பின்பற்றுபவர்கள்

14 ஜூலை, 2013

"நச்" !

நடக்கூடியது,மிகவும் ஆபத்தானது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.......என்றெல்லாம் நாம எது நடக்கூடாதுன்னு நினைக்கிறமோ, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் அது நமக்கே நடக்கும் பொழுது....நடந்த பிறகு ஏற்பட்ட வலியை மீறி......நாம நினைச்சது போல் நடந்துவிட்டது என்று முன்கூட்டிய உள்ளுணர்வை நாமே மெச்சிக் கொண்டு, நம்மை தீர்க்க தரிசியாக நினைப்பது வலிகளை மீறிய ஒரு பெருமிதமான உணர்வு, ஆனால் அது அசட்டுத்தனமானது என்று நமக்கே அது தெரியும்.

************

இங்கே எல்லாம் காப்பீட்டு திட்ட முகவர்கள் காப்பிட்டுக்காக பேசும் பொழுது தன்னை குறிப்பிட்டு ஒருவேளை நான் விபத்தில் போய் சேர்ந்தால் இன்ன இன்ன நன்மைகள் காப்பீட்டு திட்டத்தால் கிடைக்கும் தன்மை விளக்கமாக விளக்குவார்கள், 'நீங்க போய்டிங்கன்னா' என்று முன்னிலை விளக்கினால் முகவரை செருப்பால் அடிக்காத குறையாக துறத்திவிடுவார்கள், காப்பீடுகள் விபத்தின்பிறகு பயனிளிக்கக் கூடியவை என்று நமக்கு நன்கு தெரிந்து தான் வாங்குகிறோம், இதில் அபசகுணம், ஆபாசகுணம் என்று எதுவும் இல்லை என்றால் 'இன்சூரன்ஸ் வாங்கி வைத்துவிட்டால் விபத்து எதுவுமே நடக்காது.....' என்பது பெருவானவர்களின் நம்பிக்கை. மற்றபடி விபத்து நடந்தாலும் நட்டமில்லை, குடும்பத்திற்கு உதவும் என்றே காப்பீடுகளுக்கு ஒப்புக் கொண்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர், 

ஒருமுறை 'கேக்ரான், மேக்ரான்' கொம்பேனியில் இருந்து ஒருவர் காப்பீட்டுக்காக அழைத்துப் பேசினார், ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புக் கணக்கில் அவர்களுக்கு ஏதேனும் கமிசன் கிடைக்கலாம், என்பதால் 'காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்' என்றதும், நாம விரும்பி தலையைக் கொடுக்காவிட்டால் இவர்களிடம் பேசுவதில் எதுவும் நட்டமில்லை என்றே 'சரி சொல்லுங்க; என்றேன், எல்லாம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் குழந்தை இருக்கிறது என்கிறீர்கள், உங்க குழந்தை கை கதவில் சிக்கிக் கொண்டால் கூட எங்க காப்பீட்டு திட்டம் பயன்கொடுக்கும் என்றார், நெருப்புன்னா வாய் வெந்திடுமா ? என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா ? என்று கேட்டுப்பாருங்கள் பதில் வராது, அப்பறம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். இது போன்று தான் குழந்தை கை நசுங்குவதைப் பற்றிப் பேசுகிறானே என்று எனக்கு 'திக்' என ஆகியது. 'தயவு செய்து நான் திட்டுவதற்குள் போனை வைத்துவிடுங்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன், காப்பீட்டு முகவர்களில் 'இங்கிதம்' தெரியாதவர்களும் உண்டு, என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன், குழந்தைகளுக்கு கையில் அடிபடுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதற்கு குழந்தைகளின்  வலியை மீறி பெற்றோர்களுக்குத்தான் வலி மிகுதி, முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பவைத் தவிர்த்து குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் விபத்துகள் பெற்றோர்களின் கவனக் குறைவும் பெறுப்பின்மையும்  தான் காரணம், அந்த அளவுக்கு அசட்டையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெருமைப்பட்டு சீராட்டுவதில்  என்ன பயன், அதற்கெல்லாம் காப்பீடு எடுத்து அதை வாங்க நேரிடும் கொடுமையைப் பற்றி நினைக்க விரும்பாததால் அந்த முகவரிடம் என்னால் தொடர்ந்து பேசவிருப்பமில்லை.

எங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆம் தளத்தில் இருக்கிறது, மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் படுக்க அறைக் கதவுகள் திறந்திருக்கும் பொழுது அதை சுவற்றுடன் கூடிய காந்த பொருத்தியில் அணைத்து வைக்காவிட்டால் படுக்கை அறை சன்னல்களையும், வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தால் அறைக்குள் காற்று நுழைந்து வெளியேறும் காற்று சுழற்சியின் அழுத்ததால் படுக்கையறைக் கதவு 'மடிரென்று பெரும் ஓசையுடன் சாத்திக் கொள்ளும்' நானும் பலமுறை சன்னல் கதவை திறந்து வைத்தால் படுக்கை அறைக் கதவை மூடி வையுங்கள், என்று சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டேன், நான் கவனித்து இருந்தால் காற்று மிகுதியாக உள்ளே வராத அளவுக்கு கொஞ்சமாகத்தான் திறந்து வைப்பேன், வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கனுமே, எதுவும் நடக்காத என்ற நம்பிக்கையில் கதவு அறைந்து சாத்திக் கொள்ளும் சத்தத்தை அப்போது மட்டும் பொருட்படுத்தி பிறகு மறந்துவிடுவார்கள். வீட்டில் குழந்தை இருக்கிறது, நாம பெரியவங்க கை நசுங்கினால் தாங்கிக் கொள்வோம், குழந்தைக்கு ஏதேனும் ஆச்சுன்னா ? என்றெல்லாம் கூட சொல்லிப் பார்த்தேன்.

பிப்ரவரி மாதம் இங்கே நன்றாக காற்று சுழன்று அடிக்கும், ஒரு நாள் காலையில் 10 மணி இருக்கும் வசிப்பறையில் தொலைகாட்சிப் பார்த்துவிட்டு, படுக்க அறை குளியல் அறைக்கு செல்லலாம் என்று உள்ளே சென்று சட்டையை கழட்டி கதவின் பின் இருக்கும் ஹாங்கரில் மாட்ட கதவை கொஞ்சம் கைவைத்து விலக்க, ஏற்கனவே சுவற்றுடன் பொருத்தியில் சரியாக பொருந்தி இல்லாததால், அடித்த காற்றுக்கு வேகாமாக சாத்திக் கொள்ள கதவு துவங்கியது, 'மடீர்' சத்தத்தையாவது தடுக்கலாமே என்று மிக அவசரமாக, செயல்பட ஆள்காட்டிவிரல் மட்டும் முந்திக் கொள்ள, காற்றுவிசையுடன் கூடிய கதவின் (இங்கெல்லாம் தீ தடுப்பு உலோககலவையுடன் கதவு செய்திருப்பார்கள், ஒரு கதவு ஐம்பது கிலோவுக்கு குறையாது) மொத்த எடையும் கதவு தாழ்பாள் போடும் இடத்தில் ஆள்கட்டி விரலில் சரியாக நகக்கண்ணில் 'நச்ச்.......'  மிகவும் வேகமாக மோத,   மரண வலி

'நான் எவ்வளவு தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் கேட்டீர்களா ?' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? என்றெல்லாம் சொல்ல சொல்ல அதன் பிறகு கவனமாக இருக்கிறார்கள், விரல் கதவில் நசுங்கிய பிறகு தாங்க முடியாத வலி, உடனேயே இரத்தம் நகத்திற்குள் கட்டிக் கொண்டது, வெளிக்காயம் எதுவுமில்லை,  விரலில் தொடர்ந்து சுத்தியால் அடிப்பது போன்று 'விண் விண்' ஒரு மாதிரி தெறிப்பான வலி மறுநாள் காலைவரை நீடித்தது, முதல் நாள் இளம் சிவப்பாக உள்ளுக்குள் தெரிந்த நகம் நாள் ஆக ஆக கருமைக்கு மாறியது, அவ்வளவு தான் இனி ஆள்காட்டி விரலில் நகமே இருக்காது, தேவை இல்லாத பங்கம், எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது,  மூன்றாம் நாளில் இருந்து விரல் வலி முற்றிலும் குறைந்தது

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக  நகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கருப்படைய கொஞ்சமும் வளர்ச்சி இன்றி இருந்ததால், ஆள்காட்டிவிரலில் கதை முடிந்தது என்றே நினைக்கத் துவங்கினேன், இரண்டு மாதம் ஆன பிறகு நகக்கண்ணில் இருந்து நகம் பிரியத் துவங்கி விரலுக்கும் நகத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்படத் துவங்கியது, அவ்வளவு தான் நகம் நகம்..........போச்சு என்றே நினைத்தேன், சட்டை மாட்டும் பொழுது அல்லது ஏதோ நூலிலோ, கம்பியிலோ விபத்தாக பிய்ந்துவரும் நகம் சிக்கிக் கொண்டு பெயர்த்து கொண்டால் மீண்டும் மரண வலி எடுக்குமே.... என்பதால் பேண்ட் எய்டை விரல் மீது சுற்றிக் கொண்டேன், நாள் தோறும் அதை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு வர நகக்கண்ணில் இருந்து மேலும் மேலும் நகம் வளரும் திசைக்கு பெரிய இடைவெளி விட்டு விலகிக் கொண்டே சென்றது, பின்னர் இரண்டு வாரம் கழித்து  அடிபட்ட நகத்திற்கும் நகக்கண்ணிற்குமான இடத்தை வலது விரல் நகத்தால் அழுத்திப் பார்த்தேன்.

 'அப்பாடா' நக்கண்ணில் இருந்து புதிய நகம் வளரும் அழுத்தத்தை அதில் உணர்ந்தேன், அப்போதும் முழு நகமும் நசிங்கிய பிறகு அடிச் சதை காய்ந்து போய் இருக்குமே அதன் மீது வளர்ந்து வரும் நகம் படர்ந்து வளருமா ? என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ ? மீண்டும் ஐயம். ஆனாலும் தொடர்ந்து விரல் நுணியை ஓரளவு ஈரப்பதத்துடன், பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற முடிவு செய்து பேண்ட் எய்டு சுற்றியே வைத்திருந்தேன், அதன் பிறகு 15 நாள் ஆகி இருக்கும், விரலில் நகம் விழுந்த அடையாளமே தெரியாத அளவுக்கு  வளர்ந்திருந்தது, அடுத்த அடுத்தவாரம் நகம் வெட்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். மீண்டும் நகம் பழையபடி வளர்ந்து ஆள்காட்டி விரலை வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகும், அதன் வளர்ச்சியின் போதும் எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் என்னால் மட்டும் தான் உணரமுடியும். 


இதிலிருந்து நான் அறிந்து கொண்டது, விபத்தில் விரல் பகுதி சேதமடையாமல்  நகம் முற்றிலும் சிதைந்தால் கூட மூன்று மாத இடைவெளியில் மீண்டும் வளர்ந்துவிடும். நாம் அதுவரை அப்பகுதியை தூய்மையாக பாதுகாத்து வரவேண்டும், கலவரம் / கவலை அடையத்தேவையில்லை.

ஏற்கனவே வேறொரு விபத்து, அதுவும்  இது போல்உள்ளுணர்வு சொன்னது நடந்திருக்கிறது

8 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அந்தவரை தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு.

கோபாலுக்கு கார்க்கதவில் சுண்டுவிரல் மாட்டி விரல்பகுதி நகத்தோடு துண்டாகிப் போச்சு.

'ஆ' விரல்ன்னு அதையெல்லாம் எழுதி இருந்தேன்.

இப்போ கையில் நகம் வெட்டனுமுன்னா 10% வேலை கம்மி.

குழந்தைகளுக்கு எதாவதுன்னா நம்மாலே தாங்க முடியாது:(

எல்லோரும் கவனமா இருக்கணும். இருங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த முகவர் வந்தால் கதவிடுக்கில் விரல் வைத்து "சாத்த" வேண்டும் என்று தோன்றியது...!

ஜோதிஜி சொன்னது…

சொல்லி வீட்டில் கேட்காத போது நானே இது போன்ற பல விசயங்களை செய்து விடுவதுண்டு. மன அழுத்தம் நமக்கு மிச்சம். இயல்பான விபத்துக்களை தவிர்க்க நாமே களத்தில் இறங்கி விடுவது தான் உசிதம்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

கால் விரலில் அடிபட்டு நகம் முழுவதுமாக பெயர்ந்து வந்து விட்டது. பேண்டேஜ் போட்டு காயம் ஆற.. நானே காயத்தை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கூழ்போல் உருவாகி இருந்த நகத்துக்கு ஆதாரமான படலத்தை வழித்து எடுத்து விட்டேன். இப்ப பேருக்கு துக்கினியூண்டு இருக்குது..

அந்த நகம் அடிபட்டபின் வலி இருக்கே....அவ்வ்வ்வ் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//'ஆ' விரல்ன்னு அதையெல்லாம் எழுதி இருந்தேன்.//

படித்தேன், முதுகுதண்டு 'சில்'லென்று இருந்தது. மரண வலி எடுத்திருக்கும்.

:(

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த முகவர் வந்தால் கதவிடுக்கில் விரல் வைத்து "சாத்த" வேண்டும் என்று தோன்றியது...!//

:) விரலை மட்டும் தானா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
சொல்லி வீட்டில் கேட்காத போது நானே இது போன்ற பல விசயங்களை செய்து விடுவதுண்டு. மன அழுத்தம் நமக்கு மிச்சம். இயல்பான விபத்துக்களை தவிர்க்க நாமே களத்தில் இறங்கி விடுவது தான் உசிதம்.//

அப்படித்தான். வேறவழி இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//கூழ்போல் உருவாகி இருந்த நகத்துக்கு ஆதாரமான படலத்தை வழித்து எடுத்து விட்டேன்.//

வளரும் பொழுது கொஞ்சம் அரிப்பது இருக்கும், விட்டிருந்தால் அப்படியே கெட்டியான நகமாக மாறி இருக்கும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்