பின்பற்றுபவர்கள்

1 ஜூன், 2010

பூக்காரி !

தனத்தால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை, அவள் மகள் லஷ்மி இளம் விதவியாகி வீட்டோடு இருக்கிறாள், மகிழ்ச்சியை தொலைத்த சுவடுகளை முகம் காட்டி இருந்தாலும் அமைதியின் வடிவாக அலுவலகம் சென்றுவருபவள். தனம் மனதுக்குள் நினைத்து வருத்தப்பட்டாள்.

'என்கிட்ட சொன்னால் அவங்க அப்பாவிடம் சொல்லி மாற்று ஏற்பாடு பண்ணலாம்....ஆனால் எதையும் வெளியே சொல்லாமல் இப்படி செய்கிறாளே.....'

அன்னிக்கு கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த போது ல்ஷ்மி முன்னமே வந்து உடை மாற்றிவிட்டு அவளுடைய அறைக்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

'அம்மா நீயே பூவை எடுத்து சாமிக்கு வச்சிடேன்.....நான் இன்னிக்கு.... மூணு நாளைக்கு பூசை அறைக்கு போகமுடியாது.....'

மேசையில் இருந்து எடுத்து வைக்கும் போது தான் தனம் அதைப் பார்த்து பதறினாள், இன்றோடு மூன்றாம் நாள் சாமிக்கு வைக்கும் கட்டிய பூ.....அதில் நீள முடி... ஒருவேளை அவசர அவசரமாக எடுத்து தலையில் வைத்துவிட்டு எடுத்து வைத்திருப்பாளோ....என்றெல்லாம் நினைத்தாள். இந்த காலத்தில் விதவைகள் பொட்டு வைப்பது சகஜம் தான் என்றாலும்...லஷ்மி அந்த அளவுக்கு பக்குவப்படாதவளாகத் தான் இருந்தாள்.

நினைத்துப் பார்த்து மேலும் திடுக்கிட்டாள்.....'ஒரு நாள் என்றால் எதோ காற்றில் முடி பறந்து வந்து விழுந்துட்டு என்று நினைக்கலாம்.....ஆனா எண்ணிப் பார்க்கும் போது கடந்த மூன்று நாளாக பூவில் முடி... இது எதார்த்தமாக நடந்திருக்க வாய்ப்பில்லையே....' என்று நினைத்தவளாக

அவளிடம் கேட்டுவிடலாமா ? என்று தனத்திற்கு பதை பதைப்பாக இருந்தது.

அந்த காலத்தில் விதவைகள் திருமணம் ஆகாமல் வாழ்ந்துட்டாங்க....இப்ப அப்படி இருப்பது பாதுகாப்பும் இல்லை, ஆனால் இவ இப்போதைக்கு எதுவும் இது பற்றி பேச வேண்டாம் என்று சொல்வதுடன்.....மாமனார் மாமியார் வீட்டுக்கு சென்று அவர்களை அவ்வப்போது பார்த்தும் வருகிறாள்.

எல்லாம் சரி....தலையில் பூவைச்சுப் பார்க்கனும் என்று தோணும் போது இன்னொரு திருமணம் பற்றி நினைக்காமலா இருப்பாள்....எதுக்கும் கேட்டுவிட வேண்டியது தான்......இந்த வாரம் சனிக்கிழமை அதாவது நாளைக்கு அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டே அன்றைய வேலைகளை முடித்தாள்.

தனத்துக்கு அனறு இரவுக் கூட சாமிக்கு வாங்கிய பூவில் நீள முடி இருந்த காட்சி வந்து வந்து போனதுடன்.....மகள் மனதில் இருக்கும் ஆசை ஞாயமானது தான் நாமளே கூட அவளை பூ வச்சிக்கச் சொல்லி வற்புறுத்தி வேறொரு கல்யாணத்து சம்மதிக்க வைத்துவிட வேண்டியது தான்...என்று நினைத்தவளாக தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை வழக்கம் போல ஓடியது.......அன்று மாலை வழக்கமாக வரும் பூக்காரி பார்ப்பதற்கு கொஞ்சம் மாறுபாட்டு இருந்தாள் தலையில் துணியைச் சுற்றி மறைத்திருந்தாள்.

'என்ன....தங்கம்மா...தலையில் அடிகிடி பட்டுவிட்டதா.....'

'இல்லிங்கம்மா.... எல்லாருடைய வீட்டிலும் திட்டினாங்க.......தலையில் இருந்து கொட்டும் முடி பூக்கூடையிலும் விழுந்துடுது....பூவுல ஒன்றோ இரண்டோ முடி சேர்ந்துவிடுகிறது... அதான் தலையை துணியால் சுத்தி கட்டி இருக்கேன்'

'.... மக தலையில் வச்சப் பூவை சாமிக்கு போடும் படி ஆகிவிட்டதே... மகளின் பூ ஆசை ......இன்னும் என்ன என்னவோ கற்பனை செய்திருந்ததெல்லாம்......ஒரு நொடியில் முடிவுக்கு வர நிம்மதி பெருமூச்சு விட்டாள் தனம்.

'என்னம்மா கோவமா......இப்படி பெருமூச்சு விடுறிங்களே....'

'அது ஒண்ணும் இல்லை தங்கம்.....வேறென்னவோ நினைச்சேன்......அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு......விடு' என்று பூவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் தனம்.

சந்தன முல்லை பூ .....வாசம் நல்ல கமகம..... மீண்டும் மகளுக்கு பூச்சூடிப் பார்க்கும் ஆசை... அந்த பூக்களை பார்க்கும் போது தனத்துக்கு அந்த பூக்களின் வாசனையைப் போலவே பொறுப்புணர்வும் மனதுக்குள் மிகுதியாகிக் கொண்டு இருந்தது.

*******

பின்குறிப்பு : இந்த சிறுகதை எனது புனைவு அல்ல.......பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ படித்தது.....படிக்கும் போது மனதில் பாதிப்பு ஏற்படுத்தும் சிறுகதை என்னிக்கும் மனதில் நிற்கும் என்பதற்கு இந்த கதை எனக்கே ஒரு நல்ல எடுத்துக்காடு. இங்கே பதிவில் இச்சிறுகதையின் எழுத்துக்கள் என்னுடைய வடிவம் என்றாலும் புனைவின் கரு என்னுடையது அல்ல.

கதை பிடித்து இருந்தால் ஓட்டு குத்துங்க எசமான்.

13 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இது என்ன சாமி?

கருத்தா?

புனைவா?

உண்மைக்கதையா?

யாசவி சொன்னது…

கண்ணன்,

அடிக்கிற காத்துல நீங்களும் துணி காயவைக்கிறீங்க போல

டாப்பிக்கல் :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அட இந்த கதை நல்லாருக்கே...

Bruno சொன்னது…

கோவியாரே

நீங்கள் அந்த கதையை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பார்த்து எழுதினீர்களா அல்லது இடையில் உங்கள் சொந்த சரக்கும் உள்ளதா

கோவி.கண்ணன் சொன்னது…

// புருனோ Bruno said...

கோவியாரே

நீங்கள் அந்த கதையை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பார்த்து எழுதினீர்களா அல்லது இடையில் உங்கள் சொந்த சரக்கும் உள்ளதா//

என்ன வாத்தியாரே கதையை படித்து பல ஆண்டுகள் (15 ஆண்டுக்கும் மேல்) ஆகிவிட்டது, வரிக்கு வரி அப்படியே வருமா ? பெயர்கள், டயலாக் எல்லாம் நம்ம சரக்கு, கதைக் கரு மட்டும் நினைவில் இருந்தவை

ஷாகுல் சொன்னது…

இன்னொரு பூக்காரியா? ...............

priyamudanprabu சொன்னது…

என்னமோ நடக்குது உலகத்துல........

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

யூ டூ கோவியார்ர்ர்.. :(

- ஓட்டு

RRSLM சொன்னது…

பூக்காரி?
இந்த சமயத்தில், இந்த தலைப்பில் ஒரு பார்பனர் பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் கோவி?

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

யூ டூ கோவியார்ர்ர்.. :(

- ஓட்டு

7:59 PM, June 01, 2010
Delete
Blogger RR said...

பூக்காரி?
இந்த சமயத்தில், இந்த தலைப்பில் ஒரு பார்பனர் பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் கோவி?//


ஏன் ஏன் கொலைவெறி ?

ஊருல பிரதமர் செத்துப் போய்விட்டால் ஒருத்தரும் சாப்பிடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் ஏற்றுக் கொள்வீர்களா ?

பிரச்சனைகள் நடக்கும் போது அது பற்றி நேரிடையாகவோ மறைமுகவாக பேசவே கூடாது என்பது உங்க நிலைப்பாடா ?

அப்படி என்றால் பாலபாரதி, நீங்கள் மட்டும் 2 காசு 3 காசு என்று பதிவிடும் உரிமையை யாரிடம் கேட்டு போட்டீர்கள் ?

:(

எனக்கும் தான் வருத்தம். "பூக்காரி" பற்றிய புனைவுகள் மனதில் நிற்பதை அழிக்க முடியாமா என்று என்னால ஆன முயற்சியை செய்தேன். இல்லை அப்படியே தான் இருக்கனும் என்று நீங்களெல்லாம் நினைக்கிறீர்களோ ?

சென்ஷி சொன்னது…

//
:(

எனக்கும் தான் வருத்தம். "பூக்காரி" பற்றிய புனைவுகள் மனதில் நிற்பதை அழிக்க முடியாமா என்று என்னால ஆன முயற்சியை செய்தேன். இல்லை அப்படியே தான் இருக்கனும் என்று
நீங்களெல்லாம் நினைக்கிறீர்களோ ?//

ooh.. ithukku peruthan varuthamaa.. !

RRSLM சொன்னது…

:) :) :)

குகன் சொன்னது…

இங்கேயும் பூக்காரியா !!!

இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகில் 'பூக்காரி' பெயரை யாராலும் மறக்க முடியாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்