பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1

ஒரு பத்து நாள் சிறுவிடுப்புடன் உறவினர் திருமணத்திற்காக பிறந்தகம் (நாகை) செல்ல வேண்டி இருந்தது. நிகழ்ச்சிக்கு முன் கூட்டியே 9 நாள்களுக்கு முன்பு சென்றதால் இடைப்பட்ட காலத்தில் நம் வலைப்பதிவாளர்களைச் சந்தித்தால் என்ன ? என்று முன்கூட்டியே முடிவு செய்து அதன் படி என் நினைவுக்கு வந்தவர் பெரியவர், அனைவரின் அன்புக்குறியவர், தற்காலச் சித்தர், பதிவர் ஞான வெட்டியான் ஐயா ஞாபகம் வந்தது. நாகையிலிருந்து கடந்த திங்கள் அன்று (19/02/2007) அவருக்கு முன்கூட்டியே நாளை வருவதாக தொலைபேசி சந்திக்க வருவதை தெரிவித்தேன். மகிழ்வுடன் வரவை நல்வரவாக்குவதாக சொன்னார்.

செவ்வாய் காலை 8 மணி அளவில் நாகையிலிருந்து நேரடி பேருந்து உடனடியாக இல்லாததால் தஞ்சை - திருச்சி - திண்டுக்கல் செல்வதாக முடிவுசெய்து தஞ்சை பேருந்தில் ஏறி அமர்ந்தேன். தஞ்சை பேருந்து நிலையத்தை அடைய 3 மணி நேர பயணம். பேருந்தில் படக்காட்சியில் (வீடியோ) இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொகுப்பு படம். நல்ல பொழுதுபோக்கு பயண நேரம் சென்றதே தெரியவில்லை.

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன் கையில் படக் கருவி (கேமரா) இல்லை. மனைவியிடம் இருந்தது, மனைவியும் மகளும் திருவெரம்பூருக்கு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முன்பே சென்று விட்டார்கள். இந்த பயணத்தில் அவர்கள் இடம் பெறவில்லை. படக் கருவி தேவையாக இருந்ததால். பேருந்து எண், நிறம், எத்தனை மணிக்கு திருவெரம்பூர் வழியாக செல்லும் என்று அறிவித்து அங்கு படக் கருவியுடன் வந்து பேருந்து பயணிகள் இறங்குவதற்காக நிற்கும் போது சன்னல் வழியாக படக் கருவியை கொடுக்கும் படி செல்போன் வழி தெரிவித்தேன். பேருந்து திருவெரம்பூர் நிறுத்த இடத்தை அடைந்ததும் எதிர்பார்த்த படி மனைவியும், மகளும் நின்றிருந்தார்கள். புகைப்படக் கருவி கைமாறியது. ஏக்கத்துடன் பார்த்த இருவருக்கும் பேருந்தில் இருந்தபடியே கை அசைத்துவிட்டு, திருச்சி மைய பேருந்து நிலையத்தை அடையும் போது மணி மதியம் 1.05.

பசி கண்களுக்கு அனிச்சை செயலை தூண்ட கண்கள் உணவு விடுதியை தன்னிச்சையாக தேடியது. ஹோட்டல் ராஜசுகம் கண்ணுக்குள் அகப்பட அதற்குள் நுழைந்தேன். ஏற்கனவே அங்கு சிலமுறை சென்றிருக்கிறேன். காற்று சீரமைக்கப்பட்ட (குளிர் சாதனம் பொருத்தப்பட்ட) அறையில் தென் இந்திய பகல் உணவு. அருமை அருமை. விலையும் குறைவு ( ரூ 40/- மட்டும்) இனிப்பு வகை, கோதுமை ரொட்டி (சப்பாத்தி) மற்றும் உணவு வகைகளுடன், பெரிய பொறித்த அப்பளம் (ஆனை அடி அப்பளம் என்று சொல்லுவார்கள்) அருமையான சாப்பாடு. முடிந்ததும் வெற்றிலைப்பாக்கு இனிப்பு பீடா கொடுத்தார்கள். போதுமானதாக (திருப்தி) இருந்தது.

திண்டுக்கல் செல்லும் பேருந்தைப் பிடிக்க பகல் 1.30 ஆகி இருந்தது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் இரண்டு
மணி நேரப் பயணம் என்றார்கள். வீடியோவில் எம்ஜிஆர் படம் பெயர் நினைவு இல்லை, அந்தப் படத்தில் ஜெய - இரட்டை வேடம் படம் ஓடியது. ( இப்போது உண்மையிலும் ஜெ இரட்டை வேடம் என்று கூட சொல்கிறார்கள் :) - அரசியல் ) பேருந்து திண்டுக்கல் வந்தடையும் நேரத்தை செல்பேசி வழி ஞான வெட்டியான் ஐயாவுக்கு சொன்னேன். எப்படி அவர் இல்லத்தை அடைவது என்று சொன்னார். நினைவு வைத்துக் கொண்டேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே காட்டாஸ்பத்திரி என்ற இடத்தில் இறங்க சொல்லி இருந்தார். அதன் படி இறங்கினேன். அங்கேயே ஆப்பில், ஆரஞ்சு, திராட்சை பழங்களை வாங்கிக் கொண்டு ஆட்டோ நிலையத்தை அடைந்தேன்.

திரும்பவும் செல்பேசி வழி ஐயாவை தொடர்பு கொண்டு இல்ல முகவரி இருக்கும் இடத்தையும் எந்த வழி வரவேண்டும் என்பதையும் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லச் சொல்லி ஆட்டோ ஓட்டுனரிடம் உடனடியாக செல்பேசியைக் கொடுத்தேன். பேசும் போதே அந்த இடமா ? தெரியும்... சரி... சரி என்று தலையாட்டினார் ஆட்டோ ஓட்டுனர். இடத்தை அடைவதற்கு பல சுற்றுக்கள் அந்த வட்டாரத்தை சுற்றினார். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பவும் செல்பேச இல்லத்திற்கு வெளியில் பச்சை டி சர்டில் நின்று கொண்டு இருப்பதாக ஐயா அடையாளம் சொன்னார். இன்னும் ஒரு சுற்று சுற்றி அதே பாதையில் செல்ல வழியில் ஞானவெட்டியான் ஐயா அவர் வீட்டிற்கு சற்று அருகே எதிர்கொண்டார்.

தொடரும்...

6 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

ஆகா.. பயனக் கட்டுரையா? மிக்க மகிழ்ச்சி!!

படங்கள் போட்டால் மிக நன்றாக இருக்கும்.

படிக்க ஆவலை தூண்டும் எழுத்துக்கள்!

தொடருங்கள்..

பயனத்தை பற்றிய கேள்விகளுடன் மீன்டும் வருவேன்..

கொசு சொன்னது…

படத்தைப் போடுய்யா!

வரவனையான் சொன்னது…

எங்க ஊருக்கு வந்தா ஒரு வார்த்தை சொல்லமாட்டீகளா

:(

வடுவூர் குமார் சொன்னது…

ஆஹா! பயணமா?
நாகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் கொஞ்சம் இந்த பக்கம் தள்ளிவிடுங்க.தேவைப்படும் போது உபயோகப்படுத்திகொள்ள.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

ஆஹா இங்கே வந்துட்டு ஒரு வார்த்தை சொல்லாம உட்டுட்டீங்களே?

VSK சொன்னது…

கணவன் ஆணையை சிரமேற்கொண்டு, கால் கடுக்க நின்று, காமிராவைக் கொடுத்து, கூடவே மகள் முகத்தையும் காட்டிய அத்தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

கலியாண வேலையில் மும்முரமாக இருந்தவரை வரவழைத்ததற்குப் பதில் ஒரு 500 ரூபாய்க்கு கோடக் காமிரா ஒன்று வாங்கியிருக்கலாம்!

மனைவி, மகளைப் பார்க்கும் ஆசைதானே அது!
உண்மையைச் சொல்லுங்கள், கோவியாரே!
[அதான் தலைப்பே சொல்லுதே!:))]

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்