மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)
ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.
இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.
அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.
இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள். படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?
:)
இணைப்பு:
5 கருத்துகள்:
பொய்களின் ஜோடனை படிப்படியாகத் தான் விழவேண்டும்.
படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?//சொன்னாலும் சொல்லுவாங்க
கோவி,
ஹி..ஹி..செவ்வாயா இல்லை வெறும்வாயானு பார்த்தே கண்டுப்பிடிச்சிங்களா இல்லை முத்தம் கொடுத்து கண்டுப்பிடிச்சிங்களா, ஆமாம் நீங்க எந்த செவ்வாய சொன்னிங்க ?
வெறும் வாயில் முத்தம் கொடுக்கக் கூடாது, செவ்வாயோ, கருவாயோ, நன்கு பல் துலக்கி விட்டு, வாய் கொப்பளிக்க வேண்டும், முத்தம் கொடுக்க முன்னர் வாசனை உள்ள பபுள் கம் மெல்லலாம், பின்னர் இழுத்து மூன்று முறை மூச்சி விட்டு, துணைவர் அருகே சென்று, கண்களை மூடி இச்... சாரி, என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அரகரா மகாதேவா ! இனி மதவியாதி போதனைகள் மேற்கூறிய முத்தச் சமாச்சாரம் போல சம்பந்தமில்லாமல் போதிக்கப்படலாம், அவ்வ்வ்வ்..
//இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் //
இறைவன் சுத்த கையாலாகதவராக இருப்பார் போலிருக்கே!!! கடவுளுடைய பவர் இன்றைய விஞ்ஞானிகலுக்கு இருந்திருந்தால், nano seconds கூட தேவையில்லை. நினைத்து முடிப்பதற்குள் உலகம் படைக்கப்பட்டிருக்கும்.
கருத்துரையிடுக