பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2012

சுவன அண்ணன் சொல்லும் பொய்கள் !


தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆ(க்)கிவிட்டார்கள், அதனால் வலையுலகில் சுவன அண்ணன் பொன்னான கருத்துகளுக்கு பல முனைகளில் இருந்தும் எதிர்வினைகள் வருது, அண்ணன் சுவனப் பிரியன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வெற்றி வெற்றி என்று கூறிக் கொள்ளலாம். ஆனாலும் சுவன அண்ணன் மற்றும் அவருடைய நான்கு ஆதரவாளர்களும் அவர்களின் பீஜெ டைப் வஹாபிய கொள்கைகளும் தான் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்தவை என்பதை நான் புறக்கணித்தே வருகிறேன், இருந்தாலும் அவர்களுக்கான எதிர்வினைகள் குறித்து அவர்களுடைய கருத்துகள் 'இஸ்லாமை' தாக்குவதாக அவர்கள் புலம்புவதில் இருந்தும் ஏனைய இஸ்லாமியர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாம் பெரிதாக கவலைப்பட கலவரப் பட ஒன்றும் இல்லை. சுவன அண்ணனின் தலைமை பதவிக்கு போட்டி நடக்காமல் இருந்தால் சரி. சுவன அண்ணனுக்கு நான் எதிர்வினை எழுதுகிறேன் என்பதால் எனக்கு அவர் எதிரி என்பதெல்லாம் கிடையாது, அப்படி இருந்தால் 'அண்ணன்' அடைமொழியை அவ்வளவு எளிதாகப் போட்டுவிடுவேனா ?

*****

அண்ணன் சுவனப்பிரியன் சொல்கிறார், "ஈழத்தமிழர்களைத் தாக்க பிரபாகரனை ஏன் தாக்க வேண்டும் அவர்களின் மதமான இந்துகடவுள்களை அல்லவா தாக்கவேண்டும் ?" என்கிற ஈழப்பதிவர்களின் கூற்று இரு மதங்களுக்கிடையே பிரச்சனைக் கிளப்பும் வகையில் உள்ளதாம்,  சுவனப்பிரியன் அண்ணனுக்கு தெரிந்து இஸ்லாமிய (வஹாபிய) பதிவர்கள் யாரும் பிற மதங்களைத் தாக்கி எழுதியதே கிடையாதாம். அண்ணன் சொல்வதன் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் முழு ஒட்டகத்தையும் குடிசைக்குள் நுழைத்துவிட்டு ஒட்டகமே இந்தப் பக்கம் வரவில்லை என்பது போல் சொல்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் "சிந்திக்க சில உண்மைகள்" என்ற பெயரில் பெரியாரின் படத்தைப் போட்டு கிறித்துவ / இந்து மதங்களைப் பற்றி மிகவும் கிழ்தரமாக பல்வேறு இடங்களில் எழுதப்ப்ட்டவைகளை ஒட்டி வெட்டி பதிவுகள் வெளியானது, பெரியார் ஆட்கள் கிறித்துவ மற்றும் இந்து மதங்களை மட்டுமே தாக்கி எழுத என்ன முகாந்திரம் உள்ளது ? அந்த வலைப்பதிவில் பெரியார் படம் இருப்பது தவிர்த்து பெரியாரின் முக்கிய கொள்கையான கடவுள் மறுப்பு குறித்து எந்த இடுகையும் இல்லை என்பதாலும், அந்த வலைப்பு முக்கியமாக கிறித்துவ / இந்து மதத்தினரை தாக்கி எழுதியதால் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தின் சார்பில் எழுதப்படுவது என்பதை அதனை தொடர்ந்து பார்த்துவரும் எவரும் சொல்லிவிடுவர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவை பின்னர் தமிழ்மணம் திரட்டியும் நீக்கியது. 

இஸ்லாமியர்கள் (வஹாபியர்கள்) அவ்வாறு செய்யக் கூடியவர் இல்லை என்று நம்பும், பரப்பும் சுவன அண்ணனுக்கு குறிப்பிட்ட வலைப்பதிவை நடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருக்க ஞாயமில்லை, இருந்தும் சுவன அண்ணன் இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யக் கூடியவர்கள் இல்லை என்கிறக் கருத்தை வலைப்பதிவில் எழுதிவருவது போல், சம்பந்தப்ப்ட்ட வலைப்பதிவை எழுதுபவர் ஒரு இஸ்லாமியராக இருக்க தகுதியற்றவர் என்று வெளிபடையாக எழுதி கண்டனம் தெரிவிப்பாரா ? தவிர "UNMAIKAL" என்ற பெயரில் அண்ணனின் பதிவுகளில் பின்னூட்ட வாந்தி எடுப்பவரும் பிற மதங்களை தாக்கிய கருத்துகளைத் தான் அள்ளித் தெளித்துவருகிறார்

தவிர வாஞ்சூர் என்கிற பெரியவர் (இவரு தான் UNMaikal?) நடத்திய வலைப்பதிவில் 'இது தான் இந்தியா' என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெறும் மோசமான செயல்களின், அவல நிலையின் வீடியோ காட்சிகளை இணைத்து வெளியிடுவதே பதிவாக தொடர்ந்து வந்தது, அண்ணன் சுவனப்பிரியன் அவர்களிடம் சொல்லிக் கேட்கும் பொழுது, பெரியவர் வாஞ்சூர் ஐயா இந்தியாவின் மீது அக்கரைக் கொண்டுள்ளதால் தான் மனம் நொந்து இந்தியா திருந்த வேண்டும் என்கிற நோக்கில் அத்தகைய வீடியோ காட்சிகளை வெளி  இடுவதாக இட்டுக் கட்டி பதிலும் சொன்னார், சுவன அண்ணன் எனக்கு இதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும், இஸ்லாம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று அன்றாடம் எழுதும் தாங்களுக்கோ, பெரியவர் வாஞ்சூருக்கோ இஸ்லாமியர் பெயர்களில் நடைபெறும் வன்முறைகளும் வீடியோ காட்சிகளும் காணக் கிடைக்கவில்லையா ? இந்தியாவின் மீது கொண்ட அக்கரையின் காரணமாக அதன் மீது ஏற்பட்ட ஆற்றாமையினால் வீடியோ காட்சிகளைப் போட்டு இந்தியாவை திருத்த முனையும் தாங்கள், இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?, தான் ஒரு இஸ்லாமியன், பிறகு இந்தியன் என்கிற முன்னெடுப்புகளில் தங்களுக்கும் வாஞ்சூர் ஐயாவிற்கும் இஸ்லாம் மீதான பற்றுதல் தான் கூடுதலாக இருக்க வேண்டும். இது தான் இந்தியா என்ற வீடிய காட்சிகள் கிடைக்கும் உங்களுக்கு இது தான் இஸ்லாம் என்று படம் காட்டுவதற்கு படம் இல்லை என்று வெளிப்படையாக் கூறினால் கூகிளிட்டு தேடித்தர பலர் இருக்கிறார்கள். படம் காட்ட நீங்கள் தயாரா ?

உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?

மீண்டும் ஒருமுறை,

எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.

சுவன அண்ணன், நான் இஸ்லாமை எதிர்த்து எதுவும் எழுதுவதில்லைக் காரணம் உங்களையும் சேர்த்து  நான்கு வகாபிய பதிவர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும் அவர்களின் கருத்துகள் மட்டுமே இஸ்லாமிய கருத்துகள் என்றும் நான் நம்புவதில்லை.

இறை நாடினால் மேலும் தொடரும்....

42 கருத்துகள்:

நன்னயம் சொன்னது…

வாஞ்சூர் என்பவரை விட மோசமான இன, மத வெறியர் இனி பிறந்துதான் வரவேண்டும். இவருடைய பதிவுகளில் நஞ்சுதான் மிகுந்திருக்கும்.

நன்னயம் சொன்னது…

உண்மையான முஸ்லிம் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டான் என்று சு.பி அறிக்கை விடுவார்.

suvanappiriyan சொன்னது…

சகோ கோவி கண்ணன்!

//சுவன அண்ணன்//

எனக்கு வயது 47 தான். எனவே சாதாரணமாக சுவனப்பிரியன் என்றே கூப்பிடலாம். :-)

//தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆகிவிட்டார்கள்,//

ஆகவில்லை. ஆக்கி விட்டார்கள். :-(

//இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?,//

தாலிபான்கள் செய்யும் சில காரியங்களை கண்டித்து இருக்கிறேன். தற்போது லிபியாவில் நடந்த காட்டு மிராண்டி தனமான தாக்குதலையும் கண்டித்தேன். இனிமேலும் இஸ்லாத்தின் பெயரால் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்க சென்றால் அதையும் கண்டிப்பேன்.

//உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?//

அதை எனது கருத்தாக சொல்லவில்லை. குர்ஆன் மூல மொழிகள் அனைத்துக்கும் தூதர்களை அனுப்பியிருப்பதாக சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் 'இருக்கலாம்' என்று சொன்னேன். அது எனது நம்பிக்கை. உங்களை கட்டாயப்படுத்த வில்லையே

//எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.//

எனது தளத்துக்குத்தான் நான் பதில் சொல்ல முடியும். வாஞ்சூர் அண்ணனின் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் கேட்டால் அதற்கு பதிலளிப்பார். தமிழ் ஓவியா, போன்று பல தளங்கள் இந்து மதத்தின் ஆபாசங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையே இஸ்லாமியர் செய்தால் பிரச்னையாகும் என்று நண்பர்களுக்கு நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இனி அவ்வாறு ஆட்சேபகரமான பதிவுகள் வந்தால் சுட்டிக் காட்டுங்கள். நானும் அவர்களிடம் சொல்லி நீக்க முயற்ச்சிக்கிறேன். கருத்து மோதல் இருக்கலாம். அது ஆபாசமாகி விடக் கூடாது. போன பதிவில் உங்கள் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததை வெளியிட்டதையும் நான் விரும்பவில்லை.

IlayaDhasan சொன்னது…

சமீபத்தில அண்ணன் சொன்னது , சென்னையில் ஒரு குறிபிட்ட முஸ்லிம்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள் (அந்த சர்ச்சைக்குரிய படம்) சம்பந்தமாக ..அதுல வசதியா மத்த நாடுகள் எரிக்கும் படங்களை போட்டவர் , சென்னையில் நடந்த கல்லெறி செய்தி மற்றும் விடியோவை மட்டும் வசதியாக மறந்து விட்டு, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்தார். கேட்டால், அது வேற முஸ்லிம் குரூப் என்கிறார். அய்யா அவங்களும் அதே புத்தகத்த தானே படிக்கிறாங்க , அவங்க முஸ்லிம் இல்லைன்னு தைரியாமா சொல்லுங்க பாப்போம் , அப்புறம் குண்டு எங்க வெடிக்கும்னு நான் வேற தனியா சொல்லனுமா?
இப்படி வசதிக்கு தகுந்த மாதிரி மறைக்கிரதுக்குப் பதிலா , ஆமாம் , என் மதத்தைச் சார்ந்தவர்கள் இன்னின்ன தப்பு செய்கிறார்கள் , அவர்கள் திருந்த வேண்டும் இல்லை என்றால் அல்லா அவர்களை சும்மா விடமாட்டார் என்று எழுத முடியுமா, எங்கயாவது எழுதிருக்காரா? தர்ம அடி விழும்ன்னு தெரிஞ்சதால பொத்திக்கிட்டு இருக்கிறாரே ,அதே போல எல்லா விசயத்திலும் இருந்தால் ரொம்ப நல்லது,ஆனா முடியுமா , புவ்வா கட் ஆயிடுமே!

நன்னயம் சொன்னது…

ஒரு மத வெறியரின் வலைத்தளத்திலிருந்து சில துளிகள்

http://www.amjat.blogspot.in/p/blog-page_20.html

http://www.amjat.blogspot.in/2011/01/blog-post_11.html

http://www.amjat.blogspot.in/2011/02/blog-post.html

http://www.amjat.blogspot.in/2011/11/blog-post_18.html

Robin சொன்னது…

//எனது தளத்துக்குத்தான் நான் பதில் சொல்ல முடியும்.// உங்கள் தளத்தில் உண்மைகள் என்ற பெயரில் இடப்படும் ஆபாச லிங்குகளை அனுமதிப்பது ஏன்?

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நன்னயம் சொன்னது…

"வாஞ்சூர் அண்ணனின் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் கேட்டால் அதற்கு பதிலளிப்பார். " நல்ல நகைச்சுவை. அவர் தனது தளத்தில் moderation activate பண்ணி வைத்திருக்கிறார். ஏதாவது கேள்வி கேட்டால் பதில் வராது. பாராட்டி பதில் போட்டால் நன்றி என்று பதில் வரும். நெஞ்சில் நேர்மையும் தனது கருத்தில் தெளிவும் உள்ளவன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ஆனால் வாஞ்சூர் க்கு இரண்டும் இல்லை.

saturn730 சொன்னது…

1% பீர் குடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதுன்னு புருட விட்டவர் தானே அவர்.. அவருக்கு வாகாக அனைத்தையும் வளைக்க முயற்ச்சிக்கிறார்..

கோவி.கண்ணன் சொன்னது…

Kubato Dubaqur சொன்னது…

ஐயா உங்கள் கருத்து அகற்றப்பட்டது. 9 வயது, கன்னித்திரை என்பதற்கு வயது குறைந்தவருடன் திருமணம் என்று பயன்படுத்தி இருக்கலாம்

suvanappiriyan சொன்னது…

//இப்படி வசதிக்கு தகுந்த மாதிரி மறைக்கிரதுக்குப் பதிலா , ஆமாம் , என் மதத்தைச் சார்ந்தவர்கள் இன்னின்ன தப்பு செய்கிறார்கள் , அவர்கள் திருந்த வேண்டும் இல்லை என்றால் அல்லா அவர்களை சும்மா விடமாட்டார் என்று எழுத முடியுமா, எங்கயாவது எழுதிருக்காரா? தர்ம அடி விழும்ன்னு தெரிஞ்சதால பொத்திக்கிட்டு இருக்கிறாரே ,அதே போல எல்லா விசயத்திலும் இருந்தால் ரொம்ப நல்லது,ஆனா முடியுமா , புவ்வா கட் ஆயிடுமே!//

கூட்டத்தில் இவ்வாறு ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தூதரகத்தை தாக்கியது கண்டிக்கத் தக்க செயல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனது தளத்துக்குத்தான் நான் பதில் சொல்ல முடியும். வாஞ்சூர் அண்ணனின் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் கேட்டால் அதற்கு பதிலளிப்பார். //

உங்க தளமா மற்றவர் தளமா என்பது அல்ல கேள்வி, "உண்மையான" இஸ்லாமியர்கள் இவ்வாறு செய்வதில்லை என்று நீங்கள் அடிக்கடிக் கூறுவதை நீங்களே மறுக்க வேண்டும்.

வவ்வால் சொன்னது…

கோவி,

வகாபிகள் உலகம் முழுக்க ஒட்டு மொத்தமாக ஒரு சதவீதம் கூட இல்லை,ஆனால் அவர்கள் தான் இணையத்தில் குறிப்பாக தமிழில் ஆக்டிவாக இருக்காங்க ,அதனால் நிறைய இருப்பது போன்ற பிரமை.

இரானை கூட இஸ்லாமிய தேசம்னு சவுதி ஏற்பதில்லை என்ற உண்மையை சு.பி.சுவாமிகள் ஏனோ சொல்வதில்லை :-))

உண்மையான இஸ்லாமியர் எங்கேன்னு இனிமே தான் தேடணும் :-))

இந்த எதிர்ப்பு நடந்த போது செம டிராபிக் ஜாம், என்னமோ சு.பி ஒன்னுமே நடக்கலைனு சில போட்டோக்கள் காட்டுறார், இவரை அண்ணாசாலையில் போக விட்டு இருக்கணும் :-))

suvanappiriyan சொன்னது…

//வகாபிகள் உலகம் முழுக்க ஒட்டு மொத்தமாக ஒரு சதவீதம் கூட இல்லை,ஆனால் அவர்கள் தான் இணையத்தில் குறிப்பாக தமிழில் ஆக்டிவாக இருக்காங்க ,அதனால் நிறைய இருப்பது போன்ற பிரமை.//

நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் கூட வஹாபிகள் ஏற்பாடு செய்ததுதான். அவரவர் தங்களின் சொந்த செலவில் வந்து உணர்வு பூர்வமாக கலந்து கொண்டதை காண வில்லையா? தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தை படித்துப் பாருங்கள்.

அரபு நாடுகள் 95 சதவீதம் வஹாபிகளே! இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இந்த நாடுகளில் தான் மூடப் பழக்கங்களும், தர்ஹா வணக்கங்களும் இருக்கும். இது கூட இந்து மதத்தின் தாக்கத்தினால் வந்தது. மதம் மாறும் போது அங்கிருந்த பழக்கங்களையும் இங்கும் கொண்டு வந்து விட்டனர். அதனை நீக்கவே போராடிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம் குறுகிய காலத்திலேயே!

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி.கண்ணன்!சகோ.சுவனப்பிரியனை மிதவாத வகாபி எனலாம்.ஆனால் அவரை சுற்றியுள்ள தீவிரவாத கருத்தாளர்களுக்கும் சேர்த்தே அவர் வாங்கி கட்டிக்கொள்கிறார் பாவம்!

அண்ணன் நேற்று தவ்ஹீத்காரர்கள் அறவழியில் போராட்டம் செய்தார்கள் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தர்ஹா வணக்கங்களும் இருக்கும். இது கூட இந்து மதத்தின் தாக்கத்தினால் வந்தது.//

மதம் மாற்றுவதற்கு கத்தோலிக்கமும், உங்கள் ஆட்களும் தேர்ந்தெடுத்த வழி/வலிகள் தான் அவை, பிறகு ஏன் இவிங்களைப் போய் நீங்க தாக்குறிங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணன் நேற்று தவ்ஹீத்காரர்கள் அறவழியில் போராட்டம் செய்தார்கள் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்:)//

இவிங்க தான் ஒருவேளை அறவாளி அந்தனர்களோ.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் கூட வஹாபிகள் ஏற்பாடு செய்ததுதான். அவரவர் தங்களின் சொந்த செலவில் வந்து உணர்வு பூர்வமாக கலந்து கொண்டதை காண வில்லையா? தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தை படித்துப் பாருங்கள். //

தாடியோடு வந்த அவர்களைப் பார்க்கிற மற்றவர்களுக்கு கண்டிப்பாக பயம் ஏற்பட்டிருக்கும் சுவன அண்ணன்.
:)

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ கோவி
என்னைப் பொறுத்தவரை மத பிரசாரகர்கள் பொய் சொல்வதை தவிர்க்க இயலாது என்றாலும்,வஹாபிகளின் பொய்கள் மிக மிக அதிகம்.
பாருங்கள் சகோ சு.பி யின் கருத்து
/குர்ஆன் மூல மொழிகள் அனைத்துக்கும் தூதர்களை அனுப்பியிருப்பதாக சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் 'இருக்கலாம்' என்று சொன்னேன்./

மொழிகளுக்கு அனைத்துக்கும் தூதர் என குரானில் இல்லை.
அடைப்புக்குறியை கவனிக்கவும்!!
//10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.//

சமூகம்=[(10:47:2)
ummatin
nation]
ஆகவே உம்மத்தின் என்பது சமூகம்,சாதி,இனம்,நாடு என பொருளில் பயன்படுத்தப்படலாம்.

மொழி அல்ல!!
குரானில் மத்திய கிழக்கு தாண்டிய நாடுகள் பற்றி எதுவும் இல்லை. அங்கு வாழ்ந்த மக்கள்,பைபிள் தோராவில் குறிப்பிடப்பட்ட மக்கள்,விஅல்ங்குகள் மட்டுமே உள்ள போது அது உலகையே காக்க வந்த செய்தி எனபது நகைப்புக்கு உரியது!!!
**************
//எனது தளத்துக்குத்தான் நான் பதில் சொல்ல முடியும். வாஞ்சூர் அண்ணனின் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் கேட்டால் அதற்கு பதிலளிப்பார்..//
அப்புறம் சுவனப்பிரியன் பி.ஜேவின் கருத்தான பைபிள் ஒரு ஆபாச புத்தகம் என்பதை உங்கள் தளத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பு ஊட்ட வில்லையா!!!


திரு வாஞ்சூர் பிற மதங்களை ஆபாசமாக விமர்சித்தாரா இல்லையா?


ஒரு கோயிலில் நடக்கும் ரெகார்ட் டேன்ஸ் காணொளியில் பெண்கள் ஆடை நீக்கி ‍‍‍‍___ காட்சி வந்ததை குறிப்பிட்டு 18+ மட்டுமே போட சொன்னேன்.பதிலே சொல்லவில்லை!!.

நல்ல இரசனை அவருக்கு!!!

அவர் என்னத்தை பதில் சொல்லி. குரான் உங்களை மாதிரி,உண்மை மாதிரி,வாஞ்சூர் மாதிரி ஆட்களை உருவாக்கும் என்றால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!அது குரானின் குற்றமே!!!
***********
நன்றி

சார்வாகன் சொன்னது…

நம் சகோ சு.பி நல்ல நகைச்சுவையாளர்!!

//கூட்டத்தில் இவ்வாறு ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். .....//
லிபிய ,மத்திய கிழக்கு மக்கள் செய்வது தெளிவான நபி வழி செயல். சு.பிதான் காஃபிர்களிடம் தாக்கியா செய்கிறார்!!!
படியுங்கள்!!

என்னை ஒருத்தன் திட்டிவிடான் அவனைப் போட்டுத் தள்ளு என ஆள் அனுப்பி கொலை செய்வது யார்??

4037. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்" என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார்கள்.
அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்" என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)" என்று கூறினார்கள்" (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்" என்று பதிலளித்தான்.
அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.[contd]

சார்வாகன் சொன்னது…

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"
மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

Robin சொன்னது…

//முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.// இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா, சார்வாகன்.

dondu(#11168674346665545885) சொன்னது…

இசுலாமியர் மாரடித்தல் போன்ற அறுவறுப்பூட்டும் சடங்குக்ளை செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஷியாக்கள் என்பார் சுவனப்பிரியர்.

அது போன மாசம், இந்த மாசம் இதுவரைக்கும் யாரும் அடிச்சதில்லைன்னு சொல்லும் கைப்பிள்ளை நினைவுக்கு வருகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan சொன்னது…

சகோ சார்வாகன்!

//மொழிகளுக்கு அனைத்துக்கும் தூதர் என குரானில் இல்லை.
அடைப்புக்குறியை கவனிக்கவும்!!
//10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.//

சமூகம்=[(10:47:2)//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இங்கு வெகு அழகாக அனைத்து தூதர்களும் அவரவர் சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியதாக இறைவன் சொல்கிறான். தமிழ் பழம் பெரும் மொழி என்பதை அறிவோம். எனவே கண்டிப்பாக தமிழ் மொழிக்கு அல்லது திராவிடர்களுக்கு ஒரு தூதர் வந்திருப்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது. நீங்கள் யூதர்கள் புனைந்த பல ஹதீஸ்களை வெளியிட்டு எத்தனை கோல்மால் வேலைகளையும் பண்ணலாம். ஆனால் குர்ஆனில் நடக்காது.
இப்போ யாருங்கண்ணா பொய் சொன்னது?

இந்த விஷயத்திலேயே இத்தனை தடுமாற்றம் இருந்தால் நீங்கள் எப்போ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிற தியரியை நிரூபித்து எங்களை எல்லாம் நாத்திகர்கள் ஆக்கப் போறீங்களோ தெரியல. :-)))))))))))))))))

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

//அரபு நாடுகள் 95 சதவீதம் வஹாபிகளே! //

அப்போ மொத்தமா எத்தனை கோடி தேரும்?

அரபு நாடுகளில் சவுதி தவிர எந்த நாடு வஹாபி நாடு என சொல்லிக்கும்?

மொத்த வளைகுடா இஸ்லாமியர்கள் எண்ணிக்கை, இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் மட்டும் இருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அளவுக்கு தான் இருக்கும் என்பதாவது உங்க மரமார்க்க மண்டையில் ஏறுமா?

அப்படி இருக்கும் போது எவ்வளவு வகாபி தேருவாங்க உலகம் முழுக்க.

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேஷியா, அடுத்து பாகிஸ்தானும், இந்தியாவும், இங்கே தான் அதிக இஸ்லாமியர்கள் இருக்காங்க, ஆனால் அதில் வகாபிகள் மிக சொற்பம் தான்.

சென்னையில் கலந்து கொண்டவங்க எல்லாம் வகாபியல்ல ,பொதுவாக இஸ்லாமியர் என்ற அளவில், ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து வரும் வகாபிகள் வன்முறையில் ஈடுபடுவது வழக்கம்.

சென்னையிலும் கல்லெறிந்தவர்கள் வகாபிகளாகவே இருக்கும்,ஆனால் எல்லா இஸ்லாமியருக்கும் கெட்டப்பெயர் கிடைத்து இருக்கும் :-))

-------------
சகோ.சார்வாகன்,

கதை செமையா இருக்கே, அது என்ன ஆணின் தலை மயிரை மோந்து பார்க்கிரானுங்க :-))

குட்டிபிசாசு சொன்னது…

சு.பி,

//இங்கு வெகு அழகாக அனைத்து தூதர்களும் அவரவர் சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியதாக இறைவன் சொல்கிறான். தமிழ் பழம் பெரும் மொழி என்பதை அறிவோம். எனவே கண்டிப்பாக தமிழ் மொழிக்கு அல்லது திராவிடர்களுக்கு ஒரு தூதர் வந்திருப்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது. //

முகம்மது காலத்திற்கு முன்னரே கன்னடம், தெலுங்கு வந்துவிட்டது. அதிலும் யாராவது தூதரை கண்டுபிடித்து சொல்லுங்களேன்.

குட்டிபிசாசு சொன்னது…

வவ்வால்,

//கதை செமையா இருக்கே, அது என்ன ஆணின் தலை மயிரை மோந்து பார்க்கிரானுங்க :-))//

ஆங்கிலத்தில் Fetish என்ற வார்த்தை கேள்விப்பட்டிருப்பீர்களே. அது தான் இது.

சார்வாகன் சொன்னது…


@ சுவனப்பிரியன்

குரானில் இப்படி உதார் காட்டும் வசனங்களில் சில வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள் அதாவது அந்த வாக்கியத்தில் உள்ள சில சொற்கள் குரானில் வேறு இடத்தில் அதே பொருளில் வராது.
ஆகவே குரானில் நினைத்த பொருள் கொண்டுவருவது 1. மொழியாக்கம் 2. அடைப்புக்குறி மூலம் எளிதே.
(14:4:3)
min=any
http://wiki.answers.com/Q/What_does_min_in_Arabic_mean
min means who
من
//இங்கு வெகு அழகாக அனைத்து தூதர்களும் அவரவர் சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியதாக இறைவன் சொல்கிறான். தமிழ் பழம் பெரும் மொழி என்பதை அறிவோம். எனவே கண்டிப்பாக தமிழ் மொழிக்கு அல்லது திராவிடர்களுக்கு ஒரு தூதர் வந்திருப்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது.//

எனினும் குரானில் சொல்வதை,அதன் விளக்கமாக மூமின்கள் சொல்வதை காஃபிர்கள் ஏற்கமுடியாது.

//நீங்கள் யூதர்கள் புனைந்த பல ஹதீஸ்களை வெளியிட்டு எத்தனை கோல்மால் வேலைகளையும் பண்ணலாம். ஆனால் குர்ஆனில் நடக்காது.
இப்போ யாருங்கண்ணா பொய் சொன்னது?//

ஹதிதுகள் தெளிவாக குழப்பமுடியாமல் இருப்பதால் யூதர்கள் இட்டுக் கட்டியதா?? ஹி ஹி நீங்கள் கூறிய ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தூதர் என்பதற்கு ஏதேனும் ஒரு ஹதிதில் தெளிவாக காட்டமுடியுமா!!!

குரான் என்பதே அரபி மொழி அல்ல சிரிய அராமைக் என்பதே இப்போதைய பல் அறிஞர்களின் கருத்து!

http://www.syriacaramaicquran.com/
!
இந்த சிருய அராமைக்கின் படி ஹூரி என்றால் சொக்க வைக்கும் நித்திய கன்னிகை அல்ல திராட்சைப் பழம். இதை சொன்னாலே சுவனத்தின் மவுசு குறைந்து விடும்.மூமின்கள் யாரும் வன்முறையில் இறங்க மாட்டார்!! ஹி ஹி

முகமது என்பவர் மெக்காவில் வாழ்ந்ததின் சான்றுகள் எதுவுமே இல்லை!!!

http://en.wikipedia.org/wiki/Historicity_of_Muhammad
The earliest source of information for the life of Muhammad in a historical context (ca. 570/571 – June 8, 632 AD) is the Qur'an, which gives very little information, and its historicity has also been questioned.[1][2] Next in importance is the sīra literature and Hadith, which survive in the historical works by writers of third and fourth century of the Muslim era (900−1000 AD).[3] There are also a few non-Muslim sources which are valuable both in themselves and for comparison with Muslim sources.[4]

http://www.youtube.com/watch?v=Que1xs81Wts

மெக்கா என்னும் நக்ரமே பொ.ஆ 001 க்கு முன்பு இல்லை!!! இல்லை!!!

http://religionresearchinstitute.org/mecca/archeology.htm

ஆதம் காபா கட்டினார், ஆபிரஹாம்( பைபிள் கணக்கு சுமார் 4000 ஆண்டுகள்க்கு முன் பொ.ஆ.மு.2000),இஸ்மாயில் காபாவை மீண்டும் கட்டினர் என்பதெல்லாம் சான்று அற்ற விடயம்!!
ஆகவே குரானில் உள்ள சொற்களை வைத்து சொல்லும் வார்த்தை விளையாட்டை காஃபிர்கள் நம்ப முடியாது!!!
திரு வள்ளுவர் சொன்ன நல்ல விடயங்களை மூமின்கள் பின்பற்றினால் நன்மை என்றாலும் ,அவரை இறைத் தூதர் என குரான் சொல்வதாக மூமின்கள் கூறுவதை ஏற்க முடியாது!!!
ஏன் துல்கர்னைன் [ 18th suuraa the cave)என்பது சிலை வணங்கி அலெக்சாண்டர் என சான்றுகளின் படி ஒத்துக் கொள்ளக் கூடாது? இருக்கும் விடயத்தை விட்டு இல்லாத விடயங்களை சொல்வது யார்?
நன்றி
சார்வாகன் சொன்னது…

Allah, his messengers, and their language

http://www.answering-islam.org/Quran/Incoherence/messenger_language.html

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

வள்ளுவர், அகத்தியர், தொல்காப்பியர் எல்லாம் தான் அந்த இறைத்தூதர்கள் :-))

இஸ்லாமுக்கு முன்னரே ரோம சாம்ராஜ்யம் ,சீசர் எல்லாம் இருந்தாங்க ,ஆனாலும் அவர்களும் இறைத்தூதர்களே, எல்லமே இஸ்லாமியர்கள் :-))

இப்போ நான் ஒரு புனித நூல் எழுதி நானும் இறைத்தூதர், என்னோட மதத்தினை தான் முகமது சொன்னார்னு சொல்லிட்டா உடனே சு.பி சுவாமிகள் நம்பிடுவார்ல :-))

ஃபெட்டிஷ், ஜட்டிஷ்னு ஒரே கில்மாவா இருக்கே புனித மார்க்க வரலாறு :-))

நான் 1001 இரவுகள் கதையை 6-7 ஆம் வகுப்பு படிக்கும் போதே படிச்சேன், செக்ஸ் கதை படிக்கிறியான்னு ,உதை கிடைச்சது ..அவ்வ்!

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு வள்ளுவர் சொன்ன நல்ல விடயங்களை மூமின்கள் பின்பற்றினால் நன்மை என்றாலும் ,அவரை இறைத் தூதர் //

சார்வாகன்,

இறைத்தூதருக்கான அடையாளங்கள் நித்தி சாமியாருக்கு பொருத்தமாக இருக்கும், ஏன்னா நித்தி ஸ்வஸ்தப்படுத்துறாரு, வியாதிகளை குணப்படுத்துகிறார், ஒருவேளை நித்திக்கு திருமணம் நடந்திருந்தால் நித்தியை இந்தியாவின் இறைத்தூதர் என்று அறிவித்துவிடுவார், ஆனாலும் இறுதி இறைத்தூதர் என்ற சொல் முகமதுவிற்கு முன்பு இருப்பதால் நித்தி பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு திருவள்ளுவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்,

:)

Robin சொன்னது…

//ப்போ நான் ஒரு புனித நூல் எழுதி நானும் இறைத்தூதர், என்னோட மதத்தினை தான் முகமது சொன்னார்னு சொல்லிட்டா உடனே சு.பி சுவாமிகள் நம்பிடுவார்ல :-))//

ஹலோ வவ்வால், இறைத்தூதர் ஆகுறது அவ்வளவு ஈசியில்லை. முகமது வந்தபிறகு இறைத்தூதருக்கான தகுதிகளே மாறிப் போச்சு. குறைந்தது நூறு கற்பழிப்பு, பத்து கல்யாணம், வழிப்பறிக் கொள்ளை, ஆயிரம் கொலைகள் செய்யணும். நீங்க சொன்னா யார் தலையையும் கொண்டு வருவது மாதிரி ஒரு கூலிப்படை ரெடி செய்யணும். எத்தனை கொலை செய்தாலும் எத்தனை பெண்களை கற்பழித்தாலும் வவ்வால் ஒரு நல்லவர், அவர் ஒரு வல்லவர், கருணையாளர் அப்படின்னு வாய் கூசாமல் பொய் சொல்லும் பொய்யர்களை ரெடி பண்ணனும். இதெல்லாம் உங்களால் முடியுமென்றால், நீங்களும் இறைத்தூதர்தான்.

தருமி சொன்னது…

//நீங்கள் யூதர்கள் புனைந்த பல ஹதீஸ்களை வெளியிட்டு//

ஓ! அப்டி வேற இருக்கோ??!! அப்போ முகமது ஹதீஸ் & யூத ஹதீஸ் அப்டின்னு இருக்கும் போலும். அப்டிங்களா, சுபி? இல்லை .. இன்னும் வேற வேற டைப் ஹதீஸ் இருக்கோ?

எனக்கு ஒரு சந்தேகம் மக்களே! எனக்கு ‘அந்த உண்மை தெரிஞ்சாகணும்”.

23 வருஷமா ஜிப்ரேல் வர்ராரு .. ஏதேதோ சொல்றாரு .. முகமது அதை வாயால் சொல்ல .. சிலர் எழுத ... இப்படியே 23 வருஷம் போகுது. அந்த 23 வருஷத்தில ஒருத்தர் மொதல்ல இருந்த மாதிரியே கடைசி வர எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தால் அந்த ஆளு எதில் சேர்த்தி?? “அப்படி மக்கான” ஒரு ஆளையா அல்லா தேர்ந்தெடுப்பார்னு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா ...?

வடுவூர் குமார் சொன்னது…

ஐயோ..வவ்வால்..தாங்கமுடியவில்லை.100 ரூபாய்க்குள் அங்கங்கு விழுகிற கமெண்ட் ஆச்சரியத்தை கொடுத்தாலும் இங்கு விழுந்ததை படித்தால் (இரண்டாவது) சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அதென்ன நூறு ரூபாய்? அது அவரை தொடர்பவர்களுக்கு தெரியும். :-)

R.Puratchimani சொன்னது…

///////கோவி.கண்ணன் சொன்னது…
// //இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?,//

// சுவனப் பிரியன் சொன்னது…
தாலிபான்கள் செய்யும் சில காரியங்களை கண்டித்து இருக்கிறேன். தற்போது லிபியாவில் நடந்த காட்டு மிராண்டி தனமான தாக்குதலையும் கண்டித்தேன். இனிமேலும் இஸ்லாத்தின் பெயரால் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்க சென்றால் அதையும் கண்டிப்பேன்.////////

நான் சொல்வது ..........
இரட்டை வேடத்திற்கு மறு பெயர் சுவனம் என்று சொன்னால் அது மிகையாகாது.

17 ஆப்கானியர்களை கொன்றதை வரவேற்றுவிட்டு என்னமா வசனம் பேசறாரு....குருமுட்டைகள் இவர் பேச்சை நம்பலாம்.
--------------------------------------------------------------------------

///// சுவனப் பிரியன் சொன்னது…
//அதை எனது கருத்தாக சொல்லவில்லை. குர்ஆன் மூல மொழிகள் அனைத்துக்கும் தூதர்களை அனுப்பியிருப்பதாக சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் 'இருக்கலாம்' என்று சொன்னேன். அது எனது நம்பிக்கை.// //////

நான் சொல்வது ..........
நித்தியானண்டாவும் இறைதூதர்தான் நீங்கள் நம்ப மறுப்பதால் அது பொய்யாகிவிடாது
================================================================

////ராஜ நடராஜன் சொன்னது…
கோவி.கண்ணன்!சகோ.சுவனப்பிரியனை மிதவாத வகாபி எனலாம்./////

சார் அவர வச்சு ஒன்னும் காமெடி கிமெடி பண்ணலையே :) :)

இருப்பினும் அவர் மீது எனக்கு இரக்கம்தான் வருகிறது....இசுலாமிற்கு எதிரான உண்மைகளை கூறினால் அவரது நிலைமை? அய்யகோ .
வேண்டாம்... சுவனத்திற்கு ஆண்டவன் நல்லவழியை காட்டட்டும்.


இறைதூதர் கோவிக்கண்ணன்.... நீங்கள் பூனையார் மார்க்கத்தை விட்டு விட்டு வந்துவிட்டீர்கள் என நினைக்கின்றேன்....வாகாபிய தண்டனைகளை விட அதிகதண்டனை வேண்டுமா....நல்ல மார்க்கத்துக்கு உடன்னே திரும்புங்கள்...இல்லையில் மறுமையில் நரகத்திலும் நரகம்தான். நல்ல மார்க்கத்திற்கு திரும்பினால் பூனையார் சுவனத்தில் உமக்கு 140. சுவனப்பிரியர்களுக்கு பூனையார் மார்க்கத்தை பற்றி புரியவையுங்கள்.

நன்றி :)

வவ்வால் சொன்னது…

வடுவூர் குமார்,

அந்த 100 ரூபா பின்னூட்டம் பார்த்துட்டிங்களா? கொடுத்த காசுக்கு மேல கூவுறாணேனு சிரிக்கிறாப்போல இருக்கே :-))

-----------

ராபின்,

அட டா ஏகப்பட்ட வீர தீரம் செய்யணும் போல இருக்கே... சு.பி சுவாகள் கிட்டே கேட்டா எங்கே அதுக்கு பயிற்சி கிடைக்கும்னு சொல்வார் போய் பயிற்சி எடுத்து இறைத்தூதர் ஆகிட வேண்டியது தான்.

சித்தூர் ராணி பத்மினி அழகா இருப்பதை கேள்விப்பட்டு அலாவுதீன் கில்ஜி அடைய பெரும் போர் செய்து ஆயிரக்கணக்கில் கொன்றும் அடைய முடியவில்லை, ராஜ்புத் படை தோற்கும் என தெரிந்தவுடன் 30,000 பெண்களும் ,ராணி பத்மினியும் தீக்குளித்து விட்டார்கள்.

ஒரு பெண்ணை அடைய என்னமா வீரம் காட்டியிருக்காங்க , அதே பாரம்பரியம் தானே இப்போ லிபியாவிலா ஆனா ஆணாக போயிடுச்சு :-))

எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு ஆண்/பெண் எல்லாம் ஒன்றல்லவா, ஏன் எனில் அவர் என்னனு யாருக்குமே தெரியாது :-))

suvanappiriyan சொன்னது…


//முகமது என்பவர் மெக்காவில் வாழ்ந்ததின் சான்றுகள் எதுவுமே இல்லை!!!//

காந்தி என்பவர் இந்தியாவில் வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. :-)))))))))))))))))))))))

ஒரே காமெடியாப் போச்சு உங்களோட. ஏதோ கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்று நினைத்தேன். அதுக்காக இப்படியா......

suvanappiriyan சொன்னது…

நாகூர் மீரான் said...

//23 வருஷமா ஜிப்ரேல் வர்ராரு .. ஏதேதோ சொல்றாரு .. முகமது அதை வாயால் சொல்ல .. சிலர் எழுத ... இப்படியே 23 வருஷம் போகுது. அந்த 23 வருஷத்தில ஒருத்தர் மொதல்ல இருந்த மாதிரியே கடைசி வர எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தால் அந்த ஆளு எதில் சேர்த்தி?? “அப்படி மக்கான” ஒரு ஆளையா அல்லா தேர்ந்தெடுப்பார்னு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா ...?//

சகோ.தருமி.

இந்த சந்தேகம் உங்களுக்கு இருந்துதா ரொம்ப நாளா ....இப்ப முகம்மத் நபி அவர்கள் படிக்க தெரிந்த மேதை என்றால் அவர் கூறிய அணைத்து செய்திகளையும் பொய் ஆக்கி இருப்பார்கள் இறை மறுப்பாளர்கள் . .ஏன் என்றால் மும்தைய வேத செய்திகளைக்கொண்டும் குர் ஆன் இறக்கி அருளப்பட்டது,, அம்மக்கள் அந்த செய்தியை கொண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார்கள் .. குர் ஆன் அறிவியல் பேசுவதை கொண்டு அல்ல...நபியுடைய அந்த தகுதி அவரை சிறுமை படுத்தவில்லை மாறாக உண்மை படுத்தியது.....

இதை கோவி கண்ணன் பதிவிலே பதியலாம் தான்..ஆனால் உண்மையை தேடும் மக்கள் வருகின்ற இடத்திலே பதிய விரும்புகிறேன்...

நன்றியுடன்
நாகூர் மீரான்

வேகநரி சொன்னது…

நண்பர் புரட்சிமணி,
////ராஜ நடராஜன் சொன்னது…
கோவி.கண்ணன்!சகோ.சுவனப்பிரியனை மிதவாத வகாபி எனலாம்./////
சார் அவர வச்சு ஒன்னும் காமெடி கிமெடி பண்ணலையே :) :)

அவர் தவறான பாதையை தழுவி கொண்டோரை மயிலிறகால் தடவி திருத்த முயற்சிக்கிறார் போல தெரிகிறது:)
நீங்க பின் வரும் பதிவை படித்து பாருங்கள்.பதிவு மட்டுமல்ல அதில் வரும் காபிர்களின் பின்னோட்டங்கள், இஸ்லாமியர்கள் பின்னோட்டங்கள் எல்லாமே செம காமெடி.
http://www.tamilaathi.com/2011/10/blog-post_07.html

R.Puratchimani சொன்னது…

//thequickfox கூறியது...
நண்பர் புரட்சிமணி,

// அவர் தவறான பாதையை தழுவி கொண்டோரை மயிலிறகால் தடவி திருத்த முயற்சிக்கிறார் போல தெரிகிறது:)//

நண்பா அப்படியா நல்லதுதான். இருப்பினும் சுவனம் சமீபத்தில் ஆப்கானியர்கள் 17 பேர் கொல்லப்பட்டதை ஆதரித்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.


//நீங்க பின் வரும் பதிவை படித்து பாருங்கள்.பதிவு மட்டுமல்ல அதில் வரும் காபிர்களின் பின்னோட்டங்கள், இஸ்லாமியர்கள் பின்னோட்டங்கள் எல்லாமே செம காமெடி.
http://www.tamilaathi.com/2011/10/blog-post_07.html //

நண்பா உண்மையை சொன்னால் அந்த பதிவை படித்தால் இசுலாமிய சகோதரர்கள் எந்த அளவிற்கு புன்பட்டுள்ளார்கள் எனபதே தெரிகிறது.
அதனால் தான் ஒரு ஆதரவு குரல் வந்தாலும் அவர்கள் தன்னுடைய நெகிழ்ச்சியை காட்டுகிறார்கள்.
நம் தமிழ் பேசும் இசுலாமியர்கள் நல்லவர்கள் தான். ஒரு சில இசுலாமியர்கள் செய்யும் செயலால் ஒட்டுமொத்த சமுதாய மக்கள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது எனபதே உண்மை. அதே சமயத்தில் இந்த நல்ல இசுலாமியர்கள் அவர்களின் செயல்களை கண்டிக்காதது தான்
இந்த பிரச்னையை தீவிர படுத்துகிறது. நல்ல இசுலாமியர்களின் மௌனம் அவர்களும் தீமையை ஆதரிக்கிறார்களோ என்ற எண்ணத்தை
ஏற்ப்படுத்துகின்றது. வாகாபிகள் தான் இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கின்றேன். இவர்கள் வாகபிகள் செயலை வெளிப்படையாக கண்டிக்காவிட்டால் ஒட்டுமொத்த இசுலாம் சமுதாயமும் பழியை ஏற்க்க வேண்டிய நிலையைத்தான் ஏற்ப்படுத்தும். இந்த நிலை இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக அமையும்.

வேகநரி சொன்னது…

நண்பா புரட்சிமணி, இஸ்லாமியர்களில் யார் நல்லவர்கள் யார் தீமையை ஆதரிப்போர் என்று சொல்வதே கடினம். நல்ல இஸ்லாமியர் மாதிரி பதிவுகள் எழுதிவந்த ரஹீம் கஸாலியின் மதவெறி சுயரூபம் இப்போ வெளிபட்டுள்ளது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்