பின்பற்றுபவர்கள்

27 மே, 2007

சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?

சுதந்திர இந்தியாவில் தேசிய அளவில் கல்வி, வேலை வாய்ப்பு பழங்குடியினர் (SC), மலை வாழ்மக்கள்(ST) மற்றும் பின்தங்கியவர் (BC) என்ற பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. SC/ST பிரிவு மக்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இதில் சலுகை பெற SC/ST க்கான சிறப்பு தகுதி என்னவென்றால் அவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனைதான். அதாவது இந்துமதத்தில் இருக்கும் பழங்குடியினர் (SC), மலைவாழ்மக்கள் என்று அறியப்பட்டவர்களுக்குத்தான் அந்த சிறப்பு சலுகைகள்.

இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பிறமதங்களுக்கு மாறும் போது அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைக்கும் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பதில்லை. மாநிலங்கள் அளவில் MBC ஐ சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது BC க்கள் ஆகின்றனர். கணக்கில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் மதம் மாறும் எண்ணிக்கையும் அதற்கான காரணங்களும் MBCக்களுக்கு மிக மிக குறைவு. பிறமதத்தினரில் BC, FC ஆகிய பிரிவுகள் இருக்கின்றனர். ஆனால் மதம் மாறும் தலித்துக்களின் சலுகைகளுக்கான நிலையோ வேறு. மதம் மாறும் போது SC/ST பிரிவினர் BC எனவும் மாற்றப்படுகிறது.

மதமாற்றத்திற்கு தூண்டுதல் (கட்டாயம்) என்பது ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதாவது கட்டாய மதமாற்றதடை சட்டம் அமுல்படுத்தியபோது பல அமைப்புகள் அதற்கு எதிராக போராடி திரும்ப பெறவைத்தனர். கட்டாயப்படுத்தவில்லை என்று அந்த மதத்தினர் சொல்லும் போது அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எதற்கு போராடவேண்டும் ? என்ற கேள்விக்கு 'சிலரை பழிவாங்க சட்டம் தவறாக பயன்படுதப்படலாம்' என்ற உப்பு இல்லாத ஒரு காரணம் என்ற சொல்லப்பட்டது தவிற வேறு காரணங்கள் வெளிப்படையாக இருப்பது போல் தெரியவில்லை.

பலருக்கும் எனக்கும் முதல்காரணமாக தெரிந்தது மதவியாபாரம் படுத்துவிடும் என நினைக்கும் மாற்று மதத்தில் உள்ள மத விற்பனையாளர்களின் தேவையற்ற அச்சமே இதற்கு மறைமுக காரணம். மதமாறச் சொல்லும் மாற்றுமதத்தினர் சொல்லும் முக்கிய காரணம் எங்கள் மதத்திற்கு வந்தால் சமத்துவமாக நடத்துவோம், சாதி பார்க்கமாட்டோம் என்பதுதான், கூடவே எங்கள் இறைவனும், மத புனித நூல்களும் உண்மையானவை என்றும் சொல்லுவார்கள், சொல்லுகிறார்கள்.

தலித்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மாறுகிறார்களா ? அல்லது விரும்பி மாறுகிறார்களா ? என்பது மதவாதிகள் கவலைப்பட வேண்டிய விசயம். அப்படி விரும்பியோ, கட்டாயப்படுத்தப்பட்டோ மதம் மாறுகிறவர்கள் இன்னும் தலித்துக்களாகவே பார்க்கபடுகிறார்களே ! அது ஏன் ? என்பதும் மதவாதிகள், சமூக ஆர்வளர்கள் விவ ாதிக்க வேண்டிய, கேள்வி கேட்க வேண்டிய விசயம். மதம்மாறித்தான் ஒரு கடவுளை வழிபடவேண்டுமா ? ஏன் உங்கள் கடவுளை வழிபட மதம் மாறவேண்டும் ? என்று சொல்கிறீர்கள் என்பதெல்லாம் மதவாதிகள், பக்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய விசயம். ஆனால் அரசாங்கம் இதுகுறித்து கவலைப் படவேண்டுமா ?

ஒரு தலித் தனது மதத்துகட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்பதாலும், அந்த மதம் தன் குலத்தோரை வாழவிடவில்லை, தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து, கண்ணுற்று, தெளிந்து, உணர்ந்து அவர் கடவுள் பற்று உடையவராக (ஆத்திகராக) இருப்பின் சூத்திரன் என்ற இழிபெயரை தாங்கிக் கொள்ள விரும்பாமல் மாற்று மத கடவுளையும், அவர்களது நம்பிக்கைகளையும் அறிந்து மதம் மாறினால் அவனது ஏழ்மை நிலை, சமூக நிலை உடனே அழிக்கப்பட்டுவிடுமா ? எந்த மதமும் இதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். நிலை இப்படி இருக்க... மதம் மாறினால் சலுகை ரத்து என்று சொல்வதற்கு அடிப்படைகாரணம் என்ன ? மாற்று மதத்தினர் இந்திய அரசாங்கத்துக்கு எதாவது எழுத்தில் எழுதி கொடுத்திருக்கிறார்களா ? அதவது ஒரு தலித் எங்கள் மதத்திற்கு மாறும் போது அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளை நாங்கள் பிற்பட்டவருக்கோ, அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் அளவுக்கோ மாற்றுவோம் என எழுதி கொடுத்திருக்கிறார்களா ? பின்பு எதை வைத்து அரசாங்கம் மதம் மாறிய தலித்துகளுக்கான சலுகைகளை மறுக்கிறது ?


எனது பார்வையில், இந்து தலித்துகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் மூலம் இந்துக்களின் எண்ணிக்கையை அப்படியே வைத்திருக்க மட்டும் உதவுகிறது. மேலும் இந்து தலித்துக்களுக்கு மட்டும் சலுகை என்பது ஒரு தலித் சாதிக் கொடுமைகளை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவன் இந்துமததில் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே சலுகைகள் பெறமுடியும் என்ற எழுதப்படாத விதியா ? தலித்துக்கள் எந்த மதத்தை சார்ந்துள்ளார்கள் என்பதை மட்டும் பார்த்து ஏழ்மைநிலையை கவனத்தில் கொள்ளாமல் மறுக்கப்படும் சலுகைகள் மதம் மாறிய தலித்துக்களுக்கு கிடைக்கும் தண்டனையா ? ஒரு சமூகத்தின் மீது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மாற்ற முடியாமல் சுமத்திவரும் தாழ்வுகளை அகற்றவேண்டும் என வழங்கப்படும் சிறப்பு சலுகைகளுக்கான பலன் அவன் சந்ததியை மாற்றிவிடும் என்று நினைத்து சலுகை கொடுப்பது என்பதும் ஒரு தலித் மாற்று மதம் மாறுவதற்கு ஈடான ஒன்றா ? இது சரியென்றால் அரசாங்கமே மதமாற்றம் சரி சலுகைகள் தேவை இல்லை என்று சொல்லிவிடலாமே ? பொருளாதாரம், சமூக நிலை மாறவேண்டுமென்றால் சலுகையை விட மதமாற்றம் சிறந்தது, சுலபமானது என்று அரசாங்கம் சொல்லிவிட முடியாது தானே ? மதத்தையும் தொடர்பு படுத்தி மதம்மாறிய தலித்துக்களுக்கு மறுக்கப்படும் சலுகை சமூக நீதிக்கு எதிரானது, மதங்கள் செய்யும் தவறுக்கு அவர்களை தண்டிப்பது என்ன ஞாயம் ?

மேலும் இந்து தலித்துக்களுக்கு மட்டும் சலுகை என்பது தலித்துகள் தன் சாதி பெயரில் வருணாசர தருமத்தின் பிரிக்கப்பட்ட ஒரு கீழ் சாதியாகவே (சூத்திரனாக) தொடரவேண்டும் என்பதற்காகவும், சமூக சீர்கேடான இந்து சாதி அமைப்பை கட்டிக்காக சலுகை என்ற பெயரில் தரப்படுவது, பெரும் சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக் கொள்ளும் அரசாங்கம் இந்து தலித்துகள் மட்டும் பாதிக்கப்பட்டவர் எனபார்த்து செய்யும் சலுகைகள் இந்து மதத்தைக் கட்டிக்காக்கும் ஒரு கேடயமே.

60 ஆண்டுகளாக இருக்கும் மாற்றுமத தலித்துக்களுக்கு எதிரான இந்நிலை உடனடியாக மாற்றப்படவேண்டும், உடனடியாக தலித்துக்கள் எந்த மதத்தை சேர்ந்தவார் ஆயினும் அனைவருக்கும் அரசாங்க சலுகைகளை வழங்கப்படவேண்டும், நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை உலகில் அனைவரும் ஒப்புக் கொள்ளகிறார்களா ?என்று கூட கவலைப்படத் தேவை இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும்.

பின்குறிப்பு : இந்த இடுகையில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எல்லாவித கருத்துக்களுக்கும் ஆதரவு எதிர்ப்பு எல்லாம் பதிவில் கொடுத்து இருப்பதாக நினைக்கிறேன். எனவே கருத்துக்கள் அனைத்திற்கும் மறுமொழி இடப்போவதில்லை. உங்கள் கருத்துக்களை எவரேனும் மறுத்தால் அதற்கு நீங்களே மறுமொழி இட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இங்கு பேசப்படுவது தலித்துகளுக்கான சலுகைகள் குறித்து மட்டுமே !


தொடர்புடைய சுட்டிகள் :
மதமாற்றம் என்றால் என்ன ?
மதமாற்றமா ? மனமற்றமா ?

19 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

சரியான பார்வை

வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
சரியான பார்வை

வழிமொழிகிறேன்
//

சிபா,

ஒத்த கருத்துக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக இருந்து - சமத்துவம் தேடி - அரசாங்க சலுகை இழப்புக்கு அஞ்சாமல் - மதம் மாறிய கொடிக்கால் செல்லப்பா அவர்களின் பேட்டி ஒன்று ஒரு மின்னிதழில் வெளியாகியிருந்தது. படித்துப்பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

கொடிக்கால் செல்லப்பா பற்றி http://copymannan.blogspot.com/2005_10_01_archive.html இங்கு பார்த்த ஞாபகம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பாபு said...
ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக இருந்து - சமத்துவம் தேடி - அரசாங்க சலுகை இழப்புக்கு அஞ்சாமல் - மதம் மாறிய கொடிக்கால் செல்லப்பா அவர்களின் பேட்டி ஒன்று ஒரு மின்னிதழில் வெளியாகியிருந்தது. படித்துப்பாருங்கள்.
//

பாபு,
தகவலுக்கு நன்றி ! பார்க்கிறேன் !!

பெயரில்லா சொன்னது…

//சரியான பார்வை

வழிமொழிகிறேன்//

ஜிகே அய்யா,

நானும் வழி மொழிகிறேன்.நல்ல பார்வை.எனக்கு இன்னுமொரு யோசனை தோணுகிறதய்யா.ஏன்,தங்களைப் போன்ற 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு பிறபடுத்தப்பட்டு வரும் கிருமி லேயர் ஓ பி ஸி கும்பல் கூட மொட்டை அடித்துக்கொண்டு பெளத்தர்களாகவோ,அல்லது தாடி வளர்த்துக்கொண்டு முஸ்லிம்களாகவோ மதம் மாறக்கூடாது?தமிழ் நாட்டில் தான் 5000 ஆண்டுகளாக இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்ததால்,நீங்க ஏன் தமிழிலிருந்து,உருதுக்கு மொழி மாற்றம் செய்துகொள்ளக் கூடாது?இந்த புரட்சிக்கு நீங்களே ஏன் முன்னுதாரணமா இருந்து,மதம்/மொழி மாறும் இயக்கத்தை தலைமை எற்று நடத்தி,சரித்திரம் படைக்கக்கூடாது?யோசனை செய்யுங்கய்யா. இந்துத்வா சக்திகளுக்கு செம்மையா பதிலடி கொடுங்கய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,

நானும் வழி மொழிகிறேன்.நல்ல பார்வை.எனக்கு இன்னுமொரு யோசனை தோணுகிறதய்யா.ஏன்,தங்களைப் போன்ற 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு பிறபடுத்தப்பட்டு வரும் கிருமி லேயர் ஓ பி ஸி கும்பல் கூட மொட்டை அடித்துக்கொண்டு பெளத்தர்களாகவோ,அல்லது தாடி வளர்த்துக்கொண்டு முஸ்லிம்களாகவோ மதம் மாறக்கூடாது?தமிழ் நாட்டில் தான் 5000 ஆண்டுகளாக இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்ததால்,நீங்க ஏன் தமிழிலிருந்து,உருதுக்கு மொழி மாற்றம் செய்துகொள்ளக் கூடாது?இந்த புரட்சிக்கு நீங்களே ஏன் முன்னுதாரணமா இருந்து,மதம்/மொழி மாறும் இயக்கத்தை தலைமை எற்று நடத்தி,சரித்திரம் படைக்கக்கூடாது?யோசனை செய்யுங்கய்யா. இந்துத்வா சக்திகளுக்கு செம்மையா பதிலடி கொடுங்கய்யா.

பாலா//

வந்துட்டார்யா வந்துட்டார்,

பாலா பாய்,

நல்ல யோசனை, உண்டியல் வருமானம் படுத்துவிடும் என்ற கவலை கூட இல்லாமல் பேசுறிங்க.

அட நாங்கதான் தலித்தை தலித்தாகவே நடத்துறோம்னு சொல்லிட்டு நீங்ககூட ( மாற்று மதம்) ஏண்டா அப்படியே நடத்துறிங்கன்னு தலித்துகளுக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர் தானே ! சபாஷ் !!

ஐயா, மத்த மாநிலத்தில் எப்படி என்று தெரியாது தமிழ்நாட்டில் சித்தர்கள் கூட சாதிபேயை ஓட்டவே முயன்றிருக்கிறார்கள் பெரும்பாலோனர் பேய்களுக்கு பயந்து ஒதுங்கிப் போய்விடவில்லை.

பெயரில்லா சொன்னது…

//நல்ல யோசனை, உண்டியல் வருமானம் படுத்துவிடும் என்ற கவலை கூட இல்லாமல் பேசுறிங்க.//

ஜீகே அய்யா,
உண்டியல் கவலை என்னங்க பொல்லாத கவலை.என் கவலை எல்லாம் உங்களைப் போன்ற 5000 ஆண்டுகள் ,வஞ்சிக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி தான்.
சித்தர்களை விடுங்கய்யா.நாம சரித்திரம் படைப்போம்.நாம் பெரியார்/அண்ணா/மஞ்ச துண்டு/பின் லேடன் காட்டிய வழியில் பீடு நடை போட்டு,புதியதோர் தமிழ் சமுதாயம் படைப்போம்.
மொட்டையா/தாடியான்னு மட்டும் நீங்க முடிவெத்துடுங்கய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீகே அய்யா,
உண்டியல் கவலை என்னங்க பொல்லாத கவலை.என் கவலை எல்லாம் உங்களைப் போன்ற 5000 ஆண்டுகள் ,வஞ்சிக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி தான்.
சித்தர்களை விடுங்கய்யா.நாம சரித்திரம் படைப்போம்.நாம் பெரியார்/அண்ணா/மஞ்ச துண்டு/பின் லேடன் காட்டிய வழியில் பீடு நடை போட்டு,புதியதோர் தமிழ் சமுதாயம் படைப்போம்.
மொட்டையா/தாடியான்னு மட்டும் நீங்க முடிவெத்துடுங்கய்யா.

பாலா //

தாடி இல்லை நண்பரே,

மொட்டை போடுபவர்களுக்கு எதிராக
நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !
:))

பெயரில்லா சொன்னது…

//மொட்டை போடுபவர்களுக்கு எதிராக
நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !//

ஜிகே அய்யா,

இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்குது.வாங்கய்யா,நாம திருப்பதியிலேயே போய் , தடியை எடுத்து புரட்சி பண்ணுவோம்.என்ன,வெள்ளை தாடி ஒட்டிகிட்டா பெரியார் மாதிரி/பின் லேடன் மாதிரி நல்லா இருக்குமேன்னு சொன்னேன்.வாணாம்னாக்க உட்டுடுவோம்.'தடி' நல்ல திட்டம்.அதுக்கு தான் சொல்றது நீங்க என்னிக்கும் தலைவன்,நான் தொண்டன்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//மொட்டை போடுபவர்களுக்கு எதிராக
நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !//

//ஜிகே அய்யா,

இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்குது.வாங்கய்யா,நாம திருப்பதியிலேயே போய் , தடியை எடுத்து புரட்சி பண்ணுவோம்.என்ன,வெள்ளை தாடி ஒட்டிகிட்டா பெரியார் மாதிரி/பின் லேடன் மாதிரி நல்லா இருக்குமேன்னு சொன்னேன்.வாணாம்னாக்க உட்டுடுவோம்.'தடி' நல்ல திட்டம்.அதுக்கு தான் சொல்றது நீங்க என்னிக்கும் தலைவன்,நான் தொண்டன்.

பாலா //

பாலா ஐயா,

இன்னிக்கு சனி பெயர்ச்சியா ?

இங்கே பார்வை அதிகம் படுதே !
:))

வரவணையான் ஐயா பதிவு போடவில்லை என்றால் இங்கே வந்துடுறிங்களே !

நல்லா இருங்க சாமி !

பெயரில்லா சொன்னது…

ஜிகே அய்யா,

மொட்டையா,தாடியா என்ற கேள்விக்கு,ரெண்டும் வாணாம்,தடி தான்னு கொள்கை விளக்கம் தந்துட்டீங்க.ஆனா கிருமி லேயர் ஓ பி சி கும்பல் உருதுக்கு மொழி மாற்ற புரட்சி பற்றி நம்ம கட்சி கருத்து என்னன்னு சொல்லலையே.

பாலா

Krishna (#24094743) சொன்னது…

கோவி அன்பரே: நல்ல திறனாய்வு. இதன் மூல காரணம் சாதி/மத அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகளே. தாங்களே கூறியுள்ளபடி, மதமாற்றம் எந்தவித பொருளாதார, சமூக ஏற்றத்தையும் தராது. ஏழை, ஏழையாகவே இருப்பான் - ஆனால் மதம் மாறியதால் சில சலுகைகளை இழப்பான். இதில் உங்களுடைய வாதம், சாதி/மத அடிப்படையிலான சலுகைகளை சமூக, பொருளாதார அடிப்படைக்கு முடிச்சு போடும் முயற்சியே. இது சரியில்லை என்பது என் கருத்து.

இதே நிலையில், பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்குமானால், தாங்கள் இப்படி ஒரு பதிவு எழுதுவதற்கே வாய்ப்பு இருந்திருக்காது. சிறிது பழங்கதைகளை ஒதுக்கி விட்டு, தெள்ளிய மனதுடன் சிந்தித்தால் இன்றைய சமூக, ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணி பொருளாதாரம் மட்டுமே என்பது புரியும். ஆகவே அரசின் கொள்கைகள்/சலுகைகள் அனைத்தும் பொருளாதரத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அது மட்டுமே நம் சமூகத்தினை உண்மையான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன். முன்னேறியவர்கள் எனக் கூறப்படும் வகுப்பினர் 2000 ஆண்டுகளுக்கு முன் எங்களை நசுக்கினர். ஆகவே இப்பொழுது அவர்களை நசுக்குவோம் என்பது - சிந்தனை மழுங்கபெற்றவர்களின் வாதமாகவே எண்ணுகிறேன். உதாரணத்திற்கு 1942ல் நம் முன்னோர் யாரிடமோ வாங்கிய கடனை உங்களிடமிருந்து வசூலிக்க யாராவது புறப்பட்டால் அது எவ்வளவு மடத்தனம் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதேபோல் யாரோ யாரையோ அடக்கினார்கள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அதன் பேரில் ஒரு அரசாங்கமே சிந்திக்கும் செயலிழந்து நிற்பது வேதனைக்குறியது. அந்தக் காலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை அந்தக் காலத்தில்தான் போராடவேண்டும். அதைவிடுத்து தற்போதைய காலகட்டத்தின் பிரச்சினையை உணராமல், கடந்த கால போராட்டங்களில் நாமிறங்குவது சரியில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதே நிலையில், பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்குமானால், தாங்கள் இப்படி ஒரு பதிவு எழுதுவதற்கே வாய்ப்பு இருந்திருக்காது. சிறிது பழங்கதைகளை ஒதுக்கி விட்டு, தெள்ளிய மனதுடன் சிந்தித்தால் இன்றைய சமூக, ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணி பொருளாதாரம் மட்டுமே என்பது புரியும். ஆகவே அரசின் கொள்கைகள்/சலுகைகள் அனைத்தும் பொருளாதரத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அது மட்டுமே நம் சமூகத்தினை உண்மையான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன். முன்னேறியவர்கள் எனக் கூறப்படும் வகுப்பினர் 2000 ஆண்டுகளுக்கு முன் எங்களை நசுக்கினர். ஆகவே இப்பொழுது அவர்களை நசுக்குவோம் என்பது - சிந்தனை மழுங்கபெற்றவர்களின் வாதமாகவே எண்ணுகிறேன். உதாரணத்திற்கு 1942ல் நம் முன்னோர் யாரிடமோ வாங்கிய கடனை உங்களிடமிருந்து வசூலிக்க யாராவது புறப்பட்டால் அது எவ்வளவு மடத்தனம் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதேபோல் யாரோ யாரையோ அடக்கினார்கள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அதன் பேரில் ஒரு அரசாங்கமே சிந்திக்கும் செயலிழந்து நிற்பது வேதனைக்குறியது. அந்தக் காலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை அந்தக் காலத்தில்தான் போராடவேண்டும். அதைவிடுத்து தற்போதைய காலகட்டத்தின் பிரச்சினையை உணராமல், கடந்த கால போராட்டங்களில் நாமிறங்குவது சரியில்லை.//

பொருளாதாரம் எந்த அடிப்படையில் பொருளாதாரத்தைப் பிரிப்பது ? சுய தொழில் அல்லது ஒரு சொத்து மூலம் நிரந்தரமாக அதிகமாக வருமானம் பெறுபவர்கள் சலுகைக்காக சான்றிதழில் குறைவாக போட்டு வாங்க மாட்டார்களா ?

உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதுபோல் வாங்கிவிடலாம்.

பொருளாதாரத்தில் பிந்தங்கி இருப்பவர் மட்டுமே பிந்தங்கியவர் அல்லா ஐயா,

படிப்பு அறிவு வேண்டும் என்று சிந்திகாமல் இருப்பவகள் தான் உண்மையாகவே பின் தங்கியவர்கள். இடஒதுக்கீடு என்று ஒரு வாய்ப்பு இருக்கும் போதுதான் ஒருவேளை 10ஆம் வகுப்பு வரை அவன் படித்து இருந்தால் மேலும் படிக்க வழிசெய்யும்.

பணத்துக்காக தலித்துகள் மதம் மாறுகிறார்கள் என்று சிலர் சொல்லும் குற்றச்சாட்டையும் தூக்கி குப்பையில் தான் போடவேண்டும். மழைவெள்ள நிவாரணம் இலவசமாக கிடைக்கிறதென்று சென்று இறந்தவர்களில் வசதிபடைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். பணத்தாசை யாருக்குத்தான் இல்லை ? பின்விளைவுகள் தெரியாமல் மதம் மாறி சலுகைகளை இழக்கும் தலித்துக்கள் குறித்துதான் சொல்கிறேன். மாற்றுமத தலித்துக்களுக்கு இடஒதுக்கீடு ஏற்கனவே இருக்கும் தலித்துக்களுக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் அவர்களை இணைத்தாலே போதும்.

பழங்கதைகளை ஒதுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் பழங்கதை பேசுபவர்கள் தன் சமூகம் பாதிக்கப்படும் போது மட்டுமே குறிப்பிட்ட சில விசயங்களில் மட்டும் பழங்கதை பேசக்கூடாது என்கிறார்கள். மற்றவற்றிக்கெல்லாம் மரபு என்கிறார்கள். எந்தவிதமான பழங்கதை என்று முடிவுக்கு வரவேண்டுமே !
:)))

கருத்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
ஜிகே அய்யா,

மொட்டையா,தாடியா என்ற கேள்விக்கு,ரெண்டும் வாணாம்,தடி தான்னு கொள்கை விளக்கம் தந்துட்டீங்க.ஆனா கிருமி லேயர் ஓ பி சி கும்பல் உருதுக்கு மொழி மாற்ற புரட்சி பற்றி நம்ம கட்சி கருத்து என்னன்னு சொல்லலையே.

பாலா
//

பாலா ஐயா,

அல்லாத்தையும் சொல்றவரு இத்தையும் சொல்லிடலாமே.

தேவபாசை வேணாமா ? 'மூல'பாசையை விட்டுகொடுக்கச் செல்லிறீரே!
:)

bala சொன்னது…

//அல்லா த்தையும் சொல்றவரு இத்தையும் சொல்லிடலாமே//

ஜீகே அய்யா,

நீங்க பொடி வச்சு அல்லான்னு சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டேன்.நம்ம கட்சி ஓ பி சி கும்பல் முஸ்லிம்களா மாறி,உருது மொழிக்கு தாவிடனும்னு சூசகமா சொல்றீங்க.நல்லதுங்கய்யா.உருது ரொம்ப இனிமையான மொழி. கரடு முரடு தமிழ் போல அல்லா அது.நல்ல சாய்ஸ்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீகே அய்யா,

நீங்க பொடி வச்சு அல்லான்னு சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டேன்.நம்ம கட்சி ஓ பி சி கும்பல் முஸ்லிம்களா மாறி,உருது மொழிக்கு தாவிடனும்னு சூசகமா சொல்றீங்க.நல்லதுங்கய்யா.உருது ரொம்ப இனிமையான மொழி. கரடு முரடு தமிழ் போல அல்லா அது.நல்ல சாய்ஸ்.

பாலா //

நல்லா சொன்னிங்க...முதல் முதலில் உங்களைத்தான் மாத்தனும்... எப்ப வைத்துக் கொள்ளலாம்

:))))))))

bala சொன்னது…

//நல்லா சொன்னிங்க...முதல் முதலில் உங்களைத்தான் மாத்தனும்... எப்ப வைத்துக் கொள்ளலாம்//

ஜீகே அய்யா,
சொல்லுங்கய்யா.எப்ப வேணா வைத்துக் கொள்ளலாம்.என்ன ஒரு பெரிய கும்பலா மாறினா நம்ம சிவபாலன் அய்யா கூட ஒரு சற்று முன் செய்தியில போட்டு விளம்பரம் கொடுப்பாரேன்னு பாத்தேன்.உங்க வழி தான் என் வழி.

பாலா

-L-L-D-a-s-u சொன்னது…

இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் கூட தலீத் கிறிஸ்தவர்களின் நிலையை பேசுவது இல்லை .

தற்போதைய சமூக அந்தஸ்து மாறுகிறது என்று வாதத்திற்காக எடுத்துகொண்டாலும் , முன்னோர்கள் பட்ட துன்பத்திற்காகவாவது தலீத் கிறிஸ்தவர்களுக்கு இடப்பங்க்கீடு இருக்கவேண்டும் .

தலீத்துகள் பண்த்துக்காக மாறுகிறார்கள் என சொல்பவர்க்ளை வன்கொடுமை சட்டத்தின் மூலம் உள்ளே தள்ளவேண்டும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்