பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2010

இராவணன் பற்றி வாய்திறக்காத இந்துத்துவாக்கள் !

க(ளி)ம்புகளை கையில் வைத்துக் கொண்டு இந்து மதம் திரைப்படங்களில் புண்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று கண் காணித்து மருந்து போடவும், மண்டையை உடைக்கவும் தயாராகும் இந்துவாக்கள், இராவணன் படம் பற்றி வாய்த் திறக்காதது வியப்பளிப்பையும் வியப்பின்மையையும் ஒருசேரவே அளிக்கிறது. கருணாநிதி இந்து மதத்தை கொச்சைப்படுத்திவிட்டார், இராமனை இழிவு படுத்திவிட்டார் என்றெல்லாம் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவிப்பவர்கள் இராமயணம் பின்னனியில் எடுக்கப்பட்ட ஒரு கதையில் இராமன் இழிவாகவும், இராவணன் உயர்வாகவும் காட்டப்பட்டிருப்பதை பார்த்து இவர்கள் கொதித்திருப்பார்கள் என்றே பலரும் நினைத்தது சற்று ஏமாற்றம் தான்.

* படத்தில் (அசோக) வனச் சீதையாக வலம் வந்த ஐஸ்வர்யா ஆடைகளில் கண்ணியம் இல்லை, படம் முழுவதும் ஜாக்கெட்டை திருப்பிப் போட்டுக் கொண்டதைப் போன்றே அணிந்து இருந்தார் (நன்றி திரு பரிசல்காரன்)

* சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சியாக ஐஸ்வர்யா மீது விக்ரம் தடுமாறி விழுவது, பிறகு சீதையை நெருங்கி உடலெங்கும் கையால் படர்வது போன்ற காட்சிகள், இந்த காட்சி இந்திப் படத்தில் இல்லை. (இந்தி ரசிகர்கள் டென்சன் ஆவார்கள் என்று தவிர்தார்களோ), இராமயணக் கதைபடி இராவணன் சீதையை தொடவே மாட்டான், பெண்ணின் விருப்பமில்லாமல் பெண்ணைத் தொட்டால் தலை வெடித்துவிடும் என்கிற சாபம் இருந்ததாம். முதல் காட்சியில் தண்ணீரில் தள்ளிவிடப் படும் சீதையை பிற ஆடவன் தொட்டு தூக்கி காப்பாற்றுவது போன்றவை இவை எல்லாம். இராவ(ண)ன் படங்களில் சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சி இதிகாச மீறல்.

* இராமயணக் கதையில் சீதை மீது சந்தேகப்படுபவன் பிற ஆடவன் தான், குறிப்பாக துணி துவைக்கும் ஒருவர் சீதை மீது சந்தேகப்பட இராமன் சீதையை தீக்குளிக்கச் சொல்லுவான். இதில் இராமன் பாத்திரமே சீதை ஐஸ்வர்யா மீது சந்தேகம் கொண்டு மருத்துவ சோதனைக்குச் செல்லச் சொல்கிறது.

* அனுமாராக வரும் கார்திக்கை படம் முழுவதும் தண்ணி அடிக்கும் குடிகாரன் பாத்திரமாகக் காட்டி அனுமாரைக் கொச்சைப் படுத்தியது

* இதைவிடக் கொடுமையோ கொடுமை..... சொல்லவென்னா கொடுமை தமிழில் வரும் இராவணன் இந்தியில் வரும் சீதைக்கு கணவன் :)

* இராமயணத்தில் சீதை மீட்கப்படுவதற்கு முன்பே இராவணன் அழிந்துவிடுவான், அல்லது அழிந்த பிறகு மீட்கப்படுவாள், இதில் சந்தேகப்படும் இராமனிடமிருந்து விலகி இராவணனைத் தேடி வருவதாகக் காட்டுகிறார்கள். கடைசி காட்சியில் இராவணன் சீதையை தொட்டு அப்புறப்படுத்துகிறான். இவை எல்லாம் இதிகாச மீறல்
. இவையெல்லாம் இராமயணத்தின் மீது விழுந்த கீறல். :)

புனிதனாகவே பார்த்துவரும் இராமனையும், சீதையும் ஏகத்திற்கும் பந்தாடி, இராவணனை குற்றமற்றவன், நல்லவனாகக் காட்டி இருப்பதை இந்துதுவ ஆதரவாளர்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டார்கள் என்பது வியப்பென்றாலும். வியப்பின்மைக்கு காரணம், படம் எடுத்தது மணிரத்னம் என்கிற பார்பனர் என்பதால் இந்த புதினா (எழுத்துப் பிழை இல்லை) இராமயணம் புதுமை, புரட்சி என்று நினைக்கிறார்களோ, இவையும் எதிர்ப்பார்த்து தானே என்கிற வியப்பின்மையும் ஏற்படுகிறது. எந்த ஒரு மாறுபட்ட நிகழ்விலும் 'அவா செய்தா புரட்சி மத்தவா செய்தால் அபத்தம்' என்பது தான் வழக்கமான பார்பன பொது புத்தி விமர்சனம், அதற்கு மேல் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

இரவின் கரிய வண்ணத்தைக் நிறமாகக் கொண்டவன் என்கிற பெயர் காரணத்தைக் பெயராக வைக்கப்பட்ட இராவ(ண்)ணன், இரவணன் > இராவன் என்பது திரிந்த தமிழ் பெயர், இராவணன் என்பவன் தமிழன், திராவிட இனத்தைச் சார்ந்தவன், வழக்கமாக திராவிடர்களை அசுரர்களாகக் காட்டுவதே வட இந்திய பாணிக் கதைகள் என்பதாகவும் சொல்லபப்டும் இராமயணக் கதையின் மீள் பதிப்பில் இராவணனை நல்லவனாக மாற்றி வட இந்தியாவிற்கு புதிய இராமயணம் வழங்கிய இயக்குனர் மணிரத்னத்தை வெகுவாக பாராட்டுகிறேன்.

ராவணன் ராமாயணம் அல்ல..! - மணிரத்னம்

படம் : ராவணன் இணைய தளம்

14 கருத்துகள்:

a சொன்னது…

கோவி சார் : துண்டு போட்டு முதலாவதாக முந்திக்கொண்டு விட்டேன்...

priyamudanprabu சொன்னது…

ready start.........

பெயரில்லா சொன்னது…

பாவம்...அவங்களுக்கு இன்னும் டிக்கெட் கிடக்கலையோ என்னமொ

Matra சொன்னது…

இது ராமாயண‌க்கதை அல்ல, ராமாயண‌த்தை ஒரு மூலமாக கொண்டிருக்கும், கொண்டிருப்பதாக சொல்லபட்ட கதை.
Just for publicity.

மின்னுது மின்னல் சொன்னது…

கற்பனைகதைனு டைட்டில் போடபட்ட ஆய்ரத்தில் ஒருவனுக்கு பதிவர்கள் பண்ணுன அலும்பு இதுக்கு யாரும் பண்ணலையே கவனித்தீரா.. :))

வால்பையன் சொன்னது…

”புனைவு”க்கு அர்த்தம் புரியாதா உங்களுக்கு!?

Kesavan சொன்னது…

பம்பாய் படத்திற்கு ஏற்பட்ட பயங்கர எதிர்ப்பு அந்த படத்திற்கு அதிக அளவு விளம்பரத்தை கொடுத்தது,அதனால் அந்த படம் மிகவும் வெற்றி பெற்றது . அதற்கு அப்பறம் இதே மணிரத்னம் எம்ஜிஆர், கலைஞர் இவர்களை மையபடுத்தி இருவர் என்ற படத்தை எடுத்தார் . அந்த படத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது கலைஞர் மிகவும் சாமர்த்தியமாக அந்த எதிர்ப்பை அடக்கி அந்த படத்திற்கு தேவையற்ற விளம்பரத்தை தடுத்தார் . படம் தோல்வி . அதே போல் இந்த படத்திற்கு தேவையற்ற விளம்பரத்தை கொடுக்காமல் இருந்தால் போதும்.

இந்த படத்திற்கு எதிர்ப்பு கொடுத்திருந்தால் தமிழனுக்கு எதிராக பார்பனர்களின் சதி என்று சொல்வீர்கள் . இப்பொழுது எதிர்கவில்லை என்றால் படத்தை எடுத்த மணிரத்தினத்திற்கு அதரவு i mean உங்க பாஷையில அவாளுக்கு ஆதரவுன்னு சொல்வீங்க .

Kesavan சொன்னது…

// இரவின் கரிய வண்ணத்தைக் நிறமாகக் கொண்டவன் என்கிற பெயர் காரணத்தைக் பெயராக வைக்கப்பட்ட இராவ(ண்)ணன், இரவணன் > இராவன் என்பது திரிந்த தமிழ் பெயர், இராவணன் என்பவன் தமிழன், திராவிட இனத்தைச் சார்ந்தவன், //

இராவணன் தம்பிகளான கும்ப கர்ணன் , விபிஷணன் போன்ற பெயர்களின் அர்த்தத்தையும் கொடுத்தால் , இந்த செம்மொழி மாநாட்டில் உங்களுக்கு ஒரு விருது கொடுக்க தமிழ் மக்கள் சார்பாக பரிந்துரை செய்கிறோம் :)

Kesavan சொன்னது…

//இராமயணக் கதையில் சீதை மீது சந்தேகப்படுபவன் பிற ஆடவன் தான், குறிப்பாக துணி துவைக்கும் ஒருவர் சீதை மீது சந்தேகப்பட இராமன் சீதையை தீக்குளிக்கச் சொல்லுவான் . //

சீதை தீக்குளித்த பின் தான் இராமன் அயோத்திக்கு சென்றான் . இராமன் பாடபிஷேகம் ஆன பிறகு தான் துணி துவைக்கும் ஒருவர் சீதை மீது சந்தேகப்பட்டது . இராமாயண கதையை மீண்டும் நன்கு படிக்கவும் . உங்கள் கதையில் பிழை உள்ளது :)

Kesavan சொன்னது…

//இராவணன் என்பவன் தமிழன், திராவிட இனத்தைச் சார்ந்தவன், வழக்கமாக திராவிடர்களை அசுரர்களாகக் காட்டுவதே வட இந்திய பாணிக் கதைக//

கம்சன் சிசுபாலன், ஹிரண்யன் . ஹிரன்யட்சதன் போன்ற அசுரர்களும் திராவிடர்களா ?

Bizzarree சொன்னது…

உங்கள் விமர்சனம் பார்பநீயத்திற்கு கொடி பிடிப்பது போல் உள்ளது ! ராமாயணம் இதிகாசம் தானே ? ஒரு கதையின் சாராம்சத்தை கொண்டு திரைக்கதை அமைப்பதில் என்ன தவறு உள்ளது ? 'தளபதி' மகாபாரத கர்ணனின் சாயலில் உள்ளதால் கர்ணனின் கவசகுண்டலம் இல்லாமல் எப்படி ரஜினி கதாபத்திரம் படிக்கலாம் என்று உளறுவது போல் உள்ளது ! இதை வெளியிடுவீர்களா என்று தெரியாது ! ஆனால் உங்கள் ஒப்பீடு ரொம்ப அமெச்சூராக உள்ளது!

ராஜரத்தினம் சொன்னது…

என்னை பொறுத்தவரை இந்து மதத்தை மதிக்காதவர்கள் செய்யும் இழிவைதான் இந்து என்பவன் எதிர்க்கவேண்டும். மேலும் ராமாயணம் ஒரு inspiration தானே. அப்படி பார்த்தால் எல்லா கதைகளயும் நீங்கள் குரானிலும் பார்க்க முடியும். பைபிளிலும் படிக்கமுடியும். அப்புறம் அவர்களும் உங்களை மாதிரி கிளம்பிவிட்டால் என்ன பன்றது? தவிர என் மனைவியின் காரணமாக, மகனின் காரணமாக கோயிலுக்கு சென்றேன் என்று உளறுபவர்கள் எழுதுவதை எப்படி எதிர்க்காமல் இருக்கமுடியும்?

வவ்வால் சொன்னது…

Ithu nakkal/kalaaipu pathivu enpathu kooda theriyamal ellam seriousa comment podurangale... Enna kodumai raavanaa!

Ethirpu kaatta advance tharalai pola mani!

Restive Mind சொன்னது…

"இராவணனை குற்றமற்றவன், நல்லவனாகக் காட்டி இருப்பதை இந்துதுவ ஆதரவாளர்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டார்கள் என்பது வியப்பென்றாலும். வியப்பின்மைக்கு காரணம், படம் எடுத்தது மணிரத்னம் என்கிற பார்பனர் என்பதால் இந்த புதினா (எழுத்துப் பிழை இல்லை) இராமயணம் புதுமை, புரட்சி என்று நினைக்கிறார்களோ, இவையும் எதிர்ப்பார்த்து தானே என்கிற வியப்பின்மையும் ஏற்படுகிறது. எந்த ஒரு மாறுபட்ட நிகழ்விலும் 'அவா செய்தா புரட்சி மத்தவா செய்தால் அபத்தம்' என்பது தான் வழக்கமான பார்பன பொது புத்தி விமர்சனம்" - This is an unwarranted comment. Totally unrelated to the post and offensive!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்