பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2007

இட ஒதுக்கீடு குறித்து...

இட ஒதுக்கீடு குறித்து அரசாங்கப் பிரிவுகள் முற்பட்டோர் அதாவது கல்வி மற்றும் சமூக அளவில் முன்னேறியவர்கள், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் பழங்குடியினர் / ஆதிவாசிகள்.

இந்த நால்வகையினர் சேர்ந்ததுதான் ஒரு சமூகம். ஏற்றத்தாழ்வுகளை என்றைக்கோ விதைத்தன் அறுவடை முடிந்து இன்று எல்லாவற்றையும் சமப்படுத்தும் நிலையில் இருக்கிறது நாடு.

அள்ளியவனும் ஆள்பவனும் சக மனிதனே என்று எல்லோரும் உணரவேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் பொருளாதாரத்திலும் அதனால் கல்வியிலும் கீழே உள்ளவர்களை மேலே உயர்த்த வேண்டும் என்று சமூக அமைப்புகளை நன்கு ஆரய்ந்தே தான் அரசாங்கம் இடஒதிக்கீடுகளை அறிவித்து செயல்படுத்துகிறது. அனைத்து சமூகமும் அந்தஸ்தில் சம அளவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் தத்தம் சமூகம் முன்னேற வேண்டுமென்றெ மனப்பான்மையால் இருப்பதால் இட ஒதுக்கீடு கொள்கைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களைச் சொல்கின்றனர்.

இப்பொழுது உள்ள இட ஒதுக்கீடு ஒரேடியாக கீழே உள்ளவர்களை மேலே கொண்டுவந்துவிடவில்லை. இது அவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு ஊட்டமாகவும் அதைவிட விழிப்புணர்வுக்காகவும் தான் பயன்படுகிறது.

போட்டி போட்டு வெற்றிபெற முடியும் என்ற அளவுக்கு கீழ்நிலை சமூகங்கள் இன்னும் விழிப்புணர்வு பெற்றுவிடவில்லை என்பதை கட்-ஆப் மார்க் வைத்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே மாதிரி 50 மார்க் மட்டுமே எடுக்கும் 4 வித சமூகங்களும் ஒன்றாகவே கருத்தப்பட வேண்டுமென்பது ஏற்புடையதா ?

பள்ளிசெல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைசெய்தால் தான் உணவு என்று இருப்பவன் எடுக்கும் 50 மதிப்பெண்ணும் படிப்பைத் தவிர வேறெதும் செய்யத் தேவையில்லாதவர்கள் எடுக்கும் 50 மதிப்பெண்களும் ஒன்றா ?

50 மதிப்பெண் எடுத்து இடம் கிடைத்த பழங்குடியினரைப் பார்த்து 50 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்காத மிகவும் பிற்படுத்தவர் / பிற்படுத்தப்பட்டவர் தாம் பழங்குடியினராக பிறந்திருந்தால் நல்லது என்று நினைப்பார்களா ? இது போலத் தான் மற்ற சமூகங்களின் மனப்பான்மைகளும்.

மதம் மாற்றம் போல் சாதி மாறி சலுகைகளை அடைய எந்த சமூகம் தயாராக இருக்கிறது ? தனது சாதியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது சலுகையும் வேண்டும்.

இடஒதுக்கீடு பற்றிய பெருமூச்சுகளைப் பற்றி பச்சையாக சொல்லப் போனால் பிச்சைகாரன் சோற்றில் கைநினைக்க ஆசைப்படுவது போல் இருக்கிறது, சலுகைகள் பெறுபவர்களை பிச்சைக்காரான் என்று சொல்வதாக பொருள் அல்ல... அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்... அந்த விழிப்புணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதே பொருள்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்பது நல்ல சிந்தனைதான்... அதற்கு முன்பு இதுவரை எல்லோரும் எல்லாமும் பெற்று சமநிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்...போட்டிக்கு அவர்களை தயார்படுத்தவேண்டும். பலமில்லாதவர்கள் தங்களுடன் போட்டி போடவேண்டும் மென்பது சுயநலப் பார்வையும் தன்சமூகம் சேர்ந்த பார்வையே அன்றி வேறுபாடுகளை களையவேண்டும் என்ற பொது சமூகப் பார்வை இல்லை. தனிமனித, தனிசமூக பாதிப்புகளைவிட ஒரு பல சமூகத்தில் இதுநாள் வரை வைத்து இருந்த / திணிக்கப்பட்ட பாதிப்புக்களைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பின்குறிப்பு : இது தமிழ்மண விவாதகளத்தில் அளித்த பின்னூட்டம்

பின்னூட்டமிடம் இட Post a Comment


கீழே உள்ள பின்னூட்ட இணைப்பை (Post a Comment - Link) பயன்படுத்தவேண்டாம் ப்ளாக்கர் சொதப்பல் அது

11 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

Excellent Write up!

I agree with your view!!

Thanks for the post!!

bala சொன்னது…

//இடஒதுக்கீடு பற்றிய பெருமூச்சுகளைப் பற்றி பச்சையாக சொல்லப் போனால் பிச்சைகாரன் சோற்றில் கைநினைக்க ஆசைப்படுவது போல் இருக்கிறது, சலுகைகள் பெறுபவர்களை பிச்சைக்காரான் என்று சொல்வதாக பொருள் அல்ல.//

ஜிகே அய்யா,

ஏற்றுக்கொள்ளவெண்டிய கருத்து.இட ஒதுக்கீட்டு சலுகை பெறுபவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.ஓரளவுக்கு லெலெல் ப்ளேயிங் ஃபீல்ட் செய்வதர்க்கான முயற்சி தான் அது.ஆனால் சாதி அடிப்படையில்,தலைமுறை தலைமுறையாக ஆதிக்க சக்திகளாக,பணம் பதவி,செல்வாக்கு எல்லாம் இருந்தும்,ஜிகே,குழலி,லக்கி, சிவபாலன், போன்றவர்கள் இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்தால் அது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?அது எப்படி லெவெல் ப்ளேயிங் ஃபீல்ட் பண்ணும் முயற்சியாகும்?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் வெ said...
GK,

Excellent Write up!

I agree with your view!!

Thanks for the post!!
//

சிபா,

நன்றி !

SP.VR. SUBBIAH சொன்னது…

இட ஒதுக்கீடு, சலுகைகள்,, மான்யங்கள்
-ஆகியவைகள் எல்லாம் மிகவும் sensitive ஆன விஷயங்கள்!

இதில், இளைஞர்கள், நடுத்தர வயாதினர், முதியவர்கள், பயனாளர்கள்,
பயன்பெற முடியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உண்டு!

ஒத்த கருத்து என்பது சாத்தியமில்லை
வலைப்ப்திவுகளில் இவறறை எழுதுவதோ அல்லது பின்னூட்டங்கள் மூலமாகவோ நம் கருத்தைச் சொல்வதோ எந்தவிதமான பயனையும், நல்விளைவையும் கொடுக்காது என்பதுதான்
என்னுடைய தாழ்மையான கருத்து!

செயல்பட வேண்டியவர்கள், செயல்படுத்தவேண்டியவர்கள், மத்திய,
மற்றும் மாநில அரசில்தான் இருக்கிறார்கள்.

ஆகவே உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய பதில் -"உள்ளேன் ஐயா!"

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,

ஏற்றுக்கொள்ளவெண்டிய கருத்து.இட ஒதுக்கீட்டு சலுகை பெறுபவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.ஓரளவுக்கு லெலெல் ப்ளேயிங் ஃபீல்ட் செய்வதர்க்கான முயற்சி தான் அது.ஆனால் சாதி அடிப்படையில்,தலைமுறை தலைமுறையாக ஆதிக்க சக்திகளாக,பணம் பதவி,செல்வாக்கு எல்லாம் இருந்தும்,ஜிகே,குழலி,லக்கி, சிவபாலன், போன்றவர்கள் இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்தால் அது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?அது எப்படி லெவெல் ப்ளேயிங் ஃபீல்ட் பண்ணும் முயற்சியாகும்?
//

பாலா,
தலைமுறை தலைமுறையாக ஆதிக்க சக்திகளாக,பணம் பதவி,செல்வாக்கு எல்லாம் இருந்தும் ஜிகே,குழலி,லக்கி, சிவபாலன் போன்றர்கள் என்று சொல்கிறீர்களே அதெல்லாம் அவர்களுக்கு இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா ?

இப்பத்தான் பேசவே கத்துக்கிட்டு இருக்கிறார்கள் பலர்.

'லக்கி' பற்றி எதுவும் தெரியாது ஆனால் மற்ற மூவரும் சந்ததியினருக்கு அரசாங்க சலுகைகளை வேலை வாய்புக்கோ கல்விக்கோ எதிர்பார்க்க மாட்டார்கள் !

உங்கள் மேலானா கருத்துக்களுக்கு நன்றி !

கொசு சொன்னது…

ஜிகே சார்,

ஜாதியை உருவாக்கியது யார்? பிராமனர்கள் என்றுதான் வரலாறு சொல்கிறது. ஏன் அவர்கள் ஜாதியை உருவாக்க வேண்டும்; இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக குதிக்க வேண்டும்?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்? அதுதானே உலக நியதி?

கோவி.கண்ணன் சொன்னது…

//கொசுபுடுங்கி said...
ஜிகே சார்,

ஜாதியை உருவாக்கியது யார்? பிராமனர்கள் என்றுதான் வரலாறு சொல்கிறது. ஏன் அவர்கள் ஜாதியை உருவாக்க வேண்டும்; இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக குதிக்க வேண்டும்?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்? அதுதானே உலக நியதி?
//

கொசு புடுங்கி சார்,

நான் என் பதிவில் எந்த சாதியினர் பெயரையும் பயன்படுத்துவதில்லை.
நீங்களும், மற்றவர்களும் இங்கே பின்னூட்டும் போது சாதிப் பெயர் பயன்படுத்தாதீர்கள்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

சிறப்பான கருத்துக்கள் கோவி. என்னைப் பொறுத்த வரை ஜாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்தே தீர வேண்டும். மேல் ஜாதி என்று தன்னைத் தானே பிரித்து கொண்ட ஜாதிப் பெயர் எழுதுவதில் பெருமை என்று வக்கிரங்களை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறானோ அது வரை இட ஒதுக்கீடு இருந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

bala கருத்துக்கு பதில் கருத்து அளிக்காமல் சக பதிவர்களை சண்டைக்கு இழுக்கும் பழக்கம் வேண்டாம். மற்றவருக்கு கோபத்தை உண்டாக்கி விவாதத்தை திசை திருப்பு முயல்வதை விட்டு விட்டு கருத்துக்கு பதில் சொல்லும் நாகரீகம் கற்றுக் கொள்ளுங்கள்.

தருமி சொன்னது…

ஒரு வேண்டுகோள் இங்கே...

கோவி.கண்ணன் சொன்னது…

// SP.VR.சுப்பையா said...
இட ஒதுக்கீடு, சலுகைகள்,, மான்யங்கள்
-ஆகியவைகள் எல்லாம் மிகவும் sensitive ஆன விஷயங்கள்!

இதில், இளைஞர்கள், நடுத்தர வயாதினர், முதியவர்கள், பயனாளர்கள்,
பயன்பெற முடியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உண்டு!

ஒத்த கருத்து என்பது சாத்தியமில்லை
வலைப்ப்திவுகளில் இவறறை எழுதுவதோ அல்லது பின்னூட்டங்கள் மூலமாகவோ நம் கருத்தைச் சொல்வதோ எந்தவிதமான பயனையும், நல்விளைவையும் கொடுக்காது என்பதுதான்
என்னுடைய தாழ்மையான கருத்து!

செயல்பட வேண்டியவர்கள், செயல்படுத்தவேண்டியவர்கள், மத்திய,
மற்றும் மாநில அரசில்தான் இருக்கிறார்கள்.

ஆகவே உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய பதில் -"உள்ளேன் ஐயா!"
//

சுப்பைய்யா ஐயா,
உங்கள் கருத்துக்களுக்கு முதற்கண் நன்றி. பயனளிக்கிறதா ? இல்லையா ? என்று பெரும்பாலோர் பார்பது இல்லை. இதுபற்றிய நமது கருத்துக்களைச் சொல்லும் பொது ஊடகமாக பயன்படுகிறது. ரகசிய ஓட்டெடுப்பு போல் பல்வேறு தரப்பு படித்தவர்களின் மனநிலையை அறியும் ஊடகம். வலைப்பதிவுகள் தற்காலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

//ஆகவே உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய பதில் -"உள்ளேன் ஐயா!" //

அட்டென்ஸ் ! வாத்தியார் மாணவருக்கு கொடுப்பதா ? நன்றி !!!

bala சொன்னது…

//bala கருத்துக்கு பதில் கருத்து அளிக்காமல் சக பதிவர்களை சண்டைக்கு இழுக்கும் பழக்கம் வேண்டாம்//

செந்தில் குமரன் அய்யா,

சண்டைக்கு இழுக்கலை அய்யா.ஒரு மாற்று கருத்து தான் சொன்னேனுங்கய்யா.ஆதிக்க சக்திகளாக இருக்கும் க்ரீமி லேயர் தங்களை தாங்களே OBC என்று வர்ணித்துக்கொண்டு,தங்களுக்கே இட ஒதுக்கீடு செய்வது பிச்சை எடுப்பதற்கு சமமாகும்,அது எப்படி லெவல் ப்ளேயிங் ஃபீல்ட் செய்யும் முயற்சியாகும்?பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தியது ஒரு உதாரணத்திற்கு தான்.அவர்கள் quota benefit பெற்றார்கள் என்று சொல்லவில்லை.ஆனால் சாதி என்ற அடிப்படையில் பலர் நல்ல நிலையில் இருந்தாலும்,கோட்டா சலுகை பெறுவது எப்படி சமூக நீதியாகும் என்பதே.அதுக்கு நீங்க பதில் சொல்லாம நாட்டாமையா "நாகரீகம்' அது,இதுன்னு சொல்லிடீங்க.பரவாயில்லை.தென்னாட்டு Carl Segan ன்னு நான் நினைக்கும் நீங்க தானே சொல்லியிருக்கீங்க.

பாலா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்