்திருக்கிறார்கள். ஸ்டாலின் அதற்கு நல்ல உதாரணம்.

வாரிசுகளை விரும்புவர்கள் நாம் தான், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாரிசுகளை நல்ல முறையில் உட்புகுத்தும் கட்சித்தலைவர்கள் கருணாநிதி போன்றோர் சிலரே, தங்கள் வழியில் ஈடுபாடு உள்ள சில வாரிசுகளை அதே வழியில் வளர்த்து வெற்றி பெறுகிறார்கள்.

ஆக குடும்ப அரசியல் என்பது நம் வீட்டிலிருந்து அதாவது ஆதரவோ, எதிரோ ஒரு நிலையில், நம் தாத்தா காலம் முதலோ, அப்பா காலம் முதலோ ஆரம்பித்த அரசியல் சார்பு நிலை நமக்கு பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த குடும்ப அரசியல் கோசம் அரசியல் வாதிகளுக்கு அவ்வப்போது தங்கள் சார்பு நிலையை மாற்றிக்கொள்ளக் கிடைத்த நொன்டிச் சாக்குதான். இதனால் உடனடியாக குறைந்தபட்ச பலன்கள் அவர்களால் பெறமுடியும். நீண்ட கால பலன் பெறமுடியாது, ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து இதே குற்றச் சாட்டுக்ளை கூறிக்கொண்டு இருக்க முடியாது, அதற்குள் அவர்களது வாரிசுகள் அதே வழியில் அவர்களுக்கு வாரிசாக வளர்ந்து விடுகிறார்கள்.

19 ஏப்ரல், 2006

வா(ய்)க்கு அரிசி !

அரசியலா அல்லது அரிசியலா என்று தேர்தல் திருவிழா நன்றாக களைகட்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சாத்தியம் இல்லை என்று சத்தியம் செய்த அதிமுக தரப்பு 10கிலோ வாங்கினால், கிலோ வீதம் ரூ 3.50 வாங்கினால் 10 கிலோ இலவசம் என ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த கணக்கை பார்த்தால் கிலோ 1.75க்கு கொடுப்பதாக அதிமுக மறைமுக தெரிவித்திருப்பது தோல்வி பயத்தையே காட்டினாலும் இரண்டு ரூபாய்க்கு வரவேற்பு இருந்ததை காட்டுகிறது.

2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக முந்தைய ஆட்சியில் திமுக விட்டுச் சென்றதெல்லாம் அரிசி மூட்டைகள் எல்லாம் புழுத்த அரிசிகள் என்று கூறி குழி தோன்டி புதைத்தது. கிடங்குக்கு சென்று திடீர் சோதனை செய்த பொன்முடி சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து, சொன்னபடி 2ரூபாய் அரிசி கொடுக்காவிட்டால், இதே நாடகம் திரும்ப நடக்க வாய்பு இருக்கலாம் என்று அதிமுக கருதுவதாக தெரிகிறது. அதற்கு வாய்பு அளிக்க கூடாது என்பதாலும், திமுக அரிசி பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அரசியின் அரசியலில் அரிசியலை அள்ளி தெளித்துள்ளார்.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இதே மாதிரி அறிவிப்புகள் வரலாம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியுடன் இலவசமாக விசிடியோ அல்லது டிவிடி இயங்கி கொடுக்கப்பட்டு ஐந்தாண்டு இலவச பாரமாரிப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதாக விரைவில் அறிவிப்பு வரலாம்.

வாக்கு பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுக்கு மோட்டுவளையை வெறித்துப் பார்பவர்களுக்கு ஏதோ கிடைக்கப் போகிறது என்றவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை தேர்தல் நேர வாக்குறுதியாக பேசப்படுவதால் வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து வாக்கு சீட்டை தவறான வேட்பாளர்களுக்கு வாய்க்கு அரிசியாக போட்டு விரட்ட வேண்டும். (கருத்து சொல்றேங்க, கோவிசுக்காதிங்க)

சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளாக அரிசிக்கு அல்லாடும் நிலையில் மக்களை வைத்திருப்பதும் இல்லாமல், அதை ஆதாயமாக வைத்து அரசியல் கட்சிகள் விளையாடுவது வெட்ககேடு.

ஒருநாள் லஞ்சமாக 100 ரூபாய்க்கு வாக்கு பதித்த மக்கள், நீண்ட கால லஞ்சமான அரிசி, வண்ணத் தொலைக்காட்சிக்கு மயங்குவது மாதிரி தெரிவதால், மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் எனலாம். இந்த விசயத்தில் தமிழக தேர்தல் மற்ற மானில தேர்தலுக்கு முன்னோடியாக இருப்பதும் தெரியவருகிறது. இனி எந்த மானிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தாலும் தமிழக இலவச அறிவிப்புகள் அங்கும் எதிரொலிக்கப் போவது தின்னம்.

வாழ்க திராவிடக் கட்சிகள்.

17 ஏப்ரல், 2006

ஒரு கடைசி தேர்தலும் ஒரு அனாதை பிரசாரமும்

கடந்த 2001ல் எதிர்கட்சியின் கூட்டணி பலத்தைப் பார்த்து நடுங்கியபடி, கருணாநிதி இதுதான் என் கடைசி தேர்தல் என்ற ஒரு பரிதாப தோற்றத்தை ஏற்படுத்த முயன்று முடிவில் அவரது கட்சி வீழ்ந்தது. 2001ல் மதிமுக பிரித்த ஓட்டுக்களும், காங்கிரஸ் கூட்டணி ஓட்டுக்களும் அப்போது ஜெயலலிதாவிற்கு அமோக வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது. இது தனது தனிப்பட்ட வெற்றி என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் ஜெயலலிதாவிற்கு இந்த தேர்தலில் தனக்கு எந்த ஒரு பலமும் இல்லை என்பது நன்றாக தெரியும்.

கதவு திறந்தே இருக்கிறது என்று தன் கட்சி காற்றுவாங்குவதை அவரே வெளிச்சம் போட்டு காட்டினார். அவரது தந்திரத்தில் மயங்கிய ம.தி.மு.க கூட்டணியால் அவருக்கு எந்த பயனும் இல்லை என்று உளவு துறையால் தெரியவருவதால் மிகவும் ஜெயலலிதா சோர்ந்து போய்விட்டார். அதற்கு மேலும் அடி கொடுப்பது போலவே, கருணாநிதியின் இலவச மேளாக்கள் பெரும் வரவேற்பைப் பெற, ஜெ வின் நிரந்த முதல்வர் கனவு கிட்டத்தட்ட முடியக் கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

2001ல் கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே பயம் இப்பொழுது ஜெ.வுக்கு வந்துவிட்டதால், தான் அனாதை என்றும் தான் தமிழக மக்களையே நம்பி இருப்பதாகவும் பரிதாபத்தை பெற முயற்சிப்பதைப் பார்க்கும் போது நமக்கு 'உச்' கொட்ட தோன்றுகிறது. அன்று கருணாநிதி ஒரு பல்லவியை பாடி தனக்கு வயதாகிவிட்டதாகவும், இதுவே தனது கடைசி தேர்தல் என்றும் கூறி அனுதாபம் பெறமுயன்றார். இந்த முறை கூட்டணி கட்சிகளின் பலம் இருப்பதால், அந்த பல்லவியை மறந்தும் போனார். பாவம் ஜெயலலிதா, ஒரு பக்கம் நடிகர் கார்த்திக் தேவரின ஓட்டுகளை பிரிக்கும் நிலையில் இருக்க, தன் பங்குக்கு விஜய காந்த் மதிமுகவின் தெலுங்கர் ஓட்டுகளையே குறிவைக்க தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டனி ஆட்டம் கண்டுள்ளதை தேர்தல் கவணிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர். இவற்றை உறுதி செய்வதாகவே ஜெயலலிதாவின் அனாதை பிரச்சாரமும் அமைந்திருக்கிறது.

இந்த தேர்தலை தனக்கும் கட்சிக்கும் சாதகமாக்கி கொண்டவர்கள் யாரென்றால் அது திருமாவளவன் தரப்பும், டாக்டர் தரப்பும் தான். கருணாநிதியினால் தனித்து ஆட்சி அமைக்க கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. மாம்பழம் பழுத்தாலோ, 'கை' தூக்கிவிட்டலோ தான் திமுக ஆட்சி அமைக்க முடியும். ஒரு வேளை இழுபறி என்றால் டாக்டர் தரப்பு, அம்மாவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு கிடுக்கிபிடி போட்டு அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும். கூர்ந்து கவணித்தால் அதிமுக, பாமகவையோ, பாமக அதிமுகவையோ அதிகம் அட்டாக் செய்வதில்லை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதிமுக, பாமகவிற்கு எதிராக ஒரே ஒரு இடத்தை மட்டும் வி.சி கட்சிக்கு கொடுத்து பா.ம.கவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது

13 ஏப்ரல், 2006

கன்னடத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்கள்

நம் தமிழ் சொற்கள் திராவிட மொழிகள் அனைத்திலும் நீக்கமர நிறைந்திருக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நான் முதன் முதலில் பெங்களூருக்கு வேலைக்கு சென்ற போது ஒரு மாதம் தடுமாற்றமாக இருந்த மொழி புரிதல், அடுத்த மாதத்தில் பேசக்கு கூடிய அளவிற்கு புரிந்து போனது. மூன்று மாதத்தில் சரளமாக பேச முடிந்தது. நம் தமிழ் வளம் எங்கும் கலந்திருப்பதால் தானோ, நம்மவர்கள் சில மாதங்களிலேயே புதிய மொழிகளை கரைத்து குடித்துவிடுகின்றனர். மலையாளிகளும் அப்படித்தான், ஆனால் அவர்கள் பேசும் போது மண்வாசனை தெரிந்துவிடும், ஆனால் நம்மவர்கள் தமிழைத்தவிர வேறு மொழிபேசும் போது வாக்கு சுத்தமாகவே பேசுகிறார்கள்.

கன்னடம் தமிழிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலோ அதற்கு கீழோ பிரிந்ததாக சொல்லுவார்கள். கொடும் தமிழே கன்னடமாக திரிந்தது. மலையாளத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு போல், கன்னடத்திற்கும் தமிழுக்கும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. பழம் தமிழ் சொற்களும், வடமொழியும் இணைந்த கலவையே கன்னடம்.


தாய் - தாயி; தந்தை - தந்தெ; தம்பி - தம்ம; அக்காள் - அக்கா; தங்கை - தங்கெ; மக்கள் - மக்களு (குழந்தைகள், தம்மில் தம்ம்க்கள் - திருக்குறள்); மகவு - மகவுமகளிர் - மகளியர்; அவள் - அவளு; அவன் - அவனு; யார் - யாரு; யானை - ஆனே; அங்கே - ஆகே; இங்கே - ஈகே; மேல் - மேல்கட; கீழ் - கிளெகட; நான் - நானு; என் - நன்; நி - நீனு; அவர் - அவரு; கை - கையி; கால் - காலு; செவி - கிவி; வாய் - பாயி; மூக்கு - மூக்கு; கண் - கண்ணு; விரல் - பெரலு; நகம் - நக; பல் - பல்லு; ஓது - ஓது (படித்தல் - ஓதாமல் ஒரு நாளும் - ஒளவையார்); கேள் - கேளு; மனை - மனெ ( வீடு); போ - ஹோகு; வா - பா; பழம் - ஹன்னு ( கனி - என்ற சொற்திரிபு); உப்பு - உப்பு ( திராவிட மொழிகளில் பொதுவானது உப்பு); பார் - நோடு ( நோட்டம் என்ற் சொற்திரிபு); சின்ன - சன்ன; முந்தைய - முந்திகெ; இல்லை - இல்லெ; இருக்கு - இதெ; ஆகவில்லை - ஆகல்ல; வந்த - பந்த; பாடு - ஹாடு; நல்ல - ஒள்ளெ; மற்ற - மத்து; என்று - எந்து;


மேலும் ஆயிரத்திக்கு அதிகமான தமிழ் திரிச்சொற்கள் கன்னடத்தில் புழங்குகின்றன.



ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் நாம் 'கள்' சேர்போம், அவர்கள் 'களு' சேர்பார்கள்

குதிரைகள் - குதிரெகளு
நாய் - நாயிகளு
பூனைகள் - பூனெகளு

ஒன்று - ஒந்து ; இரண்டு - இரடு ; மூன்று - மூனு ; நான்கு - நாலகு ; ஐந்து - ஐது ; ஆறு - ஆறு, ஏழு - ஏழு; எட்டு - எண்டு; ஒன்பது - தொம்பது; பத்து - ஹத்து, பதினொன்று - பதவொந்து .... இருபது - இரவைத்து, முப்பது - மூவத்து, நாற்பது - நாவத்து, ஐம்பது - ஐவத்து, அறுபது- அறுவத்து, எழுபது - எப்பது , என்பது - எம்பத்து, தொன்னூறு - தொம்பத்து, நூறு - நூறு; ஆயிரம் - சாவிர


குறிப்பு : இந்த பதிவில் சில சொற்களில் எழுத்துப் பிழைகள் இருக்கும்.

கன்னட சிம்மம் ராஜ் குமார்

கன்னட திரைவுலகின் முடிசூட மன்னன் ராஜ் குமார் இறந்த செய்தி பெங்களூரிலும், ஒட்டு மொத்த கர்நாடகவிலும், கலவரங்களையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக ரசிகர்கள் போல் எம்ஜிஆர் விசுவாசிகள், சிவாஜி விசுவாசிகள் என்று பிரித்து அறியப்படாமல் ஒரே மாபெரும் திரைநாயகனாக அவர் கன்னடத் திரை உலகினத்தினரும், கன்னடர்களும் ஆழ்ந்த விசுவாசிகளாக இருந்தனர். அவர் தமிழ்னாட்டில் பிறந்த கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத்திரனில் கன்னட சிவாஜியாகவும், மக்களிடம் அபிமானம் பெற்றதில் எம்ஜிஆராகவும் விளங்கினார்.

வெறும் குரலசைவுக்கு வாயசைக்காமல் சிறந்தபாடகராகவும் விளங்கினார். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்தவர் என்றும் சொல்கிறார்கள். டிஎம்எஸ்சை போன்ற நல்ல குரல்வளம் மிக்கவர், அவர் பாடிய கன்னடத் தத்துப்பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் போன்று வரவேற்பை பெற்று இன்றும் போற்றப்படுகின்றன. அதுமட்டுமின்றி அவருடைய கன்னட பக்திப்பாடல்கள் மிகவும் பக்திரசத்துடன் பரவசம் செறிந்து காலத்தால் அழியாதவைகளாகவே கருதப்படுகிறது. அவர் எஸ்பி பாலசுப்ரமணியம் நடித்த சில கன்னடப் படங்களுக்கு அவருக்காக இரவல் குரல் கொடுத்திருக்கிறார் என்று தெரிய வருவதன் மூலம் அவருடைய குரல்வளத்தை அறியலாம். நடிகர் ரஜினிகாந்த் பெரிதும் மதிக்கும் கன்னடர்களில் ராஜ் குமார் அவருக்கு எல்லாவிதத்திலும் சிறந்த குருவாக திகழ்ந்தார்.

திரை உலகத்தை விட்டு ஓய்வு பெற்ற நிலையில் வீரப்பன் பிடியில் 108 நாட்கள் இருந்ததவுடன், அவருக்கு புகழ் மீண்டும் கூடியது. அந்த சமயத்தில் உணர்ச்சி பெருக்கான ரசிகர்களை ஓரளவிற்கு கட்டுப்படுத்தினார். சமீபத்தில் மெட்டிஒலி தொடரைப் மிகவும் பாராட்டி திருமுருகன் குழுவினருடன் புகைப்படும் எடுத்துக் கொண்டார்..

மொழிபற்று என்பதை விடுத்துப் பார்த்தால் அவர் சிறந்த மனிதர், தமிழ் மொழிப்பற்று நமக்கும் இருக்கிறது அது அவசியமானது கூட. முன்று மகன்களையும் தன் வாரிசாக திரைஉலகுக்கே விட்டுச் சென்றுள்ளார். ராஜ்குமார் கன்னட திரை உலகின் மாபெரும் சகாப்தம். அவர் சிவாஜி கனேசனின் மிகச்சிறந்த நண்பராகவும் விளங்கினார்.

10 ஏப்ரல், 2006

கை கொடுக்கும் கை

1992க்கு பிறகு ஆனித்தரமாகவும், அதற்கு முன்பும் காங்கிரஸ் - திராவிடக்கட்சிக் கூட்டனிகளே தமிழகத்தில் வெற்றியை சுவைத்திருக்கின்றன. 1992ல் ஜெ தலைமையிலான அ.தி.மு.க அரசும், பிறகு 1996ல் மூப்பனார் த.ம.க மற்றும் திமுக கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டனியும், 2001ல் மூப்பனார் / ஜெ தலைமையிலான கூட்டனியும் வெற்றிப் பெற்றுருக்கின்றன.

முன்பு அதிகம் இடங்களை கேட்டுவங்கிய காங்கிரஸ் இன்று 50க்கும் குறைவான இடங்களில் நிற்பது, யானை தன் பலத்தை உணராது போன்ற அவர்களின் பலவீனம். இதற்கு கலைஞர் நன்றாகவே வைகோவை வைத்து காய் நகர்த்தியுள்ளார். அதிக கட்சிகளை தன் கட்சியில் சேர்ப்பது போல்காட்டி விட்டு காங்கிரஸ் தொகுதிகளை குறைத்துவிட்டு, பின்பு வைகோவை கழட்டியவுடன் ஒன்றோ இரண்டோ அதிகம் தருவது போல் ஒரு கணக்கை மிகவும் சாமர்த்தியமாக சரிசெய்தது கலைஞரின் இராஜதந்திரம். இதன் மூலம் ம.தி.மு.கவிற்கு நன்றாக செக் வைத்தார். இவரது கணக்கு சரியானால் தேர்தலுக்கு பின் மதிமுக காணமல் போவது உறுதி.

அ.தி.மு.க வைப் போலவே அடிப்படை ஓட்டுக்கள் காங்கிரசுக்கும் உண்டு. அவர்கள் தனித்து போட்டியிட்ட போது 25 இடங்களை கைப்பற்றியுள்ளனர். இதை தமிழக திராவிடக்கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன, அதுவும் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஜெ அனாவசியமாக சோனியாவை திட்டிவிட்டு பின்பு எவ்வளவோ தரிகனத்தோம் போட்டும் காங்கிரசை அவரால் நெருங்க முடியவில்லை. இந்த பார்முலாவை நன்கு உணர்ந்ததால் தான் மருத்துவர் ராமதாஸ் தன் நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ம.தி.மு.க - அ.தி.மு.க கூட்டனிக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவே. கொள்கையிலும் கூட்டனியிலும் சந்தர்பவாதமே அதிகம் உள்ளதை ஊடகங்கள் மூலமும் வைகோ வின் வாய் ஜாலத்திலும் பொதுமக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

கலைஞரின் கலர் டிவியும், இரண்டு ரூபாய் அரிசியும் இந்த தேர்தலில் மிகப்பெரிய சக்தி. இவைகள் ஏழை எளியோரை மிகவும் கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அவற்றை சமாளிக்க அ.தி.மு.க சொல்லும் புகார்களும் அவற்றை நிருபிப்பது போலவே உள்ளது.

தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியமைக்க கண்டிப்பாக காங்கிரசின் கையை எதிர்ப்பார்க்கும் விதமாக அமையும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்தியில் தி.மு.க கூட்டனி ஆட்சி கேட்டது போல் கேட்குமா, அல்லது விட்டுக்கொடுக்குமா ? பார்ப்போம் ! கொடுக்குமா கையா அல்லது இணைந்த கையா? தேர்தலுக்கு பின் தெரியும்.
- கோவி.கண்ணன்

தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?

ஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒரு 5 ஆண்டோ அல்லது 10 ஆண்டோ அவன் சிரமபட்டு அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு அவர்களுடன் உரையாடுவதற்கு தயார்படுத்திக்கொள்ளுவான். ஒருவேளை அவனுடைய முன்னோர்களோ அல்லது சக இனத்தாரோ அங்கு இருக்கும் பொழுது அவனுடைய மொழி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்க மட்டும் பயன்படும். அவன் அந்நாட்டின் உயர்பதவியை அடையவேண்டுமென்றால் அவர்களுடைய மொழியை, காலாச்சாரத்தை அவன் கற்றுக்கொள்வது இன்றியமையாதது ஆகிறது. அப்பொழுதுதான் அந்த நாட்டின் குடிமகனாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவான்.
இடம்பெயரும் கடவுள் விசயத்தில் இவற்றை நாம் மறந்துவிட்டோம், எங்கங்கோ இருந்து குடிபெயர்ந்த கடவுள்களும், கடவுள் கொள்கையும் இந்த தமிழ் மண்ணிற்கு எப்பொழுதோ வந்து இன்றும் தத்தம் மொழியையே விரும்புவதாக அதனைச் சார்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். இவற்றை கண்மூடிக்கொண்டு கேட்டுக்கொள்வதுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். நமக்கு என்று தெய்வம் இல்லாமல் இருந்து, நம் தமிழ்குடிமக்கள் இறைமறுப்பாளர்களாக காலம் காலமாக இருந்து வந்தார்களா ?. எங்கே போனார்கள் நம் தமிழ்கடவுள்கள் ?. தமிழ்கடவுள்கள் பாமரர்கள் உணரமுடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டார்களா ? அல்லது நம் தெய்வங்கள் அடகுவைக்கப்பட்டதா அல்லது ஒரு மொழிக்கு அடிமை ஆக்கப்பட்டதா ?
வந்தேரிகள் - அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆனாலும் சரி, நம் தமிழ் அவர்களுடைய கடவுளுக்கு புரியாது என்று சொன்னால் அத்தகைய கடவுள்களால் நமக்கும் நம் சமுகத்திற்கும் எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாம் நம் தமிழில் வழிபாடு செய்ய எத்தனையோ முத்தமிழ் நூல்கள் இருந்தும், குடமுழுக்கு செய்ய ஆகமங்கள் இருந்தும் அவற்றை புறக்கணிப்பவர்களிடம் நம் காசுகளை உண்டியலில் நிரப்பிவிட்டு, தமிழில் அர்சணை செய்யச் சொல்லி கெஞ்சி கெஞ்சி போராட்டம் நடத்துவதும், கெஞ்சுவதும் மகா கேவலம். அவைகளை விடுத்து மாற்று மொழி பேசும் கடவுள்களை புறக்கணிப்போம். அப்போது அத்தகைய கடவுள்களுக்கு வேறுவழியிருக்காது. நிச்சயமாக தமிழ்கற்றுக் கொண்டு வழிபாடு செய்ய அவைகள் நம்மை வேண்டும்.

7 ஏப்ரல், 2006

அ.தி.மு.கா விற்கு வாக்கு கேட்கும் கவுண்டமணி

(ஓரு கற்பனை)
செந்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய, ரத்ததின் ரத்தங்களின் தோளில் அமர்ந்து வருகிறார், நிறைய மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வழியாக வந்த கவுண்டமணி தூரத்தில் இருந்து அதை கவினித்துவிடுகிறார்.

கவுண்டமணி (மனசுக்குள்) : அடப்பாவி, இவன் நம்ப ஆளு இல்லே, அதுக்குள்ள போயி சேந்துட்டானே ? அது... சரி ... எதுக்கு இவனை இத்தனை போரு தூக்கிட்டு வர்ராங்க ? கிட்ட வரட்டும் என்னான்னு பார்ப்போம் ...

கூட்டம் நெருங்க, செந்திலின் கைகால் அசைவு தெரிகிறது.

கவுண்டமணி (மனசுக்குள்) : கொக்கா மக்க, பய இன்னும் சாகலை ... இவன் நம்பள போட்டுதள்ளமா செத்துடுவானா என்ன ?

(கூட்டம் நெருங்கிவர செந்தில், கவுண்டமணியை கவனித்து விடுகிறார்.)

செந்தில் : நிறுத்துங்க நிறுத்துங்கப்பா, எங்க அண்ணன் நிக்கிறாரு.

செந்தில் : அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே ! (என்று காலில் விழுகிறார்)

கவுண்டமணி : டேய், ஏந்திரி, என்ன கூட்டமா ? அதுவும் ரோடு ரோலர ஜீப்ல ஏத்திக்கிட்டு ...? எங்கேயாச்சும் ரோடுபோடப் போறியா ?

செந்தில் : ரோடு ரோலர் இல்லெண்ணே, தெரியலையா இவன் நம்ப குண்டு கல்யாணம். அதவுடுங்கண்னே, நான் மந்திரியாக போறேன் ஆசிர்வாதம் பண்ணமாட்டிங்களா ?

கவுண்டமணி மனதுதுக்குள் 'இவனுக்கு சீட்டே கெடக்கல , என்னுமோ சீன்டி பாக்கனும்னு நெனெக்கிறான், சரி என்னான்னு பார்போம்' என்று நினைத்துவிட்டு.

கவுண்டமணி : எ... என்னது நீ மந்திரியா ? பாருங்க மகா ஜெனங்களே, இந்த பன்னிவாயன் மந்திரியாக போறானாம் ? ஏன்டா, கட்டுச் சோத்துக்குள்ள பெருச்சாளி கேள்விப் பட்டுருக்கேன், நீ போறேன்னு சொல்றது சட்ட சபைடா, சட்டசபை உனக்கு கட்டுச்சோறாடா ? அங்கல்லாம் போனா நெறையா பேசனும்டா, கரிச்சட்டி தலையா ! அரசியல சாக்கடைன்னு எவனோ சொன்னத வெச்சிக்கிட்டு, இந்த பன்னி போயி எறங்க ஆசை பட்டுடுச்சி !

செந்தில் : அண்ண ரொம்ப பேசாதிங்க, பின்னாடி வருத்தப்படுவிங்க ?

கவுண்டமணி : பின்னாடி என்னடா பின்னாடி, ஏன் என் முதுவுக்கு பின்னால வெடிகுண்டு வெச்சிருக்கியா ?

செந்தில் : அண்ண நீங்க கவுண்டமணின்னா, நான் கவுன்ட் டவுன் மணி ?

கவுண்டமணி : அது என்ன எழுவு மணிடா, யாரவது கவுன் போட்டவங்க கிட்டேர்ந்து திருடிக்கிட்டு ஓடியாந்திட்டியா ?

செந்தில் : அது இல்லண்ணே, எலக்சன் வரப்போவுது, நான் மந்திரியாகரத்துக்கு கவுன்ட் டவுன் ஆரம்பிச்சி மணியடிச்சிடுச்சிண்னே, அதான் சொன்னேன்

கவுண்டமணி : அப்படி வெவரமா சொல்லுடா என் ராஜா. ஆமாம் நாட்டுல எவன் எவனோ மந்திரியாவுராங்க, நீ ஆவரது ஒன்னும் பெரிய தப்பில்ல தான்.

செந்தில் : அண்ணே, வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குண்ணே, சின்னதா ஒரு வெளெயாட்டு வெளெயாடலாமாண்னே ?

கவுண்டமணி : ஏண்டா, மந்திரியா ஆகப்போறேன்னு சொல்ற நீ, வெளெயாடப்போறியா ... ? ஆமாம், நாட்டுல அரசியல் வாதிங்க வெளெயாடுரதை வீடவா நீ வெளயாடப்போறே ?

மனதுக்குள்

'அந்த அம்மா எத எப்படி மாத்துன்னு தெரியலயே, பன்னீர மொதல்வராக்குனது , இந்த பன்னிய மந்திரியா ஆக்குனாலும் ஆக்கும்' எதுக்கும் இவன் சொல்றத கேட்போம், பின்னாடி மந்திரியாடிட்ட நம்பள நல்லா கவனிச்சிக்குவான்'

செந்தில் : ஆமாண்ணே, அரசியல்ல வெளெயாடரத்துக்கு முன்னாடி கொஞ்சம் தயார்படுத்திக்க வேணாம்மா ?

கவுண்டமணி : எலேய்... என்ன வெளயாட்டு வேனும்னாலும் வெளெயாடு, டிக்கிலோனா மட்டும் வெளெயாட வேணாம், குனிஞ்சி நிமிரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு ஆமாம்.

செந்தில் : இது கஷ்டமில்லாத வெளெயாட்டுண்ணே, இப்ப நான் என்னோட கண்ண கட்டிக்குவேன், நீங்க வெரல காட்டனும், நீங்க எந்த நம்பரை காட்டுறீங்கன்னு நான் கரட்டா சொல்லனும், இதான் வெளயாட்டு

கவுண்டமணி : ப்பூ... கண்ணாமூச்சி வெளயாட்டு, என்னெ கண்ணை மூட சொல்லிட்டு எங்க காலை வாரி வீட்டுட்டு ஓடிடுவேன்னு கொஞ்சம் பயந்துட்டேன், நீ கண்ணை மூடிக்கிறேன்னு சொல்றதால ஒத்துக்குறேன்.

கவுண்டமணி (மனசுக்குள்) : பய மாறிட்டான், என்ன இருந்தாலும் மந்திரியாகப் போறான்ல்ல, நான் தான் ஒருவேளை தப்பா புரிஞ்சிக்கிட்டேனோ ?

கவுண்டமணி : சரிடா நீ கண்ண மூடிக்க,

(செந்தில் கண்ணை துணியால மூடிக்கொண்டு, இடுக்கு வழியாக கவுண்டமணியின் விரலைப் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். )

செந்தில் : அண்ணே, நான் ரெடி

ஒரு விரலை காட்டிய கவுண்டமணி,

கவுண்டமணி : இது என்ன சொல்லு ?

செந்தில் யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டி,
செந்தில் : அண்ணே ஒன்னு

கவுண்டமணி : இப்ப என்ன சொல்லு ?

செந்தில் : அண்ணே நாலு

கவுண்டமணி : இது என்ன சொல்லு ?

செந்தில் கண் கட்டுகளை வேகமாக அவிழ்த்து எறிந்துவிட்டு, கூட்டத்தினரை பார்த்து உற்சாகமாக சொல்கிறார்

செந்தில் : அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க

கவுண்டமணி (புரியாமல்) : இவ்வளவு நேரம் நல்லாதானே, இருந்தான் பய ? ... டேய் நிறுத்துடா, எதுக்கு இப்ப திடீர்னு வாழ்க கோசம் போடுற ?

செந்தில் : என்னண்னே, இது கூட புரியாம ? அண்ணே, நீங்க ரெண்டு விரலை காண்பிச்சி, ரெட்லைக்கு வோட்டு கேட்டுடிங்க ! அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க

கவுண்டமணி : அட நாயே, அரசியல்ல சேர்ந்து இப்படி மாறிட்டியே, ஏண்டா ? நான் இரண்டுவெரல காட்டி, ரெட்டலைக்கு ஓட்டு கேட்டேனா ? அட பண்ணாடை, என்னெ திட்டம் போட்டு மாட்டிடியேடா , வெரலு வெளயாட்டை வெவகாரமா ஆக்கிட்டியே, டேய் நீ இப்படியே போயி, அந்தோ தெரியுதுபாரு கக்கூசு, அங்க போயி நில்லு, நெறையெ பேரு இரண்டு வெரல காட்டிக்கிட்டு வருவாங்க.

செந்தில் கெ கெ ... என சிரித்துக்கெண்டே,

செந்தில் : அரசியல்ல இதல்லாம் சகஜமண்னே ! இப்பவாச்சும் ஒத்துகிறிங்களா நான் அறிவாளிதான்னு ?

கவுண்டமணி : நான் சொன்னத வெச்சு எனக்கே ஆப்பா ? டேய், ஒன்ன மடையன்னு நெனெச்சிருந்தேன், நீ பக்கா அரசியல் வாதியாயிட்டே, பொழைச்சிக்குவ, ஒன்ன வெச்சு ஒன் கட்சியும் பொழச்சுக்கும், நல்லாயிரு. ஆனா நாட்டெ நெனெச்சாதான் எனக்கு கவலை யாயிருக்கு.

செந்தில் : அண்ணன் கவுண்டர் வாழ்க, அம்மா வாழ்க ! அம்மா வாழ்க !

என்று சொல்லிவிட்டு கூட்டத்தினருடன் செல்கிறார். கவுண்டமணி நொந்தபடி திரும்புகிறார்

ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை

(ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக )
செய்தி : ரஜினி ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி போஸ்டர் யுத்தம் நடத்துகிறார்கள்.

இந்த சமயத்தில் திரு ரஜினியும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவருமான சத்திய நாராயணன் ரஜினியை சந்திக்கிறார்.

ரஜினி : என்ன சத்தி... இந்த அரசியல் வாதிங்களும்.... பத்திரிக்கை காரங்களும் ... வம்புக்கு இழுக்கிறாங்கன்னு பாத்தா ... நம்ம ரசிகர்களும் ... .சே புரிஞ்சிக்கவே முடியலேப்பா

சத்திய நாராயணன் : தலைவா, இந்த தேர்த்தல்ல நீங்க எதாவது சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க... எல்லோரும் நீங்க ஜெ...வ ஆதரிக்கனும்னு எதிர்பார்கிறாங்க ... அப்பதான் ராமதாசுக்கு பாடம் கொடுக்க முடியுமாம் ?

ரஜினி : சத்தி ஜி ... நீங்க என்ன சொல்லவர்ரீங்க ... அது எப்டி சத்தி ஜி ...?

சத்திய நாராயணன் : நீங்க வழக்கமா சொல்ற 'தாய் தான் முக்யம்னு, தாய் சொல்றபடி கேட்கனும்னு சொன்னிங்கன்னா, நம்ப ரசிகர்கள் புத்திசாலிங்க ... அவுங்க 'அம்மா' ன்னு புரிஞ்சிக்குவாங்க ... மத்த கட்சிகாரங்க யாருக்கும் சந்தேகம் வராது ...

ரஜினி : ஐடியா நல்லாதான் இருக்கு ... ஆனா அதுக்கு அவசியமில்லேன்னு நெனெக்கிறேன்.

சத்திய நாராயணன் : தலைவா ... நீங்க கண்டிப்பா மறுபடியும் வாய்ஸ் கொடுக்கனும்.

ரஜினி : அது எப்படி சக்தி முடியும்... போன தடவே ... பாபா பிரச்சனை .. ராமதாசை எதிர்த்தோம் ... ஆன ஒன்னும் நடக்கலையே ... 40 தொகுதிலியும் எதிர்கட்சிதானே ஜெயிச்சாங்க
சத்திய நாராயணன் : என்ன தலைவா, நீங்க தான அடிக்கடி சொல்லுவிங்க ... பகவான் கீத்தையில சொல்லியிருக்காரு... இன்னிக்கு ஒனக்கு கிடக்கிறது... நாளைக்கு ஒனக்கு கிடைக்காது ... வெற்றியோ தோல்வியோ நிரந்த்தரமில்லைன்னு ...

ரஜினி : சத்தி ... நீங்க என்ன சொல்லவர்ரீங்க ?.
சத்திய நாராயணன் : அதான் நேத்திக்கு பா.ம.க ஜெயிச்சிச்சு ... இன்னிக்கு ஜெயிக்கக் கூடாது ...

கோபமாக,
ரஜினி : யோவ் ... அது வேற இது வேறய்ய்....ய்யா ...

சத்திய நாராயணன் : தலைவா ... நீங்க பெரிய மனுசன் ... மறந்திர்ரீங்க ... ஆன நம்ம ரசிகர்கள் ... இன்னும் கொதிப்பு அடங்காம தானே இருக்காங்க ...

ரஜினி : அதான் யாருக்கும் ஆதரவில்லேன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்ல்ல சத்தி ?

சத்திய நாராயணன் : நேத்திக்கு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் இன்னிக்கு மாலையும் கழுத்துமா வர்ராரு பாத்திங்கல்ல... அவுரோட ரசிகர்கள் நம்ப ஆளுங்களை கேவலா பாக்கறத தாங்க முடியிலயே தலைவா

மிகக் கோபமாக,
ரஜினி : ந்நோ ... ந்நோ ... சத்தி ... மத்தவங்க கூட என்னே கம்பேர் பண்றது ... என் வழி ... என் வழி தனி வழி ... என்னோட யாரையும் கம்பேர் பண்ற ரசிகர்கள் வேண்டாம். இப்ப .. இப்ப போன போட்டு எல்லார்கிட்டயும் சொல்லிடு... இப்ப நமக்கு சிவாஜிதான் முக்யம்.

சத்திய நாராயணன் : அப்ப எலக்சன் ... வாய்ஸ் ...

ரஜினி : எலக்சன் அஞ்சு வர்சத்து ஒரு தடவே வரும்... ஆனா சிவாஜி ஒரு தடவே வந்த திரும்ம வர்ராது ...

'இன்னிக்கு வாய்ஸ் கொடுக்கலேன்'னு சொல்லுவாங்க இந்த பத்ரிக்கே காரங்க ... அதே பத்ரிக்கே காரங்க 'நாளெக்கு சும்மாருந்திருக்கலாம்' அவுங்களே சொல்லுவாங்க. நாளெக்கு அவுங்க சொல்றத நான் இன்னிக்கெ செஞ்சுடுறேன்

சத்திய நாராயணன் : அப்ப நான் ரசிகர் மன்றத்தில என்ன சொல்றது ...

ரஜினி : என்ன பெர்ரிய ரசிகனுங்க ... அவுங்க ஒழுங்கா பாத்திருந்தா பாபா போயிருக்கும். இன்னெக்கு வாய்ஸ் குடும்பாங்க ... எதாவது சொன்னால் ... அத்ல பாதிபேரு ... தலைவர் சொல்றது புடிக்கலேம்பாங்க ... அதான் போன எம்.பி எலக்சென்ல பாத்தேன்ல ...

ரஜினி சத்தியை பார்க்கிறார்
சத்திய நாராயணன் : ...

ரஜினி : அதான் சொல்லிட்டேன்ல்ல ... வேனாம் ... எல்லாத்தையும் விட்டுடுவோம் ... சிவாஜி ... இந்த பேரத்தான் நாம இப்ப நெனெக்கனும் ...
"நாம சண்டேக்கு போக மாட்டோம் ... எதிரிங்க தான் சண்டேக்கு வர்ராங்க "
"நாம பலசாலி இல்லெ ... எதிரிங்கதான் பலசாலி ... ஆன நாம புத்திசாலி "
"ஆண்டவன் எங்க.. எப்டி ... எந்த.. காய நகத்தனுமோ அங்க.. அப்டி.. நகத்திக்கிட்டே இருக்கான்"
"இந்த பதவி ... பட்டம் ... தேடிவந்தாலும் திரும்ம்பி பாக்கக்கூடாது ... அதான் நமக்கும் நல்லது ... மத்தவங்களுக்கும் நல்லது"
"நான் வாய்ஸ் கொடுத்து ... அப்புறம் சிவாஜிய... சிவ...சீன்னு சொல்லிட்டாங்கன்னா ? ... பாவாம் எ.வி.எம் சரவணனும் ... சங்கரும்"
"சிவாஜி ஜெயிக்கனும் சக்தி ... ஜெயிக்கனும். பாபா ... நான் தான் நஷ்டப்பட்டேன் ... வேறே யாரும் நஷ்டேப்படலே.."
"சிவாஜி நஸ்டம்னா ... சிவாஜி ராவுக்கு நஷ்டம் ... சிவாஜி கனேசன் பேருக்கே நஷ்டம் ... நம்ப மராட்டிய மன்னன் மாவிரன் சிவாஜி புகழுக்கே நஷ்டம்..."
"கஷ்டம் நம்மளோட இருக்கனும் ... நம்பளால யாருக்கும் கஷ்டம் இருக்க கூடாது"
"பாபாஜி பட்டம் பறக்கல .... என் கையிலேயே திரும்ப விழுந்துச்சி, சந்தரமுகி பட்டம் பறந்துச்சி ... பறந்தது மட்டுமில்லாம டீல் போட்டிச்சி ... அது மாதிரி சிவாஜி குதிரெ ஜெயிக்கனும் ... தோக்கக் கூடாது..."
"பாபா... மூலையிலே முக்காடு...ன்னு சொன்ன ராமதாஸ் ... சிவாஜி வாயிலே ஜிலேபின்னு சொல்லி ஜிஞ்சுபி பாடிட கூடாத்தில்ல"

சத்திய நாராயணன் : ... ???

ரஜினி : என்ன கொடுமை சரவணன் சார்' ன்னு ஏவிம் சரவணணை பாத்து சங்கர் சொல்லிட்டார்னா ? நாம எங்க போய் முட்டிகிறது சத்திஜி.

சத்திய நாராயணன் : சரி அதவிடுங்க தலைவா, இந்த சமயத்துல சிவாஜி பஞ்ச் டயலாக் ஒன்னு எடுத்துவுட்டிங்கன்னா, பசங்க வாய்ஸ் கேக்குறத மறந்துட்டு துள்ள ஆரம்பிச்சுடுவாங்க.

ரஜினி : சங்கர்ஜீ கோவிச்சுக்குவாரான்னு தெரியல்ல, சரி ... நான் பேசி சரிப்பண்ணிக்கிறேன்.

"காந்திஜி கையல இருந்தது கைத்தடி, இந்த சிவாஜி கொடுக்கப்போறது சவுக்கடி"

"நேதாஜி (இந்தியர்களை இணைத்து) வெள்ளக்காரங்களுக்கு காட்டுனது தண்ணி, இந்த சிவாஜி (நதிநீரை இணைத்து) தமிழ்நாட்டுக்கு காட்டப்போறதும் தண்ணி"

"பாபாஜி கை காட்டினா முத்திரை, இந்த சிவாஜி கை காட்டினா எதிரிங்களுக்கு இல்லை நித்திரை"

சத்திய நாராயணன் : சூப்பர் குத்து தலைவா, இது போதும் அடுத்த எலக்சன் வரைக்கும்.


-கோவி.கண்ணன்

5 ஏப்ரல், 2006

காலங்கள்


வலைப்பூ வண்டுகளே! எல்லாம் ஜோரா ஒருதடவை கீ...போர்டை தட்டுங்க. அதாங்க பின்னூட்டம் போடுங்கன்னு பொடிவச்சு சொல்றேன்.

வலைப்பூவுக்கு தலைப்பு கொடுக்கவேண்டும் என்று சிந்தித்து, சிந்தித்து காலம் கடந்ததுதான் மிச்சம். ஆ ... காலம் என்று வைத்தால் என்ன ? நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை என்ற சொல்லை வழிநடத்துவது காலம்தான். பல்வேறு காலகட்டங்களில் நாம் நாமாகவே இருக்கிறோம் என்பது உண்மை என்றாலும். காலம் நம்மை வேறுறொருவராக உடலளவிலும் மனதளவிலும் மாற்றிக் கொண்டுவருகிறது.
கருவில் இருந்து தொடங்கும் இந்தகாலம் கல்லறையில் முடிவதாக கணக்கு. அங்கும் விடுவதில்லை. எப்படி என்றால். 'அவுரு செத்து ஒரு பத்துவருச காலம் இருக்கும்' என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வாழ்க்கை என்பது கட்டிடம் எழுப்புவது மாதிரி. மொத்த வாழ்க்கை என்பது 'நேற்றைய அஸ்திவாரத்தில் நாளைக்கு நிற்கவேண்டிய கட்டடத்திற்கு தேவையான இன்றைய கட்டுமானமாக' இருக்கிறது. கட்டடம் நிறைவு பெறும் அங்கு நிற்பது வெறும் நினைவுச்சின்னமே.

நினைவு தெரிந்த நாள் முதலாய் ... சின்ன வயசிலேர்ந்து நான் ...எனக்கு புரியாத வயசில ... அப்பெல்லம் எங்க அம்மா சொல்லுவாங்க ... அவுரு ஆடுன ஆட்டம் என்ன ? ... என்னைக்கும் இதுமாதிரியே இருந்துடுவேன்னு நினைக்காதே... என்று காலத்தை பல்வேறு காலகட்டங்களில் இடத்துக்கு ஏற்றார் போல் பயன்படுத்துகிறோம்.

மாற்றம் என்ற சொல்லுக்கு வடிவு கொடுப்பது காலம். நாம் விருப்பம் இல்லாமல் எல்லாவற்றையும் மாற்றிக்காட்டுவது காலம். இன்றைய காலகட்டங்களில் அரசியல் வாதிகள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள்.

வரலாறு என்று பார்தோமேயானல், எஞ்சி இருப்பது பல்வேறு இறந்தகாலங்கள் தான். தோல்விகள் வெற்றிகள் எல்லாமே அனுபவ பாடங்கள் என்ற அளவில் முடிவுறுகிறது. மண் கோபுரம் ஆனதும், கோபுரங்கள் இடிந்து மண்ணானதும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த மாற்றங்கள்.

எதிரிகள் நண்பர்கள் ஆவதும், நம்பிக்கையாளர்கள் துரோகிகள் ஆவதும் காலத்தின் கையில். அவை அப்படியே இருந்துவிடுமா என்ற கேள்வியும் பதிலும் காலத்தின் கையில்.

பருவத்தே பயிர்செய் என்ற நம் தமிழ் பழமொழியும், டைம் மேனேஜ்மென்ட் என்று ஆங்காங்கே நடக்கும் பட்டரை பயிற்சி வகுப்புகளும் (வொர்க் ஷாப்) காலத்தின் பயனை நமக்கு உணர்த்துகிறது.

உங்கள் நேரத்தை வீணக்கக் கூடாது என்பதால், நீங்கள் எல்லாம் நேரம் தான், காலக்கொடுமை தான் என்று சொல்லும் முன் இப்போதைக்கு தற்காலிக ஒரு சின்ன துண்டிப்பு.

பி.கு: எனது வலைப்பதிவிகளில் கதைகள், கவிதைகள், கிண்டல் கேலிகள் மற்றும் அரசியல்கள் இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்


-கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்