பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2013

ஏக(ப் பட்ட) இறைவன்கள் !


கடவுள் நம்பிக்கைக் குறித்து நம்பிக்கையுள்ளவர்களிடம் கேள்வி எழுப்பினால் விடை சொல்லத் தடுமாறும் நிலையில் கடைசியாக நமக்கு கிடைக்கும்  பதில் அல்லது மழுப்பல் 'நமக்கு மேல் ஒருவன் இருக்கான்னு நான் நம்புறேன் அவ்வளவு தான்' என்பதாக முடியும், இந்த பதிலில் நம்பிக்கை சார்ந்த தம் சடங்கு, சம்ப்ராதயம், வேதப் புத்தகம், வேள்வி, வழிபாடு முறை, நோன்பு, படையல், நரகம், சொர்கம் இவற்றையெல்லாம் தற்காலிகமாக புறக்கணித்துவிட்டு / தவிர்த்துவிட்டு தான் அதனை முடிவாக சொல்கிறார் என்பதும் அடங்கும்.

இனக்குழுக்கள் தங்களுக்கான அடையாளம் என்ற அளவில் தான் வழிபாட்டு முறைகளையும் அவரவர் கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டனர், எதிரி நாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்கிறதோ, கொள்ளையடிக்கிறதோ அதனால் பாதிப்பு பொருளியல் ரீதியானது மட்டுமே, ஆனால் அவர்கள் அவ்விடத்தில் முடிவாக தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களது வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்களையும் புதிய இடத்தில் திணிப்பர், ஏனெனில் தம்முடைய பண்பாட்டு தொடர்ச்சி பேணப்படவேண்டும், மற்றவர்களுடைய பண்பாடு நம்முடையதல்ல என்று தெளிவாகவே அதைச் செய்வர். படையெடுப்புகள் இல்லாமல் எந்த மதங்களும் பரவியதில்லை. 

தற்காலத்தில் படையெடுப்புகளால் மதம் பரவச் செய்வது எளிதன்று. மக்கள் எல்லோரும் தெளிவாகவே இருக்கிறார்கள், மதம் என்பது நிலம் சார்ந்த பண்பாடுகளை அழிக்கக் கூடியது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் மதவாதிகளின் தற்போதைய உத்தி மனித இனத்தில் ஏற்றத் தாழ்வு, மற்றும் நிற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அங்கு கடைவிரிப்பது தான். 

இனக்குழு கடவுளை பொதுக் கடவுளாக முன்வைக்கப்படும் உத்தி தான் 'ஏக' இறைவன் பற்றிய கருத்துகட்டுமானங்கள், இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏக இறைவன்கள் உண்டு, சமண மதத்தை எடுத்துக் கொண்டால் ஏக இறைவன் 'ஆதி பகவன்' என்ற பெயரில் இருபபர், அவரை அருகன் என்றும் சொல்லுவார்கள், ஒரு சமணருக்கு அருகனைத் தவிர வேறு இறைவன் கிடையாது, அவர்களைப் பொறுத்த அளவில் அருகன் ஏக இறைவன், பிறகு பவுத்த மதம், புத்தர் தன்னை கடவுளாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும் பவுத்தர்களுக்கு ஏக இறைவன் புத்தர் தான், புத்தனைத் தவிர வெற இறைவன் இல்லை என்பார்கள்.

சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான், சிவனுக்கு கட்டுப்பட்டவை, வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள், இஸ்கான் அமைப்பும் முழுக்க முழுக்க கிருஷ்ணன் தான் ஏக இறைவன் என்று பிரச்சாரம் செய்துவருகிறது. சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் முயற்சியில் புதிதாக ஒரு ஏக இறைவன் முன்வைக்கப்பட்டார் அவர் தான் பிள்ளையார், முழு முதற்கடவுள் விநாயகனே என்று ஒருசாரர் கூறுவர், சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.

இது தவிற ஒவ்வொரு இல்லத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு, அவரவர் இல்லத்திற்கு அவரவர் குல தெய்வமே ஏக இறைவன், அதைத் தாண்டிய வழிபாட்டு முறைகள் இரண்டாம் பட்சமே. 

ஆபிரகாமிய மதங்களில் ஏகப் பட்ட ஏக இறைவன் உண்டு, யூதர்கள் பழைய ஏற்பாட்டு ஜெகோவா, அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு. இஸ்லாமியர்களின் அல்லா இவர்களெல்லாம் ஏக இறைவன் பட்டியலில் உள்ள மேற்கத்திய ஏக இறைவன்கள், இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லா யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பொதுவானவர் என்று முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார், தூதர் ஒருவர் இருக்க வேண்டும், அதனால் தான் தூதர் இல்லாத மதங்களை மேற்கத்திய மதத்தினர் மதங்கள் மதமாக நம்புவதில்லை, ஆனால் கிழக்கில் இந்த பார்முலா 'அவதாரம்' என்ற பெயரில் வருகிறது, சங்கராச்சாரியார் முதல் சாயிபாபாவரை எல்லோரையும் அவதாரங்கள் என்றும் சிலர் அவர்கள் தான் மனித உருவில் வந்த ஏக இறைவனின் துளி என்றும் நம்புவார்கள். இந்திய மனங்கள் இறைவனுக்கு தமக்கும் இடையே தூதர் / தரகர் தேவை இல்லை என்று நினைக்கும் அதனால் தான் இந்திய மதங்கள் இறைத்தூதர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை,  பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது  மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்

ஏக இறைவன் கோட்பாடு மேற்கத்திய மதங்களிலும் சரி, கிழக்கு மதங்களில் சரி எந்த ஒரு ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வில்லை, காரணம் இவர்கள் சுட்டிக்காட்டும் ஏக இறைவனின் பண்பு நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, என்ன தான் ஏக இறைவன் என்றாலும் மதப்புத்தகம், அதில் காட்டும் சொர்கம் நரகம் இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் நமது ஏக இறைவன் தவிர ஏகப்பட்ட பிற ஏக இறைவனெல்லாம் ஒன்றல்ல என்று நம்புகிறார்கள்.

கிரேக்க நாகரீக காலத்தில் வாழ்ந்த ஏக இறைவன்கள் நாகரிகம் மாறிய பொழுது மறைந்து போனார்கள்.

நமக்கு மேல ஒரு கடவுள் உண்டு நம்புவதோடு விட்டுவிட்டு அது எந்த மதம் குறிப்பிடும் கடவுள் என்று ஆய்ந்து பார்த்தால், இதுக்கு பதிலாக நாமே ஒரு ஏக இறைவன் ஆகிவிடலாமோ என்று தோன்றலாம், இப்படித்தான் நித்தி, கல்கி போன்ற சாமியார்கள் தன்னை ஏக இறைவனாக ஆக்கிக் கொண்டனர்,  மதங்கள் கட்டமைக்கும் கடவுள் எல்லாம் பித்தலாட்டம் என்று தனிமனிதனாக ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் சார்ந்திருக்கும் மதக்கடவுள் தவிர்த்து அனைத்தும் பித்தலாட்டம் என்றே நம்புவர். இந்தியர்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் என்கிற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் மேற்கு மதங்கள் ஊடுறுவிய பொழுது அவர்கள் அதை வரவேற்காவிட்டாலும் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் அதற்கும் இந்துத்துவவாதிகள் வேட்டு வைத்த பிறகு ஏக இறைவன் கோட்பாடுகள் உலகினர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படி தெளிவாக வரையறுக்கப்படவில்லை, வரையறுக்கவும் முடியாது என்றே சொல்லலாம், ஏனெனில் எந்த ஏக இறைவன் கோட்பாடு என்றாலும் அவை நிலம் சார்ந்த பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் ஆண் பெண் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்,

கூகுள் தேடலில் 'one and only God' என்று தேடினால் பலவேறு படங்கள் தான் வருகின்றன. என்னைக்காவது கூகுள் ஹேக் செய்யப்பட்டு ஒரே படம் வந்தால் ஏக இறைவனின் ஒரே மாதிரியான படம் வரலாம், மற்றபடி எந்த காலத்திலும் ஏக இறைவனுக்கு ஒரே படம் தேடலில் வர வாய்ப்பில்லை.

பணம் இருக்கிறவர்களுக்கு பாதுகாக்க வங்கி தேவைப்படும், அன்றாடம் காய்சிகள் ஏழைபாழைகள் கதவுக்கு பூட்டு இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்,   கடவுள், மதம் இத்யாதிகள், எல்லாம் பணம் காசு உள்ளவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வஸ்து. முக்தி, சொர்கம், நரகம் இதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் ஏழைகளுக்கு உணவே சொர்கம், பசியே நரகம். இதில் ஏழைகளிடம் ஏக இறைவன் பற்றிய அறிவை எங்கனம் ஊட்டுவது ?

நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்

47 கருத்துகள்:

Prem S சொன்னது…

//நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்//

இது ரொம்ப ஓவர் பாஸ்

தருமி சொன்னது…

பூனையார் உங்களை நல்லாவே தயாரித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

Jayadev Das சொன்னது…

தங்களின் பகவத் கீதையின் புரிதல் தவறானது. மேலும் பல ஏற்க இயலாத கருத்துக்களை கொடுத்துள்ளீர்கள்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
நல்ல பதிவு.

1.இந்த ஏக இறைவன் கொள்கை என்பது எந்த மதத்திலும் கிடையாது. மனிதன் என்றால் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மறைகிறான்.இறப்புக்கு பின் புது(பழைய) உடல் மீண்டும் கிடைக்கிறது என்பதே மத நம்பிக்கை.

இதில் உடல் இல்லாமல் , இறைவனோடு ஒன்றிவிடுவான் என்பதும் ஒரு விளக்கமே!!.

ஆக மனிதனுக்கும்,இத்ர உயிர்களுக்கும் இறப்பு என்பது இல்லை, இதே போல் மனிதனுக்கு உயர்வான தேவர்கள் உண்டு. அவர்கள் இறப்பு இல்லாதவர்கள், இன்னும் கடவுளுக்கு உதவி,பணி செய்பவர்கள்.மனிதர்களுக்கு த்கவல் வருவது இவர்கள் மூலமே!!!

ஏக இறைவன் இந்த தேவர்களின் தலைவன், படைத்தல், காத்தல்,அழித்தல் செய்கிறார்.

ஆக ஏக இறைவனை ஏற்க இவை அனைத்தையும் ஏற்க வேண்டும். ஏக இறைவன் மட்டும் போதாது!!!!!!!!!!

ஏக இறைவன் என்பதை விட முழுமுதல் கடவுள் என்பதே சரியான சொல்!!!

**
2.ஒவ்வொரு மத பிரிவு ஏக இறைவனும் அந்த மத நிறுவனரின் குணங்களைக் கொண்டு இருப்பார்!!

ஏன் எனில் ஏக இறைவனைப் படைத்தவர் மத நிறுவனர்!!

**
3. பல ஏக இறைவன்கள் காணாமல் போய்விட்டார், சிலர் அரசியல்,பண‌ பலத்தால் தாக்கு பிடிக்கிறார்.

அறிவியல் வளர வளர ஏக இறைவன் இமயமலை,,,பூமியில் இருந்து,பால்வீதி மண்டலம் தாண்டி கருப்பு பொருள் வரை சென்று விட்டார்.


**

4. ஏக இறை பக்தர்கள் மதம் மாற்றி ஆட்சி அமைக்க சாம,தான,பேத தண்ட வழிமுறைகளைக் கையாள்வதும்,ஏக இறைவனை, மத நிறுவனைரை விமர்சன‌த்தில் இருந்து அரும்பாடுபட்டு காப்பதும் நல்ல நகைச்சுவை!!
**
நன்றி!!!

சார்வாகன் சொன்னது…

மாப்ளே தாசு.
இது நண்பர் கோவியின் கருத்து!!

// பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்//

இது உம்ம கருத்து!!
//தங்களின் பகவத் கீதையின் புரிதல் தவறானது. மேலும் பல ஏற்க இயலாத கருத்துக்களை கொடுத்துள்ளீர்கள்.//

**
அப்போ பகவத் கீதை மனிதர்களால் ,மனிதர்களுக்காக உருவாக்கப் பட்டது என்பதை ஏற்கிறீரா? இதுவே என் கருத்து!!

தெளிவாக சொல்லும்!!

நன்றி!!!

பெயரில்லா சொன்னது…

இஸ்க்கான் பொங்கிவிட்டது, ! அவ்வ்வ் ! போங்கய்யா எங்க இடியப்ப பூதனார் தான் ஏகப்பட்ட ஏக இறைவன், அவரு சரக்கடித்துவிட்டு போதையில் நம்மைப் படைத்தார். அதனால் தான் உலகம் குழம்பியுள்ளது. இடியப்ப பூதனார் தாழ் வாழ்க ! திருநாமம் வாழ்க !

வவ்வால் சொன்னது…

கோவி,

ஏகப்பட்ட ஏக இறைவன்கள் என்பதெல்லாம் மனித உருவாக்கம்,

ஆகச்சிறந்த ஏக இறைவன் வவ்வால் மட்டுமே,அதன் ஒரே மற்றும் கடைசி இறைத்தூதர் அடியேன் மட்டுமே :-))

அஹம் பிரம்மாஸ்மி!

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா அலசியிருக்கீங்க. நீங்க நம்ம கட்சி மாதிரி தெரியுது. தேவலோகத்தை சீர்திருத்தோணும்னு மும்மூர்த்திகள் என்னைக் கூப்பிட்டிருக்காங்க. உங்க ஆலோசனைகளும் தேவைப்படும். அப்போ உங்களைக் கூப்பிட்டுக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்

இதுதான் கடவுளைப் பற்றிய உண்மை.

சாமியை நம்புனாலும் நம்பலாமே தவிர நாந்தான் சாமின்னு சொல்லும் 'ஆ'சாமிகளை நம்பவே கூடாது.

அது இருக்கட்டும்.... பூனை(யார்) கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமாமே!!!!!

priyamudanprabu சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அது இருக்கட்டும்.... பூனை(யார்) கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமாமே!!!!!//

பூனை யார்ங்கிறது சூரியனாக இருக்குமோ ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Jayadev Das கூறியது...
தங்களின் பகவத் கீதையின் புரிதல் தவறானது. மேலும் பல ஏற்க இயலாத கருத்துக்களை கொடுத்துள்ளீர்கள்.//

பகவத் கீதை விளக்கம்ங்கிற பெயரில் 1000க் கணக்கான பொழிப்புரைகள் உள்ளன. அவை ஒன்றுக் கொன்று முரணானவை என்னும் பொழுது என்னுடையது 1001 ஆவதாக இருக்கட்டுமே.


சார்வாகன் குறிப்பிட்டது போல் கடவுள் மனிதனிக்கு சொன்னது கீதைன்னு தானே சொல்றாங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// Prem s கூறியது...
//நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்//

இது ரொம்ப ஓவர் பாஸ்//

என்ன ஓவர், பீர் அபிஷேகமெல்லாம் நம்ம மதுரைவீரனுக்கு கூட கிடைப்பதில்லை, படையலோடு ஓரமாக வைத்து அதையும் அப்பறம் எடுத்து குடித்துவிடுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அஹம் பிரம்மாஸ்மி!//

அஹம் (தலைகீழ்) தொங்காஸ்மி இல்லையா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//3. பல ஏக இறைவன்கள் காணாமல் போய்விட்டார், சிலர் அரசியல்,பண‌ பலத்தால் தாக்கு பிடிக்கிறார்.
//

ஏக இறைவன் பொசிசனுக்கு பலமான போட்டி நடப்பதால் அவ்வப்போது ஏக இறைவனும் கீழே இறக்கிவிடப்படுகிறார்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இடியப்ப பூதனார் தாழ் வாழ்க ! திருநாமம் வாழ்க !//

என்னது இடியாப்ப போதனார் ? இடியாப்பம் சாப்பிட்டுக் கொண்டே அதன் நூலில் இருந்து உலகை உண்டாக்கினார் என்று சொல்லுவிங்கப் போல.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// பழனி. கந்தசாமி கூறியது...
நல்லா அலசியிருக்கீங்க. நீங்க நம்ம கட்சி மாதிரி தெரியுது. தேவலோகத்தை சீர்திருத்தோணும்னு மும்மூர்த்திகள் என்னைக் கூப்பிட்டிருக்காங்க. உங்க ஆலோசனைகளும் தேவைப்படும். அப்போ உங்களைக் கூப்பிட்டுக்கிறேன்.//

உங்க வயதில் கடவுள் பற்றிய தெளிவு இருப்பது பாராட்டத்தக்கது, என்னதான் பகுத்தறிவு தத்துவம் பேசினாலும் 50 வயதிற்கு மேல் பலர் பம்மிவிடுவார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//பூனையார் உங்களை நல்லாவே தயாரித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.//

பூனையாரை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் எல்லாம் நன்றாக விளங்கும்
:)

ஜோ/Joe சொன்னது…

//சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான்//
குழப்பமாக இருக்கிறது ..இறைவன் , கடவுள் இரண்டும் வேறு வேறா ? சிவன் ஏக இறைவன் என்றால் 'மற்ற கடவுள்கள்' என்பதே அர்த்தமில்லாதது

கோவி.கண்ணன் சொன்னது…

//குழப்பமாக இருக்கிறது ..இறைவன் , கடவுள் இரண்டும் வேறு வேறா ? சிவன் ஏக இறைவன் என்றால் 'மற்ற கடவுள்கள்' என்பதே அர்த்தமில்லாதது//

இறைவன், கடவுள், தெய்வம் இவற்றிற்கெல்லாம் வேறு வேறு பொருள்கள் தான், திருவள்ளுவர் மிகச் சரியாக கையாண்டிருப்பார், தற்காலத்தில் எல்லாம் ஒரே பொருளில் தான் பயன்படுத்துகிறோம்.

இறைவன் - அனைத்திற்கும் மேலானவர்
கடவுள் - முற்றும் துறந்தவர் அல்லது கடந்தவர் எல்லோரையும் ஒன்றாக நினைப்பவர், முனிவர் போன்றோர்
தெய்வம் - நல்லதையே செய்பவர், கிட்டதட்ட வள்ளல் அல்லது தேவ தூதர்கள் போன்றவர்

ஜோ/Joe சொன்னது…

//இறைவன், கடவுள், தெய்வம் இவற்றிற்கெல்லாம் வேறு வேறு பொருள்கள் தான்// ஆனால் ஆப்ரகாமிய மதங்கள் இவை அனைத்தையும் ஒரே அர்த்தத்தில் தான் பயன்படுத்துகின்றன என்றே நினைக்கிறேன் ..குழப்பம் இங்கே தான் ஆரம்பிக்கிறதா? :)

ஜோ/Joe சொன்னது…

//அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு.// இதுவும் சரியான புரிதல் இல்லை கோவியார் .பின்னர் வருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குழப்பம் இங்கே தான் ஆரம்பிக்கிறதா? :)//

இருக்கலாம், இங்கே முழுமுதல் கடவுள் (அது யார் என்பது வேற) மும்மூர்த்திகள், அதன் கீழ் தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், அதன் கீழ் சாது சன்யாசி, சாமியார்கள், பின்பு குறி சொல்பவர்கள், சாமியாடுபவர்கள் என்று பல உண்டு
:)

ஆப்ரகாமிய மதங்களுக்கு இறைவன் அதற்கு கீழ் தேவதூதர்கள், இறைத் தூதர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுவும் சரியான புரிதல் இல்லை கோவியார் .பின்னர் வருகிறேன்.//

ட்ரினிட்டி பற்றிய புரிதல் உண்டு, ஆனால் அதை நான் இங்கு விளக்கமாக எழுதவில்லை, பதிவு ஏக இறைவன் பற்றியது :)

ஜோ/Joe சொன்னது…

//அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு.//
//ட்ரினிட்டி பற்றிய புரிதல் உண்டு//

டிரினிட்டி (திரித்துவம்) என்பதே ஒரே இறைவன் மூன்று வடிவில் இருக்கிறார் என்பது தான் . பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்றுமே எல்லா கிறித்துவ பிரிவுகளும் ஏற்றுக்கொண்டது தான் . அல்லேலூயா என சொல்பவர்களுக்கு பிதாவும் சுதனும் கிடையாது என்றோ , இயேசு (சுதன்) என சொல்பவர்களுக்கு பிதாவும் பரிசுத்த ஆவியும் கிடையாது என்பதோ இல்லை . இங்கே அல்லேலூயா என யாரை சொல்கிறீர்கள் என தெரியவில்லை .. ஏதோ ஒரு சபையாக இருந்தாலும் அவர்களும் தங்களை கிறித்துவர்கள் என்று தான் சொல்வார்கள் . கத்தோலிக்கராயிருந்தாகும் பிற சபையினர் என்றாலும் ஏக இறைவன் என்பதிலும் மூன்று வடிவம் என்பதிலும் ஒத்த கருத்து தான் .

ஜோ/Joe சொன்னது…

//மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார்//
அப்படியெல்லாம் சொல்ல முடியாது . ஆதாம் , ஆபிரகாம் , மோயீசன் ஆகியோரிடம் இறைவன் நேரடியாக பேசியதாக பைபிள் சொல்லுகிறது

வவ்வால் சொன்னது…

கோவி,

தொங்காஸ்வாமினு சொன்னா வேற மாதிரி நினைச்சுடப்போறாங்க, வவ்வால் தலைகீழாக தொங்குவதே மனிதபிறப்பின் தாத்பரியத்தினை விளக்கவே ,மனிதன் பிறக்கும் போது தலைகீழாக பிறக்கிறான் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு நிலை ஆகும் :-))

தலைகீழா பிறக்கிறான் ,தலைகீழா நடக்கிறான்

வயிறு என்னும் பள்ளத்தில் வாழ்க்கையை தொலைக்கிறான் :-))
----------

ஜோ,

கிருத்துவத்தில் இருக்கீங்க அல்லேலுயானா தனிக்கடவுள்/இறைவன் என்பது போல சொல்லுற மாதிரி இருக்கு,

எனக்கு புரிஞ்சதை சொல்லுகிறேன்,

அல்லேலுயா -Hallelujah=Hallel+“Jah”(ஜெஹோவா)

வாழ்த்துங்கள் ஜெகோவாவை = Praise the Lord என ஆங்கிலத்தில் போட்டுக்கொள்கிறார்கள் ,இப்படி சொல்வது ஆமோதிக்கிறேன் - ஏற்கிறேன் என சொல்ல சொல்வது போன்றதாகும்.

பெந்தெகோஷ்ட்ல ஹீப்ருவ்ல அல்லேயுயானு சொல்லிக்கிறாங்க மற்றப்பிரிவுல Praise the Lord என சொல்லிவிடுகிறார்கள் ,எனவே அல்லேலுயா இல்லாத கிருத்துவமேயில்லை.

அல்லேலுயாவின் பரிசுத்த ஆவினு சொல்லக்காரணம் பெந்தேகோஷ்ட்கு பரிசுத்த ஆவி தான் சால்வேஷன் -மோட்சம் கொடுக்கும்னு தீவிரமாக நம்புவதற்கு சொல்லி இருக்கலாம்.


பெண்டெகோஸ்ட்-கிரீக்கில் 50வது நாள் என்று பொருள், ஈஸ்டரில் இருந்து 50 வது நாள் அறுவடை திருவிழா வாரம்- ஏசு உயிர்த்தெழுந்துது 5 வது நாள், மீண்டும் தூதர்கள் மீது இறங்குவராம், எனவே புனித ஆவியை மட்டுமே மையமாக வைத்து பென்டேகோஷ்ட் வணங்குகிறார்கள்.

பிதா- சுதன் பரிசுத்த ஆவினு மூன்று இருந்தாலும் ,பெந்தே கோஷ்ட் புனித ஆவிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

----------

கோவி,

கடவுள்,இறைவன், தெய்வம் எல்லாமே சமமான பொருள் தான், நீங்க தனித்தனியா பொருள் கொடுக்கிறிங்க.

வாட்டர்,நீர், பானி என சொன்னால் H2O இல்லை வேறனு ஆகிடுமா?

கடவுள்,இறைவன் தமிழுக்கு மட்டுமே உரித்தான சொல்.

தெய்வம் வடமொழி கலப்பில் உருவானது, அல்லது இரண்டு மொழிக்கும் பொதுவானது.

DEO,Deva என சமத்கிருதத்தில் இருந்து தெய்வம்னு சொல் உருவாச்சு.

குலசேகரன் சொன்னது…

m

குலசேகரன் சொன்னது…

Many sweeping statements in this post.

// சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.//

இறைவன் – ஆண்பால்
இறைவி – பெண்பால்.

நீங்கள்; எழுதியது மாணாக்கர் செய்யும் ஒரு தவறை நினைவுபடுத்தும்>

ஒருவன் – ஒருவள் என்று எழுதுவார்கள்.

ஒருவன் – ஒருத்தி. அதைப்போல இறைவி.

கடவுள், தெய்வம், இறைவன் – இவை மூன்று பற்றி.
கடவுள் – கடந்த உள்
தெய்வம் – வடமொழித்திரிபு.
இறைவன் – இறைச்சி என்பதன் திரிபு
இறைச்சி = உள்ளுறை பொருள்.

But as u said, iraivan is used to refer to the only God Eka Iraivain
Kadavul and theyvam – are used to refer to a variety of gods.
Theyvam is used to refer to God in common speech.

Please don’t accept what I have written w/o getting them verified with a good Tamil teacher.

Sikhs believe in one God but that God is not their Gurus. Gurus are worshipped as Gurus only.

ஜோ/Joe சொன்னது…

//கிருத்துவத்தில் இருக்கீங்க அல்லேலுயானா தனிக்கடவுள்/இறைவன் என்பது போல சொல்லுற மாதிரி இருக்கு//
இல்லை .நான் அப்படி சொல்லவில்லை . மறுபடியும் வாசித்துப் பாருங்க.

//பெந்தெகோஷ்ட்ல ஹீப்ருவ்ல அல்லேயுயானு சொல்லிக்கிறாங்க மற்றப்பிரிவுல Praise the Lord என சொல்லிவிடுகிறார்கள் ,எனவே அல்லேலுயா இல்லாத கிருத்துவமேயில்லை//
அல்லேலூயா இல்லாத கிறித்துவம் இல்லையென்றே நானும் சொல்லுகிறேன் .. ஒரு சபையார் அந்த பெயரில் இயங்குகிறார்கள் என்பதால் அது மற்றவர்க்கில்லை என்று அர்த்தமல்ல .கத்தோலிக்கர்களும் அல்லேலூயா சொல்லுவார்கள் , கோவில் வழிபாட்டில் மட்டும் . Praise the Lord -லாம் கத்தோலிக்கர் வழக்கம் இல்லை .

குலசேகரன் சொன்னது…

//வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள்//

(இராமனுஜர் வழி) வைணவர்களுக்கு ஒரே இறைவன். ஏக இறைவன். மஹா விஷ்ணு. அவ்விறைவனின் அவதாரங்களுள் ஒன்று கிருஷ்ணர். அவதாரங்களையே ஏக இறைவனாகவோ இஷட தெய்வமாகவோ வணங்க விரும்புவோர் செய்யலாம் அதனால் ஏக இறைவன் இல்லை வைணவர்களுக்கு என்றாகாது. வணங்கும் அவதாரமே ஏக இறைவனாகிறது இங்கே அவதார ஈடுபாட்டினால்.

எ.காட்டாக,
விட்டோபா என்பது மஹா விஷ்ணு. விட்டோபா கோயிலுக்கு சென்றார் இராமதாசர். அவர் பெரும் இராம பக்தர். விட்டோபா இராமர் போலில்லை. எனவே வணங்காமலிருக்க அவருக்கு இராம சீதை கோலத்தில் காட்சியளித்ததாகவும் பின்னரே அவர் விட்டோபாவை வழிபட்டதாகவும் இராமதாசரின் வரலாறு. விட்டோபா மஹாராஷ்ட்ராவில் பணடர்பூரில் உள்ளது. விட்டோபா கோயில் வடபழனியில் இருக்கிறது. கட்டியவர் பண்டரிபாய். (இவர் பேரே பண்டர்புரிலிருந்துதான் வருகிறது) தமிழநாட்டவருக்கு இரங்கநாதர். மராட்டியருக்கு விட்டோபா. இரண்டுமே மஹாவிஷ்ணுவின் வழிபாட்டுத் தோற்றங்கள்.

குலசேகரன் சொன்னது…

ஏக இறைவனே ஞானிகள் காட்டும் இறை. ஆனால் அவ்விதம் ஏக இறைவனை மட்டும் என்றால் மதங்கள் பாமர மக்களுக்கு ஆர்வத்தைத் தாரா..
ஒரே மதமே இருவகையிலும் இருக்கும். ஒன்று, தனிமனிதனுக்கு, இன்னொன்று பாமரர்களுக்கு, முதலாவதே ஞானிகள் அனுபவிப்பது. இரணடாவது நமக்கு (நமக்கென்றால் என்னைப் போன்றவர்களுக்கு)

Govi Kannan’s blogpost and the comments from atheists are broadsides. Don’t do that. Atheists should attack only when and where religion is abused to bring sorrow to people. Not when it is just being followed.

Unknown சொன்னது…

அருமை சகோ.ஏக‌ இறைவ‌னின் நெத்திய‌டி ப‌திவு....

இந்த‌ ஏக‌ இறைவ‌ன்க‌ள் அனைத்தும் ம‌னித‌ர்க‌ளால் பாதுகாக்க‌ப்ப‌ட்டும்,பராமரிக்கப்பட்டும் வ‌ருகின்ற‌ன்.வாழ்க‌ ம‌னித‌ன்....


Unknown சொன்னது…

ஏதுமில்லாமல் சூன்யத்தை நோக்கி இருப்பதை விடுத்து..ஏதோ ஒன்று இருக்கிறது என்று விடுகதை போட்டு, தேடித் திரிவதும் ஒரு சுகம்..ஒரு பொழுதுபோக்கு..!

ssk சொன்னது…

கருத்துகள் பல மாதிரி தோன்றலாம். மனிதனின் அறிவியல் மூளை விடை சொல்ல முடியாத விசயங்களுக்கு மதங்கள் மனம் போன போக்கில் புளுகி பொய் விளக்கம் தந்து தன்னிடம் வந்தவனுக்கு அமைதி தருகிறது. நாத்திகம் உண்மையே இருந்தாலும் அதில் சுவாரஸ்யமில்லை.
வாழ்க்கையை வறட்டு தன்மை கொண்டு மாற்றி விடுகிறது.
இந்த ஒரு இடத்தில நம் மத வாதிகள் புகுந்து மக்களின் மூளையில் சங்கிலி போட்டு அவனை தங்களின் சொந்த சுய லாபங்களுக்கு பயன் படுத்தி எயித்து பிழைகின்றனர்.

தருமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ramachandranusha(உஷா) சொன்னது…

//நாத்திகம் உண்மையே இருந்தாலும் அதில் சுவாரஸ்யமில்லை//
தோ பார்ரா :-)

ramachandranusha(உஷா) சொன்னது…

இதில் இருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் உலகில் உள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் நாத்திகர்கள்- உங்க சாமி எங்களுக்கு சாமியாகாதே :-))))))

தருமி சொன்னது…

//நாத்திகம் உண்மையே இருந்தாலும் அதில் சுவாரஸ்யமில்லை.//

அனுபவித்தவர்கள் ஆத்திகத்தை விட நாத்திக வாழ்க்கையில் சுவாரஸ்யம் (pepper & salt) அதிகம் என்கிறார்களே!

அதோடு யாரோ எப்போதோ எப்படியோ போட்ட ஒரு கோட்டில் கண்ணை இறுக மூடிக்கொண்டு நடப்பதை விட, தன் கண்களை தாங்களே திறந்து கொண்டு, பிறகு நன்கு ”திறந்த கண்ணோடு” சுற்றும் சூழலும் பார்த்து, ரசித்து, யோசித்து நடப்பது நன்றாக இருக்குமே!

- இப்படியும் நாத்திகர்கள் சொல்கிறார்களே ... !

கோவி.கண்ணன் சொன்னது…

//கருத்துகள் பல மாதிரி தோன்றலாம். மனிதனின் அறிவியல் மூளை விடை சொல்ல முடியாத விசயங்களுக்கு மதங்கள் மனம் போன போக்கில் புளுகி பொய் விளக்கம் தந்து தன்னிடம் வந்தவனுக்கு அமைதி தருகிறது.//

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மதம் முட்டுக்கட்டையாகத்தான் இருந்திருக்கிறது, ஆனால் அறிவியல் கருத்துகளை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலையில் கள்ளத்தனமாக எங்க மதத்தில் ஏற்கனவே மறை பொருளாக இதைத்தான் சொல்லி இருக்கிறது என்கின்றனர்.

பூமி உருண்டை என்பதையும் சூரியனை சுத்துகிறது என்பதையும் இன்னும் கூட பல மதவாதிகள் நம்புவதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//ramachandranusha(உஷா) கூறியது...
இதில் இருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் உலகில் உள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் நாத்திகர்கள்- உங்க சாமி எங்களுக்கு சாமியாகாதே :-))))))//

அதே அதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Govi Kannan’s blogpost and the comments from atheists are broadsides. Don’t do that. Atheists should attack only when and where religion is abused to bring sorrow to people. Not when it is just being followed.//

வீட்டுக்குள்ளான, நாலு சுவற்றினுள் உள்ள நம்பிக்கையை நான் விமர்சனம் செய்தது கிடையாது, வியாபராங்களாக கடைவிரிக்கப்படுவதை தான் சாடிவருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எ.காட்டாக,
விட்டோபா என்பது மஹா விஷ்ணு. விட்டோபா கோயிலுக்கு சென்றார் இராமதாசர். அவர் பெரும் இராம பக்தர். விட்டோபா இராமர் போலில்லை. எனவே வணங்காமலிருக்க அவருக்கு இராம சீதை கோலத்தில் காட்சியளித்ததாகவும் பின்னரே அவர் விட்டோபாவை வழிபட்டதாகவும் இராமதாசரின் வரலாறு. விட்டோபா மஹாராஷ்ட்ராவில் பணடர்பூரில் உள்ளது. விட்டோபா கோயில் வடபழனியில் இருக்கிறது. கட்டியவர் பண்டரிபாய். (இவர் பேரே பண்டர்புரிலிருந்துதான் வருகிறது) தமிழநாட்டவருக்கு இரங்கநாதர். மராட்டியருக்கு விட்டோபா. இரண்டுமே மஹாவிஷ்ணுவின் வழிபாட்டுத் தோற்றங்கள்//

விரிவான விளக்கத்திற்கு நன்றி குணசேகரன் அவர்களே

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஏகப்பட்ட குழப்பங்களில் இருக்கீங்க போல... :-))

// தருமி கூறியது...

பூனையார் உங்களை நல்லாவே தயாரித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

புதன், 27 பிப்ரவரி, 2013 1:39:00 AM GMT+08:00//

தி சிம்பிள் & பெஸ்ட் கமெண்ட்..!

கோவி.கண்ணன் சொன்னது…

//தெய்வம் – வடமொழித்திரிபு. //

வவ்வால் இது திரிபென்பது ஐயமாகவே இருக்கிறது, அய்யன் திருவள்ளுவர் காலத்தில் இருந்தே இருக்கும் சொல், இராமகி ஐயா கூட தெய்வம் தே என்கிற சுட்டுச் சொல்லாக இருந்து பின்னர் தீ - தீபம் போல் தமிழ் மொழித் திரிபாக இருக்கக் கூடும் என்ற பொருளில் எழுதியுள்ளார், தேவர், தேவதை, தெய்வம் இவையெல்லாம் இருமொழிக்கும் பொதுவானதாகக் கூட இருந்திருக்கலாம்,

நெருப்பிற்கு அக்னி, தீ நாக்கிற்கு ஜ்வாலை என்றும் வடமொழியில் பெயர் இருந்தாலும் தமிழ் திரிபான தீபம் வடமொழி சொல் போன்றே தோன்றும்.

குலசேகரன் சொன்னது…

இதை தேவனேயப்பாவாணரிடம் கேட்டால் எச்சொல்லுமே தமிழ்ச் சொல்லென்பார். இங்கிருந்து அங்கே போனது. தெய்வம் என்ற சொல்லும் அவ்வாறே. அவரின் ஒப்பியல் மொழி நூல் படிக்கவும்.

கண்ணன்! திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் வைதீகமதமும் வடமொழியும் ஆழமாகவும் அகலமாகவும் தமிழரின் வாழ்க்கையை வியாபித்துவிட்டன. தூய தமிழ் மூச்சை விட்டுவிட்டது என்று சொன்னால் மிகையில்லை. அதாவது தூய தமிழ் சுத்த தமிழாகி விட்டது வள்ளுவரின் காலத்தில். (subject to verification from a Tamil pandit, sorry Tamil Aasaan,sorry, Tamil aasiriyar!)

அடுத்து வீட்டுக்குள்ளே மதம் இருந்தால் பிரச்சினையில்லை; அதை விமர்சனம் பண்ணவில்லையென்பது பற்றி.

கோயில் வழிபாடு வீட்டிற்குள் இருக்கும் மதமன்று. அதே போல பிறமதங்களும் பொது வழிபாடு வைத்திருக்கின்றன. நான் ஞானிக்கு ஒரு தனிமனித மதம். மற்றவருக்கு பொது என்றால். இது சரி; அது சரியில்லையென்று சொன்னதாகப் பொருளில்லை. பொதுவழிபாடும் தேவை; தனிமனித வழிபாடும் தேவை என்பதுவே மதங்கள் சொல்வது.

எல்லாரும் ஞானிகள் ஆகவியலா. தேவையுமில்லை. நாம் இறையுணர்வை மறக்காமலிருந்தால் நமக்குப் போதுமானது. ஞானிக்கு மதம் தேவை கூட இல்லை. எம்மதத்திலும், அல்லது மதமேயில்லாமலும் இறை தேடலும் தேடியடங்கலும் அவனுக்கு சாத்தியம்.

மற்றவருக்குத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். பாமர மதமே கூடாது என்ற கோதாவில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

syed shafiudeen சொன்னது…

*தமிழக அரசு கவனத்திற்க்கு:-*

*தமிழகத்தில்*
உள்ள*
*அனைத்து *மாவட்டத்திலும்*
அதன்*
*உட்பகுதிகளிலும்*
மற்றும*்
*எல்லா சாலையோர*
*இLங்களிலும்*

*போலீஸ்காரர்கள் மற்றும*்
*போக்குவரத்து போலீஸ்காரர்கள்*

இரண்டு சக்கரம் வாகனங்களில் வரும் மக்களிடம்
தினக்கூலி
வேலை பார்த்து வரும்
மற்றும் ஏழை மக்களிடம்
100, 200, 300 என்று 2500 ரூபாய்வரை

மனசாட்சியே இல்லாமல் வசூல் வேட்டை செய்கின்றனர்

வாகன ஓட்டுபவரிடம்
*லைசன்ஸ்,..*
*இன்சூரன்ஸ் ..*
*மற்றும் RC புக்...*
இருந்தாலும்
அவர்களிடம்
பணம் பறிக்கப்படுகிறது.

இவர்களுக்கு யார் வாகன ஓட்டுபவரிடம் பணம் பிடுங்க & வாங்க அவர்களை மிரட்டும் அதிகாரம் கொடுத்தது???

இவர்களின் உயர் அதிகாரிகளா ???

அந்த
மாவட்ட collector ரா.?

இல்லை
மாவட்ட sp யா ???

*நமது நாட்டு* *சட்டத்தில் வாகன* *ஓட்டுபவரிடம் பணம் வாங்க வேண்டும் என*
*IPC section சட்டம் தனியாக உள்ளதா?*

*இவர்கள் வசூல் செய்யும் பணம் எங்கு செல்கின்றது*

*யார் எந்த*
*அதிகாரி*
*இதனை நிர்வாகம் செய்கிறார் ..?*

*இந்த பணம்* *அரசாங்கத்தில்* *எதற்கு*
*பயன்படுத்த* *படுகிறது*
*IPC சட்டபடி ???*

போலீஸ்காரர்கள் சட்டம் ஓழுங்கை பார்க்க வேண்டும்

திருடன்..
ஊரை ஏமாற்றுபவன்,

வங்கிகளில்
கோடி கோடி பணம் வாங்கி விட்டு ஏமாற்றுபவன்,...

சதிகார்கள்,..

தீவிரவாதிகள்,...

குற்றவாளிகள் ...

இவங்களை
பிடிக்க வேண்டும்

*போக்குவரத்து போலீஸ்காரர்கள்*
போக்குவரத்து நெரிசல்
இல்லாமல்
மக்கள் பயணம் செய்ய போக்குவரத்தை
சீர் செய்ய
வேண்டும்

இது தானே
இவர்கள் வேலை
இதை செய்யாமல்
மக்களின் வரி பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு
மக்களை கொடுமை செய்கின்றனர்
இதற்கு தகுந்த
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், .?

கண்டித்து
போஸ்டர்கள் ஒட்டப்படும்...

ஜல்லிகட்டு போராட்டம் செய்தது போல் இந்த பிரச்னைக்கும் போராட்டம் செய்தால் தான் தீர்வு ஆகுமா ???

pls share allways
all persons
this problem daily we see

நாம் அனைவரும் இந்த பிரச்னைக்கு ஓர் முடிவு கட்டுவோம்

நாம் வாங்கும் மாத சம்பளம் & தின கூலியில்
தினமும் நாம் Rs.100/- 200/- என தந்தால்
எப்படி பிழைப்பது
யோசியுங்கள்.?

தயவுசெய்து ஷேர் செய்யவும்.......🙏🙏🙏

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்