பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2013

சத்தமில்லாமல் பணம் சு(ருட்)டும் பட்ஜெட் விமான சேவைகள் !

கட்டுபடியான கட்டண சேவை என்ற அளவில் பட்ஜெட் விமான சேவைகள் கொடிகட்டி பறக்கின்றன, இதன் மூலம் நடுத்தர வர்கம் விமான சேவையைப் பயன்படுத்தி ஓரளவு பிற நாடுகளையும் பார்த்து உள்நாட்டிலும் பயணிக்க வசதியாக உள்ளது. ஆனால் பட்ஜெட் விமானங்களுக்கு குறைந்த கட்டணம் எப்படி வாய்ப்புக் கூறு ஆகிறது என்று பார்த்தால் மயக்கம் போடும் அளவுக்கு அதன் பின்புலன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. 

ஒரு பட்ஜெட் விமானத்தில் முன்பே திட்டமிருந்தால் ஒரு ஆண்டுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டால் கட்டணம் மிக மிகக் குறைவு.ஆனால் இவ்வாறு திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் மிகக் குறைவே, இதனை தூண்டும் விதமாக 75 வெள்ளிக்கு சென்னை - சிங்கப்பூர் என்று குறிப்பிட்ட தேதிக்கான சிறப்புக் கட்டணம் என்று கூறி ஆறுமாதம் முன்பு விளம்பரம் செய்வார்கள், 75 வெள்ளிகள் என்றால் இந்திய ரூபாய்க்கு 3750. இது ஒருவழிக்கு மட்டுமே திரும்பும் கட்டணம் 75 வெள்ளி ஆக 7500 ரூபாய். பொதுவான விமானக் கட்டணம் 15,000 ரூபாய் என்றால் இது அதில் பாதி அளவே என்பதால் சரி முன்பதிவு செய்வோம் என்று முண்டியடித்து பலர் முன்பதிவு செய்துவிடுவார். விமான சிறப்பு கட்டண விளம்பரத்தில் தெளிவாக தேதி மாற்ற முடியாது மாற்றினால் கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது என்பதையும் குறிப்பிட்டுவிடுவார்கள்.

இவ்வாறு முன்பதிவு செய்தவர்களில் குறிப்பிட்ட தேதியில்  பயணிக்க விடுப்பு மற்றும் உடல் நிலை ஒத்துழைப்பு கிடைப்பவர்கள் சரிபாதியோ அல்லது அதற்கு சற்று மேலும் கூட இருக்கலாம். குறிப்பிட்ட நாளில் விமான சேவைக்கு தடங்கல் ஏற்பட்டால் வேறு தேதிக்கு பயணச் சீட்டு தருவார்கள் என்றாலும் அன்றைக்கும் செல்ல முடிந்தவர்கள் கனிசமாக குறைந்துவிடுவர். முன்பதிவு செய்தவர்களில் 50 விழுக்காட்டினர் வரமுடியாத நிலையில் விமானம் பறக்கும், வரமுடியாதவர்கள் கட்டியப் பணம் அம்பேல் தான். 75 வெள்ளி பயணச் சீட்டில் 25 வெள்ளி இருக்கைக்கும், 50 வெள்ளி அரசாங்க வரிக்கும் செல்லும், பயணி வராத நிலையில் 50 வெள்ளியை அரசாங்கத்திற்கு செலுத்த தேவை இல்லை என்ற விதி இருப்பதால், அவையும் சேர்த்தே விமான நிறுவன பாக்கெட்டிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு பயணிகள் பயணிக்காமல் விமான சேவை அரசு வரியாக பட்ஜெட் விமான நிறுவனங்களுக்கு கிடைக்கும்  பணம் ஆண்டுக்கு பல மில்லியன்கள். எந்த அரசும் பயணிக்காத விமான சீட்டுக்கு வரி வாங்க முடியாது என்பது விதி எனவே பட்ஜேட் விமான நிறுவனங்கள் பணத்தால் நிறம்பியே இருக்கும்.

பயணச் சீட்டுக்கு வரியாக கட்டிய பணத்தை திரும்பப் பெரும் உரிமை முன்பதிவு செய்தவருக்கு உண்டு என்றாலும், அவற்றை தந்திரமாக தன் வசம் வைத்திக் கொள்ளவும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் பல வழிகளை கையாளுக்கின்றன, பயணிக்க இயலாத நிலையில் 50 வெள்ளி வரியாக செலுத்திய பணத்தை திரும்ப பெறலாம் என்று நிறுவனத்தை அழைத்தால், கண்டிப்பாக தருவோம் ஆனால் அதற்கு நடைமுறைக் கட்டணம் (Process / Admin Fee) 100 வெள்ளி ஆகும் என்று கூறுவார்கள், யாராவது 50 வெள்ளியை திரும்ப வாங்க 100 வெள்ளி செலவு செய்ய முன்வருவார்களா ? அவ்வாறு வந்தாலும் அதிலும் பட்ஜெட் விமானங்கள் இன்னும் ஒரு 50 வெள்ளியை கரந்துவிடும்.

இந்த குளறுபடி ஏமாற்று எல்லாம் உலகில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் தெரிந்தாலும் எல்லோருமே ஒட்டுமொத்தமாக மவுனியாகத்தான் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவரால் குறிப்பிட்ட தேதியில் பயணிக்க முடியாமல் போனால் குறிப்பிட்ட விமான பயணச்சீட்டை வேண்டாம் (Cancel) என்று பதிந்துவிட்டால் வரியில் ஒருபகுதி அரசிற்கு செல்லுமாம், இல்லை என்றால் மொத்தமாக அரசுக்கும், பயணிக்கும் பட்டை நாமம்.

இப்ப தான் தெரிகிறது நம்ம தமிழ் நாட்டு சகோதரர்கள் ஏன் பட்ஜெட் விமான நிறுவன சேவையிலும் கால் பதித்தார்கள் என்பதே.

தொடுப்புகள் :

13 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

ஓ....ஓஹோ சங்கதி அப்படியா?தகவலுக்கு நன்றிங்க

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தகவலுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

இன்றைய காலக்கட்டத்தில் விமான பயணம் முக்கியமான தேவையான ஒன்று, அதுவும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் விமானங்களே கதி, ஆனால் விளம்பர வித்தைகளால் விமான சீட்டை வாங்கச் செய்து இப்படி ஏமாற்றி பணத்தை ஏப்பம் விடுவது கொடுமை. டிக்கட்டை ரத்து செய்யவும், அதில் குறிப்பிட்ட கழிவு போக மிச்சத்தை பயணிக்கு கொடுக்கவும் அரசுகள் சட்டம் இயக்க வேண்டும். அது போல பயணிகளும் பயணத்தை ஊர்ஜிதம் செய்யாதவரை இத்தகையோரின் மாய விளம்பரங்களில் சிக்கி பலியாக கூடாது.

---

Unknown சொன்னது…

சட்டி ஓட்டை என்றாலும் நமக்கு வெந்தால் சரிதானே ?
த .ம +1

mohamed salim சொன்னது…

பட்ஜெட் விமான பயணம் என்பது ன விமான நிறுவனத்துக்கும் பயணிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போலத்தான் சில நிறுவனகள் பயண தேதியை சில விதிமுறை கீழ் மற்ற அனுமதிக்கின்றன ஆனால் எந்த நிறுவனத்திலும் பணம் வாபஸ் கிடையாது!! இவர்கள்வந்தாதால் தான் பெரிய விமான நிறுவனகள் அடித்த கொள்ளை நின்று போனது முன்பு சிங்கப்பூர் விமானம் 1200 வெள்ளிக்கு குறைந்து பயண சீத்து கிடையாது இப்போது 850 வெள்ளிக்கு அலைகின்றார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கவியாழி கண்ணதாசன் கூறியது...
ஓ....ஓஹோ சங்கதி அப்படியா?தகவலுக்கு நன்றிங்க//

மிக்க நன்றிங்க ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

/2008rupan கூறியது...
வணக்கம்

தகவலுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

மிக நன்றிங்க ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//அதில் குறிப்பிட்ட கழிவு போக மிச்சத்தை பயணிக்கு கொடுக்கவும் அரசுகள் சட்டம் இயக்க வேண்டும். //

அரசு என்பது அரசியல்வாதிகளின் தலைமையிலானது, கட்சி நிதிக்கு கொட்டிக் கொடுத்தால் அப்பறம் ஏன் அவங்களெல்லாம் கண்டுகொள்ளப் போகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இவர்கள்வந்தாதால் தான் பெரிய விமான நிறுவனகள் அடித்த கொள்ளை நின்று போனது முன்பு சிங்கப்பூர் விமானம் 1200 வெள்ளிக்கு குறைந்து பயண சீத்து கிடையாது இப்போது 850 வெள்ளிக்கு அலைகின்றார்கள்//

பெரிய விமான நிறுவனங்களில் பெரும்பாலும் பயணிப்பவர்கள் அலுவல் வேலையாக அரசு பணத்தில் செல்பவர்கள் தான், பெரிய நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவாக ஒப்பந்த அடிப்படையில் தான் பட்ஜெட் விமானங்களும் இயங்குகின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//Bagawanjee KA கூறியது...
சட்டி ஓட்டை என்றாலும் நமக்கு பருக்கை வெந்தால் சரிதானே ?
த .ம +1//

100ல் ஒரு சொல் :)

வேகநரி சொன்னது…

கோவி, முகமெட் சலீம் சொன்னதில் உண்மையிருக்கு. முன்பெல்லாம் பிரிட்டிஷ் எயர்வேயோ, Qantas சோ சாதரணமானவங்க போக முடியாது. இப்போ எல்லாம் சாதாரணமானவங்களும் அதில் பயணிக்க முடியும். நானும் போயிருக்கேன்.

வேகநரி சொன்னது…

கோவி, சிங்கப்பூரில் என்னா நடந்துச்சு?
சில நண்பர்கள் போன் பண்ணி சொன்னாங்க. நான் இன்னும் நியூஸ் பார்க்கலே. நண்பங்க சொன்னதின்படி தமிழன்னா போராடனும் என்று சிலர் அப்பாவிகளை உசுப்பேத்தி விட்டதா தெரிச்சுக்க முடியுது.

k.rahman சொன்னது…

/சிங்கபூர் கலவரம்/

சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் இருக்கா? .துபாய்க்கும் சிங்கபூருக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை போல தெரிகிறது. ஆனா இந்த சம்பவம் மட்டும் துபாயில் நடந்து இருந்தால் துபாய், இஸ்லாம், முகமது, முகமது மனைவிங்க, பேரன்க எல்லாம் பதிவுலயும் கமெண்ட்ளையும் நாரி இருப்பாங்க. சிங்கபூர் என்பதனால் கண்டுக்காம விட்டுடலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்