பின்பற்றுபவர்கள்

7 பிப்ரவரி, 2013

குஷ்புக்கு கருத்து சொல்ல அருகதை ?


சென்ற சட்டமன்ற தேர்தலில் மூழ்கின கப்பலில் ஏறி மதிப்பை இழந்தவர்கள் முக்கியமாக இருவர், அதில் நடிகை குஷ்பு மற்றும் வடிவேலு பற்றிக் குறிப்பிடலாம். வடிவேலுவுக்கு திரையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, தற்பொழுது தான் ஒருசிலர் ஒப்பந்தம் செய்யத் துவங்கியுள்ளனர், இதற்கிடையே விஜயகாந்ந் திமுகவை நெருங்குவது உங்களுக்கு பொறுக்கலையா ? என்று கருணாநிதி பத்திரிக்கையாளர்களிடம் பொங்கி இருக்கிறார், இந்தக் கேள்வியை வடிவேலுவிடமும் இவர் கேட்டு இருக்கலாம், பாவம் வடிவேலு விஜயகாந்தை எதிர்க்க திமுகதான் சரியான கட்சி என்று முடிவு செய்து திமுகவிற்காக பரப்புரைகள் செய்து ஈராண்டாக செல்லாகக் காசாக இருக்கிறார், திமுக சார்பு தொலைகாட்சி ஊடகங்கள் வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகளை தொடர்ந்து போட்டு கல்லாக் கட்டி வந்தாலும் அவர்களின் சொந்த நிறுவனங்கள் எடுக்கும் படங்களில் கூட வடிவேலுவிற்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. 

டுத்து குஷ்பு 'தலைவர் கலைஞர் அடுத்து ஸ்டாலின் என்று முடிவு செய்திருந்தாலும் பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வும் சேர்ந்து தான் ஸ்டாலின் அடுத்த தலைவரா ? என்று முடிவு தெரியவரும் என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஞாயமாகப் பார்த்தால் குஷ்புவின் இந்தப் பேச்சை திமுகவினர் பாராட்டி இருக்க வேண்டும், காரணம் தலைவர் தேர்வு என்பது திமுக கட்சியில் முறைப்படியாக நடக்கக் கூடியது என்பதே அவர் சொல்லவந்ததும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

'அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''  - கேள்வி

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.'' -குஷ்பு

கட்சியில் பெரும்பான்மையாக இருக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவின் இந்தப் பேச்சை ஸ்டாலினுக்கு எதிரானது என்று கூறி குஷ்பு வீடுமீது தாக்குதலும், அவர் மீது விமான நிலையத்தில் செருப்பு வீச்சும் நடத்தி இருக்கிறார்கள், இது உட்கட்சி பூசல் அதில் உனக்கென்ன என்றெல்லாம் கேட்டுவிட முடியாது, வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு பெண், ஒரு நடிகை, அதுவும் கட்சியில் புதிதாக இணைந்தவர் கட்சித் தலைவராக அடுத்து வர இருப்பவர் குறித்து கருத்து கூறலாமா ? என்றே கொதித்திருக்கிறார்கள் என்றும் இவர்களது 'முற்போக்கு சிந்தனை பரப்புரைகள்' குறித்து விமர்சனம் செய்ய வேண்டியதாக உள்ளது.

துமட்டுமின்றி என்னதான் எங்க கட்சியைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடிந்தாலும் திமுக மட்டுமே உட்கட்சியில் ஜனநாயக ரீதியில் பேசுவதற்கு அனுமதிக்கும் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும், அதிமுகவில் ஜெ-வை எதிர்த்து எவராலும் பேசமுடியுமா ? என்றெல்லாம் வாய்கிழிய பேசுவார்கள், திமுகவின் உட்கட்சி ஜெனநாயகம் பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கிறதா இல்லையா ? என்பது எம்ஜிஆர் கட்சித் துவங்க, பின்னர் வைகோவும் கட்சி துவங்க காரணமாக அமைந்தது என்பது நமக்கும் தெரியும். பாவம் குஷ்புவுக்கு அவை தெரிந்திருக்கவில்லை என்பது தான் நமக்கு புதிய தகவல்.

குஷ்பு மீது நடிகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பொங்குவதற்கு அவர் ஒரு நடிகை, ஒரு பெண் மற்றும் அதுவும் அண்மையில் தான் திமுகவில் இணைந்தவர் வெளிப்படையாக பேசலாமா என்கிற வெறுப்பா ? அல்லது ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முறையில் எழுந்த போர் குரலா ?

திமுக என்பது தனியார் சொத்து தான் என்று கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு தெரியாதது நமக்கு வியப்பே.

5 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

எனக்கென்னமோ குசுப்பு ஆளும் தரப்புக்கு முகாம் மாற பிளான் போட்டு இப்படி பேசியிருக்கலாம்னு நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் கூறியது...
கோவி,

எனக்கென்னமோ குசுப்பு ஆளும் தரப்புக்கு முகாம் மாற பிளான் போட்டு இப்படி பேசியிருக்கலாம்னு நினைக்கிறேன்.//

:) தெரியலையே....

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஆஹா! வவ்வால்!, கொளுத்திப் போடறீங்களே! இப்படி ஓர் வதந்தி கிளம்பியதற்காகவே அம்மிணி மீது மறுபடி செருப்பு வீச்சு நடத்துவார்களே!

வேகநரி சொன்னது…

//ஞாயமாகப் பார்த்தால் குஷ்புவின் இந்தப் பேச்சை திமுகவினர் பாராட்டி இருக்க வேண்டும்//
ஜனநாயரீதியாக கருத்து தெரிவித்த குஷ்புவை கட்சிகாரர்கள் பாராட்டி ஊக்குவித்திருக்க வேண்டும். இப்போ பாருங்கள் குஷ்பு ஒரு பெண் கருத்து தெரிவித்ததால் கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழ் வீரர்கள் களம் இறங்குவார்கள். இஸ்லாமியர் மதவாதிகளும் தான்.

வவ்வால் சொன்னது…

கிருட்டிண மூர்த்தி அவர்களே,

கொளுத்தியெல்லாம் போடவில்லை அரசியல் அரிச்சுவடியின் படையே சொன்னேன்.

ஒரு இயக்கத்தில் அதிருப்தியில் இருப்பவர்கள், ஏன் இங்கே இருக்கணும் ,இடம் மாறலாமா என நினைப்பவர்கள், ஆரம்பத்தில் இயக்கத்தின் தலைமைக்கு "முரண்டா"ப்பேசி மறைமுகமாக இப்படி செய்தி சொல்வார்கள், அதற்கு ஏற்றார்ப்போல அழைத்து அமைதிப்படுத்தினால் ,சைலண்டா அமுங்கிடுவாங்க,ஆனால் கண்டுக்கவேயில்லைனா, ஒரு புரட்சி வேடம் பூண்டு ஒரே அடியாக சண்டைப்போட்டு அதையே ஒரு காரணமாக சொல்லி முகாம் மாறிவிடுவார்கள்.

அதுவும் ஏற்கனவே இருந்த ஒரு முகாமுக்கு செல்லணும் என்றால் வலுவான ஒரு காரணம் காட்டணும்ல :-))
----------

கோவி,

தெரியலையா, இன்னும் கொஞ்ச நாள் போனால் தெரியும்,அரசியலில் கருவாடு மீனாகலாம், தயிர் பாலகலாம் :-))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்