அப்பன் கெட்டப் பெயரை மகன் துடைக்கும் கிமு காலத்து திரைக்கதை. தாவூத் இப்ராஹிம் ரேஞ்சுக்கு வளர்ந்த இரு தாதாக்களை பலிவாங்கி, தந்தை பெயரை காப்பாற்றும் கடும் பணியை விஜய் மேற்கொள்கிறார். பின்நகர்வு காட்சியில் (ப்ளாஸ் பேக்கில்) அவரே அப்பனாக (சூர்யா, அஜித் செய்வதால்) துணிந்து இவரே நடிக்கிறார். மேஜர் ஜெனரலாம், பார்பதற்கு பாம்ஸ் ஸ்குவார்ட் போல தோற்றமளிக்கிறார்.
வடிவேலு வழக்கமான நகைச்சுவை, சற்று போரடித்தாலும், படத்தில் நகைச்சுவைக்கு இதுவாவது இருக்கிறதே. கூம்பு வடிவ கொண்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைத்தது.
பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக வழங்கி இருக்கிறார். இதுக்கு மேல என்ன சொல்வது. பலரும் விமரசனம் எழுதிவிட்டார்கள்.
விஜய் ஆட்டம், ஸ்டெப்ஸ் அருமை, பிரபு தேவாவின் டச் அதில் நன்றாக தெரிகிறது, விஜய்க்கு ப்ளஸ் ஆட்டம் தான். பிரபு தேவா படங்கள் இப்படித் தான் இருக்கும் என்பதை இந்த படம் பளிச்சென்று காட்டுகிறது. பழைய படங்களைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் காட்சிகளை சுட்டு கோர்க்கிறார். இதற்கு பதிலாக எதாவது நல்ல படத்தை ரீமேக் செய்யலாம். படத்தில் பைரவி கீதா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் விஜயின் வளர்ப்பு அம்மா, பெற்ற அம்மாவாக வருகிறார்கள். இரண்டாவது பகுதியை உன்னிப்பாக பார்பவர்கள் செண்டி மெண்டல் ஆவது உறுதி. ப்ரகாஷ் ராஜை சரியாகப் பயன்படுத்தவில்லை, உடைத் தவிர வேறெதுவும் தாதாத் தனத்தைக் காட்டவில்லை. பொசுக்கு பொசுக்குன்னு அல்லக்கைகளை சுட்டு ஹிட்லராக காட்ட முயற்சித்து அவரை உலக பெரும் தாதா என்று சொல்ல முயன்று இருக்கிறார்கள்.
வில்லு குருவியைவிட பரவாயில்லை. இது இந்தியாவின் தலைசிறந்த ஜேம்ஸ் பாண்ட் படம் என்று விளம்பரப்படுத்தப் படுதாம். கொடுமை கொடுமை கொடுமை. விஜய் இப்படி பட்ட படங்களிளை
வில்லு மழுங்கலான பழைய ஆயுதம் !
21 கருத்துகள்:
\\வில்லு மழுங்கலான பழைய ஆயுதம் !\\
இதுவே ஜாஸ்திதான் ...
இருந்தாலும் நீங்க சொல்லிட்டீங்க அப்ப சரியாதான் இருக்கும் ...
oh..
//பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக . ///இதுக்கு மேல
என்ன சொல்வது.// /
:-)))))))))))
//T.V.Radhakrishnan said...
//பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக . ///இதுக்கு மேல
என்ன சொல்வது.// /
:-)))))))))))
11:55 AM, January
//
நான் எழுதும் போதே 'நம்மைப் பற்றி தப்பாக நெனச்சுக்குவாங்களோ' ன்னு யோசனை செய்து பயந்து கொண்டே எழுதினேன். :)
அந்த வரியை சுட்டிக் காட்டி சிரிக்கிறிங்க. மூத்தவர் செய்கிற வேலையா இது ?
:)))))))
நான் கூட என்னோட சேவையை செஞ்சுட்டேன். இன்னைக்கு பொம்மலாட்டம் பாத்தேன் விமர்சனம் போடாலாமான்னு யோசிக்கறேன்.
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.
ஆகட்டு. ஆகட்டு. நடக்கட்டு.நடக்கட்டு.
ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. விஜய் நடித்து கொடுத்து வந்தால்னு இருக்கு அதை "விஜய் நடித்து கெடுத்து வந்தால்"ன்னு மாத்தினா கரெக்டா இருக்கும்ணு நெனக்கிறேன்..
என் சித்தப்பா மகனும் வில்லு படத்திற்கு போயாகனும் என்று இரண்டு கால்களிலும் நின்னான். சரிடா நைட் ஷோவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிவச்சேன். ஆனா ராத்திரி அவன் எவ்ளோ அழுது புரண்டும் அந்த படத்திற்கு கூட்டிட்டு போக மனசு வரலை.
பின்ன.. அடுத்த நாள் அவனுக்கு பிறந்தநாள். இந்த முறைதான் பிறந்தநாளன்று எங்கள் வீட்டில் இருந்தான். ஆகவே கொஞ்சம் விமரிசையாக கொண்டாட ஊரையே என் சித்தப்பா அழைத்திருந்தார். எதற்கு ரிஸ்க் என்று தான் அழைத்துப் போகலை.. :))
என் முடிவு சரி தான் போல.. :))
வில்லு கொடுமையான் படம் உண்மைதான்..
வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..
வடிவேல் வாற கட்டங்கள் நல்லாயிருக்கு. அதே போல் பாடல்களும் நல்லாயிருந்தீச்சு..(உபயம் யூடியூப்)
அப்ப படம் வேஸ்டா..? :-)
கடமையை செவ்வனே ஆற்றியமைக்கு நன்றிகள்!!!!
கோவி கண்ணன் பொண்ணு விஜய் சிம்பு விசிறியா!!!
என்ன கொடுமை சார் இது
//கிரி 8:11 PM, January 19, 2009
கோவி கண்ணன் பொண்ணு விஜய் சிம்பு விசிறியா!!!
என்ன கொடுமை சார் இது
//
ஹலோ ... இதுல என்ன கொடுமை, விஜய் மகனுக்கு அஜித் படம் தான் பிடிக்குமாம்.
//பரிசல்காரன் said...
கடமையை செவ்வனே ஆற்றியமைக்கு நன்றிகள்!!!!
//
பின்னே, காலைக் கடன் போல இவையெல்லாம் ஒரு கடனாகிவிட்டது :)
//’டொன்’ லீ said...
வடிவேல் வாற கட்டங்கள் நல்லாயிருக்கு. அதே போல் பாடல்களும் நல்லாயிருந்தீச்சு..(உபயம் யூடியூப்)
அப்ப படம் வேஸ்டா..? :-)
//
பாடல்கள் எனக்கு நினைவு இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டால் நினைவு வரும் போல
//thevanmayam said...
வில்லு கொடுமையான் படம் உண்மைதான்..//
:))
//வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..
//
அழைப்புக்கு நன்றி ! வருகிறேன் !
//SanJaiGan:-Dhi said...
என் சித்தப்பா மகனும் வில்லு படத்திற்கு போயாகனும் என்று இரண்டு கால்களிலும் நின்னான். சரிடா நைட் ஷோவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிவச்சேன். ஆனா ராத்திரி அவன் எவ்ளோ அழுது புரண்டும் அந்த படத்திற்கு கூட்டிட்டு போக மனசு வரலை.
பின்ன.. அடுத்த நாள் அவனுக்கு பிறந்தநாள். இந்த முறைதான் பிறந்தநாளன்று எங்கள் வீட்டில் இருந்தான். ஆகவே கொஞ்சம் விமரிசையாக கொண்டாட ஊரையே என் சித்தப்பா அழைத்திருந்தார். எதற்கு ரிஸ்க் என்று தான் அழைத்துப் போகலை.. :))
என் முடிவு சரி தான் போல.. :))
//
ரஜினையைப் போலவே, விஜயையும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
//வெண்பூ said...
ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. விஜய் நடித்து கொடுத்து வந்தால்னு இருக்கு அதை "விஜய் நடித்து கெடுத்து வந்தால்"ன்னு மாத்தினா கரெக்டா இருக்கும்ணு நெனக்கிறேன்..
//
வெண்பூ,
முதலில் அவர் நடிப்பதாகவே ஒப்புக் கொள்ளவில்லை, பிறகு ஏன் நடித்து கெடுப்பதைப் பற்றி பேசுனும்.
:)
//ஜோதிபாரதி said...
ஆகட்டு. ஆகட்டு. நடக்கட்டு.நடக்கட்டு.
//
மலையாளம்லோ மாட்லாடுத்துன்னாவா ?
//குடுகுடுப்பை said...
நான் கூட என்னோட சேவையை செஞ்சுட்டேன். இன்னைக்கு பொம்மலாட்டம் பாத்தேன் விமர்சனம் போடாலாமான்னு யோசிக்கறேன்.
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.
12:07 PM, January 19, 2009
//
பார்த்த காட்சி மனசுல இருந்து மறையறத்துக்குள்ள சேவையை செய்திடனும். பொம்மலாட்டம் க்யுக் க்யுக்
படம் சகிக்கலை.
மொக்கை, அறுவை, சப்பை...
வேஸ்ட்..
வேறு என்னத்த சொல்ல..???
கருத்துரையிடுக