பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2013

தாவணி சரியான ஆடையா ?


முகநூலிலும் கூகுள் கூட்டலிலும் ஒரு அழைப்பிதழ் படமும் அதற்கான கருத்துகளும் நகைச்சுவையாக கிண்டல் அடிக்கப்படுகிறது. நான் அதற்கு மாற்றுக் கருத்தாக

"தாவணி என்பது அருகிவரும் வேளையில் இவற்றை வரவேற்போம், மஞ்சள் நீராட்டு விழா என்பது கொச்சையாக பார்க்கப்படுவதால் இப்பொழுது தாவணிக்கு மாறி இருக்கிறார்கள், அதையும் ஏன் தவிற்கும் படி நாம கமெண்ட் அடிக்கனும் ?""

அதற்கு நண்பரின் பதில் "தாவணி மாணவிகளுக்கு ஏற்ற உடை இல்லை, அதை பள்ளிகளும் தடை செய்துள்ளனர், தாவணி  அணியும் விழா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவை நாம் வரவேற்க்கக் கூடாது" என்று எழுதினார்

நான் திரும்பவும் அவருக்கு மறுமொழி இட்டேன்.



1. பள்ளிகளில் தடை செய்துள்ளதாக நீங்கள் எந்த ஆதரத்தில் இவற்றை தெரிவிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, தனியார் பள்ளிகளில் அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், மாடர்ன் ட்ரெண்ட் என்ற முறையில் சல்வாருக்கு மாற்றிவிட்ட பெற்றோர்கள் இருந்தாலும், இன்னும் அரசு பள்ளிகளிலும் அரசு ஆதரவு பள்ளிகளிலும் தாவணி அணிந்து செல்பவர்கள் உண்டு, நான் பார்த்து இருக்கிறேன்.

2. தவாணி என்பது புடவையின் சிறிய வடிவம், அவற்றை அணிய பழக்கப்படுத்துவது பிற்காலத்தில் புடவை உடுத்த பழகிக் கொள்வார்கள் என்பதற்காகவும், தாம் இனி சிறுமி இல்லை, என்று ஒரு பெண் உணரவேண்டும் என்பதற்காகவும் தாவணி அணிவிக்கப்படுகிறது.

3. பூப்பு மற்றும் மஞ்சள் நீராடும் சடங்கு தற்போதும் தேவையற்றது என்று சொல்லாவிட்டாலும் பலர் அறிய நடத்துவது தேவையற்றது என்ற கருத்தை நானும் வழிமொழிகிறேன், தற்பொழுதெல்லாம் ஊர் கூட்டி பூப்படையும் சடங்கு செய்யாவிட்டாலும் வீட்டு உறவினர்களை மட்டும் அழைத்து செய்கிறார்கள், காரணம் மேற் சொன்னது போல் சிறுமி மன நிலையில் இருந்து பெண் குடும்ப பொறுப்புக்கு மாறவேண்ட்ம் என்கிற உளவியல் ரீதியான சடங்கு மட்டுமே.

4. முன்பெல்லாம் பெண் வயதுக்கு வந்த உடன் மணம் செய்து கொடுக்கும் பொறுப்பும் இருந்ததால் அதனை விமர்சையாக செய்வதன் மூலம் சொந்தகளுக்கு அறிவித்து சொந்தங்களிடம் இருந்து மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க முடியும், அல்லது பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று அறிவிப்பு விழாவாகவே அது நடைபெறும், தற்போதைய சூழலில் உறவினருக்குள் திருமணம் செய்துவிட்டது கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில் ஊர் அறிய நடத்தும் பூப்பு விழா தேவையற்றது தவிற அந்த பெண்ணுக்கு கூச்ச உணர்வு தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் முன்பு முட்டாள் தனமாகதான் இந்த சடங்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

5. பள்ளி சீருடையாக குட்டைப் பாவடை அணிய வைப்பதைவிட சிருடையிலும் தாவணி எந்த விதத்திலும் தவறான தேர்வாக எனக்கு தெரியவில்லை. எனது சகோதரிகள் பள்ளிப்பருவத்தில் தாவணி அணிந்து தான் சென்றனர். குட்டைப் பாவாடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உள்ளனர் என்பதற்காக இதனை குறிப்பிட்டேன், மற்றபடி குட்டைப் பாவாடையில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

6. மஞ்சள் நீராட்டு விழா அறுவெறுப்பாக எப்பொழுது பார்க்கப்பட்டது, சமூகத்தில் அத்தகைய மன நிலை ஏன் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பெல்லாம் பொது இடத்தில் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுவது அருவெறுப்பற்ற நிலையில், அப்படி ஒரு சிந்தனைகளே இல்லாத போது அவ்வாறு ஊட்டப்பட்டது, மனித மன வக்கிரங்கள் வளர வளர இப்பொழுது யாரும் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாம் சமூக மாற்றமாகக் கொள்ள வேண்டும் என்பதைவிட நாம் மன நிலைகளில் வக்ரங்கள் குடியேறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

7. பூப்பு நீராட்டுவது அறுவெறுப்பான சடங்கு தேவையற்றது என்கிற கருத்து உருவாகியுள்ளது போல் ஏழு மாதத்தில் கற்பினி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதைக் கூட அருவெறுப்பாக காணும் நிலை நம்மிடம் வளரக் கூடும், காரணம் குழந்தை பெற்றுக் கொள்வது இருவர் கூடுவதால் ஏற்படும்  நிகழ்வு, ஒரு பெண் வயிறு முன் தள்ளி நிற்பதைப் பார்க்கவும், அவள் கணவனுடன் கூடினாள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்த இந்த விழாவை நடத்துவது தேவை தானா ? என்கிற கேள்வியைக் கூட நான்கு பேர் அசட்டுத் தனமாக கேட்டு வைப்பார்கள்.


*****


பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தனக்கான தனிப்பட்ட விழா என்பதால் இது போன்ற சடங்குகளில் இயல்பாகவே ஆசை இருக்கும், ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில் அவற்றை புறக்கணிக்கத் துவங்கியுள்ளோம், நமது சமூகத்தில் பெண்களை மிகவும் தாழ்வாக வைத்திருந்தாலும் பெண்களுக்கு மட்டும் தான் தனிப்பட்ட சடங்குகள் நடைபெறுகிறது, சிறப்பு செய்யப்படுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது, அவை மறையும் பொழுது அந்த தனிச் சிறப்புகளையும் அவர்கள் இழந்துவிடுவார்கள்.

தாவணி அழகா இல்லையா ? தாவணிக்கு தமிழ் திரைப்படங்களில் சிறப்பான இடம் உண்டு, 16 வயதினிலே ஶ்ரீதேவி முதல் சண்டைக் கோழி மீரா ஜாஸ்மின் வரை தாவணிப் போட்ட தீபாவளியாக அழகாகத் தான் தெரிந்தார்கள், அதே போன்று திரைப்படங்களில் தாவணியை பூணூல் அளவுக்கு கவர்ச்சி உடையாகவும் ஆக்கினர்கள், புடவையை கவர்ச்சியாக கட்டுவது போல் தாவணியையும் அவ்வாறு காட்டியதால் என்னவோ தாவணி அணிவது அறுவெறுப்பானதோ என்று நினைக்க வைக்கப்படுகிறது, மேலும் உடுத்த எளிதனது பொதுவான உடை என்ற அடைப்படையில் சல்வார் தாவணிக்கு மாற்றாக வந்துவிட்டது, ஆனாலும் பள்ளியில் மாணவிகளை சீருடையாக உடுத்தச் சொல்லும் குட்டை பாவடையைக் காட்டிலும் தாவணி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. எந்த உடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உண்டு, முழுக்க முழுக்க மூடி இருந்தாலும் உப்பிய பாகங்கள் உடையில் மேடுகளாக தெரிகிறதா என்று காமப் பார்வை உள்ளவன் பார்பான், ஒரு சில கேடுகெட்ட, எப்போதும் காம வயப்பட்ட ஆண்களின் காமப் பார்வை தான் பெண்களின் உடையை முடிவு செய்யக் கூடியது என்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன்

8 கருத்துகள்:

Indian சொன்னது…

//காரணம் குழந்தை பெற்றுக் கொள்வது இருவர் கூடுவதால் ஏற்படும் நிகழ்வு, ஒரு பெண் வயிறு முன் தள்ளி நிற்பதைப் பார்க்கவும், அவள் கணவனுடன் கூடினாள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்த இந்த விழாவை நடத்துவது தேவை தானா ? என்கிற கேள்வியைக் கூட நான்கு பேர் அசட்டுத் தனமாக கேட்டு வைப்பார்கள்.//

கேட்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். வெள்ளைக்காரன் பூப்பு நன்நீராட்டு விழா கொண்டாடல. ஆனா "baby shower" கொண்டாடறான்ல?

ராஜ நடராஜன் சொன்னது…

உணவு,உடை,மொழி போன்றவைகளே ஒரு குழுவின் அடையாளமாக கலாச்சார பண்பாடாக பார்க்கப்படுகிறது.

அமேசான் காடு முதல் தாவணி வரை உடுத்துவதற்கான எளிமை,தட்ப வெப்ப சூழல் போன்றவையே தீர்மானிக்கின்றன.பருத்தி விதைத்து விட்டு பருத்தி அணியமாட்டேன் என்பது பொருத்தமாக இல்லை.

பள்ளி பருவ மாணவனுக்கு ஒரு பெண்ணின் தாவணி அணியும் விதம் கூட ரசனைதான்.சில சொட்டை வயதுகளை மட்டுமே தாவணியையும் முட்டிப்பார்க்க வைக்கிறது.இந்த
மூட்டைப்பூச்சிகளுக்குப் பயந்தா வீட்டைக் கொழுத்துவது?

வேகநரி சொன்னது…

தாவணி தொடக்கம் எலலா உடையும் நல்ல உடையே. தடை செய்யபட வேண்டியது பர்தா என்ற முகமூடி தான்.

காரிகன் சொன்னது…

கடைசியாக திரு வேகநரி என்பவர் சொன்ன கருத்தே மிக சிறந்தது. வேகநரிக்கு ஒரு சபாஷ்.

சார்வாகன் சொன்னது…

சகோ கோவி,

நாம் பெண்களின் ஆடை விடயத்தில் தலையிடுவது இல்லை. விரும்பினால் அணியட்டும். என் சகோதரிகள் தாவணி அணிந்தார். நாம் படித்த பள்ளியிலும் அதுவே அப்போது பெண்களுக்கு சீருடை.

இப்போது அதிகம் பயன்பாட்டில் இல்லை!!.

வேட்டி நமக்கு பிடிக்கும்!! வேட்டி பற்றி பதிவு போட்டால் மடித்துக் கட்டிக் கொண்டு , வேட்டி எதிர்பாளர்களை ஊடு கட்ட வருகிறேன்!!

கைலியை மூட்டிக் கட்டுவது பற்றி அப்போது விவாதிப்போம்!!ஹி ஹி

நன்றி!!!

பழூர் கார்த்தி சொன்னது…

உங்க கருத்துடன் ஒத்துப் போகிறேன்.. தாவணி என்பது நாகரீகமான உடையே! திருச்சி எஸ்.வி.எஸ் பள்ளியில் மாணவிகளுக்கு தாவணிதான் சீருடை என நினைக்கிறேன்..

Prem S சொன்னது…

//பள்ளி சீருடையாக குட்டைப் பாவடை அணிய வைப்பதைவிட சிருடையிலும் தாவணி எந்த விதத்திலும் தவறான தேர்வாக எனக்கு தெரியவில்லை//

உண்மை உண்மை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தற்போது பெண்கள் தாவணியை விரும்புகிறார்களா என்பது தெரியவில்லை.நகரங்களில் alternate ஆடையாகக் கூட பயன்படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்