பின்பற்றுபவர்கள்

22 மே, 2006

புதிய வலைப் பதிவாளர்களுக்கு வழிகாட்டி 1...

  1. டெம்பிளேட்டை வடிவமைப்பது எப்படி என்று சொல்லுவதற்கோ, மட்டுறுதி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. செய்திக் கருத்துக்கள் இருக்க வேண்டும் அதுவும் தமிழில் இருக்கவேண்டும் அதுதான் முதன்மை.

    பதிய வலைப்பதிவாளர்களே, பதிவுகள் எழுதும் முன்பும் பின்னூட்டம் இடுவதற்கும் கீழ்க்கண்ட விசயங்கள் ஓரளவிற்கு தெரிந்திருக்க வேண்டும். அவைதான் பின்னாளில் நீங்கள் எத்தகைய பதிவுகளை எழுதப் போகிறீர்கள் என்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்

    தமிழ் வலைப்பதிவுகளையும், வலைப்பதிவாளர்களையும் கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கலாம்

    1. தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்ககாலம்
    2. முதலாம் மதச்சண்டைகள் தோன்றிய காலம்
    3. பின்னூட்ட போலிகளின் காலம்
    4. முதலாம் சாதிச் சண்டைகள் தோன்றிய காலம்
    5. இரண்டாம் மதச்சண்டைகள் நடக்கும் காலம்


    இதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.

    தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்ககாலம் : சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் யுனிக்கோடு என்னும் புதிய இணைப்புச் சாலை கனனி இணையத்தில் தொடங்கப்பட்ட போது, வலைப்பதிவாளர்கள் கால்பதிக்க தொடங்கினர். பல்வேறு தமிழ் ஆர்வலர்களுக்கு அது நல்ல பாதையாக தெரிந்ததால் அவர்கள் அந்த சாலையில் வெற்றி நடைப் போட்டார்கள். சிலர் வேகமாக நடைபோட்டு வலைப்பதிவுகள் மட்டுமின்றி தனியாத தாகத்தினால் தனித் தனியா இணைய பக்கங்களும் தோற்றுவிக்கப்பட்டன.இந்த கால கட்டத்தில் பல்வேறு எழுத்துருக்கள் தோன்றி தமிழில் தட்டச்சு செய்வதற்கு பெரிதும் உதவின. இந்த காலகட்டம் சரியாக இரண்டு ஆண்டுகள் நிலைத்தது.

    முதலாம் மதச்சண்டைகள் தோன்றிய காலம் : சென்ற ஆண்டின் தொடக்கம் முதல் மத துவேசங்கள் ஒரு சின்ன தீக்குச்சியாக உரசப்பட்டது. அத்தகைய மதப்பதிவாளர்கள் யார் யார் என்று சொல்லி அவர்களின் பொல்லாப்புக்கு ஆள் ஆவதை நான் விரும்பவில்லை என்பதால், அந்த வலைப்பதிவாளர்களின் முகவரிகளை நாம் ஆராயத்தேவையில்லை. தீக்குச்சி உரசியதை, பூனைக்கு மணிக்கட்டுவதாக இவர்கள் பெருமையாக பேசிக்கொள்ள, தமிழ் பதிவுகள் பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த கால கட்டத்தில் வலைப்பதிவாளர்களும், புதிதாக பதிய வருபவர்களும் சார்பு நிலைக்குள் மாட்டிக் கொண்டனர். ஆரம்பத்தில் பின்னூட்டம் என்ற அளவில் ஆதரவு கொடுக்க ஆரம்பித்து, பின் தன்னுடைய ஆதரவாளர்கள் மனம்பிறழ்ந்து எழுதினாலும் சார்பு நிலை என்னும் சப்பைக் கட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். தமிழ் பதிவாளர்கள் தங்களுடைய ஆற்றலை இழந்தது இந்த காலக் கட்டத்தில் தான்.

    பின்னூட்ட போலிகளின் காலம் : ஏற்கனவே எப்படி வலைப்பதிவாளர்கள் சார்பு நிலைக்கு உள்ளானவர்கள் என்று பார்த்தோம். இந்த சார்ப்பு நிலை கொஞ்சம் தீவிரமாக ஆனதும் சரியாக ஒருவருடம் முன்பு வலைப்பதிவாளர்கள் வசை பாடுவதற்காக தங்களுக்கு தாமே எடுத்த புதிய முகங்கள் தான் போலி வலைப்பதிவுகளும், ஆபாச பின்னூட்டங்களும், இத்தகைய பின்னூட்டங்கள் மதப்பதிவுகளுக்கு எதிராகவும், சாதிகளை முற்படுத்துபவர்களுக்கும் எதிராகவும் தோன்ற ஆரம்பித்தது. சம்பந்தபட்ட வலைப்பதிவாளரின் புகைப்படங்களை வைத்து போலியாக வலைப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, நிஜ வலைப்பதிவாளர்களுக்கு பெரும் மனவுலைச்சலைக் கொடுத்தனர், இந்த காலம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. போலிகளையாரும் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    முதலாம் சாதிச் சண்டைகள் தோன்றிய காலம் : மேலே கடைசியில் கண்ட இரண்டு காலங்களில் தமிழ்மண தொகுப்பாளரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகி பதிவுகள் தொகுப்பில் சில மாறுதல்கள் கொண்டுவந்தார். அதன்படி, மதச்சார்புள்ள பதிவுகளும், தொடராத பதிவுகளும் திரட்டுவதை தடைவிதிப்பதாக அறிவித்தார். அதன்படி மதப்பதிவுகளுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது. அத்தகைய பதிவுகள் மணத்தை இழந்து, ஓவியத்தை அடைந்தது. ஒருவழியாக சண்டைச் சச்சரவுகள் ஓய்ந்ததால் சிறிதுகாலம் அதாவது சென்ற ஆண்டின் இறுதியிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கம் வரை தமிழார்ந்த விசயங்களுடன், குஷ்பு, தங்கர், சுகசினி போன்றோர்களும் இடம் பெற்றனர். குஷ்புவுக்கு ஆதாரவு நிலையும், எதிர்ப்பு நிலையும், பெண்ணியம், பெரியாரிசம், கலாச்சார சீரழிவு என்று சீரியஸ் பதிவிகள் எழுதப்பட்டன. இந்த விவாதங்களில் சத்தமில்லாமல் சாதிகளும் கலந்து கொண்டு, ஆரம்பித்த விவாதங்களைத் தாண்டி சாதி துவேசங்களாகவும், தனிப்பட்ட தாக்குதல்களாகவும் மாறி இன்றளவும் தொடர்கிறது.

    இரண்டாம் மதச்சண்டைகள் நடக்கும் காலம் : சட்டமன்ற தேர்தல் செய்திப் பதிவுகள் மூலம் மேற்கண்ட சாதிச் சண்டைகள் காலம் சற்று வலுவிழந்து தேர்தலுக்கு பின் மீண்டு (?) வருகிறது. இதே கால கட்டத்தில் தமிழ்மணம் திரும்பவவும் தடைகளை நீக்கிக் கொள்ள, சிறிது காலம் அமிழ்ந்திருந்த மதப்பதிவுகள் தலையெடுக்க தொடங்கின. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை என்று வாதிகளும், விமர்சனங்களுக்கு இடமும் அவசியமும் இல்லை என்று எதிர்வதிகளும் மீண்டும் சொற்போரை தொடங்க முற்றுப்புள்ளி காற்ப்புள்ளியாக்கி காழ்புகளை தொடங்கினார். போதாக்குறைக்கு டாவின்சிக் கோடும் சேர்ந்து கொள்ள இவர்களுக்கு ரோடுபோடவும் சொல்லித்தரத் தேவையில்லை என்று நீண்டு கொண்டிருக்கிறது. மேற்கண்ட இரண்டு காலமும் தற்பொழுது சமகாலத்தில் நடந்து வருகிறது. மற்றொரு முயற்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதன் செயல்பாடுகளைப் பொறுத்து பின்னர் அவற்றின் தாக்கம் பின்பு தெரியவரும் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

    புதிய பதிவாளர்களே ! சரி, இதையெல்லாம் தெரிந்து கொண்டு நான் என்ன செய்யட்டும், படிப்பதற்கே ஒருமாதிரியாக இருக்கிறது ஓடிவிடட்டுமா ? என்று கேட்பீர்கள் இல்லையா ?

    வேண்டாம் !

    பதிலை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி சார், இப்படி ஏகத்துக்கு புதிய பதிவர்களை ராகிங் செய்தால் என்னத்துக்கு ஆவது.

அதிகமாவே சிந்தித்துள்ளீர்கள். நல்ல பதிவு (புதிய) ஆய்வு.

முதல் தொடக்ககாலம், சண்டைகள் தோன்றிய காலம், போலிகள் காலம், சாதிச் சண்டைகள் தோன்றிய காலம், நடக்கும் காலம், இத்தோட இன்னொன்னு விட்டிங்களே திரை மறைவு பதிவாளர் காலம், (ஆப்பு,கருப்பு,சிகப்பு) இதையும் சேத்துக்கோங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//முதல் தொடக்ககாலம், சண்டைகள் தோன்றிய காலம், போலிகள் காலம், சாதிச் சண்டைகள் தோன்றிய காலம், நடக்கும் காலம்//
எனக்கு காலங்களுக்குள் நீந்திச் செல்வது மிகவும் பிடிக்கும். நம் வலைப்பூவின் தலைப்பும் அதுதான்

பெயரில்லா சொன்னது…

கோவி சார்.....

சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட்டல்...

பெயரில்லா சொன்னது…

ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில் வருகிறார்கள்? அவங்களைக் கணக்கிலேயே எடுக்கலியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில் வருகிறார்கள்? அவங்களைக் கணக்கிலேயே எடுக்கலியா? //

முக்காலத்தை உணர்ந்தவர்களை கணக்கிலும் கொள்ளவேண்டுமா. அவர்கள் எங்கும் எப்பொழுது இருப்பவர்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி சார்.....

சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட்டல்...//
lucky, புதுசா வருகிறவர்கள் பயந்து ஓடிட கூடதில்லையா, ஒரு கரிசனம் தான்

பெயரில்லா சொன்னது…

இந்தப் பதிவை அப்பவே படிச்சிட்டேன் ஐயா. வருகைப் பதிவில் தான் கையெழுத்து போடாமல் போய்விட்டேன். :)

பெயரில்லா சொன்னது…

கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இருக்கீர் இங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இருக்கீர் இங்க? //

உள்ளே நுழைந்து கொஞ்ச காலம் தான் ஆகிறது.. ஆனால் முன்பு பழையகாலத்தில் பார்வையாளனாக இருந்திருக்கிறேன் :)))

பெயரில்லா சொன்னது…

காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக அலசியிருக்கிறீர்கள்.நடுவில் சூப்பர்ஸ்டார் ஃபைட்டும் இருந்தது!

பெயரில்லா சொன்னது…

தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல்லாது போயிற்று. தமிழ்மண வரலாற்றுப்பாடம் மூலம் உங்கள் புகழ் என்றென்றும் நின்று நிலைக்கும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...
காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக அலசியிருக்கிறீர்கள்.நடுவில் சூப்பர்ஸ்டார் ஃபைட்டும் இருந்தது!
//
அப்படியே .. அந்த காலத்தில் கொஞ்சம் தூங்கிவிடேன் என்று நினைக்கிறேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. திரு மணியன் அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharumi said...
தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல்லாது போயிற்று. தமிழ்மண வரலாற்றுப்பாடம் மூலம் உங்கள் புகழ் என்றென்றும் நின்று நிலைக்கும்!
//
வாங்க தருமி ஐயா... நீங்கள் நட்சத்திரம் ஆனபோது தான் தீவிரமாக வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன் :))

பெயரில்லா சொன்னது…

தமிழ் வலைப்பதிவிலக்கிய வரலாறு..!?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
தமிழ் வலைப்பதிவிலக்கிய வரலாறு..!?
//
ஹி ஹி ... இம்சை அரசர்கள் பற்றியது :))

பெயரில்லா சொன்னது…

நான் இதை எல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே உங்க ஸ்டைலில் கலக்கியிருக்கீங்க கோவி.

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் எண்ணம் said...
நான் இதை எல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே உங்க ஸ்டைலில் கலக்கியிருக்கீங்க கோவி.
//
குமரன் இதையும், அதோட பின்னூட்டத்தையும் படித்துவிடுங்கள்

http://govikannan.blogspot.com/2006/07/blog-post_22.html

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,வரலாற்றுப் பதிவு எனக்குத் தேவை.
சில சமயம் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கிறது பதிவுகள்.
இருக்கிறதே கொஞ்சம்.
அதில் குழம்பி வேறு ,,இழக்க வேண்டாமே என்றூ படிக்காம விடுகிறேன்.
நன்றி நல்ல பதிவுக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்