சிங்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது, சிங்கையில் இருக்கும் இவரு ஏன் வாயத்திறக்காமல் இருக்காருன்னு பலர் நினைக்கக் கூடும், நேரமின்மைத் தவிர்த்து, இந்தியசார்பு ஊடகங்களில் இவை எவ்வாறெல்லாம் திரித்து எழுதப்பட்டு, உணர்ச்சி தூண்டுதலை உருவாக்குகிறார்கள் என்று கவனித்து வந்தேன்.
சென்ற டிச 9 ஆம் தேதி அலுவலகம் சென்ற பிறகு தான் முதல்நாள் இரவு குட்டி இந்தியாவில் கலவரம் நடந்தது பற்றி தெரியவந்தது. இந்தியர்கள் குறிப்பாக ஒப்பந்த பணிக்கு முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி வந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது, 'உங்காளுங்க ...?' என்பது போல் பிற இனத்தவரும், வட இந்தியர்களும் நம்மைப் பார்த்து பார்வையிலேயே கேட்கும் பொழுது விட்டுக் கொடுக்க முடியாமலும், மென்று விழுங்க முடியாமலும் கொஞ்சம் அவமானமாக கூனிக்குறுகியது உண்மை.
ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அங்கு சென்றிருக்கும் சீனர்களை தாக்கி இருந்தால் நிலமையின் விபரீதம் குறித்து அச்சமுற்றேன். கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது, என்னைக் கேட்டால், எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலர் குடித்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தில் கல் எரியும் போது ஏற்படும் கொந்தளிப்பிற்கு பிறகு அவற்றை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஏற்படும் கோபம் அதனால் 'உணர்ச்சிவசப்படுதல்' என்பது தவிர்த்து பெரிய காரணம் இல்லை. ஒரு விபத்தில் / விபத்தாக ஏற்பட்ட மரணமும், அதில் இரத்த்தை கண்டதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபமும் இந்த கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருதுகிறேன்.
இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் எதுவும் ஒப்பந்த ஊழியார்களுக்கு சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக சொல்வது கிடையாது, இங்கு எந்த ஒருகாரணத்திற்காகவும் வேலை புறக்கணிப்பு அல்லது எந்த போராட்டமும் செய்வதற்கு அனுமதி இல்லை, குறைகளை மனித வள அமைச்சிடம் தெரிவிக்கலாம். எந்த ஓரு ஆயுதம் ஏந்திய தாக்குதல் என்றாலும் கடுமையான தண்டனைகள் உண்டு இதற்கு சிங்கப்பூர்வாசிகளுக்கும் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் குப்பைப் போடக்கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்று வேலைக்கு எடுப்பவர்களிடம் முகவர்கள் சொல்கிறார்களே அன்றி, வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கலவரம் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து தெளிவாக அறிவுறுத்துவதில்லை, இதற்கு காரணம் இவ்வாறெல்லாம் நடக்காது என்கிற அசட்டுதனமான நம்பிக்கை அல்லது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.
சிங்கபூரின் பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், சுற்றுலாத் துறை இவற்றை நம்பியே இருக்கிறது, தவிர தனிமனித பாதுகாப்புக்கும், அவர்களது உடமைகளுக்கும் முதன்மைத்துவம் கொடுப்பதால் பெண்களால் இரவு இரண்டு மணிக்கு மேல் கூட வேலையில் இருந்து வீட்டுக்கு தனியாகவே திரும்ப முடிகிறது, இவை அனைத்தையும் கெடுக்கும் துவக்கமாக கலவரம் நடந்ததுவிட்டதோ என்று நினைக்க சிங்கப்பூரின் எதிர்காலம் / பொருளாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இவற்றை ஒடுக்கவேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்தியர்கள் / தமிழர்கள் கூட்டமாக இருந்தாலும் கலவரம் செய்யமாட்டார்கள் என்று நம்பித்தான் அரசு அவர்களை பொது இடத்தில் கூடவும், குடிப்பதைக் கூட கண்டும்காணமால் இருந்தது, இப்படிக் கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள் என்பதே தமிழர்களின் மனநிலையாக உள்ளது, இவர்களால் அந்தப்பகுதி வியாபாரிகளுக்கும் பெருத்த நட்டம், நிலைமை பழையபடிக்கு திரும்ப ஆறுமாதகாலம் கூட ஆகலாம், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவிற்கு செல்வதையே பலர் தவிர்க்கும் பொழுது அந்த எண்ணிக்கையை மேலும் மிகுதியாக்கிவிட்டது இந்த நிகழ்வு.
இந்த பிரச்சனையில் அறிக்கைவிடுகிறேன் என்கிற பெயரில் தமிழக அரசியல்வாதிகளும், சன் தொலைகாட்சியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகம், பொத்தாம் பொதுவாக இனக்கலவரம், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், முடங்கிக்கிடக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள், இந்தியாவில் / தமிழகத்தில் கலவரத்திற்கு பிறகு நடக்கும் 'விசாரணைகளை' ஒப்பிட லிட்டில் இந்தியா பகுதிகளிலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகளிலும் நடந்த விசாரணைகள் மிகவும் கண்ணியமானவை. அமைச்சரே நேரில் சென்று தவறு செய்யாதவர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்று ஆறுதல் கூறிவந்தார்.
அடிப்பட்டு உருக்குலைந்த ஆம்புலென்ஸ் உள்ளிட்டு, அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு என்பதால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்
இந்திய ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சிங்கையில் மத / இனப்பாகுபாடுகள் பார்த்து சிங்கை அரசு செயல்படுவது கிடையாது, திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.
நடந்த கலவரத்தை பெரிதுபடுத்தாமல் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ்தமிழ்மக்களும் மென்மேலும் வளருவார்கள்.
16 கருத்துகள்:
வணக்கம்
சரியான விளக்கம்.. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை நிலையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். போலிப்பட்டங்கள் (அறிஞர்,கலைஞர்,அஞ்சாநெஞ்சன்,மர்வீரன்,தளபதி,புரட்டுத்தலைவர்) தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொண்டு ரவுடிகள், கொள்ளைக்காரர்களாக உலா வந்து கொண்டிருக்கும் தமிழக க(ல)ழகக்கண்மணிகளுக்கு மக்களை திசை திருப்பி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுக் கொள்ளையடிக்க ஏதாவது ஒரு இனப்பிரச்சினையை கையிலெடுக்க வேண்டியநேரத்தில் கிடைத்த வாய்ப்பை விடுவார்களா?
தூண்டி தூபம் போட கைவசம் நிறைய சேனல்கள் கைவசம் உள்ளது.
நிலைமையைத் தெளிவுபடித்திய தங்களுக்கு நன்றி.
திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.//உண்மை என்பதை நம்புகிறேன்
உண்மை நிலவரங்களை விசாரித்து அறிந்து இப்பிரச்சினையில் அரசியல் இலாபங்களுக்காக அதிகப் பிரசங்கித்தனமாக அறிக்கை விடாத, மக்களைத் தவறாக முன்னடத்தாத ஒரே தலைவர் வைகோ மட்டுமே.
தனது கண் முன் ஒருவன் துடிதுடித்து சாகும் போது மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பு ஆனால் வாகனங்களை தீ வைத்து எரித்தது ஏற்றுகொள்ள முடியாதது .
இதனால் அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும் சிங்கை காவல்துறையின் செயல்பாடு அவர்களின் திறமையின்மை வெட்ட வெளிச்சம் ஒருவேளை இதுபோன்ற சம்பவங்களை இதுவரை அவர்கள் சந்திக்கததும் எதிர்பர்க்காதும் காரணமாக இருக்கலாம் .
சிங்கை அரசின் செயல்பாடுகளை யாகுல தொவச்சி தொங்க விட்டுருகங்கா http://sg.news.yahoo.com/blogs/singaporescene/deporting-acquitted-052222758.html
இப்போ கலவரத்தில் ஈடுபட்ட 53 தமிழரை சிங்கப்பூர் நாடுகடத்தியது.அதற்க்கு தமிழன் என்றபடியா மத்திய அரசு நடவடிக்கை எடுக்காம வேடிக்கை பார்க்கிறது என்று உசுப்பேற்றுகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டவங்களை சிங்கப்பூர் தன் நாட்டில் தங்க வைத்து ஊதிய உயர்வா வழங்கும்?
தமிழ்,தமிழன் என்று சொல்லியே தமிழக அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் லாபம் பண்ண தொடங்கிவிட்டனர்.
சிங்கப்பூரில் பிரம்படி
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நலன்களை சிங்கப்பூர் தொழிலாளர் நலன்களிள் போல் பாதுகாக்காதது நல்ல சிங்கப்பூரின் மோசமான செயல்களாகும்.
அதற்கு இந்த கலவரத்தை எந்தவிதத்திலும் நியாயபடுத்த முடியாது.
திரு கோவி , ஒரு பழைய சிங்கப்பூர் பஸ் ஓட்டுனர் மற்றும் இன்னும் நிறைய sbs ஓட்டுனர்களின் நண்பன் என்ற முறையில் ...இறந்த நபர் குடித்துவிட்டு பஸ் ஏறியபோது , கீழே இறக்கி விடப்பட்டு தள்ளாடிய நிலையில் பின் டயரில் அடிபட்டு கீழ் விழுந்தபோது , அவரின் சக நண்பர்களிடம் ( அவர் இறந்தது தெரியாமல் ) he can claim insurance ma என்று அந்த பஸ்சின் ஓட்டுனர் சொன்னார் என்றும் , அதனாலேயே மிகவும் உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலை உருவானது என்று சில பஸ் ஓட்டுனர்கள் என்னிடம் கூறினர் . // திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது //. நம்புகிறீர்களா ஐயா ?
இந்த பிரட்சினையில் கோவியாரின் பதிவை ஆவலோடு எதிர்பார்த்த பலரில் நானும் ஒருவன். ஆனால் இப்படி ஏமாற்றுவார் என எண்ணவில்லை. இதுவே இலங்கையிலோ, சவுதியிலோ இல்லை வேறு வெளி நாட்டிலோ நடந்திருந்தால் கன்னா பின்னாவென்று பிரித்து மேயும் கோவி கண்ணன் இப்படி பம்முவது தன் செவிலித் தாய் நாட்டு பற்றுதலுக்காகவா? வெட்கம் கெட்டவர்கள் சில சமயங்களில் வீரம் பேச வந்து விடுகிறார்கள். த்த்த்த்தூதூதூ......
if only had this happened in malaysia, mr. kannan would be sitting on a high horse to pass judgement. since it happened in singapore he has become an advocate. what a hypocrite. shame.
இந்த குட்டி இந்தியா கலவரம் துரதிஷ்டவசமாக யாரும் எதிர்பாரத விதத்தில் ஏற்பட்ட ஒரு உயிர் இழப்பின் காரணமாக ஏற்பட்டது ஆனால் மற்ற நாடுகளை விட தொழிலாளர் நலனில் அதிக அக்கறையும் சுதந்திரத்தையும் அளிக்கும் ஒரு நல்ல நாடு சிங்கப்பூர் என்பது தெளிவான உண்மை .
//த்த்த்த்தூதூதூ......//
ஆகாயத்தை நோக்கி ஆயாசம் தீரும் வரை துப்பிக் கொள்ளவும்.
//பிளாகர் Shrek கூறியது...
if only had this happened in malaysia, mr. kannan would be sitting on a high horse to pass judgement. since it happened in singapore he has become an advocate. what a hypocrite. shame.//
இந்தியர்களுக்கு இந்தியா கூட தராத மரியாதை தரும் ஒரே நாட்டில் வசிப்பதில் பெருமைபடுகிறேன்.
//நம்புகிறீர்களா ஐயா ?//
100 விழுக்காடு நம்புகிறேன், தமிழனுக்கு / தமிழுக்கு கவுரவம், அந்தஸ்தும் தரும் ஒரே நாடு
//நம்புகிறீர்களா ஐயா ?//
100 விழுக்காடு நம்புகிறேன், தமிழனுக்கு / தமிழுக்கு கவுரவம், அந்தஸ்தும் தரும் ஒரே நாடு
இவர் வேற ஒரே தமாஸ் பண்ணிட்டு .ஐயோ ஐயோ (வடிவேலு பாணியில்)
/இந்தியர்களுக்கு இந்தியா கூட தராத மரியாதை தரும் ஒரே நாட்டில் வசிப்பதில் பெருமைபடுகிறேன்/
நல்ல பெருமை பட்டுகோங்கோ. பெருமை படறேன். பூரிப்பு அடைகிறேன். கண்கள் பனித்தன. இதயம் இனித்தது ன்னு எழுதறது தான் நல்லது. it is better to write like this at this moment. நீங்க சிங்கபூறேல உட்காந்து ஏதாவது எழுத போய் உங்களுக்கு எதாவதுஆகிட போகுது!!. !. .
அமைதி வளர வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக