பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2011

ஜெயலலிதாவின் அறிவிப்பு திமுக அதிர்ச்சி !

சென்ற முறை ரூ-வாய்க்கு அரிசி என்ற இலவச திட்டம் அறிவித்து திமுக வாக்குகளை அள்ளியது. அதே வாக்குறுதியை ஜெயலலிதாவும் சொன்னால் அது தேர்தலில் எடுபடாது போட்டிக்கு அறிவித்திருக்கிறார்கள் என்று எதிர்மறை விளைவுகளை மக்கள் இடையே ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா அடக்கி வாசித்தார், இருந்தும் தேர்தல் நெருங்கும் போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருகிலோ அரிசி இலவசம் என்று அறிவித்தார். ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை. ஒரு லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு கடனும் வாங்கி மேலும் டாஸ்மாக்கை நடத்துவதால் அரிசியை இலவசமாகக் கூடக் கொடுக்க முடியும் என்பதை கருணாநிதி செய்து காட்டியப் பிறகு, இலவசத் திட்டங்கள் சாத்தியமானது தான் என்பதை மக்கள் ஓரளவு நம்பத் துவங்கி இருக்கிறார்கள். அனைத்தும் இலவசம் என்கிற அறிவிப்புகளில் பாலியல் தொழிலாளியிடம் செல்வோருக்கு ஆணுறை இலவசம் அப்படியும் நோய் கண்டவர்களுக்கு சிகிச்சையும் இலவசம் என்று சொல்லாதது மட்டும் தான் அனைத்தும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக இருக்கிறது.

திமுகவின் இலவச அறிவிப்பை விட இருமடங்கு இலவசங்களை அதிமுக அறிவித்துள்ளது. இது திமுகவிற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் வயிற்றில் வினிகரையே கரைத்தது போல் இருக்கிறது.

திருமா "அதிமுகவின் இலவச அறிவிப்பு அப்பட்டமான காப்பி" என்கிறார். காப்பி அடிக்காமல் இருக்க இலவச அறிவிப்புகளை யாரும் காபிரைட் செய்யவில்லை என்பது இவருக்கு தெரியாதா ? வீடுகட்ட கல்லை இலவசமாகக் கொடுக்கும் போது கனவில் வரும் மாளிகையை கட்டித் தருவதாக பேச்சுக்காக சொல்வதற்கு எதற்கு நா கூச வேண்டும் என்று ஒரு அரசியல்வாதியாக இருக்கும் இவருக்குத் தெரியாதா என்ன ?

அந்த அம்மா டாஸ்மாக்கில் குடிமகன்களுக்கு சரக்கும் இலவசம் என்று கூட சொன்னாலும் கூட இலவச அறிவிப்புகளினால் மக்களின் மனதைக் களைப்பவர்களுக்கு என்ன ரோசம் வேண்டிக்கிடக்கிறது ?

நேற்று தஞ்சையில் வேட்பாளர் அறிமுகப்படுத்திப் பேசிய கருணாநிதி ஜெ-வின் இலவச அறிவிப்பு ஏலம் விடுவதைப் போல் இருக்கிறது என்று நொந்து போய் புலம்பி இருக்கிறார்.

"தி.மு.க., தேர்தல் அறிக்கை, கம்யூ., கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் விரும்பும் தேர்தல் அறிக்கை. அதில், மேலும் சிலவற்றை சேர்க்க கூட்டணி கட்சிகள் விரும்பியதால், சிலவற்றை சேர்த்து வெளியிட்டோம். இன்று அதற்கு போட்டியாக ஏலம் விடுவது போல், தேர்தல் அறிக்கை விட்டுள்ளனர். - கருணாநிதி

ஏலம் பற்றி திமுகவிற்கு தான் நன்கு தெரியும். திகார் சிறையில் கம்பி எண்ணும் ராசாவைக் கேட்டால் இன்னும் நன்றாகவே விளக்கிப் பேசுவார்.

(நாகை மாவட்டத்தில் ஒரே ஒரு தனித் தொகுதி - கீழ்வேளுர் தவிர்த்து அனைத்தையும் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது திமுக. நாகைத் தொகுதிக்குள் திமுக கூட்டணி ஒரு இடம் கூட பெற தொண்டர்கள் முயற்சி செய்யப் போவதில்லை)

படம் நன்றி தினமலர்

33 கருத்துகள்:

DR சொன்னது…

ஜெயலலிதாவிடம் ஒரு முற்போக்கான தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து நான் ஏமாந்து விட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தனுசுராசி said...
ஜெயலலிதாவிடம் ஒரு முற்போக்கான தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து நான் ஏமாந்து விட்டேன்.//

இதெல்லாம் டூ மச். நாங்களெல்லாம் கருணாநிதியிடம் அதையெல்லாம் நம்பி ஏமாந்தோம், நீங்கள் அதை ஜெவிடம் எதிர்பார்ப்பது உங்க பேராசை.
:)

பழமைபேசி சொன்னது…

"ஜெயலலிதாவின் அறிவிப்பு திமுக அதிர்ச்சி !"

#ஓ, அப்படிங்களா?!

ராஜேஷ், திருச்சி சொன்னது…

அம்மா வின் அறிக்கை எப்படி போன முறை தாக்கத்தை ஏற்படுத்த வில்லையோ அதே போல இந்த முறையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. கலைஞ்சர் சொன்ன தருவர்,, அம்மா வெறுமனே சொல்லும் அவ்ளோதான் என்ற மனப்பான்மையே பரவலாக உள்ளது

கோவி.கண்ணன் சொன்னது…

// கலைஞ்சர் சொன்ன தருவர்,, அம்மா வெறுமனே சொல்லும் அவ்ளோதான் என்ற மனப்பான்மையே பரவலாக உள்ளது//

பாட்டன் முப்பாட்டன் சொத்து அள்ளி அள்ளித் தருவார். என்னத்த இலவசம் கொடுத்தாலும் எம்ஜிஆருக்கு மக்கள் கொடுத்திருக்கும் 'வள்ளல்' பட்டம் கருணாநிதிக்கு கிடைக்கப் போவதில்லை. போதாக் குறைக்கு தமிழகத்தை ஒருலட்சம் கடனில் ஆழ்த்தி பொது மக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தியவர் என்ற பெயர் தான் கிடைக்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

//அந்த அம்மா டாஸ்மாக்கில் குடிமகன்களுக்கு சரக்கும் இலவசம் என்று கூட சொன்னாலும் கூட இலவச அறிவிப்புகளினால் மக்களின் மனதைக் களைப்பவர்களுக்கு என்ன ரோசம் வேண்டிக்கிடக்கிறது ?//

நச்!

ராஜ நடராஜன் சொன்னது…

ஜெயலலிதா உடைச்சா மண்குடம்.
கருணாநிதி உடைச்சா பொன்குடம்-ராமதாஸ்...

ஜெயலலிதாவின் இலசங்கள் சாத்தியமில்லையாம்.....

காங்கிரஸ்க்கு அடுத்து வேட்டியக் கழட்ட வேண்டிய முதல் ஆள் ராமதாஸ்.

ராஜ நடராஜன் சொன்னது…

இரு கழகங்களும் தமிழகத்தை திவாலாக்கும் தீர்மானம் போட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் இலவச அறிக்கையில் புரிகிறது.

இந்தியாவின் வளர்ச்சி இலவசங்களில்!

VJR சொன்னது…

//"ஜெயலலிதாவின் அறிவிப்பு திமுக அதிர்ச்சி !"//

திமுக’ன்னா? ஜெயலலிதா சொல்றத அதிமுக’காரனே நம்பமாட்டான், இதுல நீங்கவேற தமாசு பன்றீங்க.

ஜெயா சொன்னது இதுவரைக்கும் நடந்த ஒன்னு சொல்லுங்க பார்ப்போம். வளர்ப்பு பையன் உட்பட.


எனிவே, நல்லா தமாசு பண்றீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//திமுக’ன்னா? ஜெயலலிதா சொல்றத அதிமுக’காரனே நம்பமாட்டான், இதுல நீங்கவேற தமாசு பன்றீங்க.

ஜெயா சொன்னது இதுவரைக்கும் நடந்த ஒன்னு சொல்லுங்க பார்ப்போம். வளர்ப்பு பையன் உட்பட.


எனிவே, நல்லா தமாசு பண்றீங்க.//

என்னக் கொடுமை சார் தேர்தல் கால வாக்குறுதிகள் நடக்கனும் என்ற பேராசைக் கொண்டவன் நான் இல்லை. கருணாநிதிக்கு இலவசங்களை அள்ளிவிட என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை ஜெ வுக்கும் இருக்கிறது.

ராஜேஷ், திருச்சி சொன்னது…

, கோவியரே , எம் ஜி யார் எப்படி வாரி இறைசாறு .. வள்ளல் பட்டமெல்லாம் எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்.. அந்த கதைய விடுங்க.. இங்க இந்த தேதிக்கு அம்மா , ஐயா பத்தி தானே.. அதுவும் குறிப்பா எந்த இலவசம் தாகத்தை ஏற்படுத்துகிறது என்பது தானே பேச்சு.. நீங்க ஏன் அது பத்தி சொல்லாம.. எம் சி ஆருக்கு போயிட்டீங்க? என் கருத்து "அய்யா தருவாரு, அம்மா தராது - பரவல இப்படி தான் கருத்திருக்கு " உங்க பதில் அதுக்கு சம்பந்தமே இல்லாம இருக்கு .. இதுலே தெரியுது பார்தீங்கள.. அம்மா இலவச அறிவிப்பு காலி பெருங்காய டப்பானு ..

மாலோலன் சொன்னது…

”””இதெல்லாம் டூ மச். நாங்களெல்லாம் கருணாநிதியிடம் அதையெல்லாம் நம்பி ஏமாந்தோம், ””””
ந்ல்லது !!இப்பவாவது புரிஞ்சுதே!:)-

கோவி.கண்ணன் சொன்னது…

// " உங்க பதில் அதுக்கு சம்பந்தமே இல்லாம இருக்கு .. இதுலே தெரியுது பார்தீங்கள.. அம்மா இலவச அறிவிப்பு காலி பெருங்காய டப்பானு ..
//

பதிவை சரியாகப் படிக்கலையோ, லட்சம் கோடி கடன் வாங்கினா எல்லாத் திட்டமும் பாதிவரை (டிவி இன்னும் கொடுத்து முடிக்கவில்லை) செய்து முடிக்க முடியும், கருணாநிதி அரசுக்கு கொடுக்கும் கடன் ஜெ அரசு அமைச்ச தரமாட்டேன்பாங்களா ?

திமுகவின் ஊழல் பணத்தையெல்லாம் மக்களுக்கு இலவசத் திட்டத்திற்குப் பயன்படுத்தினால் அரசு கசானாவில் கூட கைவைக்கத் தேவை இல்லை.

நாங்க ஸ்பெக்டரம் தெரியாத இலவசம் மட்டுமே அறிந்த வாக்காளர் இல்லை :)

Unknown சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு இந்த ராஜேஷ் எனும் பெயரில் திமுக அல்லக்கை ஒன்று எல்லா திமுக எதிர்ப்பு கட்டுரைகளுக்கும் பின்னூட்டம் அனுப்பி வருகிறது. நீங்கள் அதை கவனிக்கவேண்டுமெனில் நேற்றிலிருந்து வந்த எல்லா திமுக எதிர்ப்பு கட்டுரையிலும் அவனது பின்னூட்டம் இருக்கும் கவனித்துப்பாருங்கள். எனவே பதிவர்கள் அனைவரிடம் இந்த திமுக நபரின் ஊடுருவல் பற்றி சொல்லி கவனப்படுத்துங்கள். எனக்கென்னவோ இந்த ராஜேஷ் திட்டமிட்டு திமுக கட்சியால் அனுப்பிக்கவைக்கபட்டவர் போல் தோன்றுகிறது. நம் அனைவருக்கும் கவனம் தேவை. நன்றி.

bandhu சொன்னது…

பணத்திலே அடிப்பது என்பது இது தான்! அதுவும், அந்த பணம் அரசு பணம் என்னும்போது இலவசத்தை அள்ளி விட கசக்குமா என்ன? இந்த இலவசங்கள் அ தி மு க பக்கம் ஓட்டை திருப்பும். அ தி மு க வெல்ல நிறையவே சான்ஸ் இருக்கிறது. ஆனால், இதன் முழுமையான அர்த்தம், நீ என்ன வேணா அடிச்சுக்கோ, எனக்கோ ஏதாவது குடுத்திரு -ன்னு மக்கள் நினைக்கறத இந்த முறை அ தி மு க நிரூபிக்கும்!

NAGA INTHU சொன்னது…

அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்ததும்முக,ஸ்டாலின்,அழகிரி,திருமா,ராமதாஸ்ஆகியோர்குய்யோ,முறையோ,என்றுபுலம்புவதிலேயேதெரியவிலையா? திமுக.வின் தேர்தல் அறிக்கை அம்பேல் ஆகிவிட்டது என்பது.

தருமி சொன்னது…

சில பதிவர்கள் (உங்களையும் சேர்த்து) இந்த ‘சீசனில்’ எழுதும் பதிவுகளை வாசிக்காமல் இருப்பது ந்ல்லது என்று தோன்றுகிறது.

நிலவு சொன்னது…

நல்ல கட்டுரை இதனையும் படித்து கருத்தளியுங்கள்


http://powrnamy.blogspot.com/2011/03/63.html அறுபத்து மூன்று தொகுதிகளில் சீமான் பிரச்சாரம் - காமடி தர்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
சில பதிவர்கள் (உங்களையும் சேர்த்து) இந்த ‘சீசனில்’ எழுதும் பதிவுகளை வாசிக்காமல் இருப்பது ந்ல்லது என்று தோன்றுகிறது.

11:16 PM, March 25, 2011//

திமுக அபிமானிகளுக்கு குறிப்பாக இந்த தேர்தல் நேரத்தில் வரும் வழக்கமான எரிச்சல் தான் இது, நீங்க வாய்விட்டுச் சொல்லிட்டிங்க.

:)

ELANGOVAN சொன்னது…

What was the loan left when Jaya left the govt?

i also want to mention few good things done by Karunanidhi.

1) Computer education in schools are brought first time 1989. most of today's IT professional are benefited from this. before this only IIT/Anna university students were able to come into IT. after this scheme now everyone with just graduation come into IT.

2) rs.25k to pregnant ladys only if their min education is 10th std.
this has helped to improve girls education and proved women dropout in schools reduced significantly.

there are so many but i cant list everything here.

Even anti-dmk channels like CNN-IBN has awarded Tamilnadu as best state award for 2010.

கோவி.கண்ணன் சொன்னது…

// ELANGOVAN said...
What was the loan left when Jaya left the govt?

i also want to mention few good things done by Karunanidhi.

1) Computer education in schools are brought first time 1989. most of today's IT professional are benefited from this. before this only IIT/Anna university students were able to come into IT. after this scheme now everyone with just graduation come into IT.//

இதில் துளியும் உண்மை இல்லை. 1990 களில் என்னுடன் கணிணி துறையில் வேலைபார்த்தவர்களில் BBA,BCOM மற்றும் கலைக் கல்வி பயன்றவர்கள் சரிக்கு சமமாக இருந்தார்கள்.

//2) rs.25k to pregnant ladys only if their min education is 10th std.
this has helped to improve girls education and proved women dropout in schools reduced significantly.//

ஏற்கனவே மாணவி தேர்ச்சி விகிதங்கள் மாணவர்களைக் காட்டிலும் அதிகம். கொடுப்பதாக இருந்தால் 10ஆம் வகுப்பு வரை படித்த ஆண்களின் மனைவிக்கு கொடுப்பதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். ஆண் கல்வி வளர்ச்சி தான் பெண்ணையும் சேர்த்து கல்வியில் முன்னேற்றம் காண வைக்கும், ஆண் படித்த குடும்பங்களில் தான் கல்வியின் பயன் கருதப்பட்டு பெண்களைப் படிக்கவைக்கிறார்கள்.

//there are so many but i cant list everything here.

Even anti-dmk channels like CNN-IBN has awarded Tamilnadu as best state award for 2010.//

தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் நில அமைப்பு, தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் தமிழ்நாடு அதனால் மட்டுமே தனிச்சிறப்பு பெற்றது என்று கூற எதுவும் இல்லை.

ராஜரத்தினம் சொன்னது…

கடவுள் மற்றும் பிராமண எதிர்ப்பு (நான் பாப்பானல்ல)பதிவுகளால் இங்கு வராமல் இருந்துவிட்டேன். கருணாநிதி ஆள்வது, ஆளவிரும்புவது, அவரின் குடும்ப மற்றும் குடும்ப தொழில்களின் பாதுகாப்பை தவிர வேறு நோக்கமில்லாத காரணத்தால் அவர் இந்த முறை வெற்றி பெறுவாரா எனது கேள்விக்குறியே!

ELANGOVAN சொன்னது…

இன்றைக்கு தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில் சிறந்து விளங்க காரணம்., விதைக்க பட்ட ஆண்டு 1989. கலை கல்லூரிகள், schools ல் கம்ப்யூட்டர் பாடம் சேர்க்க பட்டது. இது மிக பெரிய புரட்சியி உண்டு பண்ணியது. இதற்கு முன் சொற்ப பேர் தான் IT பீல்டுக்கு வந்தார்கள். நீங்கள் சொல்லும் 1990 களில் தமிழகத்தில் இருந்த IT கம்பெனிகளே சொற்பம் தான். கை விட்டு எண்ணி விடலாம். அனால் இந்த விதை பூக்க ஆரம்பித்து பல பொறியாளர்களை நாட்டுக்கு தந்தது. அதன் விளைவு இன்று உலகம் எங்கும் உள்ள IT பொறியாளர்களில் நம் தமிழர் , குறிப்பிட தக எண்ணிக்கையில் உள்ளோம்.
இன்றைக்கு ரெண்டாம் நகரங்களான மதுரை, திருச்சி போன்ற இடங்களில் கூட IT கம்பெனீஸ் வர துவங்கிவிட்டன.

///ஏற்கனவே மாணவி தேர்ச்சி விகிதங்கள் மாணவர்களைக் காட்டிலும் அதிகம்..... //////
இன்றைக்கு நடுத்தர குடும்பங்களில் ஆண்/பெண் இருவருக்கும் பெற்றோர் ஓரளவு நல்ல கல்வியி தருகிறார்கள்.
அனால் இந்த rs 25000 நம்பி படிபவர்கள் அவர்கள் அல்ல. இந்த திட்டம் ஒடுக பட்ட மக்கள் கல்வி வளர்சிக்கு. அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் கூட, தங்கள் பெண்களை 10 வது வரை படிக்கச் வேயகிரர்கள். இன்றைக்கு இந்த பெண்களின் கல்வி தரம் சீராக உயர்கிறது. இந்த வளர்ச்சி நாட்டுக்கும் உபயோகமாய் உள்ளது!

//தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் நில அமைப்பு, தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் தமிழ்நாடு அதனால் மட்டுமே தனிச்சிறப்பு பெற்றது என்று கூற எதுவும் இல்லை.///
சிரிப்பு தான் வருகிறது., நாம் மட்டும் தான் தண்ணிக்கே கர்நாடகாவையும்/andhravayum நம்பி இருக்கிறோம். மேலும் மிக சிறந்த வளம் எதுவும் நம்மிடம் இல்லை. பீகார்/மற்றும் சில north-indian statesl உள்ளது போல mines நம்மிடம் இல்லை. சிறந்த நிர்வாகம்/மற்றும் education ரெண்டும் தான் நம் நாட்டை வுயர்தி கொண்டு உள்ளது.
நீங்க solvadai பார்த்தல் எல்லா ஆண்டும் தமிழ்நாடு தான் award வாங்கும் போல, even குடிகாரன் முதல்வர் அனல் கூட.

கோவி.கண்ணன் சொன்னது…

//இது மிக பெரிய புரட்சியி உண்டு பண்ணியது. இதற்கு முன் சொற்ப பேர் தான் IT பீல்டுக்கு வந்தார்கள்//

சொற்பமும் இல்லை அற்பமும் இல்லை. சரிக்கு சரியாக கலைக் கல்லூரி மாணவர்கள் கல்வி முடித்ததும் என் ஐ ஐ டி போன்றவற்றில் படித்து கணிணி துறைக்கு வந்தனர், இது நான் அறிந்த உண்மை. எனது பழைய நண்பர்கள் இன்னும் சாட்சியாக உள்ளனர். அதுமட்டுமின்றி இயந்திரவியலில் மெக்கானிக்கல், சிவில் படித்தவர்கள் கூட 90களில் கணிணி துறைக்கு வந்துவிட்டனர். அப்போது கணிணி துறையிலேயே படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு. பிற மாணவர்களின் வருகையை ஈடுகட்டும் அளவுக்கு அப்போதே கணிணி துறையில் வேலைவாய்ப்புகள் இருந்தன. எனக்கு மேனஜராக இருந்தவரே கணிணி துறையில் படித்தவர் அல்ல.

//அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் கூட, தங்கள் பெண்களை 10 வது வரை படிக்கச் வேயகிரர்கள்//

அனைவரும் படிக்கும் வாய்ப்பு இலவசக் கல்வித் திட்டம் துவங்கிய காலங்களில் இருந்தே இருக்கு, ஆனால் படிக்கப் போனால் வருமானத்திற்கு வழி செய்பவர்கள் யார் என்ற கேள்வியில் தான் பெரும்பாலான ஏழைகளும், அவர்களில் ஆண்களும் கூட கல்வியைத் தொடரமுடியாத நிலை. முடவர்களில் யார் முதலில் ஓடி வந்து வெற்றிபெருகிறார்களோ அவர்களுக்கே மேலும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சொன்னால் அது அறிவுடைமை அல்ல. 10 வகுப்பு வரை பொருளாதாரத் தடை இன்றி படிக்க வசதிகளை ஏற்படுத்திவிட்டல்லவா பிறகு 10 வகுப்பு படித்தவர்களுக்கு சலுகை என்று அறிவித்தால் அதனால் பயனுண்டு.

////தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் நில அமைப்பு, தமிழ்நாட்டை யார் ஆண்டாலும் தமிழ்நாடு அதனால் மட்டுமே தனிச்சிறப்பு பெற்றது என்று கூற எதுவும் இல்லை.///
சிரிப்பு தான் வருகிறது., நாம் மட்டும் தான் தண்ணிக்கே கர்நாடகாவையும்/andhravayum நம்பி இருக்கிறோம். மேலும் மிக சிறந்த வளம் எதுவும் நம்மிடம் இல்லை. //

காவேரி ஆறு தமிழ்நாட்டை நோக்கிய பாய்கிறது, இப்போது நடப்பெதல்லாம் அரசியல் உணர்ச்சி விளையாட்டுகள் மட்டுமே. தமிழ்நாட்டின் மின் சாரம் தான் கருநாடாவிற்குச் செல்கிறது. சரியான திட்டங்கள் இருந்தால் மழைகாலங்களில் கடலில் சேரும் நீரை சேமித்துப் பயன்படுத்த முடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜரத்தினம் said...
கடவுள் மற்றும் பிராமண எதிர்ப்பு (நான் பாப்பானல்ல)பதிவுகளால் இங்கு வராமல் இருந்துவிட்டேன்.//

நீங்க பாப்பானா இல்லையான்னு நான் கேட்டேனா ? ஆசையாக இருந்தால் சொல்லுங்க என்னுடைய நெருங்கிய பார்பன நண்பர்களிடம் சொல்லி உங்களுக்கு பூணுல் போட ஏற்பாடு செய்கிறேன்.


//கருணாநிதி ஆள்வது, ஆளவிரும்புவது, அவரின் குடும்ப மற்றும் குடும்ப தொழில்களின் பாதுகாப்பை தவிர வேறு நோக்கமில்லாத காரணத்தால் அவர் இந்த முறை வெற்றி பெறுவாரா எனது கேள்விக்குறியே!//

வெற்றிபெறாவிட்டாலும் அடிச்சபணத்தில் பங்கு வைத்தாலும் சொத்தை காபாற்றிக் கொள்ளமுடியும், இருந்தாலும் இந்தத் தேர்தலில் அனியாயத்துக்கு மிரண்டு போய் மகள் மருமகள் பேத்தி என்று பெண்களையெல்லாம் கூட வாக்கு வேட்டைக்கு அனுப்பி இருக்கிறார்கள், அரசியலும் பதவியும் அவங்க குடும்பச் சொத்தாகி அதைக் காப்பாற்ற அனைவருமே போராடுகிறார்கள்

ELANGOVAN சொன்னது…

என் ஐ ஐ டி போன்றவற்றில் படித்து கணிணி துறைக்கு ///
Mr.Govi, i think you are very rich guy. i'm talking about the people who cannot afford. even i studied in aptech during 1994 and the fee was 24000. NIIT was even more than 30000rs. In 1990 in whole chennai there was only one/two NIIT, i know there was one in anna ngr. but i'm not talking abt the people who can afford for NIIT/Aptech. During 1989 the corporation schools in chennai have been introduced with computers, and you know they have weekly one day classes from NIIT instructors in corporation schools.

///முடவர்களில் யார் முதலில் ஓடி வந்து வெற்றிபெருகிறார்களோ அவர்களுக்கே மேலும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சொன்னால் அது அறிவுடைமை அல்ல.///

ஆம், ஓட முடியத்வற்கும், ஒரு கை கொடுத்து எல்லை தொட ஒத்துழைத்த திட்டம்! முடவனுக்கும் மீன் பிடிக்க சொல்லி தந்த திட்டம்! ஒரு பெண்ணின் கல்வி சமுதாயத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதை உணர்டவர்களின் திட்டம்.

i appreciate one thing that jaya did good in her whole life is rain water harvesting. other than that she spoiled the whole culture. When MGR was here, most of social issues like (LTTE/Cauvery), tamilnadu people united together forgetting parties.
i remember once there was a bandh for EALAM by MGR, karuna gave a support. but the day when jaya came to politics, she totaly split the people into two. no unity in any of the issues. she was the one made totaly destroyed the ealam support in tamilnadu. even if her partymen wish other partymen for marriage/birthday she cant digest.

கோவி.கண்ணன் சொன்னது…

//Mr.Govi, i think you are very rich guy. i'm talking about the people who cannot afford. even i studied in aptech during 1994 and the fee was 24000. NIIT was even more than 30000rs. In 1990 in whole chennai there was only one/two NIIT, i know there was one in anna ngr. but i'm not talking abt the people who can afford for NIIT/Aptech. During 1989 the corporation schools in chennai have been introduced with computers, and you know they have weekly one day classes from NIIT instructors in corporation schools.//

ஐயா, எனக்குத் தெரிந்து நீங்கள் சொன்னதையே வேறு மாதிரி சொல்கிறீர்கள். 90களில் சென்னையில் வசித்த நடுத்தர வகுப்பு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு 30 ஆயிரம் கடன் வாங்கிப் படிப்பது சுமையே இல்லை, திரும்ப கொடுக்க முடியும் என்கிற தைரியம் இருந்தால் போதுமானது, என்னுடைய நண்பர்கள் கடன் வாங்கிப்படித்தவர்கள் தான். எனக்கு தெரிந்து NIIT சென்னையில் பல இடங்களில் இருந்தது குறிப்பாக வள்ளுவர் கோட்டம் அருகே பெரும் கும்பலே சென்று படிக்கும். நான் 1985ல் பட்டய வகுப்பில் COBOL படித்து இருக்கிறேன், நான் அதில் வேலை பார்க்கவில்லை என்பது வேறு விசயம். பாடத் திட்டத்தில் கணிணி பாடம் பகுதியாகப் படிப்பது 1984 களில் டிப்ளமோ மாணவர்களுக்குக் கூட வாய்திருந்தது. 90 களில் துவக்கத்தில் கலைக் கல்லூரி மாணவர்களும் பகுதி நேரமாகப் படித்தார்கள். அதில் வேலையும் அவர்களுக்கு கிடைத்தது 95-2000 y2k விற்காக வேலைபார்த்தவர்களில் பெரும் பகுதியினர் கலைக்கல்லூரி படித்து கணிணி புரோகிராம் பகுதி நேரமாக படித்தவர்களே மிகுதி.

//i appreciate one thing that jaya did good in her whole life is rain water harvesting.//

அந்தம்மா லாட்டரி சீட்டையும் ஒழித்தது, இட ஒதுக்கீடு காலவாதியானதை தடுத்து நிறுத்தியது. அந்தம்மா திறந்த டாஸ்மாக் கடையினால் தான் திமுக அரசாங்கம் அரசு நடத்துகிறது. கூடவே ஒரு லட்சம் கோடி உலகவங்கிக் கடனையும் வாங்கி வைத்துள்ளது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணே.. எனக்கும் கலைஞர் ஜெயிக்கக்கூடதுன்னு தான் ஆசை.. ஆனா ஜெயிச்சுடுவார் போல இருக்கே..

கோவி.கண்ணன் சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. எனக்கும் கலைஞர் ஜெயிக்கக்கூடதுன்னு தான் ஆசை.. ஆனா ஜெயிச்சுடுவார் போல இருக்கே..//

கருணாநிதியை தமிழ் காவலர் என்று கருதி சென்ற முறை வாக்களித்தவர்கள் அனைவருக்கும் கருணாநிதிக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

ELANGOVAN சொன்னது…

///ஐயா, எனக்குத் தெரிந்து நீங்கள் சொன்னதையே வேறு மாதிரி சொல்கிறீர்கள்.///
சிலருக்கு தேவை படுகிறதே! :)
anyway my point is, corporation schools was introduced with computers during 89.
Yes, In 1990 there were two NIITs, valluvar kottam is the big one and another one in anna ngr. the people i'm talking abt, cant even go near this NIIT, due to various social inequalities (economically/speaking english etc). max no of people even for basic education they depend on corp schools.

///கணிணி பாடம் பகுதியாகப் படிப்பது 1984 களில் டிப்ளமோ மாணவர்களுக்குக் கூட வாய்திருந்தது.///
i'm not sure about 1984 since i was only 10 yrs old. if that is correct, then i'm happy abt that too.

///90 களில் துவக்கத்தில் கலைக் கல்லூரி மாணவர்களும் பகுதி நேரமாகப் படித்தார்கள். ///
i'm telling the same 89-90 was the year computer education has been introduced into govt. schools & colleges. this helped lot of guys with arts/comm graduation to enter into IT. (95-2000 y2k issues).

///அந்தம்மா லாட்டரி சீட்டையும் ஒழித்தது///
this has both +ve & -ve. i take the +ve side and appreciate her.

///இட ஒதுக்கீடு ///
every politician in TN has helped in this issue atleast for votes.

///அந்தம்மா திறந்த டாஸ்மாக்////
the board in tasmac says:
"மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு! "
இதை துறந்ததை சாதனைல் சேர்த்தால், நான் என்னத்த சொல்ல!

///ஒரு லட்சம் கோடி உலகவங்கிக் கடனையும் வாங்கி வைத்துள்ளது.////
world bank dont give loan just like that, there is lot of feasibility study behind this. every loan you receive from world bank is audited, and verified if that helps the society. most of the loans we got are for education, roads & poverty. the first priority is education. because education is the seed, is going to help the future of tamilnadu. there is no harm in getting loan for education. here is one sample :
http://web.worldbank.org/external/projects/main?Projectid=P107668&theSitePK=40941&piPK=64290415&pagePK=64283627&menuPK=64282134&Type=Overview
you can get all the loans tamilnadu received and the status study in their site.

Even in the last budget, the department which gets the max allocation is education:
School Education Department get Rs. 12,674 crore + Rs. 2135 Crore for Higher Education, hats off too anbazhagan.
i would say even this is not enough for education.
------------------------------
Apart from this industial developments, MNC/IT/AUTOMOBILE developments. during chandrababu period, we lost lot of industries to andhra bcoz of sasi and gang.
-------------------------------
Thanks for your replies.

ராஜேஷ், திருச்சி சொன்னது…

கோவியாரே , என் கேள்வியையே தப்பா புரிஞ்சிகிட்டு.. ஐயோ ஐயோ .. ! அம்மா சொன்னாலும் செய்யாது , கலைஞ்சர் சொன்ன செய்வார் - பரவலாக இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்று நான் சொன்னேன்.. அதுக்கு நீங்க.. அப்படி எல்லாம் எண்ணம் எங்கும் இல்லை அப்படின்னு சொன்னன அது பதில்.. அத விட்டு எம்ஜிஆறு வள்ளலு, பில்லலு நு பதில் சொன்னீங்க.. அதை தான் சம்பந்தம் இல்லாத பதில் நு சொன்னேன்.. இப்போ பதிவ படிகலையா நு கேட்கறீங்க.. கேள்விக்கு பதில் சொல்ல பழகிகொங்க கோவியாரே

ராஜேஷ், திருச்சி சொன்னது…

காமா - உன்னை நினைச்ச சிரிப்பா இருக்கு .. ! தி மு க , அதி மு க , தி மு தி க , கு மு க நு எந்த கட்சிக்கும் சார்பனவங்க இருக்கதான் செய்வாங்க.. நீ லூசு மாதி இப்படி அலறுற.. ப்ளாக் ல உன்ன மாதிரி அதிமுக அல்லக்கை தான் எழுதனும என்ன?? கொய்யால.. இத வேற கவனிச்சு பார்த்து , எல்லோருக்கும் சொல்லி கவனபடுத்தனுமாம்.. ஐயோ ஐயோ , என்ன காமெடி பா .. என்ன கவனம் தேவைன்னு சொல்லிடு லூசு.. ! நீ அம்மாக்கு அல்லக்கைய இருக்க , இருந்துட்டு போயேன்.. இங்க இருக்க தி மு க சார்பு ஆளுங்க.. ஐயோ அம்மா வந்துட்டாங்க அனுபிட்டாங்க , கவனம்னு குதிச்சோமா ?

குறிப்பு - நி அவன் இவன் நு பேசியதால் உனக்கு ஒருமையில் தான் பதில்

ராஜரத்தினம் சொன்னது…

//ஆசையாக இருந்தால் சொல்லுங்க என்னுடைய நெருங்கிய பார்பன நண்பர்களிடம் சொல்லி உங்களுக்கு பூணுல் போட ஏற்பாடு செய்கிறேன்//

பார்த்தீங்களா? நீங்க உங்க trademark அரை குறை அறிவை வைத்து பூனூல் போட்டாதான் அவன் பாப்பான் அப்படினு உளற ஆரம்பிச்டேளா? வேணாம் பாஸ். நாம அரசியல் பதிவு பத்தி பெசறதோட நிறுத்திக்குவோம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்