உலகக் காவலன், உலகத்தார் காதலன், கழக கண்ணன், காண்போருக்கெல்லாம் அண்ணன், வயதொரு தடையென்பதால் பெயரைச் சொல்லத் தயங்குகிறேன். அண்ணனுக்காக 5 கோடி செலவில் மதுரை மாநகரெங்கும் கட் அவுட் திருவிழா, திரும்பிய இடமெல்லாம் சிரித்த முகத்துடன் அண்ணன், அங்கங்கே கர்ம வீரன் அட்டாக் பாண்டியனும் சேர்ந்தே சிரிக்கிறார். இன்று ஜெனவரி 30 அண்ணனின் 58 ஆவது பிறந்தநாள், மதுரை சுவாசத்திலும் கூடவே மாநகரெங்கும் உள்நாவில் தங்குதே பிரியாணியின் வாசம் ! இப்படி ஒரு கொண்டாட்டத்தை இதுவரை எவரும் கண்டதில்லை.
அண்ணன் வாழ்கவே ! வாழ்க வாழ்க !
10 கருத்துகள்:
த்தூ கேடு கெட்ட சனியன்கள்..
அய்யகோ!
Neengalumaa periyavare?
ஏ!!!!!!!!! எங்க ஊரு..
ஜனவரி 30 காந்தி இறந்த நாள்...துக்கநாள்
ஜனவரி 30..அழகிரி பிரந்தநாள்..???????????????????
மதுரையில் நீங்கள் ஆற்றிய செம்பணி வாழ்க...
நீங்கள் எடுத்த படத்துடன் இந்த வலைதளத்தில் இருக்கும் படத்தையும் இணைக்கவும்...
http://sajayravee.blogspot.com/2009/01/blog-post_29.html
எங்கள் அண்னனை பற்றி தெரியாமல் பதிவு போட்டுவிட்டீர்கள்..
சிங்கைக்கு போனாலும் எங்கள் அண்ணன் விடமாட்டர்..
சிங்கை அவரின் தங்கையை கொடுத்த இடமல்லவா?
நீங்களும் அவர் விழாவில் கலந்து கொள்ளத்தான் சென்றீர்களா...?
கோரிபாளையம் பக்கமே சுத்தியிருக்கீங்க போலே.... பழங்காநத்தம் போயிருந்தா இன்னும் எங்கூரூ பாசகாராய்ங்க பவுசு தெரிஞ்சுருக்கும்.... :)
ஊருக்கு போனது இதுக்கு த்தானா!
கடந்த வாரம் நண்பர்களுடன் மதுரை போயிருந்தேன். டிஜிடல் போர்டுகாரருக்கு நல்ல பண மழை. தங்கள் தலைவரை வாழ்த்த வேண்டியது தான் அதுகாக நேதாஜி, இயந்திரன் ரஜினி ரெம்ப ஓவர்., பசங்க சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு, வடிவேலு பாணில சொல்லனும்னா, என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே
கருத்துரையிடுக