உன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !
தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !
நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !
நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !
புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !
விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.
உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !
உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !
தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !
மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !
இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !
இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !
தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !
நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !
நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !
புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !
விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.
உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !
உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !
தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !
மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !
இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !
இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............
9 கருத்துகள்:
ஆழ்ந்த இரங்கல்கள்...
வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்...!
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்...!
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா...?
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியமா...?
மாபெரும் சபை தனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்...!
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...!
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
வணக்கம் ,
அய்யா திரு வாலி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.
எனக்கு மிகவும்பிடித்த பாடல்
"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.."
முழுப் பாடல் வரிகள் இங்கே!!
http://moviesonglyrics.blogspot.com/2010/10/kallai-mattum-kandaal.html
என்னும் பாடலில் ஆத்திகம்,நாத்திகம் கலந்து எழுதியவிதம் போல் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே!!!!!!!!!!!
நன்றி!!!
காவிய கவிஞனுக்கு என் ஆழ்ந்த இரங்கள்கள்....
neenda naatkalukku piragu padhivittamaikku nandri. thaangal kurippittadhupol maraindha kavinjar vaalai avargalukku
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
ennudaiya ennamum adhuve nandri
காவிய கவிஞனுக்கு என் ஆழ்ந்த இரங்கள்கள்....
Thiru Pondicherry
கவிஞர்க்கு அஞ்சலி, அவரது எதுகை மோனை நினைவிலிருந்து அகலாத திறமைக்கு ஒரு சான்று
இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?
ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.....//
மிகச் சரி
தமிழ்போல் அவர் புகழும்
காலம்கடந்து நிச்சயம் வாழும்
சேவகன் போல சொற்கள் அவர்முன் கைகட்டி நின்றன! மறைந்தும் மறையாத மனிதர்! மா மனிதர்!
வாலி அற்புதமான பல பாடல்கள் எழுதி இருந்தாலும் உரிய இடம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன்.
கருத்துரையிடுக