பின்பற்றுபவர்கள்

10 ஜனவரி, 2012

சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !

அன்பு நண்பர் திரு சுவனப்பிரியன் "சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது". என்று சவுதி அரேபியா பற்றி நெகிழ்ந்து பாலாறும் தேனாறும் அங்கு ஓடுவதாகவும், அதை சவுதி அரசு ஏற்றுமதி செய்து வளமிக்க நாடாக சவுதியை மாற்றி வருவதாகவும் மிக அருமையான கட்டுரையை எழுதியுள்ளார், அவருக்கு பாராட்டுகள்.

*****

எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.

பாலாறும் தேனாறும் ஓடும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக பணிப் பெண்களை கண்ணியத்துடன் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை, சென்ற ஆண்டு 'ஆணி அடிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினவில் கூட கட்டுரை எழுதி இருந்தார்கள், அதனுள் மற்றொரு செய்தியாக 'வளர்த்தக்கடா மார்பில் பாய்வதைப் போல் “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” குறிப்பிடப்பட்டு இருந்தது, பணிப் பெண் என்பவள் ஒரு அடிமை என்ற அளவில் தான் அங்கு நடத்தப்படுகிறதாம், அது எல்லாப் பணிப் பெண்களுக்கும் இருக்கும் சிக்கல் என இல்லாவிட்டாலும், சமூகக் குற்றம் என்பது ஒரு சில என்றாலும் அவர்களுக்காகத்தான் காவல் நிலையங்கள், எனவே தனிநபர் குற்றம் பேசப்படக் கூடாது என்பதை நான் எப்போதும் நிராகரிப்பேன், அப்படி மாரைப் பிடித்துப் பார்த்த நிகழ்வு உண்மையோ பொய்யோ அவைபற்றி ஆதாரம் இல்லை என்ற வகையில் அந்தச் செய்தியை நிராகரிக்கலாம் என்றாலும் கூட உடலெல்லாம் ஆணி அடிக்கப்பட்ட பெண் சவுதியில் இருந்து மீண்டது உண்மை தானே.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தி சவுதி அரேபியாவிற்கு இல்லப்பணிக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்களில் 50க் கும் மேற்பட்டவர்கள் பாஸ்போர்டுகள் பிடுங்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்களாம், தப்பி வந்தவர் கண்ணீர், பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது என்று அந்தச் செய்தியில் தகவல் இடம் பெற்றுள்ளன.

சவுதி அரேபியாவில் விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையாம், ஆனால் பணிப்பெண்களை அவ்வாறு கல்லால் அடித்துக் கொலை செய்யமாட்டார்கள் என்று நாம் நம்புவோம், ஏனெனில் அவர்களைப் பொருத்த அளவில் அவர்கள் அடிமைகள் தான், அடிமைகளை எப்படிப் பயன்படுத்தினாலும் அடிமைகளுக்கோ, அவர்களை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கோ, பயனாக்கிக் கொண்டவர்களுக்கோ தண்டனைகள் இருக்காது என்று நம்பலாம். விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படுவதெல்லாம் சவுதி அரேபியவில் பிறந்து வளர்ந்த அந்த நாட்டுப் பெண்களுக்கான சட்டமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடட்டும் அதை நக்கிப் பலர் குடிக்கட்டும் நமக்கென்ன ஆனால் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு பணிப் பெண்களை அனுப்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு, பெண்மைக்கான பாதுகாப்பு கேள்விக்குறி என்பதையே அந்த செய்தி காட்டுகிறது.

இன்ஷா அல்லா ! மாஷா அல்லா ....... ! மெக்காவுக்கு மிக அருகில் நடக்கும் பெண் / வன் கொடுமைகளைக் கூடத் தடுக்க முடியவில்லையே, நண்பர் சுவனப்பிரியனின் பேராசையாக சவுதியைப் போல் இந்தியா ஆகவேண்டும் என்பதை எப்படி நிறைவேற்றப் போகிறாயோ ?

பின்குறிப்பு : கட்டுரை தகவல் அடிப்படையில் அதற்குறிய சுட்டிகளுடன் எழுதப்பட்டுள்ளது, இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

39 கருத்துகள்:

Robin சொன்னது…

//இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்./// இப்படி டிஸ்கி போட்டு பயந்துகொண்டே எழுதவேண்டிய சூழ்நிலையில் தமிழ் பதிவுலகம் மாறியிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அன்பு நண்பரே
அருமையான பகிர்வு

manjoorraja சொன்னது…

பெட்ரோல் இருக்கு அதனால் காசு இருக்கு. மற்றபடி சவுதியில் பாலும் தேனும் ஓடுகிறது என்பதெல்லாம் ரொம்ப ஓவர். அங்கு நடக்கும் கொடுமைகள் மிக அதிகம். பலர் அதை ஒரு நரகம் என சொல்லிதான் கேள்விப்பட்டிருக்கேன். பெண்களுக்கு கிஞ்சித்தும் சுதந்திரம் இல்லை. அந்த ஊர் பெண்களே டிரைவிங்க் செய்வது மாபெரும் குற்றம். அதற்கு தண்டனை உண்டு. நம்மூரிலிருந்து சென்று நல்ல வேலையில் அமர்பவர்களை தவிர மற்றோர் எல்லாம் மிகுந்த சிரமத்தையே அனுபவிக்கின்றனர்.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். ஊழல் இருக்கு, ஏழ்மை இருக்கு, கஸ்டம் இருக்கு. ஆனால் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கையும் சுதந்திரமும் இருக்கு. அது சவுதியில் என்றும் எப்பவும் கிடைக்காது.

'பசி'பரமசிவம் சொன்னது…

பயனுள்ள பதிவு.
தங்களின் துணிவுக்குப் பாராட்டு.
பின்குறிப்பு தேவையற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி டிஸ்கி போட்டு பயந்துகொண்டே எழுதவேண்டிய சூழ்நிலையில் தமிழ் பதிவுலகம் மாறியிருப்பது வருந்தத்தக்க விஷயம்.//

நம்பிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்தல் என்ற அளவில் அதை குறிப்பிட வேண்டியுள்ளது, நான் யாருடைய நம்பிக்கையும் பழிப்பது கிடையாது, ஆனால் அந்த நம்பிக்கைகள ஒப்பீட்டு அளவில் திணிக்கப்படும் போது அவைபற்றி கேள்வியும், விமர்சனமும் என்னிடம் இருந்துவரும்

Sketch Sahul சொன்னது…

சவுதி அரேபியாவில் அவர் பார்த்த சில நல்ல விசயங்கள் நமது நாட்டில் எப்போது ஏற்படும் என்று அருமையாக அவர் எழுதி இருக்கிறார்
அதை பற்றி நீங்கள் ஏதும் சொல்லாமல் ,தேவை இல்லாத விசயங்களை எழுதி இருக்கிறீர்கள்
நீங்கள் இப்பொழுதும் இயக்கத்தில் R.S.S இயக்கத்தில் இருகின்றீர்களா ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சவூதியில் வேலை செய்து விட்டு தப்பி வந்த பல பிலிப்பையின் பெண்கள் கூறிய கண்ணீர் கதைகள் அதிகம்; இலங்கையரின் கண்ணீர் கதைகள் ஏராளம். பிரஞ்சுத் தொலைக்காட்சி இவற்றை விவரணமாகவும் காட்டி உள்ளது.
அத்துடன் 2004 ல் நான் இலங்கை சென்றபோது, மன்னாரில் சந்தையில் பழம் விற்ற ஒரு விதவை முஸ்லீம் பெண், அவர் ஏற்கனவே சவூதியில் இருந்து தப்பி வந்துள்ளார்.
அவரிடம் வெளிநாட்டு வாழ்வு பற்றிப் பேசிய போது, சவூதி உங்கள் மதத்தைச் சேர்ந்தோர் தானே உங்களுடன்
கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லையா? என வினாவிய போது, அவர் கண்கள் கலங்கிக் கூறியது.
அவர்களுக்கு நான் ஒரு அடிமை, இலங்கை போன்ற வறிய நாட்டில் இருந்து வந்த பிச்சைக்காரி... நானும் ஒரு இஸ்லாம் மதம் சார்ந்தவள் என்பது கணக்கிலெடுக்கப்படவில்லை.
என் நாட்டில் இந்தப் பழம் விற்று என் பிள்ளைகளை வளர்ப்போம் எனத் தப்பிவிட்டேன்; எனக் கூறினார்.
அவர் பொய் பேசவேண்டிய அவசியமேயில்லை. அவர் இப்போது பிச்சை எடுக்கவில்லை. பழவியாபாரம்
செய்கிறார்.
அதனால் நானும் இறைவனைக் கேட்பது எந்த நிலையிலும் இந்த நாடுகள் போல் எங்கள் நாடுகள் ஆகவேண்டாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சவுதி அரேபியாவில் அவர் பார்த்த சில நல்ல விசயங்கள் நமது நாட்டில் எப்போது ஏற்படும் என்று அருமையாக அவர் எழுதி இருக்கிறார்
அதை பற்றி நீங்கள் ஏதும் சொல்லாமல் //

இது அபாண்டப் பொய், நண்பர் சுவனப்பிரியனைப் பாராட்டிதான் கட்டுரையையே எழுதியுள்ளேன், உங்களை விட அவர் எனக்கு பழக்கம்.

//நீங்கள் இப்பொழுதும் இயக்கத்தில் R.S.S இயக்கத்தில் இருகின்றீர்களா ?//

நீங்கள் தாலிபான்களில் ஒருவர் என்றால் நான் R.S.S காரன்

கோவி.கண்ணன் சொன்னது…

//A.R.ராஜகோபாலன் said...
அன்பு நண்பரே
அருமையான பகிர்வு//

நன்றி நண்பரே

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். ஊழல் இருக்கு, ஏழ்மை இருக்கு, கஸ்டம் இருக்கு. ஆனால் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கையும் சுதந்திரமும் இருக்கு. அது சவுதியில் என்றும் எப்பவும் கிடைக்காது.//

மஞ்சூர் ஐயா. குறிப்பாக பெண்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளவை 100 % விழுக்காட்டு உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

யோகன் அண்ணா,

பணிப்பெண்களை மிக மோசமாக நடத்துவது பல நாடுகளில் நடைமுறை என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக அரசிடம் முறையிட்டு தண்டனைப் பெற்றுத்தரவோ, நிவாரணம் பெறவோ முடியும், சவுதியில் அதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஒரு ஆணுக்கு ஈடாக இரண்டு பெண்கள் சாட்சியாக இருக்க வேண்டும் என்பது சவுதி சரியத், மானபங்கப்படுத்தப்படுபவள் சாட்சித் துணைக்கு எங்கே போவாள்.

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.//

சவுதியில் பணிப் பெண்கள் சில வீடுகளில் தவறாக நடத்தப்படுவதை நானும் கண்டித்து இதற்கு முன் பதிவு எழுதியுள்ளேன். இதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. வீட்டு வேலைக்கு வருபவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் வருகிறார். அவர் அடிமை முறையின் கீழ் வரமாட்டார். இன்று உலகில் அடிமை முறை இஸ்லாத்தால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் தனது கணவன் வீட்டு டிரைவராக பணி பரியும் இடத்துக்கே வர வேண்டும். தனியாக வர வேண்டாம் என்று முன்பே நான் பதிவிட்டிருக்கிறேன். அதிலும் விபசார விடுதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட சவுதியில் இது போன்ற தவறுகள் பல இடங்களில் நடந்து விடுகிறது. சவுதி அரசும் இதை தடுக்க பல சட்டங்களை போட்டவண்ணமே உள்ளது. நான் எழுதிய பதிவு பாலைவனமாக இருந்த சவுதி இன்று சோலை வனமாக மாறியது எவவாறு என்பதை தொட்டுக் காட்டவே!

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள் வாங்கியதால் இன்று அவதிக்குள்ளாகியிருக்கிறது. இந்த இரு நாடுகளும் சவுதியை பின்பற்றி தங்களது ஆட்சியை அமைத்துக் கொண்டால் சிறப்புற்றே விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

manjoorraja சொன்னது…

பாலைவனமாக இருந்த நாடு சோலைவனம் ஆனதற்கு முக்கிய காரணம் அவர்களிடம் இருக்கும் பணமே. மற்ற அரபு நாடுகளும் இதற்கு விதி விலக்கல்ல. சோலைவனமாக மாற்றியவர்களின் சம்பளத்தை கேட்டால் கண்களில் கண்ணீர் வரும். வெளிப்பார்வைக்கு சோலைவனமாக இருந்தால் மட்டும் பத்தாது. அதற்காக கடும் குளிரிலும் கொளுத்தும் வெயிலிலும் உழைத்தவர்களும் செழிப்பாக உள்ளனரா என்று பார்ப்பதும் மிக முக்கியம்.

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் தாலிபான்களில் ஒருவர் என்றால் நான் R.S.S காரன்


(சிரிப்பு)

பாண்டியன் சொன்னது…

sketch sakul - R.S.S காரர்கள் தான் முஸ்லீம்கள் குறித்த உண்மையை பேசுவார்கள் என்று நம்புகிறார் போலும்.

பாண்டியன் சொன்னது…

அமெரிக்க ஆதரவு - சவூதிக்கு இல்லாது போகும் போது, பாலாறு தேனாறு ஓடாது. ஆப்கன், ஈராக் போல ரத்தஆறு தான் ஓடும்.

ராஜ நடராஜன் சொன்னது…

மதம் சார்ந்த கருத்துக்கள் புதிய சிந்தனைகள் எதனையும் கொண்டு வருவதில்லை.அவரவர் நிலைப்பாடுகளிலேயே விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.பதிவின் இடையே மதப்பிரச்சாரம் வேறு:)அடுத்தவர் சொல்வதின் மறுபக்கம் உணரப்படுவதேயில்லை.நீங்கள் தொடுப்பு கொடுத்தவரும் சளைக்காமல் சொல்லிகிட்டுத்தான் வருகிறார்.கேட்பதற்குத்தான் உங்களைத் தவிர வேறு ஆட்களில்லை.சரி அத விடுங்க.

தொடுப்பு பதிவில் துபாயும்,குவைத்தும் தான் தோன்றித்தனமாக ஆடம்பர செலவு என்பதற்கும் இந்திய ஒப்பீட்டுக்கும் எனது மாற்றுப்பார்வை.

தரமான உணவுப்பொருட்களை சவுதி தருகிறது.அதே நேரத்தில் பேரிச்சம்பழம் விற்றே காலத்தை ஓட்டி விடலாமென்றும் நினைப்பது மாதிரி பதிவின் சாரமுள்ளது.ஏனைய கட்டமைப்பு பராமரிப்புக்களை அனைத்து GCC நாடுகளுமே செய்கின்றன.இதுல சவுதியை மட்டும் பீத்திக்கொள்வதில் அர்த்தமில்லை.

இந்தியா விவசாய நாடு என்பதால் முழுவதுமாக விவசாயம் சார்ந்தே நகரவில்லை.தொழில்துறையையும் அரவணைத்தே முன் செல்கிறது.அதே போலவே துபாயும் நாளைக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலோ அல்லது மாற்று எரிபொருள் வந்து விட்டாலோ என்ன செய்வது என்ற நீண்ட கால நோக்கில் தன்னை மத்திய கிழக்கு பொருளாதார துறைமுகமாக நவீனப்படுத்திக்கொண்டுள்ளது.

சவுதியில் பெண்களை வாகனம் ஓட்டக்கூடாதென்றும்,முக்காடு போட்டு மூடி வைத்திருந்தால் குவைத் வளைகுடா சூட்டு ஸ்விட்சர்லாந்து இஸ்லாமிய உறவு பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் நவீன மாற்றங்களோடு கலை,பண்பாடுகளோடு நடை போட முயற்சிக்கின்றன.

மொத்தமாக இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பது வேறு கண்ணோட்டத்தில் பின்னூட்ட வேண்டியது:)

பரிதாபத்துக்குள்ளான இலங்கைப் பெண்ணுக்கு எனது அனுதாபங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

//பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள் வாங்கியதால் இன்று அவதிக்குள்ளாகியிருக்கிறது.//

பாகிஸ்தானும்,ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள்வாங்கியதற்கு முக்கிய காரணமே சவுதி வகாபிசமும்,அதனை நோக்கிய பொருளாதார உதவிகளும்.9/11 அவற்றை மாற்றிப் போட்டு விட்டன.பலன்கள் வெளிப்படையாகத் தெரிகிறது.அவ்வளவே.

Sculpture Collector சொன்னது…

சுவனப்பிரியன் மிகக் கவனமாகவும் தனக்கு வசதியாகவும் தனது ஒப்பீட்டை 1990களோடு நிறுத்தி விட்டார். Saudi wheat import in MY2011 is forecast to increase by 14 percent to reach 2 million metric tons. Saudi government wants to increase wheat imports in MY2011 to maintain ending stock at least a 50 percent of total domestic consumption.
In 2007, Saudi Government decided to terminate the wheat production by 2016.
In 1993, the government subsidy for the wheat production was $1.8bil, production 4.5Mil Tonnes. Is this kind of subsidy sustainable?

In reality, Saudi has handled its finance much worst than UAE or Kuwait. The amount of poverty and unemployment among the locals are much higher in Saudi compared to UAE or Kuwait.
It's really sad to see the number of locals have to beg in Jeddah.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே!!!!!!!!!
மனித கடத்தல்&விபசாரம் என்பது உலகளாவிய பிரச்சினை.இதில் சவுதி மட்டும் என்ன விதி விலக்கா?.

சவுதி அரசு என்பது மதத்தின் புனிதமான,சரியான நடைமுறைப் படுத்துதல் என்ற விளம்பர பிரச்சாரம் என்பது இனியாவது புரிந்தால் சரி.இப்பிரச்சாரம் சவுதி அரசால் உலக் முழுதும் முன்னெடுக்கப் படுவதும் அதற்கு பலரும் புகழ் பாடுவதும் கொடுமை.

சவுதியும் பிற நாடுகள் போல்தான்.பிற நாடுகளில் நடக்கும் எந்த (கெட்ட) விஷயத்தையும் செய்யக் கூடியவர்கள் அங்கும் இருப்பார்கள்.

ஒவொரு நாட்டுக்கும் அதன் இயல்பான வாழ்வுமுறை கலாச்சாரம் சார்ந்த சட்ட திட்டங்களே பொருந்துமே அன்றி மத ரீதியான பொது சட்டம் அல்ல.மதம் வேறு கலாச்சாரம் வேறு!!!!!!!!!!!!!!

suvanappiriyan சொன்னது…

தமிழன்!

//அமெரிக்க ஆதரவு - சவூதிக்கு இல்லாது போகும் போது, பாலாறு தேனாறு ஓடாது. ஆப்கன், ஈராக் போல ரத்தஆறு தான் ஓடும்.//

ஆக ஆப்கானிஸ்தானத்திலும் இராக்கிலும் ரத்த ஆறு ஓடுவதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. அமெரிக்காவின் நயவஞ்ச அரசியல் சதுரங்கமே என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி! சவுதியை அமெரிக்கா பகைத்துக் கொள்ளாது. ஒபாமா தலையை சொறிந்து கொண்டு பணத்துக்காக நிற்கும் போது இரண்டு மூன்று பிஸ்கெட் துண்டுகளை (மிலிடரி காண்ட்ராக்ட்) வீசி எறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு சேவகம் செய்ய ரெடியாக இருக்கும்.

ராஜராஜன்!

//பாகிஸ்தானும்,ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள்வாங்கியதற்கு முக்கிய காரணமே சவுதி வகாபிசமும்,அதனை நோக்கிய பொருளாதார உதவிகளும்.9/11 அவற்றை மாற்றிப் போட்டு விட்டன.பலன்கள் வெளிப்படையாகத் தெரிகிறது.அவ்வளவே.//

வகாபியிசத்தின் ஊற்றுக்கண்ணான சவுதி அரேபியாவில் அமைதி தவழ என்ன காரணம்? நமது இந்து சகோதரர்கள் குடுமபத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று சந்தோஷமாக இருக்கவில்லையா?

செப்டம்பர் 11க்குப் பிறகுதான் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இஸ்லாம் அதி வேகமாக பரவுவதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இஸ்லாம் காரணம் அல்ல என்பதை அந்த மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர்.

அடுத்து சவுதி வீடுகளில் நடக்கும் பல குற்றங்களுக்கு சவுதி அரசை நாம் குற்றம் காண முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களை கவனிக்கவே அரசில் தனி அமைச்சகம் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளது. பல பெண்கள் உரிய நஷ்ட ஈடு கிடைத்து நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமைகளை தடுக்க ஒரே வழி தனியாக பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல் இருப்பதே!

நம் நாட்டில் இன்னும் கூட இரட்டை குவளை முறையும், மலம் தின்ன வைத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஆளும் காங்கிரஸையும் மன்மோகன் சிங்கையும் இங்குள்ள பெரும்பான்மை மக்களையும் குற்றம் கண்டால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?

ராஜ நடராஜன் சொன்னது…

//வகாபியிசத்தின் ஊற்றுக்கண்ணான சவுதி அரேபியாவில் அமைதி தவழ என்ன காரணம்? நமது இந்து சகோதரர்கள் குடுமபத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று சந்தோஷமாக இருக்கவில்லையா?

செப்டம்பர் 11க்குப் பிறகுதான் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இஸ்லாம் அதி வேகமாக பரவுவதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இஸ்லாம் காரணம் அல்ல என்பதை அந்த மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர்.//

அமைதி என்பதன் பொருள் மதம்,அரசியல்,நீதி,மனம்,பொருள்,வாழ்க்கை முறை சார்ந்த ஒரு கூட்டுக்கலவை.சவுதி அரேபியாவுக்கான எதிர் விமர்சனங்களே இதன் பொருட்டே உருவாகின்றன.அதென்ன இந்து சகோதரர்கள் என்ற ஒதுக்கலான பதம்!இங்கே நாம் வாழ்வது இந்தியன் என்ற ஒற்றைச் சொல்லில் மட்டுமே.அதனை வளைகுடா நாடுகள் கௌரவிக்கின்றன என்பதில் மகிழ்ச்சியே.

9/11 மட்டுமல்ல,பதிவுலக இஸ்லாமியப் பார்வைகள் கூட உண்மையான இஸ்லாத்தின் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை.இஸ்லாமியத்தன்மைகள் அமைதியானவை.ஆனால் முன்பே சொன்ன வகாபிசத்தன்மைகள் இஸ்லாமியத்தை வேறு பரிமாணத்தில் பிரதிபலிக்கிறது.

உங்களுக்கு ரொம்பத்தான் கற்பனை சக்தி சகோ!அமெரிக்காவும்,பிரிட்டனும்
இஸ்லாம் அதிகரிக்கிறதா:)

பொன் மாலை பொழுது சொன்னது…

உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்?

உதயம் சொன்னது…

சுவனப்பிரியனின் ஏக்கமும் நிறைவேற வேண்டும்; உங்களது ஆசையும் நிறைவேற வேண்டும். இந்த பதிவில் ஏதும் உள் குத்து இல்லையே? ஏனென்றால் இப்போதெல்லாம் சவூதி, இஸ்லாம், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கேட்டாலே இந்துத்துவவாதியை விட உங்களுக்கு நெரி கட்டிக்கொள்கிறது.

subbu சொன்னது…

http://koodal.com/news/india.asp?id=71486&title=56-indian-girls-held-captive-for-sex-trade-in-saudi-india-news-headlines-in-tamil

வவ்வால் சொன்னது…

கோவி,

ஜல்லிக்கட்டுக்கு ரெடி ஆகிட்டிங்க போல :-))

சவுதில பாலாறு, தேனாறு ஓடுறது இருக்கட்டும் முதலில் பச்ச தண்ணி ஆறு ஓடுதானு கேளுங்க? உலகத்திலேயே ஆறு இல்லாத நாடு சவுதி அரேபியா தான்.!

கடல் நீர் சுத்திகரிப்பு தண்ணி தான் எல்லாத்துக்கும். கழிவறையில் பயன்ப்படுத்தும் தண்ணீர் கூட சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் பயன்ப்பாட்டுக்கு வருது.கக்கா,உச்சா போன தண்ணிய சுத்தம் செய்து ,குளிப்பது,பல் துலக்குவது எல்லாம் செய்றாங்க அங்கே :-))

நல்லா கிளம்பிட்டாங்க இப்படி சிலர் பாலாறு,தேனாறுனு சொல்லிக்கிட்டு.இவங்களை எல்லாம் புடிச்சு பாலைவனத்தூல உருட்டி விடனும் :-))

renga சொன்னது…

இந்தோனேசியா பணிப்பெண்களை மறந்துவிட்டீர்களே?

கோவி.கண்ணன் சொன்னது…

//கடல் நீர் சுத்திகரிப்பு தண்ணி தான் எல்லாத்துக்கும். கழிவறையில் பயன்ப்படுத்தும் தண்ணீர் கூட சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் பயன்ப்பாட்டுக்கு வருது.கக்கா,உச்சா போன தண்ணிய சுத்தம் செய்து ,குளிப்பது,பல் துலக்குவது எல்லாம் செய்றாங்க அங்கே :-))//

வவ்ஸ்,

சிங்கப்பூரிலும் தூய்மையாக்கப்பட்ட கழிவுநீர் தண்ணீர் தான் 30 விழுக்காட்டு தேவையைச் சரி செய்கிறது, ஆனால் அது தமிழகத் தண்ணீரைவிட சுவையாகவும், கிருமிகளற்றதாகவும் இருக்கிறது, மலம் மற்றும் சிறுநீரை காயவைத்து மேகம் எடுத்தும் கொள்ளும் தண்ணீரும் அப்படிப்பட்டது தானே, எனவே நீங்கள் குறிபிட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பற்றிய உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல.

குடித்தால் வாந்தி பேதி வராத தண்ணீர் எங்கே இருந்து உற்பத்தி செய்தாலும் அது நல்லத் தண்ணீரே

கோவி.கண்ணன் சொன்னது…

//செப்டம்பர் 11க்குப் பிறகுதான் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இஸ்லாம் அதி வேகமாக பரவுவதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன.//

எந்த புள்ளி விவரங்கள் சுவனப்பிரியன் ?

புள்ளி மான் மேல் இருக்கும் புள்ளி விவரங்களா ? நீங்களாக எதாவது அடிச்சு விடாதிங்க.

10 பேர் முஸ்லிம்களாக மாறி இருக்கிறார்கள் என்று நீங்கள் காட்டும் தொகுப்புகள் போல் 100 பேர் விலகி இருக்கிறார்கள் என்று தொகுப்புக் கொடுக்க முடியும்.

மதங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்த இந்த காலத்தில் இன்றும் கூட வேகமாக பரவும் ஆற்றல் பெற்றவை இரண்டே இரண்டு தான்.

1. எய்ட்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள்
2. மாதா/ஏசு கண்ணில் இரத்தம், புள்ளையார் சிலை பால் குடித்தது போன்ற வதந்திகள் மட்டும் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//சவுதி அரசும் இதை தடுக்க பல சட்டங்களை போட்டவண்ணமே உள்ளது. //

அடேங்கப்பா அடிப்படை சரியத்சட்டம் யாரும் மதிப்பதில்லை என்று சொல்லிவிட வேண்டியது தானே, புனித நூலில் அனைத்தும் தெளிவாக எழுதிவிட்ட பிறகு புது புதுச் சட்டங்கள் போடுவது இறைவனை கோபப்பட வைக்காதா ?

மேலும் மனிதர்களை குற்றம் செய்யாமல் தடுக்க மதங்கள் காட்டும் குறிப்புகள் எதுவும் பயன் தரா. கடுமையான சட்டங்களின் மூலம் தான் பணிய வைக்க முடியும் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

ஆனாலும் காளை மாட்டுக்கு போடும் அதே சூடுகளை சாதுவான பசுமாடுகளுக்கும் போடுவது தான் சரியான செயலாக இருக்கும் என்பது போன்ற 'கடுமையான' சட்டங்கள் குறித்த உங்கள் பார்வைகளை நான் புறக்கணிக்கிறேன்.

குற்றவாளிகள் நிறைந்த நாடுகளில் கடுமையான சட்டங்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எப்போதும் இல்லை என்பதை நீங்கள் குறித்துக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...
சுவனப்பிரியனின் ஏக்கமும் நிறைவேற வேண்டும்; உங்களது ஆசையும் நிறைவேற வேண்டும். இந்த பதிவில் ஏதும் உள் குத்து இல்லையே? ஏனென்றால் இப்போதெல்லாம் சவூதி, இஸ்லாம், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கேட்டாலே இந்துத்துவவாதியை விட உங்களுக்கு நெரி கட்டிக்கொள்கிறது.//

இந்தியாவும் சவுதி அரேபியா போன்று பாலைவனமாகி அங்கு பெட்ரோல் வளம் பெருக, பாகிஸ்தான், ஆப்கான், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளி நாட்டுப் பணிப் பெண்கள் வேலைக்கு வர வேண்டும் நினைப்பது உங்கள் ஆசையா ? சுவனப்பிரியன் ஆசையா ?

எனக்கு இது போன்ற ஆசைகள் இல்லை, ஊழல் அற்ற நாடாக இந்தியா மாறினாலே போதும்

சிராஜ் சொன்னது…

கோவி கண்ணன்,

முதலில் ஒரு விஷயம். உங்களுக்கு நான் மைனஸ் வோட்டு போட்டுள்ளேன். முரண்பட்ட கருத்திற்காக.

அடுத்தது. சகோ சுவனப்பிரியனின் கட்டுரை சவுதியில் நடக்கும் விவசாயம் சம்பந்தமாக பேசும் ஒரு அற்ப்புதமான கட்டுரை(சென்ற நிமிடம் தான் படித்து முடித்தேன்). அதற்க்கு எதிராக நீங்கள் எழுதிய கட்டுரை விவசாயம் பற்றி எதுவுமே பேச வில்லை, மாறாக வேலை ஆட்கள் பற்றி பேசுகிறது. கட்டுரையின் கருப்பொருளுடன் விவாதிக்கவே மாட்டீர்களா? எதை சொன்னாலும் உங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை தவறாகத்தான் பார்க்கத் தூண்டுமா????

எதிரி நல்ல கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருப்பது தான் ஒரு நல்ல பதிவருக்கு அழகு. அல்லது எதிர்த்து எழுதினால் கருப்பொருளோடு இணைந்து எழுதுங்கள். ஒரு விஷயம் பற்றி விவாதிக்கையில் மற்றொரு விஷயம் பற்றி பேசுவது சரியான மரபு அல்ல என்பது என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//எதிரி நல்ல கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருப்பது தான் ஒரு நல்ல பதிவருக்கு அழகு. அல்லது எதிர்த்து எழுதினால் கருப்பொருளோடு இணைந்து எழுதுங்கள். ஒரு விஷயம் பற்றி விவாதிக்கையில் மற்றொரு விஷயம் பற்றி பேசுவது சரியான மரபு அல்ல என்பது என் கருத்து.//

ஜார்ஜ் புஷ் கூட ஈராக்கில் அமைதியை ஏற்படுத்த முயன்று கொடுங்கோலன் சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றினார் என்று யாராவது அழகாகக் கட்டுரை எழுதினால் நீங்கள் ஆனந்தமாக படிப்பவர் போலும், எனக்கு அப்படிப்பட்ட மனநிலை என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கப்படவில்லை.

மோடி கூட குஜராத்தை இந்தியாவின் முதல் மாநிலம் ஆக ஆக்கியுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் காரர்கள் எழுதுகிறார்கள், உங்களைப் போன்றோர் அதை எந்த மனநிலையில் படிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள அவா.

ஷர்புதீன் சொன்னது…

சிராஜ்
//எதிரி நல்ல கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருப்பது தான் ஒரு நல்ல பதிவருக்கு அழகு. அல்லது எதிர்த்து எழுதினால் கருப்பொருளோடு இணைந்து எழுதுங்கள். ஒரு விஷயம் பற்றி விவாதிக்கையில் மற்றொரு விஷயம் பற்றி பேசுவது சரியான மரபு அல்ல என்பது என் கருத்து.//

நிச்சயமாக உங்கள் கருத்து சரியே

இப்பொழுது எனது கேள்வி ( அதே புளித்துப்போன கேள்விதான் என்னிடமிருந்து இந்த முறையும் )- மார்க்க அறிஞர்களாக தங்களை நிலை நிறுத்தி கொண்டு , மேலுலக வாழ்கை மட்டுமே உண்மை என்று பேசி, உறுதியாய் நம்பும் அந்த அறிந்ஞர்கள் ஒருவருக்கொருவர் சலாம் சொல்லி எவ்வாளவு நாளாகியிருக்கும்? உலகின் உண்மை மார்க்கத்தை உறுதியாய் நம்பும் இவர்களே இப்படி எனில்.... மற்றவர்களிடம் ஏன் அதனை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும். உங்களுக்கு தெரிந்த பதில்தான் - "மனிதன் மிக பலகீனமானவன்." இதில் நரேந்திரமோடியும், புஷ் ஹும் எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள்?!

இது கோவி கண்ணன் அவர்களுக்கு!
செய்தி : "சச்சினை நூறாவது நூறு எடுக்க விடமாட்டோம் என்று ஆஸ்திரேலிய பவ்ளர்கள் சபதம்"

- அதை சச்சினே ( 70-80 ரன்களில் அடிக்கடி அவுட்டாவதால் )பார்த்துகொள்வார், நீங்கள் உங்கள் வேலையை பார்த்தால் போதும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//இது கோவி கண்ணன் அவர்களுக்கு!
செய்தி : "சச்சினை நூறாவது நூறு எடுக்க விடமாட்டோம் என்று ஆஸ்திரேலிய பவ்ளர்கள் சபதம்"

- அதை சச்சினே ( 70-80 ரன்களில் அடிக்கடி அவுட்டாவதால் )பார்த்துகொள்வார், நீங்கள் உங்கள் வேலையை பார்த்தால் போதும்!//

ஷர்புதீன்
:))))))

dondu(#11168674346665545885) சொன்னது…

நானும் இது பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2012/01/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

மிக்க நன்றி டோண்டு சார்,

தங்கள் பதிவில் நான் எனது கருத்தைத் தெரிவித்துவிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

Natrayan.M has left a new comment on your post "நாகைக்கும் காரைக்கும் காதம் !":

இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் பெண்களுக்கு இதே நிலைதான் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இதைக்காட்டிலும் மிக மோசமாக வேறு பல நாடுகளிலும் உள்ளது. ஆண்களுக்கே உரிமைகள் இல்லாத பொது பெண்களுக்கு எங்கே உரிமை தரப்போகிறார்கள். பாவம் பெண்கள்!! நமது நாட்டில் உள்ள பெண்கள் உரிமை காவலர்கள் இதனை தெரிந்து கொண்டு செயல் பட வேண்டும். நமது நாட்டிலேயே இஸ்லாம் பெண்கள் உடம்பு முழுவதும் ஆடை அணிந்தது பர்தாவுடன் வெளியே வருகிறார்கள். இங்குள்ள நாத்திக கூட்டம் இதனை கண்டிப்பது இல்லை!!!!!!

*****

திரு நடராஜன் உங்கள் பின்னூட்டம் பதிவு மாறி இடப்பட்டுள்ளது.

பிரச்சனை இங்கு பர்தா தொடர்புடையது இல்லை, பணிப் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்தது

ராஜ நடராஜன் சொன்னது…

//திரு நடராஜன் உங்கள் பின்னூட்டம் பதிவு மாறி இடப்பட்டுள்ளது.

பிரச்சனை இங்கு பர்தா தொடர்புடையது இல்லை, பணிப் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்தது//

என்னாதிது!Hope it is not refelecting my views:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்