பின்பற்றுபவர்கள்

10 மே, 2006

இரட்டை விரல் ...

இரட்டை விரல் என்றதும் ஏதோ தேர்தல் பதிவு என்று நினைத்து விடாதீர்கள். நம்மவர்களுக்கு எவ்வளவு சமையல் கட்டு முக்கியமோ அதைவிட முக்கியம் வெளிநாட்டினருக்கு ரெஸ்ட் ரூம் எனப்படுகின்ற கழிப்பறை. கழிப்பறை என்ற சொல்லை கேட்கும் போது வாந்தி வருவது போல் நமக்கு உணர்வு ஏற்படுவது ஏன் ? நம் கண்முன்னோ மூக்கு முன்போ உடனே உணரவைக்கும் பொதுகழிவறைகள் தான். நல்ல தமிழ் சொல் பஞ்சமோ தெரியவில்லை. கழிப்பறை என்ற சொல்லே குமட்ட வைக்கிறது. இலங்கை ஏற்போட்டில் இறங்கிய போது கவனித்தேன், டாய்லெட் என்பதை மல சலக்கூடம் என்று தமிழ் படுத்தியிருந்தார்கள், படித்தவுடனே உள்ளே செல்லவே யோசிக்க வேண்டி ஆகிப்போனது. பாத்ரூம் - டாய்லட் - ரெஸ்ட் ரூம் என ஆங்கிலத்தில் பரிணாமம் அடைந்திருக்கும் அந்த அறை நம் தமிழ் மொழியில் மட்டும் கழிவறை, கழிப்பறை என்றே இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் நல்ல முறையில் தமிழ்படுத்த முன்வரவேண்டும்.
இந்தியா என்று சொல்லும் பொழுது வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கு முதலில் நாட்டை பற்றி அக்கறை கொள்ளும் முதன்மை விசயமாக பொதுக் கழிவறைகளே முதலில் நினைவு வருகிறது. ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்களாம் என்று உள்ளே சென்றால் வாந்தியும் எடுத்துவிட்டு வயிறுகாலியாகி அப்பாட என்று மூச்சு முட்டவைத்த நினைவுதான் ஞாபகம் வருகிறது.


கம்யூட்டரில் வேலை செய்பவனை விட கழிவறை சுத்தம் செய்பவனுக்கு ஊதியம் அதிகம் கொடுத்தால் ஒருவர் கூட வெளிநாட்டிற்கு அந்த வேலைக்காக செல்ல மாட்டார்கள். நாம் காசு கொடுத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்பதை வெளிநாட்டு ஊழியர்கள் செய்து காட்டியும், அதைப் பற்றி அக்கறை செலுத்ததாமலே இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு 75% வருமான வரியை செலவு செய்யும் இந்திய அரசு ஒரு அரை சதவிகிதம் கூட பொதுக் கழிப்பறைகளின் சுத்தங்களுக்காகவோ, சுகாதார விழிப்புணர்வுகளுக்கோ செலவிடுவதில்லை என்பது வேதனையான விசயம். தேர்தல் காலங்களில் கிராமங்கள் தோறும் இலவச கழிப்பிடம் கட்டித் தருவோம் என்று சொல்லுவதுடன் அரசியல் வாதிகளின் அக்கறை முடிந்து விடுகிறது. அப்படி கட்டித்தந்த பொது கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுவதில்லை.

எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற பொழுது புதிதாக நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தது, ஆனால் உபோயகப் படுத்தவில்லை. ஏன் என்று கேட்ட போது சொன்னார்கள், உள்ளே தண்ணீர் இல்லை தம்பி, வீட்டிலேர்ந்து தண்ணீர் எடுத்துவரவேண்டும், நாம அங்கே செல்வது ஊருக்கே தெரிந்துவிடும், அதுமட்டுமல்ல உள்ள போனாலே முக்கு அடைப்பு வந்திடும், வேற வழியில்லாம வாய்க்கால் வரப்பிற்கு போகிறோம் என்றார்கள்.


இதில் முகம் சுளிக்க வைக்கும் மற்றொரு விசயம் அத்தகைய சுகாதாரமில்லாத நகர்புற கழிவறைகளில் பாலியல் தொழில் நடப்பது தான். இந்திய கழிவறைகள் சுத்தமாகும் போது இந்தியா நிஜமாகவே ஒளிரும்.

அடுத்தபதிவில் வீட்டு சுகாதாரம் ....

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அவசியமான பதிவு!!! அசத்துகிறீர்கள் கோவி....

கோவி.கண்ணன் சொன்னது…

கருத்து பராட்டிய lukylook அவர்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கும் போதும், சேரிகளருகில் இருக்கும் இருப்புப் பாதைகளைக் கடக்கும் போதும், மூக்கைப் பொத்திக் கொண்டு, அப்போதைக்கு அதைக் கடந்து, அதன் பின் அப்பிரச்சினையை மூலையில் போட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கிறோம், படித்த, ஓரளவு வசதி படைத்த நம்மில் பெரும்பாலோர். இந்த மிக மிக மு(மூ)க்கியமான விஷயத்தை எழுதியதற்கு முதற்கண் நன்றி.

நம் பங்கிற்கு நாம், ஏதாவது செய்யலாமா? தமிழ்மணத்தாரே, ஆலோசனை தாருங்களேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//Krishna said...
இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு ஆத்திர அவசரத்திற்கு //

கருத்துக்கள் பரிமாறிய கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

கழிப்பறை /கழிவறை என்ற வார்த்தை முறையான ஒன்று இல்லை தான். தமிழில் இடக்கர் அடக்கல் படி இவை பொருந்தா சொல்லாகவே கருத வேண்டி இருக்கும் .. இலங்கையில் மல சலக் கூடம் என்பது இன்னும் கேவலமாக இருக்கின்றது ... !!! இன்னும் பலர் கக்கூஸ் என்ற போர்த்துகேய வார்த்தையை சொல்லுவார்கள் .. அது என்னவோ கேவலமாகவே எனக்குத் தோன்றும் ...

நல்லதொரு தமிழ் சொல்லை தேடினால் சுபம் .. இந்தப் பதிவு எழுதப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் தமிழ் சொல் ஒன்றும் அகப்படவில்லையே என்று யோசிக்கத் தோன்றுகின்றது .. புதிதாக ஒன்றை உருவாக்குவோம் .. :)

கழிப்பறையில் பாலியல் தொழில் - இது பேசப்படாத ஒரு கொடுமை ... !!! சென்னையிலேயே பல இடங்களில் இது நடைப்பெறுகின்றது .. மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் ஒரு வசதியும் இல்லை என்பதற்கான அடையாளச் சின்னம் நாற்றமடிக்கும் டாய்லட்டுக்குள் நடத்தப்படும் பாலியல் தொழில் !!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்