பின்பற்றுபவர்கள்

18 ஜூன், 2010

'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது !

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்' என்பது தவிர்த்து தமிழ் வாசனைகள் நிகழ்ச்சியில் குறைவு.

நிகழ்ச்சியில் நடுவர்களாக நிகழ்ச்சி முழுவதும் பங்காற்றியவர்களில் பாடகர் மனோ, சுபா ஆகியோர் தெலுங்கு தேசத்தைச் சார்ந்தவர்கள் (எனக்கு அவர்களின் குரல்களைப் பிடிக்கும்), நிகழ்ச்சி தொகுப்பாளினி மலையாளி. இசைக்கு மொழி கிடையாது....... இவன் என்ன கிளப்புகிறான் ? என்றால் நிகழ்ச்சிக்கு 'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்றே சொல்லி இருக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து. முதல் பரிசாக 25 லட்சம் பெருமான முள்ள வீட்டைப் பெற்றதாகச் சொல்லும் சிறுமி அல்கா அஜித் கேரளாவில் இருந்து வந்து பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். இவருக்காக தமிழகத்தின் பொதுமக்கள் பெருவாரியான வாக்குகளைத் தந்து இருக்கிறார்கள், தமிழனுக்கு பெரிய மனசுதான். குழந்தை , குரல் இனிமையெல்லாம் பார்த்து அது மட்டுமே போதும் என்பதாக அவர் எங்கிருந்து வந்தவர் என்கிற ஆராய்ச்சி எதுவுமே செய்யாமல் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, பெரும் தன்மையானது என்றாலும், இது போன்ற மனநிலைகள் அண்டை மாநில மக்களுக்கு இல்லாத நிலையில் தொடர்ந்து தமிழர்களையும் தமிழையும் இழிவு படுத்திவரும் வேலையில், இங்கே தமிழகத்தின் குழந்தைகளுக்காக படைக்கப்பட்ட தொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவர்களுக்கான பொன்னான வாய்ப்பை பறித்துச் சென்றதை வெறும் திறமை, குரல் வளம் என்ற சொல்லாடலில் மறைத்து பாராட்டும் பெரிய மனது சத்தியமாக எனக்கு இல்லை.

இங்கு சிங்கப்பூரில் கூட அதே போன்ற கூத்துகளை பலமுறை பார்த்து இருக்கிறேன். ஆண்டு ஆண்டுகளாக சமூக மன்றத்தில் சேவை செய்துவருவர்களும், ஆண்டுகணக்கில் இங்கே வசிப்பவரும் சேர்ந்து சில சமயம் இது போன்ற பாட்டுப் போட்டி நடத்தும் போது அண்மையில் தமிழகத்தில் இருந்து வந்து பாட்டு வாத்தியாரிடம் பாட்டு பயிற்சி பெற்ற ஒரு குழந்தை தலையை நன்றாக ஆட்டி குரல் எடுத்துப் பாடி பரிசைப் பெற்றுச் சென்றுவிடும், அதன் பிறகு அதன் பெற்றோர்களோ அல்லது அந்த குழந்தையையோ அந்த மேடைகளில், அந்தப் பகுதியின் பொதுச் சேவை நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாது. போட்டியில் பங்கெடுத்த சேவையாளர்களின் குழந்தைகளெல்லாம் என்றோ ஒரு நாள் கிடைக்கும் பொன்னான வாய்ப்பும் பறிபோனது கூடத்தெரியாமல் பரிசு பெற்றவருக்காக கைதட்டி மகிழ்வார்கள்.

சிங்களர்களை நல்லவனாகவும் ஈழமக்களுக்காக போராடியவர்களை கெட்டவர்களாகவும் காட்டும் படத்தை ஒரு மலையாளி தான் எடுத்திருக்கிறான். நல்லவேளை அது தமிழகத்தில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் நம் இனம் கேவலாமானது என்று ஒரு மலையாளி எடுத்தப் படத்தை நாமே காசு கொடுத்துப் பார்த்து அவன் கல்லாவை நிறப்பு அனுப்பி இருப்போம்.

இசைக்கு மொழி கிடையாது, சாதி கிடையாது, இனம் கிடையாது என்று பேசுவது பெருந்தன்மையானது தான், ஆதான் அதில் டாமினேட் செய்பவர்களெல்லோருமே அதைச் சார்ந்து தான் செய்கிறார்கள் என்பதை பெருந்தன்மை பேசுபவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் வின்னர்-அல்கா அஜீத் ற்கு என்னால் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை, நம்ம தமிழ்நாட்டின் செல்லக் குரலுக்கான குழந்தை ஒருவரின் வாய்ப்பைப் பறித்தக் குழந்தையாகத் தான் பார்க்கிறேன். இதற்குகாரணமான நிக்ழ்ச்சி நடத்துபவர்கள் மீது தான் எரிச்சல் ஆகிறது. நம்மூர் குழந்தைகளுக்கு அந்த தகுதி இல்லை என்பதை தமிழ் நிகழ்ச்சி என்பதாகக் காட்டி அதையும் நம்மை வைத்தே கைத்தட்டி, நம்மை வைத்தே தேர்ந்தெடுக்க வைத்தது மிகப் பெரிய மோசடி.

:(

ஒரு தமிழனின் பார்வையில் தமிழ்பாடல் நிகழ்ச்சியில் திறமையின் அடிப்படையில் ஒரு மலையாளிக்கு பரிசு தந்தது பெரும்தன்மையாக இருக்கலாம். ஆனால் மலையாளிக்களின் பார்வையில் தமிழ்நாட்டில் நம்மைவிட திறமையுள்ளவர்கள் இல்லை என்கிற ஏளனம் இருக்குமா இருக்காதா ?

டிஸ்கி : தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் தமிழகத்தில் வாழும் எந்த ஒரு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் கலந்து கொண்டு பரிசு பெற்றிருந்தால் நான் இந்த நிகழ்ச்சியை வரவேற்றிருப்பேன். தமிழ்பாட்டை யார் வேண்டுமானாலும் பாடாலாம் என்ற போட்டியில் தமிழகதின் செல்லக் குரலுக்கான தேடல் என்கிற தலைப்புக் கொடுத்திருக்கத் தேவை இல்லை என்பது எனது கருத்து

88 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

வித்தியாசமான சிந்தனை - இப்பொழுது மலையாளிகளின், தமிழரைப் பற்றிய எண்ணங்கள் குறித்து அதிக செய்திகள் வருகின்றன. இருப்பினும் அல்கா அஜீத் இறுதியாகப் பாடிய சிங்கார வேலனே தேவா - கேட்டீர்களா .... எனக்குப் பிடித்திருந்தது. இறுதியில் பாடிய ஐவரில் எனது ஓட்டு அல்கா அஜீத்திற்கே

இங்கு திறமையினை மட்டும் நான் பார்க்கிறேன் - மற்றவற்றைப் புறந்தள்ளுகிறேன்

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா

கோவி.கண்ணன் சொன்னது…

//இங்கு திறமையினை மட்டும் நான் பார்க்கிறேன் - மற்றவற்றைப் புறந்தள்ளுகிறேன்//

:)

கடைசி பத்தி உங்களுக்குத்தான் சொல்லி இருக்கிறேன்.

cheena (சீனா) சொன்னது…

ஏளனம் இருக்காதா - இருக்காது - இருக்கக் கூடாது - வெற்றி பெற்ற திறமையினை நினைத்துப் பெருமை அடைவார்கள்.

TBCD சொன்னது…

உள்ளூரில் மட்டைப்பந்து வளர்க்க வெளியூர் ஆளை உள்ளே இறக்குவதில்லையா...? அதுப் போல தான் இதுவும்.

வெளியூர் ஆளே எல்லா போட்டியிலும் நன்றாக விளையாடினால் அதற்கு சங்கம் பொறுப்பேற்க முடியாது...?


(இந்த விளையாட்டில் எந்தவித இடையூறும் நிர்வாகிகள் செய்யவில்லை என்ற அடிப்படையில் இந்தக் கருத்து )

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அல்கா ஜெயித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளோம்.

எங்களுக்கு தமிழர், மலையாளி, கன்னடியர் என்ற குறுகிய மனப்பான்மை எல்லாம் கிடையாது.

அனைவரும் இந்தியர்கள்/ மனிதர்கள் என்ற தேசிய பார்வைக்கு வாருங்கள் நண்பரே.

இன்டர்நெட் யுகத்திலும் மொழி, மதம், ஜாதி பாகுபாடுகளா
.

TBCD சொன்னது…

பின்னுட்டத் தொடர்ச்சிகாக

கோவி.கண்ணன் சொன்னது…

// ராம்ஜி_யாஹூ said...

அல்கா ஜெயித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளோம்.

எங்களுக்கு தமிழர், மலையாளி, கன்னடியர் என்ற குறுகிய மனப்பான்மை எல்லாம் கிடையாது.

அனைவரும் இந்தியர்கள்/ மனிதர்கள் என்ற தேசிய பார்வைக்கு வாருங்கள் நண்பரே.

இன்டர்நெட் யுகத்திலும் மொழி, மதம், ஜாதி பாகுபாடுகளா//

திறமை குறித்தோ, அந்த சிறுமி நன்றாகப் பாடவில்லை என்றோ நான் எதுவும் சொல்லவில்லை, 'தமிழகத்தின் செல்லக் குரல்' என்று நிலம் சார்ந்து சொல்லி தமிழகத்தையோ, தமிழை தாய்மொழியாகவோ கொள்ளாத ஒருவரை தேர்ந்தெடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அண்டை நாட்டு பிரதமர் சிறப்பாக ஆளுகிறார் என்பதற்காக எங்கள் நாட்டையும் ஆண்டு தாருங்கள் என்று கேட்கும் மனநிலை எனக்கு இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//
இன்டர்நெட் யுகத்திலும் மொழி, மதம், ஜாதி பாகுபாடுகளா//

:)
தமிழனை ஒரு மலையாளி தொலைகாட்சி பேட்டியில் எருமையை ஒப்பிட்டு சொன்னாலும், அவன் வீட்டு வேலைக்காரியைத்தானே சொன்னான் என்று அவனுக்கும் சப்போர்ட் செய்யும் பெரும் தன்மை நமக்குத்தான் இருக்கிறது.

தமிழன் எந்த ஒரு இனத்தையும் அவமானப்படுத்தினான் என்று கூறி மன்னிப்பு கேட்டது போன்ற நிகழ்வை நான் இதுவரை பார்த்தது இல்லை

Unknown சொன்னது…

//cheena (சீனா)

ஏளனம் இருக்காதா - இருக்காது - இருக்கக் கூடாது - வெற்றி பெற்ற திறமையினை நினைத்துப் பெருமை அடைவார்கள்.//

ஆண்ட பரம்பரை அடிமையானதும் அடிவாங்கியதும் இப்படித்தான் . வாழ்க தமிழா .. ..
உங்களுடைய கலை தாகத்திற்கும் வந்தாரை வாழவைக்கும்
விருந்தோம்பலுக்கும் அளவே இல்லை போங்கள் .

Sudhar சொன்னது…

Mano (aka Nagur Babu is Telugu) Suba (Palakkad Tamil Iyer, relative to Priyamani and Vidhya Balan), Chitra (Malayalam), Sowmya (Palakkad Tamil Iyer).

This other state identification and removal slowly it will be difficult in program like this. For e.g., it is not easy to identify the root in a city like Chennai (may be 15 years before its possible).

The same thing may not happen in Kerala since it may not be that much metropoliton in nature.

But I agree, it can be Telugu girl also, can't agree for mallus.

By birth mallu knows, how to support and favourite their community.

Vijay TV earlier also mallus own in the few singing competition it seems. I don't remember their names.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Sudhar said...

Mano (aka Nagur Babu is Telugu) Suba (Palakkad Tamil Iyer, relative to Priyamani and Vidhya Balan), Chitra (Malayalam), Sowmya (Palakkad Tamil Iyer).//

அவங்க பேரே மால்குடி சுபா தானே.

அரவிந்தன் சொன்னது…

//இங்கே தமிழகத்தின் குழந்தைகளுக்காக படைக்கப்பட்ட தொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவர்களுக்கான பொன்னான வாய்ப்பை பறித்துச் சென்றதை வெறும் திறமை, குரல் வளம் என்ற சொல்லாடலில் மறைத்து பாராட்டும் பெரிய மனது சத்தியமாக எனக்கு இல்லை.

//

100% வழிமொழிகிறேன்.

priyamudanprabu சொன்னது…

. இசைக்கு மொழி கிடையாது....... இவன் என்ன கிளப்புகிறான் ? என்றால் நிகழ்ச்சிக்கு 'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்றே சொல்லி இருக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து.
/////////


மிகசசரி

Kesavan சொன்னது…

இறுதி வரை வந்த அந்த ஐந்து பேருமே திறமைசாலிகள் தான் . நான் வெற்றி பெறுவார் எதிர்பார்த்தது ஷ்ரவன் (கடினமான பாடல்களை நன்றாக பாடியது )அல்லது நித்யஸ்ரீ (பாடலுடன் ஆடலையும்). சிறியவனான ஸ்ரீகாந்த் அந்த மேடையில் சிறிது பயமின்றி சிறப்பாக பாடியது ( இந்த சிறுவன் மக்கள் ஓட்டுகளால் இறுதி சுற்றுக்கு வந்தவன் )மிகவும் சிறப்பு . ஆனால் கடைசி கட்டத்தில் அல்கா அஜித்தின் "சிங்கரா வேலனே" பாடல் தான் அவரை முன்னால் கொண்டு சென்றது . இந்த பழைய பாடல் மக்கள் ( விஜய் டிவி நேயர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் நேயர்கள் ) மனதை மாற்றி விட்டது என்றே சொல்லுவேன் . இதில் எந்த மொழியை சேர்ந்தவர் வெற்றி பெற்றார் என்பதை விட அவர் தமிழில் பாடி வெற்றி பெற்றார் என்பதை பார்க்கும் பொது எல்லாரையும் வாழ வைக்கும் தமிழ் மொழி என்று நம் மொழி மீது இன்னமும் மரியாதையை ஏற்படுகிறது. ('தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' . இந்த சொல்லை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் )

priyamudanprabu சொன்னது…

நிஜமாவே ஓட்டு போட்டு தேர்ந்தேடுதாங்கனு நம்புறிகளா

கோவி.கண்ணன் சொன்னது…

//('தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' . இந்த சொல்லை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் )//

நானும் அதைத்தான் சொல்கிறேன், வெறுமன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று அறிவித்திருந்தால் நான் இந்தப் பதிவை எழுதி இருக்க மாட்டேன்

Kesavan சொன்னது…

இறுதி வரை வந்த அந்த ஐந்து பேருமே திறமைசாலிகள் தான் . நான் வெற்றி பெறுவார் எதிர்பார்த்தது ஷ்ரவன் (கடினமான பாடல்களை நன்றாக பாடியது )அல்லது நித்யஸ்ரீ (பாடலுடன் ஆடலையும்). சிறியவனான ஸ்ரீகாந்த் அந்த மேடையில் சிறிது பயமின்றி சிறப்பாக பாடியது ( இந்த சிறுவன் மக்கள் ஓட்டுகளால் இறுதி சுற்றுக்கு வந்தவன் )மிகவும் சிறப்பு . ஆனால் கடைசி கட்டத்தில் அல்கா அஜித்தின் "சிங்கரா வேலனே" பாடல் தான் அவரை முன்னால் கொண்டு சென்றது . இந்த பழைய பாடல் மக்கள் ( விஜய் டிவி நேயர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் நேயர்கள் ) மனதை மாற்றி விட்டது என்றே சொல்லுவேன் . இதில் எந்த மொழியை சேர்ந்தவர் வெற்றி பெற்றார் என்பதை விட அவர் தமிழில் பாடி வெற்றி பெற்றார் என்பதை பார்க்கும் பொது எல்லாரையும் வாழ வைக்கும் தமிழ் மொழி என்று நம் மொழி மீது இன்னமும் மரியாதையை ஏற்படுகிறது.

'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' . இந்த சொல்லை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Kesavan சொன்னது…

நாம் பத்திரிகையில் வரும் சில செய்தியை உண்மை என்று நம்புவதில்லையா :)

Unknown சொன்னது…

தமிழகத்தின் தேடல் கேரளாவாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை...சங்கீதம்,திறமைகளுக்கு இன சாயம் பூச கூடாது ,வேறுபாடு பார்க்க கூடாதுஎன்றாலும்,தமிழ் மக்களை ரசிக்க வைத்துதானே இத்னை நாட்கள் நடத்தினார்கள் சம்பாதித்தார்கள் கடைசியில் தமிழனுக்கு நாமம் பூசியது ஏன்

Kesavan சொன்னது…

'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்று அறிவித்த பொது இதில் தமிழை தாய் மொழியாக கொண்ட குழந்தைகள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது என்று அப்பொழுதே பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அடுத்த தடவை இந்த மாதிரி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

யாசவி சொன்னது…

கோவியை கண்டபடி வழிமொழிகிறேன்

கண்ணன் ஒன்றை கவனித்தீர்களா?

எல்லோரும் ஒன்று பிராமணர்களாகவும் அல்லது மலையாளிகளாகவும் இருப்பது.

கருப்பாக இருந்த ஒரு பையனை ஒப்புக்கு வைத்து “கருப்பு முத்து” என கிண்டல் செய்து நிகழ்ச்சியை ஓட்டினார்கள்.

ஹாலிவுட் படங்களில் கருப்பர்கள் கேரக்டர் திணிக்கப்படுவதை போல.

மீதி இந்தியர்கள்... etc எல்லாம் இவர்கள் ஒரு மாயையில் வாழ்கிறார்கள்.

பி.கு: நான் ஜாதிக்கோ அ இனத்துக்கோ ஆதரவாளான் அல்ல. Biasing cannot tolerable

யாசவி சொன்னது…

கோவியை கண்டபடி வழிமொழிகிறேன்

கண்ணன் ஒன்றை கவனித்தீர்களா?

எல்லோரும் ஒன்று பிராமணர்களாகவும் அல்லது மலையாளிகளாகவும் இருப்பது.

கருப்பாக இருந்த ஒரு பையனை ஒப்புக்கு வைத்து “கருப்பு முத்து” என கிண்டல் செய்து நிகழ்ச்சியை ஓட்டினார்கள்.

ஹாலிவுட் படங்களில் கருப்பர்கள் கேரக்டர் திணிக்கப்படுவதை போல.

மீதி இந்தியர்கள்... etc எல்லாம் இவர்கள் ஒரு மாயையில் வாழ்கிறார்கள்.

பி.கு: நான் ஜாதிக்கோ அ இனத்துக்கோ ஆதரவாளான் அல்ல. Biasing cannot tolerable

Kesavan சொன்னது…

'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்று அறிவித்த பொது இதில் தமிழை தாய் மொழியாக கொண்ட குழந்தைகள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது என்று அப்பொழுதே பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அடுத்த தடவை இந்த மாதிரி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

துளசி கோபால் சொன்னது…

பதிவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடியதைப் பார்த்து என்னமோ இருக்குன்னு முதல்முறையா நேத்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

சிங்காரவேலனே தேவா பாட்டை இந்தப் பெண் ரொம்ப நல்லாப் பாடினார். நாதஸ்வரமும் தவிலும் (முக்கியமா தவில் வாசித்தவர்) கொஞ்சம் குழப்பினாங்க.

ஆமாம். இந்த ஓட்டுப்போட்டவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே? பப்ளிக் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்க இது என்ன தேர்தலா? எதுக்குத்தான் ஓட்டு என்றதே இல்லாமப் போச்சே:(

முப்பது லட்சத்துச் சொச்சம் ஓட்டுகள் மொத்தமாம். ஒன்னு 3 ரூபாய். கணக்குப் போட்டுக்குங்க. ஏர்டெல் கோடீஸ்வரன்.

என்னமோ போங்க....

Unknown சொன்னது…

//அண்டை நாட்டு பிரதமர் சிறப்பாக ஆளுகிறார் என்பதற்காக எங்கள் நாட்டையும் ஆண்டு தாருங்கள் என்று கேட்கும் மனநிலை எனக்கு இல்லை//

வழிமொழிகிறேன்.
//இங்கு திறமையினை மட்டும் நான் பார்க்கிறேன் - மற்றவற்றைப் புறந்தள்ளுகிறேன்//

எப்படி பார்ப்பனீயம் திறமை மட்டுமே தகுதி என்று சொல்லி நம் மக்களை முன்னேறவிடாமல் அழுத்தியே வைத்திருந்ததோ அதே கண்ணோட்டம்தான் இங்கும் இருக்கிறது.

//எல்லாரையும் வாழ வைக்கும் தமிழ் மொழி என்று நம் மொழி மீது இன்னமும் மரியாதையை ஏற்படுகிறது. //

தமிழனை தவிர :)

துளசி கோபால் சொன்னது…

//அண்டை நாட்டு பிரதமர் சிறப்பாக ஆளுகிறார் என்பதற்காக எங்கள் நாட்டையும் ஆண்டு தாருங்கள் //

அட! இது நல்லா இருக்கே!!!!!

Kesavan சொன்னது…

'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்று அறிவித்த பொது இதில் தமிழை தாய் மொழியாக கொண்ட குழந்தைகள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது என்று அப்பொழுதே பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அடுத்த தடவை இந்த மாதிரி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

Unknown சொன்னது…

//'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது !"//

’செம்மொழியான எங்கள் தமிழ்மொழியே’

செம்மொழி மாநாடு மைய நோக்கு பாடல் ஒளிப்பட இயக்குனர் மலையாளி கவுதம் மேனன், இதை இயக்குவதற்கு தமிழ் இயக்குனர்கள் எவருக்கும் தகுதி இல்லை என்று முடிவு செய்துவிட்டார் முத்தமிழ் அறிஞர் ‘டாக்டர்’ கலைஞர்.

துளசி கோபால் சொன்னது…

பதிவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்களேன்னு முதல்முறையா இதை நேற்றிரவு தொலைக்காட்சியில் பார்த்தேன்.

அந்தப் பெண் அல்கா, 'சிங்காரவேலனே தேவா' வை அருமையாகப் பாடியதென்னவோ நிஜம்.

தமிழர்கள்தானே ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சுருக்காங்க! ஓட்டுப்போடுவதில் நம்ம மக்களை யாரும் அடிச்சுக்க முடியாது:-)

மொத்தம் முப்பதுலட்சத்துச் சொச்சம் ஓட்டுகள். ஒன்னு 3 ரூபாய். கணக்குப்போட்டுப் பார்த்துக்குங்க. ஏர்டெல் கோடீஸ்வரன்!

என்னவோ போங்க......

நிகழ்ச்சியின் நடுநடுவில் 'தமிழ்ப்பண்பாட்டு உடைகளுடன்' சில குழு நடனங்கள் வந்துச்சே. அதைப் பற்றி எதாவது சொல்லுங்க கோவியாரே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திராவிட நாட்டின் சூப்பர் சிங்கர்னு கொடுத்திருக்கலாம்!

அதுல நம்ம அண்ணாவுலேருந்து, கலைஞர்வரைக்கும் பங்கு இருக்கே!

அவர்களும் தமிழர்கள் தானே!

முன்னால் தமிழகத்தின் குழந்தை பெற்றுக்கொண்டது, இன்னால் தமிழகத்தின் குழந்தைகளுக்கு வருத்தம் ஏற்படுத்தத் தான் செய்யும். எல்லாம் அவர்கள் நம்மை, பிறரை கொண்டாடும் முறையில் இருக்கிறது சனங்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

அன்பார்ந்த பதிவர் மக்களே, இடுகையின் மையப் பொருள் தவறான பொருள் தந்துவிடும் என்பதால் அதை தவிர்க்க பதிவின் கடைசியில் டிஸ்கி இணைத்துள்ளேன்
:)

Kesavan சொன்னது…

//நிகழ்ச்சியின் நடுநடுவில் 'தமிழ்ப்பண்பாட்டு உடைகளுடன்' சில குழு நடனங்கள் வந்துச்சே. அதைப் பற்றி எதாவது சொல்லுங்க கோவியாரே. //

அந்த நடனத்தை பார்த்து விட்டு கோவியார் மெய் மறந்து விட்டார் போலும் :))))))))

துளசி கோபால் சொன்னது…

//கடைசியில் தமிழனுக்கு நாமம் பூசியது ஏன் //

நாமம் என்ன விபூதியா..பூசிவிட:-))))

நாமத்தைப் போடத்தான் முடியும்.

அல்லது நாமே போட்டுக்கலாம்!!!!

ஜோதிஜி சொன்னது…

சற்று விளக்கமாக வேறு பாதையில் நீங்கள் பயணித்து இருக்கலாம்.

இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை பார்த்து இருக்கின்றேன்.

ஆறாவது இடத்தை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அந்த குழந்தையை இன்று வரைக்கும் நினைத்துக்கொண்டு இருக்கின்றேன். வாணி ஜெயராமுக்கு இணையான திறமை அந்த குழந்தைக்கு. எதை அடிப்படையாக வைத்து வெளியேற்றினார்கள் என்பது புரியாத புதிர்.

நிகழ்ச்சிகளை நன்றாக பொதுவாக கவனித்துப் பாருங்கள் SPB சித்ரா போல எவராவது நிகழ்ச்சியில் தமிழை உணர்ந்து பேசுகிறார்களா? இவர்களின் தாய்மொழி தமிழா?

அல்கா அஜித் திறமை எந்த வகையிலும் மற்றவர்களுடன் ஒப்பிடவே முடியாத ஒன்று. அவர் பாடல் திறமையை விட சிறிது கூட பயம் இல்லாமல், இயல்பான முக பாவனைகள் மொத்தத்திலும் அந்த சிங்கார வேலன் பாடிய விதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனதில் நிற்கும்.

டீச்சர் சொன்ன அந்த கணக்கை தான் நானும் வீட்டில் சொல்லிக்கொண்டு இருந்தேன். சந்தைப் பொருளாதாரம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//அல்கா அஜித் திறமை எந்த வகையிலும் மற்றவர்களுடன் ஒப்பிடவே முடியாத ஒன்று. அவர் பாடல் திறமையை விட சிறிது கூட பயம் இல்லாமல், இயல்பான முக பாவனைகள் மொத்தத்திலும் அந்த சிங்கார வேலன் பாடிய விதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனதில் நிற்கும்.//

மன்னிக்கவும், அந்த குழந்தையின் திறமையைப் பற்றி நான் எதுவுமே தவறாகச் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் நல்ல குரல்வளம் உள்ளக் குழந்தைகளை ஏன் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக இவை அமைந்திருக்கவே கூடாது ? அதுவும் இவர்கள் தமிழகத்தின் செல்லக் குரல் என்று அடைமொழிக் கொடுக்கக் கூடிய தகுதி கேரளாவில் இருந்து வரும் குழந்தைக்குத்தான் இருக்கிறது என்பதாக அல்லவா நிகழ்ச்சி அமைந்துவிட்டது. முழுக்க முழுக்க நிகழ்ச்சி நடத்தியவர்களைத்தான் நான் இதில் குறை சொல்கிறேன்

Kesavan சொன்னது…

//எல்லோரும் ஒன்று பிராமணர்களாகவும் அல்லது மலையாளிகளாகவும் இருப்பது.

கருப்பாக இருந்த ஒரு பையனை ஒப்புக்கு வைத்து “கருப்பு முத்து” என கிண்டல் செய்து நிகழ்ச்சியை ஓட்டினார்கள்.//

இதில் எத்தனை பேர் பிராமணர்கள் என்று எவ்வளவு பேருக்கு தெரியும் . கருப்பு என்று சொன்னால் கிண்டலா. உங்கள் மனதில் கருப்பு என்றால் தாழ்ந்தது என்ற எண்ணம் தான் உள்ளது . கருமை நிற கண்ணா என்று சொன்னால் அவரை மட்டம் தட்டுவது என்று அர்த்தமா (பின் குறிப்பு : நான் கோவியாரை சொல்லவில்லை - அவர் கலர் எனக்கு மறந்து போச்சு ) . குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல வேண்டாம்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

தமிழர்களாகிய நாம் நடத்த இருக்கும் FETNA விழாவில், லட்சுமி ராயும், ப்ரியா மணியும், சாதனா சர்கமும் ஆற்ற இருக்கும் தமிழ் தொண்டு அளவிற்கு அல்காவின் தமிழ் தொண்டு இல்லை போல, கோவியார் பார்வையில்.

Indian சொன்னது…

பிரதீப் மில்ராய் பீட்டர் இருக்க பயமேன்?

நிகில் மேத்யு, அஜீஷ், அல்கா அஜீத் எனத் தொடரும் இந்தத் தேடல்!

கோவி.கண்ணன் சொன்னது…

//தில் எத்தனை பேர் பிராமணர்கள் என்று எவ்வளவு பேருக்கு தெரியும் . கருப்பு என்று சொன்னால் கிண்டலா. உங்கள் மனதில் கருப்பு என்றால் தாழ்ந்தது என்ற எண்ணம் தான் உள்ளது . கருமை நிற கண்ணா என்று சொன்னால் அவரை மட்டம் தட்டுவது என்று அர்த்தமா (பின் குறிப்பு : நான் கோவியாரை சொல்லவில்லை - அவர் கலர் எனக்கு மறந்து போச்சு ) . குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல வேண்டாம்.//

கேசவன், எனக்கு தெரிந்து கருப்பு பார்பனர்கள் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். எனவே பார்பனர்களின் அடையாளம் என்று கருப்பைச் சொல்வதாக நான் கொள்ளவில்லை, நம்ம டோண்டு சாரும் கூட பார்ப்பதற்கு சராசரி கருப்பாகத்தான் இருப்பார் என்பது உங்களுக்கான தகவல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்ஜி_யாஹூ said...

தமிழர்களாகிய நாம் நடத்த இருக்கும் FETNA விழாவில், லட்சுமி ராயும், ப்ரியா மணியும், சாதனா சர்கமும் ஆற்ற இருக்கும் தமிழ் தொண்டு அளவிற்கு அல்காவின் தமிழ் தொண்டு இல்லை போல, கோவியார் பார்வையில்.//

ஒரு குழந்தையை கொச்சையாக கற்பனையாக நினைக்கும் அளவுக்கெல்லாம் எனக்கு மனது கெட்டுப் போகவில்லை, நேற்று டிவிஆர் பதிவுலும் இதுபற்றி என் கருத்தை பதிந்து இருக்கிறேன். உங்கள் கருத்தை உறுதியாகச் சொல்ல இந்த அளவுக்கு சென்றிருக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. மன்னிக்கவும்

நட்புடன் ஜமால் சொன்னது…

தமிழகத்தின் செல்ல குரல் தேட வேண்டுமென்றால் தமிழ் அல்லாதவர்களை சேர்த்தே இருக்ககூடாது

சேர்த்த பிறகு திறமையை மட்டுமே பார்க்க இயலும்

தமிழில் தானே பாடினார்கள் எல்லோரும்

இறுதியில் யோசித்ததை முதலிலே யோசித்திருந்தால் சரியோ என்று நாமும் யோசிக்கலாம் ...

இப்ப நோ ...

வாழ்த்துகள் அல்கா அஜீத்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

I think you have not been watching the programme. This season's programme name is AIRTEL SUPER SINGER. its not Tamilagathin chella kural tedal. That was season 1 only where Jospeh or Nikil won time.(chinmayi anchor time)

Anyhow there is no point in that we 2 have to waste on this. Its already over, Alka is going to sing in cinemas soon.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்ஜி_யாஹூ said...

I think you have not been watching the programme. This season's programme name is AIRTEL SUPER SINGER. its not Tamilagathin chella kural tedal. That was season 1 only where Jospeh or Nikil won time.(chinmayi anchor time)//

நான் பார்த்த அளவில் 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்' என்றே கூவினார்கள், யுடியூபில் விடியோக்கள் கிடைக்கும். பார்க்கவும்.

// Anyhow there is no point in that we 2 have to waste on this. Its already over, Alka is going to sing in cinemas soon.//

இருக்கட்டும், நல்வாழ்த்துகள். நான் அந்த குழந்தை திறமை குறைந்தவள் என்று எங்கும் குறிப்பிடவில்லையே.

துளசி கோபால் சொன்னது…

//நான் பார்த்த அளவில் 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்' என்றே கூவினார்கள், //

நானும் சாட்சி.

நட்புடன் ஜமால் சொன்னது…

நானும் நானும் ...

Kesavan சொன்னது…

பார்த்தது (அவங்க லோகோ) airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 2. கேட்டது 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்

இது தான் சரி :))))

SV Dheva சொன்னது…

அண்ணா, உஙகள் கருத்துக்கள் மிகவும் சரியே...!!

SV Dheva சொன்னது…

அண்ணா, உஙகள் கருத்துக்கள் மிகவும் சரியே...!!

கோவி.கண்ணன் சொன்னது…

திரு இராம்ஜி யாகூ,

நான் உங்களுக்கு கோபமாக பதில் சொல்லவில்ல். தவறாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

அல்கா ஏற்கனவே சிறுவயதில் இருந்தே பல்வேறு மேடைகளில் 11 மொழிகளில் பாடிவருபவள். அவளுடன் பிற குழந்தைகளின் போட்டி என்பது கிட்டதட்ட பிசுசிலாவுடன் மற்ற மேடை பாடகிகள் போட்டி இடுவது என்பதாகும். இது ஒரு சமபலம் வாய்ந்தவர்களுக்கு இடையே ஆன போட்டி இல்லை என்பதும் என்கருத்து.

அல்கா பற்றிய முழுவிவரங்கள் இங்கே இருக்கிறது.

ராஜவம்சம் சொன்னது…

நிச்சயமாக சத்தியமாக கேரளாவில் எந்த ஒரு தமிழனுக்கும் சிரு அங்கிகாரமும் கிடைக்காது இது உண்மை

நாம்மெல்லாம் {தமிழன்}உயர்குழத்தார்!!!

நாகை சிவா சொன்னது…

//சிங்களர்களை நல்லவனாகவும் ஈழமக்களுக்காக போராடியவர்களை கெட்டவர்களாகவும் காட்டும் படத்தை ஒரு மலையாளி தான் எடுத்திருக்கிறான். நல்லவேளை அது தமிழகத்தில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் நம் இனம் கேவலாமானது என்று ஒரு மலையாளி எடுத்தப் படத்தை நாமே காசு கொடுத்துப் பார்த்து அவன் கல்லாவை நிறப்பு அனுப்பி இருப்போம்.//

ஏன் எதிர் கருத்துக்கள் உடைய படங்கள் வரக் கூடாது என மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. வரட்டுமே பாருங்கள், அதை பார்த்த பிறகாகவது, இது தவறு என்று ஈழ தமிழர்களுக்காக நம்மவர்கள் படம் எடுத்து உண்மையை வெளி கொண்டு வரட்டுமே.

நாத்திகம் பயின்றால் தான் ஆத்திகத்தை உணர முடியும். ஆத்திகம் தெரிந்தால் நாத்திகத்தை கடைப்பிடிக்க முடியும்

நாகை சிவா சொன்னது…

கோவி... வர வர உங்கள் பதிவுகள் எல்லாம் எல்லாத்துக்கு எதிர்வினை கருத்து சொல்லனும் என்ற நோக்கிலும் குறுகிய பார்வை போய் மிகவும் குறுகிய பார்வையில் எழுதப்படுவதாக தோன்ற அளிக்கிறது. இது என்னுடைய பார்வை கோளாறாக கூட இருக்கலாம் ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் எதிர் கருத்துக்கள் உடைய படங்கள் வரக் கூடாது என மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. வரட்டுமே பாருங்கள், அதை பார்த்த பிறகாகவது, இது தவறு என்று ஈழ தமிழர்களுக்காக நம்மவர்கள் படம் எடுத்து உண்மையை வெளி கொண்டு வரட்டுமே.//

சிவா எதிர்கருத்துவருவது பிரச்சனை இல்லை. எதிர்கருத்து மட்டுமே வந்தால் அது அரசியல் தான்.
http://kaattchi.blogspot.com/2010/05/blog-post_22.html

குறை சொல்பவர்களும் வெறும் நொட்டை சொல்லுக்காக சொல்வதில்லை என்ற புரிதல் வேண்டும். :)

//நாத்திகம் பயின்றால் தான் ஆத்திகத்தை உணர முடியும். ஆத்திகம் தெரிந்தால் நாத்திகத்தை கடைப்பிடிக்க முடியும்//

நீங்க ஆத்திகரா நல்லவரா ? :)

துளசி கோபால் சொன்னது…

//நீங்க ஆத்திகரா நல்லவரா ? :) //

இது என்ன?

ஆத்திகர் நல்லவரா இருக்கக்கூடாதா?
இல்லை நாத்திகர் கெட்டவரா இருக்கணுமா?

கெட்ட ஆத்திகர் இல்லைய்யா? இல்லை நல்ல நாத்திகர் இல்லவே இல்லையா?

புரியலை.....

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...

//நீங்க ஆத்திகரா நல்லவரா ? :) //

இது என்ன?

ஆத்திகர் நல்லவரா இருக்கக்கூடாதா?
இல்லை நாத்திகர் கெட்டவரா இருக்கணுமா?

கெட்ட ஆத்திகர் இல்லைய்யா? இல்லை நல்ல நாத்திகர் இல்லவே இல்லையா?

புரியலை.....//

அதோட புரிதல், ஒரு மனிதன் ஆத்திகனா நாத்திகனா என்பதைவிட நல்லவனாக இருக்கனும் என்பது :)

பை டீபால்ட் ஆத்திகன் நாங்க தான் நல்லவங்கன்னு சொல்லிக்குவாங்க. ஆனால் எந்த பிரதிபலனும் தேவையற்ற இறை பயமும் இல்லாதவங்க நாத்திகர்கள். சோ....நாத்திகன் என்றாலே எதற்கும் பயம்படமால மனித நேயம் மட்டும் போதும் என்று முடிவு செய்தவர்கள் என்று சொல்லலாம்.

இப்ப சொல்லுங்க நாத்திகன் ஆத்திகன் யார் நல்லவன் ?
:)

Matra சொன்னது…

//எல்லோரும் ஒன்று பிராமணர்களாகவும் அல்லது மலையாளிகளாகவும் இருப்பது.//

விஷயம் என்னவென்றால் இந்த இரு வகையினரே கர்னாடக சங்கீதம் அதிகம் பயில்குறார்கள். இதில் மலயாளிகளிள் க்ரித்துவர்களும், இஸ்லாமியர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.

Please view programs in Asianet like Idea Star singer etc.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஷயம் என்னவென்றால் இந்த இரு வகையினரே கர்னாடக சங்கீதம் அதிகம் பயில்குறார்கள். இதில் மலயாளிகளிள் க்ரித்துவர்களும், இஸ்லாமியர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.

Please view programs in Asianet like Idea Star singer etc.//

இளையராஜா எந்த ஒரு கருநாடக இசையும் கற்காமலேயே கலக்கினார். பாடல்களுக்கு கர்நாடக சங்கீதம் தான் தகுதி என்றால் பிறநாடுகளின் பாடல்களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. ஆனால் அப்படி இருப்பதாக ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் நம்மவர்கள். மேடைக் கூச்சம் போவதற்கான பயற்சி எடுக்க பயன்படலாம் மற்றபடி கர்நாடக இசை தெரிந்தவன் தான் பாடனும் என்கிற வரையரையெல்லாம் யாரும் செய்துவிட முடியாது.

துளசி கோபால் சொன்னது…

//இப்ப சொல்லுங்க நாத்திகன் ஆத்திகன் யார் நல்லவன் ?
:) //
//ஆத்திகரா நல்லவரா?//

யார் நல்லவன் என்பது பிரச்சனை இல்லை.

இப்போ நாத்திகன் என்ற சொல்லுக்கு நல்லவன் என்று பெயர் மாத்திட்டாங்களா என்பதுதான் கேள்வி.

ஆத்திகர் எல்லாம் நல்லவங்கன்னு தாங்களே சொல்லிகிட்டா நாத்திகரெல்லாம் நாங்க கெட்டவங்கன்னு சொல்லிக்கணுமா?

ரெண்டு குழுவிலேயும் ரெண்டும் உண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//யார் நல்லவன் என்பது பிரச்சனை இல்லை.

இப்போ நாத்திகன் என்ற சொல்லுக்கு நல்லவன் என்று பெயர் மாத்திட்டாங்களா என்பதுதான் கேள்வி.

ஆத்திகர் எல்லாம் நல்லவங்கன்னு தாங்களே சொல்லிகிட்டா நாத்திகரெல்லாம் நாங்க கெட்டவங்கன்னு சொல்லிக்கணுமா?

ரெண்டு குழுவிலேயும் ரெண்டும் உண்டு//

:) ஒருவர் கோவில் சிலையை கடத்த அல்லது கோவில் உண்டியலை உடைக்க தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது காரணம் என்று நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் கடவுள் நம்பிக்கைக்கும் ஆத்திகத்திற்கும் தொடர்பு இல்லை அல்லது குறைவு. ஒருமனிதன் நல்லவனாக இருக்க நம்பிக்கைகள் மட்டுமே அடிப்படைக்காரணமாக இருக்க முடியாது.

துளசி கோபால் சொன்னது…

மலையாளிகளில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கூட கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார்கள். அருமையாகப் பாடவும் செய்கிறார்கள்.

கர்நாடக சங்கீதத்தை இந்துமதத்துக்குன்னு ஒதுக்கி இருப்பது நம்ம தமிழ்நாட்டில்னுதான் நினைக்கிறேன்.
இது என் சொந்தக் கருத்து. தவறா இருந்தால் சொல்லுங்க.

Kesavan சொன்னது…

//இளையராஜா எந்த ஒரு கருநாடக இசையும் கற்காமலேயே கலக்கினார்.//

spb அவர்களுக்கும் கர்னாடக சங்கீதம் தெரியாது . இருந்தும் அவர் சங்கரா பரணத்தில் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
பின் குறிப்பு . கர்நாடக சங்கீதம் என்பது பழங்கால சங்கீதம் அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை ( திண்டுக்கல் லியோனி ஒரு நிகழ்ச்சியில் கூறினார் )

Sanjai Gandhi சொன்னது…

//சூப்பர் சிங்கர் ஜூனியர் வின்னர்-அல்கா அஜீத் ற்கு என்னால் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை//

ரொம்ப தப்பு பாஸ்.. விஜய் டிவியின் தவறுக்கு அந்த குழந்தை என்ன செய்யும்? வாய்ப்பு கிடைத்தது.. பயன்படுத்திக் கொண்டார்.. அவருக்கு என் வாழ்த்துகள்..


நல்லவேளை.. கேரள பொண்ணு ஜெயிச்சதால இதோட விட்டிங்க.. இல்லைனா இதில் ஜெயிக்க பார்பப்னரல்லாத ஒருவருக்கும் தகுதி இல்லையான்னு போட்டுத் தாக்கி இருப்பிங்க :)

Kesavan சொன்னது…

//நல்லவேளை.. கேரள பொண்ணு ஜெயிச்சதால இதோட விட்டிங்க.. இல்லைனா இதில் ஜெயிக்க பார்பப்னரல்லாத ஒருவருக்கும் தகுதி இல்லையான்னு போட்டுத் தாக்கி இருப்பிங்க :) //

என் சார் அவங்களுக்கு ஞாபகபடுத்தறீங்க. கோவி முதல் முறையா பார்பனர்களை சம்பந்தபடுதாமல் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு பெரிய பல்பு கொடுத்து பாராட்டுங்க

இன்று... சொன்னது…

நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்,ஆனால் இதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...விஜய் டிவியில் இந்த வருடம் என்றில்லை,கடந்த வருடமும்,அதற்கு முந்தைய வருடமும் கூட சூப்பர் சிங்கர் விருதை தட்டி சென்றவர்கள் மலையாளிகளே...அவர்களை பரிசு பெற வைக்க,நீதிபதிகளாக வந்த பாடகர்களுக்குள் நடந்த அரசியல்களும்,மோதல்களும் அதை வைத்து சேனல் மேற்கொண்ட கமர்ஷியல் விளையாட்டுக்களும் ஊர அறிந்த விஷயம்...இந்த வருடம் பரிசு ஒருவேளை தமிழ் போட்டியாளருக்கு கிடைத்திருக்கும்,ஆனால் நம் முதல்வரின் செம்மொழி பாடலில் இடம் பெற்றவர்களை (இயக்குனரும் மலையாளிதான்) பார்த்ததும் அவர்களுக்கு தைரியம் கிடைத்துவிட்டது.அதுமட்டுமல்ல நம் மக்களின் ஒட்டு மட்டுமே பரிசுக்குரியவரை தேர்ந்தெடுப்பதில்லை.நாம் பெருந்தன்மையாக மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகள் நம்மையே பதம் பார்க்கின்றன.இதே விஜய் டிவியில் கமலுக்கு விழா எடுத்த பொழுது மோகன்லால் காண்பித்த ரியாக்ஷன்களை கவனித்திற்களா எனத் தெரியவில்லை.

ஜோதிஜி சொன்னது…

நண்பா உங்களை தொடர்ந்து கொண்டுருக்கின்றேன். வரும் பின்னூட்டங்கள் வேறு திசையில் பயணிக்கின்றன. கவனம் தேவை.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிஜி மற்றும் துளசி அம்மா,

மன்னிக்கவும் அதென்னமோ ஆத்திகம் நாத்திகம் என்று யாராவது பேசினாலே எனக்கு (மெய்) சிலிர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது !
:)

பொருத்துக் கொண்டதற்கு நன்றி !

துளசி கோபால் சொன்னது…

பொருத்து = பொறுத்து

கோவி.கண்ணன் சொன்னது…

// rpj said...

நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்,ஆனால் இதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...விஜய் டிவியில் இந்த வருடம் என்றில்லை//

தாங்கள் தொடர்ந்து படித்துவருவதாக கூறுவது உற்சாகம் அளிக்கிறது. மிக்க நன்றி !

தங்கள் கருத்துகளுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

பொருத்து = பொறுத்து//

துளசி அம்மா, மீண்டும் நன்றி !

எனக்கு எப்போதுமே ர...ற தடுமாற்றமாக இருக்கிறது. :(

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இந்த கருத்தை போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே தெரிவித்து இருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும்.

Matra சொன்னது…

இளையராஜா எந்த ஒரு கருநாடக இசையும் கற்காமலேயே கலக்கினார். பாடல்களுக்கு கர்நாடக சங்கீதம் தான் தகுதி என்றால் பிறநாடுகளின் பாடல்களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. ஆனால் அப்படி இருப்பதாக ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் நம்மவர்கள். மேடைக் கூச்சம் போவதற்கான பயற்சி எடுக்க பயன்படலாம் மற்றபடி கர்நாடக இசை தெரிந்தவன் தான் பாடனும் என்கிற வரையரையெல்லாம் யாரும் செய்துவிட முடியாது.

Deep practice of Carnatic/Hindustani music helps develop singing ability. It may not be necessary but it does help a lot for people who by nature are not gifted like SPB. People like SPB/Ilayaraja are one in a million.

ஜோதிஜி சொன்னது…

நான் ஒரு வகையில் அதிர்ஷ்டக்காரன் கண்ணன். (என்னுடைய சகோதரன் பெயரும் இதே) ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ள துளசிதளமும் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. ஆன்மீகத்தை உண்மையான கேள்விகளால் துளைக்கும் உங்கள் அறிவாற்றலும் என்னை வியக்க வைக்கிறது. அதிலும் இந்த இடுகையில் டீச்சர் சொன்ன வார்த்தைகள் மணி மகுடம்.

மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது நீங்கள் பதில் சொல்ல விரும்பாத எந்த பின்னூட்டங்களையும் வெளியிட்டு நேரத்தையும் மனஉளைச்சலையும் மிச்சப்படுத்துங்கள்.

எழுதியவருக்கும் மரியாதை.
உங்களுக்கும் மரியாதை.

எழுத சொல்ல பேச விவாதம் செய்ய எத்தனையோ பேர்களுக்கு நேரம் விருப்பம் உண்டு. அத்தனையும் நாம் தலையிட வேண்டியிருந்தால் ராவணன் வைத்துருக்கும் பல தலைகள் நமக்கு வேண்டும்.

Save Energy Please.

நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

ஜோதிஜி சொன்னது…

உங்கள் பிரச்சனை போலவே னை ணை என்னைப் போட்டு பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறது. பத்து பக்கம் எழுதுவது எளிதாக இருக்கிறது. தவறாக எழுதி விட்டோமோ என்ற அவஸ்த்தை தீர மாட்டேன் என்கிறது. மறைமுகமாக டீச்சர் இந்த வகையிலும் இடுகை டீச்சராகத்தான் எனக்கு இருக்கிறார். ஒரு முறை வார்த்தைகளை உள்ளே சென்று பார்த்துக் கொண்டு விடுகின்றேன்.

shiva சொன்னது…

Tamil Nadu should get rid of all malayalees,kannadas,and Telugus immediately.malayalees never allow out siders to do business or to work in their state.Selfish fellows.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

இந்த கருத்தை போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே தெரிவித்து இருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும்.//

அந்நிகழ்ச்சிகளின் இறுதி சுற்றுக்கு முன்னான நிகழ்ச்சிகள் சென்ற வியாழன் தான் விஜயில் பார்த்தேன், அல்காவின் தந்தை தட்டுத்தடுமாறி மலையாளத்தமிழில் பேசி அவர்கள் கேரளாவில் இருந்து வாரம் தோறும் நிகழ்ச்சிக்கு வந்து செல்வதாகக் குறிப்பிட்டார். அதுவரை அல்கா எங்கிருந்து வந்து நிக்ழ்ச்சியில் பங்கேற்றார் என்பது எனக்கு தெரியாது.

தருமி சொன்னது…

ஏங்க .. ஆட்சியையே கையில் கொடுத்து விசிலடிச்சி 'ரசிச்சீங்க' .. இது என்ன, சும்மா ஜுஜுபி விவகாரம்!

தருமி சொன்னது…

Email follow-up comments to -- இதுக்காக

MR.BOO சொன்னது…

—–இது வரை ஒரு சாதாரண வியாபாரிகள் செய்யும் ட்ரிக் —–
# அதிகமான மக்கள் சார்ந்த ஒரு விஷயத்தை அப்படியே கிண்டலடித்தால் எப்படியும் ஒரு பரபரப்பை உண்டாக்கி டிராபிக் செய்யலாம்.
# இனி அதற்கும் மேல் டிராபிக் வேண்டுமா?
# இந்துக்கள், முஸ்லிம்,கிறிஸ்டியன் என அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகமான பதிவுகள் அவர்களின் தெய்வங்களை சாடி எழுதுங்கள். கேட்டால் பகுத்தறிவாளி என்று சொல்லுங்கள். இங்கே உங்களைப்போல பிழைப்பு நடத்தும் பல நண்பர்களின் நட்புகிடைக்கும் அப்புறம் என்ன? நீங்க தான் ராஜா!
# அடுத்து முக்கியமாக ஏதாவது சாமியார், அல்லது அவர்களை சார்ந்தவர்களை டவுசர் கழிந்ததாக எழுதி அதிக ஹிட் வாங்கலாம்
# முக்கியமாக எதிர் பதிவுகள் போடா வேண்டும். உங்களை எதிர்ப்பவர்களுக்கு மதவதியென பெயர் வைக்க வேண்டும்.
# அப்பப்ப அடுத்த மதம் பற்றி கிண்டலடித்து எழுதினால் எப்படியும் மாற்று மதத்தவர்கள் சப்போட்டு செய்ய வைத்து எப்போது ஒரு கலவர நிலையை உருவாக்க வேண்டும். மத சகிப்புத்தன்மையை கட்டாயம் மறக்கடிக்கவேண்டும்.//

Now remembering the above....

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

ஏங்க .. ஆட்சியையே கையில் கொடுத்து விசிலடிச்சி 'ரசிச்சீங்க' .. இது என்ன, சும்மா ஜுஜுபி விவகாரம்!//

பின்குறிப்பில் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டை வாழும் இடமாகக் கொண்டவர்களின் தாய்மொழி குறித்து நான் ஆராய்வதில்லை. அவர்கள் எல்லோருமே தமிழர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//MR.BOO //

தமிழ்பதிவுகளின் சாக்கடையை தூய்மைப் படுத்த உங்களுக்கு தொடப்பம் கொடுக்க பலபேர் காத்து இருக்காங்க. சேவையை ஒப்புக் கொள்ளவும்

MR.BOO சொன்னது…

Kannan,
Thanks for your job opportunity.
People like you should be punished first for splitting the blog community.
What do you mean by tamils, malayalees, telegus etc etc...
First try to be an genuine Indian.
Save our time and try to avoid watching stupid sun tv vijay tv etc etc.

MR.BOO சொன்னது…

This is for follow-up
*** Let me watch ***

mkr சொன்னது…

நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவில்லை.ஆனால் இந்த பரிசை ஒரு மலையாள சிறுமி பெற்றாள் என்று அறிந்த போது,(அந்த சிறுமி நல்ல திறமை இருந்தது) தமிழில் நடத்த படும் தொலைக்காட்சியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு தானே பரிசு கிடைக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றியது.ஆனால் உங்கள் பதிவை படித்த
போது அது நியாயம் தான் என்று பட்டது.பெரும்பாலான பதிவுகள் அனைத்தும் படித்தேன்.உங்கள் எழுத்து நடை ரசிக்கும் படி இருந்தது

கோவி.கண்ணன் சொன்னது…

//MR.BOO said...

Kannan,
Thanks for your job opportunity.
People like you should be punished first for splitting the blog community.
What do you mean by tamils, malayalees, telegus etc etc...
First try to be an genuine Indian.
Save our time and try to avoid watching stupid sun tv vijay tv etc etc.//

ஆசைதான் இந்தியக் கோவணம் கட்டிக் கொள்ள ஆனால் இந்திகாரனுங்க வந்து உருவிட்டுப் போயிடுவானுங்க. 'ஹமாரா இந்துஸ்தான்மே மதராஸி ஆயா ஹை.....' ன்னு சொல்லி துறத்துடுவானுகளே சார்.

நல்லதந்தி சொன்னது…

எனது மனநிலையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள் என்று எழுதலாம் என நினைத்தேன். ஆனால் முரண்பாடாய் உணர்ந்ததால் விட்டுவிட்டேன் சரிதானே.
இன்னும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு எழுத எண்ணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// mkr said...

நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவில்லை.ஆனால் இந்த பரிசை ஒரு மலையாள சிறுமி பெற்றாள் என்று அறிந்த போது,(அந்த சிறுமி நல்ல திறமை இருந்தது) தமிழில் நடத்த படும் தொலைக்காட்சியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு தானே பரிசு கிடைக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றியது.ஆனால் உங்கள் பதிவை படித்த
போது அது நியாயம் தான் என்று பட்டது.பெரும்பாலான பதிவுகள் அனைத்தும் படித்தேன்.உங்கள் எழுத்து நடை ரசிக்கும் படி இருந்தது//

தொடர்ந்து படித்துவருவது மிக்க நன்றி சார். குறை நிறைகளை அவ்வப்போது சு(கு)ட்டிக் காட்டுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...

எனது மனநிலையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள் என்று எழுதலாம் என நினைத்தேன். ஆனால் முரண்பாடாய் உணர்ந்ததால் விட்டுவிட்டேன் சரிதானே.
இன்னும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு எழுத எண்ணம்.//

நம்ம மன நிலை என்றுமே ஒண்ணா இருக்காதே சார். :) இருந்தாலும் என் பதிவை படிப்பவர் என்கிற முறையில் உங்கள் மீது நன் மதிப்பு வைத்திருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

G.Ragavan சொன்னது…

என்னுடைய கருத்தை அப்படியே பிரதிபலித்திருக்கின்றீர்கள்.

தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் கேரளாவிலிருந்து வந்த விண்ணப்பம் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அந்தச் சிறுமி நன்றாகப் பாடுவார் என்பது உண்மைதான். ஆனால் அந்த நிகழ்ச்சி எப்படி நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

குறிப்பாகச் சித்ராவின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சீச்சீ என்றாகி விட்டது. பிரியங்கா என்ற சிறுமி மிக அருமையாகப் பாடுவார். அவர் என்ன பாடினாலும் எதையாவது சொல்வார்கள். ஸ்ரீநிஷாவிற்கும் அப்படியே. இறுதிச் சுற்றிற்கு வந்திருந்தாலும் நித்யஸ்ரீயை அவர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரோஷன் என்ற மலையாளச் சிறுவன் தப்பும் தவறுமாகப் பாடுவது நமக்கே தெரியும். ஆனால் சித்ராவிற்குத் தெரியவே தெரியாது. பிரியங்கா, ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ ஆகியோரின் தவறுகள் மட்டும் பூதகரமாக்கப்பட்டன. அதையும் ஏற்றுக் கொண்டு அந்தக் குழந்தைகள் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

ஒருமுறை நித்யஸ்ரீயை eliminate என்றார்கள். சிறப்புப் பார்வையாளராக வந்திருந்த எஸ்.ஜானகி உடனே எழுந்து ஆட்சேபித்து நித்யஸ்ரீயைக் காப்பாற்றினார். பி.சுசீலா பாடிய நாளை இந்த வேளை பாடலை அல்கா சொதப்பினார். ஆனால் அவர் spot selection. இன்னும் நிறையச் சொல்லலாம்.

சிங்கார வேலனே பாட்டைப் பற்றி எல்லாரும் சொன்னார்கள். அதை விடச் சிறப்பாக ஞானப்பழம் பாட்டைப் பாடினார் ஸ்ரீநிஷா.

என்னவோ குறுகிய மனப்பான்மை என்றெல்லாம் இங்கு பெரிய பேச்சு பேசியிருக்கீறார்கள் பலர். அவர்கள் அதை நீதிபதிகளிடமும் விஜய் டிவியிடமும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். இதே போல கேரளத்தில் ஒரு தமிழ்க் குரல் செல்லக்குரலாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை மலையாளிகளுக்குக் குறுகிய மனம் இருப்பது சரி போல.

அதே நேரம் ஜோடி நம்பர் 1ல் எனக்குப் பிடித்தது சுனிதா-வாங் (வடகிழக்கு) ஜோடி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்