பின்பற்றுபவர்கள்

6 மார்ச், 2011

கூட்டணி முறிந்தது அடுத்து என்ன ?

நேற்று தான் அழகிரி 'விஜயகாந்த் தன்மானமிக்கவர் அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை' என்று கூறி கடைசிகட்ட சந்தேகப்பார்வையை அதிமுக விஜயகாந்த் மீது வீசும், என்ற நம்பிக்கையில் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். அடுத்த நாளே ஜெவும் விஜயகாந்தும் கூட்டணி என்று ஊடகங்களில் வந்தார்கள்.
தேர்தல் தேதி அறிவித்ததைச் தொடர்ந்து கூட்டணி முடிவுகள், முடிச்சுக்கள், முழுக்குகள், முறிவுகள் என அடுத்தெடுத்து அரங்கேறி ஊடகங்களுக்கு தீணி போட்டுவருகின்றன. அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட அரசியல்வாதிகளின் ஊழல்கள், திருவிளையாடல்கள், நம்பிக்கைத் துரோகங்களினால் ஏற்படுத்தப்பட்ட மறைமுக / நேரடி பாதிப்புகளால் அடுத்து என்ன நடக்கும் என்று காது கொடுத்துக் கேட்கக் கூடிய நிலைக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசை ஏற்படுத்தும் போது மதவாத பாஜக, தமிழின எதிரி காங்கிரசா என்றதில் கூட இந்திய இறையாண்மைக்கு பாதுகாப்பாக வாக்களிப்போம் என்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையினர் மதவாதத்திற்கு எதிராக வாக்களித்தது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் கூட தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் குழம்பிய சூழலில் ஸ்பெகட்ரம் ஊழல் விவகாரம், காமன் வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியினரினால் இந்திய பொருளாதாரச் சூழல் சுரண்பட்டுள்ளதால் மக்கள் தெளிவான முடிவெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வீழ்ச்சியையும் எழுச்சியையும் சரி செய்து கொள்ள அதிமுக - தேமுதிக கூட்டணிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் காங்கிரசு ஆட்சி அல்லது ஆட்சியில் பங்கு என்ற கனவில் இருக்கும் காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடிக் கொடுக்கவும், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள மனமில்லாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாகவும் பிரச்சனை அடிப்படையில் ஆதரவளிப்பதாகவும் அறிவித்து, தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை இதன் மூலம் காங்கிரசாருக்கு அறிவித்திருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சேரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து திமுகவில் இணைந்த பாமக தான் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளதாக நினைக்க முடிகிறது. ஏனெனில் பாமகவிற்கு அதிமுக, திமுக எந்த ஒரு கட்சியிலும் கூட்டணி அமைப்பது சிக்கல் இல்லை என்றாலும் திமுக ஆதரவினால் மட்டும் தான் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற வாய்ப்பு இருந்ததால், ஊழல் விவாகரங்கள் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தொடர்பில்லாதது போல் குடும்ப நல அரசியலில் திமுகவில் இணைந்து கையெழுத்திட்ட பாமக நிறுவனர் இராமதாசுக்கே இழப்பு, (இதைத் தவிர்க்கவே) கிடைத்த இடங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் பாமக முன்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிவிட்டதாக உணரும் இராமதாசுக்கே காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு பேரிழப்பு. மற்றபடி திருமாவளவனுக்கோ, திமுவுடன் இணைந்த உதிரிகட்சிகளுக்கோ எந்த இழப்பும் கிடையாது. அவர்களுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாததால் வந்த வரை வெற்றிபெற்றால் இலாபமே.

காங்கிரஸ் தனித்து நின்று தனது பலத்தை சோதனை செய்து கொள்ள இது நல்ல வாய்ப்பு தான். விஜயகாந்து கடந்த தேர்தல் முடிவின் பிறகு சொன்னது போல் எங்களுக்கு 10 விழுக்காட்டு வாக்காளர்கள் (அல்லது அதற்கும் குறைவோ) ஆதரவு கொடுத்துள்ளனர் என்றோ சொல்லிக் கொள்வதுடன் வாக்கு வங்கியின் கையிருப்பை அறிந்து கொள்ளலாம்.

திமுக காங்கிரஸ் அல்லாத தற்போதைய கூட்டணியைத் தொடரும் போது கனிசமான வெற்றிகளைப் பெரும் என்றாலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றிபெற்றுவிட முடியாது, காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தாலும் இதே நிலை தான் கொஞ்சம் கூடுதலாக சட்டமன்ற இடங்கள் கிடைக்கலாம். இதை சந்தர்பமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயகாந்தை கலட்டிவிட்டுவிட்டு காங்கிரசுடன் கைகோர்தால் அதிமுக தமிழகத்தில் காணாமல் போகலாம். ஜெ அவரசப்பட்டு அந்த முடிவை எடுக்கமாட்டார் என்றே நம்புவோம்.

எனக்கென்னவோ தேர்தலுக்கு முன்பே அதாவது இன்னும் ஓரிரு காங்கிரசும் திமுகவும் சமாதானமாகவே போவார்கள், 60 இடங்களைப் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் திமுகவுடன் தொடரும் என்றே நினைகிறேன். ஏனெனில் காங்கிரஸ் தனித்து நிற்கும் தற்கொலை முடிவுக்குப் போகாது உடன்கட்டை தம்பதிகளைப் போல் தான் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள். காரணம் இருவரின் அரசியல் ரீதியான தில்லுமுல்லுகளை இருவருமே அறிந்திருக்கிறார்கள், நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே ஸ்பெக்டரம் விவாகரம் சூடுபிடித்தது. அதைவைத்து மிரட்டி சட்டமன்றத் தொகுதிகளைப் பெறமுடியும் என்று நம்பியதும், அதற்கான நடவடிக்கையும் காங்கிரசின் விடா(கண்டன்) முயற்சியே. முயற்சியின் தோல்வியை உணர்ந்து காங்கிரசு திமுகவுடன் வேறு வழியில்லாமல் கைகோர்கும்.

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அடுத்தது என்ன ஏலம் தான்? கோடிகள் கைமாறும் ........... !!!

priyamudanprabu சொன்னது…

முயற்சியின் தோல்வியை உணர்ந்து காங்கிரசு திமுகவுடன் வேறு வழியில்லாமல் கைகோர்கும்.
/////


paarpom

suvanappiriyan சொன்னது…

பதவி சுகத்துக்காக கூட்டணியில் எதுவும் நடக்கலாம். ஏமாளிகள் மக்களே!

bandhu சொன்னது…

ராகுல் நீண்ட நாள் திட்டம் போடுவது போல் உள்ளது. அதன்படி பார்த்தால் காங்கிரஸ் தனியே போட்டியிடும் என்று தோன்றுகிறது. அதன் மூலம் ஒரு பெரிய நன்மை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாம் தி மு க அடிச்சது என்று சொல்லிவிடலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப்போது வரும் சில காங்கிரஸ் தலவர்கள் அறிக்கைகள், மீண்டும் கூட வாய்ப்பு வரும் போல் உள்ளது.

எல் கே சொன்னது…

அண்ணே வெளியில் இப்படி அறிவிச்சிட்டு உள்ளுக்குள்ள எதாவது தில்லுமுல்லு பண்ணிடுவான்களோ ?? இல்லை தேர்தல் முடிஞ்சப்புறம் இருக்கவே இருக்கு பொட்டி அதைவேசு எல்லாரயும் விலைக்கு வாங்கிடுவோம்னு முடிவு பண்ணி இருப்பாங்களோ ?

Namy சொன்னது…

Thats correct,

கோவி.கண்ணன் சொன்னது…

கருத்திட்டவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. தனித்தனியாக மறுமொழியிட முடியாமைக்கு வருந்துகிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்