தடி எடுத்தவனெல்லாம் தண்டால் காரணும் இல்லை, தாடி வைத்தவனெல்லாம் தீவிரவாதி இல்லை, தீவிரவாதம் பற்றி விமர்சனம் செய்தாலே எங்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கிறார்கள் என்பது போல் வஹாபியர்கள் கட்டமைக்கிறார்கள், பார்பனியத்தை சாடுபவர்களுக்கு பார்பனர் நண்பராக இருக்க முடியாது என்று சிலர் நம்புவது போல் தீவிரவாதிகளை கண்டிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு நண்பனாக இருக்க முடியாது என்பது போல் கட்டுமானங்கள் முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அரசுகளை மிரட்டுகிறோம் என்ற பெயரில் எவனோ ஒரு அப்பாவி மனிதனை கழுத்தறுத்துக் கொல்வதாக இருந்தாலும் 'அல்லாவின் திருப்பெயராலே' என்கிற குரான் ஓதிதான் கொல்லப்படுவது குறித்து யுடியுபில் ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது, அதற்கு அவர்கள் ஜிகாத் என்றும் புனிதப் போர் என்று பெயர் கொடுக்கிறார்கள், மதத்தின் பெயராலும் மதத்தின் பின்னனியிலும் நடைபெறும் தீவிரவாத செயல்களை மதம் பெயரில் குறிப்பிட்டால் மட்டும் ஏன் இவர்களுக்கு அவமானம் ஆகிறது என்று தெரியவில்லை, உண்மையில் இவர்கள் அவமானம் அடைவதாக இருந்தால் அவப்பெயரை ஏற்படுத்தி இறைவன் திருப்பெயர் சொல்லிக் கொலை செய்து மதத்திற்கு கெட்டப் பெயர் வாங்கித் தருபவர்கள் மீது தானே ஞாயமாக கோபம், வெறுப்பு எல்லாம் வந்து, அவர்களை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும், மாறாக அந்தத் தீவிரவாதிகள் / சமூக விரோதிகள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு தூவா செய்கிறோம் என்று சிறப்புத் தொழுகை எல்லாம் நடத்துகிறார்கள்.
மதத் தீவிரவாதம் என்கிற விமர்சனம் வரும் பொழுது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துகிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று புலம்புவது எந்தவியத்தில் ஞாயம் என்று தெரியவில்லை, உண்மையில் எல்லா மதத்திலும் எல்லோருக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு, எங்கோ அல்லது அருகிலேயே நடக்கும் மதச் சார்ப்பு தீவிரவாதச் செயல்களால் தத்தம் மாற்று மத நண்பர்களை விலக்கிக் கொள்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அவையெல்லாம் உண்மையான நட்பா ?
பின்னே ஏன் மதம் சார்ந்து அவமானப்படுத்துகிறார்கள் என்கிற கூப்பாடு ? காரணம் உண்டு, 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கூப்பாடு போடும் பொழுது தத்தம் மதத்தை சார்ந்தவர்களை ஒன்று திரட்டமுடியும் என்கிற நம்பிக்கை தான், ஒன்று திரட்டுவது ஒன்றும் தவறான செயல் இல்லை, பல்வேறு சமயத்தினர் மதத்தினர், சாதியினர் கூட எதோ ஒரு பொதுத்தன்மையை வைத்து ஒன்று திரள வேண்டும் என்றே நினைப்பர், ஆனால் பொய்யாக ஒரு பீதியை கிளப்பி ஒன்று திரட்டும் பொழுது வெறுப்புணர்வையும் சேர்த்தே ஒன்று திரட்டுகிறோம் என்பதை இவர்கள் அறிகிறார்களா ? இதே நபர்கள் சிங்களுனுக்கு எதிராக ஒன்றும் திரளும் தமிழ் அமைப்புகள் பெரும்பான்மை சிங்கள அரசுக்கு அடங்கிப் போவது தான் நாட்டு நலனுக்கு ஒட்டுமொத்த நன்மை விளைவிக்கும் என்கிற கருத்தும் கொண்டு இருக்கிறார்கள், எனெனில் இராஜபக்சே தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம், இன்னும் எத்தனை காலத்திற்கு அளிப்பார் ?
தீவிரவாதத்திற்கு மதம், நிறமில்லை என்று குண்டுவெடிப்பு நடக்கும் பொழுதெல்லாம் எழுதும் இவர்கள் அடுத்த வரியிலேயே இது 'காவி' தீவிரவாதமாக, இந்துத்துவ தீவிரவாதமாக இருக்கும் என்று நிறம், மதம் காட்டுவார்கள், 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள், நம் மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்' என்கிற கூப்பாடு உண்மையிலேயே அப்பாவிகளை அச்சம் கொள்ள வைப்பது, நம்ம சாதிக்காரன் மேல கைவைச்சுட்டாண்டா ஓடிவா அவன் ஊரையே துவம்சம் செய்துவிடுவோம் என்பது போன்ற மதவெறிவை மென்மையாக ஊட்டும் முயற்சியே இத்தகை கூப்பாடுகள்.
இவர்களே எழுதுகிறார்கள், ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதம் எங்கள் மதமே, அது எந்தளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது. அதாவது இஸ்லாமியர் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் வேகமாக வளர இவர்கள் வாழ்கை அங்கு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு, பாதுகாப்பற்ற நாடுகளில் வேகமாக வளர எந்தவகையான வாய்ப்பிருக்கிறது ? அரபு நாடுகளைவிட கவுரவமாகவும் பாதுகாப்பாகவும் இஸ்லாமியர்களை நடத்தும் நாடுகள் எவ்வளவோ இருக்கின்றன. 9/11 க்கு பிறகு எந்த நாடு இஸ்லாமியர்களை வெளியேற்றியுள்ளது ? ஈரான், ஈராக் அல்லாத எண்ணைவளஅரபு நாட்டு எத்தனை இஸ்லாமியருக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விசாவை மறுத்திருக்கின்றனர் ? பாகிஸ்தான்,இந்தியா, பங்களாதேஷ் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு விசா மறுப்பர், அல்லது கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிப்பர், அது இஸ்லாமியர் என்கிற காரணத்திற்காக மட்டும் அல்ல, தலிபான், அல்கொய்தா தொடர்பிருக்கும் வாய்ப்பு என்பதாலும் ஏழை நாட்டினர் என்பதாலும் அவ்வாறு செய்கின்றனர், முஸ்லிம்களுக்கு விசா மறுப்பு என்றால் ஷேக்குகளெல்லாம் அமெரிக்க விரும்பிய போதெல்லாம் சென்றுவருவது எவ்வாறு ? அமெரிக்காவைப் பொருத்த அளவில் காசு இல்லாதவர்கள் அவர்கள் நாட்டினுள் நுழைந்து ஏதும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பது தான், அதை தீவிரவாத சாக்கிட்டு நடத்துகிறார்கள்.
அமெரிக்கா இஸ்லாமியர்களை அவமானப்படுத்துகிறது என்று சவுதியில், ஐக்கிய அரபு எமிரேட்டில் எவரும் பொங்குவது போல் தெரியவில்லை. குஜராத் தவிர்த்து வேறு மாநில அரசுகள் இஸ்லாமியர்கள் மீது எந்த காழ்புணர்வையும் காட்டுவதில்லை. இவர்கள் ஏன் இந்தியாவில் இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லை, உரிமைகள் இல்லை என்று கூவுகிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை, இந்தியாவின் நிலைமை இந்துக்கள் நிறைந்த பகுதியில் இஸ்லாமியர்களால் கடை நடத்த முடியும், ஆனால் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில் இந்துக்கள் நடத்தும் கடைகளுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது ? இஸ்லாமியர்களுக்கு நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்று சொல்லப்படுவது போல் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது ? நாகூரிலோ, கீழக்கரையிலோ இஸ்லாமியர்கள் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீட்டு விட்டிருக்கிறார்கள் ? அவர்கள் அங்கு குடியிருக்க விரும்புவாரக்ளா என்பது வேற விசயம். பர்மா பஜாரில் ஒரு கடை வாடகைக்கு வந்தால் ஒரு இந்துவுக்கு கிடைக்குமா ?
இஸ்லாமியர் நிறைத்திருக்கும் இடங்களில் மாற்று மதத்தினர் வீடுவாங்க விரும்ப மாட்டார்கள், அல்லது இஸ்லாமியர் நிறைந்திருக்கும் இடத்தில் தான் மற்ற இஸ்லாமியர்களுக்கு வீடுவாங்க ஆசைப்படுபவர்கள்,. சென்னை போன்ற நகரங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதி இருக்கிறது, அங்கெல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் இந்துக்களுக்கு வாடகைக்கு விடுகிறார்களா ? எனவே வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிட்டவர்களுக்கு மறுக்க வேண்டும் என்பது எழுதா விதியாகத்தான் இருக்கிறது, இதற்கு யார் மீதும் பழி போட முடியாது. வீடே கிடைக்கவில்லை என்கிற குற்றச் சாட்டுகள் ஓரளவு மறுக்கக் கூடியதும் ஆகும். சென்னையில் வாடகைக்கு குடியிருக்காத இஸ்லாமியர்களே இல்லை என்றால் அவ்வாறு கூறலாம், ஒரு சிலர் இஸ்லாமியருக்கு வீடில்லை என்று சொல்லுவார்கள், பிராமின்ஸ் ஒன்லி என்றெல்லாம் வீடுவாடகைக்கு விடப்படுகிறது. ஒரு சிலருக்கு அவ்வாறு நேர்ந்திருக்கலாம், எல்லோருக்கும் அவ்வாறு என்றால் ? யாருக்குமே உதவும் மனநிலை வாய்த்த மாற்று மத நண்பர்களே இல்லையா ? அல்லது இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லையா என்கிற கேள்வியும் வருகிறது.
தமிழகத்தில் கமல் படத்திற்கு தடைவிலக்கப்பட்ட பிறகு ஏறக்குறைய 20 நாட்கள் சென்றுவிட்ட நிலையில் விஷ்வரூபம் படத்திற்கு மலேசியாவில் தொடர் தடைதான், இத்தனைக்கும் மலாய்காரர்கள் யாரும் கமல் படம் பார்க்கப் போவதில்லை. இவர்களுக்கு அதிகாரம் உள்ள இடங்களில் இவர்களின் நல்லிணக்கம் / நல்லெண்ணம் இவ்வளவு தான். கமல் நட்டம் அடைந்தார், ஐங்கரன் நட்டம் அடைந்துவிட்டது என்று வருந்தியெல்லாம் இதை எழுதவில்லை, இவர்கள் அதிகாரம் பெறும் பொழுது, அதிக்காரம் செலுத்தும் இடங்களில் இவர்கள் தாரள மனப்பான்மையுடன் மற்றும், பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப ஒன்றுமில்லை என்பதற்காகவே குறிப்பிடுகிறேன், இங்கே வெளிப்படையாக அமீரகத்தில்,சவுதியில் தமிழ் இணைய தளங்களை முடக்கிவிடுவோம் என்று முழங்குபவர்களும் செய்து காட்டுபவர்களும் உண்டு. மலேசியாவில் அரபு நாடுகளில் கமல் படத்திற்கும் ஏற்பட்டது அதே நிலைதான். ஐயோ எங்க மதத்தை தாக்கினால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முட்டாளா ? மதம் அவமானப்படுத்துவதை இழிவு படுத்துவதைத்தானே நாங்கள் தடுக்க முயற்சிக்கிறோம் என்று கேட்டால் வருண பேதம், இரட்டை டம்பளர் உள்ளிட்டவை இந்து மதம் சார்ந்த உள் விவாகரம், அதை எதிர்க்க அதிலேயே ஆட்கள் உண்டு, இவர்கள் ஏன் மதம் பரப்ப அதனைப் பற்றிப் பேசவேண்டும் ? இவர்களின் இந்துமத விமரசனம், சிலைவணக்க எதிர்ப்பு உள்ளிட்டவை ஒட்டுமொத்த இந்துகளை அவமானப்படுத்துகிறது என்கிற ஆதங்கம், ஒரு இந்துமதப் பற்றாளருக்கு ஏற்படாதா ?
பொதுப்புத்தி, ஊடக கட்டுமானங்கள் தாண்டி எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்தே வருகிறார்கள். எனக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் உண்டு, குண்டுவெடிக்கும் பொழுதெல்லாம் இவர்கள் குண்டு வைப்பவர்களுக்கு ஆதரவாளர்கள், அதனை ஆமோதிப்பவர்கள் என்றெல்லாம் நினைப்பது இல்லை.
தாடிவைத்தவனெல்லாம் தீவரவாதி இல்லை, ஆனால் (சாமியார்கள் உள்ளிட்ட ) எல்லா தீவிரவாதிகளும் தாடி வைத்திருக்கிறார்கள்
இஸ்லாமியருக்கு இந்தியாவில் அவமானம் என்னும் வஹாபிய கூப்பாடுகளை ஏனைய இஸ்லாமியர்கள் புறக்கணித்தால் மாற்றுமத நண்பர்களுக்கிடையே நல்லுறவை பேண முடியும், இல்லை என்றால் நட்பிற்கு மதம் உண்டு என்கிற நிலைக்கு இட்டுச் செல்லும்.
49 கருத்துகள்:
இதோ இப்ப நீங்க மிரட்டிடீங்களே,
அடுத்து ஒரு ஒப்பாரி பதிவு வரும்.
:-))
சகோ கோவி நல்ல பதிவு,
இந்தியாவில் தீவிரவாதம் என்றால் இந்து,இசுலாமிய,நக்சல் வகைகளில் உண்டு என்பதை அனைவரும் ஏற்கிறோம். இந்த தீவிரவாத குழுக்கள் ஒரு இலக்கு நோக்கி நோக்கி சிறு குழுவாக செயல்படுபவர்கள்.
ஆனால் இந்து,நக்சல் தீவிரவாதம் விமர்சிக்கப்ப்ட்டால் ,அந்த ஆதரவு கட்சி,இயக்கம் மறுப்பார்கள். இவர்கள் இந்துசமூகத்தில் மிக குறைவானவர்கள்.
இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் உலக அளவில் தொடர்புகளைப் பேணிதல்,உதவி பெறுதல் மற்ற இரு குழுக்களை விட சாத்தியம் அதிகம். ஆனால் இவர்களை விமர்சித்தால் முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என சொல்வது போல் எதிர்வினையாற்றும் பதிவர்கள்தான் பிரச்சினை.
உலக் அளவிலேயே அதிக தீவிரவாத இயக்கங்கள் இசுலாமிய பிண்ணனி கொண்டவைகளே!!.
see the list
http://en.wikipedia.org/wiki/List_of_designated_terrorist_organizations
தலிபான்,அல்கொய்தா தீவிரவாதிகள் அல்ல என்றால் பின் யார்தான் தீவிரவாதி?
**
வீடு கிடைக்கவில்லை என்பது பொதுவாக தலித்,சிறுபானமையினருக்கும் உள்ள பிரச்சினைதான்.
தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களை பிற்பட்ட இனத்தவர் போல் மட்டுமே கருதுவதால் ஒதுக்குகிறார்கள் என கூற முடியாது!!.அண்ணன் சுவனப் பிரியன் முஸ்லிம்கள் தமிழகத்தில் முஸ்லிம்கள் மாட்டுக் கரி அதிகம் உண்பதில்லை, த்லித்களே உண்கிறார்கள் என கூறியதை நினைவு படுத்த வேண்டும். இது ஒரு குறியீடு.
இந்து பகுதியில் குடியிர்க்கும் இஸ்லாமியரின்தொகை,இஸ்லாமிய பகுதிகளில் குடியிருக்கும் இந்துக்களை[ பெரும்பாலும் தலித் மக்கள்] விட அதிகமே!! எந்த ஆட்சி வந்தாலும் உண்மையாக ஒடுக்கப்படுபவர் தலித் மக்களே!!தலித் மக்கள் சாதியை மாற்றி சொல்லியே வாடகைக்கு வீடு பிடிக்கும் சூழலே உள்ளது.
நன்றி!!!
கோவி,
ஓவரா சீன் போடுவதெல்லாம் இணையத்தில் மட்டுமே, இயல்பு வாழ்க்கையில் அனைவரும் பொத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள், இணையத்தில் முழங்கும் வகாபிக்களின் பேச்சு அவர்களின் சமூகத்தில் கூட எடுபடுவதில்லை என்பதே உண்மை,அதனால் தான் 24 இயக்கங்கள்,இன்னும் கூட நிறைய இருக்கு.
தவ்கீது ஜமாத்துக்கு ஊருக்கு 10 பேர் தேரினாலே பெருசு, அவர்களுக்கு பொது சுன்னத் ஜமாத்தில் இடமும் இல்லை, கொஞ்சம் கூட்டம் இருக்கும் ஊரில் தனி ஜமாத் பள்ளிவாசல் என அமைத்து இருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்கு கல்லறை இல்லை,எனவே சுன்னத் ஜமாதிடம் சரணடைந்து புதைக்க இடம் கேட்கணும்,எனவே முதலில் அவர்களுக்குள் உடன்படிக்கை உண்டாக்கி கொள்ளட்டும்,அப்புறம் ஊரில் இடம் கொடுக்கலைனு பேசலாம் :-))
///குஜராத் தவிர்த்து வேறு மாநில அரசுகள் இஸ்லாமியர்கள் மீது எந்த காழ்புணர்வையும் காட்டுவதில்லை///
இது கூட எந்தளவுக்கு உண்மையென்று தெரியாது. என்னுடன் வேலை செய்யும் நண்பி குஜ்ராத் முஸ்லீம். அவர் நடைபெற்ற இனக்கலவரத்துக்காக மனம் நொந்தாலும் எல்லா முஸ்லீம்களும் மோடியை வெறுக்கிறார்கள் என்பதற்காக நானும் உண்மையை மறைக்கக் கூடாது, மோடியின் ஆட்சியில் குஜராத் முஸ்லீம்களின் வாழ்க்கைத் தரம் மட்டுமல்ல, கல்வியிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல குஜராத்தி முஸ்லீம்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைத்து, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள். அதை விட குஜராத்துடன் செய்த ஒப்பந்தத்தால் பல குஜராத்தி முஸ்லீம் மாணவர்கள் கனடாவில் மேல்படிப்புக்கு வந்திருக்கிறார்கள், தன்னுடைய பேஸ்மன்ரை(கீழ்மட்டவீட்டை)க் கூட இரண்டு குஜராத் முஸ்லீம் மாணவர்களுக்கு வாடகைக்கு அமர்த்தியிருப்பதாகப் பலமுறை கூறியிருக்கிறார். எனக்கு மோடியின் மீது விருப்புமில்லை,வெறுப்புமில்லை. தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் பற்றி நான் அக்கறைப்படுவதில்லை.
//பார்பனியத்தை சாடுபவர்களுக்கு பார்பனர் நண்பராக இருக்க முடியாது//
மன்னிக்கவும், அப்படியெல்லாம் இல்லை. பெரியாரும் ராஜாஜியும் கூடத்தான் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் பார்ப்பனர்களிடம் தங்களுடைய வாரிசுகளுக்குப் பெண் எடுத்து அந்தப் பெண்களின் மூலம் பேரன், பேர்த்திகளைப் பெற்றுக் கொண்டு, திராவிடத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையே இரத்த உறவுகளை வளர்த்துக் கொண்டு, தொண்டர்களிடம் மட்டும் பார்ப்பனீயத்தை எதிர்க்கவும், பார்ப்பான்களை வெறுக்கவும் கூறும் கபடநாடகம் கண்டிக்கப்படவேண்டும் என்பது தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த சிலரின் கருத்தாகும்
"இவர்களே எழுதுகிறார்கள், ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதம் எங்கள் மதமே, அது எந்தளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது"
உண்மை.அதாவது நீங்கள் சொல்வது.கிறிஸ்துவம் அவ்வளவாக ஆராவரமாக கொண்டாடப்படாத இன்றைய காலத்திலேயே கிருச்துவத்துக்கும்(முதல் இடம்)இஸ்லாமுக்கும்(இரண்டாம் இடம்)உள்ள இடைவெளி ஒரு பில்லியனை விட அதிகம். இஸ்லாம் வேகமாக பரவி வருவதாக இப்படி மணி அடிப்பது பீஜே ரகமான விளம்பரமே ஒழியே வேறொன்றுமில்லை. சொல்லப்போனால் ஐரோப்பாவில் இஸ்லாமைவிட புத்தம் ஹிந்து கிருஸ்துவத்தின் பென்டகாஸ்டல் மதங்கள் வேகமாக பரவிவருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இஸ்லாமோபோபியா ஐரோப்பாவை ஆக்கிரமித்துள்ளதால் இந்த கூட்டத்திற்கு ஒரு ஸ்டாப் லைன் வந்துவிட்டதாக எடுத்துகொள்ளலாம். இஸ்லாமியர்களின் அரசியல் மத தீவிரவாதம் ஜன நாயக.தேச விரோத போக்கு எக்குதப்பாக வெளிவந்து விட்டதால் இவர்களை பற்றிய அச்சமே இப்போது அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் கூட இன்றைக்கு பல கருப்பு கூடாரங்கள் சாலையில் நம்மை கடந்து செல்வதை நாம் பார்க்கலாம். இது போன்ற மத அடையாளங்கள் அதிகரிப்பது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல.
//இஸ்லாமியருக்கு இந்தியாவில் அவமானம் என்னும் வஹாபிய கூப்பாடுகளை ஏனைய இஸ்லாமியர்கள் புறக்கணித்தால் மாற்றுமத நண்பர்களுக்கிடையே நல்லுறவை பேண முடியும், இல்லை என்றால் நட்பிற்கு மதம் உண்டு என்கிற நிலைக்கு இட்டுச் செல்லும்.//
மிக மோசமாக மேம்போக்கான பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை.
அவமானம் என்பதைத் தாண்டி, இங்கு இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்று கட்டமைக்கப்பட்ட பொதுக்கருத்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களின் வாழ்வை காவு வாங்கி கொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?
நீங்கள் அவமானப்படுத்துகிறீர்களோ படுத்தவில்லையோ அல்லது உங்களுக்கு எத்தனை முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது பற்றி யாரும் கவலை பட போவதில்லை.
ஒரு இடத்தில் குண்டு வெடித்தாலே ( அஜ்மீர்,சம்ஜவ்தா,மெக்கா மஸ்ஜித்,நாண்டெட், தானே இவைகளிலும் இது நடந்தது ) அது இஸ்லாமியர்கள் தான் என்று அடுத்த நொடியில், பத்து இஸ்லாமியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறது இந்திய அரசு.
பிறகு அசீமானந்தாவோ, பிரக்யா சிங் தாகூரோ நாங்கள் தான் என ஒத்துக் கொண்ட பிறகு அந்த அப்பாவிகள் 6 மாதங்கள் கடும் சித்ரவதைகளுக்கு பின் விடுதலை செய்யப்படுகின்றனர். வெளியே வந்ததும் வீடு கிடைப்பதில்லை. வேலை கிடைப்பதில்லை.சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவதும் தொடர்கிறது.
14 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலையான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கான நீதியை யார் பெற்றுத் தரப்போகிறார்கள்.
கஷ்மீரில் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்படுவது பற்றி கவலையில்லை.
குஜராத்தில் நடப்பது குறித்து கவலையில்லை. வடகிழக்கில் என்ன நடப்பது குறித்து கவலையில்லை. உங்கள் கவலையெல்லாம் எங்கு இருக்கிறது பாருங்கள்.
Racial profiling போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட புரிந்து கொள்ளாமல், மேம்போக்காக "நான் என் நண்பர்களை இப்படி பார்க்கிறேன். அதனால் இது இப்படித் தான் இருக்கும்" என்று நண்டு வளைக்குள் இருந்து கொண்டு கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாவம் வலையுலகம் !!!!!
//14 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலையான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கான நீதியை யார் பெற்றுத் தரப்போகிறார்கள்.//
இதற்கும் சேர்த்து குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும் சேர்த்து குண்டு வைத்த தீவிரவாதிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நம் மதத்தை சார்ந்த அப்பாவிகள் தண்டனை பெறுகிறார்கள் என்று அவர் ஏன் நினைப்பதே இல்லை ? அப்படி நினைக்காதவர்களுக்கெல்லாம் உங்களைப் போன்றோர் ஞாயம் பேசுவதும் எங்ஙனம் ?
//இதற்கும் சேர்த்து குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும் சேர்த்து குண்டு வைத்த தீவிரவாதிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.//
அப்படியென்றால் ஆர்.எஸ்.எஸ் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலே நான் சொன்ன அனைத்து குண்டு வெடிப்புகளும் இந்து தீவிரவாதிகளின் கைவேலை.
அபினவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்த சுவாமி அசிமானந்தா,ப்ரக்யா சிங் தாகூர்
போன்ற பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.
//நம் மதத்தை சார்ந்த அப்பாவிகள் தண்டனை பெறுகிறார்கள் என்று அவர் ஏன் நினைப்பதே இல்லை ? அப்படி நினைக்காதவர்களுக்கெல்லாம் உங்களைப் போன்றோர் ஞாயம் பேசுவதும் எங்ஙனம் ?//
நிச்சயம் அவர்களுக்கான நியாயத்தை நான் பேச இங்கே வரவில்லை.தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதை கண்டிக்கவே செய்கிறோம்.
காரணம் உயிர் இழப்பும் கைதுகளும் அப்பாவி பொது மக்களுக்குத் தான்.
தவிர, இந்த போலிக் குற்றச்சாட்டுகளும் கைதுகளும் தனிமைப்படுத்துதலுக்கும்
இந்திய அரசின் துணையோடு ஊடகங்கள் கட்டமைத்த பொதுப்புத்தி தான் காரணம் என்பதை தான் சொல்ல வருகிறேன்.
இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அவ்வப்போது கூச்சலிடும் ஊடகங்கள், ஒரு போதும் இந்து தீவிரவாதம் குறித்து கேள்வி எழுப்புவதில்லை.
அடிப்படையில் இந்துத்வ மனசாட்சியே அரசாள்கிறது. இஸ்லாமிய வெறுப்பு என்று வரும் போது காங்கிரசு என்ன ? பிஜேபி என்ன ? வலைப்பதிவர்கள் என்ன ? எல்லாம் எங்களுக்கு ஒன்று தான்.
பை தி வே, பல நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு கருத்துக் களத்தில் சந்திப்பது மகிழ்ச்சி கோவி சார். எத்தனை நாட்களாகிறது நாம் சண்டை போட்டு? நலமாய் இருக்கிறீர்களா ?
@ அ.மு.செய்யது$,
கசாப்பும் பின் லேடனும் பயங்கரவாதிகளா இல்லையா?
@ அ.மு.செய்யது$,
கசாப்பும் பின் லேடனும் பயங்கரவாதிகளா இல்லையா? //
பயங்கரவாதிகள் தான்.
//இஸ்லாமிய வெறுப்பு என்று வரும் போது // அன்பு சகோதரா, தமிழ் இணைய வெளியில் இந்துக்களை தூற்றுவது எந்த கோமாளிகள்? தான் ஒருவன் மீது கல்லெறிந்து விட்டு, பின் அவன் என்னை அடிக்கிறான் என இணைய புனிதப்போர் கோமாளிகள் கூவுவது எங்கனம் தகும்? தமிழ் பேசும் உங்களின் மூதாதையர் கண்டிப்பாக சிலை வணக்கம் செய்தவர் தானே? இஸ்லாத்தில் எல்லாமே சரியாக இருக்கிறதா? ஏன் தன் முதுகை விடுத்து அடுத்தவரின் முதுகின் அழுக்கை முகர்வதிலேயே என்ன ஆனந்தம்? நீங்கள் எவரனும் அவர்களை கண்டிப்பதுண்டா? ஈழத்தமிழர்களை மனோரீதியாக துன்பபடுத்துவதில் என்ன அத்துணை ஆனந்தம்? சிங்களம் தமிழனை அடித்தால் அவனை பொறுத்து போக அறிவுரை வழங்கும் கோமாளிகள் தமிழ் முஸ்லிம்களை அடிக்கும் போது மட்டும் பொங்கி எழுவதன் காரணி என்ன? இப்படி பல "என்ன" இருக்கின்றன. தான் மனிதனாக நடப்பின் மனிதனாகவே மனிதனால் மதிக்கப்படுவான்.
சகோதரர்களே,
மூமின்களோடு விவாதம் செய்ய மிகவும் விவரமாக செய்ய வேண்டும். குரான் ஹதித் படிக்காமல் மூமின்களின் [விதண்டா]வாதங்களை புரிய முடியாது.
நாட்டின் சட்ட திட்டங்களின் மேல், அமைதி வழி போராட்டம் மீது நம்பிக்கை அற்றோர் சிலர் சேர்ந்தால் தீவிரவாதக் குழு உருவாகி விடும். அவர்கள் செய்யும் நோக்கம் மதம் சார்ந்ததாக் இருப்பின் மதத்தீவிரவாதிகளே!!
இந்து நாடு அமைக்க ,நாட்டின் சட்டத்ட்டங்களுக்கு மாறாக போராடினால் இந்து தீவிரவாதி.
ஷரியா மீதான இஸ்லாமிய நாடு அமைக்க ,நாட்டின் சட்டத்ட்டங்களுக்கு மாறாக போராடினால் இந்து தீவிரவாதி.
ஒரு இந்து சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டால், அவன் குடும்பம்,இயக்கம் முடிந்த்வரை நீதிமன்றத்த்ஹில் வழ்க்கு நடத்தி,தீர்ப்பை ஏற்பார்&விமர்சிப்பார். செய்தியே அதிகம் வெளிவராது.
ஒரு மூமின் கைது செய்யப்பட்டால், அனைத்து மூமின்களும் ஆதாரம் என்ன, அப்படி இப்படி என பெரிய சவுண்டு விடுவதும் வழக்கமே!!. நிரபராதி என்றால் விடுவிக்கப்படுவான்.அதற்கான சட்டமுறைகளை யாரும் எடுக்கலாம்.முஸ்லிம்களை சந்தேகத்தில் கைது செய்யவே கூடாது என்பது விதண்டாவாதம்.
[மத] தீவிரவாதம் என்பது குண்டு வைப்பது மட்டும் அல்ல,பிற மதங்களின் மனித உரிமைகளை மறுப்பதும் ஆகும்.
பாருங்கள் சவுதியில் பிற மத கடவுள்களை வணங்கினால் குற்றம், இஸ்லாமில் இருந்து மதம் மாறினால் தண்டனை.
இது எந்த முஸ்லீமுக்கும் தவறாக தெரியாது!!. அந்த நாட்டு சட்டம் அப்படி,பிடிக்கலை என்றால் போகாதே என்பார்!!
இப்படி மனித உரிமை மீறும், பாரபட்சமான சட்டம் உலகம் முழுதும் கொண்டு வர அமைதி வழியில் செய்தாலும் தீவிரவாதி என சொல்லலாமா?!!
ஆம்/இல்லை
Thank you
// அ.மு.செய்யது$,
கசாப்பும் பின் லேடனும் பயங்கரவாதிகளா இல்லையா? //
பயங்கரவாதிகள் தான்.//
இரண்டு கேள்விகள்;
1. இந்த இரு பயங்கரவாதிகளும் இஸ்லாமியரா?
2. இவர்கள் பயங்கரவாதிகளாக ஆவதற்கு அவர்களது மத நம்பிக்கைகள் தானே காரணம்?
//
// அ.மு.செய்யது$,
கசாப்பும் பின் லேடனும் பயங்கரவாதிகளா இல்லையா? //
பயங்கரவாதிகள் தான்.//
இரண்டு கேள்விகள்;
1. இந்த இரு பயங்கரவாதிகளும் இஸ்லாமியரா?
2. இவர்கள் பயங்கரவாதிகளாக ஆவதற்கு அவர்களது மத நம்பிக்கைகள் தானே காரணம்? //
மத நம்பிக்கைகளை வைத்து அவர்களுக்கு செய்யப்பட்ட மூளைச் சலவை தான் காரணம்.
இங்கே குறிப்பிட வேண்டியது கசாப் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு துப்பாக்கி தாரி.
ஆனால் ஒசாமா அப்படியில்லை. ஒசாமா சோவியத் யூனியனை எதிர்க்க அமெரிக்காவில் அமெரிக்காவாலே, திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஒரு பயங்கரவாதி.
உலகின் பல்வேறு தீவிரவாத இயக்கங்களை வளர்த்தெடுத்தது, நிதி ஆதாரங்களைச் செய்தது, ஊக்குவித்தது அனைத்தும் அமெரிக்கா தான்.
அப்படி உருவாக்கப்பட்ட இயக்கங்கள், மத அடிப்படை வாதங்களை அப்பாவி இளைஞர்கள் மத்தியில் திரித்து, அவர்களை மூளைச் சலவை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
ஆனால் இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
அதைப்பற்றி பேச வேண்டுமானால் பின்னூட்டங்கள் போதாது.
இந்த இரு பயங்கரவாதிகளும் இஸ்லாமியரா ?
இவர்கள் இஸ்லாமியர்கள் தான். இஸ்லாத்தை தவறாக கையிலெடுத்த இஸ்லாமியர்கள்.
தவிர உங்கள் கேள்வியின் உள்நோக்கம் புரிகிறது.
இந்து தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளவே விருப்பப் படுகின்றனர்.
நான் சொன்ன வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியவர்கள், இந்து சனாதன தர்மத்தை பறை சாற்றுவதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக பெருமையாக பேட்டியளிக்கின்றனர்.
பாபு பஜ்ரங்கியிலிருந்து அசீமானந்தா வரை இது நடந்திருக்கிறது.
குஜராத்தில் 200 முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளையும் எரித்துக் கொன்ற பாபு பஜ்ரங்கியின் வீடியோ தெஹல்கா இணையத்தில் காணக் கிடைக்கிறது. பாருங்கள்.
இவர்களின் பயங்கரவாதத்திற்கும் இந்து சமயம் தான் காரணம் தான் என்று நான் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா தருமி ?
// அன்பு சகோதரா, தமிழ் இணைய வெளியில் இந்துக்களை தூற்றுவது எந்த கோமாளிகள்? தான் ஒருவன் மீது கல்லெறிந்து விட்டு, பின் அவன் என்னை அடிக்கிறான் என இணைய புனிதப்போர் கோமாளிகள் கூவுவது எங்கனம் தகும்? //
சதீஷ் , இது இருபுறமும் நடக்கும் விஷயங்கள் தானே... தவிர இந்த விவாதத்திற்கும் நீங்கள் கூறும் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.
//சிங்களம் தமிழனை அடித்தால் அவனை பொறுத்து போக அறிவுரை வழங்கும் கோமாளிகள் தமிழ் முஸ்லிம்களை அடிக்கும் போது மட்டும் பொங்கி எழுவதன் காரணி என்ன? //
இங்கே தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக, சிங்களவனுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை இன்றளவும் இஸ்லாமிய இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த போராட்டங்களில் நானும் பங்கெடுத்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.
இதையெல்லாம் முழு சோற்றில் மறைத்து விட்டு, ஏதோ ஒரு வலைப்பதிவர் பேசுகிறார் என்பதற்காக ஒரு சமுதாயத்தையே கேள்விக்குள்ளாக்காதீர்கள்...
// தமிழ் பேசும் உங்களின் மூதாதையர் கண்டிப்பாக சிலை வணக்கம் செய்தவர் தானே? //
இருந்து விட்டு போகட்டும். என்ன ஒரு வறட்டு வாதம்.
சம்பந்தமேயில்லாமல் எதையாவது இடைச் செருகி, விவாதத்திற்கும் சற்றும் தொடர்பில்லாமல்....
அட போங்கய்யா ...
//நான் சொன்ன வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியவர்கள், இந்து சனாதன தர்மத்தை பறை சாற்றுவதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக பெருமையாக பேட்டியளிக்கின்றனர்//
இருக்கலாம், அதையெல்லாம் எத்தனை இந்துக்கள் ஆதரவு தெரித்துள்ளார்கள் ?
தவிர இந்துவெறியர்கள் குறித்த இந்துக்களின் விமர்சனமும் வெளிப்படையானது, காவிக் கும்பல், இந்துத்துவாக்கள் என்ற மதம் பெயரில் தான் நாங்களும் விமர்சனம் செய்கிறோம், இல்லை என்று உங்களால் மறுக்க முடியும் ?
மற்ற மதத்தினர் உங்கள் மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்துபவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று விமர்சிப்பதை நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டாம், ஆனால் அது போன்ற விமர்சனங்கள் உங்கள் சமூகத்திற்குள் ஏன் ஏற்படாமல் மதப் புத்தகத்தில் ஊக்குவிக்கவில்லை, அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை என்றெல்லாம் பூசி மொழுகுகிறீர்கள்.
ஒருவீட்டில் வளர்பவன் தெருப்பொறுக்கியாக இருந்து அவனை பெற்றோர் விட்டுக் கொடுக்காமல் சேர்க்கை சரியில்லை அதனால் தான் அவன் அப்படி நடக்கிறான், அவன் யாருடன் சேருகிறானோ அவனைப் போய் கண்டியுங்கள் என்று கூறினால்ல் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வெளியே இருந்து வேடிக்கைபார்ப்பவர்கள் அவங்க அப்பன் ஆத்தாவை திடுவார்களா மாட்டார்களா ? பையன் பண்ணும் தப்புக்கு அப்பா அம்மாவையே திட்டுறிங்கன்னு ஞாயம் பேசனுமா ?
//அப்படியென்றால் ஆர்.எஸ்.எஸ் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலே நான் சொன்ன அனைத்து குண்டு வெடிப்புகளும் இந்து தீவிரவாதிகளின் கைவேலை.
அபினவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்த சுவாமி அசிமானந்தா,ப்ரக்யா சிங் தாகூர்
போன்ற பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள். //
அவர்கள் குண்டு வைக்கவில்லை என்றோ, அவர்களை தண்டனைக்கு தப்ப வைக்க வேண்டும் என்றோ எந்த இந்துக்களுக்கும் மனம் புழுங்கவில்லை, தவிர குண்டு வைத்த இவர்களெல்லாம் இந்துக்கள் அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று அரசு முயற்சி செய்திருந்தால் இதில் துப்பறிந்திருப்பதற்கோ, அவர்களை வெளிச்சம் போட்டிருக்கவோ முடியாது.
இவையெல்லாம் சிறுபான்மையினரைத் தாக்கும் பிற நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகளில் வாய்ப்புள்ளதா என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ? தீவிரவாதிகளை ஊக்கப்படுத்திக் கொண்டே அவர்களை அமெரிக்காவின் கண்களில் இருந்து மறைக்கப்பாடுபடும் பாகிஸ்தான் பற்றி நான் சொல்லித் தெரிய ஒன்றும் இல்லை.
மலேக்கானோ, கோவா குண்டு வைத்தவன் இந்து என்றாலும் பிடிபடுகிறான், சட்டத்திற்கு தப்புவதில்லை
செய்யது
இஸ்லாமியத் தீவிரவாதம் உலகளாவிய ஒன்று. அதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இந்துத் தீவிரவாதம் பற்றி நாலு வரிகள் எழுதிவிடுவீர்கள்.
//ஒசாமா சோவியத் யூனியனை எதிர்க்க அமெரிக்காவில் அமெரிக்காவாலே, திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஒரு பயங்கரவாதி.//
இந்த தீவிரவாதி இறந்ததற்கு எதற்கு நீங்கள் பூசை புனஸ்காரம் இங்கே நடத்தினீர்கள்?
//மத அடிப்படை வாதங்களை அப்பாவி இளைஞர்கள் மத்தியில் திரித்து, அவர்களை மூளைச் சலவை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.//
உண்மை தான்.
ஆனால் திரித்து என்று நீங்கள் சேர்த்தது மட்டுமே தவறு. எந்தக் கடவுளாவது உன் பகைவனை வெட்டு, குத்து, கொல்லு என்று சொல்லுமா என்று எனக்குத் தெரியவில்லை. கேட்டால் போருக்கு முன் உங்கள் அல்லா சொன்னதாகச் சொல்லி விடுவீர்கள்.1400 ஆண்டுகளாக இதே போல் ஒரே மாதிரி சொல்வதற்கு என் வாழ்த்து. ஆனால் கடவுளே சண்டை போடு, குத்து வெட்டு என்று சொல்வது எனக்கு பெரிய வேடிக்கையாக இருக்கிறது. உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது. அப்படியானால் அதைப் பின்பற்றுவோரிடம் இல்லாமல் இருக்காதல்லவா?
இதைப் பற்றியும் நிறைய சான்றுகளோடு எழுதி விட்டேன்.
//அவர்கள் குண்டு வைக்கவில்லை என்றோ, அவர்களை தண்டனைக்கு தப்ப வைக்க வேண்டும் என்றோ எந்த இந்துக்களுக்கும் மனம் புழுங்கவில்லை,//
இதைச் சொல்ல உங்களுக்கு நா கூசவில்லையா ?
ஒட்டுமொத்த பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அனைத்து இந்து சங்க பரிவாரங்களுமே மனம் புழுங்கியதோடல்லாமல், இன்று வரை சுஷில் ஷிண்டே வீடு வரை சென்று போராட்டம் வேறு நடத்தி வருகிறார்களே...இதெல்லாம் உங்கள் கண்ணில் படாதோ அல்லது பார்க்காத மாதிரி எங்கு இஸ்லாமியர்கள் குறித்த செய்தி வருகிறது என்று பார்ப்பீர்களோ ?
//ஒருவீட்டில் வளர்பவன் தெருப்பொறுக்கியாக இருந்து அவனை பெற்றோர் விட்டுக் கொடுக்காமல் சேர்க்கை சரியில்லை அதனால் தான் அவன் அப்படி நடக்கிறான், அவன் யாருடன் சேருகிறானோ அவனைப் போய் கண்டியுங்கள் என்று கூறினால்ல் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வெளியே இருந்து வேடிக்கைபார்ப்பவர்கள் அவங்க அப்பன் ஆத்தாவை திடுவார்களா மாட்டார்களா ? பையன் பண்ணும் தப்புக்கு அப்பா அம்மாவையே திட்டுறிங்கன்னு ஞாயம் பேசனுமா ? //
நீங்கள் யாரை வேண்டுமானாலும் தெருப் பொறுக்கி என்று விமர்சனம் செய்யலாம். முஸ்லிமாக பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்த வசைச் சொற்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் போல..
//இந்த தீவிரவாதி இறந்ததற்கு எதற்கு நீங்கள் பூசை புனஸ்காரம் இங்கே நடத்தினீர்கள்?
//மத அடிப்படை வாதங்களை அப்பாவி இளைஞர்கள் மத்தியில் திரித்து, அவர்களை மூளைச் சலவை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.//
ஐயா இந்த விமர்சனத்தை என்னிடம் வைக்காதீர்கள். இந்த அடிப்படை வாதங்களை நான் ஆதரிப்பவன் அல்ல.
//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது.//
புரிகிறது. நீங்கள் நேரடியாக விஷயத்திற்கு வருகிறீர்கள். அண்ணன் கோவி பூசி மழுப்புகிறார். அவ்வளவு தான் வேறுபாடு.
ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல
இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.
நீங்கள் ஏன் கொஞ்சம் வேத உபநிஷடதங்களை புரட்டிப் பார்க்கக் கூடாது.
'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).
அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).
இவைகளெல்லாம் வன்முறை இல்லையா ? மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் சமூக அநீதியாக தெரியவில்லையா ? இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய சமூக வன்முறையாக உங்களுக்கு தெரியவில்லையா தருமி ?
இடுப்பளவு சேற்றில் நின்று கொண்டிருப்பதே தெரியாமல், அடுத்தவர்களை
பற்றி பேசுகிறீர்கள். ரொம்ப நல்லது.
//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது. அப்படியானால் அதைப் பின்பற்றுவோரிடம் இல்லாமல் இருக்காதல்லவா?//
மிக ஆபத்தான கருத்தியலை முன் வைக்கிறீர்கள் தருமி. இஸ்லாமியர்கள் எல்லோருமே வன்முறையாளர்கள் தான் என்ற மிக மோசமான ஆதிக்க அரசியலை நிறுவுகிறீர்கள்.
உங்கள் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் வயதில் பெரியவர் என்றே நினைக்கிறேன். உங்களிடமிருந்து இப்படியான கருத்துகளை எதிர்நோக்கி நான் இங்கு நிச்சயம் வரவில்லை.
ஒருவர் தெருப் பொறுக்கி என்கிறார். மற்றொருவர் அனைவருமே வன்முறையாளர்கள் என்கிறார்.
இது தான் இந்துத்வ மனசாட்சி என்று நான் மேலே சொன்னது.
@அ.மு.செய்யது$,
"'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378)."
நீங்கள் தவறான கருத்தை கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் மனு சாஸ்த்திரத்தில் உள்ளன. உபநிஷத்தில் இல்லை.
உபநிஷதம் வேறு மனு நீதி வேறு. உபநிஷத்தில் வருண பாகுபாடுகள் தொடர்பாக ஒன்றும் இல்லை.
ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத:
கஸ்யஸ்வித் தனம்.
மாறுகிற இயல்புடைய இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் சூழப்பட்டவை. அந்தத் தியாக மனப்பான்மையுடன் வாழ்க்கையை அனுபவிப்பாயாக. செல்வம் யாருடையது? அதற்காக நீ ஆசைப்படாதே.
உலக வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஓடிப்போய், தனிமையில் வாழுமாறு இந்த மந்த்ரம் கூறவில்லை. ‘வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து, உன் வாழ்க்கையை நடத்து’ என்றுதான் சொல்கிறது. ‘எல்லாவற்றிலும் இறைவன்தான் நிரம்பியிருக்கிறான்; அவனால்தான் எல்லாமே சூழப்பட்டிருக்கின்றன’ என்கிற எண்ணம் வந்துவிட்டால், அதன் பிறகு விரோதங்கள் ஏது? மத, ஜாதி, பகைமைகள் ஏது? உன்னிலும் இறைவன் இருக்கிறான். என்னிலும் இருக்கிறான் என்ற சமப் பார்வை கிட்டிவிட்டால், அதன் பிறகு துன்பம் இல்லை. வாழ்க்கையை அப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த மந்த்ரம்.
எல்லாச் செல்வங்களும் இறைவனுடையவை. அவன்தான் எல்லாவற்றிலும் நிரம்பி யிருக்கிறான். அப்படி இருக்க, என்னுடையது என்ற எண்ணம் கொண்டு துன்பத்தில் உழல்வானேன்? ஏனென்றால், என்னுடையது என்கிற எண்ணத்தினால்தான் பிரச்னைகள் வருகின்றன; கவலைகள் தோன்றுகின்றன; ஆசைகள் வளருகின்றன. சமுத்திரத்தைப் பார்க்கிறோம். அது என்னுடையது என்ற நினைப்பு மனிதனுக்கு வருவதில்லை. அவன் அதன் அற்புதக் காட்சியை அனுபவித்து விட்டுப் போகிறான். மழை பொழிகிறது. ‘இந்த மழை என்னுடையது’ என்ற எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அதனால் அவன் அந்த இன்பத்தை நுகர்கிறான். இதிலேயே ‘என்னுடையது’ என்ற எண்ணம் வந்துவிட்டால், அடுத்த வீட்டுக்காரனுக்கு மழை பொழியக் கூடாது என்கிற துவேஷ எண்ணம் வரும். மழை நீர் அனைத்தையும் சேகரித்து வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற பேராசை கூட வரலாம்.
எல்லாருக்கும் பொழியும் மழை என்றால், அது ஈச்வரனின் வடிவம். அதை நடைமுறையிலேயே, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட உணர்வதால், அதில் உன்னுடையது, என்னுடையது என்ற பிரச்னை வருவதில்லை. இதே போன்ற எண்ணம், ஒரு மனிதனுக்கு மனித வளங்கள் எல்லாவற்றையும் பற்றி ஏற்பட்டுவிட்டால், அதன் பின்னர் அவனுக்கு நிம்மதிதான்.
இதற்கு அடுத்த மந்திரம் இப்படிச் சொல்கிறது:
கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டு காலம் வாழ விரும்புவாயாக. இப்படிப்பட்ட மனிதனாக நீ வாழ்ந்தால், உன் செயல்கள் உன்னைப் பற்றிக் கொள்வதில்லை. இதைத் தவிர, (இந்நிலையை அடைவதற்கு) வேறு வழி கிடையாது.
நமக்குரிய வேலைகள் எதையும் செய்யாமல், எல்லாக் கர்மங்களையும் துறந்து வாழ்வதுதான் சிறந்தது என்று இந்த மந்த்ரம் சொல்லவில்லை. ‘உன்னுடைய பணிகளை நீ செய், ஆனால் அவற்றை உன் கடமைகளாக நினைத்து நிறைவேற்று. மனத்தில் பேராசை கொண்டு, இதைச் செய்வதால் என்ன பலன் கிட்டும் என்பதை மட்டுமே கவனத்தில் வைத்து நீ காரியத்தைச் செய்தால், அந்தச் செயல் உன்னைப் பற்றிக்கொள்ளும். அதன் பலன்களை நீ அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் எல்லாம் ஈசனுடையவை என்ற நினைப்புடன், உன்னுடைய கடமைகளை நீ செய்து கொண்டு போனால், அவற்றின் பலன்கள் உன்னைக் கட்டுப்படுத்தாது’ உபநிஷத்துகளின் சாரமாகிய பகவத்கீதையும் இதைத்தான் உபதேசம் செய்கிறது.
//இந்த அடிப்படை வாதங்களை நான் ஆதரிப்பவன் அல்ல. //
மிக்க மகிழ்ச்சி. ஏனென்னில் நானொரு “அடிப்படைவாதி” என்று tag line-ல் போடும் பதிவர்களைப் பார்த்தே பழகிப்போச்சு. நீங்கள் அப்படியில்லாதவராக இருப்பதறிந்து மகிழ்ச்சி.
---------------------
//ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.//
நான் சொல்லாத வார்த்தைகளை ஏன் நீங்களாகவே கற்பித்துக் கொள்கிறீர்கள்!
-----------------------------------
//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது//. //மிக ஆபத்தான கருத்தியலை முன் வைக்கிறீர்கள் தருமி...//
மிக மிகச் சரி.. I always like to hit the nail right on its head! உள்ளதை, உங்கள் மத்த்தில் இருப்பதை எடுத்துச் சொல்கிறேன்.
என் கேள்விக்குப் பதிலாக, “எங்கள் மதத்தில் வன்முறை இல்லை’ என்று நீங்கள் சொல்லியீருந்தால் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் உங்களால் சொல்ல முடியவில்லை அல்லவா? மற்ற மதங்களைக் குறை சொல்வதால் உங்கள் மதம் சரி என்பதாகாதே! எந்தக் கடவுளும் போர் செய் என்று சொல்வதே வன்முறை. (ஏன் கீதை என்ன சொல்கிறது என்று நீங்கள் மறு கேள்வி கேட்கலாம்!!) ஆனால் போர் செய்; அதன் பின் தோல்வியுற்றவனைக் கொல்; அவன் பெண்டு பிள்ளைகளை உன் அடிமைகளாக்கு; பெண்களை குழந்தைகள் உண்டாகிவிடுமோ என்ற பயமில்லாமல் உன் இஷ்ட்த்திற்குப் புணர்ந்து கொள் ...
என்னே தத்துவங்கள்...! இதெல்லாம் ஒரு “கடவுள்” சொன்னதாகச் சொல்லும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது, செய்யது!
----------------------
//மற்றொருவர் அனைவருமே வன்முறையாளர்கள் என்கிறார். //
பிற மதத்தினரையும் மனிதராகப் பேணு என்றா உங்கள் மதம் சொல்லித் தருகிறது? ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்திக் கொண்டு வெட்டு; கொல். அது உன் கடமை என்று தானே உங்கள் மதம் கற்பிக்கிறது. கேட்டால் இது போருக்கு முன் சொன்னது என்பீர்கள். கடவுளுக்கும் அவன் தூதனுக்கும் போர் புரிவதா வேலை!!
ஏற்கெனவே சொன்னது போல் இதைப் பற்றி நிறைய எழுதியுமுள்ளேன்.
ஆனாலும் இதில் ஒரே ஒரு வித்தியாசம். இந்தக் கடும் – cruel - கோட்பாடுகள் எதுவும் எனக்கு பதிவராகும் முன் தெரியாது. நான் வளர்ந்ததோ -மதுரை, தெற்கு வாசல்; இஸ்லாமியர் நிறைந்த பகுதி - இஸ்லாமியரின் நடுவில். ஆனால் பதிவுலகம் வரும் முன் எனக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பற்றி ஏதும் - வஹாபிகள் பற்றி ஏதும் - தெரியாது. இஸ்லாமியர்கள் எனக்கு எந்த வித்தியாசம் இல்லாத சக மனிதர்களாகவே இருந்தார்கள். அவர்களுடனான உறவு எந்த நெருடல் இல்லாமல் இருந்தது. ஆனால் பதிவுலகம் வந்த பின் ... அல்லா ...! எல்லாம் தலைகீழ்.
வஹாபிகளின் சத்தம் மிக அதிகம். தங்களை அடிப்படைவாதிகள் என்று பெருமையோடு சொல்லும் கூட்டம். பயமாகப் போயிற்று! மற்ற இஸ்லாமியர்களின் சத்தம் வெளியே தெரிவதேயில்லை. இது இஸ்லாமிற்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். பி.ஜே.மாதிரி ஆட்களைத் தலைமையாகக் கொண்டு வஹாபிகள் சாதிப்பது ஒன்று மட்டுமே ... தங்களுக்கென்று ஒரு தனி identification தேடிக்கொண்டு, எல்லோரையும் பகைத்து ... உறவுகளைச் சிதைத்து ..ஜிகாதை வளர்த்து ... என்னமோ போங்கள், செய்யது. இது யாருக்கும் நல்லதல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் கோட்பாடுகளைப் பார்த்து புரிந்து விட்ட்து. இப்படி இல்லாத மித இஸ்லாமியர் இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் ...
----------------------
//மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் ...// இதைப் பற்றி இங்கில்லாமல தனியாக இந்து மதம் பற்றிப் பேசும்போது அங்கு பேசுவது நலமே.
---------------------
நீண்ட பின்னூட்ட்த்திற்கு கோவி மன்னிக்கணும்.....
ஒரு சிறு திருத்தம்:
இது யாருக்கும் நல்லதல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
இப்படி இல்லாத மித இஸ்லாமியர் இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் ...
செய்யது, //தவிர இந்த விவாதத்திற்கும் நீங்கள் கூறும் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.// //சம்பந்தமேயில்லாமல் எதையாவது இடைச் செருகி, விவாதத்திற்கும் சற்றும் தொடர்பில்லாமல்// உங்களின் புரிந்துகொள்ளமுடியாமைக்கு (அல்லது முயற்சிக்காமைக்கு) ஆழ்ந்த வருத்தங்கள். நான் கூறிய அனைத்துமே உங்கள் சகாக்கள் ஓவரா சீன் போடுவதை பற்றி தான். உங்களை போல காதை பொத்திக்கொண்டு கேக்கவில்லை என்று நடிக்கவில்லை... அட போங்க............
செய்யது ...
செய்யது ....
செய்யது ...
ஒன்றுமில்லை. மூன்று முறை அழைத்தேன்.
உள்ளேன் ஐயா......
// அல்லா ...! எல்லாம் தலைகீழ்.
வஹாபிகளின் சத்தம் மிக அதிகம். தங்களை அடிப்படைவாதிகள் என்று பெருமையோடு சொல்லும் கூட்டம். பயமாகப் போயிற்று! மற்ற இஸ்லாமியர்களின் சத்தம் வெளியே தெரிவதேயில்லை. இது இஸ்லாமிற்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். பி.ஜே.மாதிரி ஆட்களைத் தலைமையாகக் கொண்டு வஹாபிகள் சாதிப்பது ஒன்று மட்டுமே ... தங்களுக்கென்று ஒரு தனி identification தேடிக்கொண்டு, எல்லோரையும் பகைத்து ... உறவுகளைச் சிதைத்து ..ஜிகாதை வளர்த்து ... என்னமோ போங்கள், செய்யது. //
முதலில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் வஹாபியத்தை ஆதரிப்பவன் அல்ல. பி.ஜேவை முக நூலில் பல தடவை எதிர்த்து விமர்சித்திருக்கிறேன். ( ரிசானா மரண தண்டனை குறித்த விவாதத்தில் )ஏனெனில் நான் மரண தண்டனையையும் எதிர்ப்பவன்.
இப்போது என்னுடைய நியாயமான தர்க்கங்களுக்கு ( அடுத்து வரும் பின்னூட்டங்களில் ) காது கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
குர் ஆன் வசனங்கள் எந்தளவு நீங்கள் திரிக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் சொல்லும் வாதங்களே போதுமானது.
குர் ஆன் எப்போதுமே ( எல்லா விஷயங்களுக்கும் ) இருவகையான தீர்வுகளை முன் வைக்கிறது.
ஒன்று நேரடியான தீர்வு. மற்றொன்று அதற்கு மாற்று. எடுத்துக்காட்டாக,
ஒரு கொலைக்கு பகரமாக மரண தண்டனை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வசனம் வருகிறது.
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்த சுதந்திரமான மனிதனும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும் கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமும் பழிவாங்கலாம். கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் சகோதரனால் சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்.” (2.178)
மேற்கூறிய வசனத்தில் இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. இதில் வெறும் மரணதண்டனையை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதைத் தூக்கிப் பிடித்து இது தான் இஸ்லாத்தின் சட்டமென்று கூக்குரலிடுவது வஹாபிசம்.
இந்த இரண்டாம் தீர்வான "இரத்த ஈட்டுப்பணம்" குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை. எப்போது இந்த குருதிப்பணம் குறித்து கவலைப்படுவார்களென்றால், அவர்கள் சுயலாபத்துக்காக, அதாவது ஒரு அமெரிக்கனோ அல்லது அரபியோ அத்தவறிழைத்திருந்தால் இதை வரவேற்பார்கள்.
நீங்களும் இந்த வஹாபிய சட்டங்களையே "இஸ்லாம்" என்று Generalize செய்து Tag செய்வீர்கள்.
நிச்சயமாக சவூதி அரேபியாவிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பின்பற்றப்படும் இந்த வஹாபிய சட்டங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்காக வால் பிடிக்க Cusotmize செய்து கொள்ளப்படுவதற்காகவே தவிர,
ஒடுக்கப்ப்பட்ட ஏழை மக்களுக்காக அல்ல.
// என் கேள்விக்குப் பதிலாக, “எங்கள் மதத்தில் வன்முறை இல்லை’ என்று நீங்கள் சொல்லியீருந்தால் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் உங்களால் சொல்ல முடியவில்லை அல்லவா? //
என்னால் நிச்சயம் சொல்ல முடியும். ஆனால் அதை பொறுமையாக கேட்கும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பது தான் என் கேள்வி.
//பிற மதத்தினரையும் மனிதராகப் பேணு என்றா உங்கள் மதம் சொல்லித் தருகிறது? ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்திக் கொண்டு வெட்டு; கொல். அது உன் கடமை என்று தானே உங்கள் மதம் கற்பிக்கிறது.//
நீங்கள் தேடியெடுத்து ஒரு வசனத்தை காண்பித்து இது தான் இஸ்லாம்.ஆகவே இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் தான் என ஆணித்தரமாக கூறுவீர்களாயின்,
அதை விட மன்னிப்பையும் அன்பையும் போதிக்கும் வசனங்கள் தான் குர் ஆன் முழுதும் நிறைந்திருக்கின்றன. அப்படியென்றால் இஸ்லாம் வெறும் அன்பின் மார்க்கம் என்று மட்டுமே நான் வாதிட்டால் ஏற்றுக் கொள்வீர்களா ?
ஒரு பழங்குடிச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கருத்தியல், நிலவுடமைச் சமூகத்தில் மாறுபடலாம். அவ்வாறே நிலவுடமைச் சமூத்தில் நிலவும் கருத்தாக்கம் தற்கால ஜனநாயக சமூகங்களின் கருத்தியிலிலிருந்து வித்தியாசப் படலாம். சில அடிப்படைவாத கருத்தியல்களாக நீங்கள் முன் வைப்பவை இஸ்லாத்திற்கு முந்தியே பாபிலேனிய, ஆப்ரகாமிய சமூகங்களில் புழங்கி வந்தவை தான்.
ஆனால் இந்த இறுக்கமான மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க, இஸ்லாம் எப்போதும் முன் வந்திருக்கிறது என்பதை தர்க்கபூர்வமாக நிறுவ இயலும்.(If you really wish) அதற்கு குர் ஆன் வசனங்களே சாட்சி.
இறையியல் தளத்தில் மானுட சமூகத்தின் சமத்துவம், மானுட ஒற்றுமையிலும் இஸ்லாம் மிகவும் வலுவான நம்பிக்கையை வைத்துள்ளது.அடுத்து வரும் தலைமுறைகளும் வருங்கால சமூகங்களும் அதற்கான உந்துதலளிக்கும் போதனைகளையும் விட்டுச் சென்றுள்ளது.
எந்தச் சமூகவியல் கருத்துக்களாக இருந்தாலும் அநியாயமாக, கொடூரமாக, ஒடுக்குவதாக, சுரண்டுவதாக இருந்தால் அவை எதனுடனும் இஸ்லாம் சமரசம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
மற்றொரு விடயத்தையும் உங்கள் சிந்தனைக்கு கவனப்படுத்தலாம் என நினைக்கின்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறேபியாவில் புத்துயிர்ப்பு வாதத்தை தோற்றுவித்த பிதாமகனாகக் கருதப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்பவர்தான் இன்றைய சஊதி ஆரேபியாவின் இத்தகைய பிளவுண்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தாலிபானியத்தை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தெர்ழுகுவதற்கான காரணமாகும். முஹம்மத் பின் அப்துல் வஹாப், இஸ்லாம் குறித்த ஒட்டுமொத்த பார்வையை, உலக நோக்கை அவர் முன்வைக்கவில்லை. மத்திய காலத்தில் ‘பாப்பரசருக்குரியதை பாப்பரசருக்குக் கொடுங்கள், சீஸருக்குரியதை சீஸருக்குக் கொடுங்கள்’ என்ற கிறிஸ்தவத்தைப் போல அப்துல் வஹாபும் தான் முன்னெடுத்த இஸ்லாமிய புத்துயிர்ப்புவாத செயல்வாதங்களையும் அதன் செயற்பாட்டாளர்களையும் அப்போதிருந்த பிரபுத்துவ குடும்பமான சுஊத் பரம்பரையினரிடம் அடகுவைத்துவிட்டார். அப்துல் வஹாபின் இஸ்லாமிய தாயிகள் தம்முடைய தஃவா என்னும் அறப்பணியை செய்ய வேண்டும், அவர்களுக்குரிய போஷிப்புக்களை சுஊத் பரம்பரை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் அரசாட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டும். பாதிரியின் வயிற்றில் உருவாகும் கடைசி மன்னனையும் கொல்லுங்கள் என்று ரூஸோ சொன்னது போல அப்துல் வஹாபின் மாணவர்கள்தான் இந்தத் தாலிபான் சேகுகள் உருவாக காரணமானார்கள்.
நான் பேசினால் நிறைய பேச வேண்டும். அதனால் தான் விவாதத்தை நேரம் கிடைக்கும் போது தொடரலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களே கூப்பிட்டு வீட்டீர்கள்.
இன்னும் நிறைய இருக்கிறது. உங்கள் பதில் கருத்தை கேட்டபின் தொடர்கிறேனே தருமி.
( தவிர குமுதினிக்கு என்னுடைய பதில் மிக நீண்டதாக இருக்கும். அதை பிறகு பார்க்கிறேன். இந்துத்துவம் நம்முடைய ஃபேவரைட் சப்ஜெக்ட். தருமி சொன்னது போல நாலுவரி மேட்டரல்ல )
நீங்கள் தவறான கருத்தை கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் மனு சாஸ்த்திரத்தில் உள்ளன. உபநிஷத்தில் இல்லை.
உபநிஷதம் வேறு மனு நீதி வேறு. உபநிஷத்தில் வருண பாகுபாடுகள் தொடர்பாக ஒன்றும் இல்லை//
மனுஸ்மிருதி தானே இன்றளவும் இந்துத்துவத்தின் ( பார்ப்பனீயத்தின் ) ஆணி வேராக இருக்கிறது.
இது குழந்தைக்கு கூட தெரியுமே...ஏன் குமுதினிக்கு தெரியவில்லை.
// கருத்துரை நீக்கப்பட்டது
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
//
இது யாருடைய பின்னூட்டம் என்று கோவி அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் ? I suspect, it should be mine.
//அ.மு.செய்யது$ சொன்னது…
// கருத்துரை நீக்கப்பட்டது
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
//
இது யாருடைய பின்னூட்டம் என்று கோவி அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் ? I suspect, it should be mine.//
நான் நீக்கினால் பின்னூட்டம் போட்டவரின் பெயரையும் சேர்த்தே நீக்க முடியும், நீங்கள் தான் தட்டச்சு பிழை சரி செய்ய முன்பு போட்டதை நீக்கி இருக்க வேண்டும். பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்
மின்னஞ்சலில் இருந்து எடுத்துப் போடுகிறேன்
************
அ.மு.செய்யது$ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஓவராக சீன் போடுறாங்க !":
//உங்கள் மதத்திலேயே வன்முறை இருக்கிறது.//
புரிகிறது. நீங்கள் நேரடியாக விஷயத்திற்கு வருகிறீர்கள். அண்ணன் கோவி பூசி மழுப்புகிறார். அவ்வளவு தான் வேறுபாடு.
ஏதோ இந்து வேதங்களில் அமைதியும் அன்பும் ஆறாகப் பெருகி ஓடுவது போல
இஸ்லாத்தின் வன்முறை இருக்கிறது என்று அச்சடிக்கிறீர்கள்.
நீங்கள் ஏன் கொஞ்சம் வேத உபநிஷடதங்களை புரட்டிப் பார்க்கக் கூடாது.
'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).
அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).
இவைகளெல்லாம் வன்முறை இல்லையா ? மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்லும் இந்து மத அநீதிகள் சமூக அநீதியாக தெரியவில்லையா ? இவைகளையெல்லாம் விட மிகப் பெரிய சமூக வன்முறையாக உங்களுக்கு தெரியவில்லையா தருமி ?
இடுப்பளவு சேற்றில் நின்று கொண்டிருப்பதே தெரியாமல், அடுத்தவர்களை
பற்றி பேசுகிறீர்கள். ரொம்ப நல்லது.
எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).
//நீங்களும் இந்த வஹாபிய சட்டங்களையே "இஸ்லாம்" என்று Generalize செய்து Tag செய்வீர்கள்.
நிச்சயமாக சவூதி அரேபியாவிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பின்பற்றப்படும் இந்த வஹாபிய சட்டங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்காக வால் பிடிக்க Cusotmize செய்து கொள்ளப்படுவதற்காகவே ..//
இப்படி சொல்கிறீர்களே .. பின் ஏன் ஹதீசுகளுக்கு உங்கள் மதத்தில் இவ்வளவு இடம் என்று
இப்பதிவில் கேட்டுள்ளேன். அது சரியான கேள்விதான் என்று உங்கள் பதிலிலிருந்தே தெரிகிறது.
---------------
//நீங்கள் தேடியெடுத்து ஒரு வசனத்தை காண்பித்து இது தான் இஸ்லாம்.ஆகவே இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் தான் என ஆணித்தரமாக கூறுவீர்களாயின்,..//
அப்படியாயின் நான் தேடி எடுத்த அந்த வசனம் ”ஒரு துளி விஷம்” என்றா கூறுகிறீர்கள்.அதைத் தவிர மீதி நிறைய பால் இருக்கிறதே என்றா கூறுகிறீர்கள்?
--------------------------
//ஆனால் இந்த இறுக்கமான மனோபாவம் கொண்ட கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து ஒரு பொதுமையான முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்க, இஸ்லாம் எப்போதும் முன் வந்திருக்கிறது//
என்னங்க நீங்க சொல்றது இச்லாத்திற்கு நேர் எதிரிடையாக இருக்கிறது! நீங்கள் தான் குரான் கடவுளின் வார்த்தைகள். எப்போதும், எக்காலத்திற்கும், எல்லோருக்கும் பொருந்து என்று கோரஸாக சொல்வீர்கள். ஆனால் நீங்கள் “கட்டுப்பட்டித் தனமான பழங்குடிக் கட்டுக்களை களைந்து” என்றெல்லாம் கூறுகிறீர்கள் !!! நீங்கள் எந்தப் பக்கம் நின்று எதை நிரூபிக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஐயம் வந்து விட்டதே....
//தருமி சொன்னது போல நாலுவரி மேட்டரல்ல )//
நான் நாலுவரில சொன்னது என்னன்னா ...//மற்ற மதங்களைக் குறை சொல்வதால் உங்கள் மதம் சரி என்பதாகாதே! // என்பது தான். உங்க மதத்தைப் பற்றிக் கேட்டா, குறை சொன்னா ... ஆஹா இதே குறை அந்த மதத்தில் இருக்கு .. இந்த மதத்தில் இருக்கு .. அப்டின்னு சொன்னா என்ன அர்த்தம்னா - எங்க மதத்தில் நீங்க சொன்ன தப்பு இருக்கு அப்டின்னு ஒத்துக்கிட்டதாக அர்த்தம்.
சரிதானே?
அமு.செய்யது,
தங்களைப்பார்த்தால் மிகவும்படித்த முதிர்ந்தவர் என தெரிகிறது,நன்றாக பேசுகிறீர்கள்,ஆனால் வழக்கம் போல இஸ்லாம் அன்பு மார்க்கமஏ ,தீங்கே செய்ய சொல்லவில்லை என்றே சொல்கிறீர்கள் :-))
வஹாபிக்கள் குறித்து நீங்கள் சொன்னது அத்தனையும் சரி,ஆனால் இதனையே நான் சொன்ன போது பதிவுலகில் சிலர் கும்பலாக கூடி என்ன சொன்னார்கள் எனில் ,வஹாபிசம் தான் உண்மையான மார்க்கம், விரைவில் மற்றவர்களும் அதனை பின்ப்பற்றுவார்கள் என்பதே.
இங்கே நானோ,தருமியோ,கோவியோ பொதுவாக இஸ்லாமியர்களை குறிக்கவில்லை அடிப்படைவாத இஸ்லாமியர்களையே குறிக்கிறோம்,அப்போ அடிப்படை வாத இஸ்லாமியர்னு குறித்து சொல்லவேண்டும் தானே என்றாம்,ஆனால் அவர்கள் தான் உண்மையான இஸ்லாமியர்கள் என சொல்லிக்கொள்ளும் போது உங்களைப்போன்றவர்களிடம் இருந்து மறுப்பே காணோம்,சரினு பொதுவா ஹதீஸ் ,குரான் என மேற்கோள்காட்டி சொல்கிறோம்,அப்போ மட்டும் உங்களைப்போன்றோர் வந்து இங்க பாருங்க நாங்கலாம் அன்பானவர்கள் அது வஹாபிக்கள் வேலைனு சொல்லுறிங்க :-))
# எத்தனை அன்பான வசனம் இருக்கு,எத்தனை அக்கிரமான வசனம் இருக்குனு சொல்லிக்கொள்வதால் பிரயோசனமில்லை, எதனை பின்ப்பற்றி செயல்ப்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம்.
அன்பான வசனங்களை படிக்க மட்டும் செய்கிறார்கள், ஆனால் அடி ,உதை ,கொல்லு என்பதை தான் செயலில் காட்டுகிறார்கள் :-))
# இப்படிலாம் பேசினால் இந்துத்வா, இன்ன பிற சொல்லிடுறிங்க, சரி அவங்களை நீங்க எதிர்க்க வேண்டியது தான் ,அப்போ தான் சுவனம் கிடைகும் :-))
குரான் படிக்கிற ,தொழுகை செய்றவங்களை கூட கொல்லுறாங்க, பாம் வைக்குறாங்க கேட்டால் அவங்க ஷியானு சொல்வதேன்.
இணை வைக்க கூடாதுனு சொல்லி இருக்கு என்றால், இணை வைத்தவர்களை கொல்லுனு சொல்லி இருக்கா?
போனவாரம் கூட பாகிஸ்தானில் ஷியா முஸ்லீகம்கள் பகுதியில் குண்டு வச்சு 48 பேரு செத்து இருக்காங்க.
இந்தியாவில் குண்டு வச்சுட்டாங்கன்னு சொன்னா ,நீங்க இந்துத்வானு சொல்லி கூட தப்பிக்கலாம்,ஆனால்ல் பாகிஸ்தானில் யாரு போய் குண்டு வச்சாங்க?
அதுக்கும் குரான் நம்பிக்கை அடிப்படையில் தானே செய்றாங்க,அப்போ அந்த மதம்(இஸ்லாம்) வன்முறையை வளர்க்குதுனு சொல்லாம , அன்பான,பண்பான மதம்னு எதை வச்சு நாங்கள்லாம் சொல்ல முடியும்?
இப்படி வன்முறையில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையான முஸ்லீம் இல்லைனளொரு ரெடி மேட் பதில் சொல்லுவீங்க.
அப்போ இஸ்லாத்துல பொய்யான இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமோ?
கருத்துரையிடுக