பின்பற்றுபவர்கள்

10 செப்டம்பர், 2012

வெட்கம் கெட்டவர்களுக்காக !


ஐயோ இது சிங்களன் வரைந்த ஜெ-கார்டூன் பற்றி இல்லை, அந்த இழிபிறவிகளைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை, நாவில் கூடுதலாக எச்சில் இருந்தால் அந்த திசை நோக்கி துப்பலாம், இல்லை என்றால் அந்த பக்கம் திரும்பி ஒண்ணுக்கு அடிக்கலாம், அதுக்கு மேல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை, பெண்ணும் ஆணும் எதோ இந்தியாவில் மட்டும் தான் அரசியல்வாதிகள் என்பது போன்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் அதைவிட கேவலமாகவோ அவர்கள் தலைவர், தலைவிகளை நம்மால் இழிவு சித்திரம் தீட்ட முடியும் என்றாலும் ஒரு ஆணையும் பெண்ணையும் அவ்வாறு வரைவது எண்ணத்தில் கூட நமக்கு ஏற்புடையது இல்லை.

*********

ஹாஜா மைதீன் என்பவர் மலேசியாவில் ஒரு மலாய்காரனால் வெட்கம் அடைந்தாராம், அது தான் இங்கே தலைப்பு, அவரு மட்டுமல்ல அவரு போல் இந்திப் படிக்காததால் வெட்கம் அடைந்து அரசியல் வாதிகளால் கெட்டுவிட்டோம் என்று மனம் புழுங்குபவர்களுக்கும் சேர்த்தே தான் எழுதுகிறேன், இது போல் நான் எழுதுவது இது முதல் முறை இல்லை என்றாலும், இந்திக்கு பந்தி வைக்கவில்லை என்று ஆண்டுக்கு ஒருவராவது இப்படி சமூக அக்கரையுடன் மூக்கு சிந்தும் பொழுது நம்மால் முடிந்த அமிர்தாஞ்சனமாக இதை எழுதத்தான் வேண்டி இருக்கிறது.

"நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன்" - ஹாஜா மைதீன்

அவரு எழுதியதில் முக்கியமான வரிகள் இவை தான், அதாவது ஒரு மலாய்காரனுக்குஇந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிந்துள்ளதும், அதன் முக்கியத்துவமும் இவருக்கு தெரியாமல் போச்சாம். மேலும் இந்தி தெரியாமல் இருப்பதே தமக்கு பெருத்த அவமானம் என்றும் எழுதியுள்ளார், அவர் அவமானப்படுவது கூனிக் குறுகுவதெல்லாம் அவரின் மன நிலைத் தொடர்பானது என்று விட்டுவிடுவோம், ஆனால் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காதவர்கள் அதை தெரியாமல் இருப்பதற்கு எந்த வித அவமானமோ தலைகுனிவே பெறத் தேவை இல்லை.

இங்கே சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மையாகத்தான் வசிக்கின்றனர், சீன மொழி தெரியவில்லையே என்று சீனர்களிலும் கூட சீனர் அல்லாதவர்களிடம் கூட எவரும் வெட்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.  சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்கள் பேசும் மொழி சீன மொழியை எல்லோரும் அறியவில்லை என்பதற்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த விதத்தில் மலேசியாவிற்கு குறைந்து போய்விடவில்லை.  மலேசியாவில் மலேசியர் அல்லாதவர் மலாய் பேசாமல் இருப்பதாலும் எவருக்கும் சங்கடங்கள் இருந்ததும் இல்லை, அவற்றை மீறிக் கற்றுக் கொள்பவர்களுக்கு பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் பொழுது சில்லரை வாங்க பயனாக இருக்கும் என்பது தவிர்த்து மலாய் படங்களைப் பார்க்கலாம் என்பதும் தவிர்த்து தமிழனிடம் ஒரு தமிழன் மலாயிலேயே பேசலாம் என்பதும் தவிர்த்து வேறு பெரிய பலன்கள் இருப்பது போல் தெரியவில்லை, மலேசிய தமிழர்கள் அவர்களுக்குள் மலாயில் பேசிக் கொள்கிறார்கள், காரணம் பெரிதாக இல்லை, நம்மைப் போன்றவர்களுக்கு அவர் பேசினால் புரியக் கூடாது என்பது தவிர்த்து பேச எளிமையாக இருக்கும், 

மலேசியாவில் இரண்டு ஆண்டு வசித்தால் மலாய் சொல்லிக் கொடுக்காமலேயே வந்துவிடும், மலாய்காரர்கள் தவிர்த்து சீனர்கள் மற்ற இனத்தினர் மலாய் பேசுவதற்கு அவர்கள் பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டார்கள் என்பதில்லை, பேசிப் பழக்கம் தான், ஹாஜா மைதீன் எந்த பள்ளியில் சென்று மலாய் படித்திருப்பார். நான் மாதம் ஒருமுறையேனும் முடித்திருத்தம் செய்ய மலேயா ஜோகூர் செல்வதுண்டு, காசு குறைவு என்றாலும் போய் வரும் செலவும், வெட்டுபவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்புத் தொகையும் சேர்த்து ஒப்பிட சிங்கையில் வெட்டுவதை விட கூடுதல் என்றாலும் பொழுது போக்காகச் சென்றுவருவதற்காக மலேசியாவில் தான் முடித்திருத்தம் செய்து கொள்வேன்.

முடித்திருத்தம் செய்பவர்கள் அனைவரும் வேலை அனுமதியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

"தம்பி எந்த ஊரு"

"மன்னர்குடிங்கண்ணே "

"எவ்வளவு நாளாச்சு இங்கே வந்து"

"வர்ற நாலாம் மாசம் வந்தா இரண்டு வருசம் ஆகும்"

"சீனன் கூட இவ்வளவு சூப்பராக மலாய் பேசுறிங்க ?"

"பேச வேண்டியது தானே...சுத்தி அதான் பேசுறாங்க.......கேட்டு கேட்டு நாமும் பேசிட முடியும்"

மலாய் கற்றுக் கொள்ள எடுக்கும் காலம் இவ்வளவு தான். 

மலேசியாவில் மலாய் எல்லோரும் படியுங்கள் என்று திணிப்பது கிடையாது, அரசு பள்ளிகளில் பாடமாக உண்டு, மலேசியாவில் அரசு பள்ளியில் படிக்கும் அனைவரும் மலாய் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அது சீனர் என்றாலும் இந்தியர் என்றாலும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மலாய் மொழி சொல்லி க்கொடுக்காத தனியார் பள்ளிகளும் உண்டு, எனக்கு தெரிந்த பல மலேசிய சீனர்களின் குழந்தைகளுக்கு மலாய் தெரியாது. ஆனாலும் அவர்கள் அங்கேயே வளர்ந்தால் இயல்பாக கற்றுக் கொள்வார்கள். மலேசியா நாட்டுக்கு வேலைக்கு வர்றிங்க மலாய் தெரியாமல் வருவதற்கு நீங்க வெட்க்கப்படுங்களேன் என்று யாரும் கூறுவதும் இல்லை,  யாரும் அவ்வாறு கூறித்தான் ஹாஜா மைதீன் மலாய் கற்றுக் கொண்டாரா தெரியவில்லை. கூலி வேலைக்கு வருபவர்கள் ஒராண்டிற்குள் கற்றுக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு மலாய் மொழி எளிமையானது தான், இந்தியும் பள்ளியில் கற்றுக் கொடுத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும் என்ற மொழியும் கிடையாது, வடநாட்டுக்கு கொத்து வேலைக்குச் செல்பவர்களெல்லாம் வரும் பொழுது இந்திப் பேசுகிறார்கள். நான் படிச்சவன் நான் படிச்சவன் என்று படம் காட்டுகிறவர்களுக்குத்தான் துவக்கப் பள்ளியில் இருந்து சொல்லிக் கொடுக்கனுமாம்.

இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் விருப்பத்தின் பேரில் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை, ஆனால் இது தான் தேசியமொழி எல்லோரும் பேசுகிறார்கள், அதனால் எனக்கும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது, தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பிற்காக எல்லோர் மீதும் பாடச் சுமையை ஏற்றுவது அறிவுடைய செயலும் இல்லை, இந்தி படிக்காமல் நொந்து போய்விட்டோம் என்று புலம்பும் மூத்தவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அதை பாடமாக்கி இருக்கிறார்கள் ? ஏற்கனவே இருக்கும் பாடச் சுமையுடன் இவற்றையும் ஏற்ற விரும்பமாட்டார்கள், இந்தியை அல்லது வடமொழியை இரண்டாம் மொழிப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களில் தமிழையும் சேர்த்துப் படிப்பதும் இல்லை, தன் குழந்தைக்கு ஏதோ ஒன்று மட்டும்  இரண்டாம் மொழிப்பாடமாக இருந்தால் போதும், கூடுதல் சுமை தேவை இல்லை என்று கருதுவோரில் பலர் தாம் இந்திப் படிக்காமல் பாழாகிப் போய்விட்டோம் என்று புலம்புவது முரண்பாடாக இருக்கிறது.

மேற்கண்ட ஹாஜா மைதீனிடம் ஒருவர் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார், இந்தியாவில் இருந்து வந்த நீங்கள் இந்து இல்லையா ? அரேபிய மதத்தையா பின்பற்றுகிறீர்கள் ? என்று கேட்டிருந்தால் அதை ஒருவேளை அவர் அவமானம் என்று கருதுவாறாயின் அந்த அவமானத்தைத் துடைக்க அவரால் என்ன பதில் சொல்லி இருக்க முடியுமோ அதையே ஏன் அவர் தாம் இந்தி கற்காமல் போனதற்கும் சொல்ல முடியாமல் போனது ?

* இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல
* இந்தி இந்தியாவில் தோன்றிய மொழியும் அல்ல
* இந்தி இந்தியாவில் ஊடுருவியதற்கும் ஆங்கிலம் ஊடுருவியதற்கும் வெறும் 100 ஆண்டுகளே வேறுபாடு, இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் கிழக்கிந்திய கம்பெனி வருகைப் பற்றிப் படித்தால் இந்தியும்,  ஆங்கிலமும் எப்போது இந்தியாவை விழுங்கின என்று தெரியும்.
* இந்தி ஆங்கிலம் போல் அறிவியல் / இலக்கிய வளங்கள் நிறைந்த மொழியன்று
* ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலக நாடுகளில் சுற்றிவரலாம்,
* இந்தித் தெரிந்தாலும் பாம்பே மிட்டாய் விற்பவருக்கு தொழிலைத் தாண்டிய வருமானத்தை இந்தி மொழித் தரவில்லை
* தமிழகத்தில் இந்தி நுழைந்திருந்தால் கன்னடப்படங்களுக்கு நேர்ந்த கெதி தமிழ் படத்திற்கு எப்போதோ ஏற்பட்டிருக்கும்
*உருதும் இந்தியும் அக்கா  தங்கைகள் தான், ஒரு பேச்சுக்கு உருதை தேசிய மொழி ஆக்கிவிடலாமா ? இந்தியை சமஸ்கிருத 'அம்சமாக' பார்க்கும்  பெருவாரியான பார்பனர்களே  வேண்டாம் வேண்டாம் என்று அலறுவார்கள்.

******

இந்தி படிக்க எழுந்த ஆர்வம் காரணமாக 20 வயதில் சென்னை திநகர் இந்தி பிரச்சார சபாவில் காலை வகுப்பில் சேர்ந்தேன், மொத்தமே மூன்று நாள் வகுப்பு தான் சென்றிருப்பேன், அங்கே இந்தி கற்றுக் கொள்ள வந்த வாண்டுகள் 'அங்கிள்......அங்கிள்' என்று கூப்பிடத் துவங்கியதும், இந்தியும் வேண்டாம், மந்தியும் வேண்டாம் என்று வந்துவிட்டேன், பின்னாளில் என்னுடைய தனி முயற்சியால் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

முன்பு மாதிரி இல்லை தற்பொழுது தமிழக தொலைக்காட்சி இணைப்புகளில் இந்தி சானல்கள் ஒரு 20 - 30 ஆவது இருக்கும், கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்ப்பதைத் தவிர்த்து இந்தி சானல்களைப் பார்த்தால் மூன்றே மாதத்தில் நாம பாம்பே வாலா ஆகிவிட முடியும். எல்லாவற்றிற்கும் உந்துதல் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, எனக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஓரளவு இந்தி கொஞ்சம் சீன மொழி கூடத் தெரியும், இதையெல்லாம் நான் எந்த பள்ளியிலும் படித்து கற்றுக் கொள்ளவில்லை.

முடியவில்லை, ஆண்டுக்கு ஒருவரேனும் இது போல் இந்தி தெரியாததால் வெட்கம் அடைந்தோம் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 

31 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

கோவி,
பழைய பதிவுகளைத் தேடி சுட்டி கொடுத்தமைக்கும் , இடைவிடாமல் வேப்பிலை அடிப்பதற்கும் நன்றி!

வருசத்துக்கு இரண்டுபேர் இப்படி கிந்தியால் வெட்கப்படுவதும் , சித்திரைதான் டமில் முதல்மாதம் என்று கிளம்பிவிடுகிறார்கள்.

வவ்வால் சொன்னது…

கோவி,

என்ன இப்படி சொல்லிட்டிங்க ,ஹிந்தி தெரியலைனா வெட்கப்படணும் தான் அதான் தேசிய மொழி... கூட்டத்தில் கோவிந்தா போட்டு வைக்கணும் இல்லைனா இந்தியன் இல்லைனு என் குடியுரிமையை ரத்து (விலக்கம்) செய்துட்டா என்ன செய்யுறது, மஞ்சத்துண்டு தாத்தா, மரம் வெட்டி அய்யா வின் வழித்தோன்றல்கள் எல்லாம் இந்திப்புலமையில் சிறந்து விளங்குவதால் தானே மத்திய மந்தி(ரி)களாக முடிந்தது எனவே அனைவரும் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா என படிப்போம் வாரீர் ...வாரீர் ... பிரத்யோக(சிறப்பு) அரசியல் இந்தி வகுப்புகள் விரைவில் அண்ணா அறிவாலயத்தில் துவங்கப்படவுள்ளது ,ஆசிரியர் குசுப்பு!(சும்மா கூட்டம் அள்ளும்ல)

இந்திக்கற்றுக்கொண்டதும் ஹாஜா மைதீன் , ஹர்கிஷன் முகர்ஜி என பெயர் மாற்றிக்கொண்டு ,காசி,ராமேஷ்வரம் புனித யாத்திரையும் செல்வார் என நம்புகிறேன். இந்தி பேசும் மக்களின் புனித யாத்திரை ஆச்சே அது :-))

ஹி...ஹி அப்புறம் நான் கூட இந்தி தெரியாம ரொம்ப வெட்கி தலைகுனிந்தேன் ...இந்திக்காரப்பொண்னுங்க கூட கடலைப்பொட முடியாத போது. ஆனாலும் நான் பேசிய ஓட்டை இந்திக்கே நிறைய மவுசு :-))

-----------

கல்வெட்டு ,

செம மோப்ப சக்தி போல எங்கிருந்தாலும் இது போற தலைப்பினை நுகர்ந்து விடுகிறாரே :-))


அருள் சொன்னது…

இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.

http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

Unknown சொன்னது…

நல்ல விளக்கம்... உண்மையும் கூட...தோழரே!

ஹிந்தி விருப்பட்டு வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அது கட்டாய படுத்த கூடாது. ஹிந்தி தேசிய மொழி என்று பல வெளிநாட்டினர் கருதுவது அவர்களின் அறியாமை...

iK Way சொன்னது…

நல்ல இடுகை மற்றும் கருத்து.
எனக்கு ஹிந்தி ஓரளவு (பேச) தெரியும். ஆனாலும் இந்த ஹிந்தியர்கள் அடிக்கும் கூத்து சமயங்களில் அதிகமாகவே படும். அதுவும் இவர்களின் அசாத்திய தன்னம்பிக்கை (தெரியாத விஷயத்தில்) மிகுந்த ஆச்சர்யமூட்டுவது.பல நேரங்களில் பரிதாபப்படத்தோன்றும்.

வெளியே தெரியாத இன்னொரு அலை, இந்த ஹிந்தி புராணத்தால் கடுப்பாவது தமிழர்கள் மட்டுமல்ல. பெங்காலி, மராத்தி மற்றும் குஜராத்திகளும் கூட.

மேலும் தெரிந்தே, தென்னிந்தியர்களிடம் விளையாட்டாக கேட்பது போல் சீண்டிப்பார்ப்பதும் உண்டு.

பல நேரங்கலில் இவர்களுக்கு பதில் கேள்வியாக "ஏன் பல மதங்கள், நீங்களும் மெஜாரிட்டி மதத்துக்கு மாறி விடலாமே?" என்று கேட்டு வாயை அடைக்கலாமா என்றும் தோன்றும்.

இந்த ரியாலிட்டி சேனல்னு சொல்லிகிட்டு திரியரவங்க யாரவது இதப்பத்தி ஒரு நிகழ்ச்சி நடத்தி என்ன தெரியவருதுனு கண்டுபிடிச்சு சொன்னா தேவலாம்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.in/

iK Way சொன்னது…

இன்னொரு வித்தியாசமான பிரச்சினை என்னவென்றால், பல நேரங்களில் சர்வதேச தளங்களில், தெரிந்தோ தெரியாமலோ, இந்தியா என்ற தலைப்பின் கீழ் டீஃபால்ட் மொழியாக ஹிந்தி காணப்படுகிறது. இதுவும் பலர் (வெளி நாட்டினர்) குழம்ப ஏதுவாகிறது.

உ‍_தா : பல சர்வதேச வேலைவாய்ப்பு இணைய‌ தளங்களின் தாய் மொழி பட்டியலில் தமிழ் இருக்காது ஆனால் இதைவிட குறைந்த மக்கள் தொகையினர் பேசும் மொழிகள் இடம் பெற்றிருக்கும். தேடினால் இன்னும் பல இதுபோல சரி செய்யவேண்டியன கிடைக்கலாம்.

priyamudanprabu சொன்னது…

:)

வந்தவாசி ஜகதீச பாகவதர் சொன்னது…

//தமிழகத்தில் இந்தி நுழைந்திருந்தால் கன்னடப்படங்களுக்கு நேர்ந்த கெதி தமிழ் படத்திற்கு எப்போதோ ஏற்பட்டிருக்கும்// Beautiful.

அஞ்சா சிங்கம் சொன்னது…

அகர் பாண் மே சுப்பாரி நஹித்தூ...........
கானேக்கா மஜா நஹி ....
ஜிந்தகிமே லடிக்கி நஹித்தூ...........
ஜீனேக்கா மஜா நஹி ....

எனக்கும் நல்லா ஹிந்தி தெரியும் . பெருசா ஒரு பிரயோஜனமும் இல்லை ....


Unknown சொன்னது…

வணக்கம் சகோ,

நிதர்சனமான ஒர் உண்மையை இங்கு பதிவிட்டிருக்கிறீர்கள். இந்த இந்தி மோகம் தமிழர்களுக்கு தற்செயலாக அதுவும் அரபு நாடுகளுக்கு படையெடுத்த பின்பே என்பதை அறியவும். இதன் காரணம் ஒரு அறையில் தங்கும் இந்தியர்களில் தமிழ் மற்றும் இந்தி பேசுவோர் இருக்கும் சூழ்நிலையிலேயே இந்த தாக்கம் அதிகரிக்கும். அய்ந்து பேர் தங்கும் அறையில் ஒரே ஒரு தமிழர் தங்கும் சூழ்நிலை வந்தால் அவர் பாடு தின்டாட்டம்தான். இந்த நிலையில் தான் இந்தின்னா என்னவென்று தெரியவரும்.அதுவும் ஒரு சுயநலத்திற்காக அதாவது இருவருக்குள் தகறாறு ஏற்பட்டால் (தமிழனுக்குதான் சூடு சுரணை அதிகம் இருக்குமே)இந்தியில் திட்டவோ எதிர்த்து நின்று வழக்காடவோ துணிவின்மையே காரணம். வருமானம் ஈட்ட வந்த இடத்தில் கேவலம் பணத்திற்காக தன் தாய் மொழியை இழிவுபடுத்துகிறோமே என்கிற உணர்வுகூட இல்லாமல்,இந்தி கற்காதது ஏதோ பிறவிப் பிழை என்று ஜல்லியடித்தவர்கள் நம் அரபுவாழ் தமிழர்களே. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் மலேசியா,சிங்கப்பூர் சென்றவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்கு ஏன் இந்தி கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமல் போனது? இன்று அரபுலகில் வடமாநிலத்தார் படை எடுத்தது போல் அன்று இல்லாததே முக்கிய காரணம்.

இனியவன்...

naadoodi சொன்னது…

//இந்தியாவில் இருந்து வந்த நீங்கள் இந்து இல்லையா ? அரேபிய மதத்தையா பின்பற்றுகிறீர்கள் ? என்று கேட்டிருந்தால் அதை ஒருவேளை அவர் அவமானம் என்று கருவாறாயின் அந்த அவமானத்தைத் துடைக்க அவரால் என்ன பதில் சொல்லி இருக்க முடியுமோ அதையே ஏன் அவர் தாம் இந்தி கற்காமல் போனதற்கும் சொல்ல முடியாமல் போனது ?//
இத அங்க காணாம்...?

சிராஜ் சொன்னது…

வெளிநாட்டில் ஒருத்தர் உங்கள் தேசிய மொழியாகிய ஹிந்தி தெரியலையேன்னு சொன்னதற்க்காக ஒருவர் வருந்தினால்...

அவர் வெட்கம் கெட்டவரா கோவி?????

என்னவேணும்னாலும் தலைப்பா வைய்ப்பீங்களா ஹிட்ஸ்காக?????

சிராஜ் சொன்னது…

// நான் தமிழ்நாட்டுக்காரன் அதனால் என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா என கேட்டார் ? //

நான் தமிழ்நாட்டுகாரன், தமிழ் என் மொழி என்று கூறி இருக்கிறார்... தமிழன் என்றே தன்னை அடையாள படுத்தி இருக்கிறார்.... .
அவர் நான் முஸ்லிம் என்று மலாய் காரனிடம் கூறவில்லை..

ஆனால் நீங்கல் உங்கள் காழ்புணர்ச்சியில்.. அவரை மதத்தோடு ஒப்பிடுகிறீர்கள்.. அரபி அது இது என்று.... திருந்த மாட்டீர்களா??? முஸ்லிம்கல் எது சொன்னாலும் அதை மதத்தோடு தான் ஒப்பீடு செய்வீர்களா???

என்ன நடுநிலையோ..????? ஒரு இனத்தின் மீது வஞ்சம் கொண்டு, எது சொன்னாலும் இனத்தோடு ஒப்பீடு செய்யும் நீங்களெல்லாம் என்னத்த எழுதி கிழித்து சமூகத்தை திருத்த போறீங்கன்னு தெரியல.....

வாழ்க உங்கள் நேர்மை....

வவ்வால் சொன்னது…

அஞ்சா ஸிங்கம்,

//எனக்கும் நல்லா ஹிந்தி தெரியும் . பெருசா ஒரு பிரயோஜனமும் இல்லை ....//

அக்கப்பக்கம் இந்தி லடுக்கி நஹி ஹை :-))

வவ்வால் சொன்னது…

சிராஜ்,

நீங்க தான் மார்க்க காவலன்!!!

//வெளிநாட்டில் ஒருத்தர் உங்கள் தேசிய மொழியாகிய ஹிந்தி தெரியலையேன்னு சொன்னதற்க்காக ஒருவர் வருந்தினால்...
//

இந்தி தேசிய மொழிக்கிடையாது என்பதனை சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

இந்தி, தமிழ் உட்பட 17 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் என சட்டம் சொல்கிறது.

அதிகம் பேர் பேசுவதால் அதனை தேசிய மொழி என நினைத்துக்கொண்டால் யார் என்ன செய்ய முடியும்,அறியாமையே காரணம் எனலாம்.

// நான் தமிழ்நாட்டுக்காரன் அதனால் என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா என கேட்டார் ? //

அப்படிக்கேட்டதற்கு வெட்கம் அடையாமல், இல்லை இந்திய பல ,மொழி,இனம் ,கலாச்சாரம் கொண்ட ஒரு நாடு ,அங்கு ஒரு மொழிக்கு மட்டும் தேசிய அந்தஸ்து கொடுக்கப்படவில்லை

"india is a union of several states, it's a quasi federal government "


என தெளிவாக சொல்லி இருக்கலாமே.

அதை விட்டுவிட்டு வெட்கப்பட்டேன் ,வேதனைப்பட்டேன்,அச்சப்பட்டேன் ,ஆதங்கப்பட்டேன் என்றால் என்ன செய்வது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் நீங்கல் உங்கள் காழ்புணர்ச்சியில்.. அவரை மதத்தோடு ஒப்பிடுகிறீர்கள்.. அரபி அது இது என்று.... திருந்த மாட்டீர்களா??? முஸ்லிம்கல் எது சொன்னாலும் அதை மதத்தோடு தான் ஒப்பீடு செய்வீர்களா??? //

மதம் நாட்டோடு அடையாளப்படுத்துவது புதுசா ?

இந்தியாவில் இந்து மதம்,
ரோமானியர்களின் கத்தோலிக்கம் ரோமன் கத்தோலிக்கம் என்று சொல்வது போல் இஸ்லாம் அரபு மதம் என்று தானே சொல்கிறார்கள், தவறு என்றால் religion of arabs என்று கூகுளிட்டுப் பார்த்துவிட்டு அவ்வாறு எழுதியவர்களுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு கடைசியாக இங்கே வரவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் வெட்கம் கெட்டவரா கோவி?????
//
எதோ ஒரு மலாய்காரன் சொன்னதால் தான் வெட்கம் அடைந்ததாக எழுதியது அவர் தான், அப்படியென்றால் அவருடைய வெட்கம் பற்றி அவர் தெரிந்திருக்கவில்லை என்று தானே பொருள். ஒன்றைப் பற்றி பிரஞ்ஞை இல்லாதவர்களை என்ன சொல்லுவிங்க ?

அறிவில்லாதவர்களை அறிவு கெட்டவர்கள் என்று சொல்வது போல், தாம் வெட்க்கம் அடைய வேண்டிய ஒன்றைப் பற்றி இதுவரை அறிந்ததில்லை என்ற ரீதியில் பொருள்பட மலாய்காரன் சொன்னதுடன் வெட்டக்பட்டதாகவும் எழுதியது அவர் தான்

வேகநரி சொன்னது…

//சிராஜ் கூறியது... என்ன நடுநிலையோ..????? ஒரு இனத்தின் மீது வஞ்சம் கொண்டு எது சொன்னாலும் இனத்தோடு ஒப்பீடு செய்யும் நீங்களெல்லாம் என்னத்த எழுதி கிழித்து சமூகத்தை திருத்த போறீங்கன்னு தெரியல.....வாழ்க உங்கள் நேர்மை....//


இங்கே கோவி என்கின்ற தமிழர் ஹாஜா மைதீன் என்ற ஒரு தமிழர் சொன்னதை பற்றி வருத்தபடுகிறார்.அதாவது நான் ஒன்ற சொன்னா கண்டணம் தெரிவிப்பது போல ஹாஜா மைதீன் என்கின்ற தமிழன் சொன்னதிற்க்கும் கண்டணம் தெரிவிக்கிறார்.
ஆனால் சிராஜ் என்னும் இஸ்லாமிய மதபிரியர்,மதவாதி எமக்கு சம்பதமில்லாத அரபு இனத்தை அவர்கள் மதத்தை கொண்டுவந்து அவர்கள் மீது ஒரு இனத்தின் மீது வஞ்சம் என்று ஒப்பீடு செய்கிறார்.

அஜீம்பாஷா சொன்னது…

Assalamu Alaikum,

sirajbai, take it easy like elder brother (koviyaar) advising younger brother(haaja mohideen) not to think as he wrote.

Easy Yaar, be happy and make other happy.

Azeem Basha

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன நடுநிலையோ..????? ஒரு இனத்தின் மீது வஞ்சம் கொண்டு, எது சொன்னாலும் இனத்தோடு ஒப்பீடு செய்யும் நீங்களெல்லாம் என்னத்த எழுதி கிழித்து சமூகத்தை திருத்த போறீங்கன்னு தெரியல.....

வாழ்க உங்கள் நேர்மை....//

எழுதினதோ, எழுதப்பட்டதோ இஸ்லாம் அல்லது இஸ்லாமியர் தொடர்புடையது, இஸ்லாமியர் எழுதியது என்றால் படிக்காமலேயே கண்ணை மூடி எதிர்ப்பு / ஆதரவு தெரிவிக்கும் தாங்களெல்லாம் நேர்மை பற்றி பேசுவது, பாடம் நடத்துவது, பட்டம் கொடுப்பதெல்லாம் பவர் ஸ்டார் நகைச்சுவைகளைவிட ரொம்பவே மலிவானது.
:)

குட்டிபிசாசு சொன்னது…

//வவ்வால் சொன்னது…

அஞ்சா ஸிங்கம்,

//எனக்கும் நல்லா ஹிந்தி தெரியும் . பெருசா ஒரு பிரயோஜனமும் இல்லை ....//

அக்கப்பக்கம் இந்தி லடுக்கி நஹி ஹை :-))//

ஹிந்தி லடிக்கி எல்லாம் பார்த்தாச்சு! செலவுதான் மிச்சம். தமிழ் லடிக்கியே போதும்.

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

என்ன பார்த்தீர்?

ஒரு தேசிய ஒருமைப்பாட்டினை காட்டலாம்னு பார்த்தேன்... ஹூம் நான் இந்தி தெரியமா லடுக்கி கூட கடலை போட பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். :-((

சல்மான் ,சாருக், அச்சா சாங்க், தில்வாலியா துனியா லே ஜெயாங்கினு எத்தனை தடவை ரவுண்டு அடிப்பதாம் , பேசத்தெரியாதவங்களுக்கு இந்தி தெரியுது , பேசணும்னு நினைக்கிறவனுக்கு இந்தி தெரிய மாட்டேங்குது , என்ன கொடுமைடா இது :-))

தமிழ் லடுக்கி கிட்டே பேசினா தான் வம்பு :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு தேசிய ஒருமைப்பாட்டினை காட்டலாம்னு பார்த்தேன்... ஹூம் நான் இந்தி தெரியமா லடுக்கி கூட கடலை போட பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். :-((//

அண்ணே டவுட்டு,

கடலைக்கும் காதலுக்கும் மொழியெல்லாம் தடையாகுமா ?

Kite சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

அருமையான ஒரு பதிவு சகோ... முதலில் மொழி என்பது ஒரு கருவி அவ்வளவு தான் ..

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் டூவீலர் லைசண்ஸ் எடுக்கின்றீர்கள் ... ஏனெனில் அது தமிழ்நாட்டில் உதவக் கூடியது ... !!! நாளை நீங்கள் திடிர் என அமெரிக்கா, போய் நாசாவில் ராக்கெட் டிரைவர் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது என்ற மிதப்பில் ராக்கேட் ஓட்டவும் லைசண்ஸ் எடுத்து வைப்பீர்களா ? ஹிஹி ....

ராக்கேட் ஓட்ட வேலைக் கிடைத்தால் பார்த்துக்கலாம், அல்லது அதனையே குறிக்கோளாய் வைத்து ராக்கேட் லைஸன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருப்போர் எல்லோருக்கும் கட்டாயப்படுத்தி ராக்கேட் லைஸன்ஸ் எடுக்க வைத்தால் அபத்தமாக இருக்குமா இல்லையா ?

இதே தான் ஹிந்திக்கும் பொருந்தும் ... !!!

மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?

பெயரில்லா சொன்னது…

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நம் நாட்டைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. மலேசியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் ஒரு மொழி தமிழ் என நன்கு தெரியும்.. ஏனெனில் அங்கு இரண்டு மில்லியன் தமிழர்கள் இருப்பதால். தெரியவில்லை என்று சொன்னால் நம்புற மாதிரி இல்லை. உதா.

கனடா வந்த புதிதில் எல்லோரும் எனது மொழி இந்தியனா என்று கேட்டார்கள் ? இந்தியனா !!! இந்தியன் என்பது மொழி அல்ல .. கனடியன் என்றால் எப்படி மொழி இல்லையோ அப்படி இந்தியன் என்பது தேசிய அடையாளம். எனது மொழி தமிழ் - இந்தியாவில் 26 தேசிய மொழிகளும், 1600 இதர மொழிகளும் உள்ளன என்றேன். புரிந்துக் கொண்டார்கள் இப்போது என்னை சந்திக்கும் போது வணக்கம், நன்றி சொல்வார்கள் ..

இதே மயக்கம் நமக்கும் உண்டு. சீனர்களைப் பார்த்து சீனம் பேசுவீரா என்றுக் கேட்போம், அது அபத்தம்.. ஏனெனில் சீனாவில் இரண்டு தேசிய மொழிகளும், பல குறுந்தேசிய மொழிகளும் உள்ளன. ஒரு சீனரிடம் சீனம் தெரியுமா எனக் கேட்க வேண்டாம் ? மாண்டரின், காண்டனிஸ், ஹக்காய் தெரியுமா என்று தான் கேட்க வேண்டும். இது எனக்கு ஒரு சீனர் கொடுத்த விளக்கம். இப்போது எனக்கு நி ஹா, சீ சீ சொல்லத் தெரியும் .. :)

இதே போல பிலிப்பைன்ஸ் காரர்களிடம். பிலிப்பைன்ஸ் தெரியுமா எனக் கேட்க கூடாது. ஏனெனில் அங்கும் பல மொழிகள் உள்ளன. முக்கிய மொழியாக இருப்பது தக்கலோக்.. இப்படி பல நாடுகளில் இருப்போரை நாட்டின் பெயரால் மொழியைக் கேட்க கூடாது...

இது அமெரிக்கர்களுக்கும், கனடியர்களுக்கும் பொருந்தும். அமெரிக்கன் என்றோ கனடியன் என்றோ மொழி இல்லை. ஆங்கிலம், ஸ்பானிஸ், பிரஞ்சு என பல மொழிகள் இங்கும் உள்ளன ... !!!

படிக்க : மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?

SurveySan சொன்னது…

:) related content

ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...

வவ்வால் சொன்னது…

கோவியண்ணே,

//கடலைக்கும் காதலுக்கும் மொழியெல்லாம் தடையாகுமா ?//

நல்லாக்கேட்டிங்க போங்க, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என விழி மொழி எல்லாம் இலக்கியத்தில் தான் ,கொஞ்சமாவது பேசி முயற்சிக்கணும் இல்லைனா ... இலவு காத்த கிளியாகிட வேண்டியது தான்.

அப்புறம் நான் தாண்டா இப்போ தேவ தாஸ் இத்தோடா சேர்த்து நாளு கிளாஸ்னு பாடிக்கிட்டு இருக்க வேண்டியது தான் :-))

--------

இப்போ சென்னையில சுரங்க ரயில் அமைக்கும் பணியில் சீனர்களும் , தைவான் காரங்களும் தான் வேலை செய்றாங்க, அவங்க கூட இந்திய தொழிலாளர்கள் சைகையிலே பேசிக்கிறாங்கன்னு இந்து நாளேட்டில் செய்தி வந்திருக்கு!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்